கொடுமைகள் புரிவதில் வரம்பு மீறிச் செல்பவனாகவும், பாவச் செயல்கள் அதிகம் செய்பவனாகவும், இரக்கமற்ற கொடுமைக்காரனாகவும், இத்தனைக்கும் பிறகு இழி பிறவியாகவும் இருக்கின்றான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
முரட்டுச் சுபாவமுடையவன், அதற்குப் பிறகு (தந்தை பெயர் தெரியா) இழி பிறப்புடையவன்.
اِنَّاநிச்சயமாக நாம்بَلَوْنٰهُمْஅவர்களை சோதித்தோம்كَمَا بَلَوْنَاۤநாம் சோதித்ததுபோல்اَصْحٰبَ الْجَـنَّةِ ۚதோட்ட முடையவர்களைاِذْ اَقْسَمُوْاஅவர்கள் சத்தியம் செய்த சமயத்தை நினைவு கூருங்கள்!لَيَصْرِمُنَّهَاஅதை அவர்கள் நிச்சயமாக அறுவடை செய்ய வேண்டும்مُصْبِحِيْنَۙஅவர்கள் அதிகாலையில் இருக்கும் போது
நிச்சயமாக நாம் தோட்டமுடையவர்களைச் சோதித்தது போலவே, நாம் அவர்களைச் சோதித்தோம். அ(த் தோட்டத்திற்குடைய)வர்கள் அதிலுள்ள கனிகளை அதிகாலையில் சென்று பறித்து விடுவோமென்று சத்தியம் செய்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(யமன் நாட்டில் வசித்த) தோப்பின் சொந்தக்காரர்களை நாம் சோதித்தவாறே (மக்காவாசிகளாகிய) இவர்களையும், (ஆறு ஆண்டுகள் பஞ்சத்தைக் கொண்டு) நிச்சயமாக நாம் சோதித்தோம். (அத்தோப்புடையவர்கள்) அதிலுள்ள விளைச்சலை (மறுநாள்) அதிகாலையில் சென்று அறுத்துவிடுவோம் என்று சத்தியம் செய்தார்கள்.
IFT
நாம் (மக்காவாசிகளாகிய) இவர்களைச் சோதனைக் குள்ளாக்கியுள்ளோம், ஒரு தோட்டத்தின் உரிமையாளர்களைச் சோதனைக்குள்ளாக்கியது போன்று! ஒருபோது அவர்கள் தங்களுடைய தோட்டத்தின் கனிகளை நிச்சயம் அதிகாலையில் பறிப்பதாகச் சத்தியம் செய்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் (யமன் நாட்டிலுள்ள “ஸன் ஆ”வை அடுத்துள்ள ஊர்வாசிகளில்) அத்தோட்டத்திற்குரியவர்களைச் சோதித்தவாறே (மக்கத்து காஃபிர்களான) அவர்களை நாம் சோதித்தோம், (அத்தோட்டத்திற்குரியவர்களான) அவர்கள் அதனை அதிகாலையில் சென்று அறுத்துவிடுவோமென்று சத்தியம் செய்த சமயத்தில்,
Saheeh International
Indeed, We have tried them as We tried the companions of the garden, when they swore to cut its fruit in the [early] morning
فَلَمَّا رَاَوْهَاஅவர்கள் அதைப் பார்த்த போதுقَالُوْۤاகூறினார்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்لَـضَآلُّوْنَۙவழிதவறி விட்டோம்
Fபலம்மா ர அவ்ஹா காலூ இன்னா லளால்லூன்
முஹம்மது ஜான்
ஆனால், அவர்கள் அதை (தோட்டத்தை அழிந்து போன நிலையில்) கண்ட போது: “நிச்சயமாக நாம் வழி தவறி (வேறு தோட்டத்திற்கு) வந்து விட்டோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(சென்று) அதைப் பார்க்கவே, (விளைச்சலெல்லாம் அழிந்து போயிருப்பதைக் கண்டு ‘‘இது நம்முடையதல்ல; வேறொருவருடைய தோட்டத்திற்கு) நிச்சயமாக நாம் வழிதவறியே வந்துவிட்டோம்'' என்றார்கள்.
IFT
ஆனால் தோட்டத்தை அவர்கள் பார்த்தபோது கூறினார்கள். “நாம் வழிதவறி விட்டிருக்கிறோம்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அங்கு சென்று, அழிந்துவிட்ட நிலையில்) அதனை அவர்கள் பார்த்தபோது (இது நம்முடையதல்ல,) நிச்சயமாக நாம் வழி தவறிவிட்டவர்கள்” என்று கூறினார்கள்.
Saheeh International
But when they saw it, they said, "Indeed, we are lost;
قَالَகூறினார்اَوْسَطُهُمْஅவர்களில் நீதவான்اَلَمْ اَقُلْ لَّكُمْநான் உங்களுக்கு கூறவில்லையா?لَوْلَا تُسَبِّحُوْنَநீங்கள் இன்ஷா அல்லாஹ் என்று சொல்லி இருக்க வேண்டாமா
கால அவ்ஸதுஹும் அலம் அகுல் லகும் லவ் லா துஸBப்Bபிஹூன்
முஹம்மது ஜான்
அவர்களில் நடுநிலையுள்ள ஒருவர் “நீங்கள் தஸ்பீஹு செய்திருக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு கூறவில்லையா?” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களிலுள்ள ஒரு நடுநிலையாளன் அவர்களை நோக்கி ‘‘(அடிக்கடி) நான் உங்களுக்குக் கூறவில்லையா? (நான் கூறியபடி) நீங்கள் (இறைவனைத்) துதிசெய்து கொண்டிருக்க வேண்டாமா?'' என்று கூறினார்.
IFT
அவர்களிடையே மிகவும் சிறந்த மனிதர் கூறினார்: “நீங்கள் இறைவனைத் துதிக்க வேண்டாமா? இதை நான் உங்களிடம் கூறவில்லையா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களிலுள்ள மிகுந்த நடுநிலையாளர் ஒருவர் அவர்களிடம், “நீங்கள் (அல்லாஹ்வைத்) துதி செய்திருக்க வேண்டாமா, என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா?” என்று கூறினார்.
Saheeh International
The most moderate of them said, "Did I not say to you, 'Why do you not exalt [Allah]?'"
“எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும்; நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம்” (எனக் கூறினர்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனையே நோக்குகிறோம். எங்கள் இறைவன் இதைவிட மேலானதொன்றை எங்களுக்குத் தரக்கூடும்'' (என்றும் கூறினர்).
IFT
எங்கள் அதிபதி இதற்குப் பகரமாக இதனைவிடச் சிறந்த தோட்டத்தை எங்களுக்கு வழங்கக்கூடும். நாங்கள் எங்கள் அதிபதியின் பக்கம் திரும்புகின்றோம்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எங்கள் இரட்சகன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும், நிச்சயமாக நாங்கள் இரட்சகனின் பக்கமே (அவனது அருளை) ஆசிக்கிறவர்களாக இருக்கிறோம் (என்றும் கூறினார்கள்)
Saheeh International
Perhaps our Lord will substitute for us [one] better than it. Indeed, we are toward our Lord desirous."
كَذٰلِكَஇவ்வாறுதான்الْعَذَابُؕதண்டனைوَلَعَذَابُதண்டனைالْاٰخِرَةِமறுமையின்اَكْبَرُ ۘமிகப் பெரியதுلَوْ كَانُوْاஅவர்கள் இருக்க வேண்டுமே!يَعْلَمُوْنَஅறிந்தவர்களாக
கதாலிகல் அதாBப், வ ல'அதாBபுல் ஆகிரதி அக்Bபர்; லவ் கானூ யஃலமூன்
முஹம்மது ஜான்
இவ்வாறுதான் (இவ்வுலக) வேதனை வருகிறது; அவர்கள் அறிந்து கொள்வார்களானால் மறுமையின் வேதனை (இதைவிட) மிகவும் பெரிது (என உணர்ந்து சன்மார்க்கத்தின் பால் திரும்புவார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! உம்மை நிராகரிக்கின்ற இவர்களுக்கும்) இத்தகைய வேதனைதான் கிடைக்கும். மறுமையிலுள்ள வேதனையோ (இதைவிட) மிகப் பெரிது. இதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
IFT
இப்படித்தான் இருக்கும் வேதனை! மறுமையின் வேதனை இதனைவிடக் கொடியதாகும். அந்தோ! இவர்கள் இதனை அறிந்திருக்க வேண்டுமே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இவ்வாறே வேதனை (அல்லாஹ் நாடியவர்களை வந்தடையும்) மேலும், அவர்கள் அறிந்தவர்களாக இருப்பார்களானால் திட்டமாக மறுமையின் வேதனை மிகப் பெரியதாகும்.
Saheeh International
Such is the punishment [of this world]. And the punishment of the Hereafter is greater, if they only knew.
அல்லது, நீங்கள் தீர்ப்புச் செய்து கொள்வதெல்லாம் கியாம நாள் வரை உங்களுக்கு நிச்சயமாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் என்று நம் உறுதி பிரமாணங்கள் உங்களிடம் இருக்கின்றனவா?
அப்துல் ஹமீது பாகவி
அல்லது நீங்கள் கட்டளையிடுவதெல்லாம் மறுமை நாள் வரை, நிச்சயமாக உங்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்குமென்று நாம் உங்களுக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கின்றோமா?
IFT
அல்லது நீங்கள் எதைத் தீர்மானித்திருக்கின்றீர்களோ அதுவே உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென்று இறுதித் தீர்ப்புநாள் வரை நம்மைக் கட்டுப்படுத்தும் உடன்படிக்கை ஏதேனும் நீங்கள் நம்முடன் ஏற்படுத்திவைத்திருக்கிறீர்களா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது நீங்கள் தீர்ப்புச் செய்பவை நிச்சயமாக உங்களுக்கு உண்டு என நம் மீது மறுமை நாள்வரை உங்களுக்கு உறுதி செய்யப்பட்ட சத்திய(ப்பிரமாண)ங்கள் உண்டா? (அவ்வாறு எதுவும் நம்முடன் உங்களுக்கில்லை)
Saheeh International
Or do you have oaths [binding] upon Us, extending until the Day of Resurrection, that indeed for you is whatever you judge?
اَمْ لَهُمْஇவர்களுக்கு உண்டா?شُرَكَآءُ ۛۚகூட்டாளிகள்فَلْيَاْتُوْاஅவர்கள் கொண்டு வரட்டும்بِشُرَكَآٮِٕهِمْஅவர்களின் அந்த கூட்டாளிகளைاِنْ كَانُوْاஅவர்கள் இருந்தால்صٰدِقِيْنَஉண்மையாளர்களாக
அம் லஹும் ஷுரகா'உ Fபல் ய'தூ Bபிஷுரகா 'இஹிம் இன் கானூ ஸாதிகீன்
முஹம்மது ஜான்
அல்லது (பொறுப்பேற்க) அவர்களுக்கு இணை வைக்கும் கூட்டாளிகள் தாம் இருக்கின்றார்களா? அவ்வாறாயின், அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களுடைய கூட்டாளிகளைக் கொண்டு வரட்டும்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லது அவர்கள் இணைவைத்து வணங்கும் தெய்வங்கள் அவர்களுக்குப் பொறுப்பாளியா? இதில் அவர்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால், அவர்கள் இணைவைத்தவற்றை (இன்றைய தினம் தங்கள் சாட்சிகளாக) அழைத்து வரவும்.
IFT
அல்லது இவர்களாக ஏற்படுத்திக் கொண்ட இணைக் கடவுள்கள் (இதற்குப் பொறுப்பேற்கும் வகையில்) உள்ளனரா? அப்படியென்றால், தங்களுடைய அந்த இணைக் கடவுள்களை இவர்கள் கொண்டுவரட்டும், இவர்கள் உண்மையாளர்களாய் இருந்தால்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது (இவ்வாறு அவர்கள் கூறிக் கொண்டிருப்பவற்றில்) அவர்களுக்கு இணையாளர்கள் இருக்கிறார்களா? (அக்கூற்றில்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் (அவர்களுக்குப் பொறுப்பாளர்களாக) அவர்களின் இணையாளர்களைக் கொண்டு வரட்டும்.
Saheeh International
Or do they have partners? Then let them bring their partners, if they should be truthful.
يَوْمَநாளில்يُكْشَفُஅகற்றப்படுகின்றعَنْ سَاقٍகெண்டைக்காலை விட்டும்وَّيُدْعَوْنَஇன்னும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்اِلَى السُّجُوْدِசிரம்பணியفَلَا يَسْتَطِيْعُوْنَۙஆனால், அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்
கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
கெண்டைக்காலை விட்டும் திரை அகற்றப்படும் நாளை (பயந்து கொள்ளுங்கள்). அன்றைய தினம், சிரம் பணிந்து வணங்கும்படி அவர்கள் அழைக்கப்படுவார்கள். (அவர்களின் பாவச்சுமை அவர்களை அழுத்திக் கொண்டிருப்பதனால் அவ்வாறு செய்ய) அவர்களால் இயலாமல் போய்விடும்.
IFT
எந்த நாளில் கடினமான நேரம் வருமோ மேலும், மக்கள் ஸஜ்தா* செய்வதற்காக அழைக்கப்படுவார்களோ அந்த நாளில் இந்த மக்களால் ஸஜ்தா செய்திட முடியாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
கெண்டைக்காலைவிட்டு (திரை) அகற்றப்பட்டுவிடும் நாளில், அவர்களோ (அந்நாளின்போது) சிரம்பணிவதின் பால் அழைக்கப்படுவர், ஆனால் அவர்கள் (சிரம்பணிய) சக்தி பெறமாட்டார்கள்.
Saheeh International
The Day the shin will be uncovered and they are invited to prostration but they [i.e., the disbelievers] will not be able,
அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும் நிலையில் இழிவு அவர்களை மூடிக் கொள்ளும்; அவர்களோ (உலகில்) திடமாக இருந்த போது, ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டுதானிருந்தனர். (ஆனால் அப்போது அலட்சியமாக இருந்தனர்.)
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுடைய பார்வையெல்லாம் கீழ்நோக்கி நிற்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். (இம்மையில்) சுகமா(ன தேகத்தை உடையவர்களா)க இருந்த சமயத்தில், சிரம் பணிந்து வணங்க நிச்சயமாக அழைக்கப்பட்டனர். (எனினும், தங்கள் கர்வத்தால் அதை நிராகரித்து விட்டனர்.)
IFT
இவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். இழிவு இவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும். இவர்கள் ஆரோக்கியமானவர்களாய் இருந்தபோது, ஸஜ்தா செய்யுமாறு இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வந்தது. (அப்போது இவர்கள் மறுத்துக் கொண்டிருந்தார்கள்).
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுடைய பார்வைகளெல்லாம் கீழ் நோக்கியவையாக இருக்கும் நிலையில் இழிவு அவர்களைச் சூழ்ந்துகொள்ளும், (இம்மையில்) சுகமானவர்களாக இருந்த சமயத்தில் சிரம் பணிந்து வணங்க நிச்சயமாக அவர்கள் அழைக்கப்பட்டு வந்தார்கள்.
Saheeh International
Their eyes humbled, humiliation will cover them. And they used to be invited to prostration while they were sound.
فَذَرْنِىْஎன்னை(யும்) விட்டு விடுவீராக!وَمَنْ يُّكَذِّبُபொய்ப் பிப்பவர்களையும்بِهٰذَا الْحَـدِيْثِؕஇந்த வேதத்தைسَنَسْتَدْرِجُهُمْஅவர்களை கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிப்போம்مِّنْ حَيْثُ لَا يَعْلَمُوْنَۙஅவர்கள் அறியாத விதத்தில்
Fபதர்னீ வ ம(ன்)ய் யுகத்திBபு Bபிஹாதல் ஹதீதி ஸனஸ்தத் ரிஜுஹும் மின் ஹய்து லா யஃலமூன்
முஹம்மது ஜான்
எனவே, என்னையும், இந்தச் செய்தியைப் பொய்யாக்குவோரையும் விட்டு விடுவீராக! அவர்களே அறியாத விதத்தில் படிப்படியாகப் பிடிப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நீர் மத்தியில் வராது) என்னையும் இவ்வசனங்களைப் பொய்யாக்கும் இவர்களையும் விட்டு விடுவீராக. அவர்கள் அறியாத விதத்தில் அதிசீக்கிரத்தில் அவர்களை சிரமத்தில் சிக்க வைப்போம்.
IFT
ஆகவே (நபியே!) நீர் இந்த வேதவாக்கைப் பொய்யெனத் தூற்றுபவர்களின் விவகாரத்தை என்னிடம் விட்டுவிடும். படிப்படியாக இவர்கள் அறியாத விதத்தில் அழிவின் பக்கம் இவர்களை நாம் கொண்டு செல்வோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, என்னையும் இச்செய்தியைப் பொய்யாக்குபவரையும் விட்டுவிடுவீராக! அவர்கள் அறியாத விதத்தில் படிப்படியாக அவர்களை நாம் பிடிப்போம்.
Saheeh International
So leave Me, [O Muhammad], with [the matter of] whoever denies this statement [i.e., the Qur’an]. We will progressively lead them [to punishment] from where they do not know.
اَمْ تَسْــٴَــلُهُمْஇவர்களிடம் நீர் கேட்கின்றீரா?اَجْرًاகூலி ஏதும்فَهُمْஅவர்கள்مِّنْ مَّغْرَمٍகடனால்مُّثْقَلُوْنَۚசிரமப்படுகிறார்களா?
அம் தஸ்'அலுஹும் அஜ்ரன் Fபஹும் மின் மக்ரமின் முத்கலூன்
முஹம்மது ஜான்
நீர் அவர்களிடம் ஏதாவது கூலிகேட்டு, அதனால் அவர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டு விட்டதா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்களிடம் (வரியாக) கூலி ஏதும் கேட்கிறீரா? அவ்வாறாயின் (அதற்காக அவர்கள்) பட்ட கடனில் (அல்லது அந்த வரியின் பளுவைச் சுமக்க முடியாது) அவர்கள் மூழ்கிவிட்டனரா?
IFT
என்ன, நீர் இவர்களிடம் கூலி எதுவும் கேட்கிறீரா? அவ்வாறு இவர்கள் கடன் சுமையால் அழுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றார்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது (நபியே!) அவர்களிடம் ஏதாவது கூலியை நீர் கேட்கின்றீரா? அதனால், அவர்கள் கடனால் பளுவாக்கப்பட்டவர்களா?
Saheeh International
Or do you ask of them a payment, so they are by debt burdened down?
ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காக (நபியே!) நீர் பொறுத்திருப்பீராக; மீனுடையவரைப் போன்று (அவசரப்பட்டவர்) ஆகிவிடவேண்டாம்; அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது:
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமது இறைவனின் கட்டளைக்காகப் பொறுத்திருப்பீராக. (கோபம் தாங்காது) மீன் வயிற்றில் சென்றவரை (-யூனுஸை)ப் போல் நீரும் ஆகிவிடவேண்டாம். அவர் கோபத்தில் மூழ்கிச் சென்று (மீனால் விழுங்கப்பட்டு அதன் வயிற்றில் இருந்துகொண்டு இறைவனைப்) பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்ப்பீராக!
IFT
சரி! உம் அதிபதியின் தீர்ப்பு வரும்வரை பொறுமையாய் இரும். மேலும் மீன் மனிதர் (யூனுஸ்) போன்று ஆகி விடாதீர். அவர் துயரத்திற்குள்ளாகி இருந்த நிலையில் அழைத்த போது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (நபியே!) நீர் உமதிரட்சகனின் கட்டளைக்காகப் பொறுமையுடனிருப்பீராக! மேலும், மீனுடையவரைப் போன்று நீர் ஆகிவிட வேண்டாம், அவர் துக்கம் நிரம்பப்பெற்றவராக (பிரார்த்தனை செய்து) அழைத்தபொழுது,
Saheeh International
Then be patient for the decision of your Lord, [O Muhammad], and be not like the companion of the fish [i.e., Jonah] when he called out while he was distressed.
மேலும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை) கேட்கும் போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்திட நெருங்குகிறார்கள்; “நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்” என்றும் கூறுகின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிராகரிப்பவர்கள் நல்லுபதேசத்தைக் கேட்கும் போதெல்லாம், அவர்கள் தங்கள் பார்வைகளைக் கொண்டே உம்மை வீழ்த்தி விடுபவர்களைப்போல் (கோபத்துடன் விரைக்க விரைக்கப்) பார்க்கின்றனர். மேலும், அவர்கள் (உம்மைப் பற்றி) நிச்சயமாக, இவர் பைத்தியக்காரர்தான் என்று கூறுகின்றனர்.
IFT
இந்த நிராகரிப்பாளர்கள் நல்லுரையை (குர்ஆனை)ச் செவியுறும்போது உம்முடைய பாதங்களைப் பிறழச் செய்துவிடு வதைப் போன்று உம்மை முறைத்துப் பார்க்கின்றார்கள். மேலும், “நிச்சயமாக இவர் ஒரு பைத்தியக்காரர்!” என்றும் கூறுகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) நிராகரிப்போர் (குர் ஆனுடைய) உபதேசத்தைக் கேட்கும்பொழுது அவர்கள் தங்களுடைய பார்வைகளைக் கொண்டே உம்மை வீழ்த்திவிட நெருங்குகின்றனர், (உம்மைப்பற்றி) நிச்சயமாக, அவர் பைத்தியக்காரர்(தாம்) என்றும் கூறுகின்றனர்.
Saheeh International
And indeed, those who disbelieve would almost make you slip with their eyes [i.e., looks] when they hear the message, and they say, "Indeed, he is mad."