நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி;
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களுடன், கண்ணழகிகளாகிய ஹூருல் ஈன் என்னும் கன்னியர்களும் இருப்பார்கள். அவர்கள் ஒருவராலும் பெற்றெடுக்கப்பட்டவர்கள் அல்லர்.) நிச்சயமாக நாம் அவர்களைச் (சொந்தமாக இவர்களுக்கெனப் புதிதாகவே) படைத்திருக்கிறோம்.
IFT
அவர்களின் மனைவியரை நாம் தனிச்சிறப்புடன் புது அமைப்பில் படைப்போம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் (ஹூருல் ஈன்களான) அவர்களைப் பிரத்தியேகமாக (இவர்களுக்கெனப் புதிதாகவே) படைத்திருக்கின்றோம்.
Saheeh International
Indeed, We have produced them [i.e., the women of Paradise] in a [new] creation
மேலும், அவர்கள்: “நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?” என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், என்னே! நாம் இறந்து (உக்கி) மண்ணாகவும், எலும்பாகவும் போனதன் பின்னர், மெய்யாகவே நாம் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவோமா?
IFT
“நாங்கள் இறந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலும், எலும்புக்கூடாகிப்போனாலும் மீண்டும் எழுப்பப்படுவோமா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நாம் இறந்து (உக்கி) மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகிவிட்டாலுமா நிச்சயமாக நாம் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுபவர்கள்?” என்று கூறக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்.
Saheeh International
And they used to say, "When we die and become dust and bones, are we indeed to be resurrected?
உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.
அப்துல் ஹமீது பாகவி
நாம்தான் உங்களுக்கு மரணத்தை நிர்ணயித்தோம். (உங்களுக்குப் பதிலாக) உங்களைப் போன்றவர்களை மாற்றிக் கொண்டுவருவதற்கும், இன்னும் உங்களை நீங்கள் அறியாத ஒரு ரூபத்தில் அமைத்து விடுவதற்கும் நாம் இயலாதவர்கள் அல்ல.
IFT
நாமே மரணத்தை உங்களிடையே விதித்திருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாமே உங்களுக்கிடையில் மரணத்தை ஏற்படுத்தியுள்ளோம் நாம் தோற்கடிக்கப்படுவோரும் அல்லர்.
Saheeh International
We have decreed death among you, and We are not to be outdone
அலா அன் னுBபத்தில அம்தாலகும் வ னுன்ஷி'அகும் Fபீ மா லா தஃலமூன்
முஹம்மது ஜான்
(அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).
அப்துல் ஹமீது பாகவி
நாம்தான் உங்களுக்கு மரணத்தை நிர்ணயித்தோம். (உங்களுக்குப் பதிலாக) உங்களைப் போன்றவர்களை மாற்றிக் கொண்டுவருவதற்கும், இன்னும் உங்களை நீங்கள் அறியாத ஒரு ரூபத்தில் அமைத்து விடுவதற்கும் நாம் இயலாதவர்கள் அல்ல.
IFT
மேலும், உங்களின் வடிவங்களை மாற்றுவதற்கும் நீங்கள் அறியாத வடிவங்களில் உங்களைப் படைப்பதற்கும் நாம் இயலாதவரல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அன்றி) நாம் (உங்களை அழித்து விட்டு உங்களுடைய இடத்தில்) உங்களைப் போன்றோரை மாற்றிவிடவும், இன்னும் நீங்கள் அறியாதவற்றில், உங்களை நாம் அமைத்துவிடுவதற்கும் (நாம் இயலாதவர்களன்று).
Saheeh International
In that We will change your likenesses and produce you in that [form] which you do not know.
வ லகத் 'அலிம்துமுன் னஷ் அதல் ஊலா Fபலவ் லா ததக்கரூன்
முஹம்மது ஜான்
முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?
அப்துல் ஹமீது பாகவி
முதல்முறை (உங்களைப்) படைத்ததை நிச்சயமாக நீங்கள் நன்கறிந்து இருக்கிறீர்கள். (இதைக் கொண்டு) நீங்கள் நல்லறிவு பெறவேண்டாமா? (இவ்வாறுதான் மறுமையிலும் நாம் உங்களை உயிர் கொடுத்து எழுப்புவோம்.)
IFT
உங்களின் முதல் பிறப்பைப் பற்றி நீங்கள் அறிந்தே இருக்கின்றீர்கள். பிறகு, ஏன் நீங்கள் படிப்பினை பெறுவதில்லை?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (உங்களுடைய) முதலாவதான உற்பத்தியை நிச்சயமாக நீங்கள் நன்கறிந்திருக்கின்றீர்கள்! (இதனைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெற வேண்டாமா?
Saheeh International
And you have already known the first creation, so will you not remember?
تَرْجِعُوْنَهَاۤஅதை நீங்கள் திரும்ப கொண்டு வந்திருக்கலாமல்லவா?اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَஉண்மையாளர்களாக
தர்ஜி'ஊனஹா இன் குன்தும் ஸாதிகீன்
முஹம்மது ஜான்
நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே!
அப்துல் ஹமீது பாகவி
மெய்யாகவே, நீங்கள் (இதில்) உண்மை சொல்பவர்களாகவுமிருந்தால், (இறந்த அவனுடைய உயிரை) நீங்கள் மீட்டுக் கொண்டு வரவேண்டியது தானே!
IFT
உங்களுடைய இந்தக் கருத்தில் நீங்கள் வாய்மையானவர்களாய் இருந்தால் அந்நேரத்தில் வெளியேறிக் கொண்டிருக்கும் அவருடைய உயிரை நீங்கள் ஏன் திரும்பக் கொண்டு வருவதில்லை?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால், அ(வருடைய உயிரான)தை நீங்கள் அவரின் பால் மீளவைத்திருக்கலாமே?