வானங்களிலும், பூமியிலுமுள்ளோர் அனைவரும்; (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர்; ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தும் (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றன. (அவன் செயலற்றிருக்கவில்லை.) ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு வேலையில் இருக்கிறான்.
IFT
பூமியிலும் வானங்களிலும் உள்ளவை அனைத்தும் தம் தேவைகளை அவனிடமே வேண்டிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கணமும், அவன் ஒரு புதிய மாட்சிமையின் நிலையில் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்கள் மற்றும் பூமியிலுள்ளோர் (தங்கள் தேவைகளை) அவனிடமே கேட்கின்றனர், ஒவ்வொரு நாளிலும் அவன் ஒவ்வொரு காரியத்திலும் இருப்பான்.
Saheeh International
Whoever is within the heavens and earth asks Him; every day He is in [i.e., bringing about] a matter.
يٰمَعْشَرَசமூகத்தவர்களே!الْجِنِّஜின்وَالْاِنْسِஇன்னும் மனிதاِنِ اسْتَطَعْتُمْஉங்களால் முடிந்தால்اَنْ تَنْفُذُوْاநீங்கள் விரண்டு ஓடمِنْ اَقْطَارِகோடிகளில்السَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமியின்فَانْفُذُوْاؕஓடுங்கள்!لَا تَنْفُذُوْنَநீங்கள் ஓட முடியாதுاِلَّا بِسُلْطٰنٍۚஅதிகாரத்தை கொண்டே தவிர
யா மஃஷரல் ஜின்னி வல் இன்ஸி இனிஸ் ததஃதும் அன் தன்Fபுதூ மின் அக்தாரிஸ் ஸமாவாதி வல் அர்ளி Fபன்Fபுதூ; லா தன்Fபுதூன இல்லா Bபிஸுல்தான்
முஹம்மது ஜான்
“மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.
அப்துல் ஹமீது பாகவி
மனித, ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் இன்னும் பூமியின் எல்லையைக் கடந்து சென்றுவிட உங்களால் கூடுமாயின் அவ்வாறு சென்று விடுங்கள். ஆயினும், (அவற்றை ஆட்சி புரியக்கூடிய) மிகப் பெரும் பலத்தைக் கொண்டே தவிர நீங்கள் செல்ல முடியாது.
IFT
ஓ, ஜின் மற்றும் மனிதக்கூட்டங்களே! வானங்கள் மற்றும் பூமியின் எல்லைகளை விட்டு ஓடிச் செல்ல உங்களால் முடியுமானால் ஓடிப் பாருங்கள். உங்களால் ஓடிச் செல்லவே முடியாது; அதற்கெனப் பெரும் வலிமை வேண்டும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஜின், மனு கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் மற்றும் பூமியின் ஓரங்களைக் கடந்து சென்றுவிட நீங்கள் ஆற்றல் பெற்றால் (அவ்வாறு) கடந்து சென்று விடுங்கள், ஆயினும், (மிகப்பெரும் வல்லமையாளனின்) வல்லமையுடனன்றி, நீங்கள் கடந்து செல்லமுடியாது.
Saheeh International
O company of jinn and mankind, if you are able to pass beyond the regions of the heavens and the earth, then pass. You will not pass except by authority [from Allah].
يُرْسَلُஅனுப்பப்படும்عَلَيْكُمَاஉங்கள் இருவர்மீதும்شُوَاظٌஜுவாலை(யும்)مِّنْ نَّارٍ ۙநெருப்பின்وَّنُحَاسٌஉருக்கப்பட்ட செம்பும்فَلَا تَنْتَصِرٰنِۚநீங்கள் பழிதீர்க்க முடியாது
யுர்ஸலு 'அலய்குமா ஷுவாளும் மின் னாரி(ன்)வ்-வ னுஹாஸுன் Fபலா தன்தஸிரான்
முஹம்மது ஜான்
(மறுமையில்) உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜுவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நீங்கள் அவற்றை விட்டும் வெளிப்பட விரும்பிச் சென்றால்) உங்கள் மீது அக்னி ஜூவாலையும், உருக்கப்பட்ட செம்பும் எறியப்படும். அதை நீங்கள் தடுத்துக்கொள்ள முடியாது.
IFT
(அவ்விதம் நீங்கள் தப்பியோட முயன்றால்) உங்கள் மீது தீ ஜுவாலையும் புகையும் ஏவிவிடப்படும். அவற்றை எதிர்த்து நிற்க உங்களால் இயலாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மறுமையில்,) உங்கள் இருவர்மீது நெருப்பின் ஜுவாலையும், புகையும் அனுப்பப்படும். அப்போது (அதனை நீங்கள் தடுத்துக் கொள்ள எவரிலிருந்தும்) நீங்கள் உதவி பெற்றுக் கொள்ளமாட்டீர்கள்.
Saheeh International
There will be sent upon you a flame of fire and smoke, and you will not defend yourselves.
குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள்
அப்துல் ஹமீது பாகவி
குற்றவாளிகள், அவர்களின் முகக் குறியைக் கொண்டே அறிந்து கொள்ளப்படுவார்கள். அவர்களுடைய உச்சி மயிரையும், பாதங்களையும் பிடிக்கப்(பட்டு பின்னர், நரகத்தில் தூக்கி எறியப்)படும்.
IFT
அங்கு குற்றவாளிகள் தங்களின் முகக்கூறுகளால் அடையாளம் கண்டு கொள்ளப்படுவார்கள். மேலும், அவர்களின் உச்சி முடிகளையும் கால்களையும் பிடித்து இழுக்கப்படும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
குற்றவாளிகள் அவர்களின் (முக) அடையாளங்களைக்கொண்டு அறிந்து கொள்ளப்படுவார்கள், பின்னர், முன்நெற்றி முடிகளையும் கால்களையும் கொண்டு பிடி(த்திழு)க்கப்(பட்டு நரகத்தில் எறியப்)படும்.
Saheeh International
The criminals will be known by their marks, and they will be seized by the forelocks and the feet.
முத்தகி'ஈன 'அலா Fபுருஷிம் Bபதா'இனுஹா மின் இஸ்தBப்ரக்; வஜனல் ஜன்னதய்னி தான்
முஹம்மது ஜான்
அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்; அவற்றின் உள் பாகங்கள் “இஸ்தப்ரக்” என்னும் பட்டினாலுள்ளவை; மேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
'இஸ்தப்ரக்' என்னும் பட்டு விரிப்பின் மீது (உள்ள பஞ்சணைகளில்) சாய்ந்தவர்களாய் இருப்பார்கள். அவ்விரு சோலைகளில் கனிவர்க்கங்கள் அடர்ந்திருக்கும்.
IFT
சுவனவாசிகள் விரிப்புகளில் தலையணைகளை வைத்து சாய்ந்திருப்பார்கள். அவற்றின் உட்பாகங்கள் அடர்த்தியான பட்டுத்துணியால் ஆனவையாகும். மேலும், இரு தோட்டங்களின் கிளைகள் பழங்களால் நிரம்பித் தாழ்ந்துவிட்டிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் (பட்டு) விரிப்புகளின் மீது (உள்ள பஞ்சனைகளில்) சாய்ந்தவர்களாக (இருப்பார்கள்) அவற்றின் உட்பகுதிகள் ‘இஸ்தப்ரக்’ (எனும் கனத்த) பட்டினாலுள்ளவையாக இருக்கும், அவ்விரு சோலைகளில் பழங்கள் (பறிக்க) நெருங்கியிருக்கும்.
Saheeh International
[They are] reclining on beds whose linings are of silk brocade, and the fruit of the two gardens is hanging low.
فِيْهِنَّஅவற்றில்قٰصِرٰتُதாழ்த்திய பெண்கள்الطَّرْفِۙ لَمْ يَطْمِثْهُنَّபார்வைகளை/ அவர்களைதொட்டு இருக்க மாட்டார்கள்اِنْسٌஎந்த ஒரு மனிதரும்قَبْلَهُمْஇவர்களுக்கு முன்னர்وَلَا جَآنٌّۚஎந்த ஒரு ஜின்னும்
அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அவற்றில், கீழ் நோக்கிய பார்வையையுடைய (அழகிய) கன்னிகைகளும் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர், அவர்களை மனிதர்களோ ஜின்களோ தீண்டியதில்லை.
IFT
இந்த அருட்கொடைகளுக்கு மத்தியில் நாணும் விழிகளைக் கொண்ட பெண்களும் இருப்பார்கள்; இந்தச் சுவனவாசிகளுக்கு முன்னர் எந்த மனிதனும், ஜின்னும் அவர்களைத் தொட்டுக்கூடப் பார்த் திருக்க மாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவற்றில் கீழ் நோக்கிய பார்வைகளுயுடைய (அழகிய) கன்னிகைகளும் இருப்பார்கள், இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
Saheeh International
In them are women limiting [their] glances, untouched before them by man or jinnī -