65. ஸூரத்துத் தலாஃக் (விவாகரத்து)

மதனீ, வசனங்கள்: 12

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
یٰۤاَیُّهَا النَّبِیُّ اِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَطَلِّقُوْهُنَّ لِعِدَّتِهِنَّ وَاَحْصُوا الْعِدَّةَ ۚ وَاتَّقُوا اللّٰهَ رَبَّكُمْ ۚ لَا تُخْرِجُوْهُنَّ مِنْ بُیُوْتِهِنَّ وَلَا یَخْرُجْنَ اِلَّاۤ اَنْ یَّاْتِیْنَ بِفَاحِشَةٍ مُّبَیِّنَةٍ ؕ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ ؕ وَمَنْ یَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ ؕ لَا تَدْرِیْ لَعَلَّ اللّٰهَ یُحْدِثُ بَعْدَ ذٰلِكَ اَمْرًا ۟
يٰۤاَيُّهَا النَّبِىُّநபியே!اِذَا طَلَّقْتُمُநீங்கள் விவாகரத்து செய்தால்النِّسَآءَபெண்களைفَطَلِّقُوْهُنَّஅவர்களை விவாகரத்து செய்யுங்கள்لِعِدَّتِهِنَّஅவர்கள் இத்தா இருக்க வேண்டியதை கணக்கிட்டுوَاَحْصُواஇன்னும் சரியாக கணக்கிடுங்கள்الْعِدَّةَ ۚஇத்தாவைوَاتَّقُواஇன்னும் அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைرَبَّكُمْ‌ ۚஉங்கள் இறைவனாகியلَا تُخْرِجُوْهُنَّஅவர்களை வெளியேற்றாதீர்கள்مِنْۢ بُيُوْتِهِنَّஅவர்களின் இல்லங்களில் இருந்துوَلَا يَخْرُجْنَஇன்னும் அவர்களும் வெளியேற வேண்டாம்اِلَّاۤ اَنْ يَّاْتِيْنَஅவர்கள் செய்தாலே தவிரبِفَاحِشَةٍதீய செயலைمُّبَيِّنَةٍ‌ ؕதெளிவானوَتِلْكَஇவைحُدُوْدُசட்டங்களாகும்اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின்وَمَنْஎவர்يَّتَعَدَّமீறுவாரோحُدُوْدَசட்டங்களைاللّٰهِஅல்லாஹ்வின்فَقَدْதிட்டமாகظَلَمَஅநீதி இழைத்துக் கொண்டார்نَفْسَهٗ‌ ؕதனக்குத் தானேلَا تَدْرِىْநீர் அறியமாட்டீர்لَعَلَّ اللّٰهَ يُحْدِثُஅல்லாஹ் ஏற்படுத்தலாம்بَعْدَ ذٰ لِكَஇதற்குப் பின்னர்اَمْرًا‏ஒரு காரியத்தை
யா அய்யுஹன் னBபிய்யு இதா தல்லக்தும்முன் னிஸா'அ Fபதல்லிகூஹுன்ன லி'இத்ததிஹின்ன வ அஹ்ஸுல்'இத்தத வத்தகுல் லாஹ ரBப்Bபகும்; லா துக்ரி ஜூஹுன்ன மின் Bபு-யூதிஹின்ன வலா யக்ருஜ்ன இல்லா அ(ன்)ய் ய'தீன BபிFபாஹிஷதிம் முBபய்யினஹ்; வ தில்க ஹுதூதுல் லாஹ்; வ ம(ன்)ய் யத'அத்த ஹுதூதல் லாஹி Fபகத் ளலம னFப்ஸஹ்; லா தத்ரீ ல'அல்லல் லாஹ யுஹ்திது Bபஃததாலிக அம்ரா
முஹம்மது ஜான்
நபியே! நீங்கள் பெண்களைத் “தலாக்” சொல்வீர்களானால் அவர்களின் “இத்தா”வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; தவிர, (அப்பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள் வெளியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது; இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள் எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்; (ஏனெனில், கூடி வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறியமாட்டீர்.
அப்துல் ஹமீது பாகவி
நபியே! (நம்பிக்கையாளர்களை நோக்கி நீர் கூறுவீராக:) “நீங்கள் உங்கள் மனைவிகளை ‘தலாக்கு' (விவாகப்பிரிவினை) செய்ய விரும்பினால், அவர்களுடைய (சுத்த காலமான) ‘இத்தா'வின் ஆரம்பத்தில் கூறி, இத்தாவைக் கணக்கிட்டு வாருங்கள். (இவ்விஷயத்தில்) உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள். (நீங்கள் தலாக் கூறிய) பெண்கள் பகிரங்கமாக ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்தாலே தவிர, அவர்களை அவர்கள் இருக்கும் (உங்கள்) வீட்டிலிருந்து (இத்தாவுடைய காலம் முடிவு பெறுவதற்கு முன்னர்) வெளியேற்றிவிட வேண்டாம். அவர்களும் வெளியேறிவிட வேண்டாம். இவைதான் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகள். எவர்கள் அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை மீறுகிறார்களோ, அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர். (இதிலுள்ள நன்மையை நீங்கள் அறியமாட்டீர்கள். தலாக் கூறிய) பின்னரும், (நீங்கள் சேர்ந்து வாழ) உங்களுக்கிடையில் (சமாதானத்திற்குரிய) ஒரு வழியை அல்லாஹ் ஏற்படுத்திவிடவும் கூடும்.
IFT
(நபியே!) நீங்கள் பெண்களை விவாகரத்து செய்வீர்களாயின் அவர்களின் இத்தா* (காலத்தை நிர்ணயிக்க) வசதியாக விவாகரத்து செய்யுங்கள். மேலும், இத்தாவின் காலத்தைச் சரியாகக் கணக்கிடுங்கள். மேலும், உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். (இத்தாகாலத்தில்) அப்பெண்களை அவர்களின் இல்லங்களிலிருந்து நீங்களும் வெளியேற்ற வேண்டாம்; அவர்களாகவும் வெளியேற வேண்டாம். அவர்கள் ஏதேனும் வெளிப்படையான மானக்கேடான செயல்கள் செய்தாலே தவிர இவை அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளாகும். யாரேனும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவாராயின் திண்ணமாக, அவர் தனக்குத்தானே கொடுமை புரிந்து கொண்டவராவார். இதற்குப் பிறகு (ஒத்துப் போவதற்கான) ஏதேனும் சூழ்நிலையை அல்லாஹ் உருவாக்கக்கூடும் என்பதை நீங்கள் அறிவது இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நபியே! விசுவாசிகளுக்கு நீர் கூறுவீராக! நீங்கள் பெண்களை விவாகரத்து செய்(ய முற்படுவீர்களானால், அவர்கள் இத்தா இருப்பதற்குரிய (மாத விலக்கு நீங்கி அப்பெண்கள் சுத்தமாகி தாம்பத்திய உறவின்றி இருக்கும்) சந்தர்ப்பத்தில் விவாகரத்து செய்யுங்கள், இத்தாவையும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள், (இவ்விஷயத்தில் உங்கள் இரட்சகனாகிய அல்லாஹ்வையும் நீங்கள் பயந்து கொள்ளுங்கள், (நீங்கள் விவாகரத்துக் செய்த) பெண்களை அவர்கள் (இருக்கும் உங்களுடைய வீடுகளிலிருந்து (இத்தாவுடைய காலம் முடிவு பெறுவதற்கு முன்னர், நீங்கள் வெளியேற்றிவிடவும் வேண்டாம், அவர்களும் வெளியேற வேண்டாம், பகிரங்கமான மானக்கேடான காரியத்தை அவர்கள் கொண்டு வந்தாலன்றி, இன்னும், இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும், எவர் அல்லாஹ்வுடைய வரம்புகளை மீறுகின்றாரோ, அவர் நிச்சயமாக தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவராவார், அதன் பின்னர் (நீங்கள் சேர்ந்து வாழ) புதிய ஒரு காரியத்தை அல்லாஹ் ஏற்படுத்தி விடலாம் என்பதை நீர் அறியமாட்டீர்.
Saheeh International
O Prophet, when you [Muslims] divorce women, divorce them for [the commencement of] their waiting period and keep count of the waiting period, and fear Allah, your Lord. Do not turn them out of their [husbands'] houses, nor should they [themselves] leave [during that period] unless they are committing a clear immorality. And those are the limits [set by] Allah. And whoever transgresses the limits of Allah has certainly wronged himself. You know not; perhaps Allah will bring about after that a [different] matter.
فَاِذَا بَلَغْنَ اَجَلَهُنَّ فَاَمْسِكُوْهُنَّ بِمَعْرُوْفٍ اَوْ فَارِقُوْهُنَّ بِمَعْرُوْفٍ وَّاَشْهِدُوْا ذَوَیْ عَدْلٍ مِّنْكُمْ وَاَقِیْمُوا الشَّهَادَةَ لِلّٰهِ ؕ ذٰلِكُمْ یُوْعَظُ بِهٖ مَنْ كَانَ یُؤْمِنُ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ۬ وَمَنْ یَّتَّقِ اللّٰهَ یَجْعَلْ لَّهٗ مَخْرَجًا ۟ۙ
فَاِذَا بَلَغْنَஅவர்கள் அடைந்து விட்டால்اَجَلَهُنَّதங்கள் தவணையைفَاَمْسِكُوْதடுத்து வையுங்கள்هُنَّஅவர்களைبِمَعْرُوْفٍநல்ல முறையில்اَوْஅல்லதுفَارِقُوْநீங்கள் பிரிந்து விடுங்கள்هُنَّஅவர்களைبِمَعْرُوْفٍநல்ல முறையில்وَّاَشْهِدُوْاஇன்னும் சாட்சியாக்குங்கள்ذَوَىْ عَدْلٍநீதமான இருவரைمِّنْكُمْஉங்களில்وَاَقِيْمُواஇன்னும் நிலை நிறுத்துங்கள்الشَّهَادَةَசாட்சியத்தைلِلّٰهِ‌ ؕஅல்லாஹ்விற்காகذٰ لِكُمْஇவைيُوْعَظُஉபதேசிக்கப் படுகின்றார்بِهٖஇவற்றின் மூலம்مَنْ كَانَ يُؤْمِنُஎவர்/நம்பிக்கை கொண்டிருப்பாரோبِاللّٰهِஅல்லாஹ்வையும்وَالْيَوْمِ الْاٰخِرِ‌ ۙமறுமை நாளையும்وَمَنْஎவர்يَّـتَّـقِஅஞ்சுவாரோاللّٰهَஅல்லாஹ்வைيَجْعَلْஏற்படுத்துவான்لَّهٗஅவருக்குمَخْرَجًا ۙ‏ஒரு தீர்வை
Fப இதா Bபலக்ன அஜலஹுன்ன Fப அம்ஸிகூஹுன்ன BபிமஃரூFபின் அவ் Fபாரிகூஹுன்ன BபிமஃரூFபி(ன்)வ் வ அஷ்ஹிதூ தவய் 'அத்லிம் மின்கும் வ அகீமுஷ் ஷஹாதத லில்லாஹ்; தாலிகும் யூ'அளு Bபிஹீ மன் கான யு'மினு Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிர்; வ ம(ன்)ய் யத்தகில் லாஹ யஜ்'அல் லஹூ மக்ரஜா
முஹம்மது ஜான்
ஆகவே, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை நெருங்கினால், அப்பொழுது முறைப்படி (மனைவியராக) அவர்களை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; அல்லது முறைப்படி அவர்களைப் பிரித்து (விட்டு) விடுங்கள்; அன்றியும், உங்களில் நியாயமுடைய இருவரைச் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள்; மேலும், சாட்சியத்தை அல்லாஹ்வுக்காக (நேர்மையாக) நிலைப்படுத்துங்கள்; அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருப்போருக்கு இந்த நற்போதனை செய்யப்படுகிறது - தவிர, எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.
அப்துல் ஹமீது பாகவி
அப்பெண்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை அடைந்தால், நேரான முறையில் அவர்களை (மனைவியாகவே) நிறுத்திக்கொள்ளுங்கள். அல்லது நேரான முறையில் அவர்களை நீக்கிவிடுங்கள். (இவ்விரண்டில் நீங்கள் எதைச் செய்த போதிலும் அதற்கு) உங்களில் நீதமான இரு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (அந்த சாட்சிகள், சாட்சி சொல்ல வந்தால்) அல்லாஹ்வுக்காக உண்மையையே கூறவும். உங்களில் எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ, அவருக்கு இந்நல்லுபதேசம் கூறப்படுகிறது. (தவிர, இவ்விஷயத்தில்) எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கிறார்களோ, அவர்களுக்கு (இத்தகைய விவகாரங்களிலிருந்து) ஒரு (நல்ல தீர்வுபெற) வழியை ஏற்படுத்தித் தருவான்.
IFT
அவர்கள் தங்களுடைய (இத்தாவின்) இறுதிக் காலகட்டத்தை எட்டிவிட்டால், அவர்களை நல்ல முறையில் (திருமண பந்தத்தில்) நீடித்து இருக்கச் செய்யுங்கள்; அல்லது நல்ல முறையில் அவர்களை விட்டுப் பிரிந்து விடுங்கள். மேலும், உங்களில் நேர்மைமிக்க இருவரைச் சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். மேலும், (சாட்சி சொல்பவர்களே!) அல்லாஹ்வுக்காகச் சரியான முறையில் சாட்சியம் வழங்குங்கள். இவற்றின் மூலம் உங்களுக்கும் அறிவுறுத்தப்படுகின்றது; அல்லாஹ்வின் மீதும் இறுதிநாளின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கின்ற ஒவ்வொருவருக்கும் அறிவுரை வழங்கப் படுகின்றது. மேலும், யாரேனும் அல்லாஹ்வுக்கு அஞ்சி(யவண்ணம் செயல்படுவாரா)னால் அல்லாஹ் அவருக்(குச் சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்)கு ஏதேனும் வழிவகையை ஏற்படுத்துவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை அடைந்து(விட நெருங்கி) விட்டால் (மார்க்கத்தில்) அறியப்பட்டவாறு அவர்களை (மனைவியாகவே) நிறுத்திக் கொள்ளுங்கள், அல்லது (மார்க்கத்தில்) அறியப்பட்டவாறு அவர்களைப் பிரித்து) விட்டு விடுங்கள், (அதற்கு) உங்களில் நீதமான இருவரை சாட்சிகளாகவும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் (சாட்சி கூறுபவர்களாகிய) நீங்கள் அல்லாஹ்வுக்காக சரியான முறையில் சாட்சியத்தை நிலைநிறுத்துங்கள், (உங்களில்) யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசிக்கின்றாரோ அவர் இதைக்கொண்டு நல்லுபதேசம் செய்யப்படுகிறார், அன்றியும், எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கிறாரோ அவருக்கு (ஒவ்வொரு சங்கடத்திலிருந்தும்) வெளியேறும் வழியை அவன் ஆக்குவான்.
Saheeh International
And when they have [nearly] fulfilled their term, either retain them according to acceptable terms or part with them according to acceptable terms. And bring to witness two just men from among you and establish the testimony for [the acceptance of] Allah. That is instructed to whoever should believe in Allah and the Last Day. And whoever fears Allah - He will make for him a way out
وَّیَرْزُقْهُ مِنْ حَیْثُ لَا یَحْتَسِبُ ؕ وَمَنْ یَّتَوَكَّلْ عَلَی اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ ؕ اِنَّ اللّٰهَ بَالِغُ اَمْرِهٖ ؕ قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَیْءٍ قَدْرًا ۟
وَّيَرْزُقْهُஇன்னும் அவருக்கு உணவளிப்பான்مِنْ حَيْثُவிதத்தில் இருந்துلَا يَحْتَسِبُ‌ ؕஅவர் எண்ணாதوَمَنْ يَّتَوَكَّلْஎவர் நம்பிக்கை வைப்பாரோعَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுفَهُوَஅவனேحَسْبُهٗ ؕஅவருக்குப் போதுமானவன்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்بَالِغُநிறைவேற்றுவான்اَمْرِهٖ‌ ؕதனது காரியத்தைقَدْதிட்டமாகجَعَلَஏற்படுத்தினான்اللّٰهُஅல்லாஹ்لِكُلِّ شَىْءٍஒவ்வொன்றுக்கும்قَدْرًا‏ஓர் அளவை
வ யர்Zஜுக்ஹு மின் ஹய்து லா யஹ்தஸிBப்; வ ம(ன்)ய் யதவக்கல் 'அலல் லாஹி Fபஹுவ ஹஸ்Bபுஹ்; இன்னல் லாஹ Bபாலிகு அம்ரிஹ்; கத் ஜ'அலல் லாஹு லிகுல்லி ஷய்'இன் கத்ரா
முஹம்மது ஜான்
அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்; மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் - திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை அளிப்பான். எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகிறார்களோ, அவர்களுக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தைச் செய்தே முடிப்பான். ஆயினும், அல்லாஹ் ஒவ்வொன்றிற்கும் (ஒரு காலத்தையும்) அளவையும் ஏற்படுத்திவிட்டான். (அதன்படியே நடைபெறும்.)
IFT
மேலும், அவர் நினைத்துப் பார்த்திராத வகையிலிருந்து அவருக்கு வாழ்வாதாரமும் வழங்குவான். யார் அல்லாஹ்வையே முழுவதுஞ் சார்ந்திருக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் போதுமானவன். திண்ணமாக, அல்லாஹ் தன் பணியை நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கின்றான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விதியை நிர்ணயித்து வைத்திருக்கிறான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர் எண்ணியிராத விதத்தில் அவருக்கு வாழ்வாதாரங்களை அவன் வழங்குவான், எவர் அல்லாஹ்வின் மீது (தன் காரியத்தை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைக்கிறாரோ அவருக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன், நிச்சயமாக, அல்லாஹ் தன் காரியத்தை அடைந்தே தீருவான், (ஆயினும்) அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை திட்டமாக நிர்ணயம் செய்திருக்கிறான்.
Saheeh International
And will provide for him from where he does not expect. And whoever relies upon Allah - then He is sufficient for him. Indeed, Allah will accomplish His purpose. Allah has already set for everything a [decreed] extent.
وَا یَىِٕسْنَ مِنَ الْمَحِیْضِ مِنْ نِّسَآىِٕكُمْ اِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلٰثَةُ اَشْهُرٍ ۙ وَّا لَمْ یَحِضْنَ ؕ وَاُولَاتُ الْاَحْمَالِ اَجَلُهُنَّ اَنْ یَّضَعْنَ حَمْلَهُنَّ ؕ وَمَنْ یَّتَّقِ اللّٰهَ یَجْعَلْ لَّهٗ مِنْ اَمْرِهٖ یُسْرًا ۟
وَالّٰٓـىٴِْஎவர்கள்يَٮِٕسْنَநிராசை அடைந்து விட்டனரோمِنَ الْمَحِيْضِமாதவிடாயிலிருந்துمِنْ نِّسَآٮِٕكُمْஉங்கள் பெண்களில்اِنِ ارْتَبْتُمْநீங்கள் சந்தேகித்தால்فَعِدَّتُهُنَّஅவர்களின் இத்தாثَلٰثَةُமூன்றுاَشْهُرٍமாதங்களாகும்وَّالّٰٓـىٴِْஎவர்கள்لَمْ يَحِضْنَ‌ ؕஅவர்கள் மாதவிடாய் வரவில்லைوَاُولَاتُ الْاَحْمَالِகர்ப்பமுடைய பெண்கள்اَجَلُهُنَّஅவர்களின் தவணைاَنْ يَّضَعْنَஅவர்கள் பெற்றெடுப்பதாகும்حَمْلَهُنَّ ؕதங்கள் கர்ப்பத்தைوَمَنْஎவர்يَّـتَّـقِஅஞ்சுவாரோاللّٰهَஅல்லாஹ்வைيَجْعَلْஏற்படுத்துவான்لَّهٗஅவருக்குمِنْ اَمْرِهٖஅவரின் காரியத்தில்یُسْرًا‏இலகுவை
வல்லா'ஈ ய'இஸ்ன மினல் மஹீளி மின் னிஸா 'இகும் இனிர் தBப்தும் Fப'இத்ததுஹுன்ன தலாதது அஷ்ஹுரி(ன்)வ் வல்லா'ஈ லம் யஹிள்ன்; வ உலாதுல் அஹ்மாலி அஜலுஹுன்ன அ(ன்)ய் யளஃன ஹம்லஹுன்; வ ம(ன்)ய் யத்தகில் லாஹ யஜ்'அல் லஹூ மின் அம்ரிஹீ யுஸ்ரா
முஹம்மது ஜான்
மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், “இத்தா”(வின் தவணை) மூன்று மாதங்களாகவும்; தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (“இத்தா”வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும்; மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(தலாக் சொல்லப்பட்ட) உங்கள் மனைவிகளில் எவர்கள் (அதிக வயதாகி) மாதவிடாயின் நம்பிக்கை இழந்து, (இத்தாவைக் கணக்கிட) என்ன செய்வதென்று நீங்கள் சந்தேகத்திற்கு உள்ளாகிவிட்டால், அத்தகைய பெண்களுக்கும், இன்னும் எவர்களுக்கு இதுவரை மாதவிடாய் ஏற்படவில்லையோ அவர்களுக்கும், இத்தாவின் தவணை மூன்று மாதங்களாகும். கர்ப்பமான பெண்களுக்கு இத்தாவின் தவணை அவர்கள் பிரசவிக்கும் வரை இருக்கிறது. எவர்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயப்படுகிறார்களோ, அவர்களுடைய காரியத்தை அவர்களுக்கு எளிதாக்கி விடுகிறான்.
IFT
உங்கள் பெண்களில், எவர்கள் ‘இனி மாதவிலக்கு வராது’ என்று நம்பிக்கையிழந்து விட்டிருக்கின்றார்களோ அவர்களுடைய விஷயத்தில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால், (நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்:) அவர்களுடைய இத்தாகாலம் மூன்று மாதங்களாகும். மேலும், எந்தப் பெண்களுக்கு இதுவரையிலும் மாதவிலக்கு வரவில்லையோ அவர்களுக்கான விதிமுறையும் இதுவே! மேலும், கர்ப்பிணிகளுக்கான இத்தா வரம்பு அவர்கள் குழந்தை பெற்றெடுப்பதுடன் முடிகின்றது. யார் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றாரோ அவருடைய விவகாரத்தில் அல்லாஹ் இலகுவை ஏற்படுத்தியிருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(தலாக் சொல்லப்பட்ட மனைவியராகிய) உங்கள் பெண்களில் மாதவிடாயை விட்டு நம்பிக்கையிழந்து விடுகிறார்களே அத்தகையவர்கள் (அவர்களின் இத்தாவை கணக்கிடுவது பற்றி நீங்கள் சந்தேகப்பட்டால் அப்போது அவர்களின் இத்தா(வின் தவணை) மூன்று மாதங்களாகும், (அவர்களில் சிறார்களுக்கும், பருவமடையும் வயதை அடைந்தும் இதுவரையில்) மாதவிடாயே ஏற்படாதவர்களுக்கும் (இவ்வாறே இத்தாவின் தவணை மூன்று மாதங்களாகும்.) இன்னும் கர்ப்பமுடையவர்கள் - அவர்களின் (இத்தாகால) தவணையானது, அவர்களின் கர்ப்பத்தை வைத்தல் (பிரசவித்தல்வரை) ஆகும், மேலும் எவர், அல்லாஹ்வைப் பயந்து நடக்கிறாரோ அவருக்கு அவரின் காரியத்தில் அவன் எளியதை ஆக்குவான்.
Saheeh International
And those who no longer expect menstruation among your women - if you doubt, then their period is three months, and [also for] those who have not menstruated. And for those who are pregnant, their term is until they give birth. And whoever fears Allah - He will make for him of his matter ease.
ذٰلِكَ اَمْرُ اللّٰهِ اَنْزَلَهٗۤ اِلَیْكُمْ ؕ وَمَنْ یَّتَّقِ اللّٰهَ یُكَفِّرْ عَنْهُ سَیِّاٰتِهٖ وَیُعْظِمْ لَهٗۤ اَجْرًا ۟
ذٰ لِكَ اَمْرُஇது/கட்டளையாகும்اللّٰهِஅல்லாஹ்வின்اَنْزَلَهٗۤஇதை இறக்கி இருக்கின்றான்اِلَيْكُمْ‌ ؕஉங்களுக்குوَمَنْஎவர்يَّـتَّـقِஅஞ்சுவாரோاللّٰهَஅல்லாஹ்வைيُكَفِّرْஅவன் போக்குவான்عَنْهُஅவரை விட்டும்سَيِّاٰتِهٖஅவரின் பாவங்களைوَيُعْظِمْஇன்னும் பெரிதாக்குவான்لَهٗۤஅவருக்குاَجْرًا‏கூலியை
தாலிக அம்ருல் லாஹி அன்Zஜலஹூ இலய்கும்; வ ம(ன்)ய் யத்தகில் லாஹ யுகFப்Fபிர் 'அன்ஹு ஸய்யி ஆதிஹீ வ யுஃளிம் லஹூ அஜ்ரா
முஹம்மது ஜான்
இதுவே அல்லாஹ்வின் கட்டளையாகும் - இதை அவன் உங்களுக்கு இறக்கியருளினான். எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுகிறாரோ, அவரை அவருடைய பாவங்களை விட்டும் நீக்கி, அவருக்கு (நற்) கூலியையும் மகத்தானதாக்குகின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த கட்டளை இதுதான். ஆகவே, எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்கிறாரோ, அவருடைய பாவங்களை அவன் மன்னித்து, (அவருடைய) கூலியையும் அவருக்கு பெரிதாக்கி விடுகிறான்.
IFT
இது அல்லாஹ் உங்களுக்கு இறக்கி வைத்திருக்கும் கட்டளையாகும். யார் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றாரோ அவருடைய தீமைகளை அவரை விட்டு அல்லாஹ் போக்கிவிடுவான். மேலும், அவருக்குப் பெரும் கூலியையும் வழங்குவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அது(வே) அல்லாஹ்வின் கட்டளையாகும், அதனை உங்களின்பால் அவன் இறக்கிவைத்தான், எவர் அல்லாஹ்விற்குப் பயந்து நடந்துகொள்கிறாரோ, அவரை அவருடைய தீயவைகளைவிட்டும் நீக்கி அவருக்குக் கூலியை மகத்தானதாகவும் (அல்லாஹ்வாகிய) அவன் ஆக்குகிறான்.
Saheeh International
That is the command of Allah, which He has sent down to you; and whoever fears Allah - He will remove for him his misdeeds and make great for him his reward.
اَسْكِنُوْهُنَّ مِنْ حَیْثُ سَكَنْتُمْ مِّنْ وُّجْدِكُمْ وَلَا تُضَآرُّوْهُنَّ لِتُضَیِّقُوْا عَلَیْهِنَّ ؕ وَاِنْ كُنَّ اُولَاتِ حَمْلٍ فَاَنْفِقُوْا عَلَیْهِنَّ حَتّٰی یَضَعْنَ حَمْلَهُنَّ ۚ فَاِنْ اَرْضَعْنَ لَكُمْ فَاٰتُوْهُنَّ اُجُوْرَهُنَّ ۚ وَاْتَمِرُوْا بَیْنَكُمْ بِمَعْرُوْفٍ ۚ وَاِنْ تَعَاسَرْتُمْ فَسَتُرْضِعُ لَهٗۤ اُخْرٰی ۟ؕ
اَسْكِنُوْهُنَّஅவர்களை தங்க வையுங்கள்مِنْ حَيْثُ سَكَنْـتُمْநீங்கள் தங்கும் இடத்தில்مِّنْ وُّجْدِكُمْஉங்கள் வசதிக்கேற்பوَلَا تُضَآرُّوْதீங்கு செய்யாதீர்கள்هُنَّஅவர்களுக்குلِتُضَيِّقُوْاநீங்கள் நெருக்கடியை ஏற்படுத்துவதற்காகعَلَيْهِنَّ‌ ؕஅவர்கள் மீதுوَاِنْ كُنَّஅவர்கள் இருந்தால்اُولَاتِ حَمْلٍகர்ப்பம் உள்ள பெண்களாகفَاَنْفِقُواசெலவு செய்யுங்கள்عَلَيْهِنَّஅவர்களுக்குحَتّٰىவரைيَضَعْنَஅவர்கள் பெற்றெடுக்கின்றحَمْلَهُنَّ‌ ۚதங்கள் கர்ப்பத்தைفَاِنْ اَرْضَعْنَஅவர்கள் பாலூட்டினால்لَـكُمْஉங்களுக்காகفَاٰ تُوْهُنَّஅவர்களுக்கு கொடுங்கள்اُجُوْرَهُنَّ‌ ۚஅவர்களின் ஊதியங்களைوَاْتَمِرُوْاஒருவருக்கொருவர் ஏற்றுக் கொள்ளுங்கள்بَيْنَكُمْஉங்களுக்கு மத்தியில்بِمَعْرُوْفٍ‌ۚநல்லதைوَاِنْ تَعَاسَرْتُمْநீங்கள் சிரமமாகக் கருதினால்فَسَتُرْضِعُபாலூட்டுவாள்لَهٗۤஅவருக்காகاُخْرٰى ؕ‏வேறு ஒரு பெண்
அஸ்கினூஹுன்ன மின் ஹய்து ஸகன்தும் மி(ன்)வ் வுஜ்திகும் வலா துளார்ரூஹுன்ன லிதுளய்யிகூ 'அலய்ஹின்ன்; வ இன் குன்ன உலாதி ஹம்லின் Fப அன்Fபிகூ 'அலய்ஹின்ன ஹத்தா யளஃன ஹம்லஹுன்ன்; Fபய்ன் அர்ளஃன லகும் Fப ஆதூ ஹுன்ன உஜூரஹுன்ன்; வ'தமிரூ Bபய்னகும் BபிமஃரூFபி(ன்)வ் வ இன் த'ஆஸர்தும் Fபஸதுர்ளி'உ லஹூ உக்ரா
முஹம்மது ஜான்
உங்கள் சக்திக்கேற்ப நீங்கள் குடியிருக்கும் இடத்தில் (“இத்தா”விலிருக்கும்) பெண்களை நீங்கள் குடியிருக்கச் செய்யுங்கள்; அவர்களுக்கு நெருக்கடியுண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள், அவர்கள் கர்ப்பமுடையவர்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை, அவர்களுக்காகச் செலவு செய்யுங்கள்; அன்றியும் அவர்கள் உங்களுக்காக (உங்கள் குழந்தைகளுக்குப்) பாலூட்டினால், அதற்கான கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி) உங்களுக்குள் நேர்மையாகப் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள்; ஆனால் (இது பற்றி) உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால் (அக்குழந்தைக்கு) மற்றொருத்தி பால் கொடுக்கலாம்.
அப்துல் ஹமீது பாகவி
(‘தலாக்' கூறிய பின்னர் இத்தா இருக்கவேண்டிய உங்கள்) பெண்களை உங்களால் முடிந்தவரை, நீங்கள் இருக்கும் இடத்திலேயே வசித்திருக்கும்படி செய்யுங்கள். அவர்களை நிர்ப்பந்திக்கக் கருதி அவர்களைத் துன்புறுத்தாதீர்கள். அவர்கள் கர்ப்பமான பெண்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்குச் செலவுக்குக் கொடுத்து வாருங்கள். (பிரசவித்ததன்) பின்னர் (குழந்தைக்கு) உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அதற்குரிய கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி முன்னதாகவே) உங்களுக்குள் முறையாக பேசி முடிவு செய்துகொள்ளுங்கள். இதில் உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால், (அக்குழந்தைக்கு) மற்றவளைக் கொண்டும் பால் கொடுக்கலாம்.
IFT
உங்கள் வசதி வாய்ப்புக்கேற்ப நீங்கள் எந்த இடத்தில் வசிக்கின்றீர்களோ அந்த இடத்திலேயே அவர்களை (இத்தா) காலத்தில் வசிக்கச் செய்யுங்கள். அவர்களை நெருக்கடியில் ஆழ்த்துவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள். அவர்கள் கர்ப்பிணிகளாய் இருந்தால், குழந்தை பெற்றெடுக்கும் வரையில் அவர்களுக்கு செலவுக்குக் கொடுங்கள். மேலும் அவர்கள் உங்களுக்காக வேண்டி (குழந்தைக்குப்) பாலூட்டினால் அவர்களுக்குரிய ஊதியத்தை அவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள். மேலும், (ஊதியம் பெறும் விஷயத்தை) உங்களுக்கிடையே பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் (நல்ல முறையில்) முடிவுசெய்து கொள்ளுங்கள். ஆயினும் (ஊதியத்தை நிர்ணயிப்பதில்) நீங்கள் ஒருவருக்கொருவர் நெருக்கடிக்கு ஆளானால், குழந்தைக்கு வேறொரு பெண் பாலூட்டிக் கொள்ளட்டும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களுடைய வசதிக்குத் தக்கவாறு நீங்கள் குடியிருந்து வரும் இடத்தில் (இத்தாவிலிருக்கும் பெண்களாகிய) அவர்களைக் குடியிருக்கச் செய்யுங்கள், (அப்பெண்களிடமிருந்து ஈடாக எதையும் பெறவோ, அல்லது நிர்ப்பந்தமாக அவர்கள் வெளியேறிவிடவோ உள்ள சூழ்நிலைகளை உருவாக்கி) அவர்களுக்கு நீங்கள் நெருக்கடியை உண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள், அவர்கள் கர்ப்பமுடையவர்களாகயிருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரையில் அவர்களுக்குச் செலவுக்குக் கொடுத்து வாருங்கள், (பிரசவத்தின்) பின்னர், உங்களுக்காக (குழந்தைக்கு) அவர்கள் பாலூட்டினால், அப்போது (அதற்காக) அவர்களுக்குரிய கூலியையும் அவர்களுக்கு கொடுத்துவிடுங்கள், (இதைப்பற்றி முன்னதாகவே) உங்களுக்குள் அறியப்பட்ட முறையைக் கொண்டு பேசி முடிவும் செய்து கொள்ளுங்கள், (இது விஷயத்தில் தகராறுகள் உண்டாகி) நீங்கள் ஒருவருக்கொருவர் சிரமம் அடைந்தால் (அப்பொழுது குழந்தையாகிய) அதற்கு மற்றொருத்தி பால் கொடுப்பாள்.
Saheeh International
Lodge them [in a section] of where you dwell out of your means and do not harm them in order to oppress them. And if they should be pregnant, then spend on them until they give birth. And if they breastfeed for you, then give them their payment and confer among yourselves in the acceptable way; but if you are in discord, then there may breastfeed for him [i.e., the father] another woman.
لِیُنْفِقْ ذُوْ سَعَةٍ مِّنْ سَعَتِهٖ ؕ وَمَنْ قُدِرَ عَلَیْهِ رِزْقُهٗ فَلْیُنْفِقْ مِمَّاۤ اٰتٰىهُ اللّٰهُ ؕ لَا یُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا مَاۤ اٰتٰىهَا ؕ سَیَجْعَلُ اللّٰهُ بَعْدَ عُسْرٍ یُّسْرًا ۟۠
لِيُنْفِقْசெலவு செய்யட்டும்ذُوْ سَعَةٍவசதியுடையவர்مِّنْ سَعَتِهٖ‌ؕதனது வசதியிலிருந்துوَمَنْஎவர் ஒருவர்قُدِرَநெருக்கடியாக இருக்கின்றதோعَلَيْهِஅவர் மீதுرِزْقُهٗஅவருடைய வாழ்வாதாரம்فَلْيُنْفِقْஅவர்கள் செலவு செய்யட்டும்مِمَّاۤ اٰتٰٮهُதனக்கு கொடுத்ததில் இருந்துاللّٰهُ‌ؕஅல்லாஹ்لَا يُكَلِّفُசிரமம் கொடுக்க மாட்டான்اللّٰهُஅல்லாஹ்نَفْسًاஓர் ஆன்மாவிற்குاِلَّاதவிரمَاۤ اٰتٰٮهَا‌ؕஅவன் அதற்கு கொடுத்ததைسَيَجْعَلُஏற்படுத்துவான்اللّٰهُஅல்லாஹ்بَعْدَபின்னர்عُسْرٍசிரமத்திற்குيُّسْرًا‏இலகுவை
லியுன்Fபிக் தூ ஸ'அதிம் மின் ஸ'அதிஹ்; வ மன் குதிர 'அலய்ஹி ரிZஜ்குஹூ Fபல்யுன்Fபிக் மிம்மா ஆதாஹுல் லாஹ்; லா யுகல்லிFபுல் லாஹு னFப்ஸன் இல்லா மா ஆதாஹா; ஸ யஜ்'அலுல் லாஹு Bபஃத'உஸ்ரி(ன்)ய் யுஸ்ரா
முஹம்மது ஜான்
தக்க வசதியுடையவர்கள், தம் வசதிக்கேற்ப (இவ்விஷயத்தில்) செலவு செய்து கொள்ளவும்; ஆனால், எவர் மீது அவருடைய உணவு (வசதி) நெருக்கடியாக்கப் பட்டுள்ளதோ, அவர் தமக்கு அல்லாஹ் கொடுத்ததிலிருந்து செலவு செய்து கொள்ளவும்; எந்த ஆத்மாவையும் அல்லாஹ் அதற்குக் கொடுத்திருப்பதேயல்லாமல் (மிகையாக செலவு செய்யும் படி) சிரமப்படுத்த மாட்டான்; கஷ்டத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதி சீக்கிரத்தில் இலகுவை (சுகத்தை) உண்டாக்கியருள்வான்.
அப்துல் ஹமீது பாகவி
(பால் குடிப்பாட்ட செலவு செய்யும் விஷயத்தில்) வசதியுடையவர் தன் தகுதிக்குத் தக்கவாறு (தாராளமாகச்) செலவு செய்யவும். ஏழ்மையானவர், அல்லாஹ் அவருக்குக் கொடுத்ததிலிருந்துதான் செலவு செய்வார். எம்மனிதனையும் அல்லாஹ் அவனுக்குக் கொடுத்ததற்கு அதிகமாக(ச் செலவு செய்யும்படி) நிர்ப்பந்திப்பதில்லை. சிரமத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதிசீக்கிரத்தில் இலகுவை கொடுத்துவிடுவான்.
IFT
வசதியுள்ளவர் தம் வசதிக்கேற்ப ஜீவனாம்சம் அளிக்கட்டும். எவருக்கு வாழ்வாதாரம் குறைவாக அளிக்கப்பட்டிருக்கின்றதோ அவர் அல்லாஹ் அவருக்கு வழங்கியதிலிருந்து செலவு செய்யட்டும். அல்லாஹ் எவருக்கு எவ்வளவு கொடுத்திருக்கின்றானோ அதற்கு மேலாக அவர் மீது அவன் பொறுப்பு சுமத்துவதில்லை. வசதிக் குறைவுக்குப் பிறகு, அதிக வசதிவாய்ப்புகளையும் அல்லாஹ் வழங்கக்கூடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பால் குடிச் செலவு விஷயத்தில்) வசதியுடையவர், தன்னுடைய வசதிக்கேற்ப (தாராளமாகச்) செலவு செய்யவும் எவருக்கு அவருடைய வாழ்வாதாரங்கள் நெருக்கடியாக்கப்பட்டுள்ளதோ அவர் தமக்கு அல்லாஹ் கொடுத்ததிலிருந்து செலவு செய்யவும், அல்லாஹ் எந்த ஆத்மாவையும் அதற்கு அவன் கொடுத்ததைத் தவிர (அதற்குமேல்) சிரமப்படுத்தமாட்டான், கஷ்டத்திற்குப் பின்னர் அடுத்து இலகுவை ஆக்குவான்.
Saheeh International
Let a man of wealth spend from his wealth, and he whose provision is restricted - let him spend from what Allah has given him. Allah does not charge a soul except [according to] what He has given it. Allah will bring about, after hardship, ease [i.e., relief].
وَكَاَیِّنْ مِّنْ قَرْیَةٍ عَتَتْ عَنْ اَمْرِ رَبِّهَا وَرُسُلِهٖ فَحَاسَبْنٰهَا حِسَابًا شَدِیْدًا ۙ وَّعَذَّبْنٰهَا عَذَابًا نُّكْرًا ۟
وَكَاَيِّنْஎத்தனையோمِّنْ قَرْيَةٍ عَتَتْஊர்கள்/மீறினعَنْ اَمْرِகட்டளையையும்رَبِّهَاதமது இறைவனின்وَرُسُلِهٖஇன்னும் தமது தூதரின்فَحَاسَبْنٰهَاநாம் அவற்றை விசாரித்தோம்حِسَابًاவிசாரணையால்شَدِيْدًاۙகடுமையானوَّعَذَّبْنٰهَاஇன்னும் அவற்றை வேதனை செய்தோம்عَذَابًا نُّكْرًا‏மோசமான தண்டனையால்
வ க அய்யிம் மின் கர்யதின் 'அதத் 'அன் அம்ரி ரBப்Bபிஹா வ ருஸுலிஹீ FபஹாஸBப்னாஹா ஹிஸாBபன் ஷதீத(ன்)வ் வ 'அத்தBப்னாஹா 'அதாBபன் னுக்ரா
முஹம்மது ஜான்
எத்தனையோ ஊர்கள் தம் இறைவனுடையவும் அவனுடைய தூதர்களுடையவும் கட்டளைக்கு மாறு செய்தனர்; ஆதலால், நாம் வெகு கடுமையாக அவற்றைக் கணக்குக் கேட்டு, அவர்களைக் கொடிய வேதனையாகவும் வேதனை செய்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
எத்தனையோ ஊர்வாசிகள் தங்கள் இறைவனின் கட்டளைக்கும், அவனுடைய தூதர் களுக்கும் மாறுசெய்தனர். ஆதலால், அவர்களை நாம் வெகு கடினமாகவே கேள்வி கணக்குக் கேட்டு, அவர்களை மிகக் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்தோம்.
IFT
எத்தனையோ ஊர்கள் தங்கள் இறைவனுடையவும் அவனுடைய தூதர்களுடையவும் கட்டளையை மீறிவிட்டன. எனவே நாம் அவர்களைக் கடுமையாக கேள்விக்கணக்கு கேட்டோம். மேலும், அவர்களுக்கு மோசமான தண்டனையும் அளித்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எத்தனையோ ஊர்(வாசி)கள் தங்களிரட்சகனின் கட்டளைக்கும், அவனுடைய தூதர்களுக்கும் மாறு செய்தனர், (ஆதலால், அவர்களை நாம் வெகு கடினமாகவே கேள்வி கணக்கு கேட்டு, அவர்களைக் கொடூரமான வேதனையாக வேதனையும் செய்தோம்.
Saheeh International
And how many a city was insolent toward the command of its Lord and His messengers, so We took it to severe account and punished it with a terrible punishment.
فَذَاقَتْ وَبَالَ اَمْرِهَا وَكَانَ عَاقِبَةُ اَمْرِهَا خُسْرًا ۟
فَذَاقَتْஅவை சுவைத்தனوَبَالَகெட்ட முடிவைاَمْرِهَاதமது காரியத்தின்وَكَانَஇன்னும் ஆகிவிட்டதுعَاقِبَةُமுடிவுاَمْرِهَاஅவற்றின் காரியத்தின்خُسْرًا‏மிக நஷ்டமாகவே
Fபதாகத் வBப்Bபல அம்ரிஹா வ கான 'ஆகிBபது அம்ரிஹா குஸ்ரா
முஹம்மது ஜான்
இவ்வாறு அவை தம் செயலுக்குரிய தண்டனையை அனுபவித்துக் கொண்டன; அன்றியும், அவர்களுடைய செயல்களின் முடிவும் நஷ்டமாகவே ஆயிற்று.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர்களின் தீய செயலுக்குரிய பலனை அவர்கள் அனுபவித்தனர். அவர்களின் (தீய) காரியங்களின் முடிவு (இம்மையிலும்) நஷ்டமாகவே ஆகிவிட்டது.
IFT
அவர்கள் தங்கள் செயல்களுக்கான விளைவைச் சுவைத்துவிட்டார்கள். மேலும், அவர்களின் இறுதி முடிவு நஷ்டத்திலும் நஷ்டமாக இருந்தது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவை தன் (வரம்பு மீறிய) காரியத்தின் தண்டனையைச் சுவைத்துவிட்டன, அதன் (தீய) காரியத்தின் முடிவும் (இம்மையில்) நஷ்டமாகவே இருந்தது.
Saheeh International
And it tasted the bad consequence of its affair [i.e., rebellion], and the outcome of its affair was loss.
اَعَدَّ اللّٰهُ لَهُمْ عَذَابًا شَدِیْدًا ۙ فَاتَّقُوا اللّٰهَ یٰۤاُولِی الْاَلْبَابِ الَّذِیْنَ اٰمَنُوْا ۛ۫ؕ قَدْ اَنْزَلَ اللّٰهُ اِلَیْكُمْ ذِكْرًا ۟ۙ
اَعَدَّதயார் செய்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்لَهُمْஅவர்களுக்குعَذَابًاதண்டனையைشَدِيْدًا‌ ۙகடுமையானفَاتَّقُواஆகவே, அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைيٰۤاُولِى الْاَ لْبَابِ ۖۚ ۛஅறிவுடையவர்களே!الَّذِيْنَ اٰمَنُوْا ۛؕநம்பிக்கை கொண்டவர்கள்قَدْதிட்டமாகاَنْزَلَஇறக்கினான்اللّٰهُஅல்லாஹ்اِلَيْكُمْஉங்களுக்குذِكْرًا ۙ‏நல்லுபதேசத்தை
அ'அத்தல் லாஹு லஹும் 'அதாBபன் ஷதீதன் Fபத்தகுல் லாஹ யா உலில் அல்BபாBப், அல்லதீன ஆம்மனூ; கத் அன்Zஜலல் லாஹு இலய்கும் திக்ரா
முஹம்மது ஜான்
அல்லாஹ் (அவர்களுக்குக்) கடினமான வேதனையை (மறுமையில்) சித்தம் செய்திருக்கின்றான்; ஆகவே, ஈமான் கொண்டுள்ள அறிவுடையோரே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - திட்டமாக அல்லாஹ் உங்களுக்கு நினைவுறுத்தும் இவ்வுபதேசத்தை இறக்கி வைத்திருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(இன்னும் மறுமையில்) அல்லாஹ் அவர்களுக்குக் கடினமான வேதனையை தயார்படுத்தி வைத்திருக்கிறான். ஆகவே, நம்பிக்கைகொண்ட அறிவாளிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு(த் திரு குர்ஆன் என்னும்) நல்லுபதேசத்தை இறக்கி வைத்திருக்கிறான்.
IFT
அல்லாஹ் (மறுமையில்) அவர்களுக்குக் கடும் வேதனையைத் தயார்படுத்தி வைத்திருக்கின்றான். எனவே, நம்பிக்கை கொண்டிருக்கும் அறிவுடைய மக்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். அல்லாஹ் உங்கள் பக்கம் ஓர் அறிவுரையை இறக்கியுள்ளான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அன்றியும் மறுமையில்) அல்லாஹ் அவர்களுக்குக் கடினமான வேதனையை தயாராக்கி வைத்திருக்கின்றான், ஆகவே விசுவாசங்கொண்டோராகிய அறிவாளிகளே! அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள், திட்டமாக அல்லாஹ் உங்களுக்கு (குர் ஆன் என்னும்) நல்லுபதேசத்தை இறக்கி வைத்திருக்கிறான்-
Saheeh International
Allah has prepared for them a severe punishment; so fear Allah, O you of understanding who have believed. Allah has sent down to you a message [i.e., the Qur’an].
رَّسُوْلًا یَّتْلُوْا عَلَیْكُمْ اٰیٰتِ اللّٰهِ مُبَیِّنٰتٍ لِّیُخْرِجَ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ؕ وَمَنْ یُّؤْمِنْ بِاللّٰهِ وَیَعْمَلْ صَالِحًا یُّدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ قَدْ اَحْسَنَ اللّٰهُ لَهٗ رِزْقًا ۟
رَّسُوْلًاஒரு தூதரைيَّتْلُوْاஓதிக் காண்பிக்கிறார்عَلَيْكُمْஉங்களுக்குاٰيٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்مُبَيِّنٰتٍதெளிவான(வை)لِّيُخْرِجَவெளியேற்றுவதற்காகالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைمِنَ الظُّلُمٰتِஇருள்களிலிருந்துاِلَى النُّوْرِ‌ؕஒளியின் பக்கம்وَمَنْஎவர்(கள்)يُّؤْمِنْۢநம்பிக்கை கொண்டார்(கள்)بِاللّٰهِஅல்லாஹ்வைوَيَعْمَلْஇன்னும் செய்வார்(கள்)صَالِحًـاநன்மையைيُّدْخِلْهُஅவர்களை பிரவேசிக்கவைப்பான்جَنّٰتٍசொர்க்கங்களில்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُநதிகள்خٰلِدِيْنَநிரந்தரமாகத் தங்குவார்கள்فِيْهَاۤஅவற்றில்اَبَدًا‌ؕஎப்போதும்قَدْதிட்டமாகاَحْسَنَஅழகாக வைத்திருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்لَهٗஅவர்களுக்குرِزْقًا‏வாழ்வாதாரத்தை
ரஸூல(ன்)ய் யத்லூ 'அலய்கும் ஆயாதில் லாஹி முBபய்யினாதில் லியுக்ரிஜல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி மினள் ளுலுமாதி இலன் னூர்; வ ம(ன்)ய் யு'மின் Bபில்லாஹி வ யஃமல் ஸாலிஹ(ன்)ய் யுத்கில்ஹு ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா அBபதா கத் அஹ்ஸனல் லாஹு லஹூ ரிZஜ்கா
முஹம்மது ஜான்
அன்றியும், ஒரு தூதரையும் அவன் (அனுப்பி வைத்தான்); அவர் அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்பவர்களை இருள்களிலிருந்து, ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக; மேலும் எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்கிறான் - அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களுக்குத் திடமாக உணவை அழகாக்கினான்.
அப்துல் ஹமீது பாகவி
(மேலும்), ஒரு தூதரையும் (அனுப்பி வைத்திருக்கிறான்). அவர் அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக்காண்பித்து, (உங்களில்) நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் செய்பவர்களை, இருள்களில் இருந்து பிரகாசத்தின் பக்கம் கொண்டு வருகிறார். ஆகவே, (உங்களில்) எவர்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ, அவர்களை சொர்க்கங்களில் புகச்செய்வான். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும். என்றென்றும் அவர்கள் அதில் தங்கிவிடுவார்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு அழகான அருளே புரிவான்.
IFT
அதாவது, ஒரு தூதரை! அவரோ தெளிவாக வழிகாட்டக் கூடிய இறைவசனங்களை உங்களுக்கு ஓதிக்காட்டுகின்றார். இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிவோரை இருளிலிருந்து வெளியேற்றி வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்காக! யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகின்றாரோ அவரை அல்லாஹ் சுவனங்களில் நுழைவிப்பான். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். இப்படிப்பட்ட மக்கள் அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் இத்தகையவருக்கு மிக அழகிய வாழ்வாதாரத்தை வைத்திருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஒரு தூதரை-(யும்) உங்களுக்கு அனுப்பி வைத்தான், உங்களில் எவர்) விசுவாசங்கொண்டு நல்லசெயல்களும் செய்கிறாரோ அத்தகையோரை இருள்களிலிருந்து ஒளியின்பால் அவர் வெளியேற்றிக் கொண்டு வருவதற்காக-தெளிவு படுத்தக்கூடிய அல்லாஹ்வின் வசனங்களை, உங்கள் மீது அவர் ஓதிக்காண்பிக்கிறார், மேலும் (உங்களில்) எவர் அல்லாஹ்வை விசுவாசித்து நற்செயலும் புரிகிறாரோ அவரைச் சுவனபதிகளில் அவன் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், என்றென்றும் அவர்கள் நிரந்தரமாக அவற்றில் (தங்கி) இருப்பவர்கள், திட்டமாக அல்லாஹ் அவருக்குரிய உணவை அழகானதாக ஆக்கிவிட்டான்.
Saheeh International
[He sent] a Messenger [i.e., Muhammad (ﷺ] reciting to you the distinct verses of Allah that He may bring out those who believe and do righteous deeds from darknesses into the light. And whoever believes in Allah and does righteousness - He will admit him into gardens beneath which rivers flow to abide therein forever. Allah will have perfected for him a provision.
اَللّٰهُ الَّذِیْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ وَّمِنَ الْاَرْضِ مِثْلَهُنَّ ؕ یَتَنَزَّلُ الْاَمْرُ بَیْنَهُنَّ لِتَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۙ۬ وَّاَنَّ اللّٰهَ قَدْ اَحَاطَ بِكُلِّ شَیْءٍ عِلْمًا ۟۠
اَللّٰهُ الَّذِىْஅல்லாஹ்தான்خَلَقَபடைத்தான்سَبْعَ سَمٰوٰتٍஏழு வானங்களையும்وَّمِنَ الْاَرْضِஇன்னும் பூமியில்مِثْلَهُنَّ ؕஅவைப் போன்றதையும்يَتَنَزَّلُஇறங்குகின்றனالْاَمْرُகட்டளைகள்بَيْنَهُنَّஅவற்றுக்கு மத்தியில்لِتَعْلَمُوْۤاநீங்கள் அறிவதற்காகاَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாப் பொருள்கள் மீதும்قَدِيْرٌ ۙபேராற்றலுடையவன்وَّاَنَّ اللّٰهَஇன்னும் நிச்சயமாக அல்லாஹ்قَدْதிட்டமாகاَحَاطَசூழ்ந்துள்ளான்بِكُلِّ شَىْءٍஎல்லாப் பொருள்களையும்عِلْمًا‏அறிவால்
அல்லாஹுல் லதீ கலக ஸBப்'அ ஸமாவாதி(ன்)வ் வ மினல் அர்ளி மித்லஹுன்ன யதனZஜ்Zஜலுல் அம்ரு Bபய்னஹுன்ன லிதஃலமூ அன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீரு(ன்)வ் வ அன்னல் லாஹ கத் அஹாத Bபிகுல்லி ஷய்'இன் 'இல்மா
முஹம்மது ஜான்
அல்லாஹ் தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியிலிருந்து அவற்றைப் போலவும் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் என்பதையும், மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால் எல்லாப் பொருளையும் சூழ்ந்தறிகிறான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக, அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளையிறங்கிக் கொண்டேயிருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
ஏழு வானங்களையும், அவற்றைப்போல் பூமியையும் அல்லாஹ்தான் படைத்தான். இவற்றில் (தினசரி நிகழக்கூடிய) எல்லா விஷயங்களைப் பற்றிய கட்டளை இறங்கிக்கொண்டே இருக்கிறது. (ஆகவே, நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக அல்லாஹ் சகலவற்றின் மீதும் ஆற்றலுடையவன் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால், எல்லாவற்றையும் ஆழமாக அறிந்துகொண்டிருக்கிறான் என்பதையும் நீங்கள் திட்டமாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இவற்றைப் படைத்தான்.
IFT
அல்லாஹ்தான் ஏழு வானங்களைப் படைத்தான். பூமியின் இனத்திலிருந்து அவற்றைப் போன்றதையும் படைத்தான். அவற்றிற்கிடையே கட்டளை இறங்கிக் கொண்டிருக்கின்றது. அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றல் பெற்றிருக்கின்றான் என்பதையும் அல்லாஹ்வின் அறிவு ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்திருக்கின்றது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விஷயங்கள் உங்களுக்கு எடுத்துரைக்கப்படுகின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்-அவன் எத்தகையவனென்றால் ஏழு வானங்களையும், அவைகளைப்போல் (எண்ணிக்கையில்) பூமியையும் படைத்தான், அவைகளுக்கிடையில் (அன்றாடம் நடந்தேரும் காரியங்கள் பற்றி) கட்டளைகள் இறங்கிக் கொண்டே இருக்கின்றன, நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக ஆற்றலுடையவன் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் (தன்) அறிவால் ஒவ்வொரு பொருளையும் திட்டமாக சூழ்ந்தறிந்து கொண்டிருக்கின்றான் என்பதையும் (விசுவாசிகளே!) நீங்கள் அறிந்து கொள்வதற்காக (இவ்வாறு விளக்குகிறான்.)
Saheeh International
It is Allah who has created seven heavens and of the earth, the like of them. [His] command descends among them so you may know that Allah is over all things competent and that Allah has encompassed all things in knowledge.