7. ஸூரத்துல் அஃராஃப்(சிகரங்கள்)

மக்கீ, வசனங்கள்: 206

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
الٓمّٓصٓ ۟ۚ
الۤمّۤصۤ‏அலிஃப், லாம், மீம், ஸாத்
அலிFப்-லாம்-மீம்-ஸாத்
முஹம்மது ஜான்
அலிஃப், லாம், மீம், ஸாத்.
அப்துல் ஹமீது பாகவி
அலிஃப் லாம் மீம் ஸாத்.
IFT
அலிஃப், லாம், மீம், ஸாத்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அலிஃப் லாம் மீம் ஸாத்.
Saheeh International
Alif, Lam, Meem, Ṣad.
كِتٰبٌ اُنْزِلَ اِلَیْكَ فَلَا یَكُنْ فِیْ صَدْرِكَ حَرَجٌ مِّنْهُ لِتُنْذِرَ بِهٖ وَذِكْرٰی لِلْمُؤْمِنِیْنَ ۟
كِتٰبٌஒரு வேதம்اُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْكَஉம் மீதுفَلَا يَكُنْஇருக்க வேண்டாம்فِىْ صَدْرِكَஉம் இதயத்தில்حَرَجٌநெருக்கடிمِّنْهُஇதில்لِتُنْذِرَநீர் எச்சரிப்பதற்காகبِهٖஇதைக் கொண்டுوَذِكْرٰىஇன்னும் ஒரு நல்லுபதேசம்لِلْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களுக்கு
கிதாBபுன் உன்Zஜில இலய்க Fபலா யகுன் Fபீ ஸத்ரிக ஹரஜும் மின்ஹு லிதுன்திர Bபிஹீ வ திக்ரா லில்மு'மினீன்
முஹம்மது ஜான்
(நபியே!) இதன் மூலம் நீர் எச்சரிக்கை செய்வதற்காகவும் முஃமின்களுக்கு நல்லுபதேசமாகவும் உமக்கு அருளப்பட்ட வேதமாகும்(இது). எனவே இதனால் உமது உள்ளத்தில் எந்த தயக்கமும் ஏற்பட வேண்டாம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவ்வேதம் உம் மீது இறக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி உமது உள்ளத்தில் ஒரு தயக்கமும் வேண்டாம். இதைக் கொண்டு நீர் (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. நம்பிக்கை கொண்டவர்களுக்கு (இது) ஒரு நல்லுபதேசமாகும்.
IFT
(நபியே!) இது உம்மீது இறக்கியருளப்பட்டிருக்கும் வேதமாகும். எனவே, இதனைப் பற்றி உமது உள்ளத்தில் எவ்விதத் தயக்கமும் ஏற்பட வேண்டாம். (சத்தியத்தை மறுப்போர்க்கு) இதன் மூலம் நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும். மேலும், இறைநம்பிக்கை கொண்டோர்க்கு இது ஓர் அறிவுரையாகத் திகழ வேண்டும் என்பதற்காகவே இது இறக்கி வைக்கப்பட்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! இது) உம் மீது இறக்கப்பட்டுள்ள வேதமாகும், இவ்வேதத்தை மக்களுக்கு எத்திவைப்பதனால் உம்முடைய நெஞ்சத்தில் யாதொரு கலக்கமும் இருக்க வேண்டாம், இதனைக் கொண்டு நீர் (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், விசுவாசங்கொண்டோருக்கு ஒரு நல்லுபதேசமாகவும் இவ்வேதம் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.
Saheeh International
[This is] a Book revealed to you, [O Muhammad] - so let there not be in your breast distress therefrom - that you may warn thereby and as a reminder to the believers.
اِتَّبِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَیْكُمْ مِّنْ رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءَ ؕ قَلِیْلًا مَّا تَذَكَّرُوْنَ ۟
اِتَّبِعُوْاபின்பற்றுங்கள்مَاۤஎதுاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْكُمْஉங்களுக்குمِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவன்وَلَا تَتَّبِعُوْاபின்பற்றாதீர்கள்مِنْ دُوْنِهٖۤஅதைத் தவிரاَوْلِيَآءَ‌ ؕபொறுப்பாளர்களைقَلِيْلًا مَّاமிகக் குறைவாகتَذَكَّرُوْنَ‏நீங்கள் நல்லுணர்வு பெறுவது
இத்தBபி'ஊ மா உன்Zஜில 'இலய்கும் மிர் ரBப்Bபிகும் வலா தத்தBபி'ஊ மின் தூனிஹீ அவ்லியா'அ; கலீலம் மா ததக்கரூன்
முஹம்மது ஜான்
(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே!) உங்களுக்காக உங்கள் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (மற்றெவரையும் உங்களுக்குப்) பொறுப்பாளர்(களாக ஆக்கி, அவர்)களை நீங்கள் பின்பற்றாதீர்கள். (எனினும், இதைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உங்களில் மிகக் குறைவுதான்.
IFT
(மக்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்டவற்றைப் பின்பற்றுங்கள்! மேலும், அவனை விடுத்து வேறு பாதுகாவலர்களைப் பின்பற்றாதீர்கள்! ஆனால் நீங்கள் மிகக் குறைவாகவே நல்லுரைகளை ஏற்கின்றீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்களே!) உங்களுக்காக உங்கள் இரட்சகனிடமிருந்து இறக்கி வைக்கப்பட்ட இவ்வேதத்தைப் பின்பற்றுங்கள், அவனையன்றி மற்றெவரையும் உங்களுக்குப் பாதுகாவலர்(களாக ஆக்கி அவர்)களை நீங்கள் பின்பற்றாதீர்கள், எனினும், இதனைக் கொண்டு) நீங்கள் மிகக் குறைவாகவே நல்லுணர்ச்சி பெறுகிறீர்கள்.
Saheeh International
Follow, [O mankind], what has been revealed to you from your Lord and do not follow other than Him any allies. Little do you remember.
وَكَمْ مِّنْ قَرْیَةٍ اَهْلَكْنٰهَا فَجَآءَهَا بَاْسُنَا بَیَاتًا اَوْ هُمْ قَآىِٕلُوْنَ ۟
وَكَمْ مِّنْ قَرْيَةٍஎத்தனையோ நகரங்கள்اَهْلَـكْنٰهَاஅழித்தோம்/அவற்றைفَجَآءَவந்ததுهَاஅவற்றுக்குبَاْسُنَاநம் வேதனைبَيَاتًاஇரவில்اَوْஅல்லதுهُمْஅவர்கள்قَآٮِٕلُوْنَ‏பகலில் தூங்குபவர்கள்
வ கம் மின் கர்யதின் அஹ்லக்னாஹா Fபஜா'அஹா Bப'ஸுனா Bபயாதன் அவ் ஹும் கா'இலூன்
முஹம்மது ஜான்
(பாவிகள் வாழ்ந்து வந்த) எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கிறோம்; நமது வேதனை அவர்களை(த் திடீரென) இரவிலோ அல்லது (களைப்பாறுவதற்காகப்) பகலில் தூங்கிக்கொண்டிருக்கும் போதோ வந்தடைந்தது.
அப்துல் ஹமீது பாகவி
(பாவிகள் வசித்திருந்த) எத்தனையோ நகரங்களை நாம் அழித்திருக்கிறோம். அவற்றில் இருந்தவர்கள் இரவிலோ, பகலிலோ நித்திரையில் இருக்கும் பொழுது நம் வேதனை அவர்களை வந்தடைந்தது.
IFT
எத்தனையோ ஊர்களை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். இரவு நேரத்தில் அல்லது நண்பகலில் அவர்கள் துயிலில் ஆழ்ந்திருந்தபோது திடீரென்று நம்முடைய வேதனை அவர்களைத் தாக்கியது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (அல்லாஹ்வின் தூதர்களைப் பொய்யாக்கியும் அவர்களுக்கு மாற்றமாகவும் நடந்து வந்தவர்கள் வசித்திருந்த) எத்தனையோ ஊர்களை–அவற்றை நாம் அழித்திருக்கின்றோம், இரவோடு இரவாக, அல்லது அவர்கள் (களைப்பாறுவதற்காக) பகலில் தூங்கிக் கொண்டிருக்க நம்முடைய வேதனை அவற்றை வந்தடைந்தது.
Saheeh International
And how many cities have We destroyed, and Our punishment came to them at night or while they were sleeping at noon.
فَمَا كَانَ دَعْوٰىهُمْ اِذْ جَآءَهُمْ بَاْسُنَاۤ اِلَّاۤ اَنْ قَالُوْۤا اِنَّا كُنَّا ظٰلِمِیْنَ ۟
فَمَا كَانَஇருக்கவில்லைدَعْوٰٮهُمْஅவர்களுடைய வாதம்اِذْ جَآءَவந்த போதுهُمْஅவர்களிடம்بَاْسُنَاۤநம் வேதனைاِلَّاۤதவிரاَنْ قَالُوْۤاஅவர்கள் கூறியதுاِنَّاநிச்சயமாக நாம்كُنَّاஇருந்தோம்ظٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களாக
Fபமா கான தஃவாஹும் இத் ஜா'அஹும் Bப'ஸுனா இல்லா அன் காலூ இன்னா குன்னா ளாலிமீன்
முஹம்மது ஜான்
நமது வேதனை அவர்களுக்கு ஏற்பட்டபோது, அவர்கள்: “நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று சொன்னதைத் தவிர வேறொன்றும் கூறவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களிடம் நம் வேதனை வந்த சமயத்தில் ‘‘நிச்சயமாக எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டவர்களாகி விட்டோம்'' என்று கூறியதைத் தவிர வேறொன்றும் அவர்களால் கூறமுடியவில்லை.
IFT
அவ்வாறு நம்முடைய வேதனை அவர்களைத் தாக்கியபோது அவர்களால் எதையும் கூற இயலவில்லை; “உண்மையிலேயே நாங்கள் அக்கிரமக்காரர்களாகத்தான் இருந்தோம்” என்று கூக்குரலிட்டதைத் தவிர!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நம்முடைய வேதனை அவர்களுக்கு வந்தடைந்தபோது “நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களாகி விட்டோம்” என்று அவர்கள் கூறியதைத் தவிர வேறு எதுவும் அவர்களுடைய கூப்பாடாக இருக்கவில்லை.
Saheeh International
And their declaration when Our punishment came to them was only that they said, "Indeed, we were wrongdoers!"
فَلَنَسْـَٔلَنَّ الَّذِیْنَ اُرْسِلَ اِلَیْهِمْ وَلَنَسْـَٔلَنَّ الْمُرْسَلِیْنَ ۟ۙ
فَلَنَسْـــٴَـــلَنَّநிச்சயம் விசாரிப்போம்الَّذِيْنَஎவர்களைاُرْسِلَஅனுப்பப்பட்டார்(கள்)اِلَيْهِمْஅவர்களிடம்وَلَـنَسْــٴَــــلَنَّஇன்னும் நிச்சயம் விசாரிப்போம்الْمُرْسَلِيْنَ ۙ‏தூதர்களை
Fபலனஸ் 'அலன்னல் லதீன உர்ஸில இலய்ஹிம் வ லனஸ் 'அலன்னல் முர்ஸலீன்
முஹம்மது ஜான்
யாருக்கு (நம்) தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களைத் திடனாக விசாரணை செய்வோம். இன்னும் (நம்) தூதர்களையும் திடனாக விசாரிப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (இதைப் பற்றி நம்) தூதர்களையும், அவர்களை எவர்களிடம் அனுப்பி வைத்தோமோ அவர்களையும் நிச்சயமாக நாம் விசாரணை செய்வோம்.
IFT
எனவே, எந்த மக்களிடம் தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ, அந்த மக்களிடம் திண்ணமாக நாம் விசாரணை நடத்துவோம். மேலும், தூதர்களிடமும் (தூதுத்துவக் கடமையை அவர்கள் எதுவரை நிறைவேற்றினார்கள்; மக்களிடமிருந்து என்ன பதில் கிடைத்தது என்பது பற்றி) நிச்சயம் விசாரிப்போம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, எவர்கள்பால் தூதர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்களோ அவர்களையும் நிச்சயமாக நாம் கேட்டு விசாரிப்போம், மேலும், (நம்முடைய) தூதர்களையும் நிச்சயமாக நாம் கேட்டு விசாரிப்போம்.
Saheeh International
Then We will surely question those to whom [a message] was sent, and We will surely question the messengers.
فَلَنَقُصَّنَّ عَلَیْهِمْ بِعِلْمٍ وَّمَا كُنَّا غَآىِٕبِیْنَ ۟
فَلَنَقُصَّنَّநிச்சயம் விவரிப்போம்عَلَيْهِمْஅவர்களுக்குبِعِلْمٍஉறுதியான ஞானத்துடன்وَّمَا كُنَّاநாம் இருக்கவில்லைغَآٮِٕبِيْنَ‏மறைந்தவர்களாக
Fபலனகுஸ்ஸன்ன 'அலய்ஹிம் Bபி'இல்மி(ன்)வ் வமா குன்னா கா'இBபீன்
முஹம்மது ஜான்
ஆகவே, (பூரணமாக நாம்) அறிந்திருக்கிறபடி (அது சமயம்) அவர்களிடம் சொல்லிக் காண்பிப்போம்; (அவர்கள் செய்ததை விட்டும்) நிச்சயமாக நாம் மறைவாக இருக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(அப்போது அவர்களின் செயல்களை) நாம் நிச்சயமாக அவர்களுக்கு உறுதியுடன் விவரிப்போம். நாம் மறைவானவர்களாக இருக்கவில்லை.
IFT
பிறகு (நடந்த நிகழ்ச்சிகள்) அனைத்தையும் நாம் முழு அறிவுடன் அம்மக்களுக்கு எடுத்துச் சொல்வோம். நாம் எங்கும் மறைந்து போய்விடவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்களின் செயலைப்பற்றி நாம் நன்கறிந்துள்ளவாறு (விசாரணைக் காலத்தில்) நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கூறிக்காண்பிப்போம், இன்னும் (அவர்களின் சகல நிலைகளை விட்டும்) மறைந்திருப்பவர்களாக நாம் இருக்கவில்லை.
Saheeh International
Then We will surely relate [their deeds] to them with knowledge, and We were not [at all] absent.
وَالْوَزْنُ یَوْمَىِٕذِ لْحَقُّ ۚ فَمَنْ ثَقُلَتْ مَوَازِیْنُهٗ فَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
وَالْوَزْنُநிறுக்கப்படுதல்يَوْمَٮِٕذِஅன்றைய தினம்اۨلْحَـقُّ‌ ۚஉண்மைதான்فَمَنْஆகவே எவர்ثَقُلَتْகனமானதுمَوَازِيْنُهٗஅவருடைய நிறுவைகள்فَاُولٰۤٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْمُفْلِحُوْنَ‏வெற்றியாளர்கள்
வல்வZஜ்னு யவ்ம'இதினில் ஹக்க்; Fபமன் தகுலத் மவா Zஜீனுஹூ Fப-உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
முஹம்மது ஜான்
அன்றைய தினம் (அவரவரின் நன்மை தீமைகளை) எடைபோடுவது உறுதி; அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(ஒவ்வொருவரின் நன்மை தீமைகளையும்) அன்றைய தினம் எடை போடுவது சத்தியம். ஆகவே, எவர்களுடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.
IFT
மேலும் அந்நாளில் சத்தியம் மட்டுமே கனமுடையதாயிருக்கும். எவர்களுடைய நன்மைகளின் எடை கனமாக இருக்குமோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (ஒவ்வொருவரின் நன்மை தீமைகளையும்) அந்நாளில் (கூடுதல் குறைவின்றி) எடைபோடுவது உண்மையாகும், அப்போது எவர்களுடைய (நன்மையின்) எடைகள் கனத்தனவோ அவர்கள்தாம் நிச்சயமாக வெற்றியாளர்கள்.
Saheeh International
And the weighing [of deeds] that Day will be the truth. So those whose scales are heavy - it is they who will be the successful.
وَمَنْ خَفَّتْ مَوَازِیْنُهٗ فَاُولٰٓىِٕكَ الَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ بِمَا كَانُوْا بِاٰیٰتِنَا یَظْلِمُوْنَ ۟
وَمَنْஎவர்خَفَّتْஇலேசானதுمَوَازِيْنُهٗஅவருடைய நிறுவைகள்فَاُولٰۤٮِٕكَஅவர்கள்الَّذِيْنَ خَسِرُوْۤاநஷ்டமிழைத்தவர்கள்اَنْفُسَهُمْதங்களுக்கேبِمَاஎதன் காரணமாகكَانُوْاஇருந்தனர்بِاٰيٰتِنَاநம் வசனங்களுக்குيَظْلِمُوْنَ‏அநீதியிழைக்கின்றனர்
வ மன் கFப்Fபத் மவாZஜீனுஹூ Fப உலா'இகல் லதீன கஸிரூ அன்Fபுஸஹும் Bபிமா கானூ Bபி ஆயாதினா யள்லிமூன்
முஹம்மது ஜான்
யாருடைய (நன்மையின்) எடை (குறைந்து) இலேசாக இருக்கின்றதோ, அவர்கள் நம் வசனங்களுக்கு மாறுசெய்த காரணத்தால், அவர்கள் தமக்கு தாமே நஷ்டம் விளைவித்துக் கொண்டவர்கள் ஆவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்களுடைய (நன்மையின்) எடை (கனம் குறைந்து) இலேசாக இருக்கிறதோ அவர்கள் நம் வசனங்களுக்கு மாறுசெய்து தங்களுக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டவர்கள் ஆவர்.
IFT
மேலும், எவர்களுடைய நன்மைகளின் எடை இலேசாக இருக்குமோ அவர்கள்தாம் தங்களைத் தாங்களே இழப்பிற்குள்ளாக்கிக் கொண்டவர்கள். காரணம், அவர்கள் நம்முடைய வசனங்களுடன் அக்கிரமமாக நடந்து கொண்டிருந்தார்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், எவர்களுடைய நன்மையின் எடைகள் (கனம் குறைந்து) இலோசாக இருக்கின்றனவோ அத்தகையோர், நம்முடைய வசனங்களை பொய்யாக்கிக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்கள் தங்களுக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டவர்கள் ஆவர்.
Saheeh International
And those whose scales are light - they are the ones who will lose themselves for what injustice they were doing toward Our verses.
وَلَقَدْ مَكَّنّٰكُمْ فِی الْاَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِیْهَا مَعَایِشَ ؕ قَلِیْلًا مَّا تَشْكُرُوْنَ ۟۠
وَلَقَدْதிட்டவட்டமாகمَكَّـنّٰكُمْஇடமளித்தோம்/உங்களுக்குفِى الْاَرْضِபூமியில்وَجَعَلْنَاஇன்னும் ஏற்படுத்தினோம்لَـكُمْஉங்களுக்குفِيْهَاஅதில்مَعَايِشَ ؕவாழ்வாதாரங்களைقَلِيْلًا مَّاமிகக் குறைவாகتَشْكُرُوْنَ‏நன்றி செலுத்துகிறீர்கள்
வ லகத் மக்கன்னாகும் Fபில் அர்ளி வ ஜ'அல்னா லகும் Fபீஹா ம'ஆயிஷ்; கலீலம் மா தஷ்குரூன்
முஹம்மது ஜான்
(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் - எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்.  
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களுக்குப் பூமியில் எல்லா வசதிகளையும் அளித்து, அதில் (நீங்கள்) வாழ்வதற்குத் தேவையான காரணங்களை உங்களுக்கு ஏற்படுத்தினோம். (இவ்வாறிருந்தும்) நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகக் குறைவு.
IFT
நாம், பூமியில் உங்களை அனைத்து அதிகாரங்களுடன் வாழச் செய்தோம். மேலும், அங்கே உங்களுக்கு வாழ்க்கைச் சாதனங்களையும் அமைத்துத் தந்தோம். ஆயினும், நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்களே!) மேலும், நிச்சயமாக நாம் உங்களை பூமியில் அனைத்து அதிகாரங்களுடன்) வசிக்கச் செய்தோம், அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிக்குரிய (அனைத்து) சாதனங்களையும் நாம் ஆக்கித் தந்தோம், (இவ்வாறிருந்தும்) நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.
Saheeh International
And We have certainly established you upon the earth and made for you therein ways of livelihood. Little are you grateful.
وَلَقَدْ خَلَقْنٰكُمْ ثُمَّ صَوَّرْنٰكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ ۖۗ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ لَمْ یَكُنْ مِّنَ السّٰجِدِیْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகخَلَقْنٰكُمْஉங்களைப் படைத்தோம்ثُمَّபிறகுصَوَّرْنٰكُمْவடிவமைத்தோம்/உங்களைثُمَّபிறகுقُلْنَاகூறினோம்لِلْمَلٰۤٮِٕكَةِவானவர்களுக்குاسْجُدُوْاசிரம் பணியுங்கள்لِاٰدَمَ‌ ۖ ஆதமுக்குفَسَجَدُوْۤاசிரம் பணிந்தனர்اِلَّاۤ اِبْلِيْسَؕஇப்லீஸைத் தவிரلَمْ يَكُنْஅவன் ஆகவில்லைمِّنَ السّٰجِدِيْنَ‏சிரம் பணிந்தவர்களில்
வ லகத் கலக்னாகும் தும்ம ஸவ்வர்னாகும் தும்ம குல்னா லில்மலா'இகதிஸ் ஜுதூ லி ஆதம Fப-ஸஜதூ இல்லா இBப்லீஸ லம் யகும் மினஸ் ஸாஜிதீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் உங்களை படைக்க(க் கருதி) உங்களை (அதாவது உங்கள் முதல் தந்தையாகிய ஆதமை) உருவமைத்தோம். பின்னர் நாம் வானவர்களை நோக்கி ‘‘ஆதமுக்கு (சிரம்) பணியுங்கள்'' எனக் கட்டளையிட்டோம். இப்லீஸைத் தவிர (மற்ற வானவர்கள் அனைவரும் அவருக்குப்) பணிந்தார்கள். அவன் பணியவில்லை.
IFT
நாம் உங்களைப் படைத்து, பிறகு உங்களுக்கு உருவம் கொடுத்தோம். பின்னர் ஆதமுக்கு சிரம் பணியுங்கள் என வானவர்களுக்குக் கட்டளையிட்டோம். (இக்கட்டளைக்கேற்ப) அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள். ஆனால் இப்லீஸைத் தவிர! அவன் சிரம் பணிவோரில் ஒருவனாய் இருக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், திட்டமாக நாம் உங்களைப் படைத்தோம், பின்பு உங்களுக்கு உருவமமைத்தோம், அதன் பின்னர் “ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்” என மலக்குகளுக்கு நாம் கூறினோம், அப்பொழுது இப்ஸீஸைத் தவிர (மற்ற யாவரும் அவருக்கு) சிரம் பணிந்தார்கள், சிரம் பணிந்தவர்களில் அவன் இருக்கவில்லை.
Saheeh International
And We have certainly created you, [O mankind], and given you [human] form. Then We said to the angels, "Prostrate to Adam"; so they prostrated, except for Iblees. He was not of those who prostrated.
قَالَ مَا مَنَعَكَ اَلَّا تَسْجُدَ اِذْ اَمَرْتُكَ ؕ قَالَ اَنَا خَیْرٌ مِّنْهُ ۚ خَلَقْتَنِیْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِیْنٍ ۟
قَالَகூறினான்مَاஎது?مَنَعَكَஉம்மை தடுத்ததுاَلَّا تَسْجُدَநீ சிரம் பணியாதிருக்கاِذْபோதுاَمَرْتُكَ‌ ؕஉனக்கு கட்டளையிட்டேன்قَالَகூறினான்اَنَاநான்خَيْرٌமேலானவன்مِّنْهُ‌ ۚஅவரைவிடخَلَقْتَنِىْஎன்னை படைத்தாய்مِنْ نَّارٍநெருப்பால்وَّخَلَقْتَهٗஇன்னும் படைத்தாய்/அவரைمِنْ طِيْنٍ‏களிமண்ணால்
கால மா மன'அக அல்லா தஸ்ஜுத இத் அமர்துக கால அன கய்ரும் மின்ஹு கலக்தனீ மின் னாரி(ன்)வ் வ கலக்தஹூ மின் தீன்
முஹம்மது ஜான்
“நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே, இறைவன் இப்லீஸை நோக்கி) ‘‘நான் உனக்குக் கட்டளையிட்ட சமயத்தில், நீ (சிரம்) பணியாதிருக்கும்படி உன்னைத் தடை செய்தது எது?'' என்று கேட்க, (அதற்கு இப்லீஸ்) ‘‘நான் அவரைவிட மேலானவன். (ஏனென்றால்,) நீ என்னை நெருப்பால் படைத்தாய். அவரை களிமண்ணால் படைத்திருக்கிறாய். (களிமண்ணைவிட நெருப்பு உயர்ந்தது)'' என்று (இறுமாப்புடன்) கூறினான்.
IFT
“சிரம் பணியும்படி, நான் உனக்குக் கட்டளையிட்டபோது, அதைச் செய்யவிடாமல் உன்னைத் தடுத்தது எது?” என்று இறைவன் கேட்டான். அதற்கு இப்லீஸ் “நான் அவரை விட உயர்ந்தவன்; நீ என்னை நெருப்பிலிருந்து படைத்தாய்; அவரைக் களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று பதில் கூறினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே, அல்லாஹ் இப்லீஸிடம்) “நான் உனக்குக் கட்டளையிட்ட சமயத்தில் நீ சிரம் பணிவதிலிருந்து உன்னைத் தடுத்தது எது?” என்று கேட்டான், அதற்கு “நான் அவரைவிட மேலானவன், (ஏனென்றால்) நீ என்னை நெருப்பால் படைத்தாய், அவரையோ களிமண்ணால் படைத்தாய்” என்று (இறுமாப்புடன் இப்லீஸாகிய) அவன் கூறினான்.
Saheeh International
[Allah] said, "What prevented you from prostrating when I commanded you?" [Satan] said, "I am better than him. You created me from fire and created him from clay [i.e., earth]."
قَالَ فَاهْبِطْ مِنْهَا فَمَا یَكُوْنُ لَكَ اَنْ تَتَكَبَّرَ فِیْهَا فَاخْرُجْ اِنَّكَ مِنَ الصّٰغِرِیْنَ ۟
قَالَகூறினான்فَاهْبِطْஆகவே இறங்கிவிடுمِنْهَاஇதிலிருந்துفَمَا يَكُوْنُஅனுமதியில்லைلَـكَஉமக்குاَنْ تَتَكَبَّرَநீ பெருமை கொள்வதற்குفِيْهَاஇதில்فَاخْرُجْவெளியேறி விடு!اِنَّكَநிச்சயமாக நீمِنَ الصّٰغِرِيْنَ‏இழிவானவர்களில்
கால Fபஹ்Bபித் மின்ஹா Fபமா யகூனு லக அன் ததகBப்Bபர Fபீஹா Fபக்ருஜ் இன்னக மினஸ் ஸாகிரீன்
முஹம்மது ஜான்
“இதிலிருந்து நீ இறங்கி விடு; நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை; ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்” என்று அல்லாஹ் கூறினான். 
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு இறைவன்) ‘‘இதிலிருந்து நீ இறங்கிவிடு! நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை. (உன் பெருமையின் காரணமாக) நிச்சயமாக நீ சிறுமைப்பட்டவனாகி விட்டாய். (ஆதலால், இதிலிருந்து) நீ வெளியேறி விடு'' என்று கூறினான்.
IFT
அதற்கு அல்லாஹ் கூறினான்: “நீ இங்கிருந்து கீழே இறங்கி விடு; இங்கு பெருமையடிக்க உனக்கு உரிமை கிடையாது; நீ வெளியேறிவிடு! ஏனெனில், தமக்குத் தாமே இழிவைத் தேடிக் கொண்டவர்களில் திண்ணமாக நீயும் ஒருவனாகி விட்டாய்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இதிலிருந்து நீ இறங்கிவிடு, நீ இதில் பெருமை கொள்வதற்கு உனக்குத் தகுதியில்லை, ஆதலால், நீ வெளியேறிவிடு, (உன் பெருமையின் காரணமாக) நிச்சயமாக நீ சிறுமைப் பட்டோரில் இருக்கின்றாய்” என்று (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.
Saheeh International
[Allah] said, "Descend from it [i.e., Paradise], for it is not for you to be arrogant therein. So get out; indeed, you are of the debased."
قَالَ اَنْظِرْنِیْۤ اِلٰی یَوْمِ یُبْعَثُوْنَ ۟
قَالَகூறினான்اَنْظِرْنِىْۤஅவகாசமளி/எனக்குاِلٰىவரைيَوْمِநாள்يُبْعَثُوْنَ‏எழுப்பப்படுவார்கள்
கால அன்ளிர்னீ இலா யவ்மி யுBப்'அதூன்
முஹம்மது ஜான்
“(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என அவன் (இப்லீஸ்) வேண்டினான்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு இப்லீஸாகிய) அவன் (‘‘இறந்தவர்களை) எழுப்பும் நாள்வரை எனக்கு அவகாசம் அளி'' என்று கேட்டான்.
IFT
(இப்லீஸ் இவ்வாறு) வேண்டினான்: “இவர்கள் அனைவரும் திரும்ப எழுப்பப்படும் நாள் வரையிலும் எனக்கு அவகாசம் அளிப்பாயாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு இப்லீஸாகிய) அவன்,) “இறந்தோர் மண்ணறைகளிலிருந்து எழுப்பப்படும் நாள் வரையில் நீ எனக்கு அவகாசம் அளிப்பாயாக” என்று கேட்டான்.
Saheeh International
[Satan] said, "Reprieve me until the Day they are resurrected."
قَالَ اِنَّكَ مِنَ الْمُنْظَرِیْنَ ۟
قَالَகூறினான்اِنَّكَநிச்சயமாக நீمِنَ الْمُنْظَرِيْنَ‏அவகாசமளிக்கப்பட்டவர்களில்
கால இன்னக மினல் முன்ளரீன்
முஹம்மது ஜான்
(அதற்கு அல்லாஹ்) “நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு இறைவன்) ‘‘நிச்சயமாக நீ (அவ்வாறே) அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறாய்'' என்று கூறினான்.
IFT
அதற்கு “நீ அவகாசம் அளிக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்!” என்று அல்லாஹ் கூறினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நீ (அவ்வாறே) அவகாசமளிக்கப்பட்டோரில் (ஒருவனாக) இருக்கின்றாய்” என்று (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.
Saheeh International
[Allah] said, "Indeed, you are of those reprieved."
قَالَ فَبِمَاۤ اَغْوَیْتَنِیْ لَاَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِیْمَ ۟ۙ
قَالَகூறினான்فَبِمَاۤகாரணமாகاَغْوَيْتَنِىْநீ வழிகெடுத்தாய்/என்னைلَاَقْعُدَنَّநிச்சயமாக உட்காருவேன்لَهُمْஅவர்களுக்காகصِرَاطَكَஉன் பாதையில்الْمُسْتَقِيْمَۙ‏நேரானது
கால FபBபிமா அக்வய் தனீ ல அக்'உதன்ன லஹும் ஸிராதகல் முஸ்தகீம்
முஹம்மது ஜான்
(அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு இப்லீஸ், இறைவனை நோக்கி) ‘‘நீ என்னை பங்கப்படுத்தியதால், (ஆதமுடைய சந்ததிகளாகிய) அவர்கள் உன் நேரான வழியில் செல்லாது (தடைசெய்ய வழி மறித்து அதில்) உட்கார்ந்து கொள்வேன்'' (என்றும்)
IFT
அதற்கு இப்லீஸ் கூறினான்: “என்னை நீ வழிகேட்டில் ஆழ்த்திய காரணத்தால், திண்ணமாக, நானும் இம்மனிதர்களை உன்னுடைய நேரான வழியில் செல்லவிடாமல் தடுப்பதற்காக தருணம் பார்த்துக் கொண்டிருப்பேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீ என்னை வழிகெட்டவனாக ஆக்கியதன் காரணத்தால் (ஆதமுடைய சந்ததிகள்) உன்னுடைய நேரான வழியில் (செல்லாது தடை செய்ய வழி மறித்து அதில்) அவர்களுக்காக திட்டமாக உட்கார்ந்து கொள்வேன்” என்றும் (இப்லீஸாகிய) அவன் கூறினான்.)
Saheeh International
[Satan] said, "Because You have put me in error, I will surely sit in wait for them [i.e., mankind] on Your straight path.
ثُمَّ لَاٰتِیَنَّهُمْ مِّنْ بَیْنِ اَیْدِیْهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ اَیْمَانِهِمْ وَعَنْ شَمَآىِٕلِهِمْ ؕ وَلَا تَجِدُ اَكْثَرَهُمْ شٰكِرِیْنَ ۟
ثُمَّ لَاَتِيَنَّهُمْபிறகு/நிச்சயம் வருவேன்/அவர்களிடம்مِّنْۢ بَيْنِ اَيْدِيْهِمْஅவர்களுக்கு முன் புறத்திலிருந்துوَمِنْ خَلْفِهِمْஇன்னும் அவர்களுக்கு பின் புறத்திலிருந்துوَعَنْ اَيْمَانِهِمْஇன்னும் அவர்களின் வலது புறத்திலிருந்துوَعَنْ شَمَآٮِٕلِهِمْ‌ؕஇன்னும் அவர்களின் இடது புறத்திலிருந்துوَلَاٰ تَجِدُநீ காணமாட்டாய்اَكْثَرَஅதிகமானவர்களைهُمْஅவர்களில்شٰكِرِيْنَ‏நன்றி செலுத்துபவர்களாக
தும்ம ல ஆதியன்னஹும் மிம் Bபய்னி அய்தீஹிம் வ மின் கல்Fபிஹிம் வ 'அன் அய்மானிஹிம் வ 'அன் ஷமா'இலிஹிம் வலா தஜிது அக்தரஹும் ஷாகிரீன்
முஹம்மது ஜான்
“பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்” (என்றும் கூறினான்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘பிறகு, நிச்சயமாக அவர்களுக்கு முன்னும், பின்னும் அவர்களின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் அவர்களிடம் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டே இருப்பேன். ஆகவே, அவர்களில் பெரும்பாலானவர்களை (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாக நீ காணமாட்டாய்'' என்றும் கூறினான்.
IFT
பிறகு அவர்களின் முன்னாலும் பின்னாலும், வலப் புறமாகவும் இடப் புறமாகவும் அவர்களிடம் வந்து சுற்றி வளைத்துக் கொள்வேன். மேலும், அவர்களில் பெரும்பாலோரை நன்றி செலுத்துவோராக நீ காணமாட்டாய்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“பின்னர் நிச்சயமாக அவர்களுக்கு முன்னும், அவர்களுக்குப் பின்னும், அவர்களின் வலப்புறங்களிலும், அவர்களின் இடப்புறங்களிலும் அவர்களிடம் நான் வந்து (அவர்களை வழி கெடுத்துக் கொண்டேயிருப்பேன், மேலும், அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாக நீ காணமாட்டாய்”
Saheeh International
Then I will come to them from before them and from behind them and on their right and on their left, and You will not find most of them grateful [to You]."
قَالَ اخْرُجْ مِنْهَا مَذْءُوْمًا مَّدْحُوْرًا ؕ لَمَنْ تَبِعَكَ مِنْهُمْ لَاَمْلَـَٔنَّ جَهَنَّمَ مِنْكُمْ اَجْمَعِیْنَ ۟
قَالَகூறினான்اخْرُجْவெளியேறுمِنْهَاஇதிலிருந்துمَذْءُوْمًاநீ இகழப்பட்டவனாகمَّدْحُوْرًا ؕவிரட்டப்பட்டவனாகلَمَنْ تَبِعَكَஎவர்/பின்பற்றினார்/உன்னைمِنْهُمْஅவர்களில்لَاَمْلَــٴَــنَّநிச்சயம் நிரப்புவேன்جَهَنَّمَநரகத்தைمِنْكُمْஉங்களைக் கொண்டுاَجْمَعِيْنَ‏அனைவரை
காலக்ருஜ் மின்ஹா மத்'ஊமம் மத்ஹூரா; லமன் தBபி'அக மின்ஹும் ல அம்ல'அன்ன ஜஹன்னம மின்கும் அஜ்ம'ஈன்
முஹம்மது ஜான்
அதற்கு இறைவன், “நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு - அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு இறைவன்) ‘‘நீ நிந்திக்கப்பட்டவனாகவும் விரட்டப்பட்டவனாகவும் இதிலிருந்து வெளியேறிவிடு. நிச்சயமாக (உன்னையும்) எவர்கள் உன்னைப் பின்பற்றினார்களோ அவர்களையும் (ஆக) உங்கள் அனைவரையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன்'' என்று கூறினான்.
IFT
அதற்கு அல்லாஹ் கூறினான்: “நீ இழிந்தவனாகவும், விரட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறிவிடு! (உன்னையும்) அவர்களிலிருந்து உன்னைப் பின்பற்றுகின்றவர்கள் அனைவரையும் நரகில் போட்டு நிரப்புவேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இகழப்பட்டவனாகவும், விரட்டப்பட்டவனாகவும் நீ இதிலிருந்து வெளியேறி விடு, நிச்சயமாக (உன்னையும்) அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்களையும் சேர்த்து உங்கள் அனைவரிலிருந்தும் நிச்சயமாக நரகத்தை நான் நிரப்புவேன்” என்று அல்லாஹ்வாகிய அவன் கூறினான்.
Saheeh International
[Allah] said, "Depart from it [i.e., Paradise], reproached and expelled. Whoever follows you among them - I will surely fill Hell with you, all together."
وَیٰۤاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَیْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِیْنَ ۟
وَيٰۤاٰدَمُஆதமேاسْكُنْவசித்திருاَنْتَநீوَزَوْجُكَஇன்னும் உம் மனைவிالْجَـنَّةَசொர்க்கத்தில்فَـكُلَا(இருவரும்)புசியுங்கள்مِنْ حَيْثُஇடத்தில்شِئْتُمَا(இருவரும்)நாடினீர்கள்وَلَا تَقْرَبَا(இருவரும்) நெருங்காதீர்கள்هٰذِهِ الشَّجَرَةَஇந்த மரத்தைفَتَكُوْنَا(இருவரும்) ஆகிவிடுவீர்கள்مِنَ الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களில்
வ யா ஆதமுஸ் குன் அன்த வ Zஜவ்ஜுகல் ஜன்னத Fபகுலா மின் ஹய்து ஷி'துமா வலா தக்ரBபா ஹாதிஹிஷ் ஷஜரத Fபதகூனா மினள் ளாலிமீன்
முஹம்மது ஜான்
(பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) “ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்” (என்று அல்லாஹ் கூறினான்).
அப்துல் ஹமீது பாகவி
(பின்னர், இறைவன் ஆதமை நோக்கி) ‘‘ஆதமே! நீர் உமது மனைவியுடன் இச்சோலையில் வசித்திரும். நீங்கள் இருவரும் விரும்பிய இடத்திலெல்லாம் (சென்று விரும்பியவற்றையெல்லாம்) புசியுங்கள். எனினும், இந்த மரத்தின் சமீபத்தில்கூட நீங்கள் செல்லாதீர்கள். (அவ்வாறு சென்றால்) அதனால் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொண்டவர்களாக ஆகிவிடுவீர்கள்'' (என்று கூறினான்.)
IFT
மேலும், ஆதமே! நீரும் உம்முடைய மனைவியும் இச்சுவனத்தில் தங்கியிருங்கள்! நீங்கள் விரும்பிய இடத்தில் விரும்பியதைப் புசியுங்கள்! ஆனால் இம்மரத்தின் அருகில் நெருங்காதீர்கள்! அவ்வாறு நெருங்கினால், நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் சேர்ந்து விடுவீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “ஆதமே! நீரும் உம்முடைய மனைவியும் இச்சுவர்க்கத்தில் வசித்திருங்கள், பின்னர், நீங்கள் இருவரும் நீங்கள் நாடிய இடத்திலெல்லாம் சென்று நாடியவாறு புசியுங்கள் , இன்னும், இம்மரத்திற்கு அருகில் நீங்களிருவரும் நெருங்காதீர்கள், (அவ்வாறு சென்றால்) நீங்களிருவரும் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்கள்” என்றும் அல்லாஹ் கூறினான்.
Saheeh International
And "O Adam, dwell, you and your wife, in Paradise and eat from wherever you will but do not approach this tree, lest you be among the wrongdoers."
فَوَسْوَسَ لَهُمَا الشَّیْطٰنُ لِیُبْدِیَ لَهُمَا مَا وٗرِیَ عَنْهُمَا مِنْ سَوْاٰتِهِمَا وَقَالَ مَا نَهٰىكُمَا رَبُّكُمَا عَنْ هٰذِهِ الشَّجَرَةِ اِلَّاۤ اَنْ تَكُوْنَا مَلَكَیْنِ اَوْ تَكُوْنَا مِنَ الْخٰلِدِیْنَ ۟
فَوَسْوَسَஊசலாட்டத்தை உண்டாக்கினான்لَهُمَاஅவ்விருவருக்கும்الشَّيْطٰنُஷைத்தான்لِيُبْدِىَ(அவன்) வெளிப்படுத்துவதற்காகلَهُمَاஅவ்விருவருக்குمَاஎதுوٗرِىَமறைக்கப்பட்டதுعَنْهُمَاஅவ்விருவரை விட்டுمِنْ سَوْاٰتِهِمَاஅவ்விருவரின் வெட்கத் தலங்களைوَقَالَகூறினான்مَاஇல்லைنَهٰٮكُمَاஅவன் உங்களிருவரை தடுக்கرَبُّكُمَاஉங்களிருவரின் இறைவன்عَنْ هٰذِهِவிட்டுالشَّجَرَةِஇம்மரம்اِلَّاۤதவிரاَنْ تَكُوْنَاநீங்கள் ஆகிவிடுவீர்கள்مَلَـكَيْنِஇரு வானவர்களாகاَوْஅல்லதுتَكُوْنَاநீங்கள் ஆகிவிடுவீர்கள்مِنَ الْخٰلِدِيْنَ‏நிரந்தரமானவர்களில்
Fபவஸ்வஸ லஹுமஷ் ஷய்தானு லியுBப்திய லஹுமா மா வூரிய 'அன்ஹுமா மின் ஸவ் ஆதிஹிமா வ கால மா னஹாகுமா ரBப்Bபுகுமா 'அன் ஹாதிஹிஷ் ஷஜரதி இல்லா அன் தகூனா மலகய்னி அவ் தகூனா மினல் காலிதீன்
முஹம்மது ஜான்
எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, “அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
(எனினும்) அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக (இப்லீஸாகிய) ஷைத்தான் (தவறான எண்ணத்தை) அவர்கள் மனதில் ஊசலாடச் செய்து அவர்களை நோக்கி, ‘‘(அதன் கனியைப் புசித்தால்) நீங்கள் இருவரும் வானவர்களாகவோ அல்லது மரணமற்றவர்களாகவோ ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவே தவிர (வேறெதற்காகவும்) உங்கள் இறைவன் இம்மரத்தை விட்டு உங்களைத் தடுக்கவில்லை'' என்று கூறியதுடன்,
IFT
ஆனால் அவ்விருவரை விட்டும் பரஸ்பரம் மறைந்திருந்த அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான் அவர்களின் உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தினான்; மேலும், இவ்வாறு கூறினான்: “உங்கள் இறைவன் இம்மரத்தின் அருகே செல்லக் கூடாது என்று உங்கள் இருவரையும் தடுத்ததற்கான காரணம், நீங்கள் இருவரும் வானவர்கள் ஆகிவிடக்கூடாது; அல்லது உங்களுக்கு நிரந்தர வாழ்வு கிடைத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் அவ்விருவருக்கும், மறைக்கப்பட்டிருந்த அவ்விருவருடைய வெட்கத்தலங்களை அவ்விவருக்கும் வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான் (அவர்களிடம் இரசியமாகப் பேசி தவறான எண்ணத்தை) ஊசாட்டத்தை அவ்விருவருக்கும் உண்டாக்கினான், மேலும், “(அதன் கனியைப் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாகி விடுவீர்கள், அல்லது நிரந்தரமாக இருப்பவர்களில் நீங்கள் இருவரும் ஆகிவிடுவீர்கள், என்பதற்காகவே தவிர வேறெதற்காகவும் உங்கள் இரட்சகன் அம்மரத்தைவிட்டும் உங்களிருவரையும் தடுக்கவில்லை” என்று கூறினான்.
Saheeh International
But Satan whispered to them to make apparent to them that which was concealed from them of their private parts. He said, "Your Lord did not forbid you this tree except that you become angels or become of the immortal."
وَقَاسَمَهُمَاۤ اِنِّیْ لَكُمَا لَمِنَ النّٰصِحِیْنَ ۟ۙ
وَقَاسَمَهُمَاۤசத்தியமிட்டான்/அவ்விருவரிடமும்اِنِّىْநிச்சயமாக நான்لَـكُمَاஉங்கள் இருவருக்கும்لَمِنَ النّٰصِحِيْنَۙ‏நிச்சயமாக நன்மையை நாடுவோரில்
வ காஸமஹுமா இன்னீ லகுமா லமினன் னாஸிஹீன்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்” என்று சத்தியம் செய்து கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையையே கருதுகிறேன்'' என்று அவ்விருவரிடமும் சத்தியமும் செய்து,
IFT
மேலும், அவன் அவர்களிடம் சத்தியம் செய்து கூறினான்: “நான் உங்கள் இருவருக்கும் உண்மையான நலம் நாடுபவனாவேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் உபதேசம் செய்பவர்களில் (ஒருவனாக) இருக்கின்றேன்” என்று அவ்விருவரிடம் (இப்லீஸாகிய அவன்) சத்தியமும் செய்தான்.
Saheeh International
And he swore [by Allah] to them, "Indeed, I am to you from among the sincere advisors."
فَدَلّٰىهُمَا بِغُرُوْرٍ ۚ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْاٰتُهُمَا وَطَفِقَا یَخْصِفٰنِ عَلَیْهِمَا مِنْ وَّرَقِ الْجَنَّةِ ؕ وَنَادٰىهُمَا رَبُّهُمَاۤ اَلَمْ اَنْهَكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ وَاَقُلْ لَّكُمَاۤ اِنَّ الشَّیْطٰنَ لَكُمَا عَدُوٌّ مُّبِیْنٌ ۟
فَدَلّٰٮهُمَاஆக, தரம் தாழ்த்தினான்/அவ்விருவரைبِغُرُوْرٍ‌ ۚஏமாற்றிفَلَمَّا ذَاقَاஇருவரும் சுவைத்தபோதுالشَّجَرَةَமரத்தைبَدَتْதெரிந்தனلَهُمَاஅவ்விருவருக்குسَوْاٰتُهُمَاஅவ்விருவரின் வெட்கத்தலங்கள்وَطَفِقَاஅவ்விருவரும் முயன்றனர்يَخْصِفٰنِஅவ்விவரும் மூடிக்கொள்கின்றனர்عَلَيْهِمَاதம் இருவர் மீதும்مِنْ وَّرَقِஇலைகளினால்الْجَـنَّةِ‌ ؕசொர்க்கத்தின்وَنَادٰٮهُمَاஅழைத்தான்/அவ்விருவரைرَبُّهُمَاۤஅவ்விருவரின் இறைவன்اَلَمْ اَنْهَكُمَاநான் தடுக்கவில்லையா? / உங்களிருவரைعَنْ تِلْكُمَا الشَّجَرَةِஅம்மரத்தை விட்டுوَاَقُلْஇன்னும் நான்கூறவில்லையா?لَّـكُمَاۤஉங்களிருவருக்குاِنَّநிச்சயமாகالشَّيْطٰنَஷைத்தான்لَـكُمَاஉங்களிருவருக்குعَدُوٌّஎதிரிمُّبِيْنٌ‏வெளிப்படையான
Fபதல்லாஹுமா Bபிகுரூர்; Fபலம்மா தாகஷ் ஷஜரத Bபதத் லஹுமா ஸவ் ஆதுஹுமா வ தFபிகா யக்ஸிFபானி 'அலய்ஹிமா மி(ன்)வ் வரகில் ஜன்னதி வ னாதாஹுமா ரBப்Bபுஹுமா அலம் அன்ஹகுமா 'அன் தில்குமஷ் ஷஜரதி வ அகுல் லகுமா இன்னஷ் ஷய்தான லகுமா 'அதுவ்வும் முBபீன்
முஹம்மது ஜான்
இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு: “உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?” என்று கேட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களை மயக்கி, (அம்மரத்தின் கனியைப் புசிப்பதற்காக) அதன் பக்கம் அவர்களைச் செல்ல வைத்தான். அவ்விருவரும் அம்மரத்(தின் பழத்)தைச் சுவைக்கவே, அவ்விருவரின் மர்ம உறுப்புகளும் அவர்களுக்குத் தெரிந்து, அச்சோலையின் இலையைக் கொண்டு தங்களை மூடிக்கொள்ள அவர்கள் முயற்சித்தனர். அது சமயம் இறைவன் ‘‘அம்மரத்தை விட்டும் நான் உங்களைத் தடுத்திருக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களிருவருக்கும் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா?'' என்று அவ்விருவரையும் அழைத்துக் கூறினான்.
IFT
இவ்வாறு அவ்விருவரையும் ஏமாற்றி படிப்படியாக தன்வசப்படுத்தினான். கடைசியில் அவர்கள் அம்மரத்தி(ன் கனியி)னைச் சுவைத்ததும் அவர்களின் வெட்கத்தலங்கள் பரஸ்பரம் அவர்களுக்கு வெளிப்பட்டு விட்டன. பிறகு, அவர்கள் தங்கள் உடல்களை சுவனத்தின் இலைகளால் மூடிக்கொள்ளலாயினர். (அப்போது) அவர்களின் இறைவன் அவர்களை அழைத்துக் கூறினான்: “இம் மரத்(தின் அருகில் செல்வ)தைவிட்டு உங்களிருவரையும் நான் தடுக்கவில்லையா? மேலும், ஷைத்தான் உங்களின் வெளிப்படையான பகைவன் என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பின்னர்) அவ்விருவரை ஏமாற்றி (படிப்படியாக தங்கள் நிலையிலிருந்து கீழே இறங்கச் செய்தான், எனவே, அவ்விருவரும் அம்மரத்தை அதன் கனியை)ச் சுவைக்கவே அவ்விருவரின் வெட்கத்தலங்களும் அவ்விருவருக்கும் வெளியாகித் தெரியலாயிற்று, அச்சுவனத்தில் இலைகளைக் கொண்டு அவ்விருவரும் தங்களை மூடிக் கொள்ளவும் ஆரம்பித்தனர், மேலும், (அது சமயம்) அவ்விருவரின் இரட்சகன் அவ்விருவரையும் அழைத்து “இம்மரத்தை விட்டும் உங்களிருவரையும் நான் தடுக்கவில்லையா?” நிச்சயமாக ஷைத்தான் உங்களிருவருக்கும் பகிரங்கமான பகைவன் என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா? என்று அவ்விருவரையும் கேட்டான்.
Saheeh International
So he made them fall, through deception. And when they tasted of the tree, their private parts became apparent to them, and they began to fasten together over themselves from the leaves of Paradise. And their Lord called to them, "Did I not forbid you from that tree and tell you that Satan is to you a clear enemy?"
قَالَا رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِیْنَ ۟
قَالَاஅவ்விருவரும் கூறினர்رَبَّنَاஎங்கள் இறைவாظَلَمْنَاۤநாங்கள் தீங்கிழைத்தோம்اَنْفُسَنَا ٚஎங்கள் ஆன்மாக்களுக்குوَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَاநீ மன்னிக்கவில்லையெனில்/எங்களைوَتَرْحَمْنَاஇன்னும் நீ கருணை புரியவில்லையெனில்/எங்களுக்குلَـنَكُوْنَنَّநிச்சயமாக ஆகிவிடுவோம்مِنَ الْخٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளில்
காலா ரBப்Bபனா ளலம்னா அன்Fபுஸனா வ இல்லம் தக்Fபிர் லனா வ தர்ஹம்னா லனகூனன்ன மினல் காஸிரீன்
முஹம்மது ஜான்
அதற்கு அவர்கள்: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு அவர்கள்) ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'' என்று (பிரார்த்தித்துக்) கூறினர்.
IFT
அதற்கு அவர்களிருவரும் கூறினார்கள்: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே அக்கிரமம் செய்துகொண்டோம். எங்களை நீ மன்னித்து எங்களுக்குக் கிருபை செய்யாவிடில், நிச்சயமாக நாங்கள் இழப்பிற்குரியவர்களாகி விடுவோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) “எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நாங்களே அநீதமிழைத்துக் கொண்டோம்) நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிடில் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவோம்” என்று அவ்விருவரும் (பிரார்த்தித்துக்) கூறினர்.
Saheeh International
They said, "Our Lord, we have wronged ourselves, and if You do not forgive us and have mercy upon us, we will surely be among the losers."
قَالَ اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۚ وَلَكُمْ فِی الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰی حِیْنٍ ۟
قَالَகூறினான்اهْبِطُوْاஇறங்கிவிடுங்கள்بَعْضُكُمْஉங்களில் சிலர்لِبَـعْضٍசிலருக்குعَدُوٌّ‌ ۚஎதிரிوَلَـكُمْஉங்களுக்குفِى الْاَرْضِபூமியில்مُسْتَقَرٌّதங்குமிடம்وَّمَتَاعٌஇன்னும் சுகம்اِلٰىவரைحِيْنٍ‏ஒரு காலம்
காலஹ் Bபிதூ Bபஃளுகும் லிBபஃளின் அதுவ் வ லகும் Fபில் அர்ளி முஸ்தகர்ரு(ன்)வ் வ மதா'உன் இலாஹீன்
முஹம்மது ஜான்
(அதற்கு இறைவன், “இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது; அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு இறைவன் ‘‘இதிலிருந்து) நீங்கள் வெளியேறி விடுங்கள். உங்களில் ஒருவர் மற்றவருக்கு எதிரியாகி விடுவீர்கள். பூமியில்தான் உங்களுக்குத் தங்குமிடம் உண்டு. (அதில்) ஒரு காலம் வரை சுகம் அனுபவிக்கலாம்'' என்று கூறினான்.
IFT
அதற்கு இறைவன் கூறினான்: “நீங்கள் இறங்கிவிடுங்கள்; நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாவீர்கள். மேலும், ஒரு குறிப் பிட்ட காலம் வரை பூமியில் உங்களுக்குத் தங்குமிடமும் வாழ்க்கைச் சாதனங்களும் உள்ளன.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு அல்லாஹ்) “இதிலிருந்து நீங்கள் இறங்கி விடுங்கள், உங்களில் சிலர் (மற்ற) சிலருக்கு பகைவர்களாவீர்கள், பூமியில் உங்களுக்குத் தங்குமிடம் உண்டு, (அதில்) ஒரு காலம் வரை சுகம் அனுபவித்தலும் உண்டு” என்று கூறினான்.
Saheeh International
[Allah] said, "Descend, being to one another enemies. And for you on the earth is a place of settlement and enjoyment [i.e., provision] for a time."
قَالَ فِیْهَا تَحْیَوْنَ وَفِیْهَا تَمُوْتُوْنَ وَمِنْهَا تُخْرَجُوْنَ ۟۠
قَالَகூறினான்فِيْهَاஅதில்தான்تَحْيَوْنَவாழ்வீர்கள்وَفِيْهَاஇன்னும் அதில்தான்تَمُوْتُوْنَஇறப்பீர்கள்وَمِنْهَاஇன்னும் அதிலிருந்துதான்تُخْرَجُوْنَ‏எழுப்பப்படுவீர்கள்
கால Fபீஹா தஹ்யவ்ன வ Fபீஹா தமூதூன வ மின்ஹா துக்ரஜூன்
முஹம்மது ஜான்
“அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்” என்றும் கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘அதிலேயே நீங்கள் உயிர் வாழ்வீர்கள்; அதிலேயே நீங்கள் இறப்பீர்கள்; (பின்னர் ஒரு நாளில்) அதிலிருந்தே எழுப்பவும் படுவீர்கள்'' என்றும் கூறினான்.
IFT
(மேலும்) கூறினான்: “நீங்கள் அங்கேயே வாழ்ந்து அங்கேயே மரணமடைவீர்கள்; பின்னர், அங்கிருந்தே நீங்கள் வெளிக்கொணரப்படுவீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அதிலேயே நீங்கள் வாழ்வீர்கள், அதிலேயே நீங்கள் இறப்பீர்கள், (பின்னர் ஒரு நாளில்) அதிலிருந்தே நீங்கள் (மீண்டும் உயிர் கொடுத்து) வெளியாக்கப் படுவீர்கள்” என்று கூறினான்.
Saheeh International
He said, "Therein you will live, and therein you will die, and from it you will be brought forth."
یٰبَنِیْۤ اٰدَمَ قَدْ اَنْزَلْنَا عَلَیْكُمْ لِبَاسًا یُّوَارِیْ سَوْاٰتِكُمْ وَرِیْشًا ؕ وَلِبَاسُ التَّقْوٰی ۙ ذٰلِكَ خَیْرٌ ؕ ذٰلِكَ مِنْ اٰیٰتِ اللّٰهِ لَعَلَّهُمْ یَذَّكَّرُوْنَ ۟
يٰبَنِىْۤசந்ததிகளேاٰدَمَஆதமின்قَدْதிட்டமாகاَنْزَلْنَاஇறக்கினோம் (படைத்தோம்)عَلَيْكُمْஉங்கள் மீது (உங்களுக்கு)لِبَاسًاஆடையைيُّوَارِىْமறைக்கின்ற(து)سَوْاٰتِكُمْஉங்கள் வெட்கத்தலங்களைوَرِيْشًا‌ ؕஇன்னும் அலங்காரத்தைوَلِبَاسُஆடைالتَّقْوٰى ۙஇறையச்சத்தின்ذٰ لِكَஅதுதான்خَيْرٌ‌ ؕமிகச் சிறந்ததுذٰ لِكَஇவைمِنْ اٰيٰتِஅத்தாட்சிகளில்اللّٰهِஅல்லாஹ்வின்لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ‏அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
யா Bபனீ ஆதம கத் அன்Zஜல்னா 'அலய்கும் லிBபாஸ(ன்)ய் யுவாரீ ஸவ் ஆதிகும் வ ரீஷ(ன்)வ் வ லிBபாஸுத் தக்வா தாலிக கய்ர்; தாலிக மின் ஆயாதில் லாஹி ல'அல்லஹும் யத் தக்கரூன்
முஹம்மது ஜான்
ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.
அப்துல் ஹமீது பாகவி
ஆதமுடைய மக்களே! உங்கள் மானத்தை மறைக்கக்கூடிய, (உங்களை) அலங்கரிக்கக்கூடிய ஆடைகளை நிச்சயமாக நாம் உங்களுக்கு அருள் புரிந்திருக்கிறோம். எனினும், (பாவங்களை மறைத்து விடக்கூடிய) இறையச்சம் எனும் ஆடைதான் மிக்க மேலானது. இவை அனைத்தும் அல்லாஹ்வுடைய வசனங்களாகும். (இவற்றைக் கொண்டு) அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவார்களாக!
IFT
ஆதத்தின் மக்களே! உங்களுடைய வெட்கத்தலங்களை மறைப்பதற்காகவும், உங்கள் உடலுக்குப் பாதுகாப்பாகவும் அலங்காரமாகவும் இருக்கக்கூடிய ஆடைகளை நாம் உங்களுக்கு அருளியிருக்கின்றோம். ஆயினும் இறையச்சம் (தக்வா) எனும் ஆடையே மிகச் சிறந்த ஆடையாகும். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒரு சான்றாகும். இதன் மூலம் மக்கள் நல்லுணர்வு பெறக் கூடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆதமுடைய மக்களே! உங்களுடைய மானத்தை மறைக்கக் கூடிய ஆடையையும் அலங்காரத்தையும் திட்டமாக நாம் உங்களுக்கு இறக்கி வைத்திருக்கின்றோம், இன்னும் (பாவங்களை மறைத்துவிடக் கூடிய பரிசுத்தத் தன்மையான) பயபக்தி எனும் ஆடை-அதுதான் மிக்க மேலானது, அது அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும், இதனைக் கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறலாம்.
Saheeh International
O children of Adam, We have bestowed upon you clothing to conceal your private parts and as adornment. But the clothing of righteousness - that is best. That is from the signs of Allah that perhaps they will remember.
یٰبَنِیْۤ اٰدَمَ لَا یَفْتِنَنَّكُمُ الشَّیْطٰنُ كَمَاۤ اَخْرَجَ اَبَوَیْكُمْ مِّنَ الْجَنَّةِ یَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِیُرِیَهُمَا سَوْاٰتِهِمَا ؕ اِنَّهٗ یَرٰىكُمْ هُوَ وَقَبِیْلُهٗ مِنْ حَیْثُ لَا تَرَوْنَهُمْ ؕ اِنَّا جَعَلْنَا الشَّیٰطِیْنَ اَوْلِیَآءَ لِلَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ ۟
يٰبَنِىْۤசந்ததிகளேاٰدَمَஆதமின்لَاவேண்டாம்يَفْتِنَـنَّكُمُஉங்களை ஏமாற்றிவிடالشَّيْطٰنُஷைத்தான்كَمَاۤபோன்றுاَخْرَجَவெளியேற்றினான்اَبَوَيْكُمْஉங்கள் தாய் தந்தையைمِّنَ الْجَـنَّةِசொர்க்கத்திலிருந்துيَنْزِعُகழட்டுகிறான்عَنْهُمَاஅவ்விருவரை விட்டுلِبَاسَهُمَاஅவ்விருவரின் ஆடையைلِيُرِيَهُمَاஅவன் காண்பிப்பதற்காக/அவ்விருவருக்குسَوْءاٰتِهِمَا ؕஅவ்விருவருடைய வெட்கத்தலங்களைاِنَّهٗநிச்சயமாக அவன்يَرٰٮكُمْபார்க்கிறான்/உங்களைهُوَஅவன்وَقَبِيْلُهٗஇன்னும் அவனுடைய இனத்தார்مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ‌ ؕநீங்கள் அவர்களைப் பார்க்காதவாறுاِنَّاநிச்சயமாக நாம்جَعَلْنَاஆக்கினோம்الشَّيٰطِيْنَஷைத்தான்களைاَوْلِيَآءَநண்பர்களாகلِلَّذِيْنَஎவர்களுக்குلَا يُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
யா Bபனீ ஆதம லா யFப்தினன்ன்னகுமுஷ் ஷய்தானு கமா அக்ரஜ அBபவய்கும் மினல் ஜன்னதி யன்Zஜி'உ 'அன்ஹுமா லிBபாஸஹுமா லியுரியஹுமா ஸவ் ஆதிஹிமா; இன்னஹூ யராகும் ஹுவ வ கBபீலுஹூ மின் ஹய்து லா தரவ்னஹும்; இன்னா ஜ'அல்னஷ் ஷயாதீன அவ்லியா'அ லில்லதீன லா யு'மினூன்
முஹம்மது ஜான்
ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு; மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் தாய் தந்தையை (அவர்கள் இன்பமுடன் வசித்து வந்த) சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி (துன்பத்திற்குள்ளாக்கி)யது போல உங்களையும் துன்பத்திற்குள்ளாக்கிவிட வேண்டாம். அவர்களுடைய மானத்தை அவர்களுக்குக் காண்பிப்பதற்காக அவன் அவர்களுடைய ஆடையைக் களைந்து விட்டான். நிச்சயமாக அவனும் அவனுடைய இனத்தாரும் நீங்கள் அவர்களைக் காணமுடியாதவாறு (மறைவாக இருந்துகொண்டு) உங்களை (வழி கெடுக்க சமயம்) பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். நிச்சயமாக நம்பிக்கை கொள்ளாதவர்களுக்குத்தான் அந்த ஷைத்தான்களை நாம் நண்பர்களாக்கி இருக்கிறோம்.
IFT
ஆதத்தின் மக்களே! எவ்வாறு ஷைத்தான் உங்கள் தாய் தந்தையரை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினானோ, மேலும் அவர்களுடைய வெட்கத்தலங்களை பரஸ்பரம் வெளிப்படுத்திட வேண்டும் என்பதற்காக அவர்களுடைய ஆடைகளைக் களைந்தானோ அவ்வாறு மீண்டும் உங்களை அவன் குழப்பத்திலாழ்த்திட வேண்டாம். நீங்கள் பார்க்க முடியாத இடத்திலிருந்து அவனும், அவனுடைய நண்பர்களும் உங்களைப் பார்க்கின்றார்கள். திண்ணமாக, இறைநம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு இந்த ஷைத்தான்களை நண்பர்களாய் நாம் ஆக்கியுள்ளோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவ்விருவரின் மானத்தை அவ்விவருக்கும் காண்பிப்பதற்காக வேண்டி அவ்விருவரின் ஆடையை அவ்விருவரை விட்டும் அவன் களைந்து அவர்கள் இன்பமுடன் வசித்து வந்த சுவனத்திலிருந்து வெளியேற்றி (சோதனைக்குள்ளாக்கியது போன்று) உங்களையும் அவன் சோதனைக்குள்ளாக்கி விட வேண்டாம், நிச்சயமாக அவனும், அவனுடைய இனத்தாரும், நீங்கள் அவர்களைக் காண முடியாதவாறு மறைவாக இருந்து கொண்டு உங்களை (வழி கெடுக்க சமயம்) பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், நிச்சயமாக, விசுவாசங்கொள்ளாதவர்களுக்கு அந்த ஷைத்தான்களை நாம் நண்பர்களாக்கியிருக்கின்றோம்.
Saheeh International
O children of Adam, let not Satan tempt you as he removed your parents from Paradise, stripping them of their clothing to show them their private parts. Indeed, he sees you, he and his tribe, from where you do not see them. Indeed, We have made the devils allies to those who do not believe.
وَاِذَا فَعَلُوْا فَاحِشَةً قَالُوْا وَجَدْنَا عَلَیْهَاۤ اٰبَآءَنَا وَاللّٰهُ اَمَرَنَا بِهَا ؕ قُلْ اِنَّ اللّٰهَ لَا یَاْمُرُ بِالْفَحْشَآءِ ؕ اَتَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
وَاِذَا فَعَلُوْاஅவர்கள் செய்தால்فَاحِشَةًஒரு மானக்கேடானதைقَالُوْاகூறுகின்றனர்وَجَدْنَاகண்டோம்عَلَيْهَاۤஇதன் மீதுاٰبَآءَنَاஎங்கள் மூதாதைகளைوَاللّٰهُஅல்லாஹ்வும்اَمَرَنَاஏவினான்/எங்களுக்குبِهَا‌ ؕ قُلْஇதை/கூறுவீராகاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يَاْمُرُஏவ மாட்டான்بِالْفَحْشَآءِ‌ ؕமானக்கேடானதைاَتَقُوْلُوْنَகூறுகிறீர்களா?عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுمَاஎவற்றைلَا تَعْلَمُوْنَ‏அறியமாட்டீர்கள்
வ இதா Fப'அலூ Fபாஹிஷதன் காலூ வஜத்னா 'அலய்ஹா ஆBபா'அன வல்லாஹு அமரனா Bபிஹா; குல் இன்னல் லாஹ லா ய'முரு Bபில்Fபஹ்ஷா'இ அ-தகூலூன 'அலல் லாஹி மா லா தஃலமூன்
முஹம்மது ஜான்
(நம்பிக்கையில்லாத) அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டால், “எங்கள் மூதாதையர்களை இதன் மீதே கண்டோம்; இன்னும் அல்லாஹ் எங்களை அதைக்கொண்டே ஏவினான்” என்று சொல்கிறார்கள். “(அப்படியல்ல!) நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்யக் கட்டளையிடமாட்டான் - நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கை கொள்ளாத) அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்(யும் போது, அதைக் கண்ட எவரும் அவர்களைக் கண்டித்)தால், அவர்கள் ‘‘எங்கள் முன்னோர்களும் இவ்வாறு செய்யவே நாங்கள் கண்டோம். மேலும், இவ்வாறு (செய்யும்படியாகவே) அல்லாஹ்வும் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறான்'' என்று கூறுகின்றனர். (அதற்கு நபியே! அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான காரியங்களைச் செய்யும்படி ஏவவே மாட்டான். அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றை(ப் பொய்யாக)க்கூறலாமா?'' என்று கூறுவீராக.
IFT
அவர்கள், ஏதேனும் மானக்கேடான செயலைச் செய்தால், “இப்படித்தான் எங்கள் மூதாதையர் வாழக் கண்டோம்” என்றும் “இவ்வாறு செய்யுமாறு அல்லாஹ்தான் எங்களுக்குக் கட்டளையிட்டான்” என்றும் கூறுகிறார்கள். நீர் கூறும்: “அல்லாஹ் மானக்கேடானவற்றைச் செய்யும்படி எப்போதும் கட்டளையிடுவதில்லை. எவற்றைக் குறித்து (அவை அல்லாஹ் கூறியவைதானா என்பதை) நீங்கள் அறியமாட்டீர்களோ அந்த விஷயங்களையா அல்லாஹ்வின் மீது ஏற்றிச் சொல்கின்றீர்கள்?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (விசுவாசங்கொள்ளாத) அவர்கள், யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்துவிட்டால் அவர்கள், எங்கள் மூதாதையர்களை இதன் மீதே நாங்கள் கண்டோம், அல்லாஹ்வும் இதைக்கொண்டே எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கின்றான்” என்று கூறுகின்றனர், (அதற்கு நபியே! அவர்களிடம்) “நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான காரியங்களைக் கொண்டு (அவற்றைச் செய்யுமாறு) அவன் கட்டளையிடமாட்டான். அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றைப் பொய்யாகக் கூறுகிறீர்கள்” என்று நீர் கூறுவீராக.
Saheeh International
And when they commit an immorality, they say, "We found our fathers doing it, and Allah has ordered us to do it." Say, "Indeed, Allah does not order immorality. Do you say about Allah that which you do not know?"
قُلْ اَمَرَ رَبِّیْ بِالْقِسْطِ ۫ وَاَقِیْمُوْا وُجُوْهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّادْعُوْهُ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ؕ۬ كَمَا بَدَاَكُمْ تَعُوْدُوْنَ ۟ؕ
قُلْகூறுவீராகاَمَرَஏவினான்رَبِّىْஎன் இறைவன்بِالْقِسْطِ‌நீதத்தைوَاَقِيْمُوْاஇன்னும் நிலைநிறுத்துங்கள்وُجُوْهَكُمْஉங்கள் முகங்களைعِنْدَஇடம்كُلِّஎல்லாம்مَسْجِدٍமஸ்ஜிதுوَّادْعُوْهُஅழையுங்கள்/அவனைمُخْلِصِيْنَதூய்மைப்படுத்தியவர்களாகلَـهُஅவனுக்குالدِّيْنَ   ؕவழிபடுவதைكَمَا بَدَاَكُمْபோன்று/ஆரம்பமாக படைத்தான்/உங்களைتَعُوْدُوْنَؕ‏திரும்புவீர்கள்
குல் அமர ரBப்Bபீ Bபில்கிஸ்தி வ அகீமூ வுஜூஹகும் 'இன்த குல்லி மஸ்ஜிதின் வத்'ஊஹு முக்லிஸீன லஹுத் தீன்; கமா Bபத அகும் த'ஊதூன்
முஹம்மது ஜான்
“என் இறைவன், நீதத்தைக் கொண்டே ஏவியுள்ளான்; ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்கள் முகங்களை அவன் பக்கமே நிலைப்படுத்திக்கொள்ளுங்கள்; வணக்கத்தை அவனுக்கே தூய்மையாக்கியவர்களாக அவனை அழையுங்கள்; உங்களை அவன் துவக்கியது போலவே (அவனிடம்) நீங்கள் மீளுவீர்கள்” என்று நீர் கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘என் இறைவன் நீதத்தையே கட்டளையிட்டிருக்கிறான். ஒவ்வொரு தொழுகையின்போதும் (மனதில்) அவனையே நீங்கள் முன்னோக்கித் தொழுங்கள். நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிப்பட்டு, கலப்பற்ற மனதோடு அவனிடமே நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் உங்களை (இல்லாமையில் இருந்து உலகத்தில்) ஆரம்பமாக படைத்ததுபோல் (நீங்கள் இறந்த பின்னர் மறுமை நாளில் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு அவனிடமே) மீள்வீர்கள்'' என்றும் (நபியே நீர்) கூறுவீராக.
IFT
(நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “என் அதிபதி நீதியைக் கடைப்பிடிக்குமாறு கட்டளையிட்டுள்ளான்; மேலும் (இதுவும் அவனது கட்டளைதான்:) ஒவ்வொரு வழிபாட்டிலும் நீங்கள் முன்னோக்கும் திசைகளைச் சரியாக அமைத்துக் கொள்ளுங்கள்! மேலும், தீனை (நெறியை) அவனுக்கே உரித்தாக்கியவண்ணம் அவனை அழையுங்கள்! அவன் உங்களை இப்பொழுது எவ்வாறு படைத்திருக்கின்றானோ அவ்வாறே நீங்கள் மீண்டும் படைக்கப் படுவீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என் இரட்சகன் நீதத்தையே கட்டளையிட்டிருக்கின்றான், ஒவ்வொரு தொழும் இடத்திலும் (தொழுகையின் போது) நீங்கள் உங்கள் முகங்களை (அவனளவிலேயே) நிலைப் படுத்திக் கொள்ளுங்கள், நீங்கள் அவனுக்கே வணக்கத்தைக் கலப்பற்றதாக ஆக்கியவர்களாக அவனையே அழையுங்கள், அவன் (இல்லாமையிலிருந்து உங்களைப் படைக்க)த் துவக்கிய பிரகாரமே (நீங்கள் இறந்த பின்னரும், அவனால்) உயிர்ப்பிக்கப்பெற்று அவனிடமே நீங்கள் மீள்வீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
Say, [O Muhammad], "My Lord has ordered justice and that you direct yourselves [to the Qiblah] at every place [or time] of prostration, and invoke Him, sincere to Him in religion." Just as He originated you, you will return [to life] -
فَرِیْقًا هَدٰی وَفَرِیْقًا حَقَّ عَلَیْهِمُ الضَّلٰلَةُ ؕ اِنَّهُمُ اتَّخَذُوا الشَّیٰطِیْنَ اَوْلِیَآءَ مِنْ دُوْنِ اللّٰهِ وَیَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ ۟
فَرِيْقًاஒரு பிரிவைهَدٰىநேர்வழிப்படுத்தினான்وَ فَرِيْقًاஇன்னும் ஒரு பிரிவுحَقَّஉறுதியாகி விட்டதுعَلَيْهِمُஅதன் மீதுالضَّلٰلَةُ ؕவழிகேடுاِنَّهُمُநிச்சயமாக அவர்கள்اتَّخَذُواஎடுத்துக் கொண்டனர்الشَّيٰطِيْنَஷைத்தான்களைاَوْلِيَآءَதோழர்களாகمِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிوَيَحْسَبُوْنَஇன்னும் எண்ணுகின்றனர்اَنَّهُمْநிச்சயமாக தாங்கள்مُّهْتَدُوْنَ‏நேர்வழி பெற்றவர்கள்
Fபரீகன் ஹதா வ Fபரீகன் ஹக்க 'அலய்ஹிமுள் ளலாலஹ்; இன்னஹுமுத் தகதுஷ் ஷயாதீன அவ்லியா'அ மின் தூனில் லாஹி வ யஹ்ஸBபூன அன்னஹும் முஹ்ததூன்
முஹம்மது ஜான்
ஒரு கூட்டத்தாரை அவன் நேர் வழியிலாக்கினான்; இன்னொரு கூட்டதாருக்கு வழிகேடு உறுதியாகி விட்டது; ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டார்கள் - எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று எண்ணுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(உங்களில்) சிலரை அவன் நேரான வழியில் செலுத்தினான். மற்றோர் மீது வழிகேடே விதிக்கப்பட்டது. அதன் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி ஷைத்தான்களையே தங்கள் தோழர்களாக எடுத்துக் கொண்டதுடன் தாங்கள் நிச்சயமாக நேரான வழியில் இருப்பதாகவும் எண்ணிக் கொண்டனர்.
IFT
ஒரு கூட்டத்தாரை அவன் நேர்வழிப்படுத்தி விட்டான்; மேலும், மற்றொரு கூட்டத்தார் மீது வழிகேடு விதிக்கப்பட்டுவிட்டது. ஏனெனில், அவர்கள் அல்லாஹ்வை விடுத்து ஷைத்தான்களை உதவியாளர்களாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், திண்ணமாக தாம் நேர்வழியில் இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உங்களில்) ஒரு கூட்டத்தாரை அவன் நேரான வழியில் செலுத்தினான், மற்றொரு கூட்டத்தாருக்கோ வழிகேடு அவர்கள் மீது உறுதியாகி விட்டது, (காரணம்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி ஷைத்தான்களையே (தங்கள்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்கள், மேலும், தாங்கள் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்கள் என எண்ணுகிறார்கள்.
Saheeh International
A group [of you] He guided, and a group deserved [to be in] error. Indeed, they [i.e., the latter] had taken the devils as allies instead of Allah while they thought that they were guided.
یٰبَنِیْۤ اٰدَمَ خُذُوْا زِیْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا ۚ اِنَّهٗ لَا یُحِبُّ الْمُسْرِفِیْنَ ۟۠
يٰبَنِىْۤ اٰدَمَஆதமின் சந்ததிகளேخُذُوْا زِيْنَتَكُمْஅலங்கரித்துக் கொள்ளுங்கள் / உங்களைعِنْدَஇடம்كُلِّஎல்லாம்مَسْجِدٍமஸ்ஜிதுوَّكُلُوْاஇன்னும் புசியுங்கள்وَاشْرَبُوْاஇன்னும் பருகுங்கள்وَلَا تُسْرِفُوْا‌ ۚவிரயம் செய்யாதீர்கள்اِنَّهٗநிச்சயம் அவன்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்الْمُسْرِفِيْنَ‏விரயம் செய்பவர்களை
யா Bபனீ அதம குதூ Zஜீனதகும் 'இன்த குல்லி மஸ்ஜிதி(ன்)வ் வ குலூ வஷ்ரBபூ வலா துஸ்ரிFபூ; இன்னஹூ லா யுஹிBப்Bபுல் முஸ்ரிFபீன்
முஹம்மது ஜான்
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.  
அப்துல் ஹமீது பாகவி
ஆதமுடைய மக்களே! தொழும்போதெல்லாம் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாகப்) புசியுங்கள்; பருகுங்கள். எனினும் (அவற்றில்) அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால், வீண் செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
IFT
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்! மேலும், உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால் விரயம் செய்யாதீர்கள்! திண்ணமாக அல்லாஹ் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் (ஆடைகளினால்) உங்களுடைய அலங்காரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், மேலும், (அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாக) உண்ணுங்கள், மேலும், பருகுங்கள், (ஆனால்) வீண் விரயமும் செய்யாதீர்கள்; ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிக்கமாட்டான்.
Saheeh International
O children of Adam, take your adornment [i.e., wear your clothing] at every masjid, and eat and drink, but be not excessive. Indeed, He likes not those who commit excess.
قُلْ مَنْ حَرَّمَ زِیْنَةَ اللّٰهِ الَّتِیْۤ اَخْرَجَ لِعِبَادِهٖ وَالطَّیِّبٰتِ مِنَ الرِّزْقِ ؕ قُلْ هِیَ لِلَّذِیْنَ اٰمَنُوْا فِی الْحَیٰوةِ الدُّنْیَا خَالِصَةً یَّوْمَ الْقِیٰمَةِ ؕ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
قُلْகூறுவீராகمَنْஎவன்?حَرَّمَதடை செய்தான்زِيْنَةَஅலங்காரத்தைاللّٰهِஅல்லாஹ்الَّتِىْۤஎதுاَخْرَجَவெளிப்படுத்தினான்لِعِبَادِهٖதன் அடியார்களுக்காகوَالطَّيِّبٰتِஇன்னும் நல்லவற்றைمِنَ الرِّزْقِ‌ؕஉணவில்قُلْகூறுவீராகهِىَஅதுلِلَّذِيْنَஎவர்களுக்குاٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்فِى الْحَيٰوةِவாழ்க்கையில்الدُّنْيَاஇவ்வுலகம்خَالِصَةًபிரத்தியோகமாகيَّوْمَ الْقِيٰمَةِ‌ؕமறுமை நாளில்كَذٰلِكَஇவ்வாறுنُفَصِّلُவிவரிக்கிறோம்الْاٰيٰتِவசனங்களைلِقَوْمٍமக்களுக்குيَّعْلَمُوْنَ‏அறிகின்றார்கள்
குல் மன் ஹர்ரம Zஜீனத் அல்லாஹில் லதீ அக்ரஜ லி'இBபாதிஹீ வத்தய்யிBபாதி மினர் ரிZஜ்க்; குல் ஹிய லில்லதீன ஆமனூ Fபில் ஹயாதித் துன்யா காலிஸத(ன்)ய் யவ்மல் கியாமஹ்; கதாலிக னுFபஸ்ஸிலுல் ஆயாதி லி கவ்மி(ன்)ய் யஃலமூன்
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் கேட்பீராக: “அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?” இன்னும் கூறும்: “அவை இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கையாளர்களுக்கு (அனுமதிக்கப்பட்டவையே, எனினும் மறுமையில்) அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாகவும் இருக்கும்” இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய மக்களுக்கு விவரிக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், நல்ல (மேலான) உணவையும் (ஆகாதவை என்று) தடுப்பவர் யார்?'' எனக் கேட்டு, ‘‘அது இவ்வுலகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு(ம் ஆகுமானதே! எனினும்) மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டுமே) சொந்தமானது'' என்று கூறுவீராக. அறியக்கூடிய மக்களுக்கு (நமது) வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்.
IFT
(நபியே! அவர்களிடம்) நீர் கேட்பீராக: “அல்லாஹ் தன் அடிமைகளுக்காகத் தோற்றுவித்துள்ள அலங்காரத்தையும் மேலும், அவன் வழங்கியுள்ள தூய்மையான உண்பொருள்களையும் தடைசெய்தது யார்?” நீர் கூறும்: “இறைநம்பிக்கையாளர்களுக்கு இப்பொருள்கள் அனைத்தும் உலக வாழ்க்கையில் கிடைக்கும். மறுமைநாளில் அவர்களுக்கே அவை உரியனவாயிருக்கும்.” இவ்வாறு நாம் நம்முடைய வசனங்களை அறிவுடைய சமூகத்தாருக்குத் தெளிவாக விவரிக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) “அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியிருக்கும் (சகலவித) அலங்காரத்தையும், உணவு வகைகளில் நல்லவற்றையும் (ஆகாதவையென்று) தடுத்தவர் யார்? என்று கேட்பீராக! அது இவ்வுலக வாழ்வில் விசுவாசம் கொண்டவர்களுக்கு (உரியதாகும். எனினும்,) மறுமை நாளில் (மற்றவர்களுக்கன்றி அவர்களுக்கு மட்டுமே) பிரத்தியேகமானதாகும், என்று கூறுவீராக! அறியக்கூடிய சமூகத்தார்க்கு (நம்முடைய) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்.
Saheeh International
Say, "Who has forbidden the adornment of [i.e., from] Allah which He has produced for His servants and the good [lawful] things of provision?" Say, "They are for those who believed during the life of this world, exclusively [for them] on the Day of Resurrection." Thus do We detail the verses for a people who know.
قُلْ اِنَّمَا حَرَّمَ رَبِّیَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَالْاِثْمَ وَالْبَغْیَ بِغَیْرِ الْحَقِّ وَاَنْ تُشْرِكُوْا بِاللّٰهِ مَا لَمْ یُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا وَّاَنْ تَقُوْلُوْا عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
قُلْகூறுவீராகاِنَّمَاஎல்லாம்حَرَّمَதடைசெய்தான்رَبِّىَஎன் இறைவன்الْـفَوَاحِشَமானக்கேடான காரியங்கள்مَاஎதுظَهَرَவெளிப்படையாக இருக்கிறதுمِنْهَاஅவற்றில்وَمَاஇன்னும் எதுبَطَنَமறைவாகஇருக்கிறதுوَ الْاِثْمَஇன்னும் பாவத்தைوَالْبَـغْىَஇன்னும் கொடுமைப்படுத்துவதுبِغَيْرِ الْحَـقِّநியாயமின்றிوَاَنْ تُشْرِكُوْاஇன்னும் நீங்கள் இணையாக்குவதைبِاللّٰهِஅல்லாஹ்வுக்குمَا لَمْ يُنَزِّلْ بِهٖஎதை/அவன் இறக்கவில்லை/அதற்குسُلْطٰنًاஓர் ஆதாரத்தைوَّاَنْ تَقُوْلُوْاஇன்னும் நீங்கள் கூறுவதைعَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுمَاஎவற்றைلَا تَعْلَمُوْنَ‏அறியமாட்டீர்கள்
குல் இன்னமா ஹர்ரம ரBப்Bபியல் Fபவாஹிஷ மா ளஹர மின்ஹா வமா Bபதன வல் இத்ம வல்Bபக்ய Bபிகய்ரில் ஹக்கி வ அன் துஷ்ரிகூ Bபில்லாஹி மா லம் யுனZஜ்Zஜில் Bபிஹீ ஸுல்தான(ன்)வ் வ அன் தகூலூ 'அலல் லாஹி மா லா தஃலமூன்
முஹம்மது ஜான்
“என் இறைவன் ஹராம் எனத் தடுத்திருப்பவையெல்லாம், வெளிப்படையான அல்லது அந்தரங்கமான, மானக்கேடான செயல்கள்; பாவங்கள்; நியாயமின்றி (ஒருவருக்கொருவர்) கொடுமை செய்வது ஆதாரமில்லாமலிருக்கும் போதே; நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவது (ஆகிய இவையே என்று நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: ‘‘நிச்சயமாக என் இறைவன் (ஹராம் என்று) தடை செய்திருப்பதெல்லாம்: பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ செய்யப்படும் மானக்கேடான காரியங்களையும், மற்ற பாவங்களையும், நியாயமின்றி ஒருவர் மீது (ஒருவர்) கொடுமை செய்வதையும், அல்லாஹ் எதற்கு ஆதாரம் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாக்குவதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்) கூறுவதையும்தான் (அல்லாஹ் தடுத்திருக்கிறான்).
IFT
(நபியே! இவர்களிடம்) நீர் கூறுவீராக: “என்னுடைய இறைவன் தடை செய்திருப்பவை இவற்றையெல்லாம்தாம்: மானக்கேடானவற்றைச் செய்தல் அவை வெளிப்படையாக இருந்தாலும் சரி; மறைவாக இருந்தாலும் சரி! பாவம் புரிதல், நேர்மைக்கு மாறாக வரம்புமீறிய செயல்களில் ஈடுபடுதல், மேலும் எவற்றைக் குறித்து எந்த ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்கிடவில்லையோ அவற்றை அல்லாஹ்வுடன் இணை வைத்தல், மேலும், எவற்றைக் குறித்து (அவை அல்லாஹ் கூறியவைதான் என்பதை) நீங்கள் அறியவில்லையோ அவற்றை அல்லாஹ்வின் மீது ஏற்றிச் சொல்லல்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
என்னுடைய இரட்சகன் (ஆகாதென்று) தடுத்திருப்பதெல்லாம் மானக்கேடான செயல்களை-அவற்றில் வெளிப்படையானதையும் மறைமுகமானதையும், (இதர) பாவத்தையும், உரிமையின்றி வரம்பு மீறுதலையும், அல்லாஹ்விற்கு நீங்கள் இணை வைப்பதையும் - அதற்கு எந்தவித ஆதாரத்தையும் அவன் இறக்கிவைக்காதிருக்க இன்னும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது பொய்யாகக்) கூறுவதையும்-தான்” ,என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
Say, "My Lord has only forbidden immoralities - what is apparent of them and what is concealed - and sin, and oppression without right, and that you associate with Allah that for which He has not sent down authority, and that you say about Allah that which you do not know."
وَلِكُلِّ اُمَّةٍ اَجَلٌ ۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمْ لَا یَسْتَاْخِرُوْنَ سَاعَةً وَّلَا یَسْتَقْدِمُوْنَ ۟
وَلِكُلِّஎல்லோருக்கும்اُمَّةٍஇனத்தவர்اَجَلٌ‌ۚஒரு தவணைفَاِذَا جَآءَவந்தால்اَجَلُهُمْஅவர்களுடைய தவணைلَا يَسْتَاْخِرُوْنَபிந்த மாட்டார்கள்سَاعَةً‌ஒரு வினாடிوَّلَا يَسْتَقْدِمُوْنَ‏இன்னும் முந்த மாட்டார்கள்
வ லிகுல்லி உம்மதின் அஜலுன் Fப இதா ஜா'அ அஜலுஹும் லா யஸ்த' கிரூன ஸா'அத(ன்)வ் வலா யஸ்தக்திமூன்
முஹம்மது ஜான்
ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஒவ்வொரு வகுப்பாருக்கும் (அவர்கள் வாழவும், அழியவும்) ஒரு காலமுண்டு. அவர்களுடைய தவனைக் காலம் வரும் போது ஒரு வினாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
IFT
ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஒரு தவணை இருக்கிறது. அவரவரின் தவணை பூர்த்தியாகிவிட்டால் ஒரு வினாடிகூட அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஓவ்வொரு சமுதாயத்தாருக்கும் ஒரு தவணையுண்டு, ஆகவே, அவர்களுடைய தவணை வந்துவிட்டால் ஒரு கணப்பொழுது பிந்தவுமாட்டார்கள், முந்தவுமாட்டார்கள்.
Saheeh International
And for every nation is a [specified] term. So when their time has come, they will not remain behind an hour, nor will they precede [it].
یٰبَنِیْۤ اٰدَمَ اِمَّا یَاْتِیَنَّكُمْ رُسُلٌ مِّنْكُمْ یَقُصُّوْنَ عَلَیْكُمْ اٰیٰتِیْ ۙ فَمَنِ اتَّقٰی وَاَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
يٰبَنِىْۤ اٰدَمَஆதமின் சந்ததிகளேاِمَّا يَاْتِيَنَّكُمْநிச்சயமாக வந்தால் / உங்களிடம்رُسُلٌதூதர்கள்مِّنْكُمْஉங்களில் இருந்தேيَقُصُّوْنَவிவரித்தவர்களாகعَلَيْكُمْஉங்களுக்குاٰيٰتِىْ‌ۙஎன் வசனங்களைفَمَنِஎவர்(கள்)اتَّقٰىஅஞ்சினார்(கள்)وَاَصْلَحَஇன்னும் சீர்திருத்தினார்(கள்)فَلَا خَوْفٌபயமில்லைعَلَيْهِمْஅவர்கள் மீதுوَلَا هُمْ يَحْزَنُوْنَ‏அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
யா Bபனீ ஆதம இம்மா ய'தியன்னகும் ருஸுலும் மின்கும் யகுஸ்ஸூன 'அலய்கும் ஆயாதீ Fபமனித் தகா வ அஸ்லஹ Fபலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
முஹம்மது ஜான்
ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆதமுடைய மக்களே! (என்) தூதர்கள் உங்களில் இருந்தே நிச்சயமாக உங்களிடம் வந்து என் வசனங்களை மெய்யாகவே உங்களுக்கு ஓதிக் காண்பிக்கும்போது, (அவற்றை செவியுற்ற உங்களில்) எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, (பாவங்களிலிருந்து) விலகி, நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் துயரம் அடையவும் மாட்டார்கள்.
IFT
(மேலும் முதல் மனிதரைப் படைத்தபோதே அல்லாஹ் இதைத் தெளிவாக்கி விட்டான்; அதாவது) ஆதத்தின் மக்களே...! (நினைவில் வையுங்கள்:) உங்களிலிருந்தே என்னுடைய வசனங்களை ஓதிக் காண்பிக்கின்ற தூதர்கள் உங்களிடம் வந்தால், அப்போது எவர்கள் மாறு செய்வதிலிருந்து விலகிக் கொள்கின்றார்களோ, மேலும் தங்களுடைய நடத்தையைச் சீர்திருத்திக் கொள்கின்றார்களோ அவர்களுக்கு எத்தகைய அச்சமுமில்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆதமுடைய மக்களே! உங்களிலிருந்தே நிச்சயமாக உங்களிடம் (என்னுடைய) தூதர்கள் வந்து என்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரித்துக் காண்பிக்கும்போது, எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து, (தங்களைச்) சீர்திருத்திக்கொண்டார்களோ, அவர்களுக்கு எத்தகைகைய பயமுமில்லை, அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்.
Saheeh International
O children of Adam, if there come to you messengers from among you relating to you My verses [i.e., scriptures and laws], then whoever fears Allah and reforms - there will be no fear concerning them, nor will they grieve.
وَالَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
وَالَّذِيْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தனர்بِاٰيٰتِنَاநம் வசனங்களைوَاسْتَكْبَرُوْاபெருமையடித்து புறக்கணித்தனர்عَنْهَاۤஅவற்றை விட்டுاُولٰۤٮِٕكَஅவர்கள்اَصْحٰبُ النَّارِ‌ۚநரகவாசிகள்هُمْஅவர்கள்فِيْهَاஅதில்خٰلِدُوْنَ‏நிரந்தரமானவர்கள்
வல்லதீன கத்தBபூ Bபி ஆயாதினா வஸ்தக்Bபரூ 'அன் ஹா உலா'இக அஸ்ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
முஹம்மது ஜான்
ஆனால் எவர் நம் வசனங்களை பொய்ப்பித்து (அவற்றைப் புறக்கணித்துப்) பெருமையடித்தார்களோ அவர்கள் நரகவாசிகளேயாவார்கள் - அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கி விடுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(எனினும்) எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அவற்றைப் புறக்கணித்து கர்வம் கொள்கிறார்களோ அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள்.
IFT
ஆனால் எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யென வாதிட்டு அவற்றை ஏற்காமல் ஆணவம் கொண்டார்களோ அவர்கள்தாம் நரகவாசிகள். அவர்கள் என்றென்றும் அதில் வீழ்ந்து கிடப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கி, அவற்றை (ஏற்பதை) விட்டும் கர்வமும் கொண்டார்களே, அத்தகையோர்-அவர்கள் நரகவாசிகளாவர், அவர்கள் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள்.
Saheeh International
But the ones who deny Our verses and are arrogant toward them - those are the companions of the Fire; they will abide therein eternally.
فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰیٰتِهٖ ؕ اُولٰٓىِٕكَ یَنَالُهُمْ نَصِیْبُهُمْ مِّنَ الْكِتٰبِ ؕ حَتّٰۤی اِذَا جَآءَتْهُمْ رُسُلُنَا یَتَوَفَّوْنَهُمْ ۙ قَالُوْۤا اَیْنَ مَا كُنْتُمْ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ قَالُوْا ضَلُّوْا عَنَّا وَشَهِدُوْا عَلٰۤی اَنْفُسِهِمْ اَنَّهُمْ كَانُوْا كٰفِرِیْنَ ۟
فَمَنْயார்?اَظْلَمُமிகப்பெரிய அநியாயக்காரன்مِمَّنِஎவனைவிடافْتَـرٰىஇட்டுக்கட்டினான்عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுكَذِبًاபொய்யைاَوْஅல்லதுكَذَّبَபொய்ப்பித்தான்بِاٰيٰتِهٖ ؕஅவனுடைய வசனங்களைاُولٰۤٮِٕكَஇவர்கள்يَنَالُهُمْஅடையும்/இவர்களைنَصِيْبُهُمْபாகம்/இவர்களுடையمِّنَ الْـكِتٰبِ‌ؕவிதியில்حَتّٰٓىஇறுதியாகاِذَاபோதுجَآءَتْهُمْஇவர்களிடம் வந்தرُسُلُـنَاநம் தூதர்கள்يَتَوَفَّوْنَهُمْ ۙஉயிர்வாங்குபவர்களாக / இவர்களைقَالُوْۤاகூறுவார்கள்اَيْنَஎங்கே?مَاஎவைكُنْتُمْஇருந்தீர்கள்تَدْعُوْنَபிரார்த்திப்பீர்கள்مِنْ دُوْنِ اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வையன்றிقَالُوْاகூறினார்கள்ضَلُّوْاமறைந்தனர்عَنَّاஎங்களை விட்டுوَشَهِدُوْاஇன்னும் சாட்சியளிப்பார்கள்عَلٰٓىஎதிராகاَنْفُسِهِمْதங்களுக்குاَنَّهُمْநிச்சயமாக தாங்கள்كَانُوْاஇருந்தனர்كٰفِرِيْنَ‏நிராகரிப்பவர்களாக
Fபமன் அள்லமு மிம்மனிFப் தரா 'அலல் லாஹி கதிBபன் அவ் கத்தBப Bபி ஆயாதிஹ்; உலா'இக யனாலுஹும் னஸீBபுஹும் மினல் கிதாBப்; ஹத்தா இதா ஜா'அத் ஹும் ருஸுலுனா யதவFப் Fபவ்னஹும் காலூ அய்ன மா குன்தும் தத்'ஊனா மின் தூனில் லாஹி காலூ ளல்லூ 'அன்னா வ ஷஹிதூ 'அலா அன்Fபுஸிஹிம் அன்னஹும் கானூ காFபிரீன்
முஹம்மது ஜான்
எவன் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கிறானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக்கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) “அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டு இருந்தீர்களோ, அவர்கள் எங்கே?” எனக் கேட்பார்கள்; (அதற்கு) “அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் (மறைந்து போய்) விட்டார்கள்” என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக - இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவன் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கி, அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்தும் கூறுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? (இவ்வுலகில் அவர்கள் உயிர் வாழும் வரை) அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவு, பொருள் ஆகிய)வை அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். (அவர்களுடைய காலம் முடிந்து) அவர்களுடைய உயிரைக் கைப்பற்ற நம் வானவர்கள் அவர்களிடம் வரும் சமயத்தில் (அவர்களை நோக்கி) நீங்கள் ‘‘கடவுளென அழைத்துக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவை எங்கே?'' என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள், ‘‘(அவை அனைத்தும்) எங்களை விட்டு (ஓடி) மறைந்துவிட்டன'' என்று கூறி, மெய்யாகவே அவர்கள் (சத்தியத்தை) நிராகரிப்பவர்களாக இருந்தார்கள் என்று தங்களுக்கு எதிராகவே சாட்சியம் கூறுவார்கள்.
IFT
எவன் அல்லாஹ்வின் பெயரில் பொய்களைப் புனைந்துரைக்கின்றானோ அல்லது அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றானோ அவனைவிட அக்கிரமக்காரன் யார்? எனினும், அவர்களுக்கென்று விதிக்கப்பட்ட பங்கு அவர்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும். இறுதியில் நாம் அனுப்பிய வானவர்கள் அவர்களுடைய ஆன்மாக்களைக் கைப்பற்றுவதற்காக அவர்களிடம் வருவார்கள். அப்போது அவர்களிடம் கேட்பார்கள்: “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் எந்த தெய்வங்களை அழைத்து வந்தீர்களோ அந்த தெய்வங்கள் (இப்போது) எங்கே?” அதற்கு அவர்கள் “அவை அனைத்தும் எங்களை விட்டுக் காணாமல் போய்விட்டன” என்று கூறுவார்கள். பிறகு “நாங்கள் உண்மையிலேயே சத்தியத்தை நிராகரிப்பவர்களாய் இருந்தோம்” என்று தங்களுக்கு எதிராகத் தாங்களே சாட்சி கூறுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வின், மீது பொய்யைக் கற்பனை செய்து கூறுகின்றவரைவிட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகின்றவரைவிட மிக அநியாயக்காரர் யார்? அத்தகையோர்-அவர்களுக்கு எழுதப்பட்ட (உணவு, செல்வம் முதலிய)வைகளிலிருந்து அவர்களின் பாத்தியதை அவர்களுக்குக் கிடைக்கும், முடிவாக நம் தூதர்(களான மலக்கு)கள் அவர்களிடம் வந்து அவர்க(ளுடைய உயிர்க)ளை கைப்பற்றும் சமயத்தில் “அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைத்துக் கொண்டிருந்தீர்களே அவர்கள் எங்கே” என்று கேட்பார்கள், அ(தற்க)வர்கள், (அவர்கள் யாவும்) “எங்களை விட்டு (ஓடி) மறைந்துவிட்டனர்” என்று கூறி, நிச்சயமாகவே தாங்கள் (சத்தியத்தை) நிராகரிப்பவர்களாக இருந்தனர் என தங்களுக்கு விரோதமாகவே அவர்கள் சாட்சியம் கூறுவார்கள்.
Saheeh International
And who is more unjust than one who invents about Allah a lie or denies His verses? Those will attain their portion of the decree until, when Our messengers [i.e., angels] come to them to take them in death, they will say, "Where are those you used to invoke besides Allah?" They will say, "They have departed from us," and will bear witness against themselves that they were disbelievers.
قَالَ ادْخُلُوْا فِیْۤ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ فِی النَّارِ ؕ كُلَّمَا دَخَلَتْ اُمَّةٌ لَّعَنَتْ اُخْتَهَا ؕ حَتّٰۤی اِذَا ادَّارَكُوْا فِیْهَا جَمِیْعًا ۙ قَالَتْ اُخْرٰىهُمْ لِاُوْلٰىهُمْ رَبَّنَا هٰۤؤُلَآءِ اَضَلُّوْنَا فَاٰتِهِمْ عَذَابًا ضِعْفًا مِّنَ النَّارِ ؕ۬ قَالَ لِكُلٍّ ضِعْفٌ وَّلٰكِنْ لَّا تَعْلَمُوْنَ ۟
قَالَகூறுவான்ادْخُلُوْاநுழையுங்கள்فِىْۤ اُمَمٍகூட்டங்களில்قَدْ خَلَتْசென்றுவிட்டனمِنْ قَبْلِكُمْஉங்களுக்கு முன்னர்مِّنَ الْجِنِّஜின்களில்وَالْاِنْسِஇன்னும் மனிதர்களில்فِى النَّارِ‌ ؕநரகத்தில்كُلَّمَاஎல்லாம்دَخَلَتْநுழைந்ததுاُمَّةٌஒரு கூட்டம்لَّعَنَتْசபிக்கும்اُخْتَهَا‌ ؕதன் சக கூட்டத்தைحَتّٰۤىஇறுதியாகاِذَا ادَّارَكُوْاஅவர்கள் ஒன்றுசேர்ந்தால்فِيْهَاஅதில்جَمِيْعًا ۙஅனைவரும்قَالَتْகூறும்اُخْرٰٮهُمْஅவர்களில் பின் வந்த கூட்டம்لِاُوْلٰٮهُمْதங்கள் முன்சென்ற கூட்டத்தை சுட்டிக் காண்பித்துرَبَّنَاஎங்கள் இறைவாهٰٓؤُلَۤاءِஇவர்கள்தான்اَضَلُّوْنَاவழி கெடுத்தனர்/எங்களைفَاٰتِهِمْஎனவே கொடு/அவர்களுக்குعَذَابًاவேதனையைضِعْفًاஇரு மடங்குمِّنَ النَّارِ‌  ؕநரகில்قَالَகூறுவான்لِكُلٍّஎல்லோருக்கும்ضِعْفٌஇரு மடங்குوَّلٰـكِنْஎனினும்لَّا تَعْلَمُوْنَ‏அறியமாட்டீர்கள்
காலத் குலூ Fபீ உமமின் கத் கலத் மின் கBப்லிகும் மினல் ஜின்னி வல் இன்ஸி Fபின் னாரி குல்லமா தகலத் உம்மதுல் ல'அனத் உக்தஹா ஹத்தா இதத் தாரகூ Fபீஹா ஜமீ'அன் காலத் உக்ராஹும் லி ஊலாஹும் ரBப்Bபனா ஹா உ'லா'இ அளல்லூனா Fப ஆதிஹிம் 'அதாBபன் ளிஃFபம் மினன் னாரி கால லிகுல்லின் ளிஃFபு(ன்)வ் வ லாகில் லா தஃலமூன்
முஹம்மது ஜான்
(அல்லாஹ்) கூறுவான்: “ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தார்களிலிருந்து உங்களுக்கு முன் சென்றவர்களுடன் நீங்களும் (நரக) நெருப்பில் நுழையுங்கள்.” ஒவ்வொரு கூட்டத்தாரும், நரகத்தில் நுழையும்போதெல்லாம், (தங்களுக்கு முன், அங்கு வந்துள்ள) தம் இனத்தாரைச் சபிப்பார்கள்; அவர்கள் யாவரும் நரகத்தையடைந்து விட்ட பின்னர், பின் வந்தவர்கள் முன் வந்தவர்களைப்பற்றி, “எங்கள் இறைவனே! இவர்கள் தான் எங்களை வழி கெடுத்தார்கள்; ஆதலால் இவர்களுக்கு நரகத்தில் இரு மடங்கு வேதனையைக் கொடு” என்று சொல்வார்கள். அவன் கூறுவான்: “உங்களில் ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு (வேதனை) உண்டு - ஆனால் நீங்கள் அதை அறியமாட்டீர்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ஜின்களிலும், மனிதர்களிலும் உங்களுக்கு முன்னர் சென்றுவிட்ட (உங்களைப் போன்ற பாவிகளான) கூட்டத்தினருடன் நீங்களும் சேர்ந்து நரகத்திற்குச் சென்று விடுங்கள்'' என்று கூறுவான். அவர்களில் ஒவ்வொரு வகுப்பினரும் (நரகத்திற்குச்) சென்றபொழுது (முன்னர் அங்கு வந்துள்ள) தங்கள் இனத்தாரை கோபித்து சபிப்பார்கள். (இவ்வாறு) இவர்கள் அனைவரும் நரகத்தையடைந்த பின்னர், (அவர்களில்) பின் சென்றவர்கள் (தங்களுக்கு) முன் சென்றவர்களைச் சுட்டிக்காட்டி, ‘‘எங்கள் இறைவனே! இவர்கள்தான் எங்களை வழி கெடுத்தார்கள். ஆகவே, அவர்களுக்கு (எங்களைவிட) இரு மடங்கு நரக வேதனையைக் கொடுப்பாயாக!'' என்று கூறுவார்கள். அதற்கு அவன், ‘‘உங்களில் அனைவருக்குமே இரு மடங்கு வேதனை உண்டு. எனினும் (இதன் காரணத்தை) நீங்கள் அறியமாட்டீர்கள்'' என்று கூறுவான்.
IFT
அல்லாஹ் கூறுவான்: “உங்களுக்கு முன் சென்ற ஜின் மற்றும் மனிதக் கூட்டத்தார்களுடன் நீங்களும் நரகத்திற்குச் செல்லுங்கள்!” ஒவ்வொரு கூட்டத்தாரும், (நரகத்தினுள்) நுழையும்போது தமக்கு முன்சென்ற கூட்டத்தாரைச் சபித்தவாறே செல்வார்கள். இறுதியில் எல்லோரும் அங்கு ஒன்று கூடும்போது அவர்களில் பிந்தைய கூட்டத்தார் முந்தைய கூட்டத்தாரைப் பற்றி, “எங்கள் இறைவனே! இவர்கள்தாம் எங்களை வழிகெடுத்தார்கள்! எனவே, இவர்களுக்கு நரகத்தில் இருமடங்கு வேதனையை அளிப்பாயாக!” என்று கூறுவார்கள். (அதற்கு மறுமொழியாக) அல்லாஹ் கூறுவான்: “ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு வேதனைதான் உண்டு. ஆயினும், நீங்கள் அறிவதில்லை.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு அல்லாஹ் அவர்களிடம்) “ஜின்களிலும் மனிதர்களிலும் உங்களுக்கு முன்னர் சென்றுவிட்ட கூட்டத்தினர்களுடன் நீங்களும் சேர்ந்து நரக நெருப்பில் நுழையுங்கள்” என்று கூறுவான், அவர்களில் ஒவ்வொரு சமுதாயத்தினரும் (நரகத்திற்குள்) நுழையும் பொழுதெல்லாம் தனக்கு முன் அங்கு வந்துள்ள தங்கள் (இனத்தாரின் முன் சென்ற)சகக்கூட்டத்தினரை சபிப்பார்கள், முடிவாக அவர்கள் யாவரும் நரகத்தையடைந்த பொழுது (அவர்களில்) பிந்தியவர்கள் (பின்பற்றியவர்கள், பின்பற்றப்பட்ட தலைவர்களான) முந்தியவர்களைப் பற்றி “எங்கள் இரட்சகனே இவர்கள்தாம் எங்களை வழிகெடுத்தவர்கள், ஆகவே, அவர்களுக்கு (எங்களைவிட) நரகத்தில் இரட்டிப்பான வேதனையைக் கொடுப்பாயாக” என்று கூறுவார்கள், அதற்கு அவன் “உங்களில் ஒவ்வொருவருக்குமே இரட்டிப்பு (வேதனை) உண்டு, எனினும், (இதன் காரணத்தை) நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று கூறுவான்.
Saheeh International
[Allah] will say, "Enter among nations which had passed on before you of jinn and mankind into the Fire." Every time a nation enters, it will curse its sister until, when they have all overtaken one another therein, the last of them will say about the first of them, "Our Lord, these had misled us, so give them a double punishment of the Fire." He will say, "For each is double, but you do not know."
وَقَالَتْ اُوْلٰىهُمْ لِاُخْرٰىهُمْ فَمَا كَانَ لَكُمْ عَلَیْنَا مِنْ فَضْلٍ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْسِبُوْنَ ۟۠
وَقَالَتْஇன்னும் கூறும்اُوْلٰٮهُمْஅவர்களில் முன்சென்ற கூட்டம்لِاُخْرٰٮهُمْஅவர்களில் பின்வந்த கூட்டத்திற்குفَمَا كَانَ لَـكُمْஉங்களுக்கு இல்லைعَلَيْنَاஎங்களை விடمِنْ فَضْلٍஒரு மேன்மைفَذُوْقُواஆகவே சுவையுங்கள்الْعَذَابَவேதனையைبِمَاஎதன் காரணமாகكُنْتُمْஇருந்தீர்கள்تَكْسِبُوْنَ‏செய்வீர்கள்
வ காலத் ஊலாஹும் லி உக்ராஹும் Fபமா கான லகும் 'அலய்னா மின் Fபள்லின் Fபதூகுல் அதாBப Bபிமா குன்தும் தக்ஸிBபூன்
முஹம்மது ஜான்
அவர்களில் முன் வந்தவர்கள், பின் வந்தவர்களை நோக்கி, “எங்களைவிட உங்களுக்கு யாதொரு மேன்மையும் கிடையாது, ஆதலால் நீங்களாகவே சம்பாதித்துக் கொண்ட (தீ) வினையின் காரணமாக நீங்களும் (இருமடங்கு) வேதனையை அனுபவியுங்கள்” என்று கூறுவார்கள்.  
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில் முன் சென்றவர்கள், பின் சென்றவர்களை நோக்கி ‘‘எங்களைவிட உங்களுக்கு ஒரு மேன்மையும் கிடையாது. ஆதலால், நீங்களாகவே தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக (நீங்களும் இரு மடங்கு) வேதனையைச் சுவையுங்கள்'' என்று கூறுவார்கள்.
IFT
மேலும், அவர்களில் முந்தைய கூட்டத்தார் பிந்தைய கூட்டத்தாரைப் பார்த்து “(நாங்கள் குற்றவாளிகள் என்றால்) எங்களைவிட நீங்கள் சிறந்தவர்களா என்ன? எனவே (இப்பொழுது) நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீவினையின் காரணமாக வேதனையைச் சுவையுங்கள்” என்று கூறுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களில் முந்தியவர்கள் அவர்களில் பிந்தியவர்களிடம், “எங்களைவிட உங்களுக்கு யாதொரு மேன்மையும் கிடையாது, ஆதலால் நீங்கள் சம்பாதித்துக் கொண்ட (தீ)வினையின் காரணமாக (நீங்களும் இரட்டிப்பு) வேதனையைச் சுவையுங்கள்” என்று கூறுவார்கள்.
Saheeh International
And the first of them will say to the last of them, "Then you had not any favor over us, so taste the punishment for what you used to earn."
اِنَّ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ اَبْوَابُ السَّمَآءِ وَلَا یَدْخُلُوْنَ الْجَنَّةَ حَتّٰی یَلِجَ الْجَمَلُ فِیْ سَمِّ الْخِیَاطِ ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُجْرِمِیْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَ كَذَّبُوْاபொய்ப்பித்தவர்கள்بِاٰيٰتِنَاநம் வசனங்களைوَاسْتَكْبَرُوْاஇன்னும் பெருமையடித்து புறக்கணித்தனர்عَنْهَاஅவற்றை விட்டுلَا تُفَتَّحُதிறக்கப்படாதுلَهُمْஅவர்களுக்குاَبْوَابُவாசல்கள்السَّمَآءِவானத்தின்وَلَا يَدْخُلُوْنَஇன்னும் நுழைய மாட்டார்கள்الْجَـنَّةَசொர்க்கத்தில்حَتّٰى يَلِجَநுழையும் வரைالْجَمَلُஒட்டகம்فِىْ سَمِّகாதில்الْخِيَاطِ‌ ؕஊசியின்وَكَذٰلِكَஇவ்வாறேنَجْزِىகூலி கொடுப்போம்الْمُجْرِمِيْنَ‏குற்றவாளிகளுக்கு
இன்னல் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா வஸ்தக்Bபரூ 'அன்ஹா லா துFபத்தஹு லஹும் அBப்வாBபுஸ் ஸமா'இ வலா யத்குலூனல் ஜன்னத ஹத்தா யலிஜல் ஜமலு Fபீ ஸம்மில் கியாத்; வ கதாலிக னஜ்Zஜில் முஜ்ரிமீன்
முஹம்மது ஜான்
எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா - மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அதைப் புறக்கணிப்பதைப் பெருமையாகக் கொண்டார்களோ அவர்களுக்கு (இறைவனின் அருளுக்குரிய) வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தை அடையவே மாட்டார்கள். குற்றவாளிகளை இவ்வாறே நாம் தண்டிப்போம்.
IFT
(உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்:) எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யெனக்கூறி அவற்றைப் புறக்கணித்து ஆணவம் கொண்டார்களோ அவர்களுக்கு வானத்தின் வாயில்கள் ஒருபோதும் திறக்கப்படமாட்டா! அவர்கள் சொர்க்கத்தில் நுழைவது என்பது, ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைவது போன்று இயலாத ஒன்றாகும். மேலும், குற்றவாளிகளுக்கு நம்மிடம் இத்தகைய கூலிதான் கிடைக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை (ஏற்பதை) விட்டும் பெருமையும் கொண்டார்களே அத்தகையோர் – அவர்களுக்கு (அல்லாஹ்வின் அருளுக்குரிய) வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டாது, மேலும், ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில் நுழையமாட்டார்கள், மேலும், குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்.
Saheeh International
Indeed, those who deny Our verses and are arrogant toward them - the gates of Heaven will not be opened for them, nor will they enter Paradise until a camel enters into the eye of a needle [i.e., never]. And thus do We recompense the criminals.
لَهُمْ مِّنْ جَهَنَّمَ مِهَادٌ وَّمِنْ فَوْقِهِمْ غَوَاشٍ ؕ وَكَذٰلِكَ نَجْزِی الظّٰلِمِیْنَ ۟
لَهُمْஅவர்களுக்குمِّنْ جَهَـنَّمَநரகத்தில்مِهَادٌஒரு விரிப்புوَّمِنْ فَوْقِهِمْஇன்னும் அவர்களுக்கு மேல்غَوَاشٍ‌ ؕபோர்வைகள்وَكَذٰلِكَஇவ்வாறேنَجْزِىகூலி கொடுப்போம்الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களுக்கு
லஹும் மின் ஜஹன்னம மிஹாது(ன்)வ் வ மின் Fபவ்கிஹிம் கவாஷ்; வ கதாலிக னஜ்Zஜிள் ளாலிமீன்
முஹம்மது ஜான்
அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
நரகத்தில் அவர்களுக்கு (நெருப்பாலான) விரிப்புகளும் உண்டு. அவர்கள் மேல் போர்த்திக் கொள்வதற்கும் (நெருப்பாலான) போர்வைகள் உண்டு. அநியாயக்காரர்களை இவ்வாறே நாம் தண்டிப்போம்.
IFT
அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், அவர்கள் போர்த்திக்கொள்ள நெருப்புப் போர்வைகளுமே கிடைக்கும். இவ்வாறே அக்கிரமக்காரர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுக்கு நரகத்திலிருந்து (நெருப்பு) விரிப்புகளும், அவர்களுக்கு மேலிருந்து (போர்த்திக் கொள்ள நெருப்புப்) போர்வைகளும் உண்டு, இன்னும் இவ்வாறே அநியாயக்காரர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
Saheeh International
They will have from Hell a bed and over them coverings [of fire]. And thus do We recompense the wrongdoers.
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَا نُكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَاۤ ؗ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
وَالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தனர்الصّٰلِحٰتِநன்மைகளைلَا نُـكَلِّفُசிரமப்படுத்த மாட்டோம்نَفْسًاஓர் ஆன்மாவைاِلَّاதவிரوُسْعَهَاۤ அதன் சக்திக்குத் தக்கவாறேاُولٰۤٮِٕكَஅவர்கள்اَصْحٰبُ الْجَـنَّةِ‌ۚசொர்க்கவாசிகள்هُمْஅவர்கள்فِيْهَاஅதில்خٰلِدُوْنَ‏நிரந்தரமானவர்கள்
வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லா னுகல்லிFபு னFப்ஸன் இல்லா வுஸ்'அஹா உலா'இக அஸ்ஹாBபுல் ஜன்னதி ஹும் Fபீஹா காலிதூன்
முஹம்மது ஜான்
ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ - எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்குமீறி நாம் சிரமப்படுத்த மாட்டோம்; அவர்கள் சுவனவாசிகளாக இருப்பார்கள் - அவர்கள் அதிலேயே என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்களால் இயன்றவரை) நற்காரியங்களைச் செய்கிறார்களோ அவர்களில் ஒருவரையும் அவரது சக்தியின் அளவுக்கதிகமாக நாம் நிர்ப்பந்திப்பதேயில்லை. இவர்கள் தான் சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள்.
IFT
(இதற்கு மாறாக) எவர்கள் (நம்முடைய திருவசனங்கள் மீது) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ இது விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய சக்திக்கு ஏற்பவே நாம் பொறுப்பினைச் சுமத்துகின்றோம் அவர்கள் சுவனவாசிகள். அதில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், விசுவாசங்கொண்டு நற்காரியங்களையும் செய்கின்றார்களே அத்தகையோர்-எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்குத் தக்கவாரல்லாது நாம் சிரமப்படுத்தமாட்டோம்-அவர்கள்தான் சுவனவாசிகள், அதில் அவர்கள் நிந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள்.
Saheeh International
But those who believed and did righteous deeds - We charge no soul except [within] its capacity. Those are the companions of Paradise; they will abide therein eternally.
وَنَزَعْنَا مَا فِیْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ تَجْرِیْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ ۚ وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ هَدٰىنَا لِهٰذَا ۫ وَمَا كُنَّا لِنَهْتَدِیَ لَوْلَاۤ اَنْ هَدٰىنَا اللّٰهُ ۚ لَقَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ ؕ وَنُوْدُوْۤا اَنْ تِلْكُمُ الْجَنَّةُ اُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
وَنَزَعْنَاநீக்கி விடுவோம்مَا فِىْ صُدُوْرِهِمْஎதை/அவர்களுடைய நெஞ்சங்களில்مِّنْ غِلٍّகுரோதத்தைتَجْرِىْஓடும்مِنْ تَحْتِهِمُஅவர்களுக்குக் கீழ்الْاَنْهٰرُ‌ۚநதிகள்وَقَالُواஇன்னும் கூறுவார்கள்الْحَمْدُஎல்லாப் புகழும்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேالَّذِىْ هَدٰٮنَا لِهٰذَاஎவன்/ நேர்வழிபடுத்தினான்/எங்களை/இதற்குوَمَا كُنَّا لِنَهْتَدِىَநாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்لَوْلَاۤ اَنْ هَدٰٮنَاநேர்வழி செலுத்தி இருக்கவில்லையென்றால் /எங்களைاللّٰهُ‌ ۚஅல்லாஹ்لَقَدْதிட்டமாகجَآءَتْவந்தா(ர்க)ள்رُسُلُதூதர்கள்رَبِّنَاஎங்கள் இறைவனின்بِالْحَـقِّ‌ ؕஉண்மையைக் கொண்டுوَنُوْدُوْۤاஇன்னும் அழைக்கப்படுவார்கள்اَنْ تِلْكُمُ الْجَـنَّةُஇந்த சொர்க்கம்اُوْرِثْتُمُوْهَاஇதற்கு வாரிசாக்கப்பட்டீர்கள்بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்து கொண்டிருந்ததனால்
வ னZஜஃனா மா Fபீ ஸுதூரிஹிம் மின் கில்லின் தஜ்ரீ மின் தஹ்திஹிமுல் அன்ஹாரு வ காலுல் ஹம்து லில்லாஹில் லதீ ஹதானா லிஹாத வமா குன்ன லினஹ்ததிய லவ் லா அன்ன் ஹதானல் லாஹு லகத் ஜா'அத் ருஸுலு ரBப்Bபினா Bபில்ஹக்க்; வ னூதூ அன் தில்குமுல் ஜன்ன்னது ஊரித்துமூஹா Bபிமா குன்தும் தஃமலூன்
முஹம்மது ஜான்
தவிர (இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம்; அவர்களுக்கு அருகில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும் அவர்கள் கூறுவார்கள்: “இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் - நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்” (இதற்கு பதிலாக, “பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்று அழைக்கப்படுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வுலகில் ஒருவரைப்பற்றி மற்றவருக்கு இருந்த) குரோதத்தையும் அவர்களுடைய உள்ளங்களிலிருந்து நீக்கி விடுவோம். (ஆகவே, ஒருவருக்கொருவர் மிக நெருங்கிய தோழர்களாகி விடுவார்கள்.) அவர்(களுடைய பாதங்)களுக்கு அருகில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் ‘‘இந்த (சொர்க்கத்தை அடையக்கூடிய) நேரான வழியில் எங்களை செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகும். இவ்வழியில் அல்லாஹ் எங்களை செலுத்தியிருக்காவிட்டால் நிச்சயமாக நாங்கள் (இதை) அடைந்திருக்கவே மாட்டோம். எங்கள் இறைவனின் தூதர்கள் (சந்தேகமற) சத்திய (மார்க்க)த்தையே (எங்களுக்குக்) கொண்டு வந்(து அறிவித்)தார்கள்'' என்று கூறுவார்கள். (அதற்குப் பிரதியாக) ‘‘பூமியில் நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே இந்த சொர்க்கத்திற்கு நீங்கள் வாரிசாக ஆக்கப்பட்டுள்ளீர்கள்'' என்ற சப்தத்தை அவர்கள் கேட்பார்கள்.
IFT
மேலும், அவர்களின் நெஞ்சங்களில் (ஒருவர் மீது மற்றவருக்கு) இருந்த காழ்ப்புணர்வை நாம் போக்கி விடுவோம். அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். மேலும், அவர்கள் கூறுவார்கள்: “எங்களுக்கு இவ்வழியினைக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அல்லாஹ் எங்களை நேர்வழியில் செலுத்தியிராவிடில், நாங்கள் நேர்வழியை அடைந்திருக்கவே மாட்டோம். உண்மையில், எங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தார்கள்.” (அந்நேரம்) கூறப்படும்: “நீங்கள் வாரிசுகளாக்கப்பட்ட சுவனம் இதுதான். நீங்கள் செய்து வந்த செயல்களுக்குப் பகரமாக இது உங்களுக்குக் கிடைத்திருக்கிறது!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்த குரோதத்தை நாம் நீக்கி விடுவோம், அவர்களுக்குக் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும், இன்னும் அவர்கள், “இ(ந்தக் சுவனபதியை அடைவ)தற்குரிய நேரான வழியில் எங்களைச் செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும். அல்லாஹ் எங்களை நேர்வழியில் செலுத்தியிருக்காவிடில், நிச்சயமாக நாங்கள் நேர்வழியை அடைந்தவர்களாக ஆகி இருக்கவே மாட்டோம், எங்கள் இரட்சகனின் தூதர்கள் (சந்தேகமின்றி) சத்திய (மார்க்க)த்தையே நிச்சயமாக (எங்களுக்கு)க் கொண்டு வந்தார்கள்” என்று கூறுவார்கள், அந்த சொர்க்கம், நீங்கள் (பூமியில்) செய்து கொண்டிருந்த (நன்மையான)வற்றின் (மூலம் அல்லாஹ்வின் அருளைப்பெற்று அதன்) காரணமாகவே அதனை நீங்கள் வாரிசாக்கப்பட்டுள்ளீர்கள் என்று (சப்தமிட்டு) அழைக்கப்படுவார்கள்.
Saheeh International
And We will have removed whatever is within their breasts of resentment, [while] flowing beneath them are rivers. And they will say, "Praise to Allah, who has guided us to this; and we would never have been guided if Allah had not guided us. Certainly the messengers of our Lord had come with the truth." And they will be called, "This is Paradise, which you have been made to inherit for what you used to do."
وَنَادٰۤی اَصْحٰبُ الْجَنَّةِ اَصْحٰبَ النَّارِ اَنْ قَدْ وَجَدْنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّا فَهَلْ وَجَدْتُّمْ مَّا وَعَدَ رَبُّكُمْ حَقًّا ؕ قَالُوْا نَعَمْ ۚ فَاَذَّنَ مُؤَذِّنٌ بَیْنَهُمْ اَنْ لَّعْنَةُ اللّٰهِ عَلَی الظّٰلِمِیْنَ ۟ۙ
وَنَادٰٓىஅழைப்பார்(கள்)اَصْحٰبُ الْجَـنَّةِசொர்க்கவாசிகள்اَصْحٰبَ النَّارِநரகவாசிகளைاَنْ قَدْ وَجَدْنَاஎன்று/பெற்றுக் கொண்டோம்مَا وَعَدَنَاஎதை/வாக்களித்தான்/எங்களுக்குرَبُّنَاஎங்கள் இறைவன்حَقًّاஉண்மையில்فَهَلْ وَجَدْتُّمْபெற்றீர்களா?مَّاஎதைوَعَدَவாக்களித்தான்رَبُّكُمْஉங்கள் இறைவன்حَقًّا‌ ؕஉண்மையில்قَالُوْاகூறுவார்கள்نَـعَمْ‌ ۚஆம்!فَاَذَّنَஆகவே அறிவிப்பார்مُؤَذِّنٌۢஓர் அறிவிப்பாளர்بَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்اَنْ لَّـعْنَةُநிச்சயமாக சாபம்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَى الظّٰلِمِيْنَۙ‏அநியாயக்காரர்கள் மீது
வ னாதா அஸ்ஹாBபுல் ஜன்னதி அஸ்ஹாBபன் னாரி அன் கத் வஜத்னா மா வ'அதன்னா ரBப்Bபுனா ஹக்கன் Fபஹல் வஜத்தும் மா வ'அத ரBப்Bபுகும் ஹக்கன் காலூ ன'அம்; Fப அத்தன மு'அத்தினும் Bபய்னஹும் அல் லஃனதுல் லாஹி 'அலள் ளாலிமீன்
முஹம்மது ஜான்
சுவர்க்க வாசிகள், நரக வாசிகளை அழைத்து, “எங்களுக்கு எங்கள் இறைவன் அளித்திருந்த வாக்குறுதியை நிச்சயமாகவும், உண்மையாகவும் பெற்றுக் கொண்டோம்; உங்களுக்கு உங்கள் இறைவன் அளித்த வாக்குறுதியை நீங்கள் உண்மையில் பெற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், “ஆம் (பெற்றுக் கொண்டோம்” என்பார்கள். அப்போது அவர்களுக்கிடையே அறிவிப்பவர் ஒருவர், “அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!” என்று அறிவிப்பார்.
அப்துல் ஹமீது பாகவி
(அந்நாளில்) சொர்க்கவாசிகள் நரகவாசிகளை நோக்கி, ‘‘எங்கள் இறைவன் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிச்சயமாக நாங்கள் பெற்றுக் கொண்டோம்; நீங்களும் உங்கள் இறைவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உண்மையாகவே பெற்றுக் கொண்டீர்களா?'' என்று (சப்தமிட்டுக்) கேட்பார்கள். அதற்கவர்கள் ‘‘ஆம்! (பெற்றுக் கொண்டோம்)'' என்று கூறுவார்கள். அது சமயம் அவர்களுக்கு மத்தியில் ஒரு முனாதி (அறிவிப்பாளர்) கூறுவார்: ‘‘நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் (வரம்பு மீறிய) அநியாயக்காரர்கள் மீது உண்டாவதாக!''
IFT
பிறகு சுவனவாசிகள் நரகவாசிகளை அழைத்துக் கேட்பார்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்கு வழங்குவதாக வாக்களித்திருந்த அனைத்தும் உண்மையானவையே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்கள் இறைவன் உங்களுக்கு வழங்குவதாக வாக்களித்திருந்த அனைத்தும் உண்மையானவைதாம் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?” அதற்கவர்கள், “ஆம்” என்பார்கள். அப்போது அவர்களுக்கு மத்தியில் ஒருவர் அறிவிப்பார்: அக்கிரமக்காரர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் உண்டாவதாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (அந்நாளில்) சுவர்க்கவாசிகள் நரகவாசிகளை அழைத்து “எங்கள் இரட்சகன் எங்களுக்கு வாக்களித்திருந்ததை நாங்கள் உண்மையாக பெற்றுக் கொண்டோம், நீங்களும் உங்கள் இரட்சகன் உங்களுக்கு வாக்களித்திருந்ததை உண்மையாகவே பெற்றுக் கொண்டீர்களா?” என்று (சப்தமிட்டுக்), கேட்பார்கள், அ(தற்க)வர்கள், “ஆம் (பெற்றுக்கொண்டோம்)” என்று கூறுவார்கள், அது சமயம், அவர்களுக்கு மத்தியில் அறிவிப்பாளர் ஒருவர் நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் (வரம்பு மீறிய) அநியாயக்காரர்கள் மீது உண்டாவதாக” என அறிவிப்பார்.
Saheeh International
And the companions of Paradise will call out to the companions of the Fire, "We have already found what our Lord promised us to be true. Have you found what your Lord promised to be true?" They will say, "Yes." Then an announcer will announce among them, "The curse of Allah shall be upon the wrongdoers
الَّذِیْنَ یَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَیَبْغُوْنَهَا عِوَجًا ۚ وَهُمْ بِالْاٰخِرَةِ كٰفِرُوْنَ ۟ۘ
الَّذِيْنَஎவர்கள்يَصُدُّوْنَதடுத்தனர்عَنْ سَبِيْلِபாதையை விட்டுاللّٰهِஅல்லாஹ்வின்وَيَـبْـغُوْنَهَاஇன்னும் அதில்தேடுகிறார்கள்عِوَجًا‌ ۚகோணலைوَهُمْஅவர்கள்بِالْاٰخِرَةِமறுமையைكٰفِرُوْنَ‌ۘ‏நிராகரிப்பவர்கள்
அல்லதீன யஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹி வ யBப்கூ னஹா 'இவஜ(ன்)வ் வ ஹும் Bபில் ஆகிரதி காFபிரூன்
முஹம்மது ஜான்
(ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் (நேர்)வழியைவிட்டு (மனிதர்களைத்) தடுத்து, அதைக் கோணலாக்கவும் விரும்பினர்; மேலும் அவர்கள் மறுமையையும் (நம்பாது) மறுத்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
(ஏனென்றால்,) அவர்கள் அல்லாஹ்வின் பாதையைத் தடுத்து அதைக் கோணலாக்க விரும்பினார்கள். அவர்கள் மறுமையையும் நிராகரித்துக் கொண்டிருந்தார்கள்.’
IFT
அவர்கள் (எத்தகையவர்களெனில்) அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களைத் தடுத்தார்கள்; மேலும் அதனைக் கோணலாக்க விரும்பினார்கள்; மேலும் மறுமையை மறுத்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அத்தகையோர்-அவர்கள் அல்லாஹ்வின் பாதையைவிட்டு (மனிதர்களைத்) தடுத்துக்கொண்டும், இன்னும் (அவ்வழிக்கு யாரும் செல்லாதிருக்க) அதனைக் கோணலாக்கவும் தேடினார்கள், அன்றியும் அவர்கள் மறுமையை நிராகரிப்பவர்கள்.
Saheeh International
Who averted [people] from the way of Allah and sought to make it [seem] deviant while they were, concerning the Hereafter, disbelievers."
وَبَیْنَهُمَا حِجَابٌ ۚ وَعَلَی الْاَعْرَافِ رِجَالٌ یَّعْرِفُوْنَ كُلًّا بِسِیْمٰىهُمْ ۚ وَنَادَوْا اَصْحٰبَ الْجَنَّةِ اَنْ سَلٰمٌ عَلَیْكُمْ ۫ لَمْ یَدْخُلُوْهَا وَهُمْ یَطْمَعُوْنَ ۟
وَبَيْنَهُمَاஅவ்விருவருக்குமிடையில்حِجَابٌ‌ۚஒரு மதில்وَعَلَىமீதுالْاَعْرَافِசிகரங்கள்رِجَالٌ(சில) மனிதர்கள்يَّعْرِفُوْنَஅறிவார்கள்كُلًّاۢஒவ்வொருவரையும்بِسِيْمٰٮهُمْ‌ ۚஅவர்களின் முக அடையாளத்தைக் கொண்டுوَنَادَوْاஇன்னும் அழைப்பார்கள்اَصْحٰبَ الْجَـنَّةِசொர்க்கவாசிகளைاَنْஎன்றுسَلٰمٌஈடேற்றம்عَلَيْكُمْ‌உங்கள் மீதுلَمْஇல்லைيَدْخُلُوْهَاஅதில் அவர்கள் நுழையوَهُمْ يَطْمَعُوْنَ‏அவர்கள் ஆசைப்படுவார்கள்
வ Bபய்னஹுமா ஹிஜாBப்; வ 'அலல் அஃராFபி ரிஜாலு(ன்)ய் யஃரிFபூன குல்லம் Bபிஸீமாஹும்; வ னாதவ் அஸ்ஹாBபல் ஜன்னதி அன் ஸலாமுன் 'அலய்கும்; லம் யத்குலூஹா வ ஹும் யத்ம'ஊன்
முஹம்மது ஜான்
(நரகவாசிகள், சுவர்க்க வாசிகள் ஆகிய) இவர்களுக்கிடையே ஒரு திரை(யான மதில்) இருக்கும்; அதன் சிகரங்களில் அநேக மனிதர்கள் இருப்பார்கள்; (நரக வாசிகள், சுவர்க்க வாசிகள்) ஒவ்வொருவரையும் அவர்களுடைய அடையாளங்களைக் கொண்டு அறிந்து கொள்வார்கள்; அவர்கள் சுவர்க்க வாசிகளை அழைத்து “ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகுக!)” என்று கூறுவார்கள்; அவர்கள் இன்னும் சுவர்க்கத்தில் நுழையவில்லை - அவர்கள் (அதில் நுழைய) ஆவலுடன் இருக்கின்றார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நரகவாசிகளும் சொர்க்கவாசிகளும் ஆகிய) இவ்விருவருக்குமிடையில் ஒரு மதில் இருக்கும். அந்த மதிலின் சிகரத்தில் சில மனிதர்கள் இருப்பார்கள். (நரகவாசி சொர்க்கவாசியாகிய) ஒவ்வொருவரையும் அவர்களின் (முகக்) குறியைக் கொண்டே இவர்கள் அறிந்து கொள்வார்கள். இவர்கள் சொர்க்கவாசிகளை நோக்கி ‘‘(இறைவனுடைய) சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக!'' என்று சப்தமிட்டுக் கூறுவார்கள். (சிகரத்தில் இருக்கும்) இவர்கள் (இதுவரையிலும்) சொர்க்கத்தில் நுழையவில்லை. எனினும், அவர்கள் (அதில் நுழைவதை) மிக ஆவலுடன் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
IFT
மேலும், அவ்விரு பிரிவினருக்கும் இடையே ஓர் உறுதியான தடுப்பு இருக்கும். அதன் உச்சிகளில் மனிதர்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் (இப்பிரிவினர்) ஒவ்வொருவரையும் அவரவரின் முகக்கூறுகள் மூலம் அறிந்து கொள்வார்கள். மேலும், அவர்கள் சுவனவாசிகளை அழைத்துக் கூறுவார்கள்: “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்!” இவர்கள் இன்னும் சுவனம் புகவில்லை; ஆயினும் (அதனை அடைவதற்கு) ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நரக வாசிகளும் சுவன வாசிகளும் ஆகிய) அவ்விருவருக்குமிடையில் ஒரு திரை (தடுப்புச் சுவர்) இருக்கும், (அதன்) சிகரங்களில் சில மனிதர்கள் இருப்பார்கள், (நரகவாசி, சுவர்க்கவாசியாகிய) ஒவ்வொருவரையும் அவர்களின் அடையாளத்தைக் கொண்டே அவர்கள் அறிந்து கொள்வார்கள், மேலும், அவர்கள் சுவர்க்கவாசிகளை அழைத்து “அல்லாஹ்வின் சாந்தி உங்கள் மீது உண்டாவதாக” என்று சப்தமிட்டுக் கூறுவார்கள், (சிகரங்களில் இருக்கும்) இவர்கள் (இதுவரையிலும்) அதில் (சுவனத்தில்) நுழையவில்லை, அவர்களோ (அதில் நுழைவதை மிக்க ஆசித்து) ஆவல் கொண்டிருப்பார்கள்.
Saheeh International
And between them will be a partition [i.e., wall], and on [its] elevations are men who recognize all by their mark. And they call out to the companions of Paradise, "Peace be upon you." They have not [yet] entered it, but they long intensely.
وَاِذَا صُرِفَتْ اَبْصَارُهُمْ تِلْقَآءَ اَصْحٰبِ النَّارِ ۙ قَالُوْا رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟۠
وَاِذَا صُرِفَتْதிருப்பப்பட்டால்اَبْصَارُபார்வைகள்هُمْஇவர்களின்تِلْقَآءَபக்கம்اَصْحٰبِவாசிகளின்النَّارِۙநரக(ம்)قَالُوْاகூறுவார்கள்رَبَّنَاஎங்கள் இறைவாلَا تَجْعَلْنَاஎங்களை ஆக்கிவிடாதேمَعَ الْقَوْمِமக்களுடன்الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்கள்
வ இதா ஸுரிFபத் அBப்ஸாருஹும் தில்கா'அ அஸ்ஹாBபின் னாரி காலூ ரBப்Bபனா லா தஜ்'அல்னா ம'அல் கவ்மிள் ளாலிமீன்
முஹம்மது ஜான்
அவர்களுடைய பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால், அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே ஆக்கி விடாதே” என்று கூறுவார்கள்.  
அப்துல் ஹமீது பாகவி
இவர்களின் பார்வை நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால் (அவர்கள் படும் வேதனையைக் கண்டு திடுக்கிட்டு) ‘‘எங்கள் இறைவனே! (இந்த) அநியாயக்கார மக்களுடன் (நரகத்தில்) எங்களையும் சேர்த்துவிடாதே!'' என்று (பிரார்த்தித்துக்) கூறுவார்கள்.
IFT
மேலும், இவர்களின் பார்வைகள் நரக வாசிகளின் பக்கம் திரும்பும்போது கூறுவார்கள்: “எங்கள் இறைவனே! இவ்வக்கிரமக்காரர்களோடு எங்களைச் சேர்த்துவிடாதே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், இவர்களின், பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால், (அவர்கள் படும் வேதனையைக் கண்டு திடுக்கிட்டு) எங்கள் இரட்சகனே! அந்த அநியாயக்கார சமூகத்தாருடன் (நரகத்தில்) எங்களையும் நீ ஆக்கிவிடாதிருப்பாயாக” என்று (பிரார்த்தித்துக்) கூறுவார்கள்.
Saheeh International
And when their eyes are turned toward the companions of the Fire, they say, "Our Lord, do not place us with the wrongdoing people."
وَنَادٰۤی اَصْحٰبُ الْاَعْرَافِ رِجَالًا یَّعْرِفُوْنَهُمْ بِسِیْمٰىهُمْ قَالُوْا مَاۤ اَغْنٰی عَنْكُمْ جَمْعُكُمْ وَمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ ۟
وَنَادٰٓىஅழைப்பார்(கள்)اَصْحٰبُ الْاَعْرَافِசிகரவாசிகள்رِجَالًاசில மனிதர்களைيَّعْرِفُوْنَهُمْஅறிவார்கள் அவர்களைبِسِيْمٰٮهُمْமுகஅடையாளத்தைக் கொண்டு/அவர்களின்قَالُوْاகூறுவார்கள்مَاۤ اَغْنٰىபலனளிக்கவில்லைعَنْكُمْஉங்களுக்குجَمْعُكُمْஉங்கள் சேமிப்புوَمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ‏நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததும்
வ னாதா அஸ்ஹாBபுல் அஃராFபி ரிஜால(ன்)ய் யஃரிFபூனஹும் Bபிஸீமாஹும் காலூ மா அக்னா 'அன்கும் ஜம்'உகும் வமா குன்தும் தஸ்தக்Bபிரூன்
முஹம்மது ஜான்
சிகரங்களிலிருப்பவர்கள், சில மனிதர்களை - அவர்கள் அடையாளங்களால் அறிந்து கொண்டு - அவர்களைக் கூப்பிட்டுக் கூறுவார்கள்: “நீங்கள் உலகத்தில் சேமித்து வைத்திருந்தவையும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தவையும், உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!”
அப்துல் ஹமீது பாகவி
அந்த சிகரங்களில் உள்ளவர்கள், முக அடையாளத்தைக் கொண்டு (தண்டனைக் குள்ளானவர்கள் என) தாங்கள் அறிந்த சில மனிதர்களை கூவி அழைத்து, ‘‘நீங்கள் (உலகத்தில்) சம்பாதித்துச் சேகரித்து வைத்திருந்தவையும், நீங்கள் எவற்றைக் கொண்டு பெருமையடித்துக் கொண்டிருந்தீர்களோ அவையும் உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!'' என்று கூறுவார்கள்.
IFT
பிறகு, உச்சிகளில் இருக்கும் இவர்கள் (நரகில் வீழ்ந்து கிடக்கும்) பெரும் பெரும் மனிதர்கள் சிலரை அவர்களுடைய முகக்கூறுகள் மூலம் அறிந்து அவர்களை அழைத்துக் கூறுவார்கள்: “(பார்த்தீர்களா!) உங்களுடைய கூட்டத்தினரும் நீங்கள் பெரிதாகக் கருதி வந்த சாதனங்களும் (இன்று) உங்களுக்கு எப்பலனையும் அளிக்கவில்லை.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சிகரங்களில் இருப்பவர்கள், சில மனிதர்களை-அவர்களின் அடையாளத்தைக்கொண்டு அவர்களை அறிந்துகொண்டு அழைத்து “உங்களின் கூட்டமும், இன்னும் நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தீர்களே, அதுவும், உங்களை விட்டும் எதையும் தேவையற்று வைக்க (பலனளிக்க)வில்லையே” எனக் கூறுவார்கள்.
Saheeh International
And the companions of the Elevations will call to men [within Hell] whom they recognize by their mark, saying, "Of no avail to you was your gathering and [the fact] that you were arrogant."
اَهٰۤؤُلَآءِ الَّذِیْنَ اَقْسَمْتُمْ لَا یَنَالُهُمُ اللّٰهُ بِرَحْمَةٍ ؕ اُدْخُلُوا الْجَنَّةَ لَا خَوْفٌ عَلَیْكُمْ وَلَاۤ اَنْتُمْ تَحْزَنُوْنَ ۟
اَهٰٓؤُلَۤاءِஇவர்கள்தானா?الَّذِيْنَஎவர்கள்اَقْسَمْتُمْசத்தியம் செய்தீர்கள்لَاமாட்டான்يَنَالُهُمُஅவர்களை அடையاللّٰهُஅல்லாஹ்بِرَحْمَةٍ ؕகருணையைக் கொண்டுاُدْخُلُواநுழையுங்கள்الْجَـنَّةَசொர்க்கத்தில்لَا خَوْفٌபயமில்லைعَلَيْكُمْஉங்கள் மீதுوَلَاۤ اَنْتُمْ تَحْزَنُوْنَ‏நீங்கள் துக்கப்பட மாட்டீர்கள்
அ ஹா'உலா'இல் லதீன அக்ஸம்தும் லா யனாலுஹுமுல் லாஹு Bபி ரஹ்மஹ்; உத்குலுல் ஜன்னத லா கவ்Fபுன் 'அலய்கும் வ லா அன்தும் தஹ்Zஜனூன்
முஹம்மது ஜான்
“அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக்கொண்டிருந்தீர்களே அவர்கள் இவர்கள் தானே? (என்று சுவனவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,) நீங்கள் சுவனபதியில் நுழையுங்கள்; உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்” என்றும் கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அல்லாஹ் நிராகரித்தவர்களை அழைத்து சிகரவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,) ‘‘அல்லாஹ் அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக் கொண்டிருந்தீர்களே அவர்கள் (இதோ சிகரத்தில் இருக்கும்) இவர்கள் அல்லவா?'' (என்று கூறுவான்). (பிறகு, சிகரவாசிகளை நோக்கி) ‘‘நீங்கள் சொர்க்கம் சென்றுவிடுங்கள். உங்களுக்கு எவ்வித பயமுமில்லை. நீங்கள் கவலைப்படவும் மாட்டீர்கள்'' (என்று அல்லாஹ் கூறுவான்).
IFT
மேலும், அல்லாஹ் இவர்களுக்கு எந்த அருளையும் வழங்கிடமாட்டான் என்று யாரைப் பற்றி நீங்கள் சத்தியம் செய்து கூறினீர்களோ, அவர்கள்தானே இந்த சொர்க்கவாசிகள்! (இன்று அவர்களை நோக்கியே கூறப்படும்:) “நுழைந்து விடுங்கள் சொர்க்கத்தில்! உங்களுக்கு யாதொரு அச்சமுமில்லை; நீங்கள் துயரப்படவும் மாட்டீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(முஸ்லிம்களான) அவர்களுக்கு அல்லாஹ் அருளைக் கிடைக்கச் செய்யமாட்டான் என்று (காஃபிர்களாகிய) நீங்கள் சத்தியம் செய்தீர்களே அவர்கள், இவர்கள் அல்லவா? (என்றும் கூறுவார்கள், பிறகு சிகர வாசிகளை நோக்கி) “நீங்கள் சுவனபதி சென்று விடுங்கள், உங்களுக்கு எவ்வித பயமுமில்லை, நீங்கள் கவலையும் அடையமாட்டீர்கள்” என்று அல்லாஹ் கூறுவான்.
Saheeh International
[Allah will say], "Are these the ones whom you [inhabitants of Hell] swore that Allah would never offer them mercy? Enter Paradise, [O people of the Elevations]. No fear will there be concerning you, nor will you grieve."
وَنَادٰۤی اَصْحٰبُ النَّارِ اَصْحٰبَ الْجَنَّةِ اَنْ اَفِیْضُوْا عَلَیْنَا مِنَ الْمَآءِ اَوْ مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ ؕ قَالُوْۤا اِنَّ اللّٰهَ حَرَّمَهُمَا عَلَی الْكٰفِرِیْنَ ۟ۙ
وَنَادٰٓىஅழைப்பார்اَصْحٰبُ النَّارِநரகவாசிகள்اَصْحٰبَ الْجَـنَّةِசொர்க்கவாசிகளைاَنْ اَفِيْضُوْاஊற்றுங்கள் என்றுعَلَيْنَاஎங்கள் மீதுمِنَ الْمَآءِநீரிலிருந்துاَوْஅல்லதுمِمَّاஎதிலிருந்துرَزَقَكُمُஉணவளித்தான்/உங்களுக்குاللّٰهُ ؕஅல்லாஹ்قَالُـوْۤاகூறுவார்கள்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்حَرَّمَهُمَاதடைசெய்தான்/அவ்விரண்டையும்عَلَى الْـكٰفِرِيْنَநிராகரிப்பவர்கள் மீது
வ னாதா அஸ்ஹாBபுன் னாரி அஸ்ஹாBபல் ஜன்னதி அன் அFபீளூ 'அலய்னா மினல் மா'இ அவ் மிம்ம ரZஜககுமுல் லாஹ்; காலூ இன்னல் லாஹ ஹர்ரம ஹுமா 'அலல் காFபிரீன்
முஹம்மது ஜான்
நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து, “தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்” எனக் கேட்பார்கள்; அதற்கு அவர்கள்: “நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் மீது தடுத்து (ஹராம் ஆக்கி) விட்டான்” என்று கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நரகவாசிகள் சொர்க்கவாசிகளை நோக்கி ‘‘எங்கள் மீது சிறிது நீரைக் கொட்டுங்கள். அல்லது இறைவன் உங்களுக்கு (புசிக்க) அளித்திருப்பவற்றில் (ஒரு சிறிதேனும்) எங்களுக்குத் தாருங்கள்'' என்று (கெஞ்சிக்) கேட்பார்கள். அதற்கு அவர்கள், ‘‘நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு இவ்விரண்டையும் (விலக்கி) தடைசெய்து விட்டான்'' என்று பதிலளிப்பார்கள்.
IFT
மேலும், நரகவாசிகள் சுவனவாசிகளை அழைத்துக் கேட்பார்கள்: “எங்கள் மீது சிறிது தண்ணீரை ஊற்றுங்கள்; அல்லது அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து சிறிதளவு கொடுங்கள்.” அதற்கு அவர்கள் பதில் அளிப்பார்கள்: “திண்ணமாக, அல்லாஹ் இவ்விரண்டையும் சத்தியத்தை மறுத்தவர்களுக்குத் தடைசெய்து விட்டான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், நரகவாசிகள் சுவன வாசிகளை அழைத்து “தண்ணீரில் (சிறிதளவு) எங்கள்மீது கொட்டுங்கள், அல்லது அல்லாஹ் உங்களுக்கு உணவாக அளித்ததிலிருந்து (சிறிதளவேனும் எங்களுக்குத் தாருங்கள்”) என்று (வருந்திக்) கேட்பார்கள், அ(தற்க)வர்கள், நிச்சயமாக அல்லாஹ் (உங்களைப் போன்ற) நிராகரிப்போரின் மீது இவ்விரண்டையும் தடுத்து விட்டான்” என்று (பதில்) கூறுவார்கள்.
Saheeh International
And the companions of the Fire will call to the companions of Paradise, "Pour upon us some water or from whatever Allah has provided you." They will say, "Indeed, Allah has forbidden them both to the disbelievers
الَّذِیْنَ اتَّخَذُوْا دِیْنَهُمْ لَهْوًا وَّلَعِبًا وَّغَرَّتْهُمُ الْحَیٰوةُ الدُّنْیَا ۚ فَالْیَوْمَ نَنْسٰىهُمْ كَمَا نَسُوْا لِقَآءَ یَوْمِهِمْ هٰذَا ۙ وَمَا كَانُوْا بِاٰیٰتِنَا یَجْحَدُوْنَ ۟
الَّذِيْنَஎவர்கள்اتَّخَذُوْاஎடுத்துக் கொண்டனர்دِيْنَهُمْதங்கள் மார்க்கத்தைلَهْوًاகேளிக்கையாகوَّلَعِبًاஇன்னும் விளையாட்டாகوَّغَرَّتْهُمُஇன்னும் மயக்கியது/அவர்களைالْحَيٰوةُவாழ்க்கைالدُّنْيَا‌ ۚஉலகம்فَالْيَوْمَஇன்றுنَنْسٰٮهُمْமறப்போம்/அவர்களைكَمَا نَسُوْاஅவர்கள் மறந்ததினால்لِقَآءَசந்திப்பைيَوْمِهِمْ هٰذَا ۙஅவர்களுடைய இந்நாளின்وَمَا كَانُوْاஇன்னும் அவர்கள் இருந்த காரணத்தால்بِاٰيٰتِنَاநம் வசனங்களைيَجْحَدُوْنَ‏மறுப்பார்கள்
அல்லதீனத் தகதூ தீனஹும் லஹ்வ(ன்)வ் வ ல'இ-Bப(ன்)வ் வ கர்ரத் ஹுமுல் ஹயாதுத் துன்யா; Fபல் யவ்ம னன்ன்ஸாஹும் கமா னஸூ லிகா'அ யவ்மிஹிம் ஹாதா வமா கானூ Bபி ஆயாதினா யஜ்ஹதூன்
முஹம்மது ஜான்
(ஏனென்றால்) அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள்; இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது; எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கிவிட்டதனால் தங்கள் மார்க்கத்தை வேடிக்கை யாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்நாளில் (நம்மைச்) சந்திப்பதையும் மறந்தவாறே நாமும் இன்றைய தினம் அவர்களை மறந்துவிடுவோம்.
IFT
அவர்கள் எத்தகையோர் என்றால் தமது தீனை (நெறியை) வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டார்கள். மேலும் உலக வாழ்க்கை அவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியிருந்தது! (அல்லாஹ் கூறுவான்:) “எனவே, அவர்கள் இந்நாளைச் சந்திப்பது குறித்து எவ்வாறு மறந்திருந்தார்களோ, மேலும் நம் வசனங்களை எவ்வாறு மறுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவ்வாறே நாமும் இன்று அவர்களை மறந்துவிடுவோம்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால் அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள், இவ்வுலக வாழ்க்கை அவர்களை ஏமாற்றியும் விட்டது, எனவே, அவர்களுடைய இந்நாளின் சந்திப்பை அவர்கள் மறந்து, நம்முடைய வசனங்களையும் அவர்கள் மறுத்துக் கொண்டிருந்ததைப் போன்று, நாமும் இன்றைய தினம் அவர்களை மறந்து விடுவோம் (என்று அல்லாஹ் கூறிவிடுவான்.)
Saheeh International
Who took their religion as distraction and amusement and whom the worldly life deluded." So today We will forget them just as they forgot the meeting of this Day of theirs and for having rejected Our verses.
وَلَقَدْ جِئْنٰهُمْ بِكِتٰبٍ فَصَّلْنٰهُ عَلٰی عِلْمٍ هُدًی وَّرَحْمَةً لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
وَلَقَدْ جِئْنٰهُمْதிட்டவட்டமாக/வந்தோம்/அவர்களிடம்بِكِتٰبٍஒரு வேதத்தைக் கொண்டுفَصَّلْنٰهُவிவரித்தோம்/அதைعَلٰى عِلْمٍஅறிந்துهُدًىநேர்வழியாகوَّرَحْمَةًஇன்னும் கருணையாகلِّـقَوْمٍமக்களுக்குيُّؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்கிறார்கள்
வ லகத் ஜி'னாஹும் Bபி கிதாBபின் Fபஸ்ஸல்னாஹு 'அலா 'இல்மின் ஹுத(ன்)வ் வ ரஹ்மதல் லிகவ்மி(ன்)ய்-யு'மினூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தை கொடுத்தோம். அதை நாம் பூரண ஞானத்தைக் கொண்டு விளக்கியுள்ளோம்; அது நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்திருந்தோம். அதில் ஒவ்வொன்றையும் அறிவோடு விவரித்திருக்கிறோம். (அது) நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேரான வழியாகவும் அருளாகவும் இருக்கிறது.
IFT
திண்ணமாக, நாம் ஒரு வேதத்தை அவர்களுக்குக் கொண்டு வந்துள்ளோம். அது எத்தகையதென்றால், அறிவின் அடிப்படையில் நாம் அதில் (அனைத்தையும்) விவரித்திருக்கின்றோம். (மேலும் அது) இறைநம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடியதாகவும் ஓர் அருட்கொடையாகவும் திகழ்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
திட்டமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தைக் கொண்டு வந்தோம், அதில், ஒவ்வொன்றையும் நம் அறிவின்படி (அதன் அடிப்படையில்) விவரித்திருக்கின்றோம், (அன்றி, அது விசுவாசங் கொண்ட சமூகத்தார்க்கு நேரான வழியாகவும் அருளாகவும் இருக்கின்றது.
Saheeh International
And We had certainly brought them a Book which We detailed by knowledge - as guidance and mercy to a people who believe.
هَلْ یَنْظُرُوْنَ اِلَّا تَاْوِیْلَهٗ ؕ یَوْمَ یَاْتِیْ تَاْوِیْلُهٗ یَقُوْلُ الَّذِیْنَ نَسُوْهُ مِنْ قَبْلُ قَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ ۚ فَهَلْ لَّنَا مِنْ شُفَعَآءَ فَیَشْفَعُوْا لَنَاۤ اَوْ نُرَدُّ فَنَعْمَلَ غَیْرَ الَّذِیْ كُنَّا نَعْمَلُ ؕ قَدْ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟۠
هَلْ يَنْظُرُوْنَஎதிர்பார்க்கின்றனரா?اِلَّاதவிரتَاْوِيْلَهٗ‌ؕஅதன் முடிவைيَوْمَநாள்يَاْتِىْவரும்تَاْوِيْلُهٗஅதன் முடிவுيَقُوْلُகூறுவார்(கள்)الَّذِيْنَஎவர்கள்نَسُوْهُமறந்தனர்/அதைمِنْ قَبْلُமுன்னர்قَدْ جَآءَتْவந்தா(ர்க)ள்رُسُلُதூதர்கள்رَبِّنَاஎங்கள் இறைவனின்بِالْحَـقِّ‌ۚஉண்மையைக் கொண்டுفَهَلْ لَّـنَاஎங்களுக்கு உண்டா?مِنْ شُفَعَآءَசிபாரிசு செய்பவர்களில்فَيَشْفَعُوْاசிபாரிசு செய்வார்கள்لَـنَاۤஎங்களுக்குاَوْஅல்லதுنُرَدُّநாங்கள் திருப்பி அனுப்பப்பட்டால்فَنَعْمَلَசெய்வோமேغَيْرَ الَّذِىْஅல்லாததைكُنَّاஇருந்தோம்نَـعْمَلُ‌ؕசெய்வோம்قَدْ خَسِرُوْۤاநஷ்டமிழைத்துக் கொண்டனர்اَنْفُسَهُمْதங்களுக்கேوَضَلَّஇன்னும் மறைந்துவிட்டனعَنْهُمْஅவர்களை விட்டுمَّاஎவைكَانُوْاஇருந்தனர்يَفْتَرُوْنَ‏இட்டுக்கட்டுவார்கள்
ஹல் யன்ளுரூன இல்லா த'வீலஹ்; யவ்ம ய'தீ த'வீலுஹூ யகூலுல் லதீன னஸூஹு மின் கBப்லு கத் ஜா'அத் ருஸுலு ரBப்Bபினா Bபில்ஹக்க்; Fபஹல் லனா மின் ஷுFப'ஆ'அ Fப யஷ்Fப'ஊ லனா அவ் னுரத்து Fபனஃமல கய்ரல் லதீ குன்னா னஃமல்; கத் கஸிரூ அன்Fபுஸஹும் வ ளல்ல 'அன்ஹும் மா கானூ யFப்தரூன்
முஹம்மது ஜான்
இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வந்த) இறுதியையன்றி வேறு எதையும் எதிர்பார்க்கிறார்களா? அந்தத் தண்டனை நாள் வந்தபொழுது, இதற்குமுன் அதனை முற்றிலும் மறந்திருந்த இவர்கள், “நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் சத்திய(வேத)த்தையே கொண்டு வந்தனர், எங்களுக்குப் பரிந்து பேசக்கூடியவர்கள் எவரும் இருக்கின்றனரா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்காகப் பரிந்து பேசட்டும்; அல்லது நாங்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்படுவோமா? அப்படியாயின், நாங்கள் முன்செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டு வேறு (நன்மைகளையே) செய்வோம்” என்று கூறுவார்கள் - நிச்சயமாக அவர்கள் தமக்குத் தாமே இழப்புக்கு ஆளாக்கிக் கொண்டார்கள், அவர்கள் கற்பனை செய்து வந்தவை அவர்களை விட்டு மறைந்து விடும்.  
அப்துல் ஹமீது பாகவி
(மக்காவாசிகளாகிய) இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) தண்டனை (நாள்) வருவதைத் தவிர (வேறு எதையும்) எதிர்பார்க்கின்றனரா? அந்தத் தண்டனை நாள் வந்தபொழுது இதற்கு முன் அதை (முற்றிலும்) மறந்திருந்த இவர்கள், ‘‘நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் (எங்களிடம்) சத்திய (வேத)த்தைக் கொண்டு வந்தனர். (இன்று) எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் எவரும் உண்டா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்குப் பரிந்து பேசவும் அல்லது எங்களை (உலகத்திற்கு)த் திரும்ப அனுப்பப்பட்டால் (முன்னர்) நாங்கள் செய்து கொண்டிருந்தவற்றைத் தவிர்த்து வேறு (நன்மைகளையே) செய்வோம்'' என்று கூறுவார்கள். நிச்சயமாக இவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். மேலும், இவர்கள் (தங்கள் தெய்வங்களென) பொய்யாகக் கூறிக் கொண்டிருந்தவை அனைத்தும் இவர்களை விட்டு மறைந்து (மாயமாகி) விடும்.
IFT
இப்பொழுது சிலர் இவ்வேதம் எச்சரிக்கின்ற இறுதி முடிவைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்கின்றார்களா? அந்த இறுதி முடிவு வந்துவிடும் நாளில், முன்பு அதனை அலட்சியம் செய்தவர்கள் இவ்வாறு கூறுவார்கள்: “உண்மையில் எங்கள் இறைவனுடைய தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தார்கள்! (இப்பொழுது) எங்களுக்காகப் பரிந்து பேசுவதற்கு பரிந்துரையாளர் எவரும் எங்களுக்குக் கிடைப்பார்களா? அல்லது நாங்கள் முன்பு செய்து கொண்டிருந்ததைப் போல் அல்லாமல் வேறு செயல்களைச் செய்திட நாங்கள் திரும்ப அனுப்பப்படுவோமா?” அவர்கள் தமக்குத் தாமே இழப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். மேலும், அவர்கள் புனைந்து கூறிக்கொண்டிருந்தவை எல்லாம் இன்று அவர்களை விட்டுக் காணாமல் போய்விட்டன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மக்கா வாசிகள், தங்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) அதன் முடிவு (வெளிப்படுவதைத்) தவிர (வேறெதனையும்) இவர்கள் எதிர்பார்க்கின்றனரா? அதன் முடிவு (வெளிப்பட்டு)வரும் நாளில் இதற்கு முன் அதனை (முற்றிலும்) மறந்திருந்தோம், “நிச்சயமாக எங்கள் இரட்சகனின் தூதர்கள் (எங்களிடம்) சத்திய (வேத)த்தைக் கொண்டு வந்தனர், (இன்று) எங்களுக்குப் பரிந்துரையாளர்கள் எவரும் உண்டா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்குப் பரிந்துரைக்கட்டும், அல்லது நாங்கள் (உலகத்திற்குத்) திருப்பப்படுவோமா? (அவ்வாறாயின் முன்னர்) நாங்கள் செய்து கொண்டிருந்தவற்றல்லாததைச் செய்வோம்” என்று கூறுவார்கள், திட்டமாக இவர்கள் தமக்குத் தாமே இழப்பை உண்டாக்கிக் கொண்டனர், அன்றியும் இவர்கள் (பொய்யாகக்) கற்பனை செய்து கொண்டிருந்ததையும் (அது சமயம்) இவர்களைவிட்டு மறைந்தும் விடும்.
Saheeh International
Do they await except its result? The Day its result comes, those who had ignored it before will say, "The messengers of our Lord had come with the truth, so are there [now] any intercessors to intercede for us or could we be sent back to do other than what we used to do?" They will have lost themselves, and lost from them is what they used to invent.
اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِیْ سِتَّةِ اَیَّامٍ ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ ۫ یُغْشِی الَّیْلَ النَّهَارَ یَطْلُبُهٗ حَثِیْثًا ۙ وَّالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُوْمَ مُسَخَّرٰتٍۭ بِاَمْرِهٖ ؕ اَلَا لَهُ الْخَلْقُ وَالْاَمْرُ ؕ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِیْنَ ۟
اِنَّநிச்சயமாகرَبَّكُمُஉங்கள் இறைவன்اللّٰهُஅல்லாஹ்الَّذِىْ خَلَقَஎவன் படைத்தான்السَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضَஇன்னும் பூமியைفِىْ سِتَّةِ اَيَّامٍஆறு நாட்களில்ثُمَّபிறகுاسْتَوٰىஉயர்ந்து விட்டான்عَلَى الْعَرْشِஅர்ஷின் மீதுيُغْشِىமூடுகிறான்الَّيْلَஇரவால்النَّهَارَபகலைيَطْلُبُهٗதேடுகிறது/அதைحَثِيْثًا ۙதீவிரமாகوَّالشَّمْسَஇன்னும் சூரியனைوَالْقَمَرَஇன்னும் சந்திரனைوَالنُّجُوْمَஇன்னும் நட்சத்திரங்களைمُسَخَّرٰتٍۢவசப்படுத்தப்பட்டவையாகبِاَمْرِهٖ ؕதனது கட்டளைக் கொண்டுاَلَاஅறிந்துகொள்ளுங்கள்!لَـهُஅவனுக்கேالْخَـلْقُபடைத்தல்وَالْاَمْرُ‌ ؕஇன்னும் அதிகாரம்تَبٰرَكَஅருள் வளமிக்கவன்اللّٰهُஅல்லாஹ்رَبُّஇறைவன்الْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
இன்ன ரBப்Bபகுமுல் லாஹுல் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள Fபீ ஸித்ததி அய்யாமின் தும்மஸ் தவா 'அலல் 'அர்ஷி யுக்ஷில் லய்லன் னஹார யத்லு Bபுஹூ ஹதீத(ன்)வ் வஷ்ஷம்ஸ வல்கமர வன்னுஜூம முஸகராதிம் Bபி அம்ரிஹ்; அலா லஹுல் கல்கு வல்-அம்ர்; தBபாரகல் லாஹு ரBப்Bபுல் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து, அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். அவனே இரவால் பகலை மூடுகிறான்; (பகலால் இரவை மூடுகிறான்.) அது வெகு தீவிரமாகவே அதைப் பின் தொடர்கிறது. (அவனே) சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் (படைத்தான். இவை அனைத்தும்) அவனது கட்டளைக்கு கட்டுப்பட்டவையாக படைத்தான். (படைத்தலும்) படைப்பினங்களும் (அவற்றின்) ஆட்சியும் அவனுக்கு உரியதல்லவா? அனைத்து உலகங்களையும் படைத்து, வளர்த்து, பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் மிக்க பாக்கியமுடையவன்.
IFT
திண்ணமாக, அல்லாஹ்தான் உங்களுடைய அதிபதி; அவன் எத்தகையவனெனில், வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர், தன்னுடைய ஆட்சிபீடத்தில் அமர்ந்தான். அவன் இரவைக் கொண்டு பகலை மூடுகின்றான். மேலும், இரவுக்குப் பின்னால் பகல் விரைந்து வருகின்றது. அவனே சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றையும் படைத்தான். அவையனைத்தும் அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டிருக்கின்றன! அறிந்து கொள்ளுங்கள்: படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவையே! அனைத்துலகங்களுக்கும் அதிபதியாகிய அல்லாஹ் அருள்வளமிக்கவனாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக உங்கள் இரட்சகன் அல்லாஹ்தான், அவன் எத்தகையவனென்றால், வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான், பின்னர் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும், மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீது இருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அவன் அர்ஷின் மீது உயர்ந்து (நிலைபெற்று) விட்டான், அவனே இரவால் பகலை மூடுகிறான், அது தீவிரமாக அதனைப் பின்தொடர்கிறது, இன்னும் சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு வயப்படுத்தப்பட்டதாகப் (படைத்திருக்கிறான்) படைத்தலும் கட்டளையும் அவனுக்கே உரியதெனத் தெரிந்து கொள்ளுங்கள், அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் மகத்துவமுடையவனாகி விட்டான்.
Saheeh International
Indeed, your Lord is Allah, who created the heavens and earth in six days and then established Himself above the Throne. He covers the night with the day, [another night] chasing it rapidly; and [He created] the sun, the moon, and the stars, subjected by His command. Unquestionably, His is the creation and the command; blessed is Allah, Lord of the worlds.
اُدْعُوْا رَبَّكُمْ تَضَرُّعًا وَّخُفْیَةً ؕ اِنَّهٗ لَا یُحِبُّ الْمُعْتَدِیْنَ ۟ۚ
اُدْعُوْاஅழையுங்கள்رَبَّكُمْஉங்கள் இறைவனைتَضَرُّعًاதாழ்மையாகوَّخُفْيَةً‌ ؕஇன்னும் மறைவாகاِنَّهٗநிச்சயமாக அவன்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்الْمُعْتَدِيْنَ‌ ۚ‏வரம்பு மீறுபவர்களை
உத்'ஊ ரBப்Bபகும் தளர்ரு'அ(ன்)வ் வ குFப்யஹ்; இன்னஹூ லா யுஹிBப்Bபுல் முஃததீன்
முஹம்மது ஜான்
(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே, நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மிக்க தாழ்மையாகவும் அந்தரங்கமாகவும் (அத்தகைய) உங்கள் இறைவனிடமே (உங்களுக்கு வேண்டியவற்றைக் கோரி) பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அவன் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
IFT
உங்கள் அதிபதியிடம் பணிந்தும், மெதுவாகவும் நீங்கள் இறைஞ்சுங்கள்! திண்ணமாக, அவன் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே, விசுவாசிகளே!) உங்கள் இரட்சகனை மிக்க பணிவாகவும், (தாழ்ந்த குரலில்) மெதுவாகவும் (உங்களுக்கு வேண்டியவைகளைக் கோரிப் பிரார்த்தனை செய்து) நீங்கள் அழையுங்கள், நிச்சயமாக அவன் வரம்பு மீறுவோரை நேசிக்க மாட்டான்.
Saheeh International
Call upon your Lord in humility and privately; indeed, He does not like transgressors.
وَلَا تُفْسِدُوْا فِی الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا وَادْعُوْهُ خَوْفًا وَّطَمَعًا ؕ اِنَّ رَحْمَتَ اللّٰهِ قَرِیْبٌ مِّنَ الْمُحْسِنِیْنَ ۟
وَلَا تُفْسِدُوْاகலகம் செய்யாதீர்கள்فِى الْاَرْضِபூமியில்بَعْدَபின்னர்اِصْلَاحِهَاஅது சீர்திருத்தப்பட்டوَادْعُوْهُஅழையுங்கள்/அவனைخَوْفًاபயத்துடன்وَّطَمَعًا‌ ؕஇன்னும் ஆசையுடன்اِنَّ رَحْمَتَநிச்சயமாக கருணைاللّٰهِஅல்லாஹ்வின்قَرِيْبٌசமீபமானதுمِّنَ الْمُحْسِنِيْنَ‏நல்லறம் புரிவோருக்கு
வ லா துFப்ஸிதூ Fபில் அர்ளி Bபஃத இஸ்லாஹிஹா வத்'ஊஹு கவ்Fப(ன்)வ் வ தம'ஆ; இன்ன ரஹ்மதல் லாஹி கரீBபும் மினல் முஹ்ஸினீன்
முஹம்மது ஜான்
(மேலும்,) பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள்; அச்சத்தோடும் ஆசையோடும் அவனை பிரார்த்தியுங்கள் - நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே! சமாதானமும் அமைதியும் ஏற்பட்டு) நாடு சீர்திருந்திய பின்னர் அதில் விஷமம் செய்யாதீர்கள். (இறைவனுடைய தண்டனைக்கு) பயந்தும், (அவனுடைய சன்மானத்தை) விரும்பியும், அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய அருள், நன்மை செய்யும் அழகிய குணமுடையவர்களுக்கு மிக சமீபத்திலிருக்கிறது.
IFT
மேலும், பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பிறகு நீங்கள் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! மேலும், அச்சத்துடனும் ஆவலுடனும் அல்லாஹ்வை அழையுங்கள்! திண்ணமாக, அல்லாஹ்வின் அருள் நன்னடத்தையுள்ள மக்களுக்கு அருகில் இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், பூமியில்-(மனிதர்களே! சமாதானமும் அமைதியும் உண்டாகி) அது சீர்திருத்தமான பின்னர், அதில் குழப்பம் செய்யாதீர்கள், (இரட்சகனுடைய தண்டனைக்குப்) பயந்தும், (அவனுடைய அருளை) ஆசித்தும் அவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருங்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக்க சமீபத்திலிருக்கிறது.
Saheeh International
And cause not corruption upon the earth after its reformation. And invoke Him in fear and aspiration. Indeed, the mercy of Allah is near to the doers of good.
وَهُوَ الَّذِیْ یُرْسِلُ الرِّیٰحَ بُشْرًاۢ بَیْنَ یَدَیْ رَحْمَتِهٖ ؕ حَتّٰۤی اِذَاۤ اَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنٰهُ لِبَلَدٍ مَّیِّتٍ فَاَنْزَلْنَا بِهِ الْمَآءَ فَاَخْرَجْنَا بِهٖ مِنْ كُلِّ الثَّمَرٰتِ ؕ كَذٰلِكَ نُخْرِجُ الْمَوْتٰی لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۟
وَهُوَஅவன்الَّذِىْஎவன்يُرْسِلُஅனுப்புகிறான்الرِّيٰحَகாற்றுகளைبُشْرًۢاநற்செய்தியாகبَيْنَ يَدَىْமுன்னர்رَحْمَتِهٖ ؕதனது கருணைக்குحَتّٰۤىஇறுதியாகاِذَاۤ اَقَلَّتْஅது சுமந்தால்سَحَابًاமேகத்தைثِقَالًاகன(மான)سُقْنٰهُஓட்டுகிறோம்/அதைلِبَلَدٍபூமியின் பக்கம்مَّيِّتٍஇறந்ததுفَاَنْزَلْنَاஇன்னும் இறக்குகிறோம்بِهِஅதிலிருந்துالْمَآءَமழையைفَاَخْرَجْنَاஇன்னும் வெளியாக்குகிறோம்بِهٖஅதன் மூலம்مِنْஇருந்துكُلِّஎல்லாம்الثَّمَرٰتِ‌ؕகனிகள்كَذٰلِكَஇவ்வாறேنُخْرِجُவெளியாக்குவோம்الْمَوْتٰىமரணித்தவர்களைلَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
வ ஹுவல் லதீ யுர்ஸிலுர் ரியாஹ Bபுஷ்ரம் Bபய்ன யதய் ரஹ்மதிஹீ ஹத்தா இதா அகல்லத் ஸஹாBபன் திகாலன் ஸுக்னாஹு லிBபலதிம் மய்யிதின் Fப அன்ன்Zஜல்னா Bபிஹில் மா'அ Fப அக்ரஜ்னா Bபிஹீ மின்ன் குல்லிஸ் தமராத்; கதாலிக னுக்ரிஜுல் மவ்தா ல'அல்லகும் ததக்கரூன்
முஹம்மது ஜான்
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வரண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் அவனுடைய அருள்மழைக்கு (முன்னர்) நற்செய்தியாக குளிர்ந்த காற்றை அனுப்பிவைக்கிறான். அது (கருக்கொண்டு) கனத்த மேகங்களைச் சுமந்த பின்னர், அதை (வரண்டு) இறந்து விட்ட பூமியின் பக்கம் நாம் ஓட்டிச் சென்று அதிலிருந்து மழை பெய்யச் செய்கிறோம். பின்னர், அதைக் கொண்டு எல்லா வகைக் கனிகளையும் வெளியாக்குகிறோம். இவ்வாறே, மரணித்தவர்களையும் (அவர்களின் சமாதிகளிலிருந்து) வெளியாக்குவோம். (இதை அறிந்து) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக!
IFT
மேலும், அவனே தன்னுடைய அருள்மாரிக்கு முன்னர் நற்செய்திகளைக் கொண்ட காற்றுகளை அனுப்புகின்றான். பிறகு அவை (மழை நிறைந்த) கனமான மேகத்தைச் சுமந்து கொள்கின்றன. பின்னர் அவற்றை இறந்து போன பூமியின் பக்கமாக நாம் ஓட்டிச் செல்கின்றோம். பிறகு அங்கு மழையைப் பொழியச் செய்து அதன் மூலம் (இறந்து போயிருந்த அந்த பூமியிலிருந்தே) விதவிதமான கனிவகைகளை வெளிக் கொணர்கின்றோம். (பாருங்கள்!) இவ்வாறே இறந்தவர்களை (மீண்டும் உயிர்பெறச் செய்து) நாம் வெளிப்படுத்துகின்றோம். இவற்றின் மூலம் நீங்கள் படிப்பினை பெற்றிடக்கூடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவன் எத்தகையவனென்றால், அவனுடைய அருள் மாரிக்கு முன்னர், நன்மாராயமாக, (குளிர்ந்த) காற்றுகளை அவன் அனுப்பி வைக்கின்றான், முடிவாக அது (கருக்கொண்டு) கனத்த மேகங்களைச் சுமந்து வருமானால் அதனை நாம், (வரண்டு) இறந்த ஊரின் பக்கம் ஓட்டிச் செல்கிறோம், பின்னர் அதைக் கொண்டு நாம் தண்ணீரை இறக்கி வைக்கிறோம், பின்னர் அதைக் கொண்டு சகலவகைக் கனிகளையும் வெளிப்படுத்துகின்றோம், இவ்வாறே மரணித்தோரை (அவர்களின் சமாதிகளிலிருந்து) உயிர் கொடுத்து நாம் வெளிப்படுத்துவோம், (இதனை அறிந்து) நீங்கள் நல்லுணர்ச்சி பெறலாம்.
Saheeh International
And it is He who sends the winds as good tidings before His mercy [i.e., rainfall] until, when they have carried heavy rainclouds, We drive them to a dead land and We send down rain therein and bring forth thereby [some] of all the fruits. Thus will We bring forth the dead; perhaps you may be reminded.
وَالْبَلَدُ الطَّیِّبُ یَخْرُجُ نَبَاتُهٗ بِاِذْنِ رَبِّهٖ ۚ وَالَّذِیْ خَبُثَ لَا یَخْرُجُ اِلَّا نَكِدًا ؕ كَذٰلِكَ نُصَرِّفُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّشْكُرُوْنَ ۟۠
وَالْبَلَدُபூமிالطَّيِّبُநல்லதுيَخْرُجُவெளியாகிறதுنَبَاتُهٗஅதன் தாவரம்بِاِذْنِஅனுமதி கொண்டுرَبِّهٖ ۚதன் இறைவனின்وَالَّذِىْஎதுخَبُثَகெட்டுவிட்டதுلَا يَخْرُجُவெளியாகாதுاِلَّاதவிரنَكِدًا ؕவெகு சொற்பமாகكَذٰلِكَஇவ்வாறுنُصَرِّفُவிவரிக்கிறோம்الْاٰيٰتِவசனங்களைلِقَوْمٍமக்களுக்குيَّشْكُرُوْنَ‏நன்றி செலுத்துகிறார்கள்
வல்Bபலதுத் தய்யிBபு யக்ருஜு னBபாதுஹூ Bபி-இத்னி ரBப்Bபிஹீ வல்லதீ கBபுத லா யக்ருஜு இல்லா னகிதா; கதாலிக னுஸர்ரிFபுல் ஆயாதி லிகவ்மி(ன்)ய் யஷ்குரூன்
முஹம்மது ஜான்
(ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம்.  
அப்துல் ஹமீது பாகவி
(ஒரேவிதமான மழை பெய்தபோதிலும்) வளமான பூமி, தன் இறைவனின் கட்டளையைக் கொண்டே எல்லா புற்பூண்டுகளையும் வெளியாக்குகிறது. எனினும், கெட்ட (வளமற்ற) பூமியிலோ வெகு சொற்பமாகவே தவிர முளைப்பதில்லை. நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறு பல வகைகளிலும் (நம்) வசனங்களை விவரிக்கிறோம்.
IFT
நல்லபூமி தன்னுடைய இறைவனின் கட்டளைப் படி (நல்ல) விளைச்சலைத் தருகின்றது. ஆனால் கெட்ட பூமியோ மோசமான விளைச்சலைத் தவிர வேறெதையும் வெளிப்படுத்துவதில்லை. இவ்வாறே நாம், நன்றி செலுத்துகின்ற மக்களுக்கு நம்முடைய சான்றுகளை மீண்டும் மீண்டும் விவரித்துக் கூறுகின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வளமான நல்லபூமி-தன் இரட்சகனின் கட்டளையைக் கொண்டு அதன் தாவரத்தை வெளியாக்குகிறது, இன்னும், கெட்டது (வளமற்ற பூமி) வெகு சொற்பமேயன்றி வெளியாக்குவதில்லை, நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறு திரும்பத் திரும்ப (பல வகைகளிலும் நம்முடைய) வசனங்களை விவரிக்கின்றோம்.
Saheeh International
And the good land - its vegetation emerges by permission of its Lord; but that which is bad - nothing emerges except sparsely, with difficulty. Thus do We diversify the signs for a people who are grateful.
لَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖ فَقَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟
لَقَدْதிட்டவட்டமாகاَرْسَلْنَاஅனுப்பினோம்نُوْحًاநூஹைاِلٰى قَوْمِهٖஅவருடைய சமுதாயத்திற்குفَقَالَகூறினார்يٰقَوْمِஎன் சமுதாயமேاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَاஇல்லைلَـكُمْஉங்களுக்குمِّنْ اِلٰهٍவணங்கப்படும் ஒரு கடவுளும்غَيْرُهٗ ؕஅவனையன்றிاِنِّىْۤநிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்عَلَيْكُمْஉங்கள் மீதுعَذَابَவேதனையைيَوْمٍ عَظِيْمٍ‏மகத்தான நாளின்
லகத் அர்ஸல்னா னூஹன் இலா கவ்மிஹீ Fபகால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ இன்னீ அகாFபு 'அலய்கும் 'அதாBப யவ்மின் 'அளீம்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர்(தம் கூட்டத்தாரிடம்), “என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை; நிச்சயமாக நான் உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனைப்பற்றி அஞ்சுகிறேன் என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் நூஹை அவருடைய மக்களுக்கு (நம்) தூதராக அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை. (இதற்கு நீங்கள் மாறு செய்தால்) உங்களுக்கு (வரக்கூடிய) மகத்தானதொரு நாளின் வேதனையை நான் பயப்படுகிறேன்'' என்று கூறினார்.
IFT
திண்ணமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என்னுடைய சமுதாயத்தவரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை. மகத்தானதொரு நாளின் வேதனை உங்கள் மீது வந்து விடுமோ என்று நான் அஞ்சுகின்றேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
திட்டமாக நாம், “நூஹை” அவருடைய சமூகத்தாரின்பால் (நம்முடைய தூதராக) அனுப்பி வைத்தோம், அப்பொழுது அவர் (அவர்களிடம்) என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள், அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் உங்களுக்கில்லை, (இதற்கு நீங்கள் மாறு செய்தால்) நிச்சயமாக, உங்களுக்கு (வரக்கூடிய) மகத்தானதொரு நாளின் வேதனையை நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.
Saheeh International
We had certainly sent Noah to his people, and he said, "O my people, worship Allah; you have no deity other than Him. Indeed, I fear for you the punishment of a tremendous Day."
قَالَ الْمَلَاُ مِنْ قَوْمِهٖۤ اِنَّا لَنَرٰىكَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
قَالَகூறினர்الْمَلَاُதலைவர்கள் (முக்கியஸ்தர்கள்)مِنْ قَوْمِهٖۤஇருந்து/சமுதாயம்/அவருடையاِنَّاநிச்சயமாக நாம்لَـنَرٰٮكَஉம்மை காண்கிறோம்فِىْ ضَلٰلٍவழிகேட்டில்مُّبِيْنٍ‏தெளிவானது
காலல் மல-உ மின் கவ் மிஹீ இன்னா லனராக Fபீ ளலாலிம் முBபீன்
முஹம்மது ஜான்
அவருடைய கூட்டத்தாரிலுள்ள தலைவர்கள், “மெய்யாகவே, நாங்கள் உம்மை பகிரங்கமான வழிகேட்டில் தான் திடமாக பார்க்கிறோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு அவருடைய மக்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) ‘‘நீங்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை மெய்யாகவே நாங்கள் காண்கிறோம்'' என்று கூறினார்கள்.
IFT
அதற்கு அவருடைய சமுதாயத் தலைவர்கள் பதில் கூறினார்கள்: “நீர் வெளிப்படையான வழிகேட்டில் மூழ்கியிருப்பதையே நாங்கள் காண்கின்றோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதற்கு அவருடைய சமூகத்தாரிலிருந்த பிரதானிகள் “நிச்சயமாக நாங்கள் உம்மை பகிரங்கமான வழிகேட்டிலிருப்பதையே காண்கின்றோம்” என்று கூறினார்கள்.
Saheeh International
Said the eminent among his people, "Indeed, we see you in clear error."
قَالَ یٰقَوْمِ لَیْسَ بِیْ ضَلٰلَةٌ وَّلٰكِنِّیْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟
قَالَகூறினார்يٰقَوْمِஎன் சமுதாயமேلَـيْسَஇல்லைبِىْஎன்னிடம்ضَلٰلَةٌவழிகேடுوَّلٰـكِنِّىْஎனினும் நிச்சயமாக நான்رَسُوْلٌஒரு தூதர்مِّنْ رَّبِّஇறைவனிடமிருந்துالْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
கால யா கவ்மி லய்ஸ Bபீ ளலாலது(ன்)வ் வ லாகின்னீ ரஸூலும் மிர் ரBப்Bபில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
அதற்கு (நூஹு) “என் கூட்டத்தார்களே! என்னிடம் எந்த வழிகேடும் இல்லை; மாறாக அகிலங்களின் இறைவனாகிய (அல்லாஹ்வின்) தூதனாகவே நான் இருக்கின்றேன்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் (அவர்களை நோக்கி), ‘‘என் மக்களே! நான் எத்தகைய வழிகேட்டிலும் இல்லை; மாறாக, நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரையும் படைத்து பரிபாலிக்கின்ற இறைவனுடைய ஒரு தூதன்'' என்று கூறினார்.
IFT
அதற்கு நூஹ் சொன்னார்: “என்னுடைய சமுதாயத்தவரே! நான் எந்த வழிகேட்டிலும் மூழ்கியிருக்கவில்லை. நான் அகிலத்தாருடைய அதிபதியின் தூதனாக இருக்கின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர் “என்னுடைய சமூகத்தினரே!” என்னிடத்தில் எத்தகைய வழிகேடும் இல்லை, எனினும், நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனிடமிருந்து (அனுப்பப்பட்ட) ஒரு தூதன்” என்று கூறினார்.
Saheeh International
[Noah] said, "O my people, there is not error in me, but I am a messenger from the Lord of the worlds.
اُبَلِّغُكُمْ رِسٰلٰتِ رَبِّیْ وَاَنْصَحُ لَكُمْ وَاَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
اُبَلِّغُكُمْஎடுத்துரைக்கிறேன்/உங்களுக்குرِسٰلٰتِதூது(செய்தி)களைرَبِّىْஎன் இறைவனின்وَاَنْصَحُஇன்னும் உபதேசிக்கிறேன்لَـكُمْஉங்களுக்குوَاَعْلَمُஇன்னும் அறிகிறேன்مِنَ اللّٰهِஅல்லாஹ்விடம்مَا لَا تَعْلَمُوْنَ‏எவற்றை/அறியமாட்டீர்கள்
உBபல்லிகுகும் ரிஸாலாதி ரBப்Bபீ வ அன்ஸஹு லகும் வ அஃலமு மினல் லாஹி மா லா தஃலமூன்
முஹம்மது ஜான்
“நான் என் இறைவனுடைய தூதையே உங்களுக்கு எடுத்துக் கூறி; உங்களுக்கு நற்போதனையும் செய்கின்றேன் - மேலும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் அறிகிறேன்” (என்றும் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘நான் என் இறைவனின் தூதுகளையே உங்களுக்கு எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறேன். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் அறிகிறேன்.
IFT
நான் என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். உங்களுக்கு நலம் நாடுபவனாகவும் இருக்கின்றேன். மேலும், நீங்கள் அறியாதவற்றையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நான் அறிகின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நான் என் இரட்சகனின் தூதுகளையே உங்களுக்கு எத்திவைக்கிறேன், உங்களுக்கு நல்லுபதேசமும் செய்கிறேன், மேலும், அல்லாஹ்விடமிருந்து நீங்கள் அறியாதவற்றை நான் அறிகிறேன்” (என்றும்)
Saheeh International
I convey to you the messages of my Lord and advise you; and I know from Allah what you do not know.
اَوَعَجِبْتُمْ اَنْ جَآءَكُمْ ذِكْرٌ مِّنْ رَّبِّكُمْ عَلٰی رَجُلٍ مِّنْكُمْ لِیُنْذِرَكُمْ وَلِتَتَّقُوْا وَلَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟
اَوَعَجِبْتُمْவியக்கிறீர்களா?اَنْ جَآءَவந்ததைப் பற்றிكُمْஉங்களுக்குذِكْرٌநல்லுபதேசம்مِّنْ رَّبِّكُمْஉங்கள் இறைவனிடமிருந்துعَلٰى رَجُلٍஒரு மனிதர் மீதுمِّنْكُمْஉங்களிலுள்ளلِيُنْذِرَكُمْஅவர் எச்சரிப்பதற்காக/உங்களைوَلِتَـتَّقُوْاஇன்னும் நீங்கள் அஞ்சுவதற்காகوَلَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‏இன்னும் நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக
அவ 'அஜிBப்தும் அன் ஜா'அகும் திக்ரும் மிர் ரBப்Bபிகும் 'அலா ரஜுலிம் மின்கும் லியுன்திரகும் வ லிதத்தகூ வ ல'அல்லகும் துர்ஹமூன்
முஹம்மது ஜான்
உங்களை எச்சரிப்பதற்காகவும் நீங்கள் அஞ்சி நடப்பதற்காகவும் உங்களுக்கு அருள் புரியப்பட வேண்டுமென்பதற்காகவும் உங்களைச் சேர்ந்த ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை உங்களுக்கு வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?
அப்துல் ஹமீது பாகவி
உங்களிலுள்ள ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசம் வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆவதற்காகவும் (அது வந்திருக்கிறது.) அதனால் நீங்கள் (இறைவனின்) அருளை அடையலாம்'' (என்றும் கூறினார்.)
IFT
உங்களை எச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும், தவறான நடத்தையிலிருந்து நீங்கள் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், உங்கள் மீது இரக்கம் காட்டப்படுவதற்காகவும் உங்கள் சமூகத்தைச் சார்ந்த ஒருவரின் வாயிலாகவே உங்கள் இறைவனுடைய அறிவுரை உங்களிடம் வந்திருப்பது குறித்து நீங்கள் வியப்பு அடைகிறீர்களா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், நீங்கள் பயந்து நடப்பதற்காகவும், (அல்லாஹ்வால்) நீங்கள் அருள் செய்யப்பட வேண்டுமென்பதற்காகவும் உங்களிலுள்ள ஒரு மனிதர் மீது உங்களுடைய இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசம் வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?” (என்றும் கூறினார்.)
Saheeh International
Then do you wonder that there has come to you a reminder from your Lord through a man from among you, that he may warn you and that you may fear Allah so you might receive mercy?"
فَكَذَّبُوْهُ فَاَنْجَیْنٰهُ وَالَّذِیْنَ مَعَهٗ فِی الْفُلْكِ وَاَغْرَقْنَا الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا عَمِیْنَ ۟۠
فَكَذَّبُوْهُபொய்ப்பித்தனர்/அவரைفَاَنْجَيْنٰهُஆகவே, பாதுகாத்தோம்/அவரைوَالَّذِيْنَஇன்னும் எவர்கள்مَعَهٗஅவருடன்فِى الْفُلْكِகப்பலில்وَاَغْرَقْنَاஇன்னும் மூழ்கடித்தோம்الَّذِيْنَஎவர்களைكَذَّبُوْاபொய்ப்பித்தனர்بِاٰيٰتِنَا‌ ؕநம் வசனங்களைاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தனர்قَوْمًاசமுதாயமாகعَمِيْنَ‏குருடானவர்கள்
Fபகத்தBபூஹு Fப அன்ஜய் னாஹு வல்லதீன ம'அஹூ Fபில் Fபுல்கி வ அக்ரக்னல் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா; இன்னஹும் கானூ கவ்மன் 'அமீன்
முஹம்மது ஜான்
அப்போதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினர்; எனவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம்; இன்னும் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறியவர்களை (பிரளயத்தில்) மூழ்கடித்தோம்; நிச்சயமாக அவர்கள் (உண்மை காண முடியா) குருட்டுக் கூட்டதாராகவே இருந்தனர்.  
அப்துல் ஹமீது பாகவி
பின்னும், அவரை அவர்கள் பொய்யரெனவே கூறிவிட்டனர். ஆதலால், அவரையும், அவரைச் சார்ந்தவர்களையும் கப்பலில் (ஏற்றி) பாதுகாத்துக் கொண்டு, நம் வசனங்கள் பொய்யென்று கூறியவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்து விட்டோம். நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தைக் காணமுடியாத) குருடர்களாகவே இருந்தனர்.
IFT
ஆயினும், அவர்கள் அவரைப் பொய்யரென்று கூறிவிட்டார்கள். இறுதியில், நாம் அவரையும் அவருடனிருந்தவர்களையும் ஒரு கப்பலில் (ஏற்றி) காப்பாற்றினோம். மேலும், எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யென்று கூறினார்களோ அவர்களை நாம் மூழ்கடித்தோம். திண்ணமாக, அவர்கள் கண்மூடித்தனமாக வாழும் மக்களாக இருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னும், அவரை அவர்கள் பொய்யாக்கினர், ஆதலால், அவரையும், அவருடனிருந்தோரையும் கப்பலில் (ஏற்றிக்)காப்பாற்றினோம், மேலும், நம்முடைய வசனங்களைப் பொய்படுத்தியவர்களை(ப் பெரு வெள்ளத்தில்) மூழ்கடித்து விட்டோம், நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தைக் காண முடியாத) குருட்டு சமூகத்தாராகவே இருந்தனர்.
Saheeh International
But they denied him, so We saved him and those who were with him in the ship. And We drowned those who denied Our signs. Indeed, they were a blind people.
وَاِلٰی عَادٍ اَخَاهُمْ هُوْدًا ؕ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ اَفَلَا تَتَّقُوْنَ ۟
وَاِلٰى عَادٍ اَخَا‘ஆது’க்கு/சகோதரர்هُمْஅவர்களுடையهُوْدًا‌ ؕஹூதைقَالَகூறினார்يٰقَوْمِஎன் சமுதாயமே!اعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَا لَـكُمْஉங்களுக்கில்லைمِّنْ اِلٰهٍவணங்கப்படும் ஒரு கடவுளும்غَيْرُهٗ ؕஅவனையன்றிاَفَلَا تَتَّقُوْنَ‏நீங்கள் அஞ்ச வேண்டாமா?
வ இலா 'ஆதின் அகாஹும் ஹூதா; கால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹ்; அFபலா தத்தகூன்
முஹம்மது ஜான்
இன்னும், ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்;) அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனையன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை - நீங்கள் (அவனுக்கு) அஞ்சி(ப் பேணி) நடக்க வேண்டாமா?” என்று கேட்டார்.
அப்துல் ஹமீது பாகவி
‘ஆத்' (என்னும்) மக்களுக்கு அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. (ஆகவே,) நீங்கள் (அவனுக்கு) பயப்பட வேண்டாமா?'' என்று கூறினார்.
IFT
மேலும், ‘ஆத்’ கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தாரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை எனவே, நீங்கள் தவறான நடத்தையிலிருந்து விலகிக்கொள்ள மாட்டீர்களா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “ஆது” (கூட்டத்தின்)பால் அவர்களுடைய சகோதரர் ஹூதையும் (நம்முடைய நபியாக அனுப்பினோம்.) அவர் (அவர்களிடம்), “என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள், அவனைத் தவிர உங்களுக்கு (வணக்கத்திற்குரிய வேறு) நாயனில்லை, (ஆகவே) நீங்கள் (அவனுக்குப்) பயப்பட வேண்டாமா?” என்று கூறினார்.
Saheeh International
And to the ʿAad [We sent] their brother Hūd. He said, "O my people, worship Allah; you have no deity other than Him. Then will you not fear Him?"
قَالَ الْمَلَاُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖۤ اِنَّا لَنَرٰىكَ فِیْ سَفَاهَةٍ وَّاِنَّا لَنَظُنُّكَ مِنَ الْكٰذِبِیْنَ ۟
قَالَகூறினர்الْمَلَاُதலைவர்கள்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்مِنْஇருந்துقَوْمِهٖۤஅவரின் சமுதாயம்اِنَّاநிச்சயமாக நாம்لَــنَرٰٮكَஉம்மை காண்கிறோம்فِىْ سَفَاهَةٍமடமையில்وَّاِنَّاநிச்சயமாக நாம்لَــنَظُنُّكَஉம்மை எண்ணுகிறோம்مِنَ الْـكٰذِبِيْنَ‏பொய்யர்களில்
காலல் மல உல் லதீன கFபரூ மின் கவ்மிஹீ இன்னா லனராக Fபீ ஸFபாஹதி(ன்)வ் வ இன்னா ல னளுன்னுக மினல் காதிBபீன்
முஹம்மது ஜான்
அவருடைய சமூகத்தாரில் நிராகரித்தவர்களின் தலைவர்கள், (அவரை நோக்கி) “நிச்சயமாக நாங்கள் உம்மை மடமையில் (மூழ்கிக்கிடப்பவராகவே) காண்கின்றோம்; மேலும் நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு அந்த மக்களிலிருந்த நிராகரித்தவர்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) ‘‘நிச்சயமாக நாம் உம்மை மடமையில் (ஆழ்ந்து) கிடப்பவராகவே காண்கிறோம். நிச்சயமாக நாம் உம்மை பொய்யர்களில் ஒருவரெனவே கருதுகிறோம்'' என்று கூறினார்கள்.
IFT
(அவருடைய இக்கூற்றை) ஏற்க மறுத்த அவரது சமுதாயத் தலைவர்கள், “திண்ணமாக, நீர் அறியாமையில் உழல்வதை நாங்கள் காண்கின்றோம். மேலும், நீர் பொய்யராக இருப்பீரோ என்றும் நாங்கள் ஐயங்கொள்கின்றோம்” என்று பதில் கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) அவருடைய சமூகத்தாரிலிருந்து நிராகரித்து விட்டார்களே அத்தகைய பிரதானிகள், “நிச்சயமாக நாம் உம்மை மடமையில் (ஆழ்ந்து கிடப்பவராகவே) காண்கிறோம், அன்றியும் நிச்சயமாக உம்மைப் பொய்யர்களில் (உள்ளவரென) நாம் எண்ணுகின்றோம்? என்று கூறினார்கள்.
Saheeh International
Said the eminent ones who disbelieved among his people, "Indeed, we see you in foolishness, and indeed, we think you are of the liars."
قَالَ یٰقَوْمِ لَیْسَ بِیْ سَفَاهَةٌ وَّلٰكِنِّیْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟
قَالَகூறினார்يٰقَوْمِஎன் சமுதாயமேلَـيْسَஇல்லைبِىْஎன்னிடம்سَفَاهَةٌமடமைوَّلٰـكِنِّىْஎனினும் நிச்சயமாக நான்رَسُوْلٌஒரு தூதர்مِّنْ رَّبِّஇறைவனிடமிருந்துالْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
கால யா கவ்மி லய்ஸ Bபீ ஸFபாஹது(ன்)வ் வ லாகின்னீ ரஸூலும் மிர் ரBப்Bபில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
அதற்கு அவர்? “என் சமூகத்தாரே! எந்த மடமையும் என்னிடம் இல்லை - மாறாக, அகிலங்களின் இறைவனாகிய - (அல்லாஹ்வின்) தூதன் ஆவேன்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு அவர் ‘‘என் மக்களே! மடமை என்னிடம் இல்லை. ஆனால், நிச்சயமாக நான் அகிலத்தார் அனைவரையும் படைத்து பரிபாலிக்கும் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட ஒரு தூதரே!'' என்று கூறினார்.
IFT
அதற்கு அவர் கூறினார்: “என் சமுதாயத்தாரே! நான் அறியாமையில் உழன்று கொண்டிருக்கவில்லை. மாறாக, நான் அகிலங்களுடைய அதிபதியின் தூதனாக இருக்கின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “என்னுடைய சமூகத்தாரே! என்னிடம் மடமையில்லை, எனினும் நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனிடமிருந்து (அனுப்பப்பட்ட) ஒரு தூதன் ஆவேன்” என்று கூறினார்.
Saheeh International
[Hūd] said, "O my people, there is not foolishness in me, but I am a messenger from the Lord of the worlds.
اُبَلِّغُكُمْ رِسٰلٰتِ رَبِّیْ وَاَنَا لَكُمْ نَاصِحٌ اَمِیْنٌ ۟
اُبَلِّغُكُمْஎடுத்துரைக்கிறேன்/உங்களுக்குرِسٰلٰتِதூதுகளைرَبِّىْஎன் இறைவனின்وَاَنَاநான்لَـكُمْஉங்களுக்குنَاصِحٌஉபதேசி(ப்பவன்)اَمِيْنٌ‏நம்பிக்கைக்குரிய
உBபல்லிகுகும் ரிஸாலாதி ரBப்Bபீ வ அன லகும் னாஸிஹுன் அமீன்
முஹம்மது ஜான்
“நான் என் இறைவனுடைய தூதையே உங்களிடம் எடுத்துக் கூறுகின்றேன். மேலும் நான் உங்களுக்கு நம்பிக்கையான உபதேசியாகவும் இருக்கின்றேன்” (என்று கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘என் இறைவனின் தூதுகளையே நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய உபதேசியாகவும் இருக்கிறேன்.
IFT
நான் என் அதிபதியின் தூதுச்செய்திகளை உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். மேலும், நான் உங்களின் நம்பிக்கைக்குரிய நலம்விரும்பியாக இருக்கின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என் இரட்சகனின் தூது(ச்செய்தி)களையே நான் உங்களுக்கு எத்திவைக்கிறேன், மேலும், நான் உங்களுக்கு நம்பிக்கையான உபதேசியாகவும் இருக்கின்றேன்.”.
Saheeh International
I convey to you the messages of my Lord, and I am to you a trustworthy adviser.
اَوَعَجِبْتُمْ اَنْ جَآءَكُمْ ذِكْرٌ مِّنْ رَّبِّكُمْ عَلٰی رَجُلٍ مِّنْكُمْ لِیُنْذِرَكُمْ ؕ وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنْ بَعْدِ قَوْمِ نُوْحٍ وَّزَادَكُمْ فِی الْخَلْقِ بَصْۜطَةً ۚ فَاذْكُرُوْۤا اٰلَآءَ اللّٰهِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
اَوَعَجِبْتُمْநீங்கள் வியக்கிறீர்களா?اَنْ جَآءَவந்ததைப் பற்றிكُمْஉங்களுக்குذِكْرٌநல்லுபதேசம்مِّنْ رَّبِّكُمْஉங்கள் இறைவனிடமிருந்துعَلٰى رَجُلٍஒரு மனிதர் மீதுمِّنْكُمْஉங்களில்لِيُنْذِرَكُمْ‌ ؕஉங்களை எச்சரிப்பதற்காகوَاذْكُرُوْۤاநினைவு கூருங்கள்اِذْசமயம்جَعَلَـكُمْஆக்கினான்ۚ خُلَفَآءَபிரதிநிதிகளாகمِنْۢ بَعْدِபின்னர்قَوْمِசமுதாயத்திற்குنُوْحٍநூஹூடையوَّزَادَஇன்னும் அதிகப்படுத்தினான்كُمْஉங்களுக்குفِى الْخَـلْقِபடைப்பில்بَصْۜطَةً‌விரிவைفَاذْكُرُوْۤاநினைவு கூருங்கள்اٰ لَۤاءَஅருட்கொடைகளைاللّٰهِஅல்லாஹ்வின்لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏நீங்கள் வெற்றி பெறுவதற்காக
அவ 'அஜிBப்தும் அன் ஜா'அகும் திக்ரும் மிர் ரBப்Bபிகும் 'அலா ரஜுலிம் மின்கும் லியுன்திரகும்; வத்குரூ இத் ஜ'அலகும் குலFபா'அ மிம் Bபஃதி கவ்மி னூஹி(ன்)வ் வ Zஜாதகும் Fபில்கல்கி Bபஸ்ததன் Fபத்குரூ ஆலா'அல் லாஹி ல'அல்லகும் துFப்லிஹூன்
முஹம்மது ஜான்
“உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களிலுள்ள ஒரு மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை வந்துள்ளது பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைத்து, உங்கள் உடலில் பலத்தையும் அதிக மாக்கியதை நினைவு கூறுங்கள் - எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” (என்றும் கூறினார்)
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களில் ஒருவர் மீது உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்காக நல்லுபதேசம் வருவதைப் பற்றியா நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள்? நூஹுடைய மக்களுக்குப் பின்னர் அவன் உங்களை (பூமியில்) அதிபதிகளாக்கி வைத்து, தேகத்திலும் (வலுவிலும் மற்றவர்களை விட) உங்களுக்கு அதிகமாகவே கொடுத்ததையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வின் இவ்வருட்கொடைகளை எல்லாம் நீங்கள் நினைத்துப் பாருங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி பெறலாம்'' (என்றும் கூறினார்).
IFT
உங்களை எச்சரிக்கை செய்வதற்காக உங்களுடைய சமூகத்தைச் சார்ந்த ஒருவரின் வாயிலாகவே உங்கள் இறைவனின் அறிவுரை உங்களிடம் வந்திருப்பது குறித்து நீங்கள் வியப்பு அடைகிறீர்களா? உங்களுடைய இறைவன் நூஹுடைய கூட்டத்தாருக்குப் பின் உங்களை (பூமியில்) வாரிசுகளாக்கினான். உங்களுக்கு நல்ல உடல் வலிமையையும், கம்பீரத்தையும் வழங்கியிருந்தான். இவற்றை நீங்கள் மறந்து விடாதீர்கள்! எனவே அல்லாஹ்வின் வியக்கத்தக்க ஆற்றல்களை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறக்கூடும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களிலுள்ள ஆடவர் மீது உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்காக நல்லுபதேசம் வந்திருப்பதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? மேலும், நூஹ் உடைய சமூகத்தாருக்குப் பின்னர், அவன் உங்களை (முன்னவர்களுக்குப்)பின் தோன்றல்களாக்கி வைத்து, படைப்பில் (உடலமைப்பில் உயரமானவர்களாகவும்) விரிந்த தேகத்தையும் (மற்றவர்களைவிட) உங்களுக்கு அதிகமாக்கியிருப்பதையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள், ஆகவே, நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வின் எண்ணிலடங்காத ஏனைய அருட்கொடைகளை நீங்கள் நினைத்துப் பாருங்கள் (என்றும் கூறினார்).
Saheeh International
Then do you wonder that there has come to you a reminder from your Lord through a man from among you, that he may warn you? And remember when He made you successors after the people of Noah and increased you in stature extensively. So remember the favors of Allah that you might succeed."
قَالُوْۤا اَجِئْتَنَا لِنَعْبُدَ اللّٰهَ وَحْدَهٗ وَنَذَرَ مَا كَانَ یَعْبُدُ اٰبَآؤُنَا ۚ فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
قَالُـوْۤاகூறினர்اَجِئْتَنَاஎங்களிடம் வந்தீரா?لِنَعْبُدَநாங்கள் வணங்க வேண்டும் என்பதற்காகاللّٰهَஅல்லாஹ்வைوَحْدَهٗஅவன் ஒருவனை மட்டும்وَنَذَرَஇன்னும் நாங்கள் விட்டுவிட்டுمَاஎவற்றைكَانَஇருந்தார்(கள்)يَعْبُدُவணங்குவார்(கள்)اٰبَآؤُنَا‌ ۚஎங்கள் மூதாதைகள்فَاْتِنَاவருவீராக/எங்களிடம்بِمَاஎதைக் கொண்டுتَعِدُنَاۤஎச்சரிக்கிறீர்/எங்களைاِنْ كُنْتَநீர் இருந்தால்مِنَ الصّٰدِقِيْنَ‏உண்மையாளர்களில்
காலூ அஜி'தனா லினஃBபுதல் லாஹ வஹ்தஹூ வ னதர மா கான யஃBபுது ஆBபா'உனா Fப'தினா Bபிமா த'இதுனா இன் குன்த மினஸ் ஸாதிகீன்
முஹம்மது ஜான்
அதற்கு அவர்கள் “ எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட தெய்வங்களை விட்டு விட்டு; அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எங்களிடம் வந்திருக்கிறீர்? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டுவாரும்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை நாங்கள் புறக்கணித்துவிட்டு அல்லாஹ் ஒருவனையே வணங்கும்படிச் செய்யவா நீங்கள் நம்மிடம் வந்தீர்கள்? (நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம்.) மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் நீங்கள் நமக்கு அச்சமூட்டுவதை நம்மிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறினார்கள்.
IFT
அதற்கு அவர்கள் பதில் கூறினார்கள்: “நாங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும்; எங்கள் முன்னோர்கள் வழிபட்டு வந்தவற்றையெல்லாம் நாங்கள் விட்டுவிட வேண்டும் என்ப(தைச் சொல்வ)தற்காகவா நீர் எங்களிடம் வந்துள்ளீர்? நீர் உண்மையானவராயின் எந்த வேதனையைக் குறித்து எங்களை நீர் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றீரோ அதனை எங்களிடம் கொண்டு வாரும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதற்கவர்கள் “எங்கள் மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவைகளை நாங்கள் விட்டு விட்டு, அல்லாஹ்வை (வணக்கத்தில்) அவன் தனித்தவனாக இருக்க நாங்கள் வணங்கவேண்டும் என்பதற்காகவா எங்களிடம் நீர் வந்தீர்? (நாங்கள் அவ்வாறு செய்யமாட்டோம்.) ஆகவே, நீர் உண்மையாளர்களில், உள்ளவராக இருந்தால், நீர் வாக்களித்ததை எங்களுக்குக் கொண்டு வாரும்” என்று கூறினர்.
Saheeh International
They said, "Have you come to us that we should worship Allah alone and leave what our fathers have worshipped? Then bring us what you promise us, if you should be of the truthful."
قَالَ قَدْ وَقَعَ عَلَیْكُمْ مِّنْ رَّبِّكُمْ رِجْسٌ وَّغَضَبٌ ؕ اَتُجَادِلُوْنَنِیْ فِیْۤ اَسْمَآءٍ سَمَّیْتُمُوْهَاۤ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ مَّا نَزَّلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍ ؕ فَانْتَظِرُوْۤا اِنِّیْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِیْنَ ۟
قَالَகூறினார்قَدْ وَقَعَநிகழ்ந்து விட்டதுعَلَيْكُمْஉங்கள் மீதுمِّنْ رَّبِّكُمْஉங்கள் இறைவனிடமிருந்துرِجْسٌவேதனைوَّغَضَبٌ‌ؕஇன்னும் கோபம்اَتُجَادِلُوْنَنِىْதர்க்கிக்கிறீர்களா?/என்னுடன்فِىْۤ اَسْمَآءٍபெயர்களில்سَمَّيْتُمُوْهَاۤபெயர் வைத்தீர்கள்/அவற்றைاَنْـتُمْநீங்களும்وَاٰبَآؤஇன்னும் மூதாதைகள்كُمْஉங்கள்مَّا نَزَّلَஇறக்கவில்லைاللّٰهُஅல்லாஹ்بِهَاஅதற்குمِنْ سُلْطٰنٍ‌ؕஓர் ஆதாரத்தைفَانْتَظِرُوْۤاஆகவே, எதிர்பாருங்கள்اِنِّىْநிச்சயமாக நான்مَعَكُمْஉங்களுடன்مِّنَ الْمُنْتَظِرِيْنَ‏எதிர்பார்ப்பவர்களில்
கால கத் வக'அ அலய்கும் மிர் ரBப்Bபிகும் ரிஜ்ஸு(ன்)வ் வ களBப், அதுஜாதிலூனனீ Fபீ அஸ்மா'இன் ஸம்மய்துமூஹா அன்தும் வ ஆBபா'உகும் மா னZஜ்Zஜலல் லாஹு Bபிஹா மின் ஸுல்தான்; Fபன்தளிரூ இன்னீ ம'அகும் மினல் முன்தளிரீன்
முஹம்மது ஜான்
அதற்கு அவர், “உங்களுடைய இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டன; அல்லாஹ் எந்தவோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்காத நீங்களும் உங்களுடைய முன்னோர்களும் பெயர் சூட்டிக் கொண்டீர்களே அந்த பெயர்கள் விஷயத்திலேயா என்னிடத்திலே நீங்கள் தர்க்கம் செய்கிறீர்கள்; (எனவே உங்கள் வேதனையை) நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘உங்கள் இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு (விதிக்கப்பட்டு விட்டன. அது) நிச்சயமாக வந்தே தீரும். நீங்களும் உங்கள் முன்னோர்களும் (கடவுள்களென) வைத்துக் கொண்டவற்றின் (வெறும்) பெயர்களைப் பற்றியா நீங்கள் என்னுடன் தர்க்கிக்கிறீர்கள்? அதற்கு ஓர் ஆதாரத்தையும் அல்லாஹ் (உங்களுக்கு) இறக்கி வைக்க வில்லை. ஆகவே, (உங்களுக்கு வரக்கூடிய வேதனையை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள்; நானும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கிறேன்'' என்று கூறினார்.
IFT
அதற்கு அவர் கூறினார்: “உங்கள் இறைவனின் வேதனையும் சினமும் உங்கள் மீது விதிக்கப்பட்டுவிட்டன. நீங்களும் உங்கள் முன்னோர்களும் ஏற்படுத்திக்கொண்ட பெயர்களைக் குறித்தா என்னிடம் நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்கள்? அல்லாஹ் அவற்றிற்கு எந்த ஆதாரமும் இறக்கி வைக்கவில்லை! எனவே நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நானும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “உங்கள் மீது உங்களுடைய இரட்சகனிடமிருந்து வேதனையும் (அவனுடைய) கோபமும் திட்டமாக விதியாகிவிட்டது, (நீங்கள் தெய்வங்களெனப் பெயர் வைத்திருக்கும்) சில பெயர்களில் என்னிடம் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா? அவற்றை நீங்களும் உங்கள் மூதாதையர்களும் பெயர்களாக வைத்துக் கொண்டீர்கள், அல்லாஹ் அதற்கு எவ்விதச் சான்றையும் இறக்கி வைக்கவில்லை, ஆகவே (உங்களுக்கு வரக்கூடிய வேதனையை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள், நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களில் இருக்கின்றேன்” என்று கூறினார்
Saheeh International
[Hūd] said, "Already have defilement and anger fallen upon you from your Lord. Do you dispute with me concerning [mere] names you have named them, you and your fathers, for which Allah has not sent down any authority? Then wait; indeed, I am with you among those who wait."
فَاَنْجَیْنٰهُ وَالَّذِیْنَ مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَقَطَعْنَا دَابِرَ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَمَا كَانُوْا مُؤْمِنِیْنَ ۟۠
فَاَنْجَيْنٰهُஆகவே, பாதுகாத்தோம்/அவரைوَالَّذِيْنَஇன்னும் எவர்கள்مَعَهٗஅவருடன்بِرَحْمَةٍகருணையினால்مِّنَّاநமதுوَ قَطَعْنَاஇன்னும் அறுத்தோம்دَابِرَவேரைالَّذِيْنَஎவர்களின்كَذَّبُوْاபொய்ப்பித்தبِاٰيٰتِنَا‌நம் வசனங்களைوَمَا كَانُوْاஇன்னும் அவர்கள் இருக்கவில்லைمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
Fப அன்ஜய்னாஹு வல்லதீன ம'அஹூ Bபிரஹ்மதிம் மின்னா வ கதஃனா தாBபிரல் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா வமா கானூ மு'மினீன்
முஹம்மது ஜான்
ஆகவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும், நம்முடைய அருளைக்கொண்டு காப்பாற்றினோம்; நம் வசனங்களைப் பொய்யெனக்கூறி, நம்பிக்கை கொள்ளாமல் இருந்தவர்களை நாம் வேரறுத்து விட்டோம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் நம் அருளைக் கொண்டு நாம் பாதுகாத்துக் கொண்டு நம் வசனங்களைப் பொய்யாக்கி, நம்பிக்கை கொள்ளாதிருந்தவர்களை வேரறுத்து விட்டோம்.
IFT
இறுதியில் நமது அருளைக்கொண்டு ஹூதையும் அவருடைய தோழர்களையும் நாம் காப்பாற்றினோம். மேலும், எவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தார்களோ, மேலும், நம்பிக்கை கொள்ளாமல் இருந்தார்களோ அவர்கள் அனைவரையும் நாம் வேருடன் களைந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவரையும் அவருடன் இருந்தோரையும் நம்முடைய அருளைக் கொண்டு நாம் காப்பாற்றினோம், நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கியோரையும், விசுவாசங்கொள்ளாதவர்களாக இருந்தோரையும் வேரறுத்து விட்டோம்.
Saheeh International
So We saved him and those with him by mercy from Us. And We eliminated those who denied Our signs, and they were not [at all] believers.
وَاِلٰی ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا ۘ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ قَدْ جَآءَتْكُمْ بَیِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ ؕ هٰذِهٖ نَاقَةُ اللّٰهِ لَكُمْ اٰیَةً فَذَرُوْهَا تَاْكُلْ فِیْۤ اَرْضِ اللّٰهِ وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَیَاْخُذَكُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
وَاِلٰى ثَمُوْدَ‘ஸமூது’க்குاَخَاهُمْஅவர்களுடைய சகோதரர்صٰلِحًا‌ ۘஸாலிஹைقَالَகூறினார்يٰقَوْمِஎன் சமுதாயமேاعْبُدُوْاவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَا لَـكُمْஉங்களுக்கில்லைمِّنْ اِلٰهٍவணங்கப்படும் ஒரு கடவுள்غَيْرُهٗ‌ ؕஅவனையன்றிقَدْநிச்சயமாகجَآءَتْكُمْஉங்களிடம் வந்துவிட்டதுبَيِّنَةٌஓர் அத்தாட்சிمِّنْஇருந்துرَّبِّكُمْ‌ ؕஉங்கள் இறைவன்هٰذِهٖஇதுنَاقَةُஒட்டகம்اللّٰهِஅல்லாஹ்வுடையلَـكُمْஉங்களுக்குاٰيَةً‌ஓர் அத்தாட்சியாகفَذَرُوْهَاஆகவே, விட்டு விடுங்கள்/அதைتَاْكُلْஅது மேயும்فِىْۤ اَرْضِபூமியில்اللّٰهِ‌அல்லாஹ்வுடையوَلَا تَمَسُّوْهَاஅதை தொடாதீர்கள்بِسُوْٓءٍதீமையைக் கொண்டுفَيَاْخُذَكُمْபிடிக்கும்/உங்களைعَذَابٌவேதனைاَ لِيْمٌ‏துன்புறுத்தும்
வ இலா தமூத அகாஹும் ஸாலிஹா; கால யா கவ்ம்ஃ' Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ கத் ஜா'அத்கும் Bபய்யினதும் மிர் ரBப்Bபிகும் ஹாதிஹீ னாகதுல் லாஹி லகும் ஆயதன் Fபதரூஹா த'குல் Fபீ அர்ளில் லாஹி வலா தமஸ்ஸூஹா Bபிஸூ'இன் Fப ய'குதகும் 'அதாBபுன் அலீம்
முஹம்மது ஜான்
“ஸமூது” கூட்டத்தாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) “என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; இதற்காக, நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியும் வந்துள்ளது; அல்லாஹ்வுடைய இந்த ஒட்டகமானது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக வந்துள்ளது; எனவே இதை அல்லாஹ்வின் பூமியில் (தடையேதுமின்றி) மேய விடுங்கள் - அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், அப்படிச்செய்தால் உங்களை நோவினை செய்யும் கடும் வேதனை பிடித்துக் கொள்ளும்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
‘ஸமூத்' (என்னும்) மக்களிடம் அவர்களுடைய சகோதரர் ‘ஸாலிஹை' (நம் தூதராக அனுப்பிவைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். உங்களுக்கு அவனைத்தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. (இதற்காக) உங்கள் இறைவனிடம் இருந்து தெளிவான ஓர் அத்தாட்சியும் உங்களிடம் வந்திருக்கிறது. இது அல்லாஹ்வுடைய ஒட்டகமாகும். (இது) உங்களுக்கோர் அத்தாட்சியாகவும் இருக்கிறது. ஆகவே, அதை அல்லாஹ்வுடைய பூமியில் (எங்கும் தடையின்றி தாராளமாக) மேய விடுங்கள். அதற்கு எத்தகைய தீங்கும் செய்யாதீர்கள். (அவ்வாறு செய்தால்) துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடித்துக்கொள்ளும்'' என்று கூறினார்.
IFT
மேலும், ஸமூத் கூட்டத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை நாம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தார்களே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்று உங்களிடம் வந்துவிட்டது. இது அல்லாஹ்வின் ஒட்டகம் இது உங்களுக்கு ஒரு சான்றாக உள்ளது. எனவே, அல்லாஹ்வின் பூமியில் மேய்ந்து திரிய இதனை விட்டு விடுங்கள்! இதற்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள்! அவ்வாறு செய்வீர்களாயின் துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஸமூது” கூட்டத்தாருக்கு அவர்களுடைய சகோதரர் ஸாலிஹையும் (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்). அவர் (அவர்களிடம்) “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள், உங்களுக்கு அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயனில்லை, (இதற்காக) உங்கள் இரட்சகனிடமிருந்து தெளிவான ஒரு அத்தாட்சி உங்களிடம் திட்டமாக வந்திருக்கின்றது, உங்களுக்கோர் அத்தாட்சியாக இது அல்லாஹ்வுடைய பெண் ஒட்டகமாகும், ஆகவே, அதனை நீங்கள் விட்டு விடுங்கள், அது (தன் இஷ்டப்படி) அல்லாஹ்வுடைய பூமியில் (எங்கும்) தடையின்றி தாராளமாக மேய்ந்து கொள்ளும், மேலும், அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், (அவ்வாறு செய்தால்) துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்” என்று கூறினார்.
Saheeh International
And to the Thamūd [We sent] their brother Ṣalih. He said, "O my people, worship Allah; you have no deity other than Him. There has come to you clear evidence from your Lord. This is the she-camel of Allah [sent] to you as a sign. So leave her to eat within Allah's land and do not touch her with harm, lest there seize you a painful punishment.
وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنْ بَعْدِ عَادٍ وَّبَوَّاَكُمْ فِی الْاَرْضِ تَتَّخِذُوْنَ مِنْ سُهُوْلِهَا قُصُوْرًا وَّتَنْحِتُوْنَ الْجِبَالَ بُیُوْتًا ۚ فَاذْكُرُوْۤا اٰلَآءَ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟
وَاذْكُرُوْۤاநினைவு கூருங்கள்اِذْ جَعَلَـكُمْசமயம்/ஆக்கினான்/உங்களைخُلَفَآءَபிரதிநிதிகளாகمِنْۢ بَعْدِபின்னர்عَادٍ‘ஆது’க்குوَّبَوَّاَكُمْஇன்னும் தங்கவைத்தான்/உங்களைفِى الْاَرْضِபூமியில்تَـتَّخِذُوْنَஆக்கிகொள்கிறீர்கள்مِنْ سُهُوْلِهَاஅதன் சமவெளிகளில்قُصُوْرًاமாளிகைகளைوَّتَـنْحِتُوْنَஇன்னும் குடைந்து கொள்கிறீர்கள்الْجِبَالَமலைகளில்بُيُوْتًا‌ ۚவீடுகளைفَاذْكُرُوْۤاநினைவு கூருங்கள்اٰ لَۤاءَஅருட்கொடைகளைاللّٰهِஅல்லாஹ்வின்وَلَا تَعْثَوْاஅளவு கடந்து விஷமம் செய்யாதீர்கள்فِى الْاَرْضِபூமியில்مُفْسِدِيْنَ‏விஷமிகளாக
வத்குரூ இத் ஜ'அலகும் குலFபா'அ மிம் Bபஃதி 'ஆதி(ன்)வ் வ Bபவ்வ அகும் Fபில் அர்ளி தத்தகிதூன மின் ஸுஹூலிஹா குஸூர(ன்)வ் வ தன்ஹிதூனல் ஜிBபால Bபுயூதன் Fபத்குரூ ஆலா'அல் லாஹி வலா தஃதவ் Fபில் அர்ளி முFப்ஸிதீன்
முஹம்மது ஜான்
இன்னும் நினைவு கூறுங்கள்: “ஆது” கூட்டத்தாருக்குப் பின் உங்களைப் பூமியில் பின் தோன்றல்களாக்கி வைத்தான்; பூமியில் உங்களை வசிக்கச் செய்தான். அதன் சமவெளிகளில் நீங்கள் மாளிகைகளைக் கட்டியும், மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்தும் கொள்கிறீர்கள்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வின் இந்த அருட்கொடைகளை நினைவு கூறுங்கள். பூமியில் குழப்பம் செய்பவர்களாகக் கெட்டு அலையாதீர்கள்” (என்றும் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
‘ஆத்' (என்னும்) மக்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் உங்களைக் குடியேறச்செய்து (அதற்கு) உங்களை அதிபதிகளாக்கி வைத்ததை நீங்கள் நினைத்துப் பாருங்கள். நீங்கள் அதன் சமவெளியில் மாளிகைகளையும், மலைகளைக் குடைந்து வீடுகளையும் அமைத்துக் கொள்கிறீர்கள். ஆகவே, அல்லாஹ்வின் இவ்வருட் கொடைகளை எல்லாம் நீங்கள் நினைத்துப் பாருங்கள். மேலும், பூமியில் கடுமையாக விஷமம் செய்து கொண்டு அலையாதீர்கள்'' (என்றும் கூறினார்.)
IFT
மேலும், நினைத்துப் பாருங்கள்; ஆத் சமுதாயத்திற்குப் பின் அல்லாஹ் உங்களை வாரிசுகளாக்கினான். மேலும், இப்பூமியில் சிறப்பான வசதிகளையும் உங்களுக்கு வழங்கினான். இப்போது அதன் சமவெளிகளில் நீங்கள் பிரம்மாண்டமான மாளிகைகளை எழுப்புகின்றீர்கள்; மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கின்றீர்கள். எனவே, அல்லாஹ்வின் (வல்ல மைக்குச் சான்றான) அருட்கொடைகளை நினைவு கூருங்கள்! மேலும், பூமியில் குழப்பம் விளைவித்துக் கொண்டு திரியாதீர்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆது (கூட்டத்தாரு)க்குப் பின்னர் உங்களை அவன் பின்தோன்றல்களாக்கி வைத்ததையும், பூமியில் உங்களை வசிக்கச் செய்ததையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள், நீங்கள் அதன் இலகுவான பூமியில் மாளிகைகளைக் கட்டிக் கொள்கின்றீர்கள், மலைகளை வீடுகளாகக் குடைந்து அமைத்துக் கொள்கின்றீர்கள், ஆகவே, அல்லாஹ்வின் இவ்வருட்கொடைகளையெல்லாம் நீங்கள் நினைத்துப் பாருங்கள், அன்றியும் பூமியில் குழப்பம் செய்பவர்களாக அலையாதீர்கள் என்று கூறினார்.
Saheeh International
And remember when He made you successors after the ʿAad and settled you in the land, [and] you take for yourselves palaces from its plains and carve from the mountains, homes. Then remember the favors of Allah and do not commit abuse on the earth, spreading corruption."
قَالَ الْمَلَاُ الَّذِیْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لِلَّذِیْنَ اسْتُضْعِفُوْا لِمَنْ اٰمَنَ مِنْهُمْ اَتَعْلَمُوْنَ اَنَّ صٰلِحًا مُّرْسَلٌ مِّنْ رَّبِّهٖ ؕ قَالُوْۤا اِنَّا بِمَاۤ اُرْسِلَ بِهٖ مُؤْمِنُوْنَ ۟
قَالَகூறினார்(கள்)الْمَلَاُதலைவர்கள்الَّذِيْنَஎவர்கள்اسْتَكْبَرُوْاபெருமையடித்தனர்مِنْ قَوْمِهٖஅவருடைய சமுதாயத்தில்لِلَّذِيْنَஎவர்களுக்குاسْتُضْعِفُوْاபலவீனர்களாக கருதப்பட்டனர்لِمَنْஎவருக்குاٰمَنَநம்பிக்கை கொண்டார்مِنْهُمْஅவர்களில்اَتَعْلَمُوْنَஅறிவீர்களா?اَنَّ صٰلِحًاநிச்சயமாக ஸாலிஹ்مُّرْسَلٌஅனுப்பப்பட்டவர்مِّنْ رَّبِّهٖ‌ؕதன் இறைவனிடமிருந்துقَالُـوْۤاகூறினார்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்بِمَاۤஎதைக் கொண்டுاُرْسِلَஅனுப்பப்பட்டார்بِهٖஅதைக் கொண்டுمُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொண்டவர்கள்
காலல் மல உல் லதீனஸ் தக்Bபரூ மின் கவ்மிஹீ லில்லதீனஸ் துள்'இFபூ லிமன் ஆமன மின்ஹும் அதஃலமூன அன்ன ஸாலிஹம் முர்ஸலும் மிர் ரBப்Bபிஹ்; காலூ இன்னா Bபிமா உர்ஸில Bபிஹீ மு'மினூன்
முஹம்மது ஜான்
அவருடைய சமூகத்தாரில், (ஈமான் கொள்ளாமல்) பெருமையடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் பலஹீனர்களாக கருதப்பட்ட ஈமான் கொண்டவர்களை நோக்கி: “நிச்சயமாக ஸாலிஹ் அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதரென நீங்கள் உறுதியாக அறிவீர்களோ?” எனக் கேட்டார்கள் - அதற்கு அவர்கள், “நிச்சயமாக நாங்கள் அவர் மூலம் அனுப்பப்பட்ட தூதை நம்புகிறோம்” என்று (பதில்) கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு அவருடைய மக்களில் கர்வம் கொண்டிருந்த தலைவர்கள், தங்களைவிட தாழ்ந்தவர்களென எண்ணிக் கொண்டிருந்த நம்பிக்கையாளர்களை நோக்கி, ‘‘நிச்சயமாக இந்த ஸாலிஹ் தம் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதரென நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கவர்கள் ‘‘நிச்சயமாக நாங்கள் அவர் கொண்டுவந்த தூதை நம்பிக்கை கொள்கிறோம்'' என்று கூறினார்கள்.
IFT
அவருடைய சமுதாயத்தவரில் ஆணவம் மிகுந்த தலைவர்கள், இறைநம்பிக்கை கொண்டிருந்த பலவீனமான மக்களை நோக்கி வினவினார்கள்: “உண்மையில் ஸாலிஹ் தன் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதர்தான் என்பதை நீங்கள் அறிவீர்களா?” அதற்கு அவர்கள் பதில் கூறினார்கள்: “எச்செய்தியுடன் அவர் அனுப்பப்பட்டுள்ளாரோ அதனை நாங்கள் திண்ணமாக ஏற்றுக் கொள்கின்றோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு,) அவருடைய சமூகத்தாரில் கர்வங்கொண்டிருந்த பிரதானிகள், தங்களைவிட பலவீனமானவர்களென எண்ணப்பட்டிருந்த அவர்களில் விசுவாசங்கொண்டோரிடம் “நிச்சயமாக (இந்த) ஸாலிஹ் அவர் இரட்சகனால் அனுப்பப்பட்ட ஒரு தூதரென நீங்கள் உறுதியாக அறிவீர்களா? என்று கேட்டார்கள், அ(தற்கவர்)கள், “நிச்சயமாக நாங்கள் எதைக்கொண்டு அவர் அனுப்பப்பட்டாரோ அ(த்தூ)தை விசுவாசம் கொள்ளக்கூடியவர்கள்” என்று கூறினார்கள்.
Saheeh International
Said the eminent ones who were arrogant among his people to those who were oppressed - to those who believed among them, "Do you [actually] know that Ṣalih is sent from his Lord?" They said, "Indeed we, in that with which he was sent, are believers."
قَالَ الَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا بِالَّذِیْۤ اٰمَنْتُمْ بِهٖ كٰفِرُوْنَ ۟
قَالَகூறினார்(கள்)الَّذِيْنَஎவர்கள்اسْتَكْبَرُوْۤاபெருமையடித்தனர்اِنَّاநிச்சயமாக நாங்கள்بِالَّذِىْۤஎதைக்கொண்டுاٰمَنْتُمْநம்பிக்கை கொண்டீர்கள்بِهٖஅதைக் கொண்டுكٰفِرُوْنَ‏நிராகரிப்பவர்கள்
காலல் லதீனஸ் தக்Bபரூ இன்னா Bபில்லதீ ஆமன்ன்தும் Bபிஹீ காFபிரூன்
முஹம்மது ஜான்
அதற்கு பெருமையடித்துக் கொண்டிருந்தவர்கள்: “நீங்கள் எதை நம்புகின்றீர்களோ, அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு கர்வம்கொண்ட அவர்கள் (அந்த நம்பிக்கையாளர்களை நோக்கி) ‘‘நீங்கள் நம்பியவற்றை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கிறோம்'' என்று கூறினர்.
IFT
அதற்கு அந்த ஆணவக்காரர்கள், “எதனை நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றீர்களோ, அதனை நாங்கள் மறுக்கின்றோம்” என்று கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) கர்வங்கொண்டிருந்தார்களே அவர்கள் (அவ்விசுவாசிகளிடம்) “நீங்கள் எதை விசுவாசங் கொண்டிருக்கிறீர்களோ அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கக்கூடியவர்கள்” என்று கூறினார்கள்
Saheeh International
Said those who were arrogant, "Indeed we, in that which you have believed, are disbelievers."
فَعَقَرُوا النَّاقَةَ وَعَتَوْا عَنْ اَمْرِ رَبِّهِمْ وَقَالُوْا یٰصٰلِحُ ائْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الْمُرْسَلِیْنَ ۟
فَعَقَرُواஆகவே அறுத்தனர்النَّاقَةَபெண் ஒட்டகத்தைوَعَتَوْاஇன்னும் மீறினர்عَنْ اَمْرِகட்டளையைرَبِّهِمْதங்கள் இறைவனின்وَ قَالُوْاஇன்னும் கூறினர்يٰصٰلِحُஸாலிஹேائْتِنَاவருவீராக/எங்களிடம்بِمَاஎதைக் கொண்டுتَعِدُنَاۤஅச்சுறுத்துகிறீர்/எங்களைاِنْ كُنْتَநீர் இருந்தால்مِنَ الْمُرْسَلِيْنَ‏தூதர்களில்
Fப'அகருன் னாகத வ'அதவ் 'அன் அம்ரி ரBப்Bபிஹிம் வ காலூ யா ஸாலிஹு' தினா Bபிமா த'இதுனா இன் குன்த மினல் முர்ஸலீன்
முஹம்மது ஜான்
பின்னர், அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து தம் இறைவனின் கட்டளையை மீறினர்; இன்னும் அவர்கள் (ஸாலிஹை நோக்கி); “ஸாலிஹே நீர் (இறைவனின்) தூதராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, தங்கள் இறைவனின் கட்டளையை மீறி, அந்த ஒட்டகத்தை அறுத்து (ஸாலிஹ் நபியை நோக்கி), ‘‘ஸாலிஹே! மெய்யாகவே நீர் இறைவனுடைய தூதர்களில் ஒருவராக இருந்தால் நீர் அச்சமூட்டும் அ(ந்)த (வேத)னை(யை) எங்களிடம் கொண்டு வருவீராக'' என்று கூறினார்கள்.
IFT
பிறகு அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து விட்டார்கள்; தம்முடைய இறைவனின் ஆணையை ஆணவத்துடன் மீறினார்கள். மேலும், (ஸாலிஹிடம்) அவர்கள் கூறினார்கள்: “உண்மையில் இறைத்தூதர்களில் நீரும் ஒருவர்தாம் என்றால், எந்த வேதனை குறித்து எங்களை நீர் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறீரோ அதனை எங்களிடம் கொண்டு வாரும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அந்த ஒட்டகத்தை அறுத்துவிட்டார்கள், தங்கள் இரட்சகனின் கட்டளையை மீறியும் விட்டனர், இன்னும் (அவர்கள் ஸாலிஹிடம்) “ஸாலிஹே! நீர் (அல்லாஹ்வுடைய) தூதர்களில் (உள்ளவராக) இருந்தால், நீர் எங்களுக்கு வாக்களித்த (வேதனையான)தை எங்களிடம் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.
Saheeh International
So they hamstrung the she-camel and were insolent toward the command of their Lord and said, "O Ṣalih, bring us what you promise us, if you should be of the messengers."
فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِیْ دَارِهِمْ جٰثِمِیْنَ ۟
فَاَخَذَتْهُمُஆகவே, அவர்களைப் பிடித்ததுالرَّجْفَةُபயங்கர சப்தம்فَاَصْبَحُوْاகாலையை அடைந்தனர்فِىْ دَارِهِمْதங்கள் பூமியில்جٰثِمِيْنَ‏இறந்தவர்களாக
Fப அகதத் ஹுமுர் ரஜ்Fபது Fப அஸ்Bபஹூ Fபீ தாரிஹிம் ஜாதிமீன்
முஹம்மது ஜான்
எனவே, (முன்னர் எச்சரிக்கப்பட்டவாறு) அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது; அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளிலேயே இறந்தழிந்து கிடந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (முன்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவான்ற இறந்து அழிந்துவிட்டனர்.
IFT
இறுதியில் திடுக்குறச் செய்யும் ஒரு நிலநடுக்கம் அவர்களைத் தாக்கியது. உடனே, அவர்கள் தம்முடைய இல்லங்களில் முகங்குப்புற விழுந்து இறந்து கிடந்தார்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (முன்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது, அதனால் அவர்கள் தங்கள் வீடுகளில் (இறந்து) குப்புற வீழ்ந்து கிடக்க காலைப்பொழுதை அடைந்தனர்.
Saheeh International
So the earthquake seized them, and they became within their home [corpses] fallen prone.
فَتَوَلّٰی عَنْهُمْ وَقَالَ یٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسَالَةَ رَبِّیْ وَنَصَحْتُ لَكُمْ وَلٰكِنْ لَّا تُحِبُّوْنَ النّٰصِحِیْنَ ۟
فَتَوَلّٰىதிரும்பினார்عَنْهُمْஅவர்களை விட்டுوَقَالَஇன்னும் கூறினார்يٰقَوْمِஎன் சமுதாயமேلَقَدْ اَبْلَغْتُكُمْதிட்டவட்டமாக/ எடுத்துரைத்தேன்/உங்களுக்குرِسَالَةَதூதைرَبِّىْஎன் இறைவனின்وَنَصَحْتُஉபதேசித்தேன்لَـكُمْஉங்களுக்குوَلٰـكِنْஎனினும்لَّا تُحِبُّوْنَநீங்கள் நேசிப்பதில்லைالنّٰصِحِيْنَ‏உபதேசிப்பவர்களை
Fப தவல்ல 'அன்ஹும் வ கால யா கவ்மி லகத் அBப்லக்துகும் ரிஸாலத ரBப்Bபீ வ னஸஹ்து லகும் வ லாகில் லா துஹிBப்Bபூனன் னாஸிஹீன்
முஹம்மது ஜான்
அப்பொழுது, (ஸாலிஹ்) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும் “என்னுடைய சமூகத்தாரே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி, “உங்களுக்கு நற்போதனையும் செய்தேன்; ஆனால் நீங்கள் நற்போதனையாளர்களை நேசிப்பவர்களாக இல்லை” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(அந்நேரத்தில் ஸாலிஹ் நபி) அவர்களிலிருந்து விலகிக்கொண்டு (அவர்களை நோக்கி,) ‘‘என் மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு என் இறைவனின் தூதையே எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசம் செய்தேன். எனினும் நீங்களோ நல்லுபதேசம் செய்பவர்களை நேசிக்கவில்லை'' என்று கூறினார்.
IFT
பிறகு, ஸாலிஹ் “என் சமூகத்தாரே! நான் என்னுடைய இறைவனின் தூதுச் செய்தியை உங்களிடம் எடுத்துரைத்து விட்டேன். மேலும், நான் உங்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டிருந்தேன். ஆயினும் (நான் என்ன செய்ய முடியும்?) உங்களுக்கு நலன் நாடியவர்களை நீங்கள் நேசிக்கவில்லையே!” என்று கூறியவாறு அவர்களின் ஊரை விட்டு வெளியேறினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அந்நேரத்தில் ஸாலீஹ் நபி) அவர்களை விட்டும் திரும்பிக் கொண்டார், மேலும், (அவர்களிடம்,) “என்னுடைய சமூகத்தாரே! நிச்சயமாக நான் உங்களுக்கு என் இரட்சகனின் தூதையே எத்தி வைத்தேன், உங்களுக்கு நல்லுபதேசமும் செய்தேன், எனினும், நீங்களோ நல்லுபதேசம் செய்பவர்களை நேசிப்பவர்களாக இல்லை” என்று கூறினார்.
Saheeh International
And he [i.e., Ṣalih] turned away from them and said, "O my people, I had certainly conveyed to you the message of my Lord and advised you, but you do not like advisors."
وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَتَاْتُوْنَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ اَحَدٍ مِّنَ الْعٰلَمِیْنَ ۟
وَلُوْطًاஇன்னும் லூத்தைاِذْசமயம்قَالَகூறினார்لِقَوْمِهٖۤதம் சமுதாயத்திற்குاَتَاْتُوْنَவருகிறீர்களா?الْفَاحِشَةَமானக்கேடானதிற்குمَاஇல்லைسَبَقَكُمْஉங்களை முந்தبِهَاஇதற்குمِنْ اَحَدٍஒருவருமேمِّنَ الْعٰلَمِيْنَ‏உலகத்தாரில்
வ லூதன் இத் கால லிகவ்மிஹீ அத'தூனல் Fபாஹிஷத மா ஸBபககும் Bபிஹா மின் அஹதிம் மினல் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா முனைந்தீர்கள்?”
அப்துல் ஹமீது பாகவி
லூத்தையும் (நம் தூதராக அவருடைய மக்களுக்கு நாம் அனுப்பிவைத்தோம்.) அவர் தம் மக்களை நோக்கி ‘‘உங்களுக்கு முன்னர் உலகத்தில் எவருமே செய்திராத மானக்கேடானதொரு காரியத்தையா நீங்கள் செய்கிறீர்கள்?
IFT
பிறகு, லூத்தை நாம் தூதராக அனுப்பினோம். அவர் தம்முடைய சமுதாயத்தாரை நோக்கி இவ்வாறு கூறியதை நினைத்துப் பாருங்கள்: “இந்த மானக்கேடான செயலைச் செய்கின்ற (அளவுக்கு நீங்கள் வெட்கமற்ற) வர்களாகி விட்டீர்களா? உங்களுக்கு முன்னர் அகிலத்தாரில் எவருமே இதனைச் செய்ததில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“லூத்”தையும் (நம்முடைய தூதராக அவருடைய சமூகத்தார்க்கு நாம் அனுப்பி வைத்தோம்) அவர் தம் சமூகத்தாரிடம், “மானக்கேடானதொரு காரியத்தை நீங்கள் செய்கின்றீர்களா? அகிலத்தாரில் எவரும் அதை (செய்வது) கொண்டு உங்களை முந்திவிடவில்லை” என்று கூறியதை (நினைவு கூருங்கள்.)
Saheeh International
And [We had sent] Lot when he said to his people, "Do you commit such immorality as no one has preceded you with from among the worlds [i.e., peoples]?
اِنَّكُمْ لَتَاْتُوْنَ الرِّجَالَ شَهْوَةً مِّنْ دُوْنِ النِّسَآءِ ؕ بَلْ اَنْتُمْ قَوْمٌ مُّسْرِفُوْنَ ۟
اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்لَـتَاْتُوْنَவருகிறீர்கள்الرِّجَالَஆண்களிடம்شَهْوَةًகாமத்திற்குمِّنْ دُوْنِஅன்றிالنِّسَآءِ‌ ؕபெண்கள்بَلْமாறாகاَنْـتُمْநீங்கள்قَوْمٌமக்கள்مُّسْرِفُوْنَ‏வரம்பு மீறியவர்கள்
இன்னகும் லத'தூனர் ரிஜால ஷஹ்வதம் மின் தூனின் னிஸா'; Bபல் அன்தும்கவ்மும் முஸ்ரிFபூன்
முஹம்மது ஜான்
“மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டு (விட்டு) ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ளச் செல்கிறீர்கள். நீங்கள் மிக்க வரம்பு மீறிய மக்களாக இருக்கிறீர்கள்'' என்று கூறினார்.
IFT
பெண்களை விடுத்து ஆண்களிடம் உங்களுடைய இச்சையை நீங்கள் நிறைவேற்றிக் கொள்கின்றீர்கள். உண்மை யாதெனில், நீங்கள் முற்றிலும் வரம்பு மீறிய கூட்டத்தார் ஆவீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டு (விட்டு) ஆண்களிடம் காம இச்சைக்காக (அதைத் தணித்துக் கொள்ள) வருகின்றீர்கள், மாறாக நீங்கள் மிக்க வரம்பு மீறிய சமூகத்தவராகவே இருக்கின்றீர்கள்” (என்று கூறினார்).
Saheeh International
Indeed, you approach men with desire, instead of women. Rather, you are a transgressing people."
وَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوْۤا اَخْرِجُوْهُمْ مِّنْ قَرْیَتِكُمْ ۚ اِنَّهُمْ اُنَاسٌ یَّتَطَهَّرُوْنَ ۟
وَمَا كَانَஇருக்கவில்லைجَوَابَபதிலாகقَوْمِهٖۤஅவருடைய சமுதாயத்தினரின்اِلَّاۤதவிரاَنْ قَالُـوْۤاஎன்று அவர்கள் கூறியதுاَخْرِجُوْهُمْவெளியேற்றுங்கள்مِّنْஇவர்களைقَرْيَتِكُمْ‌ ۚஉங்கள் ஊரிலிருந்துاِنَّهُمْநிச்சயமாக இவர்கள்اُنَاسٌமனிதர்கள்يَّتَطَهَّرُوْنَ‏சுத்தமானவர்கள்
வமா கான ஜவாBப கவ்மிஹீ இல்லா அன் காலூ அக்ரிஜூஹும் மின் கர்யதிகும் இன்னஹும் உனாஸு(ன்)ய் யததஹ்ஹரூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக இவர்கள் தூய்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களை உங்கள் ஊரைவிட்டும் வெளியேற்றி விடுங்கள் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு அவருடைய மக்கள் (தங்கள் இனத்தாரை நோக்கி, லூத் நபியைச் சுட்டிக் காண்பித்து) ‘‘இவரையும் இவர் குடும்பத்தையும், உங்கள் ஊரிலிருந்து அப்புறப்படுத்தி விடுங்கள். நிச்சயமாக இவர்கள் மிகப் பரிசுத்தமான மனிதர்களாகிவிடலாமெனப் பார்க்கின்றனர்'' என்றுதான் பதில் கூறினார்கள்.
IFT
அதற்கு அக் கூட்டத்தார் இதைத்தான் பதிலாய்க் கூறினார்கள்: “இவர்களை உங்களுடைய ஊரை விட்டு வெளியேற்றுங்கள்! இவர்கள் பெரிய பரிசுத்தவான்கள் போல் நடக்கின்றார்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) அவரது சமுதாயத்தினரின் பதில் “அவர்களை உங்கள் ஊரைவிட்டு வெளியேற்றி விடுங்கள், (காரணம்) நிச்சயமாக அவர்கள் மிக்க பரிசுத்தமான மனிதர்களாக இருக்(க விரும்பு)கிறார்கள்” என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவாகவும்) இருக்கவில்லை.
Saheeh International
But the answer of his people was only that they said, "Evict them from your city! Indeed, they are men who keep themselves pure."
فَاَنْجَیْنٰهُ وَاَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗ ۖؗ كَانَتْ مِنَ الْغٰبِرِیْنَ ۟
فَاَنْجَيْنٰهُஆகவே, பாதுகாத்தோம்/அவரைوَاَهْلَهٗۤஇன்னும் அவருடைய குடும்பத்தைاِلَّاதவிரامْرَاَتَهٗ ۖஅவருடைய மனைவியைكَانَتْஅவள் ஆகினாள்مِنَ الْغٰبِرِيْنَ‏தங்கியவர்களில்
Fப அன்ஜய்னாஹு வ அஹ்லஹூ இல்லம் ர அதஹூ கானத் மினல் காBபிரீன்
முஹம்மது ஜான்
எனவே, அவருடைய மனைவியைத்தவிர, நாம் அவரையும்,அவர் குடும்பத்தாரையும் காப்பாற்றினோம். அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக பின் தங்கி விட்டாள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவருடைய மனைவியைத் தவிர, அவரையும் (மற்ற) அவருடைய குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொண்டோம். அவருடைய மனைவி (அவரைப்) பின்பற்றாதவர்களுடன் சேர்ந்துவிட்டாள்.
IFT
இறுதியில் லூத்தையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் காப்பாற்றினோம்; அவருடைய மனைவியைத் தவிர! அவள் (வேதனையை அனுபவிக்க) பின்தங்கி விட்டவர்களில் ஒருத்தி யாக இருந்தாள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, அவருடைய மனைவியைத் தவிர அவரையும் (மற்ற) அவருடைய குடும்பத்தினரையும் காப்பாற்றினோம், (அவருடைய மனைவியாகிய) அவள் (அவரைப் பின்பற்றாது அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின்தங்கியவர்களுடன் இருந்துவிட்டாள்.
Saheeh International
So We saved him and his family, except for his wife; she was of those who remained [with the evildoers].
وَاَمْطَرْنَا عَلَیْهِمْ مَّطَرًا ؕ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِیْنَ ۟۠
وَاَمْطَرْنَاபொழிவித்தோம்عَلَيْهِمْஅவர்கள் மீதுمَّطَرًا ؕமழையைفَانْظُرْஆகவே கவனிப்பீராகكَيْفَஎவ்வாறுكَانَஆகிவிட்டதுعَاقِبَةُமுடிவுالْمُجْرِمِيْنَ‏குற்றவாளிகளின்
வ 'அம்தர்னா 'அலய்ஹிம் மதரன் Fபன்ளுர் கய்Fப கான ஆகிBபதுல் முஜ்ரிமீன்
முஹம்மது ஜான்
இன்னும் நாம் அவர்கள் மீது (கல்) மாரியைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம், ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக.  
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் மீது (கல்) மழையை பொழிந்து (அவர்களை அழித்து) விட்டோம். ஆகவே, (இக்)குற்றவாளிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) கவனிப்பீராக.
IFT
பிறகு அக்கூட்டத்தார்கள் மீது நாம் பொழிந்தோம் (கல்) மழையை! பிறகு பாருங்கள், அக்குற்றவாளிகளின் கதி என்னவாயிற்று?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்கள் மீது நாம் (கல்) மாரியைப் பொழிவித்து (அவர்களை அழித்து) விட்டோம், ஆகவே, (இக்)குற்றவாளிகளின் இறுதி முடிவு எப்படி இருந்தது என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக!
Saheeh International
And We rained upon them a rain [of stones]. Then see how was the end of the criminals.
وَاِلٰی مَدْیَنَ اَخَاهُمْ شُعَیْبًا ؕ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ قَدْ جَآءَتْكُمْ بَیِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ فَاَوْفُوا الْكَیْلَ وَالْمِیْزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْیَآءَهُمْ وَلَا تُفْسِدُوْا فِی الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟ۚ
وَاِلٰى مَدْيَنَ‘மத்யன்’க்குاَخَاهُمْசகோதரர்/அவர்களுடையشُعَيْبًا‌ ؕ‘ஷுஐப்’ஐقَالَகூறினார்يٰقَوْمِஎன் சமுதாயமேاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَا لَـكُمْஉங்களுக்கில்லைمِّنْ اِلٰهٍவணங்கப்படும் ஒரு கடவுள்غَيْرُهٗ‌ ؕஅவனையன்றிقَدْநிச்சயமாகجَآءَتْكُمْஉங்களுக்கு வந்துவிட்டதுبَيِّنَةٌஓர் அத்தாட்சிمِّنْஇருந்துرَّبِّكُمْ‌உங்கள் இறைவன்فَاَوْفُواஆகவே முழுமையாக்குங்கள்الْكَيْلَஅளவைوَالْمِيْزَانَஇன்னும் நிறுவையைوَلَا تَبْخَسُواகுறைக்காதீர்கள்النَّاسَமக்களுக்குاَشْيَآءَபொருள்களில்هُمْஅவர்களுடையوَلَا تُفْسِدُوْاகலகம் செய்யாதீர்கள்فِى الْاَرْضِபூமியில்بَعْدَபின்னர்اِصْلَاحِهَا‌ ؕஅது சீர்திருத்தப்பட்டذٰ لِكُمْஇவைخَيْرٌசிறந்ததுلَّـكُمْஉங்களுக்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِيْنَ‌ ۚ‏நம்பிக்கை கொள்பவர்களாக
வ இலா மத்யன அகாஹும் ஷு'அய்Bபா; கால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ கத் ஜா'அத்கும் Bபய்யினதும் மிர் ரBப்Bபிகும் Fப அவ்Fபுல் கய்ல வல்மீZஜான வலா தBப்கஸுன் னாஸ அஷ்யா'அஹும் வலா துFப்ஸிதூ Fபில் அர்ளி Bபஃத இஸ்லாஹிஹா; தாலிகும் கய்ருல் லகும் இன் குன்தும் மு'மினீன்
முஹம்மது ஜான்
மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) “என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது; அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
‘மத்யன்' (என்னும்) நகரத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ‘ஷுஐபை' (நம் தூதராக அனுப்பிவைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. உங்கள் இறைவனிடமிருந்து நிச்சயமாக உங்களுக்குத் தெளிவான அத்தாட்சி வந்திருக்கிறது. ஆகவே, அளவை முழுமையாக அளந்து எடையை சரியாக நிறுங்கள். (நீங்கள் கொடுக்க வேண்டிய) மனிதர்களுடைய பொருள்களில் எதையும் குறைத்து விடாதீர்கள். பூமியில் (சமாதானமும் அமைதியும் ஏற்பட்டு) சீர்திருந்திய பின்னர் அதில் குழப்பமும் கலகமும் செய்யாதீர்கள். மெய்யாகவே நீங்கள் (என் வார்த்தையை) நம்புபவர்களாக இருந்தால் இவைதான் உங்களுக்கு நன்மை பயக்கும்'' என்று கூறினார்.
IFT
மேலும், மத்யன்வாசிகளிடம் அவர்களுடைய சகோதரரான ஷுஐபை அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தார்களே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை! உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்று உங்களிடம் வந்துள்ளது. எனவே, அளவையை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுங்கள்; மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறைத்துக் கொடுக்காதீர்கள்; பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பிறகு அதில் நீங்கள் குழப்பம் விளைவிக்காதீர்கள்! உண்மையிலேயே நீங்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாயின் இதில்தான் உங்களுக்கு நன்மை இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் “மத்யன்” (என்னும் நகர)வாசிகளிடம் அவர்களுடைய சகோதரர் ”ஷுஐபை (நம்முடைய தூதராக அனுப்பிவைத்தோம்) அவர், “என்னுடைய சமூகத்தாரே! அலலாஹ் ஒருவனையே வணங்குங்கள், அவனைத் தவிர உங்களுக்கு வணக்கத்திற்குரிய வேறு (நாயனில்லை) உங்கள் இரட்சகனிடமிருந்து திட்டமாக உங்களுக்குத் தெளிவான அத்தாட்சி வந்திருக்கின்றது, ஆகவே, அளவைப் பூர்த்தியாக அளந்து எடையையும் சரியாக நிறுங்கள்; (நீங்கள் கொடுக்க வேண்டிய) மனிதர்களுடைய பொருட்களில் யாதொன்றை அவர்களுக்குக் குறைத்தும் விடாதீர்கள், மேலும், பூமியில் (சமாதானம், அமைதி ஏற்பட்டு) அது சீர்திருத்தம் அடைந்த பின்னர், குழப்பத்தை உண்டுபண்ணாதீர்கள், நீங்கள் விசுவாசிகளாயின், இவை தாம் உங்களுக்கு நன்மையாக இருக்கும் என்று கூறினார்.
Saheeh International
And to [the people of] Madyan [We sent] their brother Shuʿayb. He said, "O my people, worship Allah; you have no deity other than Him. There has come to you clear evidence from your Lord. So fulfill the measure and weight and do not deprive people of their due and cause not corruption upon the earth after its reformation. That is better for you, if you should be believers.
وَلَا تَقْعُدُوْا بِكُلِّ صِرَاطٍ تُوْعِدُوْنَ وَتَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ مَنْ اٰمَنَ بِهٖ وَتَبْغُوْنَهَا عِوَجًا ۚ وَاذْكُرُوْۤا اِذْ كُنْتُمْ قَلِیْلًا فَكَثَّرَكُمْ ۪ وَانْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِیْنَ ۟
وَلَا تَقْعُدُوْاஅமராதீர்கள்بِكُلِّ صِرَاطٍஎல்லாப் பாதையிலும்تُوْعِدُوْنَஅச்சுறுத்தியவர்களாகوَتَصُدُّوْنَஇன்னும் தடுப்பவர்களாகعَنْ سَبِيْلِபாதையை விட்டுاللّٰهِஅல்லாஹ்வின்مَنْஎவரைاٰمَنَநம்பிக்கைகொண்டார்بِهٖஅவனைوَتَبْغُوْنَهَاஇன்னும் அதில் தேடியவர்களாகعِوَجًا‌ ۚகோணலைوَاذْكُرُوْۤاநினைவு கூருங்கள்اِذْசமயம்كُنْتُمْஇருந்தீர்கள்قَلِيْلًاகுறைவாகفَكَثَّرَஅதிகமாக்கினான்كُمْ‌உங்களைوَانْظُرُوْاஇன்னும் கவனியுங்கள்كَيْفَஎவ்வாறுكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالْمُفْسِدِيْنَ‏கலகம் செய்பவர்களின்
வ லா தக்'உதூ Bபிகுல்லி ஸிராதின் தூ'இதூன வ தஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹி மன் ஆமன Bபிஹீ வ தBப்கூனஹா 'இவஜா; வத் குரூ இத் குன்தும் கலீலன் Fபகத்தரகும் வன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் முFப்ஸிதீன்
முஹம்மது ஜான்
“மேலும், நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்து கொண்டு, அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டவர்களை பயமுறுத்தி, (அவர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத்தடுத்து, அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள்; நீங்கள் சொற்பத் தொகையினராக இருந்தீர்கள்; அவன் உங்களை அதிக தொகையினராக்கினான் என்பதையும் நினைவு கூறுங்கள் - குழப்பம் செய்து கொண்டிருந்தோரின் முடிவு என்னவாயிற்று என்பதைக் கவனிப்பீர்களாக” (என்றும் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்து கொண்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களைப் பயமுறுத்தி, அல்லாஹ்வுடைய வழியில் அவர்கள் செல்வதைத் தடை செய்து அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள். வெகு சொற்ப மக்களாக இருந்த உங்களை அதிக தொகையினராக ஆக்கி வைத்ததையும் எண்ணி (அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி) வாருங்கள். (பூமியில்) விஷமம் செய்துகொண்டு அலைந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதையும் கவனித்துப் பார்ப்பீர்களாக!'' (என்றும் கூறினார்).
IFT
மேலும் (வாழ்வின்) ஒவ்வொரு பாதையிலும் (கொள்ளைக்காரர்கள் போல) மக்களைப் பயமுறுத்துபவர்களாகவும், இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பவர்களாகவும் இருக்காதீர்கள்; மேலும், நேரான வழியைக் கோணலாக்க முயலாதீர்கள்! நீங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்த நேரத்தை நினைத்துப் பாருங்கள். பிறகு அல்லாஹ் உங்களைப் பல்கிப்பெருகச் செய்தான். இன்னும் (கண்திறந்து) பாருங்கள்; (உலகில்) குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தவர்களின் கதி என்னவாயிற்று என்பதை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “ஒவ்வொரு வழியிலும் பயமுறுத்துபவர்களாகவும், அல்லாஹ்வின் வழியைவிட்டும் அவனை விசுவாசங்கொண்டோரை தடுப்பவர்களாவும் அதில் கோணலைத் தேடக் கூடியவர்களாகவும அமராதீர்கள்; குறைவானவர்களாக நீங்கள் இருந்தபோது உங்களை அவன் அதிகமாக ஆக்கிவைத்ததையும் (அல்லாஹ்வுக்கு நன்றி செய்வதற்காக) நீங்கள் நினைவு கூருங்கள், பூமியில் குழப்பம் செய்து கொண்டலைந்தவர்களின் (இறுதி) முடிவு எப்படி இருந்தது என்பதையும் நீங்கள் (கவனித்துப்)பார்ப்பீர்களாக!
Saheeh International
And do not sit on every path, threatening and averting from the way of Allah those who believe in Him, seeking to make it [seem] deviant. And remember when you were few and He increased you. And see how was the end of the corrupters.
وَاِنْ كَانَ طَآىِٕفَةٌ مِّنْكُمْ اٰمَنُوْا بِالَّذِیْۤ اُرْسِلْتُ بِهٖ وَطَآىِٕفَةٌ لَّمْ یُؤْمِنُوْا فَاصْبِرُوْا حَتّٰی یَحْكُمَ اللّٰهُ بَیْنَنَا ۚ وَهُوَ خَیْرُ الْحٰكِمِیْنَ ۟
وَاِنْ كَانَஇருந்தால்طَآٮِٕفَةٌஒரு பிரிவினர்مِّنْكُمْஉங்களில்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்களாகبِالَّذِىْۤஎதைக்கொண்டுاُرْسِلْتُஅனுப்பப்பட்டேன்بِهٖஅதைக் கொண்டுوَطَآٮِٕفَةٌஇன்னும் ஒரு பிரிவினர்لَّمْ يُؤْمِنُوْاஅவர்கள் நம்பிக்கை கொள்ளாதவர்களாகفَاصْبِرُوْاபொறுங்கள்حَتّٰىவரைيَحْكُمَதீர்ப்பளிக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்بَيْنَنَا‌ ۚநமக்கு மத்தியில்وَهُوَஅவன்خَيْرُமிகச் சிறந்தவன்الْحٰكِمِيْنَ‏தீர்ப்பளிப்பவர்களில்
வ இன் கான தா'இFபதும் மின்கும் ஆமனூ Bபில்லதீ உர்ஸில்து Bபிஹீ வ தா'இFபதுல் லம் யு'மினூ Fபஸ்Bபிரூ ஹத்தா யஹ்குமல் லாஹு Bபய்னனா; வ ஹுவ கய்ருல் ஹாகிமீன்
முஹம்மது ஜான்
“உங்களில் ஒரு பிரிவினர், எதனுடன் நான் அனுப்பப்பட்டுள்ளேனோ அதை நம்புகிறார்கள்; இன்னும் மற்றோர் பிரிவினர் (அதை) நம்பவில்லை - அல்லாஹ் நம்மிடையே தீர்ப்புக் கூறும் வரை பொறுமையாக இருங்கள் - அவனே தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” (என்றும் கூறினார்).  
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) உங்கள் இனத்தில் ஒரு கூட்டத்தினர் மட்டும் நான் அனுப்பப்பட்ட தூதுத்துவத்தை நம்பிக்கை கொண்டு, மற்றொரு கூட்டத்தினர் அதை நம்பிக்கை கொள்ளாதிருந்தால் (அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.) நமக்கிடையில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை நீங்கள் பொறுத்திருங்கள். தீர்ப்பளிப்பவர்களிலெல்லாம் அவன் மிக்க மேலானவன்.
IFT
நான் என்னென்ன அறிவுரைகளுடன் அனுப்பப்பட்டுள்ளேனோ அவற்றின் மீது உங்களில் ஒரு பிரிவினர் நம்பிக்கை கொண்டும், மற்றொரு பிரிவினர் நம்பிக்கை கொள்ளாமலும் இருந்தீர்களானால், அல்லாஹ் நமக்கிடையே தீர்ப்பு வழங்கும் வரை பொறுமையுடன் (காத்துக் கொண்டு) இருங்கள்! அவனே தீர்ப்பு வழங்குவோரில் மிகச் சிறந்தவன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இன்னும் நான் எதைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதை உங்களில் ஒருசாரார் விசுவாசம் கொண்டவர்களாக இருந்தும், ஒருசாரார் விசுவாசங்கொள்ளாதவர்களாகவும் இருந்தால் (அப்போது) நமக்கு மத்தியில் அல்லாஹ் தீர்ப்பு வழங்கும் வரை பொறுமையாக இருங்கள், அவனே தீர்ப்பு வழங்குவோரில் மிக்க மேலானவன்” (என்று கூறினார்.)
Saheeh International
And if there should be a group among you who has believed in that with which I have been sent and a group that has not believed, then be patient until Allah judges between us. And He is the best of judges."
قَالَ الْمَلَاُ الَّذِیْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لَنُخْرِجَنَّكَ یٰشُعَیْبُ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَكَ مِنْ قَرْیَتِنَاۤ اَوْ لَتَعُوْدُنَّ فِیْ مِلَّتِنَا ؕ قَالَ اَوَلَوْ كُنَّا كٰرِهِیْنَ ۟۫
قَالَகூறினார்(கள்)الْمَلَاُதலைவர்கள்الَّذِيْنَஎவர்கள்اسْتَكْبَرُوْاபெருமையடித்தனர்مِنْ قَوْمِهٖஅவருடைய சமுதாயத்தில்لَـنُخْرِجَنَّكَநிச்சயம் வெளியேற்றுவோம்/உம்மைيٰشُعَيْبُஷுஐபேوَالَّذِيْنَ اٰمَنُوْاஇன்னும் நம்பிக்கை கொண்டவர்களைمَعَكَஉம்முடன்مِنْஇருந்துقَرْيَتِنَاۤஎங்கள் ஊர்اَوْஅல்லதுلَـتَعُوْدُنَّநிச்சயமாக நீங்கள் திரும்பிவிட வேண்டும்فِىْ مِلَّتِنَا‌ ؕஎங்கள் கொள்கைக்குقَالَகூறினார்اَوَلَوْ كُنَّاநாங்கள் இருந்தாலுமா?كَارِهِيْنَ ۚ‏வெறுப்பவர்களாக
காலல் மல உல் லதீனஸ் தக்Bபரூ மின் கவ்மிஹீ லனுக்ரிஜன்னக யா ஷு'அய்Bபு வல்லதீன ஆமனூ ம'அக மின் கர்யதினா அவ் லத'ஊ துன்ன Fபீ மில்லதினா; கால அவ லவ் குன்னா காரிஹீன்
முஹம்மது ஜான்
அவருடைய சமூகத்தினரில் பெருமை அடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் (அவரை நோக்கி), “ஷுஐபே! உம்மையும் உம்முடன் ஈமான் கொண்டவர்களையும், நிச்சயமாக நாங்கள் எங்கள் ஊரைவிட்டே வெளியேற்றி விடுவோம்; அல்லது நீர் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பி விடவேண்டும்” என்று கூறினார்கள் - அதற்கவர், “நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுப்பவர்களாக இருந்தாலுமா?” என்று கேட்டார்.
அப்துல் ஹமீது பாகவி
(ஷுஐப் நபியை நாம் நம் தூதராக அனுப்பிய பொழுது) அவருடைய மக்களில் கர்வம்கொண்ட தலைவர்கள் (அவரை நோக்கி) ‘‘ஷுஐபே! நீங்களும் உங்களை நம்பிக்கை கொண்டவர்களும் எங்கள் மார்க்கத்திற்கு திரும்பிவிட வேண்டும். இல்லையென்றால், நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் ஊரிலிருந்து துரத்தி விடுவோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவர் (அவர்களை நோக்கி ‘‘உங்கள் மார்க்கத்தை) நாங்கள் வெறுத்தபோதிலுமா?'' என்று கேட்டார்.
IFT
அவருடைய சமுதாயத்தாரில் ஆணவம் மிகுந்த தலைவர்கள் கூறினார்கள்: “ஷுஐபே! உம்மையும், உம்முடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நாங்கள் நிச்சயமாக எங்களுடைய ஊரை விட்டு வெளியேற்ற வேண்டிவரும். அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்ப வேண்டியிருக்கும்.” அதற்கு ஷுஐப் பதில் தந்தார்: “நாங்கள் விரும்பாதவர்களாய் இருந்தாலுமா (எங்களைவற்புறுத்தி உங்கள் மார்க்கத்திற்குத் திருப்பி விடுவீர்கள்)?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவருடைய சமூகத்தினரில் கர்வங் கொண்டிருந்தார்களே அந்தப்பிரதானிகள், “ஷுஐபே! நிச்சயமாக நாம் உம்மையும் உம்முடன் விசுவாசித்தோரையும் நம்முடைய ஊரிலிருந்து வெளியேற்றி விடுவோம், அல்லது நிச்சயமாக நீங்கள் நம்முடைய மார்க்கத்திற்குத் திரும்பிவிட வேண்டும்” என்று கூறினார்கள், அ(தற்க)வர் (அவர்களிடம்) உங்களுடைய மார்க்கத்தை) நாங்கள் வெறுப்பவர்களாக இருந்தபோதிலுமா? என்று கேட்டார்.
Saheeh International
Said the eminent ones who were arrogant among his people, "We will surely evict you, O Shuʿayb, and those who have believed with you from our city, or you must return to our religion." He said, "Even if we were unwilling?
قَدِ افْتَرَیْنَا عَلَی اللّٰهِ كَذِبًا اِنْ عُدْنَا فِیْ مِلَّتِكُمْ بَعْدَ اِذْ نَجّٰىنَا اللّٰهُ مِنْهَا ؕ وَمَا یَكُوْنُ لَنَاۤ اَنْ نَّعُوْدَ فِیْهَاۤ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ رَبُّنَا ؕ وَسِعَ رَبُّنَا كُلَّ شَیْءٍ عِلْمًا ؕ عَلَی اللّٰهِ تَوَكَّلْنَا ؕ رَبَّنَا افْتَحْ بَیْنَنَا وَبَیْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَاَنْتَ خَیْرُ الْفٰتِحِیْنَ ۟
قَدِ افْتَرَيْنَاநாங்கள் இட்டுக்கட்டிவிடுவோம்عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுكَذِبًاபொய்யைاِنْ عُدْنَاநாங்கள் திரும்பினால்فِىْ مِلَّتِكُمْஉங்கள் கொள்கைக்குبَعْدَபின்னர்اِذْபோதுنَجّٰٮنَاபாதுகாத்தான்/ எங்களைاللّٰهُஅல்லாஹ்مِنْهَا‌ ؕஅதிலிருந்துوَمَا يَكُوْنُ لَـنَاۤஆகாது/எங்களுக்குاَنْ نَّعُوْدَநாங்கள் திரும்புவதுفِيْهَاۤஅதில்اِلَّاۤதவிரاَنْ يَّشَآءَநாடியேاللّٰهُஅல்லாஹ்رَبُّنَا‌ ؕஎங்கள் இறைவனாகியوَسِعَவிசாலமானவன்رَبُّنَاஎங்கள் இறைவன்كُلَّ شَىْءٍஎல்லாவற்றையும்விடعِلْمًا‌ؕஞானத்தால்عَلَىமீதேاللّٰهِஅல்லாஹ்வின்تَوَكَّلْنَا‌ ؕநம்பிக்கைவைத்தோம்رَبَّنَاஎங்கள் இறைவாافْتَحْதீர்ப்பளி(முடிவுசெய்)بَيْنَنَاஎங்களுக்கிடையில்وَبَيْنَஇன்னும் இடையில்قَوْمِنَاஎங்கள் சமுதாயத்திற்குبِالْحَـقِّநியாயமாகوَاَنْتَநீخَيْرُமிகச் சிறந்தவன்الْفٰتِحِيْنَ‏தீர்ப்பளிப்பவர்களில்
கதிFப் தரய்னா 'அலல் லாஹி கதிBபன் இன் 'உத்னா Fபீ மில்லதிகும் Bபஃத இத் னஜ்ஜானல் லாஹு மின்ஹா; வமா யகூனு லனா அன் ன'ஊத Fபீஹா இல்லா அய் யஷா'அல் லாஹு ரBப்Bபுனா; வஸி'அ ரBப்Bபுனா குல்ல ஷய்'இன் 'இல்மா; 'அலல் லாஹி தவக்கல்னா; ரBப்BபனFப் தஹ் Bபய்னனா வ Bபய்ன கவ்மினா Bபில்ஹக்கி வ அன்த கய்ருல் Fபாதிஹீன்
முஹம்மது ஜான்
“உங்கள் மார்க்கத்தை விட்டு, அல்லாஹ் எங்களைக் காப்பாற்றி விட்டபின், உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் திரும்பினால், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்தவர்களாகி விடுவோம்; எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதற்கு திரும்பவே மாட்டோம்; எங்கள் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்- அல்லாஹ்வின் மீதே நாங்கள் பரிபூரண நம்பிக்கை வைத்துள்ளோம்“ (என்று கூறி), “எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்” (என்றும் பிரார்த்தித்தார்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘உங்கள் மார்க்கத்திலிருந்து அல்லாஹ் எங்களை பாதுகாத்துக் கொண்டதன் பின்னர் உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் திரும்பினால் நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர்களாவோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதில் மீளவே முடியாது. எங்கள் இறைவனின் கல்வி ஞானம் அனைத்தையும் சூழ்ந்திருக்கிறது. அல்லாஹ்வையே நாங்கள் நம்பினோம்'' (என்றும் கூறி, இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கும் எங்கள் மக்களுக்கும் இடையில் நீ நியாயமான தீர்ப்பளிப்பாயாக! நிச்சயமாக நீ தீர்ப்பளிப்பவர்களில் மிக்க மேலானவன்'' (என்றும் பிரார்த்தித்தார்).
IFT
உங்கள் மார்க்கத்திலிருந்து அல்லாஹ் எங்களைக் காப்பாற்றிவிட்ட பின்னர் அதன் பக்கமே நாங்கள் திரும்பினால், நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்களாய் ஆவோம்! மேலும், நாங்கள் அம்மார்க்கத்திற்குத் திரும்பி வருவது எங்களைப் பொறுத்து (எவ்விதத்திலும்) சாத்தியமானதன்று; எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி! எங்கள் இறைவனின் அறிவு அனைத்தையும் சூழ்ந்திருக்கிறது. அல்லாஹ்வையே நாங்கள் முழுமையாகச் சார்ந்துள்ளோம். எங்கள் இறைவனே! எங்களுக்கும், எங்களின் சமுதாயத்தாருக்குமிடையில் சரியாகத் தீர்ப்பளிப்பாயாக! நீயே சிறப்பாகத் தீர்ப்பு வழங்குபவனாய் இருக்கிறாய்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அன்றி) “உங்கள் மார்க்கத்திற்கு – அதிலிருந்து அல்லாஹ் எங்களைக் காப்பாற்றிவிட்டதன் பின்னர்-நாங்கள் திரும்பினால் நிச்சயமாக அல்லாஹ்வின் மீது நாங்கள் பொய்யைப் புனைந்து கூறியவர்களாகி விடுவோம், எங்கள் இரட்சகனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதன்பால் மீளுவதற்கு எங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை, எங்கள் இரட்சகன் தன் அறிவால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான், அல்லாஹ்வின் மீதே நாங்கள் (எங்களுடைய காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைத்துள்ளோம்” (என்று கூறி) “எங்கள் இரட்சகனே! எங்களுக்கும் எங்கள் சமூகத்தாருக்குமிடையில் நீ நியாயமான தீர்ப்பை வழங்குவாயாக! நிச்சயமாக நீயே தீர்ப்பளிப்போரில் மிக்க மேலானவன்” (என்றும் பிரார்த்தித்தார்.)
Saheeh International
We would have invented against Allah a lie if we returned to your religion after Allah had saved us from it. And it is not for us to return to it except that Allah, our Lord, should will. Our Lord has encompassed all things in knowledge. Upon Allah we have relied. Our Lord, decide between us and our people in truth, and You are the best of those who give decision."
وَقَالَ الْمَلَاُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ لَىِٕنِ اتَّبَعْتُمْ شُعَیْبًا اِنَّكُمْ اِذًا لَّخٰسِرُوْنَ ۟
وَقَالَகூறினார்(கள்)الْمَلَاُதலைவர்கள்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்مِنْ قَوْمِهٖஅவருடைய சமுதாயத்தில்لَٮِٕنِ اتَّبَعْتُمْநீங்கள் பின்பற்றினால்شُعَيْبًاஷுஐபைاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்اِذًاஅப்போதுلَّخٰسِرُوْنَ‏நஷ்டவாளிகள்தான்
வ காலல் மல உல் லதீன கFபரூ மின் கவ்மிஹீ ல'இனித் தBபஃதும் ஷு'அய்Bபன் இன்னகும் இதல் லகாஸிரூன்
முஹம்மது ஜான்
அவருடைய சமுகத்தாரில் காஃபிராகயிருந்தவர்களின் தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி), “நீங்கள் ஷுஐபை பின்பற்றுவீர்களானால் நிச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவீர்கள்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(ஷுஐபை) நிராகரித்த மக்களின் தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி) ‘‘நீங்கள் ஷுஐபைப் பின்பற்றினால் நிச்சயமாக நஷ்டமடைந்தே தீருவீர்கள்'' என்று கூறினார்கள்.
IFT
(அவர் கூறியதை) ஏற்க மறுத்துவிட்ட அவருடைய சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் (தமக்கிடையே) கூறிக் கொண்டார்கள்: “நீங்கள் ஷுஐபைப் பின்பற்றினால் நிச்சயமாக அழிந்து போவீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவருடைய சமூகத்தாரில் நிராகரித்து விட்டார்களே! அத்தகைய பிரதானிகள் (மற்றவர்களிடம்) “நீங்கள் ஷுஐபைப் பின்பற்றினால், அப்போது நிச்சயமாக நீங்கள் தாம் நஷ்டமடைந்தவர்கள்” என்று கூறினார்கள்.
Saheeh International
Said the eminent ones who disbelieved among his people, "If you should follow Shuʿayb, indeed, you would then be losers."
فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِیْ دَارِهِمْ جٰثِمِیْنَ ۟
فَاَخَذَتْهُمُஆகவே, அவர்களைப் பிடித்ததுالرَّجْفَةُநிலநடுக்கம்فَاَصْبَحُوْاகாலையை அடைந்தனர்فِىْ دَارِهِمْதங்கள் பூமியில்جٰثِمِيْنَ‌ ۛۙ  ۚ   ۖ‏இறந்தவர்களாக
Fப அகதத் ஹுமுர் ரஜ்Fபது Fப அஸ்Bபஹூ Fபீ தாரிஹிம் ஜாதிமீன்
முஹம்மது ஜான்
ஆகவே அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது; அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளில், இறந்தழிந்து கிடந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர்களை (மிகக் கொடூரமான) பூகம்பம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து அழிந்து விட்டனர்.
IFT
ஆனால் (நடந்தது என்னவெனில்) திடுக்குறச் செய்கின்ற ஒரு நிலநடுக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அவர்கள் தம் இல்லங்களில் முகங்குப்புற வீழ்ந்து கிடந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர்களை (மிக்க கொடூரமான பூகம்பம் பிடித்துக் கொண்டது, அவர்கள் தஙகள் வீடுகளில் குப்புற வீழ்ந்து (இறந்து) கிடந்தவர்களாக காலைப்பொழுதை அடைந்தனர்.
Saheeh International
So the earthquake seized them, and they became within their home [corpses] fallen prone.
الَّذِیْنَ كَذَّبُوْا شُعَیْبًا كَاَنْ لَّمْ یَغْنَوْا فِیْهَا ۛۚ اَلَّذِیْنَ كَذَّبُوْا شُعَیْبًا كَانُوْا هُمُ الْخٰسِرِیْنَ ۟
الَّذِيْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தனர்شُعَيْبًاஷுஐபைكَاَنْ لَّمْ يَغْنَوْاவசிக்காதவர்கள் போல்فِيْهَا‌ ۛۚஅதில்اَ لَّذِيْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தனர்شُعَيْبًاஷுஐபைكَانُوْاஆகிவிட்டார்கள்هُمُஅவர்கள்தான்الْخٰسِرِيْنَ‌‏நஷ்டவாளிகளாக
அல்லதீன கத்தBபூ ஷு'அய்Bபன் க அல் லம் யக்னவ் Fபீஹா; அல்லதீன கத்தBபூ ஷு'அய்Bபன் கானூ ஹுமுல் காஸிரீன்
முஹம்மது ஜான்
ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் தம் வீடுகளில் (ஒரு பொழுதும்) வாழ்ந்திராதவர்களைப் போல் ஆகிவிட்டனர் - ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் - (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களாகி விட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஷுஐபை பொய்யாக்கியவர்கள் தங்கள் ஊர்களில் (அழிந்து) எக்காலத்திலுமே வசித்திராதவர்களைப்போல் ஆகிவிட்டனர். எவர்கள் ஷுஐபை பொய்யாக்கினார்களோ அவர்கள்தான் முற்றிலும் நஷ்டமடைந்தார்கள்.
IFT
(ஆம்!) ஷுஐபைப் பொய்யரெனக் கூறியவர்கள் அவ்வில்லங்களில் வசிக்காதவர்கள் போன்று அடியோடு அழிந்து போய் விட்டார்கள். ஷுஐபைப் பொய்யரெனக் கூறியவர்கள்தாம் இறுதியில் இழப்புக்குரியவர்களானார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஷுஐபைப் பொய்யாக்கினார்களே அத்தகையவர்கள் அவற்றில் (தங்கள் வீடுகளில்) ஒருகாலத்திலுமே வசித்திராதவர்களைப் போலாகி (யாதோர் அடையாளமுமின்றி அழிந்து) விட்டனர், ஷுஐபைப் பொய்யாக்கினார்களே அத்தகையோர் - அவர்களே (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களாக ஆகிவிட்டார்கள்.
Saheeh International
Those who denied Shuʿayb - it was as though they had never resided there. Those who denied Shuʿayb - it was they who were the losers.
فَتَوَلّٰی عَنْهُمْ وَقَالَ یٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسٰلٰتِ رَبِّیْ وَنَصَحْتُ لَكُمْ ۚ فَكَیْفَ اٰسٰی عَلٰی قَوْمٍ كٰفِرِیْنَ ۟۠
فَتَوَلّٰىஆகவே விலகினார்عَنْهُمْஅவர்களை விட்டுوَقَالَஇன்னும் கூறினார்يٰقَوْمِஎன் சமுதாயமேلَقَدْதிட்டமாகاَبْلَغْتُكُمْஉங்களுக்கு எடுத்துரைத்தேன்رِسٰلٰتِதூதுகளைرَبِّىْஎன் இறைவனின்وَنَصَحْتُஇன்னும் உபதேசித்தேன்لَـكُمْ‌ۚஉங்களுக்குفَكَيْفَஆகவே எவ்வாறுاٰسٰیதுயர்கொள்வேன்عَلٰىமீதுقَوْمٍசமுதாயத்தின்كٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்களான
Fபதவல்ல 'அன்ஹும் வ கால யா கவ்மி லகத் அBப்லக்துகும் ரிஸாலாதி ரBப்Bபீ வ னஸஹ்து லகும் Fபகய்Fப ஆஸா'அலா கவ்மின் காFபிரீன்
முஹம்மது ஜான்
இதனால் (ஷுஐபு) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும், “என் சமூகத்தவர்களே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி வந்தேன், உங்களுக்கு நற்போதனையும் செய்தேன் - ஆனால் நிராகரிக்கும் மக்களுக்காக நான் எவ்வாறு கவலைப்படுவேன்” என்று அவர் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(அது சமயம்) ஷுஐப் அவர்களிலிருந்து விலகி (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! நிச்சயமாக நான் இறைவனின் தூது செய்திகளைத்தான் உங்களுக்கு எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசமும் செய்தேன். ஆகவே, (அதை) நிராகரித்த மக்களுக்காக நான் எவ்வாறு கவலை கொள்வேன்'' என்று கூறினார்.
IFT
மேலும், ஷுஐப், “என்னுடைய சமுதாயத்தாரே! நான் என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன். மேலும், உங்களுக்கு நலன் நாடும் பொறுப்பை நிறைவேற்றிவிட்டேன். ஆனால் சத்தியத்தை மறுக்கின்ற சமுதாயத்தவர்மீது நான் எவ்வாறு அனுதாபம் கொள்வேன்?” என்று கூறியபடி (அவ்வூரைவிட்டு) வெளியேறிவிட்டார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அது சமயம் ஷுஐபாகிய (அவர் அவர்களைவிட்டும் திரும்பி, “என்னுடைய சமூகத்தாரே! “நிச்சயமாக நான் என் இரட்சகனின் தூதுகளையே உங்களுக்கு எடுத்துரைத்து) எத்தி வைத்து விட்டேன், இன்னும் உங்களுக்கு நல்லுபதேசமும் செய்துவிட்டேன், ஆகவே, (அதனை) நிராகரித்துவிட்ட சமூகத்தாரின்மீது நான் எவ்வாறு கவலைப்படுவேன்” என்று கூறினார்.
Saheeh International
And he [i.e., Shuʿayb] turned away from them and said, "O my people, I had certainly conveyed to you the messages of my Lord and advised you, so how could I grieve for a disbelieving people?"
وَمَاۤ اَرْسَلْنَا فِیْ قَرْیَةٍ مِّنْ نَّبِیٍّ اِلَّاۤ اَخَذْنَاۤ اَهْلَهَا بِالْبَاْسَآءِ وَالضَّرَّآءِ لَعَلَّهُمْ یَضَّرَّعُوْنَ ۟
وَمَاۤ اَرْسَلْنَاநாம் அனுப்பவில்லைفِىْ قَرْيَةٍஓர் ஊரில்مِّنْ نَّبِىٍّஎந்த ஒரு நபியையும்اِلَّاۤதவிரاَخَذْنَاۤபிடித்தோம்اَهْلَهَاஅதில் வசிப்பவர்களைبِالْبَاْسَآءِவறுமையைக் கொண்டுوَالضَّرَّآءِஇன்னும் நோயைக் கொண்டுلَعَلَّهُمْ يَضَّرَّعُوْنَ‏அவர்கள் பணிவதற்காக
வ மா அர்ஸல்னா Fபீ கர்யதிம் மின் னBபிய்யின் இல்லா அகத்னா அஹ்லஹா Bபில் Bப'ஸா'இ வள்ளர்ரா'இ ல'அல்லஹும் யள்ளர்ர'ஊன்
முஹம்மது ஜான்
நாம் நபிமார்களை அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம் மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை.
அப்துல் ஹமீது பாகவி
நாம் நபிமார்களை அனுப்பிவைத்த ஒவ்வோர் ஊர் மக்களையும் (அவர்கள் நபிமார்களை நிராகரித்து விட்டால்) அவர்கள் (நம்பக்கம்) பணிந்து வருவதற்காக வறுமையைக் கொண்டும், நோயைக் கொண்டும் நாம் அவர்களைப் பிடிக்காமல் இருக்கவில்லை.
IFT
நாம் நபியை அனுப்பி வைத்த எந்த ஊர் மக்களையும் அவர்கள் பணிந்து நடந்திட வேண்டும் என்பதற்காக, (முதலில்) கடுமையான துன்ப துயரங்களைக் கொண்டு சோதிக்காமல் இருக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், எந்த ஊரிலும் அவ்வூர்வாசிகளை அவர்கள் பணிந்து வருவதற்காக வறுமையாலும், பிணியாலும் நாம் அவர்களை பிடித்தே தவிர எந்த நபியையம் நாம் அனுப்பவில்லை.
Saheeh International
And We sent to no city a prophet [who was denied] except that We seized its people with poverty and hardship that they might humble themselves [to Allah].
ثُمَّ بَدَّلْنَا مَكَانَ السَّیِّئَةِ الْحَسَنَةَ حَتّٰی عَفَوْا وَّقَالُوْا قَدْ مَسَّ اٰبَآءَنَا الضَّرَّآءُ وَالسَّرَّآءُ فَاَخَذْنٰهُمْ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
ثُمَّபிறகுبَدَّلْـنَاமாற்றினோம்مَكَانَஇடத்தில்السَّيِّئَةِதுன்பத்தின்الْحَسَنَةَஇன்பத்தைحَتّٰىஇறுதியாகعَفَوْاஅவர்கள் அதிகரிக்கவேوَّقَالُوْاஇன்னும் கூறினர்قَدْ مَسَّஅடைந்திருக்கிறதுاٰبَآءَنَاஎங்கள் மூதாதைகளை(யும்)الضَّرَّآءُநோய்وَالسَّرَّآءُஇன்னும் சுகம்فَاَخَذْنٰهُمْஆகவே பிடித்தோம்/அவர்களைبَغْتَةًதிடீரெனوَّهُمْ لَا يَشْعُرُوْنَ‏அவர்கள் உணராமல் இருக்கும் நிலையில்
தும்ம Bபத்தல்னா மகா னஸ் ஸய்யி'அதில் ஹஸனத ஹத்தா 'அFபவ் வ காலூ கத் மஸ்ஸ ஆBபா'அனள் ளர்ரா'உ வஸ்ஸர்ரா'உ Fப அகத்னாஹும் Bபக்தத(ன்)வ் வ ஹும் லா யஷ்'உரூன்
முஹம்மது ஜான்
பின்னர் நாம் (அவர்களுடைய) துன்ப நிலைக்குப் பதிலாக (வசதிகளுள்ள) நல்ல நிலையில் மாற்றியமைத்தோம். அதில் அவர்கள் (செழித்துப் பல்கிப்) பெருகிய போது, அவர்கள்: நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டடிருந்தன” என்று (அலட்சியமாகக்) கூறினார்கள் - ஆகையால் அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் அவர்களைத் திடீரென (வேதனையைக் கொண்டு) பிடித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், நாம் அவர்களுடைய துன்பங்களுக்குப் பதிலாக இன்பங்களை கொடுக்கவே (அதனால்) அவர்களின் தொகை அதிகரித்து (கர்வம் கொண்டு) ‘‘நம் மூதாதைகளுக்குமே இத்தகைய சுக, துக்கம் ஏற்பட்டிருக்கிறது'' என்று (தாங்கள் அனுபவித்த தண்டனையை மறந்து) கூற ஆரம்பித்தனர். ஆதலால், அவர்கள் (ஒரு சிறிதும்) உணர்ந்துகொள்ளாத விதத்தில் நாம் அவர்களை (வேதனையைக் கொண்டு) திடீரென பிடித்துக்கொண்டோம்.
IFT
பிறகு அவர்களின் துன்பத்தை இன்பமாய் மாற்றினோம். எந்த அளவுக்கு எனில் அவர்கள் இன்ப நலத்தில் நன்கு திளைத்து, “எங்களின் முன்னோர்களுக்குங்கூட துன்பமும் இன்பமும் ஏற்பட்டுக் கொண்டுதானிருந்தன” என்று கூறினார்கள். இறுதியில், அவர்கள் எதிர்பாராத நிலையில், திடீரென்று அவர்களைப் பிடித்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் நாம் (வறுமை பிணி போன்ற) தீயதின் இடத்தில் நல்லதை மாற்றிக்கொடுத்தோம், முடிவாக (பல்கிப்பெருகி) அதிகமானவர்களாகிவிட்ட அவர்கள், நம்முடைய மூதாதையர்களுக்குமே இத்தகைய சுக துக்கம் ஏற்பட்டிருக்கின்றது” என்று (தாங்கள் அனுபவித்து வரும்) இவை யாவும் காலத்தின் ஏற்றத்தாழ்வினால் ஏற்பட்டதே என அலட்சியமாகக் கூறினார்கள், ஆதலால், அவர்கள் (ஒரு சிறிதும்) உணர்ந்து கொள்ளாத விதத்தில் (வேதனையைக் கொண்டு) திடீரென அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம்.
Saheeh International
Then We exchanged in place of the bad [condition], good, until they increased [and prospered] and said, "Our fathers [also] were touched with hardship and ease." So We seized them suddenly while they did not perceive.
وَلَوْ اَنَّ اَهْلَ الْقُرٰۤی اٰمَنُوْا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَیْهِمْ بَرَكٰتٍ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ وَلٰكِنْ كَذَّبُوْا فَاَخَذْنٰهُمْ بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
وَلَوْ اَنَّ اَهْلَ الْقُرٰٓىஇருந்தால்/நிச்சயமாக/ஊர்வாசிகள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَاتَّقَوْاஇன்னும் அஞ்சினர்لَـفَتَحْنَاதிறந்திருப்போம்عَلَيْهِمْஅவர்கள் மீதுبَرَكٰتٍஅருள்வளங்களைمِّنَஇருந்துالسَّمَآءِவானம்وَالْاَرْضِஇன்னும் பூமிوَلٰـكِنْஎனினும்كَذَّبُوْاபொய்ப்பித்தனர்فَاَخَذْنٰهُمْஆகவே பிடித்தோம்/அவர்களைبِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏அல்லது செய்து கொண்டிருந்ததன் காரணமாக
வ லவ் அன்ன அஹ்லல் குரா ஆமனூ வத்தகவ் லFபதஹ்னா 'அலய்ஹிம் Bபரகாதிம் மினஸ் ஸமா'இ வல் அர்ளி வ லாகின் கத்தBபூ Fப அகத்னாஹும் Bபிமா கானூ யக்ஸிBபூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் - பரகத்துகளை - பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவ்வூர்களில் இருந்தவர்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடந்திருந்தால், அவர்களுக்காக வானத்திலும், பூமியிலும் உள்ள அருட்கொடைகளின் வாசல்களைத் திறந்து விட்டிருப்போம். எனினும், அவர்களோ (நபிமார்களை நம்பிக்கைகொள்ளாது) பொய்யாக்கினார்கள். ஆகவே, அவர்களுடைய (தீய) செயலின் காரணமாக நாம் (வேதனையைக் கொண்டு) அவர்களைப் பிடித்துக் கொண்டோம்.
IFT
ஆனால், அவ்வூர்களில் வாழ்ந்த மக்கள் இறைநம்பிக்கை கொண்டு, இறையச்சமுள்ள நடத்தையை மேற் கொண்டிருப்பார்களேயானால் வானம், பூமி ஆகியவற்றின் அருள்வளங்க(ளின் வாயில்)கள் அனைத்தையும் அவர்களுக்கு நாம் திறந்து விட்டிருப்போம். ஆனால், அவர்கள் சத்தியத்தைப் பொய்யென்று உரைத்தார்கள். எனவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீய செயல்களின் காரணமாக அவர்களை நாம் தண்டித்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவ்வூர்களை உடையவர்கள் விசுவாசங்கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்தும் நடந்திருந்தால், அவர்களுக்கு வானத்திலும், பூமியிலும் உள்ள பாக்கியங்(களின் வாசல்)களை நாம் திறந்து விட்டிருப்போம், எனினும், அவர்கள் (நபிமார்களை விசுவாசிக்காது) பொய்யாக்கினார்கள், ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட (பாவத்)தின் காரணமாக நாம் (வேதனையைக் கொண்டு) அவர்களைப் பிடித்துக் கொண்டோம்.
Saheeh International
And if only the people of the cities had believed and feared Allah, We would have opened [i.e., bestowed] upon them blessings from the heaven and the earth; but they denied [the messengers], so We seized them for what they were earning.
اَفَاَمِنَ اَهْلُ الْقُرٰۤی اَنْ یَّاْتِیَهُمْ بَاْسُنَا بَیَاتًا وَّهُمْ نَآىِٕمُوْنَ ۟ؕ
اَفَاَمِنَ?/அச்சமற்றார்(கள்)اَهْلُ الْـقُرٰٓىஊர்வாசிகள்اَنْ يَّاْتِيَهُمْஅவர்களுக்கு வருவதைبَاْسُنَاநம் வேதனைبَيَاتًاஇரவில்وَّهُمْ نَآٮِٕمُوْنَؕ‏அவர்கள் தூங்கியவர்களாக இருக்கும்போது
அFப அமின அஹ்லுல் குரா அய் ய'தியஹும் Bப'ஸுனா Bபயாத(ன்)வ் வ ஹும் னா'இமூன்
முஹம்மது ஜான்
அவ்வூர்வாசிகள் இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களை வந்து அடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவ்வூரார் (தங்கள் வீடுகளில்) இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் பொழுதே நம் வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா?
IFT
இரவில் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில், நம்முடைய வேதனை அவர்களைத் திடீரென தாக்காது என்று இவ்வூர்களில் வாழும் மக்கள் அச்சமற்று இருக்கிறார்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! நிராகரித்த) அவ்வூர்களை உடையவர்கள் (தங்கள் வீடுகளில்) இரவில் அவர்கள் நித்திரை செய்து கொண்டிருக்கும் நிலையில் நம்முடைய வேதனை அவர்களிடம் வந்து விடுவதைப் பற்றி அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா?
Saheeh International
Then, did the people of the cities feel secure from Our punishment coming to them at night while they were asleep?
اَوَاَمِنَ اَهْلُ الْقُرٰۤی اَنْ یَّاْتِیَهُمْ بَاْسُنَا ضُحًی وَّهُمْ یَلْعَبُوْنَ ۟
اَوَاَمِنَ?/அச்சமற்றார்(கள்)اَهْلُ الْقُرٰٓىஊர்வாசிகள்اَنْ يَّاْتِيَهُஅவர்களுக்கு வருவதைبَاْسُنَاநம் வேதனைضُحًىமுற்பகலில்وَّهُمْ يَلْعَبُوْنَ‏அவர்கள் விளையாடும்போது
அவ அமின அஹ்லுல் குரா அய் ய'தியஹும் Bப'ஸுனா ளுஹ(ன்)வ் வ ஹும் யல்'அBபூன்
முஹம்மது ஜான்
அல்லது அவ்வூர் வாசிகள் (கவலையில்லாது) பகலில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களையடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?
அப்துல் ஹமீது பாகவி
அல்லது இவ்வூரார் (கவலையற்று) பகலில் விளையாடிக் கொண்டு இருக்கும் போதே நம் வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்று இருக்கின்றனரா?
IFT
அல்லது பகலில் அவர்கள் வீண் விளையாட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே நம்முடைய வேதனை அவர்களைத் தாக்காது என்று இவர்கள் நிம்மதியுடன் இருக்கின்றார்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது (நிராகரித்த) அவ்வூர்களை உடையவர்கள் (கவலையற்று) முற்பகலில் விளையாடிக் கொண்டு பாராமுகமாக அவர்கள் காரியங்களில் ஈடுபட்டிருக்கும் நிலையில், நம்முடைய வேதனை அவர்களிடம் வந்து விடுவதைப் பற்றி அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா?
Saheeh International
Or did the people of the cities feel secure from Our punishment coming to them in the morning while they were at play?
اَفَاَمِنُوْا مَكْرَ اللّٰهِ ۚ فَلَا یَاْمَنُ مَكْرَ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْخٰسِرُوْنَ ۟۠
اَفَاَمِنُوْاஅச்சமற்றார்களா?مَكْرَசூழ்ச்சியைاللّٰهِ‌ ۚஅல்லாஹ்வின்فَلَا يَاْمَنُஅச்சமற்றிருக்க மாட்டார்(கள்)مَكْرَசூழ்ச்சியைاللّٰهِஅல்லாஹ்வின்اِلَّا الْقَوْمُமக்களைத் தவிரالْخٰسِرُوْنَ‏நஷ்டவாளிகளான
அFப அமினூ மக்ரல் லாஹ்; Fபலா ய'மனு மக்ரல் லாஹி இல்லல் கவ்முல் காஸிரூன்
முஹம்மது ஜான்
அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்ந்து விட்டார்களா? நஷ்டவாளிகளான மக்களை தவிர, வேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சம் தீர்ந்து இருக்க மாட்டார்கள்.  
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சமற்று விட்டனரா? (முற்றிலும்) நஷ்டமடையக்கூடிய மக்களைத் தவிர எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சிக்கு அச்சமற்று இருக்க மாட்டார்கள்.
IFT
என்ன, இம்மக்கள் அல்லாஹ்வின் சூழ்ச்சி குறித்து அச்சமற்றிருக்கின்றார்களா? உண்மையில் அழிந்து போகக்கூடிய மக்கள்தாம் அல்லாஹ்வின் சூழ்ச்சி குறித்து அச்சமற்றிருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வின் சூழ்ச்சியை குறித்து அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா? முற்றிலும் நஷ்டமடையக் கூடிய சமூகத்தாரைத் தவிர (எவரும்) அல்லாஹ்வின் சூழ்ச்சியை அச்சமற்றிருக்க மாட்டார்கள்.
Saheeh International
Then, did they feel secure from the plan of Allah? But no one feels secure from the plan of Allah except the losing people.
اَوَلَمْ یَهْدِ لِلَّذِیْنَ یَرِثُوْنَ الْاَرْضَ مِنْ بَعْدِ اَهْلِهَاۤ اَنْ لَّوْ نَشَآءُ اَصَبْنٰهُمْ بِذُنُوْبِهِمْ ۚ وَنَطْبَعُ عَلٰی قُلُوْبِهِمْ فَهُمْ لَا یَسْمَعُوْنَ ۟
اَوَلَمْ يَهْدِதெளிவாகவில்லையா?لِلَّذِيْنَஎவர்களுக்குيَرِثُوْنَவாரிசாகிறார்கள்الْاَرْضَபூமிக்குمِنْۢ بَعْدِபின்னர்اَهْلِهَاۤஅதில் வசித்தவர்களுக்குاَنْ لَّوْ نَشَآءُஎன்பது/நாம் நாடினால்اَصَبْنٰهُمْசோதித்திருப்போம்/அவர்களைبِذُنُوْبِهِمْ‌ ۚஅவர்களுடைய பாவங்களின் காரணமாகوَنَطْبَعُஇன்னும் முத்திரையிடுவோம்عَلٰىமீதுقُلُوْبِهِمْஅவர்களுடைய உள்ளங்கள்فَهُمْஆகவே, அவர்கள்لَا يَسْمَعُوْنَ‏செவியுறமாட்டார்கள்
அவ லம் யஹ்தி லில்லதீன யரிதூனல் அர்ள மிம் Bபஃதி அஹ்லிஹா அல் லவ் னஷா'உ அஸBப்னாஹும் BபிதுனூBபிஹிம்; வ னத்Bப'உ 'அலா குலூBபிஹிம் Fபஹும் லா யஸ்ம'ஊன்
முஹம்மது ஜான்
பூமியில் (வாழ்ந்து போனவர்களுக்குப் பின்னால்), அதனை வாரிசாகப் பெற்ற இவர்களையும், நாம் நாடினால், இவர்களுடைய பாவங்களின் காரணத்தால் (அவ்வாறே) தண்டிப்போம் என்பது இவர்களுக்கு தெளிவாகவில்லையா? நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம்; எனவே இவர்கள் (நற்போதனைகளுக்குச்) செவிசாய்க்க மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
பூமியில் (அழிந்துபோன) முன்னிருந்தவர்களுக்குப் பின்னர் அதற்கு வாரிசான இவர்களையும் நாம் நாடினால் இவர்களுடைய பாவங்களின் காரணமாக (அவ்வாறே அழித்து) தண்டிப்போம் என்ற விஷயம் இவர்களுக்கு நல்லறிவைத் தரவில்லையா? நாம் இவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம். ஆகவே, இவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியுற மாட்டார்கள்.
IFT
முன்பு வாழ்ந்து சென்ற புவிவாழ் மக்களுக்குப் பின்னர் பூமிக்கு வாரிசாக வந்துள்ள இவர்களுக்கு இந்த உண்மை படிப்பினை தரவில்லையா? (அது யாதெனில்), நாம் நாடினால், இவர்களின் பாவங்கள் காரணமாக இவர்களைத் தண்டித்திட முடியும் என்பது! (ஆனால் இவர்கள் இத்தகைய படிப்பினை மிக்க பேருண்மைகளில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருக்கின்றனர்.) மேலும், இவர்களுடைய உள்ளங்கள் மீது நாம் முத்திரையிட்டு விடுகின்றோம். எனவே, இவர்கள் (எதனையும்) செவியேற்பதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பூமியை – அதை உடையவர்களுக்குப் பின்னர்-வாரிசாக அடைந்தோருக்கு-நாம் நாடினால், இவர்களுடைய பாவங்களின் காரணமாக இவர்களையும், (அவ்வாறே) பிடித்திருப்போம் என்ற விஷயம் இவர்களுக்கு விளங்கவில்லையா? மேலும் நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விடுகிறோம், ஆகவே, இவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியேற்க மாட்டார்கள்.
Saheeh International
Has it not become clear to those who inherited the earth after its [previous] people that if We willed, We could afflict them for their sins? But We seal over their hearts so they do not hear.
تِلْكَ الْقُرٰی نَقُصُّ عَلَیْكَ مِنْ اَنْۢبَآىِٕهَا ۚ وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ ۚ فَمَا كَانُوْا لِیُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا مِنْ قَبْلُ ؕ كَذٰلِكَ یَطْبَعُ اللّٰهُ عَلٰی قُلُوْبِ الْكٰفِرِیْنَ ۟
تِلْكَ الْقُرٰىஅந்த ஊர்கள்نَقُصُّவிவரிக்கிறோம்عَلَيْكَஉமக்குمِنْஇருந்துاَنْۢبَآٮِٕهَا‌ ۚஅவற்றின் செய்திகள்وَلَقَدْதிட்டவட்டமாகجَآءَتْهُمْவந்தனர்/அவர்களிடம்رُسُلُهُمْஅவர்களுடைய தூதர்கள்بِالْبَيِّنٰتِ‌ ۚஅத்தாட்சிகளைக் கொண்டுفَمَا كَانُوْاஅவர்கள் இல்லைلِيُؤْمِنُوْاஅவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாகبِمَاஎதைكَذَّبُوْاபொய்ப்பித்தனர்مِنْ قَبْلُ‌ ؕமுன்னர்كَذٰلِكَஇவ்வாறேيَطْبَعُமுத்திரையிடுகிறான்اللّٰهُஅல்லாஹ்عَلٰى قُلُوْبِஉள்ளங்கள் மீதுالْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்களின்
தில்கல் குரா னகுஸ்ஸு 'அலய்க மின் அம்Bபா'இஹா; வ லகத் ஜா'அத் ஹும் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி Fபமா கானூ லியு'மினூ Bபிமா கத்தBபூ மின் கBப்ல்; கதாலிக யத்Bப'உல் லாஹு 'அலா குலூBபில் காFபிரீன்
முஹம்மது ஜான்
(நபியே!) இவ்வூரார்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம்: நிச்சயமாக அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள், எனினும் அவர்கள் முன்னால் பொய்யாக்கிக் கொண்டிருந்த காரணத்தினால் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை - இவ்வாறே அல்லாஹ் காஃபிர்களின் இதயங்கள் மீது முத்திரையிட்டு விடுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவ்வூர்களின் சரித்திரத்தை நாம் உங்களுக்குக் கூறுகிறோம். (அவற்றில் வசித்திருந்த) அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் நிச்சயமாகத் தெளிவான வசனங்களையே கொண்டு வந்தனர். எனினும், அவர்களோ முன்னர் ஏதாவது ஒன்றை பொய்யாக்கிவிட்டால் (பின்னர் அதை) ஒருக்காலத்திலும் நம்பிக்கை கொள்ளாதவர்களாகவே இருந்தனர். இவ்வாறே, நிராகரிப்பவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்.
IFT
அவ்வூர்களின் வரலாறுகளை உமக்கு நாம் கூறுகின்றோம். (அவை உமக்கு எடுத்துக்காட்டுகளாய் விளங்குகின்றன.) அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். ஆனால் அம்மக்கள் முன்னர் எதனைப் பொய்யெனக் கூறிவிட்டிருந்தார்களோ அதனைப் பிறகு அவர்கள் ஏற்பவர்களாயில்லை. (பாருங்கள்) இவ்வாறே சத்தியத்தை மறுப்போரின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகின்றான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அந்த ஊர்கள் - அவற்றின் (வரலாற்றுச்) செய்திகளை நாம் உமக்கு (விவரித்துக்) கூறுகின்றோம், (அவற்றில் வசித்திருந்த) அவர்களுக்கு (அல்லாஹ்வினால்) அனுப்பப்பட்ட தூதர்கள், அவர்களிடம் திட்டமாகத் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்தனர், (ஆயினும்,) அவர்களோ முன்னர் பொய்யாக்கிய காரணத்தினால் விசுவாசங் கொள்பவர்களாக இருக்கவில்லை, இவ்வாறே நிராகரிப்போரின் இதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்.
Saheeh International
Those cities - We relate to you, [O Muhammad], some of their news. And certainly did their messengers come to them with clear proofs, but they were not to believe in that which they had denied before. Thus does Allah seal over the hearts of the disbelievers.
وَمَا وَجَدْنَا لِاَكْثَرِهِمْ مِّنْ عَهْدٍ ۚ وَاِنْ وَّجَدْنَاۤ اَكْثَرَهُمْ لَفٰسِقِیْنَ ۟
وَمَا وَجَدْنَاநாம் காணவில்லைلِاَكْثَرِهِمْஅவர்களில் அதிகமானவர்களுக்குمِّنْ عَهْدٍ‌ۚஎந்த வாக்குறுதியையும்وَاِنْ وَّجَدْنَاۤநிச்சயமாக கண்டோம்اَكْثَرَهُمْஅவர்களில் அதிகமானவர்களைلَفٰسِقِيْنَ‏பாவிகளாகவே
வமா வஜத்னா லி அக்தரிஹிம் மின் 'அஹ்த்; வ இ(ன்)வ் வஜத்னா அக்தரஹும் லFபாஸிகீன்
முஹம்மது ஜான்
அவர்களில் பெரும்பாலோருக்கு வாக்குறுதியை (நிறைவேற்றும் தன்மை இருப்பதாக) நாம் காணவில்லை - அன்றியும் அவர்களில் பெரும்பாலோரைப் பாவிகளாகவே கண்டோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வாக்குறுதி(யை நிறைவேற்றும் தன்மை) இருப்பதாகவும் நாம் காணவில்லை. இன்னும், நாம் அவர்களில் பெரும்பாலானவர்களை பாவிகளாகவே கண்டோம்.
IFT
அவர்களில் பெரும்பாலோரிடம் வாக்குறுதி பேணும் பண்பினை நாம் காணவில்லை. மாறாக அவர்களில் பெரும்பாலோரைப் பாவிகளாகவே நாம் காண்கிறோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களில் பெரும்பாலோருக்கு எந்த வாக்குறுதியையும் (நிறைவேற்றும் தன்மை) இருப்பதாகவும் நாம் காணவில்லை, அன்றியும், நிச்சயமாக நாம் அவர்களில் பெரும்பாலோரைப் பாவிகளாகவே கண்டோம்.
Saheeh International
And We did not find for most of them any covenant; but indeed, We found most of them defiantly disobedient.
ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُّوْسٰی بِاٰیٰتِنَاۤ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ فَظَلَمُوْا بِهَا ۚ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِیْنَ ۟
ثُمَّபிறகுبَعَثْنَاஅனுப்பினோம்مِنْۢ بَعْدِபின்னர்هِمْஅவர்களுக்குمُّوْسٰىமூஸாவைبِاٰيٰتِنَاۤநம் அத்தாட்சிகளைக் கொண்டுاِلٰى فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்وَمَلَا۟ئِهٖஇன்னும் அவனுடைய தலைவர்களிடம்فَظَلَمُوْاஅநீதியிழைத்தனர்بِهَا‌ ۚஅவற்றுக்குفَانْظُرْகவனிப்பீராகكَيْفَ كَانَஎவ்வாறு இருந்ததுعَاقِبَةُமுடிவுالْمُفْسِدِيْنَ‏விஷமிகளின்
தும்ம Bப'அத்னா மிம் Bபஃதிஹிம் மூஸா Bபி ஆயாதினா இலா Fபிர்'அவன வ மல'இஹீ Fபளலமூ Bபிஹா Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபதுல் முFப்ஸிதீன்
முஹம்மது ஜான்
அவர்களுக்குப் பிறகு, மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடத்திலும் அவனுடைய தலைவர்களிடத்திலும் நாம் அனுப்பிவைத்தோம்; அப்போது அவர்கள் அவற்றை (நிராகரித்து) அநியாயம் செய்து விட்டார்கள்; இத்தகைய குழப்பக்காரர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதை கவனிப்பீராக!
அப்துல் ஹமீது பாகவி
இதற்குப் பின்னரும் மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய தலைவர்களிடமும் அனுப்பிவைத்தோம். எனினும், அவர்களோ அந்த அத்தாட்சிகளை அவமதித்து (நிராகரித்து) விட்டனர். (இத்தகைய) விஷமிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.
IFT
பின்னர், (மேற்கூறப்பட்ட) அந்தச் சமூகங்கள் சென்ற பிறகு மூஸாவை, நம்முடைய சான்றுகளோடு ஃபிர்அவ்னிடமும் அவனுடைய சமுதாயத்தின் தலைவர்களிடமும் நாம் அனுப்பினோம். ஆயினும், அவர்களும் நம்முடைய சான்றுகளுக்கு அநீதி இழைத்தார்கள். எனவே, பாருங்கள் (இவ்வாறு) குழப்பம் செய்து திரிந்த அவர்களின் கதி என்னவாயிற்று என்பதை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபிமார்களாகிய நூஹ், ஹூத், ஸாலீஹ், ஷுஐப்) அவர்களுக்குப் பின்னர் மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர் அவ்னிடமும், அவனுடைய பிராதானிகளிடமும் நாம் அனுப்பி வைத்தோம், (ஆயினும்,) அவர்கள் அவற்றை நிராகரித்து அநியாயம் செய்து) விட்டனர், ஆகவே, (இத்தகைய) குழப்பக்காரர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக!
Saheeh International
Then We sent after them Moses with Our signs to Pharaoh and his establishment, but they were unjust toward them. So see how was the end of the corrupters.
وَقَالَ مُوْسٰی یٰفِرْعَوْنُ اِنِّیْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ
وَ قَالَகூறினார்مُوْسٰىமூஸாيٰفِرْعَوْنُஃபிர்அவ்னேاِنِّىْநிச்சயமாக நான்رَسُوْلٌஒரு தூதர்مِّنْ رَّبِّஇறைவனிடமிருந்து அனுப்பப்பட்டالْعٰلَمِيْنَۙ‏அகிலங்களின்
வ கால மூஸா யா Fபிர்'அவ்னு இன்னீ ரஸூலும் மிர் ரBப்Bபில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
“ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்” என்று மூஸா கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
மூஸா (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலத்தார் அனைவரின் இறைவனால் (உன்னிடம்) அனுப்பப்பட்ட ஒரு தூதர் ஆவேன்'' என்று கூறினார்.
IFT
மூஸா கூறினார்: “ஃபிர்அவ்னே! நான் அகிலமனைத்தின் அதிபதியிடமிருந்து அனுப்பப்பட்ட தூதராவேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், மூஸா (ஃபிர் அவ்னிடம்) “ஃபிர் அவ்னே! நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனால் (உன்னிடம்) அனுப்பப்பட்ட ஒரு தூதன்” என்று கூறினார்.
Saheeh International
And Moses said, "O Pharaoh, I am a messenger from the Lord of the worlds
حَقِیْقٌ عَلٰۤی اَنْ لَّاۤ اَقُوْلَ عَلَی اللّٰهِ اِلَّا الْحَقَّ ؕ قَدْ جِئْتُكُمْ بِبَیِّنَةٍ مِّنْ رَّبِّكُمْ فَاَرْسِلْ مَعِیَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ
حَقِيْقٌபேராசை உள்ளவன், கடமைப் பட்டவன், தகுதி உள்ளவன்عَلٰٓى اَنْ لَّاۤ اَقُوْلَநான் கூறாமலிருப்பதற்குعَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுاِلَّا الْحَـقَّ‌ ؕஉண்மையைத் தவிரقَدْநிச்சயமாகجِئْـتُكُمْஉங்களிடம் வந்துவிட்டேன்بِبَيِّنَةٍஓர் அத்தாட்சியைக் கொண்டுمِّنْ رَّبِّكُمْஉங்கள் இறைவனிடமிருந்துفَاَرْسِلْஆகவே அனுப்பிவைمَعِىَஎன்னுடன்بَنِىْۤ اِسْرَآءِيْلَ ؕ‏இஸ்ரவேலர்களை
ஹகீகுன் 'அலா அல் லா அகூல 'அலல் லாஹி இல்லல் ஹக்க்; கத் ஜி'துகும் BபிBபய்யினதிம் மிர் ரBப்Bபிகும் Fப அர்ஸில் ம'இய Bபனீ இஸ்ரா'ஈல்
முஹம்மது ஜான்
“அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாமலிருப்பது என்மீது கடமையாகும்; உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறேன் - ஆகவே இஸ்ரவேலர்களை என்னுடன் அனுப்பிவை” (என்றும் அவர் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘நான் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதையும்) கூறாமலிருப்பது (என்மீது) கடமையாகும். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சியை நிச்சயமாக நான் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். ஆதலால், (நீ அடிமைப்படுத்தி வைத்திருக்கும்) இஸ்ராயீலின் சந்ததிகளை என்னுடன் அனுப்பிவை'' (என்றும் கூறினார்.)
IFT
அல்லாஹ்வின் பெயரால் சத்தியத்தைத் தவிர வேறெதனையும் சொல்லமாட்டேன். இதுவே என்னுடைய பொறுப்பாகும். நான் உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். எனவே, நீ இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை என்னுடன் அனுப்பி வைத்துவிடு!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அன்றி “நான் அல்லாஹ்வின்மீது உண்மையையன்றி (வேறு எதையும்) கூறாமலிருப்பது (என்மீது) கடமையாகும், உங்கள் இரட்சகனிடமிருந்து தெளிவான அத்தாட்சியை திட்டமாக நான் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன், ஆதலால், நீ (அடிமைப்படுத்தி வைத்திருக்கும்) இஸ்ராயீலின் மக்களை என்னுடன் அனுப்பிவை” (என்றும் அவர் கூறினார்.)
Saheeh International
[Who is] obligated not to say about Allah except the truth. I have come to you with clear evidence from your Lord, so send with me the Children of Israel."
قَالَ اِنْ كُنْتَ جِئْتَ بِاٰیَةٍ فَاْتِ بِهَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
قَالَகூறினான்اِنْ كُنْتَ جِئْتَநீர் இருந்தால்/வந்தீர்بِاٰيَةٍஓர் அத்தாட்சியைக் கொண்டுفَاْتِவாரீர்بِهَاۤஅதைக் கொண்டுاِنْ كُنْتَநீர் இருந்தால்مِنَ الصّٰدِقِيْنَ‏உண்மையாளர்களில்
கால இன் குன்ன்த ஜி'த Bபி ஆயதின் Fப'திBபிஹா இன் குன்ன்த மினஸ் ஸாதிகீன்
முஹம்மது ஜான்
அதற்கு அவன், “நீர் அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருப்பீரானால் - நீர் உண்மையாளராக இருப்பின் அதைக் கொண்டுவாரும்” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவன் ‘‘நீர் அத்தாட்சி கொண்டு வந்திருப்பதாகக் கூறும் உமது கூற்றில் நீர் உண்மை சொல்பவராக இருந்தால் அதைக் கொண்டு வருவீராக'' என்று கூறினான்.
IFT
அதற்கு ஃபிர்அவ்ன், “நீர் தெளிவான சான்று ஏதேனும் கொண்டு வந்திருப்பீராயின் நீர் (உம்முடைய வாதத்தில்) உண்மையானவரானால் அதனைக் காட்டும் பார்க்கலாம்!” என்று கூறினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வன், “நீர் ஏதேனும் அத்தாட்சியைக் கொண்டு வந்திருந்தால், (அதுபற்றி) நீர் உண்மையாளர்களில் இருந்தால் அதனை நீர் கொண்டுவாரும்” என்று கூறினான்.
Saheeh International
[Pharaoh] said, "If you have come with a sign, then bring it forth, if you should be of the truthful."
فَاَلْقٰی عَصَاهُ فَاِذَا هِیَ ثُعْبَانٌ مُّبِیْنٌ ۟ۚۖ
فَاَلْقٰىஆகவே, எறிந்தார்عَصَاهُதன் தடியைفَاِذَاஅப்போதுهِىَஅதுثُعْبَانٌபெரிய பாம்பாகمُّبِيْنٌ‌ ۖ ۚ‏தெளிவானது
Fப அல்கா 'அஸாஹு Fப இதா ஹிய துஃBபானும் முBபீன்
முஹம்மது ஜான்
அப்போது (மூஸா) தம் கைத்தடியை எறிந்தார் - உடனே அது ஒரு பெரிய பாம்பாகி விட்டது.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (மூஸா) தன் (கைத்)தடியை எறிந்தார். உடனே அது பெரியதொரு மலைப் பாம்பாகி விட்டது.
IFT
அப்போது மூஸா தம்முடைய கைத்தடியை எறிந்தார். உடனே அது உயிருள்ள பெரியதொரு பாம்பாக மாறியது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்போது அவர் தன் கைத்தடியை போட்டார், அதே சமயம் அது தெளிவான பெரிய(தொரு) பாம்பாகிவிட்டது.
Saheeh International
So he [i.e., Moses] threw his staff, and suddenly it was a serpent, manifest.
وَّنَزَعَ یَدَهٗ فَاِذَا هِیَ بَیْضَآءُ لِلنّٰظِرِیْنَ ۟۠
وَّنَزَعَஇன்னும் வெளியில் எடுத்தார்يَدَهٗதன் கையைفَاِذَاஅப்போதுهِىَஅதுبَيْضَآءُமிக வெண்மையானதாகلِلنّٰظِرِيْنَ‏பார்ப்பவர்களுக்கு
வ னZஜ'அ யதஹூ Fப இதா ஹிய Bபய்ளா'உ லின்னாளிரீன்
முஹம்மது ஜான்
மேலும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார் - உடனே அது பார்ப்பவர்களுக்குப் பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அவர் தன் கையை (சட்டைப் பையிலிட்டு) வெளியில் எடுத்தார். அது பார்ப்பவர்களுக்கு மிக வெண்மையானதாக(வும், மிக பிரகாசமானதாகவும்) இருந்தது.
IFT
பிறகு அவர் தமது (கட்கத்திலிருந்து) கையை வெளியே எடுத்தார். பார்ப்பவர் முன்னிலையில் அது வெண்மையாய்ப் பளிச்சிட்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும் அவர் தன்னுடைய கையை(ச் சட்டைப் பையிலிட்டு) வெளியில் எடுத்தார், அதே சமயம் அது பார்ப்போருக்கு வெண்மையானதாக(வும் பிரகாசமானதாகவும்) இருந்தது.
Saheeh International
And he drew out his hand; thereupon it was white [with radiance] for the observers.
قَالَ الْمَلَاُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِیْمٌ ۟ۙ
قَالَகூறினார்(கள்)الْمَلَاُதலைவர்கள்مِنْ قَوْمِசமுதாயத்தின்فِرْعَوْنَஃபிர்அவ்னுடையاِنَّ هٰذَاநிச்சயமாக இவர்لَسٰحِرٌசூனியக்காரர்عَلِيْمٌ ۙ‏கற்றறிந்தவர்
காலல் மல-உ மின் கவ்மி Fபிர்'அவ்ன இன்ன ஹாதா லஸாஹிருன் 'அலீம்
முஹம்மது ஜான்
ஃபிர்அவ்னின் சமூகத்தாரைச் சேர்ந்த தலைவர்கள், “இவர் நிச்சயமாக திறமைமிக்க சூனியக்காரரே!” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இதைக் கண்ட) ஃபிர்அவ்னுடைய மக்களின் தலைவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘நிச்சயமாக இவர் சூனியத்தில் மிக்க வல்லவராக இருக்கிறார்'' என்று கூறினார்கள்.
IFT
(இதனைக் கண்ணுற்ற) ஃபிர்அவ்னுடைய சமுதாயத் தலைவர்கள், “உண்மையிலேயே இவர் ஒரு திறமை மிக்க மந்திரவாதிதான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இதனைக்கண்ட) ஃபிர் அவ்னுடைய சமூகத்தாரைச்சேர்ந்த பிரதானிகள் “நிச்சயமாக இவர் மிக அறிந்த சூனியக்காரர்” என்று கூறினார்கள்.,
Saheeh International
Said the eminent among the people of Pharaoh, "Indeed, this is a learned magician
یُّرِیْدُ اَنْ یُّخْرِجَكُمْ مِّنْ اَرْضِكُمْ ۚ فَمَاذَا تَاْمُرُوْنَ ۟
يُّرِيْدُநாடுகிறார்اَنْ يُّخْرِجَكُمْஉங்களை வெளியேற்றمِّنْஇருந்துاَرْضِكُمْ‌ ۚஉங்கள் பூமியிலிருந்துفَمَاذَاஆகவே என்ன?تَاْمُرُوْنَ‏கட்டளையிடுகிறீர்கள்
யுரீது அய் யுக்ரிஜகும் மின் அர்ளிகும் Fபமாதா த'முரூன்
முஹம்மது ஜான்
(அதற்கு, ஃபிர்அவ்ன்), “இவர் உங்களை, உங்களுடைய நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே (இதைப்பற்றி) நீங்கள் கூறும் யோசனை யாது?” (என்று கேட்டான்.)
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு ஃபிர்அவ்ன்) ‘‘இவர் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்றிவிடவே எண்ணுகிறார். ஆகவே, இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?'' (என்று கேட்டான்.)
IFT
உங்களுடைய நாட்டை விட்டு உங்களை வெளியேற்றிவிட இவர் நினைக்கிறார். இதைப்பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்” என்று தமக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவர் உங்களை உங்களுடைய பூமியிலிருந்து (நாட்டிலிருந்து) வெளியேற்றிவிட நாடுகிறார், ஆகவே, இதைப்பற்றி நீங்கள் எதைக் கட்டளையிடுகிறீர்கள்” (என்று ஃபிர் அவன் கேட்டான்.)
Saheeh International
Who wants to expel you from your land [through magic], so what do you instruct?"
قَالُوْۤا اَرْجِهْ وَاَخَاهُ وَاَرْسِلْ فِی الْمَدَآىِٕنِ حٰشِرِیْنَ ۟ۙ
قَالُوْآகூறினார்கள்اَرْجِهْதவணை கொடு/அவருக்குوَاَخَاہُஇன்னும் அவருடைய சகோதரருக்குوَاَرْسِلْஇன்னும் அனுப்புفِی الْمَدَآٮِٕنِநகரங்களில்حٰشِرِیْنَ ۙ‏ஒன்றுதிரட்டுபவர்களை
காலூ அர்ஜிஹ் வ அகாஹு வ அர்ஸில் Fபில்மதா'இனி ஹாஷிரீன்
முஹம்மது ஜான்
அதற்கவர்கள், “அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணையைக் கொடுத்து விட்டு, பல பட்டிணங்களுக்குச் (சூனியக்காரர்களைத்) திரட்டிக்கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக!
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் தவணை கொடுத்துவிட்டு பல பட்டிணங்களுக்கும் துப்பறிபவர்களை அனுப்பிவை.
IFT
பிறகு அவர்கள் எல்லாரும் (ஃபிர்அவ்னுக்கு) ஆலோசனை கூறினார்கள்: “இவரையும் இவருடைய சகோதரரையும் சற்று நிறுத்தி வையுங்கள்! எல்லா ஊர்களுக்கும் ஆட்களை அனுப்புங்கள்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்கவர்கள், “அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் தவணை கொடுத்துவிட்டு, பல பட்டணங்களுக்கு (சூனியக்காரர்களைத்) திரட்டிக் கொண்டு வருபவர்களை அனுப்பி வை” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "Postpone [the matter of] him and his brother and send among the cities gatherers
یَاْتُوْكَ بِكُلِّ سٰحِرٍ عَلِیْمٍ ۟
يَاْتُوْكَஉம்மிடம் வருவார்கள்بِكُلِّஎல்லோரையும் கொண்டுسٰحِرٍசூனியக்காரர்عَلِيْمٍ‏கற்றறிந்தவர்
ய'தூக Bபிகுல்லி ஸாஹிரின் 'அலீம்
முஹம்மது ஜான்
“அவர்கள் சென்று சூனியத்தில் வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் சூனியத்தில் வல்லவர்களை உம்மிடம் அழைத்து வருவார்கள்'' என்று கூறினார்கள்.
IFT
தேர்ச்சி பெற்ற மந்திரவாதிகள் அனைவரையும் ஒன்று திரட்டி உங்களிடம் அழைத்து வருவதற்காக (ஆட்களை எல்லா ஊர்களுக்கும் அனுப்புங்கள்).
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவர்கள், நன்கறிந்த ஒவ்வொரு சூனியக்காரரையும் உம்மிடம் (அழைத்துக்) கொண்டு வருவார்கள்”(என்றும் கூறினார்கள்).
Saheeh International
Who will bring you every learned magician."
وَجَآءَ السَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوْۤا اِنَّ لَنَا لَاَجْرًا اِنْ كُنَّا نَحْنُ الْغٰلِبِیْنَ ۟
وَجَآءَவந்தார்(கள்)السَّحَرَةُசூனியக்காரர்கள்فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்قَالُوْۤاகூறினர்اِنَّநிச்சயமாகلَـنَاஎங்களுக்குلَاَجْرًاதிட்டமாக கூலிاِنْ كُنَّاநாங்கள் ஆகிவிட்டால்نَحْنُநாங்கள்الْغٰلِبِيْنَ‏மிகைத்தவர்களாக
வ ஜா'அஸ் ஸஹரது Fபிர்'அவ்ன காலூ இன்ன லனா ல அஜ்ஜ்ரன் இன் குன்னா னஹ்னுல் காலிBபீன்
முஹம்மது ஜான்
அவ்வாறே ஃபிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள். அவர்கள், “நாங்கள் (மூஸாவை) வென்றுவிட்டால், நிச்சயமாக எங்களுக்கு அதற்குரிய வெகுமதி கிடைக்குமல்லவா?” என்று கேட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறு அனுப்பியதில் பல திசைகளிலும் இருந்த) சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்து நாங்கள் ‘‘(மூஸாவை) ஜெயித்துவிட்டால் நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி உண்டு (அல்லவா?)'' என்று கேட்டனர்.
IFT
அவ்வாறே மந்திரவாதிகள் அனைவரும் ஃபிர்அவ்னிடம் வந்தார்கள். “நாங்கள் வெற்றி பெற்றால் அதற்கான வெகுமதி எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் அல்லவா?” என்று கேட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவ்வாறு அனுப்பியதில் பல திசைகளிலும் இருந்த) சூனியக்காரர்கள் ஃபிர் அவ்னிடம் வந்து” நாங்கள் (மூஸாவை) வென்றவர்களாக ஆகிவிட்டால் நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி உண்டா?” என்று கேட்டனர்.
Saheeh International
And the magicians came to Pharaoh. They said, "Indeed for us is a reward if we are the predominant."
قَالَ نَعَمْ وَاِنَّكُمْ لَمِنَ الْمُقَرَّبِیْنَ ۟
قَالَகூறினான்نَـعَمْஆம்!وَاِنَّكُمْஇன்னும் நிச்சயமாக நீங்கள்لَمِنَ الْمُقَرَّبِيْنَ‏நெருக்கமானவர்களில்
கால ன'அம் வ இன்னகும் லமினல் முகர்ரBபீன்
முஹம்மது ஜான்
அவன் கூறினான்: “ஆம் (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்). இன்னும் நிச்சயமாக நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவன் ‘‘ஆம்! (உங்களுக்கு வெகுமதி உண்டு.) மேலும், நிச்சயமாக நீங்கள் (நம் அரசவையிலும் எனக்கு) மிக்க நெருங்கியவர்களாக இருப்பீர்கள்'' என்றும் கூறினான்.
IFT
அதற்கு ஃபிர்அவ்ன், “ஆம்! மேலும், திண்ணமாக நீங்கள் அரசவையில் நெருக்கமானவர்களாயும் இருப்பீர்கள்” என்று பதிலுரைத்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதற்கவன், “ஆம்! (உங்களுக்கு வெகுமதி உண்டு) மேலும், நிச்சயமாக நீங்கள் (எம் சபையில் எமக்கு மிக்க) நெருக்கமாக்கப்பட்டவர்களிலுமிருப்பீர்கள் என்று கூறினான்.
Saheeh International
He said, "Yes, and, [moreover], you will be among those made near [to me]."
قَالُوْا یٰمُوْسٰۤی اِمَّاۤ اَنْ تُلْقِیَ وَاِمَّاۤ اَنْ نَّكُوْنَ نَحْنُ الْمُلْقِیْنَ ۟
قَالُوْاகூறினார்கள்يٰمُوْسٰٓىமூஸாவே!اِمَّاۤ اَنْ تُلْقِىَநீர் எறிகிறீரா?وَاِمَّاۤ اَنْ نَّكُوْنَஅவர்கள் நாங்கள் இருக்கவா?نَحْنُநாங்களேالْمُلْقِيْنَ‏எறிபவர்களாக
காலூ யா மூஸா இம்மா அன் துல்கிய வ இம்மா அன் னகூன னஹ்னுல் முல்கீன்
முஹம்மது ஜான்
“மூஸாவே! முதலில் நீர் எறிகிறீரா? அல்லது நாங்கள் எறியட்டுமா?” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.
அப்துல் ஹமீது பாகவி
(பின்னர், அச்சூனியக்காரர்கள் மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! (முதலில் உமது தடியை) நீங்கள் எறிகிறீரா? அல்லது நாம் எறிவதா?'' என்று கேட்டனர்.
IFT
பிறகு அவர்கள் மூஸாவிடம் கேட்டார்கள்: “நீர் எறிகிறீரா அல்லது நாங்கள் எறியட்டுமா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பின்னர் அச்சூனியக்காரர்கள்) “மூஸாவே (முதலில்) நீர் போடுகிறீரா? அல்லது (முதலில்) போடுபவர்களாக நாங்கள் இருக்கட்டுமா?” என்று கேட்டனர்.
Saheeh International
They said, "O Moses, either you throw [your staff], or we will be the ones to throw [first]."
قَالَ اَلْقُوْا ۚ فَلَمَّاۤ اَلْقَوْا سَحَرُوْۤا اَعْیُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوْهُمْ وَجَآءُوْ بِسِحْرٍ عَظِیْمٍ ۟
قَالَகூறினார்اَلْقُوْا‌ ۚஎறியுங்கள்فَلَمَّاۤ اَلْقَوْاஅவர்கள் எறிந்தபோதுسَحَرُوْۤاமயக்கினார்கள்اَعْيُنَகண்களைالنَّاسِமக்களுடையوَاسْتَرْهَبُوْஇன்னும் திடுக்கிடச் செய்தனர்هُمْஅவர்களைوَجَآءُوْஇன்னும் வந்தனர்بِسِحْرٍஒரு சூனியத்தைக்கொண்டுعَظِيْمٍ‏பெரியது
கால அல்கூ Fபலம் மா அல்கவ் ஸஹரூ அஃயுனன்னாஸி வஸ்தர்ஹBபூஹும் வ ஜா'ஊ Bபிஸிஹ்ரின் 'அளீம்
முஹம்மது ஜான்
அதற்கு (மூஸா), “நீங்கள் (முதலில்) எறியுங்கள்” என்று கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தை செய்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு மூஸா ‘‘நீங்களே (முதலில்) எறியுங்கள்'' என்று கூறினார். அவ்வாறு அவர்கள் எறிந்து மக்களுடைய கண்களைக் கட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தைச் செய்தனர்.
IFT
அதற்கு மூஸா, “நீங்களே எறியுங்கள்!” என்று கூறினார். அவர்கள் (தம்முடைய மந்திர சாதனங்களை) எறிந்தபோது (அவற்றின் மூலம்) மக்களின் கண்களை மயக்கி அவர்களைப் பீதிகொள்ளச் செய்தார்கள்; இவ்வாறு மாபெரும் சூனியத்தைச் செய்து காட்டினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) மூஸா “நீங்கள் (முதலில்) போடுங்கள்” என்று கூறினார்; அவ்வாறு அவர்கள் (தங்களது கைத்தடிகளை) போட்டபோது அதனால் மனிதர்களுடைய கண்களை(க் கட்டி) சூனியம் செய்தனர், அவர்களைத் திடுக்கிடும்படியும் செய்துவிட்டனர், இன்னும் மகத்தான சூனியத்தை அவர்கள் கொண்டு வந்து விட்டனர்.
Saheeh International
He said, "Throw," and when they threw, they bewitched the eyes of the people and struck terror into them, and they presented a great [feat of] magic.
وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اَنْ اَلْقِ عَصَاكَ ۚ فَاِذَا هِیَ تَلْقَفُ مَا یَاْفِكُوْنَ ۟ۚ
وَاَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلٰى مُوْسٰٓىமூஸாவிற்குاَنْ اَلْقِஎறிவீராக என்றுعَصَاكَ‌ ۚஉம் தடியைفَاِذَا هِىَ تَلْقَفُஅப்போது அது விழுங்கிவிட்டதுمَاஎவற்றைيَاْفِكُوْنَபோலியாக செய்வார்கள்
வ அவ்ஹய்னா இலா மூஸா அன் அல்கி 'அஸாக Fப இதா ஹிய தல்கFபு மா ய'Fபிகூன்
முஹம்மது ஜான்
அப்பொழுது நாம் “மூஸாவே! (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்” என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவற்றையும் விழுங்கி விட்டது.
அப்துல் ஹமீது பாகவி
அதுசமயம் நாம் ‘‘மூஸாவே! நீர் உமது தடியை எறிவீராக'' என்று அவருக்கு வஹ்யி அறிவித்தோம். அவ்வாறு அவர் எறியவே (அது பெரியதொரு பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவையும் விழுங்கிவிட்டது.
IFT
“நீர் உமது கைத்தடியைப் போடும்!” என்று நாம் மூஸாவுக்கு அறிவித்தோம். அவர் அதனைக் கீழே போட்டதும் அது அவர்கள் செய்த சூனியங்கள் அனைத்தையும் (நொடிப் பொழுதில்) விழுங்கி விட்டது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அது சமயம்) நாம், “மூஸாவுக்கு நீர் உம்முடைய கைத்தடியை போடும்)” என்றும் வஹீ அறிவித்தோம், (அவ்வாறு அவர் போடவே,) உடனே அது (பெரியதொரு பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்தவற்றை விழுங்கிவிட்டது.
Saheeh International
And We inspired to Moses, "Throw your staff," and at once it devoured what they were falsifying.
فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟ۚ
فَوَقَعَநிகழ்ந்ததுالْحَـقُّஉண்மைوَبَطَلَபொய்ப்பித்ததுمَا كَانُوْا يَعْمَلُوْنَ‌ۚ‏அவர்கள் செய்து கொண்டிருந்தது
Fபவக'அல் ஹக்கு வ Bபதல மா கானூ யஃமலூன்
முஹம்மது ஜான்
இவ்வாறு உண்மை உறுதியாயிற்று, அவர்கள் செய்த (சூனியங்கள்) யாவும் வீணாகி விட்டன.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வாறு அவர்கள் செய்த அனைத்தும் வீணாகி உண்மை உறுதியாயிற்று.
IFT
இவ்வாறு சத்தியம், சத்தியம்தான் என்று உறுதியாயிற்று. அவர்கள் செய்தவை யாவும் வீணாகி விட்டன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, உண்மை வெளிப்பட்டு விட்டது, அவர்கள் செய்து கொண்டிருந்தவை (யாவும்) வீணாகியும் விட்டது.
Saheeh International
So the truth was established, and abolished was what they were doing.
فَغُلِبُوْا هُنَالِكَ وَانْقَلَبُوْا صٰغِرِیْنَ ۟ۚ
فَغُلِبُوْاஆகவே தோற்கடிக்கப்பட்டனர்هُنَالِكَஅங்கேوَانْقَلَبُوْاஇன்னும் திரும்பினர்صٰغِرِيْنَ‌ۚ‏இழிவானவர்களாக
FபகுலிBபூ ஹுனாலிக வன்கலBபூ ஸாகிரீன்
முஹம்மது ஜான்
அங்கேயே தோற்கடிக்கப்பட்டார்கள்; அதனால் அவர்கள் சிறுமைப்பட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (கர்வம் கொண்டிருந்த) அவர்கள், அங்கு தோல்வியுற்று சிறுமைப்பட்ட வர்களாக மாறினார்கள்.
IFT
(ஃபிர்அவ்னும்) அவனுடைய நண்பர்களும் (வெற்றிவாகை சூடுவதற்குப் பதிலாக) இழிவை அடைந்தார்கள். அங்கே (போட்டி அரங்கில்) முறியடிக்கப்பட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (கர்வங்கொண்டிருந்த) அவர்கள் அங்கேயே வெற்றி கொள்ளப்பட்டனர், அவர்கள் சிறுமையடைந்தவர்களாகவும் திரும்பினார்கள்.,
Saheeh International
And they [i.e., Pharaoh and his people] were overcome right there and became debased.
وَاُلْقِیَ السَّحَرَةُ سٰجِدِیْنَ ۟ۚۖ
وَ اُلْقِىَதள்ளப்பட்டனர்السَّحَرَةُசூனியக்காரர்கள்سٰجِدِيْنَ ۙ‏சிரம் பணிந்தவர்களாக
வ உல்கியஸ் ஸஹரது ஸாஜிதீன்
முஹம்மது ஜான்
அன்றியும் அந்தச் சூனியக்காரர்கள் சிரம் பணிந்து:
அப்துல் ஹமீது பாகவி
அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்து விழுந்தனர்,
IFT
மேலும், அந்த மந்திரவாதிகளின் நிலை என்னவாயிற்று எனில், ஏதோ ஓர் உள்ளுணர்வு அவர்களை ஸஜ்தாவில் வீழ்த்தியது;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக (க்கீழே) வீழ்த்தப்பட்டனர்.
Saheeh International
And the magicians fell down in prostration [to Allah].
قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ
قَالُوْۤاகூறினார்கள்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்بِرَبِّஇறைவனைالْعٰلَمِيْنَ ۙ‏அகிலத்தார்களின்
காலூ ஆமன்னா Bபி ரBப்Bபில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
“அகிலங்களின் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம்;
அப்துல் ஹமீது பாகவி
‘‘அகிலத்தார் அனைவரின் இறைவனாகிய அல்லாஹ்வையே நாங்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டு விட்டோம்'' என்று கூறினார்கள்.
IFT
அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் ஏற்றுக் கொண்டோம்; அகிலங்களின் அதிபதியை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அகிலத்தாரின் இரட்சகனை நாங்கள் ஈமான்(விசுவாசம்) கொண்டுவிட்டோம்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "We have believed in the Lord of the worlds,
رَبِّ مُوْسٰی وَهٰرُوْنَ ۟
رَبِّஇறைவனானمُوْسٰىமூஸாوَهٰرُوْنَ‏இன்னும் ஹாரூனுடைய
ரBப்Bபி மூஸா வ ஹாரூன்
முஹம்மது ஜான்
“அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மூஸா, ஹாரூனுடைய இறைவனை நாங்களும் (நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினார்கள்.)
IFT
மூஸா மற்றும் ஹாரூனின் அதிபதியை!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவனே) மூஸாவிற்கும், ஹாரூனுக்கும் இரட்சகன்” (என்று கூறினார்கள்.)
Saheeh International
The Lord of Moses and Aaron."
قَالَ فِرْعَوْنُ اٰمَنْتُمْ بِهٖ قَبْلَ اَنْ اٰذَنَ لَكُمْ ۚ اِنَّ هٰذَا لَمَكْرٌ مَّكَرْتُمُوْهُ فِی الْمَدِیْنَةِ لِتُخْرِجُوْا مِنْهَاۤ اَهْلَهَا ۚ فَسَوْفَ تَعْلَمُوْنَ ۟
قَالَகூறினான்.فِرْعَوْنُஃபிர்அவ்ன்اٰمَنْتُمْநம்பிக்கை கொண்டீர்கள்بِهٖஅவரைقَبْلَமுன்னர்اَنْ اٰذَنَநான் அனுமதியளிப்பதற்குلَـكُمْ‌ۚஉங்களுக்குاِنَّநிச்சயமாகهٰذَاஇதுلَمَكْرٌசூழ்ச்சிதான்مَّكَرْتُمُوْهُசூழ்ச்சிசெய்தீர்கள்/அதைفِى الْمَدِيْنَةِநகரத்தில்لِتُخْرِجُوْاநீங்கள் வெளியேற்றுவதற்காகمِنْهَاۤஅதிலிருந்துاَهْلَهَا‌ ۚஅதில் வசிப்போரைفَسَوْفَ تَعْلَمُوْنَ‏அறிவீர்கள்
கால Fபிர்'அவ்னு ஆமன்தும் Bபிஹீ கBப்ல அன் ஆதன லகும்; இன்ன ஹாத லமக்ரும் மகர்துமூஹு Fபில்மதீனதி லிதுக்ரிஜூ மின்ஹா அஹ்லஹா Fபஸவ்Fப தஃலமூன்
முஹம்மது ஜான்
அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) “உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இது ஒரு சூழ்ச்சியாகும் - இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சியேயாகும் - இதன் விளைவை நீங்கள் அதிசீக்கிரம் அறிந்து கொள்வீர்கள்!
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) ‘‘உங்களுக்கு நான் அனுமதியளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக (மூஸாவுடன் கலந்து) நீங்கள் செய்த சதியாகும் இது. (இச்சதியின் பலனை) அதிசீக்கிரத்தில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
IFT
ஃபிர்அவ்ன் கூறினான்: “நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்பே நீங்கள் அவன் மீது நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? திண்ணமாக, இந்தத் தலைநகரில் நீங்கள் மேற் கொண்ட சூழ்ச்சியாகும் இது; இங்குள்ள ஆட்சியாளர்களை இங்கிருந்து நீங்கள் வெளியேற்ற வேண்டுமென்பதற்காக! விரைவில் (இதன் விளைவை) நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) ஃபிர் அவ்ன், “உங்களுக்கு நான் அனுமதியளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் (மூஸா, ஹாரூனுடைய இரட்சகனாகிய) அவனை விசுவாசங்கொண்டு விட்டீர்கள்? நிச்சயமாக இது ஒரு சதியாகும், இந்நகரத்தில் அதற்குரியவர்களை அதிலிருந்து நீங்கள் வெளியேற்றுவதற்காக இதை நீங்கள் செய்திருக்கிறீர்கள், ஆகவே, (இச்சதியின் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று கூறினான்.
Saheeh International
Said Pharaoh, "You believed in him before I gave you permission. Indeed, this is a conspiracy which you conspired in the city to expel therefrom its people. But you are going to know.
لَاُقَطِّعَنَّ اَیْدِیَكُمْ وَاَرْجُلَكُمْ مِّنْ خِلَافٍ ثُمَّ لَاُصَلِّبَنَّكُمْ اَجْمَعِیْنَ ۟
لَاُقَطِّعَنَّநிச்சயமாக வெட்டுவேன்اَيْدِيَكُمْஉங்கள் கைகளைوَاَرْجُلَكُمْஇன்னும் உங்கள் கால்களைمِّنْ خِلَافٍமாறாகثُمَّபிறகுلَاُصَلِّبَنَّكُمْநிச்சயமாக கழுமரத்தில் அறைவேன்/உங்களைاَجْمَعِيْنَ‏அனைவரையும்
ல உகத்தி'அன்ன அய்தியகும் வ அர்ஜுலகும் மின் கிலாFபின் தும்ம ல உஸல்லிBபன்னகும் அஜ்ம'ஈன்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக நான் உங்கள் கைகளையும், கால்களையும் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன்” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நான் உங்களை மாறு கை, மாறு கால் வெட்டி உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்து விடுவேன்'' என்று கூறினான்.
IFT
திண்ணமாக, நான் உங்களின் மாறுகை, மாறுகால்களைத் துண்டித்து விடுவேன். பின்னர் உங்கள் அனைவரையும் சிலுவையில் ஏற்றிவிடுவேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நான் உங்களுடைய கைகளையும் உங்களுடைய கால்களையும் மாறாக (ஒருபக்கத்துக் காலையும் மறுபக்கத்துக் கையையும்) துண்டித்து விடுவேன், அதன்பின் உங்கள் யாவரையும் கழுவேற்றுவேன்” என்று கூறினான்.
Saheeh International
I will surely cut off your hands and your feet on opposite sides; then I will surely crucify you all."
قَالُوْۤا اِنَّاۤ اِلٰی رَبِّنَا مُنْقَلِبُوْنَ ۟ۚ
قَالُـوْۤاகூறினர்اِنَّاۤநிச்சயமாக நாங்கள்اِلٰى رَبِّنَاஎங்கள் இறைவனிடம்مُنْقَلِبُوْنَ‌ۚ‏திரும்பக்கூடியவர்கள்
காலூ இன்னா இலா ரBப்Bபினா முன்கலிBபூன்
முஹம்மது ஜான்
அதற்கு அவர்கள்: “(அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தான் திரும்பிச் செல்வோம் (எனவே இதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை)” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘(அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம்தான் திரும்பிச் செல்வோம். (அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை)'' என்று கூறினார்கள்.
IFT
அவர்கள் பதில் கூறினார்கள்: “(எவ்வாறாயினும்) நாங்கள் எங்கள் இறைவனின் பக்கமே திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள் (அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இரட்சகனின்பால் திரும்பிச் செல்லக் கூடியவர்கள், (அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை)” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "Indeed, to our Lord we will return.
وَمَا تَنْقِمُ مِنَّاۤ اِلَّاۤ اَنْ اٰمَنَّا بِاٰیٰتِ رَبِّنَا لَمَّا جَآءَتْنَا ؕ رَبَّنَاۤ اَفْرِغْ عَلَیْنَا صَبْرًا وَّتَوَفَّنَا مُسْلِمِیْنَ ۟۠
وَمَا تَـنْقِمُநீ பழிக்கவில்லைمِنَّاۤஎங்களைاِلَّاۤதவிரاَنْ اٰمَنَّاஎன்பதற்காக / நம்பிக்கை கொண்டோம்بِاٰيٰتِஅத்தாட்சிகளைرَبِّنَاஎங்கள் இறைவனின்لَمَّاபோதுجَآءَتْنَا‌ ؕவந்தன/எங்களிடம்رَبَّنَاۤஎங்கள் இறைவாاَفْرِغْஇறக்குعَلَيْنَاஎங்கள் மீதுصَبْرًاபொறுமையைوَّتَوَفَّنَاகைப்பற்று/எங்களைمُسْلِمِيْنَ‏முஸ்லிம்களாக
வமா தன்கிமு மின்னா இல்லா அன் ஆமன்னா Bபி ஆயாதி ரBப்Bபினா லம்மா ஜா'அத்னா; ரBப்Bபனா அFப்ரிக் 'அலய்னா ஸBப்ர(ன்)வ் வ தவFப்Fபனா முஸ்லிமீன்
முஹம்மது ஜான்
“எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழி வாங்குகிறாய்?” என்று கூறி “எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” (எனப் பிரார்த்தித்தனர்.)
அப்துல் ஹமீது பாகவி
‘‘இன்னும், எங்களிடம் வந்த இறைவனின் அத்தாட்சிகளை நாங்கள் நம்பிக்கை கொண்டதைத் தவிர வேறு எதற்காகவும் நீ எங்களை பழிவாங்கவில்லை'' (என்று ஃபிர்அவ்னிடம் கூறிய பிறகு) ‘‘எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையைச் சொரிவாயாக! (உனக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக (எங்களை ஆக்கி) எங்களை நீ கைப்பற்றிக் கொள்வாயாக!'' (என்று பிரார்த்தித்தார்கள்.)
IFT
எங்கள் இறைவனுடைய சான்றுகள் எங்களிடம் வந்துவிட்டன; அவற்றின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுவிட்டோம் எனும் காரணத்திற்காகத்தான் நீ எங்களை பழிவாங்க நாடுகிறாய்! எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறு மையை அருள்வாயாக! மேலும், உனக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த நிலையிலேயே எங்களை மரணிக்கச் செய்வாயாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எங்கள் இரட்சகனின் அத்தாட்சிகளை-அவை எங்களிடம் வந்தபோது நாங்கள் ஈமான் கொண்டுவிட்டோம் என்பதற்கல்லாது நீ எங்களைத் தண்டிக்கவில்லை (என்று கூறிவிட்டு,) எங்கள் இரட்சகனே! எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக! இன்னும் (உனக்கு) முற்றிலும் கீழ்ப்பட்டவர்களாக (எங்களை ஆக்கி) நீ எங்க(ள் உயிர்)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” (என்றும் பிரார்த்தித்தார்கள்.)
Saheeh International
And you do not resent us except because we believed in the signs of our Lord when they came to us. Our Lord, pour upon us patience and let us die as Muslims [in submission to You]."
وَقَالَ الْمَلَاُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اَتَذَرُ مُوْسٰی وَقَوْمَهٗ لِیُفْسِدُوْا فِی الْاَرْضِ وَیَذَرَكَ وَاٰلِهَتَكَ ؕ قَالَ سَنُقَتِّلُ اَبْنَآءَهُمْ وَنَسْتَحْیٖ نِسَآءَهُمْ ۚ وَاِنَّا فَوْقَهُمْ قٰهِرُوْنَ ۟
وَقَالَகூறினார்(கள்)الْمَلَاُதலைவர்கள்مِنْ قَوْمِசமுதாயத்திலிருந்துفِرْعَوْنَஃபிர்அவ்னுடையاَتَذَرُநீ விட்டுவிடப்போகிறாயா?مُوْسٰىமூஸாவைوَقَوْمَهٗஇன்னும் அவருடைய சமுதாயத்தைلِيُفْسِدُوْاஅவர்கள் விஷமம் செய்வதற்குفِى الْاَرْضِபூமியில்وَيَذَرَكَஇன்னும் விட்டுவிடுவதற்கு/உன்னைوَاٰلِهَتَكَ‌ ؕஇன்னும் உன் தெய்வங்களைقَالَகூறினான்سَنُقَتِّلُகொன்று குவிப்போம்اَبْنَآءَஆண் பிள்ளைகளைهُمْஅவர்களுடையوَنَسْتَحْىٖஇன்னும் வாழவிடுவோம்نِسَآءَهُمْ‌ ۚஅவர்களுடைய பெண் (பிள்ளை)களைوَاِنَّاநிச்சயமாக நாம்فَوْقَهُمْஅவர்களுக்கு மேல்قَاهِرُوْنَ‏ஆதிக்கம் வகிப்பவர்கள்
வ காலல் மல-உ மின் கவ்மி Fபிர்'அவ்ன அததரு மூஸா வ கவ்மஹூ லியுFப்ஸிதூ Fபில் அர்ளி வ யதரக வ ஆலிஹதக்; கால ஸனுகத்திலு அBப்னா 'அஹும் வ னஸ்தஹ்யீ னிஸா'அஹும் வ இன்னா Fபவ்கஹும் காஹிரூன்
முஹம்மது ஜான்
அதற்கு, ஃபிர்அவ்னின் சமூகத் தலைவர்கள் (அவனை நோக்கி) “மூஸாவும் அவருடைய சமூகத்தாரும் பூமியில் குழப்பம் உண்டாக்கி, உம்மையும் உம் தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீர் அவர்களை விட்டு வைப்பீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “(அவ்வாறன்று!) நாம் அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிக் கொன்றுவிட்டு, (அவர்களைச் சிறுமைப் படுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை மட்டும் உயிருடன் வாழவிடுவோம் - நிச்சயமாக நாம் அவர்கள் மீது பூரண ஆதிக்கம் பெற்றுள்ளோம்” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு ஃபிர்அவ்னுடைய மக்களிலுள்ள தலைவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘மூஸாவும் அவருடைய மக்களும் பூமியில் விஷமம் செய்து உன்னையும், உனது தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீ அவர்களை விட்டு வைப்பாயா?'' என்று கேட்டார்கள். அதற்கவன் (அல்ல!) அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிவிட்டு (அவர்களை இழிவுபடுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை (மட்டும்) உயிருடன் வாழவிடுவோம். நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆதிக்கம் வகித்திருக்கிறோம். (ஆகவே, நாம் விரும்பியவாறெல்லாம் செய்யலாம்)'' என்று கூறினான்.
IFT
ஃபிர்அவ்னின் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் (ஃபிர்அவ்னிடம்) கேட்டார்கள்: “பூமியில் குழப்பம் விளைவிப்பதற்காகவும் உமக்கும் உம்முடைய கடவுள்களுக்கும் பணிந்து வாழ்வதைக் கைவிட்டு விடுவதற்குமா மூஸாவையும் அவருடைய சமூகத்தாரையும் நீர் விட்டு வைக்கின்றீர்?” அதற்கு ஃபிர்அவ்ன் பதிலளித்தான்: “நாம் அவர்களுடைய ஆண்மக்களைக் கொன்றுவிட்டு அவர்களுடைய பெண்மக்களை (மட்டும்) உயிர் வாழ விடுவோம். திண்ணமாக, அவர்கள் மீது நம்முடைய ஆதிக்கம் வலுவாக இருக்கிறது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், ஃபிர் அவ்னுடைய சமூகப்பிரதானிகள் (ஃபிர் அவ்னிடம்), “மூஸாவையும் அவருடைய சமூகத்தாரையும் பூமியில் குழப்பம் செய்வதற்காகவும், உம்மையும், உம் தெய்வங்களையும் (புறக்கணித்து) விட்டுவிடுவதற்காகவும் நீர் அவர்களை விட்டு வைப்பீரா?” என்று கேட்டார்கள், அ(தற்க)வன், “(அன்று) அவர்களுடைய ஆண்மக்களை வெட்டிக் கொன்று விடுவோம், அவர்களுடைய பெண் மக்களை (மட்டும்) உயிருடன் வாழவும் விடுவோம், இன்னும் நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள்” என்று கூறினான்.
Saheeh International
And the eminent among the people of Pharaoh said, "Will you leave Moses and his people to cause corruption in the land and abandon you and your gods?" [Pharaoh] said, "We will kill their sons and keep their women alive; and indeed, we are subjugators over them."
قَالَ مُوْسٰی لِقَوْمِهِ اسْتَعِیْنُوْا بِاللّٰهِ وَاصْبِرُوْا ۚ اِنَّ الْاَرْضَ لِلّٰهِ ۙ۫ یُوْرِثُهَا مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ ؕ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِیْنَ ۟
قَالَகூறினார்مُوْسٰىமூஸாلِقَوْمِهِதன் சமுதாயத்திற்குاسْتَعِيْنُوْاஉதவி தேடுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்விடம்وَاصْبِرُوْا‌ ۚஇன்னும் பொறுத்திருங்கள்اِنَّநிச்சயமாகالْاَرْضَபூமிلِلّٰهِ ۙஅல்லாஹ்வுக்குரியதேيُوْرِثُهَاவாரிசாக்குவான்/அதற்குمَنْஎவரைيَّشَآءُநாடுகிறான்مِنْ عِبَادِهٖ‌ ؕதன் அடியார்களில்وَالْعَاقِبَةُமுடிவுلِلْمُتَّقِيْنَ‏அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கே
கால மூஸா லிகவ்மிஹிஸ் த'ஈனூ Bபில்லாஹி வஸ்Bபிரூ இன்னல் அர்ள லில்லாஹி யூரிதுஹா மய் யஷா'உ மின் 'இBபாதிஹீ வல் 'ஆகிBபது லில்முத்தகீன்
முஹம்மது ஜான்
மூஸா தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் - தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு) மூஸா தன் இனத்தாரை நோக்கி ‘‘நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடி (ஃபிர்அவ்னால் உங்களுக்கு ஏற்படும் துன்பங்களை) பொறுமையுடன் சகித்திருங்கள். நிச்சயமாக இந்த பூமி அல்லாஹ்வுக்குரியதே! அதை அவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்குச் சொந்தமாக்கி விடுவான். (அல்லாஹ்வுக்கு) பயப்படுகிறவர்களே முடிவில் வெற்றி பெறுவார்கள்'' என்று கூறினார்.
IFT
மூஸா, தம் மக்களை நோக்கிக் கூறினார்: “அல்லாஹ்விடம் உதவி கோருங்கள்; மேலும், பொறுமையை மேற்கொள்ளுங்கள்! திண்ணமாக, இந்த பூமி அல்லாஹ்வுக்கு உரியது. தன் அடிமைகளில் தான் நாடுவோரை அதற்கு அவன் உரிமையாக்குகிறான். இன்னும் அவனுக்கு அஞ்சிய வண்ணம் வாழ்பவர்களுக்கே இறுதி வெற்றி இருக்கிறது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) மூஸா தன் சமூகத்தாரிடம், “நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள், இன்னும், பொறுமையாகவுமிருங்கள், சகித்திருங்கள், நிச்சயமாக இந்தப் பூமி அல்லாஹ்வுக்கே உரியது, இதனை அவன் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு (உரிமைப்படுத்தி) அனந்தரமாக்கி விடுவான், (நல்ல) முடிவு (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறவர்களுக்கே” என்று கூறினார்.
Saheeh International
Said Moses to his people, "Seek help through Allah and be patient. Indeed, the earth belongs to Allah. He causes to inherit it whom He wills of His servants. And the [best] outcome is for the righteous."
قَالُوْۤا اُوْذِیْنَا مِنْ قَبْلِ اَنْ تَاْتِیَنَا وَمِنْ بَعْدِ مَا جِئْتَنَا ؕ قَالَ عَسٰی رَبُّكُمْ اَنْ یُّهْلِكَ عَدُوَّكُمْ وَیَسْتَخْلِفَكُمْ فِی الْاَرْضِ فَیَنْظُرَ كَیْفَ تَعْمَلُوْنَ ۟۠
قَالُـوْۤاகூறினர்اُوْذِيْنَاதுன்புறுத்தப்பட்டோம்مِنْ قَبْلِமுன்னர்اَنْ تَاْتِيَنَاநீர் வருவதற்கு / எங்களிடம்وَمِنْۢ بَعْدِஇன்னும் பின்னர்مَا جِئْتَنَا‌ ؕநீர்வந்தது/எங்களிடம்قَالَகூறினார்عَسٰىகூடும்رَبُّكُمْஉங்கள் இறைவன்اَنْ يُّهْلِكَஅவன் அழித்துعَدُوَّكُمْஎதிரிகளை/உங்கள்وَيَسْتَخْلِفَكُمْஇன்னும் அதிபதிகளாக்க/உங்களைفِى الْاَرْضِபூமியில்فَيَنْظُرَகவனிப்பான்كَيْفَஎவ்வாறுتَعْمَلُوْنَ‏செய்கிறீர்கள்
காலூ ஊதீனா மின் கBப்லி அன் த'தியனா வ மிம் Bபஃதி மா ஜி'தனா; கால 'அஸா ரBப்Bபுகும் அய் யுஹ்லிக 'அதுவ்வகும் வ யஸ்தக்லி Fபகும் Fபில் அர்ளி Fபயன்ளுர கய்Fப தஃமலூன்
முஹம்மது ஜான்
“நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும் (துன்பப்பட்டோம்;) நீர் வந்த பின்னரும் துன்பப்படுகிறோம்” என்று அவர்கள் கூறினார்கள். அதற்கவர் கூறினார்: “உங்கள் இறைவன் உங்களுடைய பகைவர்களை அழித்து, உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைக்கக்கூடும்; நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்பதை அவன் கவனித்துக் கொண்டிருக்கின்றான்.”  
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு மூஸாவுடைய மக்கள் அவரை நோக்கி) நீங்கள் நம்மிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; நீங்கள் வந்ததன் பின்னரும் (துன்புறுத்தப்பட்டே வருகிறோம். நீங்கள் வந்ததால் எங்களுக்கு ஒன்றும் பயனேற்படவில்லை) என்று கூறினார்கள். (அதற்கு மூஸா) ‘‘உங்கள் இறைவன் உங்கள் எதிரிகளை அழித்து (அவர்களுடைய) பூமிக்கு உங்களை அதிபதியாக்கி வைக்கக்கூடும். உங்கள் நடத்தை எவ்வாறு இருக்கிறது என்பதை அவன் கவனித்துக் கொண்டு இருக்கிறான்'' என்று கூறினார்.
IFT
அதற்கு மூஸாவின் சமுதாயத்தார் கூறினார்கள்: “நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்பத்திற்குள்ளாக்கப்பட்டோம். இப்போது, எங்களிடம் நீர் வந்த பின்பும் (துன்புறுத்தப்பட்டு வருகின்றோம்).” அதற்கு மூஸா பதிலுரைத்தார்: “உங்கள் இறைவன் உங்களுடைய பகைவனை அழித்துவிட்டு, இப்பூமியில் உங்களைப் பிரதிநிதிகளாக்கி நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்பதைப் பார்க்கும் காலம் நெருங்கிவிட்டது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு மூஸாவுடைய சமூகத்தார் அவரிடம்,) “நீர் நம்மிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம், நீர் வந்ததன் பின்னரும் துன்புறுத்தப்பட்டே வருகின்றோம்.,) என்று அவர்கள் கூறினார்கள், (அதற்கு மூஸா,) உங்களுடைய இரட்சகன் உங்களுடைய விரோதிகளை அழித்து (அவர்களுடைய) பூமிக்கு உங்களை பின்தோன்றல்களாக்கி வைக்கக்கூடும், அப்பால் நீங்கள் எவ்வாறு செயலாற்றுகிறீர்கள் என்பதைக் கவனிப்பான் என்று கூறினார்.
Saheeh International
They said, "We have been harmed before you came to us and after you have come to us." He said, "Perhaps your Lord will destroy your enemy and grant you succession in the land and see how you will do."
وَلَقَدْ اَخَذْنَاۤ اٰلَ فِرْعَوْنَ بِالسِّنِیْنَ وَنَقْصٍ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ یَذَّكَّرُوْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاَخَذْنَاۤபிடித்தோம், சோதித்தோம், தண்டித்தோம்,اٰلَகுடும்பத்தாரைفِرْعَوْنَஃபிர்அவ்னுடையبِالسِّنِيْنَபஞ்சங்களாலும்وَنَقْصٍஇன்னும் குறைத்துمِّنَ الثَّمَرٰتِகனிகளைلَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ‏அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக
வ லகத் அகத்னா ஆல Fபிர்'அவ்ன Bபிஸ் ஸினீன வ னக்ஸிம் மினஸ் தமராதி ல'அல்லஹும் யத்தக்கரூன்
முஹம்மது ஜான்
பின்னர் நாம் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைப் பஞ்சம் பிடிக்கச் செய்து, விவசாயப் பலன்களைக் குறைத்துத் தண்டித்தோம் - அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், ஃபிர்அவ்னுடைய மக்களைப் பஞ்சத்தைக் கொண்டும் (அவர்களுடைய விவசாய) விளைச்சல்களில் நஷ்டத்தைக் கொண்டும் தண்டித்தோம். (இதனால்) அவர்கள் நல்லுணர்ச்சிப் பெற்றிருக்கலாம்.
IFT
ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைப் பல ஆண்டுகளாய் நீடித்த பஞ்சத்தினாலும், விளைபொருள் குறைவினாலும் சோதித்தோம்; அவர்கள் நல்லுணர்வு பெறவேண்டும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், ஃபிர் அவ்னைச் சார்ந்தவர்களை-அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக பஞ்சங்களைக் கொண்டும், காய்கனிப் பொருள்களில் குறைவைக் கொண்டும் திட்டமாக நாம் பிடித்தோம்.
Saheeh International
And We certainly seized the people of Pharaoh with years of famine and a deficiency in fruits that perhaps they would be reminded.
فَاِذَا جَآءَتْهُمُ الْحَسَنَةُ قَالُوْا لَنَا هٰذِهٖ ۚ وَاِنْ تُصِبْهُمْ سَیِّئَةٌ یَّطَّیَّرُوْا بِمُوْسٰی وَمَنْ مَّعَهٗ ؕ اَلَاۤ اِنَّمَا طٰٓىِٕرُهُمْ عِنْدَ اللّٰهِ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
فَاِذَا جَآءَتْهُمُஅவர்களுக்குவந்தால்الْحَسَنَةُஇன்பம்قَالُوْاகூறுவார்கள்لَـنَاஎங்களுக்குهٰذِهٖ‌ ۚஇதுوَاِنْ تُصِبْهُمْஅவர்களை அடைந்தால்سَيِّئَةٌஒரு துன்பம்يَّطَّيَّرُوْاதுர்ச்சகுணமாக எண்ணுவார்கள்بِمُوْسٰىமூஸாவையும்وَمَنْஇன்னும் எவர்கள்مَّعَهٗ‌ ؕஅவருடன்اَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்!اِنَّمَاஎல்லாம்طٰٓٮِٕرُهُمْதுர்ச்சகுணம்/அவர்களுடையعِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்தான்وَلٰـكِنَّஎனினும்اَكْثَرَهُمْஅவர்களில் அதிகமானவர்கள்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
Fப இதா ஜா'அத் ஹுமுல் ஹஸனது காலூ லனா ஹாதிஹீ வ இன் துஸிBப்ஹும் ஸய்யி'அது(ன்)ய் யத்தய்யரூ Bபி மூஸா வ மம் ம'அஹ்; அலா இன்னமா தா'இருஹும் 'இன்தல் லாஹி வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
முஹம்மது ஜான்
அவர்களுக்கு ஒரு நன்மை வருமானால், “அது நமக்கு (உரிமையாக) வரவேண்டியது தான்” என்று கூறினார்கள்; ஆனால் அவர்களுக்கு ஒரு கெடுதி ஏற்படுமானால், அது மூஸாவினாலும், அவருடனிருப்பவர்களாலும் வந்த பீடையென்பார்கள்; அறிந்து கொள்ளுங்கள்: அவர்களுடைய இந்த துர்பாக்கியமெல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது - எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
எனினும் அவர்களோ, அவர்களுக்கு (ஒரு) நன்மை வரும் சமயத்தில் எங்களுக்கு (வரவேண்டியது)தான் வந்தது என்றும், ஒரு தீங்கேற்படும் சமயத்தில் ‘‘(இது எங்களுக்கு வரவேண்டியதல்ல. எனினும் பீடை பிடித்த இந்த) மூஸாவாலும், அவருடைய மக்களாலுமே வந்தது'' என்றும் கூறினார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட (இத்)துர்ப்பாக்கியம் அல்லாஹ்விடம் இருந்தே வந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்வதில்லை.
IFT
ஆனால் (அவர்களின் நிலை எவ்வாறிருந்ததெனில்) அவர்களுக்கு நல்ல காலம் வந்துவிட்டால், “நாங்கள் இதற்கு உரியவர்கள்தாம்!” என்று கூறுவார்கள்; அவர்களுக்கு கெட்டகாலம் ஏற்பட்டு விட்டாலோ மூஸாவையும், அவருடன் உள்ளவர்களையும் (தமக்கு நேர்ந்த) அபசகுனமாய்க் கருதுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்: உண்மையில் அவர்களுடைய அபசகுனம் அல்லாஹ்விடமே இருக்கிறது. ஆயினும், அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாயிருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவர்களுக்கு (யாதொரு) நன்மை வருமானால், இது எங்களுக்கே உரியது எனக் கூறுகிறார்கள், மேலும், அவர்களுக்கு தீமை ஏற்படுமானால், மூஸாவையும், அவருடனிருப்பவர்களையும் (கொண்டு ஏற்பட்ட)துர்ச்சகுனம் என்பார்கள், அவர்களுடைய துர்ச்சகுனமெல்லாம் அல்லாஹ்விடமிருந்தே (வந்து) உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள், எனினும், அவர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்துகொள்வதில்லை.
Saheeh International
But when good [i.e., provision] came to them, they said, "This is ours [by right]." And if a bad [condition] struck them, they saw an evil omen in Moses and those with him. Unquestionably, their fortune is with Allah, but most of them do not know.
وَقَالُوْا مَهْمَا تَاْتِنَا بِهٖ مِنْ اٰیَةٍ لِّتَسْحَرَنَا بِهَا ۙ فَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِیْنَ ۟
وَقَالُوْاஇன்னும் கூறினார்கள்مَهْمَاஎவ்வளவோتَاْتِنَاஎங்களிடம் வந்தாலும்بِهٖஅதைக் கொண்டுمِنْ اٰيَةٍஅத்தாட்சியைلِّـتَسْحَرَنَاநீர் எங்களை ஏமாற்றுவதற்காக, திசை திருப்புவதற்காகبِهَا ۙஅதன் மூலம்فَمَا نَحْنُநாங்கள் இல்லைلَكَஉம்மைبِمُؤْمِنِيْنَ‏நம்பிக்கை கொள்பவர்களாக
வ காலூ மஹ்மா தாதினா Bபிஹீ மின் ஆயதில் லிதஸ்'ஹரனா Bபிஹா Fபமா னஹ்னு லக Bபிமு'மினீன்
முஹம்மது ஜான்
அவர்கள் மூஸாவிடம், “நீர் எங்களை வசியப்படுத்த எவ்வளவு அத்தாட்சிகளைக் கொண்டு வந்த போதிலும், நாங்கள் உம்மை நம்பக்கூடியவர்களாக இல்லை” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இன்னும், அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘நீர் எங்களை வசப்படுத்துவதற்காக எவ்வளவோ (அற்புதமான) சூனியத்தை எங்கள் முன் செய்த போதிலும் நாங்கள் உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்'' என்று கூறிவிட்டார்கள்.
IFT
அவர்கள் (மூஸாவிடம்) கூறினார்கள்: “நீர் எங்களைக் கவர்ந்திழுப்பதற்காக எந்தச் சான்றுகளை எங்களிடம் கொண்டு வந்தாலும், நாங்கள் நீர் கூறுவதை ஏற்றுக்கொள்பவர்களாய் இல்லை.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், அவர்கள் (மூஸாவிடம்)” அவற்றின் மூலம் நீர் எங்களை வசியப்படுத்துவதற்காக எவ்வளவு (அற்புதமான) அத்தாட்சியை நீர் (எங்களுக்குக்) கொண்டுவந்த போதிலும், நாங்கள் உம்மை விசுவாசிக்கக்கூடியவர்களாக இல்லை” என்று கூறினார்கள்.
Saheeh International
And they said, "No matter what sign you bring us with which to bewitch us, we will not be believers in you."
فَاَرْسَلْنَا عَلَیْهِمُ الطُّوْفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ اٰیٰتٍ مُّفَصَّلٰتٍ ۫ فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِیْنَ ۟
فَاَرْسَلْنَاஆகவே அனுப்பினோம்عَلَيْهِمُஅவர்கள் மீதுالطُّوْفَانَபுயல் காற்றைوَالْجَـرَادَஇன்னும் வெட்டுக்கிளிகளைوَالْقُمَّلَஇன்னும் பேன்களைوَالضَّفَادِعَஇன்னும் தவளைகளைوَالدَّمَஇன்னும் இரத்தத்தைاٰيٰتٍஅத்தாட்சிகளாகمُّفَصَّلٰتٍதெளிவானவைفَاسْتَكْبَرُوْاஅவர்கள் பெருமையடித்தனர்وَكَانُوْاஇன்னும் இருந்தனர்قَوْمًاமக்களாகمُّجْرِمِيْنَ‏குற்றம் புரிகின்றவர்கள்
Fப அர்ஸல்னா 'அலய்ஹிமுத் தூFபான வல்ஜராத வல்கும் மல வள்ளFபாதி'அ வத்தம ஆயாதிம் முFபஸ்ஸலாதின் Fபஸ்தக்Bபரூ வ கானூ கவ்மம் முஜ்ரிமீன்
முஹம்மது ஜான்
ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர்கள் மீது (மழையுடன் கூடிய) புயல் காற்று, வெட்டுக்கிளி, பேன், தவளை, இரத்தம் ஆகிய தெளிவான இவ்வத்தாட்சிகளை (ஒன்றன் பின் ஒன்றாக) நாம் அனுப்பிவைத்தோம். (இதன்) பின்னரும் அவர்கள் கர்வம்கொண்டு குற்றம் செய்யும் மக்களாகவே இருந்தார்கள்.
IFT
இறுதியில் நாம் அவர்கள் மீது புயல் மழையை அனுப்பினோம்; மேலும், வெட்டுக்கிளியை ஏவினோம்; பேன்களைப் பரப்பினோம்; தவளைகளைப் பெருகச் செய்தோம்; இரத்தத்தைப் பொழியச் செய்தோம். இந்தச் சான்றுகள் அனைத்தையும் தனித்தனியே காண்பித்தோம். ஆயினும், அவர்கள் ஆணவம் கொண்டு நடந்தனர்; கொடூர குற்றவாளிகளாகவும் இருந்தனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே. அவர்கள் மீது (மழையுடன் கூடிய) புயல் காற்று வெட்டுக்கிளி, பேன், தவளைகள், இரத்தம் ஆகியவற்றை தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன் பின் ஒன்றாக) நாம் அனுப்பி வைத்தோம், (இதன் பின்னரும்) அவர்கள் கர்வங்கொண்டார்கள், குற்றம் செய்யும் சமூகத்தாராகவும் அவர்கள் இருந்தார்கள்.
Saheeh International
So We sent upon them the flood and locusts and lice and frogs and blood as distinct signs, but they were arrogant and were a criminal people.
وَلَمَّا وَقَعَ عَلَیْهِمُ الرِّجْزُ قَالُوْا یٰمُوْسَی ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَ ۚ لَىِٕنْ كَشَفْتَ عَنَّا الرِّجْزَ لَنُؤْمِنَنَّ لَكَ وَلَنُرْسِلَنَّ مَعَكَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ۚ
وَلَمَّاபோதுوَقَعَநிகழ்ந்ததுعَلَيْهِمُஅவர்கள் மீதுالرِّجْزُவேதனைقَالُوْاகூறினர்يٰمُوْسَىமூஸாவே!ادْعُபிரார்த்திப்பீராகلَـنَاஎங்களுக்காகرَبَّكَஉம் இறைவனிடம்بِمَا عَهِدَஅவன் வாக்குறுதி கொடுத்ததைக் கொண்டுعِنْدَكَ‌ۚஉம்மிடம்لَٮِٕنْ كَشَفْتَநீர் நீக்கினால்عَنَّاஎங்களை விட்டுالرِّجْزَவேதனையைلَـنُؤْمِنَنَّநிச்சயமாக நம்பிக்கைகொள்வோம்لَكَஉம்மைوَلَـنُرْسِلَنَّநிச்சயமாக அனுப்புவோம்مَعَكَஉம்முடன்بَنِىْۤ اِسْرَآءِيْلَ‌ۚ‏இஸ்ரவேலர்களை
வ லம்மா வக'அ 'அலய்ஹிமுர் ரிஜ்Zஜு காலூ ய மூஸத்-உ லனா ரBப்Bபக Bபிமா 'அஹித 'இன்தக ல'இன் கஷFப்த 'அன்னர் ரிஜ்Zஜ லனு 'மினன்ன லக வ லனுர்ஸிலன்ன ம'அக Bபனீ இஸ்ரா'ஈல்
முஹம்மது ஜான்
தங்கள் மீது வேதனை ஏற்பட்ட போதெல்லாம் அவர்கள் “மூஸாவே! உம் இறைவன் உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி எங்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! எங்களை விட்டும் இவ் வேதனையை நீர் நீக்கி விட்டால், நிச்சயமாக நாங்கள் உம்மீது நம்பிக்கை கொண்டு இஸ்ரவேலர்களை உம்முடன் மேலும் நிச்சயமாக அனுப்பி விடுகிறோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் மீது (இவற்றில் ஒரு) வேதனை வரும்போதெல்லாம் அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! உம் இறைவன் (உங்கள் பிரார்த்தனையை அங்கீகரிப்பதாக) உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி (இந்த சிரமத்தை நீக்கும்படி) நமக்காக நீர் பிரார்த்தனை செய்யுங்கள். நமது சிரமத்தை நீங்கள் நீக்கினால் நிச்சயமாக நாங்கள் உம்மை நம்பிக்கை கொண்டு இஸ்ராயீலின் சந்ததிகளையும் நிச்சயமாக நாம் உம்முடன் அனுப்பி விடுகிறோம்'' என்று கூறுவார்கள்.
IFT
(எப்பொழுதேனும்) அவர்களுக்குத் துன்பம் நேர்ந்தால், அவர்கள் கூறுவார்கள்: “மூஸாவே! உம்முடைய இறைவனிடம் உமக்கு அவன் அளித்துள்ள அந்தஸ்தைக் கொண்டு எங்களுக்காக நீர் பிரார்த்தனை புரியும்; எங்களை விட்டு இத்துன்பத்தை நீர் நீக்கச் செய்தால், திண்ணமாக, நாங்கள் உம் கூற்றை ஏற்றுக்கொள்வோம்; இஸ்ராயீலின் வழித்தோன்றல்களையும் உம்முடன் அனுப்பி வைப்போம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களின் மீது (வானத்திலிருந்து) வேதனை வரும் போதெல்லாம் அவர்கள் (மூஸாவிடம்) “மூஸாவே! உமதிரட்சகனிடம் அவன் உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின் பிரகாரம், (இக்கஷ்டத்தை நீக்கும்படி) எங்களுக்காக நீர் பிரார்த்தனை செய்வீராக! எங்களை விட்டும் இவ்வேதனையை நீர் நீக்கிவிட்டால், நிச்சயமாக நாங்கள் உம்மை விசுவாசித்து,இஸ்ராயீலின் மக்களையும் நாம் உம்முடன் அனுப்பி விடுவோம்” என்றும் கூறினார்கள்.
Saheeh International
And when the punishment descended upon them, they said, "O Moses, invoke for us your Lord by what He has promised you. If you [can] remove the punishment from us, we will surely believe you, and we will send with you the Children of Israel."
فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الرِّجْزَ اِلٰۤی اَجَلٍ هُمْ بٰلِغُوْهُ اِذَا هُمْ یَنْكُثُوْنَ ۟
فَلَمَّاபோதுكَشَفْنَاநீக்கினோம்عَنْهُمُஅவர்களை விட்டுالرِّجْزَவேதனையைاِلٰٓىவரைاَجَلٍஒரு தவணைهُمْஅவர்கள்بٰلِغُوْهُஅடைபவர்கள்/அதைاِذَاஅப்போதுهُمْஅவர்கள்يَنْكُثُوْنَ‏முறித்து விடுகின்றனர்
Fபலம்மா கஷFப்னா 'அன்ஹுமுர் ரிஜ்Zஜ இலா அஜலின் ஹும் Bபாலிகூஹு இதா ஹும் யன்குதூன்
முஹம்மது ஜான்
அவர்கள் அடைந்துவிடக்கூடிய ஒரு தவணை வரை வேதனையை அவர்களை விட்டும் நாம் நீக்கியபோது அவர்கள் மாறு செய்தே வந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் அவர்களுடைய வேதனையை நீக்கியபோதெல்லாம் (அவர்கள் தங்கள் வாக்குறுதிக்கு மாறுசெய்துகொண்டே வந்தார்கள்.) இவ்வாறு அவர்களுக்கு ஏற்பட்ட (இறுதி) தவணையை அவர்கள் அடையும்வரை (தொடர்ந்து) மாறு செய்தே வந்தனர்.
IFT
ஆயினும், எந்த நிலையிலும் அவர்கள் அடையவிருக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவர்களை விட்டு வேதனையை நாம் நீக்கிவிட்டாலோ உடனே அவர்கள் (தம் வாக்குறுதியை) முறித்துவிடுகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அதை அவர்கள் சென்றடையும் ஒரு தவணை வரை அவர்களைவிட்டும் வேதனையை நாம் நீக்கியபொழுது, அச்சமயம் அவர்கள் (தாம் அளித்த வாக்குறுதியை) முறித்து விடுகின்றனர்.
Saheeh International
But when We removed the punishment from them until a term which they were to reach, then at once they broke their word.
فَانْتَقَمْنَا مِنْهُمْ فَاَغْرَقْنٰهُمْ فِی الْیَمِّ بِاَنَّهُمْ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَكَانُوْا عَنْهَا غٰفِلِیْنَ ۟
فَانْتَقَمْنَاஆகவே பழி தீர்த்தோம்مِنْهُمْஅவர்களிடம்فَاَغْرَقْنٰهُمْஆகவே மூழ்கடித்தோம்/அவர்களைفِى الْيَمِّகடலில்بِاَنَّهُمْகாரணம்/நிச்சயமாக அவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தனர்بِاٰيٰتِنَاநம் அத்தாட்சிகளைوَكَانُوْاஇன்னும் இருந்தனர்عَنْهَاஅவற்றை விட்டுغٰفِلِيْنَ‏கவனமற்றவர்களாக
Fபன்தகம்னா மின்ஹும் Fப'அக்ரக்னாஹும் Fபில்'யம்மி Bபி அன்னஹும் கத்தBபூ Bபி ஆயாதினா வ கானூ 'அன்ஹா காFபிலீன்
முஹம்மது ஜான்
ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாமல்; அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டு இருந்ததால், அவர்களைக் கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழிவாங்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாது (இவ்வாறு) அவற்றைப் பொய்யாக்கிக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழி வாங்கினோம்.
IFT
ஆகையால் அவர்களை நாம் பழிவாங்கினோம்; மேலும், கடலிலே அவர்களை மூழ்கடித்தோம். ஏனெனில் அவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய்யெனக் கூறினார்கள்; மேலும், அவற்றைக் குறித்து அலட்சியமாகவும் இருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, நிச்சயமாக அவர்கள் நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்யாக்கி (அவற்றைப் பொருட்படுத்தாது) மறதியாளர்களாகவும், அவர்கள் இருந்ததன் காரணமாக அவர்களை நாம் தண்டித்தோம், (அப்போது) அவர்களைக் கடலில் மூழ்கடித்தும் விட்டோம்.
Saheeh International
So We took retribution from them, and We drowned them in the sea because they denied Our signs and were heedless of them.
وَاَوْرَثْنَا الْقَوْمَ الَّذِیْنَ كَانُوْا یُسْتَضْعَفُوْنَ مَشَارِقَ الْاَرْضِ وَمَغَارِبَهَا الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا ؕ وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ الْحُسْنٰی عَلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۙ۬ بِمَا صَبَرُوْا ؕ وَدَمَّرْنَا مَا كَانَ یَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهٗ وَمَا كَانُوْا یَعْرِشُوْنَ ۟
وَاَوْرَثْنَاவாரிசாக்கினோம்الْقَوْمَசமுதாயத்தைالَّذِيْنَஎவர்கள்كَانُوْاஇருந்தனா்يُسْتَضْعَفُوْنَபலவீனமாகக் கருதப்படுவர்مَشَارِقَகிழக்குப்பகுதிகளுக்குالْاَرْضِபூமியின்وَمَغَارِبَهَاஇன்னும் மேற்குப் பகுதிகளுக்குالَّتِىْஎதுبٰرَكْنَاஅருள் வளம் புரிந்தோம்فِيْهَا‌ ؕஅதில்وَتَمَّتْஇன்னும் முழுமையடைந்ததுكَلِمَتُவாக்குرَبِّكَஉம் இறைவனின்الْحُسْنٰىமிக அழகியதுعَلٰىமீதுبَنِىْۤ اِسْرَاۤءِيْلَۙஇஸ்ரவேலர்கள்بِمَا صَبَرُوْا‌ ؕஅவர்கள் பொறுத்ததால்وَدَمَّرْنَاஇன்னும் நாசப்படுத்தினோம்مَاஎவற்றைكَانَஇருந்தான்يَصْنَعُசெய்வான்فِرْعَوْنُஃபிர்அவ்னும்وَقَوْمُهٗஇன்னும் அவனுடைய சமுதாயமும்وَمَاஇன்னும் எவற்றைكَانُوْاஇருந்தனர்يَعْرِشُوْنَ‏உயர்த்திக் கட்டுவார்கள்
வ அவ்ரத்னல் கவ்மல் லதீன கானூ யுஸ்தள்'அFபூன மஷாரிகல் அர்ளி வ மகாரி Bபஹல் லதீ Bபாரக்னா Fபீஹா வ தம்மத் கலிமது ரBப்Bபிகல் ஹுஸ்னா 'அலா Bபனீ இஸ்ரா'ஈல Bபிமா ஸBபரூ வ தம்மர்னா மா கான யஸ்ன'உ Fபிர்'அவ்னு வ கவ்முஹூ வமா கானூ யஃரிஷூன்
முஹம்மது ஜான்
எனவே, எவர்கள் சக்தி குறைந்தவர்களாகக் கருதப்பட்டார்களோ அந்த இஸ்ரவேலர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள நிலப்பகுதிகளின் அதிபதிகளாக்கினோம்; இன்னும் அவற்றிலே பெரும் பாக்கியங்களையும் அளித்தோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையாகவும், உறுதியாகவும் இருந்த காரணத்தால், அவர்கள் மீது உம் இறைவனுடைய அழகிய வாக்குப் பரிபூரணமாகி நிறைவேறிற்று; மேலும் ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தாரும் உண்டுபண்ணியிருந்தவற்றையும், கட்டியிருந்த மாடமாளிகைகளையும் நாம் தரைமட்டமாக்கி விட்டோம்.
அப்துல் ஹமீது பாகவி
இன்னும், எவர்களை இவர்கள் பலவீனமானவர்களென்று (கேவலமாக) எண்ணிக் கொண்டிருந்தார்களோ அந்த மக்களுக்கே மிக்க பாக்கியமுள்ள (அவர்களுடைய) பூமியின் கிழக்குப் பாகங்களையும், மேற்குப் பாகங்களையும் சொந்தமாக்கிக் கொடுத்தோம். ஆகவே, இஸ்ராயீலின் சந்ததிகள் (ஃபிர்அவ்னால் ஏற்பட்ட கஷ்டங்களை) பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (அவர்களுக்கு) உங்கள் இறைவன் கொடுத்த வாக்கு மிக நல்ல விதமாகவே நிறைவேறிற்று. ஃபிர்அவ்னும் அவனுடைய மக்களும் கட்டியிருந்த மாட மாளிகைகளையும் (உற்பத்தி செய்திருந்த தோட்டம் துறவுகளையும்) நாம் தரைமட்டமாக்கி விட்டோம்.
IFT
பிறகு (இவர்களுக்குப் பதிலாக) பலவீனமாக்கப்பட்டிருந்த மக்களை, நம்மால் அருள்வளமாக்கப்பட்ட பூமியின் கிழக்குப் பகுதிகளுக்கும் மேற்குப் பகுதிகளுக்கும் வாரிசுகளாக்கினோம். (இவ்வாறாக) உம் இறைவனின் சிறப்பான வாக்குறுதி இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் விஷயத்தில் முழுமையாக நிறைவேறியது. ஏனென்றால், அவர்கள் பொறுமையை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், ஃபிர்அவ்னும், அவனுடைய கூட்டத்தாரும் உருவாக்கியிருந்தவற்றையும், உயர்த்திக் கட்டியிருந்தவற்றையும் நாம் பாழாக்கி விட்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், பலமற்றவர்கள் எனக் கருதப்பட்டிருந்தார்களே, அத்தகைய சமூகத்தவரை, எதில் நாம் பெரும்பாக்கியங்களை நல்கியிருந்தோமோ அத்தகைய பூமியில் கிழக்குப்பகுதிகளுக்கும், அதன் மேற்குப்பகுதிகளுக்கும் நாம் வாரிசுகளாக்கினோம், மேலும், இஸ்ராயீலின் மக்கள் மீது (ஃபிர் அவ்னால் ஏற்பட்ட கஷ்டங்களைப்) பொறுமையுடன் அவர்கள் (சகித்துக்கொண்டு) இருந்ததன் காரணமாக உம் இரட்சகனின் அழகிய வாக்கு பரிபூரணமாகி (நிறைவேறி) விட்டது, மேலும், ஃபிர் அவ்னும், அவனுடைய சமூகத்தாரும் (மாட மாளிகைகளாக) உற்பத்தி செய்திருந்தவைகளையும், (மிக உயர்வாகக்கட்டி) அவர்கள் உயர்த்தியிருந்தவைகளையும் நாம் தரைமட்டமாக்கி விட்டோம்.
Saheeh International
And We caused the people who had been oppressed to inherit the eastern regions of the land and the western ones, which We had blessed. And the good word [i.e., decree] of your Lord was fulfilled for the Children of Israel because of what they had patiently endured. And We destroyed [all] that Pharaoh and his people were producing and what they had been building.
وَجٰوَزْنَا بِبَنِیْۤ اِسْرَآءِیْلَ الْبَحْرَ فَاَتَوْا عَلٰی قَوْمٍ یَّعْكُفُوْنَ عَلٰۤی اَصْنَامٍ لَّهُمْ ۚ قَالُوْا یٰمُوْسَی اجْعَلْ لَّنَاۤ اِلٰهًا كَمَا لَهُمْ اٰلِهَةٌ ؕ قَالَ اِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ ۟
وَجَاوَزْنَاகடக்க வைத்தோம்بِبَنِىْۤ اِسْرَاۤءِيْلَஇஸ்ரவேலர்களைالْبَحْرَகடலைفَاَ تَوْاவந்தனர்عَلٰىஅருகில்قَوْمٍஒரு சமுதாயத்தின்يَّعْكُفُوْنَவழிபாட்டுக்காக தங்கியிருக்கின்றனர்عَلٰٓى اَصْنَامٍசிலைகளுக்கருகில்لَّهُمْ‌ ۚதங்கள்قَالُوْاகூறினர்يٰمُوْسَىமூஸாவே!اجْعَلْஏற்படுத்துلَّـنَاۤஎங்களுக்குاِلٰهًاவணங்கப்படும் ஒரு கடவுளைكَمَاபோல்لَهُمْஅவர்களுக்குاٰلِهَةٌ‌  ؕவணங்கப்படும் கடவுள்கள்قَالَகூறினார்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்قَوْمٌசமுதாயம்تَجْهَلُوْنَ‏அறியமாட்டீர்கள்
வ ஜாவZஜ்னா Bபி Bபனீ இஸ்ரா'ஈலல் Bபஹ்ர Fப அதவ் 'அலா கவ்மி(ன்)ய் யஃகுFபூன 'அலா அஸ்னாமில் லஹும்; காலூ யா மூஸஜ்'அல் லனா இலாஹன் கமா லஹும் ஆலிஹஹ்; கால இன்னகும் கவ்முன் தஜ்ஹலூன்
முஹம்மது ஜான்
நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக்கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், “மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக!” என்று வேண்டினர்; “நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்” என்று மூஸா (அவர்களிடம்) கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் இஸ்ராயீலின் சந்ததிகளை கடலைக் கடத்தி (அழைத்து)ச் சென்ற சமயம் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு சமூகத்தினர் அருகில் அவர்கள் சென்றபொழுது, (அதைக் கண்ணுற்ற அவர்கள் மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! அவர்கள் வைத்திருக்கும் சிலைகளைப் போல் எங்களுக்கும் ஒரு சிலையை (நாங்கள் வணங்குவதற்கு) ஆக்கிவைப்பீராக!'' என்று கூறினார்கள். அதற்கு (மூஸா அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள்'' என்று கூறினார்.
IFT
நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களைக் கடலைக் கடக்க வைத்தோம். பின்னர் (அவர்கள் தமது பயணத்தைத் தொடர்ந்தபோது) தம் சிலைகள் மீது பக்தி கொண்டிருந்த ஒரு சமுதாயத்தை அவர்கள் கடந்து செல்ல நேர்ந்தது. (உடனே) அவர்கள் “மூஸாவே! இம்மக்களுக்கு கடவுள்கள் இருப் பதுபோல் எங்களுக்கும் ஒரு கடவுளை உருவாக்கித் தாரும்!” என்று கூறலானார்கள். அதற்கு மூஸா கூறினார்: “திண்ணமாக, நீங்கள் அறிவில்லாமல் பேசும் கூட்டத்தினராய் இருக்கின்றீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நாம் இஸ்ராயீலின் மக்களைக் கடலைக் கடந்து செல்ல வைத்தோம், (அப்போது) தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு சமூகத்தினர் அருகில் அவர்கள் வந்தடைந்தனர், (அப்போது, மூஸாவிடம்,) மூஸாவே! அவர்களுக்கு தெய்வங்கள் இருப்பதைப்போல் எங்களுக்கும் ஒரு தெய்வத்தை (நாங்கள் வணங்குவதற்கு) ஆக்கி வைப்பீராக!” என்று கூறினார்கள், அதற்கு (மூஸாவாகிய) அவர், நிச்சயமாக நீங்கள் அறியாதவர்களான ஓர் கூட்டத்தினராவீர்கள் என்று கூறினார்.
Saheeh International
And We took the Children of Israel across the sea; then they came upon a people intent in devotion to [some] idols of theirs. They [the Children of Israel] said, "O Moses, make for us a god just as they have gods." He said, "Indeed, you are a people behaving ignorantly.
اِنَّ هٰۤؤُلَآءِ مُتَبَّرٌ مَّا هُمْ فِیْهِ وَبٰطِلٌ مَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
اِنَّநிச்சயமாகهٰٓؤُلَۤاءِஇவர்கள்مُتَبَّرٌஅழிக்கப்படக் கூடியதுمَّاஎதுهُمْஅவர்கள்فِيْهِஅதில்وَبٰطِلٌஇன்னும் பொய்مَّاஎவைكَانُوْاஇருக்கின்றனர்يَعْمَلُوْنَ‏செய்கிறார்கள்
இன்னா ஹா'உலா'இ முதBப்Bபரும் மா ஹும் Fபீஹி வ Bபாதிலும் மா கானூ யஃமலூன்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக இந்த மக்கள் ஈடுபட்டிருக்கும் மார்க்கம் அழியக் கூடியது; இன்னும் அவர்கள் செய்பவை யாவும் (முற்றிலும்) வீணானவையே” (என்றும் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
(அந்த சிலைவணங்கிகளைச் சுட்டிக் காண்பித்து,) ‘‘நிச்சயமாக இந்த மக்கள் இருக்கின்ற மார்க்கம் அழிந்துவிடக்கூடியது. அவர்கள் செய்பவை அனைத்தும் வீணானவை. (அவர்களுக்கு ஒரு பலனையும் அளிக்காது'' என்றும் கூறினார்.)
IFT
இவர்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் வழிமுறை நிச்சயம் அழிந்து போகக்கூடியதாகும். இவர்கள் செய்து கொண்டிருப்பவை (முற்றிலும்) வீணானவையாகும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக (விக்கிரக ஆராதனை செய்யும்) இவர்கள் எதில் இருந்து கொண்டிருக்கிறார்களோ அது அழிந்துவிடக் கூடியதும், அவர்கள் எதை செய்து கொண்டிருக்கிறார்களோ அது முற்றிலும் வீணானதேயாகும்” என்று கூறினார்.
Saheeh International
Indeed, those [worshippers] - destroyed is that in which they are [engaged], and worthless is whatever they were doing."
قَالَ اَغَیْرَ اللّٰهِ اَبْغِیْكُمْ اِلٰهًا وَّهُوَ فَضَّلَكُمْ عَلَی الْعٰلَمِیْنَ ۟
قَالَகூறினார்اَغَيْرَஅல்லாததையா?اللّٰهِஅல்லாஹ்اَبْغِيْكُمْதேடுவேன்/ உங்களுக்குاِلٰهًاவணங்கப்படும் ஒரு கடவுளாகوَّهُوَஅவனோفَضَّلَـكُمْமேன்மைப்படுத்தினான்/உங்களைعَلَى الْعٰلَمِيْنَ‏உலகத்தார்களைப் பார்க்கிலும்
கால அ-கய்ரல் லாஹி அBப்கீகும் இலாஹ(ன்)வ் வ ஹுவ Fபள்ளலகும் 'அலல் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
“அன்றியும், அல்லாஹ் அல்லாத ஒன்றையா நான் உங்களுக்கு இறைவனாக தேடி வைப்பேன்? அவனோ உங்களை உலகத்திலுள்ள எல்லா மக்களையும்விட மேன்மையாக்கி வைத்துள்ளான்” என்றும் அவர் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(தவிர) ‘‘அல்லாஹ் அல்லாததையா நான் உங்களுக்கு இறைவனாக ஆக்கிவைப்பேன்? அவன்தான் உங்களை உலகத்தார் அனைவரையும் விட மேன்மையாக்கி வைத்தான்'' என்றும் அவர் கூறினார்.
IFT
மேலும், மூஸா கூறினார்: “அல்லாஹ்வைத் தவிர வேறொரு கடவுளையா நான் உங்களுக்காகத் தேடுவேன்? உண்மையில் அவனே உங்களை அகிலத்தார் அனைவரையும்விட மேன்மை ஆக்கியுள்ளான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(தவிர,)” அல்லாஹ் அல்லாததையா நான் உங்களுக்கு இரட்சகனாகத் தேடுவேன்? அவனோ உங்களை அகிலத்தாரை விட மேன்மையாக்கி வைத்துள்ளான்” என்றும் அவர் கூறினார்.
Saheeh International
He said, "Is it other than Allah I should desire for you as a god while He has preferred you over the worlds?"
وَاِذْ اَنْجَیْنٰكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ ۚ یُقَتِّلُوْنَ اَبْنَآءَكُمْ وَیَسْتَحْیُوْنَ نِسَآءَكُمْ ؕ وَفِیْ ذٰلِكُمْ بَلَآءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِیْمٌ ۟۠
وَاِذْ اَنْجَيْنٰكُمْசமயம்/காப்பாற்றினோம்/உங்களைمِّنْஇருந்துاٰلِகுடும்பத்தார்فِرْعَوْنَஃபிர்அவ்னுடையيَسُوْمُوْنَـكُمْதுன்புறுத்துகின்றனர்/உங்களைسُوْٓءَ الْعَذَابِ‌ ۚகொடியவேதனையால்يُقَتِّلُوْنَகொன்றுகுவிப்பார்கள்اَبْنَآءَكُمْஉங்கள் மகன்களைوَ يَسْتَحْيُوْنَஇன்னும் வாழவிடுவார்கள்نِسَآءَكُمْ‌ ؕஉங்கள்பெண்களைوَفِىْ ذٰ لِكُمْஇதில்بَلَاۤ ءٌசோதனைمِّنْ رَّبِّكُمْஉங்கள் இறைவனிடமிருந்துعَظِيْمٌ‏பெரியது
வ இத் அன்ஜய்னாகும் மின் ஆலி Fபிர்'அவ்ன யஸூமூ னகும் ஸூ'அல் 'அதாBப், யுகத்திலூன அBப்னா'அகும் வ யஸ்தஹ்யூன னிஸா'அகும்; வ Fபீ தாலிகும் Bபலா'உம் மிர் ரBப்Bபிகும் 'அளீம்
முஹம்மது ஜான்
இன்னும் நினைவு கூறுங்கள்: ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றினோம்; அவர்கள் உங்களுக்குக் கொடிய வேதனைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் உங்கள் ஆண் மக்களைக் கொலை செய்துவிட்டு, (உங்களைச் சிறுமைப்படுத்துவதற்காக) உங்கள் பெண் மக்களை உயிருடன் வாழவிட்டார்கள்; இதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது.  
அப்துல் ஹமீது பாகவி
(இஸ்ராயீலின் சந்ததிகளே!) உங்களுக்கு மிகக் கொடிய துன்பங்களை விளைவித்துக் கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களை பாதுகாத்துக் கொண்டதை நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவர்கள் உங்கள் ஆண் பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு உங்கள் பெண் பிள்ளைகளை (மட்டும்) உயிருடன் வாழவிட்டு வந்தார்கள். இதில் உங்களுக்கு உங்கள் இறைவனால் பெரியதொரு சோதனை ஏற்பட்டிருந்தது.
IFT
மேலும் (அல்லாஹ் கூறுகின்றான்:) “ஃபிர்அவ்னுடைய கூட்டத்தார்களிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றிய சந்தர்ப்பத்தை நினைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்குக் கடுமையான வேதனை அளித்துக் கொண்டிருந்தார்கள்; உங்களுடைய ஆண்மக்களைக் கொலை செய்து, உங்களுடைய பெண்மக்களை உயிருடன் விட்டு வைத்திருந்தார்கள். மேலும், இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மாபெரும் சோதனை ஏற்பட்டிருந்தது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (இஸ்ராயீலின் மக்களே!) பிர் அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றியதை (நீங்கள் நினைத்துப் பாருங்கள்.) அவர்கள் உங்களை கொடிய வேதனையால் துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள், அவர்கள் உங்கள் ஆண் மக்களைக் கொலை செய்துவிட்டு, உங்கள் பெண் மக்களை (மட்டும்) உயிருடன் வாழ விட்டும் வந்தார்கள், இதில் உங்களுக்கு உங்கள் இரட்சகனால் மகத்தானதொரு சோதனையும் (ஏற்பட்டு) இருந்தது.
Saheeh International
And [recall, O Children of Israel], when We saved you from the people of Pharaoh, [who were] afflicting you with the worst torment - killing your sons and keeping your women alive. And in that was a great trial from your Lord.
وَوٰعَدْنَا مُوْسٰی ثَلٰثِیْنَ لَیْلَةً وَّاَتْمَمْنٰهَا بِعَشْرٍ فَتَمَّ مِیْقَاتُ رَبِّهٖۤ اَرْبَعِیْنَ لَیْلَةً ۚ وَقَالَ مُوْسٰی لِاَخِیْهِ هٰرُوْنَ اخْلُفْنِیْ فِیْ قَوْمِیْ وَاَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِیْلَ الْمُفْسِدِیْنَ ۟
وَوٰعَدْنَاவாக்களித்தோம்مُوْسٰىமூஸாவுக்குثَلٰثِيْنَமுப்பதுلَيْلَةًஇரவு(களை)وَّاَتْمَمْنٰهَاஇன்னும் முழுமைப்படுத்தினோம்/அதைبِعَشْرٍபத்து இரவுகளைக் கொண்டுفَتَمَّஆகவே முழுமையடைந்ததுمِيْقَاتُகுறிப்பிட்ட காலம்رَبِّهٖۤஅவருடைய இறைவனின்اَرْبَعِيْنَநாற்பதுلَيْلَةً ۚஇரவு(களாக)وَقَالَகூறினார்مُوْسٰىமூஸாلِاَخِيْهِதன் சகோதரருக்குهٰرُوْنَஹாரூன்اخْلُفْنِىْநீர் எனக்கு பிரதிநிதியாக இருفِىْ قَوْمِىْஎன் சமுதாயத்தில்وَاَصْلِحْஇன்னும் சீர்திருத்துوَلَا تَتَّبِعْபின்பற்றாதேسَبِيْلَபாதையைالْمُفْسِدِيْنَ‏விஷமிகளுடைய
வ வா'அத்னா மூஸா தலாதீன லய்லத(ன்)வ் வ அத் மம்னாஹா Bபி'அஷ்ரிம் Fபதம்ம மீகாது ரBப்Bபிஹீ அர்Bப'ஈன லய்லஹ்; வ கால மூஸா லிஅகீஹி ஹாரூனக் லுFப்னீ Fபீ கவ்மீ வ அஸ்லிஹ் வலா தத்தBபிஃ ஸBபீலல் முFப்ஸிதீன்
முஹம்மது ஜான்
மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம்; பின்னர், மேலும் அதை பத்து (இரவுகளைக்) கொண்டு பூர்த்தியாக்கினோம்; இவ்வாறாக அவருடைய இறைவன் (வாக்களித்த) காலக்கெடு நாற்பது இரவுகளாக முழுமை பெற்றது. அப்போது மூஸா தம் சகோதரர் ஹாரூனை நோக்கி, “நீங்கள் என்னுடைய சமூகத்தாருக்கு, என் கலீஃபாவாக இருந்து, (அவர்களைத்) திருத்துவீர்களாக! குழப்பமுண்டாக்குபவரின் வழியைப் பின் பற்றாதிருப்பீர்களாக!” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். பின்னர் அத்துடன் பத்து (இரவுகளைச்) சேர்த்தோம். ஆகவே, அவருடைய இறைவனின் வாக்குறுதி நாற்பது இரவுகளாகப் பூர்த்தியாயிற்று. ஆகவே, அதுசமயம் மூஸா தன் சகோதரர் ஹாரூனை நோக்கி ‘‘நீர் எனது மக்களிடையே என் இடத்திலிருந்து அவர்களைச் சீர்திருத்துவீராக. மேலும், விஷமிகளுடைய வழியை நீர் பின்பற்றாதீர்'' என்று கூறினார்.
IFT
நாம் மூஸாவுக்கு முப்பது இரவுகளை (நாட்களை) வாக்களித்(து சினாய் மலைக்கு அழைத்)தோம். பிறகு அவற்றோடு பத்து இரவுகளை அதிகப்படுத்தினோம். இவ்வாறு, நாற்பது இரவுகள் என்று அவருடைய இறைவன் நிர்ணயித்த தவணை முழுமை அடைந்தது. மூஸா (சினாய் மலைக்குச் சென்றபோது) தம் சகோதரர் ஹாரூனிடம், “நான் சென்ற பிறகு நீர் என்னுடைய கூட்டத்தாரிடையே என் பிரதிநிதியாக இருந்து, சீராகச் செயல் புரிந்து வருவீராக! மேலும், குழப்பம் விளைவிப்போரின் நடைமுறையினை மேற்கொள்ளாதீர்!” என்று கூறினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம், மேலும், அதை பத்து இரவுகளைக் கொண்டு நாம் பூர்த்தியாக்கியும் வைத்தோம், ஆகவே, அவருடைய இரட்சகனின் தவணை நாற்பது இரவுகளாகப் பூர்த்தியாயிற்று, அது சமயம் மூஸா தன் சகோதரர் ஹாரூனிடம் “நீர் என்னுடைய சமூகத்தாரிடையே என் பிரதிநிதியாக இருந்து, அவர்களைச் சீர் திருத்தமும் செய்வீராக! அன்றியும் குழப்பக்காரர்களுடைய வழியை நீர் பின்பற்றாதிருப்பீராக! என்று கூறினார்.
Saheeh International
And We made an appointment with Moses for thirty nights and perfected them by [the addition of] ten; so the term of his Lord was completed as forty nights. And Moses said to his brother Aaron, "Take my place among my people, do right [by them], and do not follow the way of the corrupters."
وَلَمَّا جَآءَ مُوْسٰی لِمِیْقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗ ۙ قَالَ رَبِّ اَرِنِیْۤ اَنْظُرْ اِلَیْكَ ؕ قَالَ لَنْ تَرٰىنِیْ وَلٰكِنِ انْظُرْ اِلَی الْجَبَلِ فَاِنِ اسْتَقَرَّ مَكَانَهٗ فَسَوْفَ تَرٰىنِیْ ۚ فَلَمَّا تَجَلّٰی رَبُّهٗ لِلْجَبَلِ جَعَلَهٗ دَكًّا وَّخَرَّ مُوْسٰی صَعِقًا ۚ فَلَمَّاۤ اَفَاقَ قَالَ سُبْحٰنَكَ تُبْتُ اِلَیْكَ وَاَنَا اَوَّلُ الْمُؤْمِنِیْنَ ۟
وَلَمَّاபோதுجَآءَவந்தார்مُوْسٰىமூஸாلِمِيْقَاتِنَاநமது குறித்தநேரத்திற்குوَكَلَّمَهٗஇன்னும் பேசினாu/அவருடன்رَبُّهٗ ۙஅவருடைய இறைவன்قَالَகூறினார்رَبِّஎன் இறைவாاَرِنِىْۤநீ காண்பி/எனக்குاَنْظُرْபார்ப்பேன்اِلَيْكَ‌ ؕஉன்னைقَالَகூறினான்لَنْ تَرٰٮنِىْஎன்னை நீர் அறவே பார்க்க மாட்டீர்وَلٰـكِنِஎனினும்انْظُرْபார்ப்பீராக!اِلَى الْجَـبَلِமலையைفَاِنِ اسْتَقَرَّஅது நிலைத்தால்مَكَانَهٗதன் இடத்தில்فَسَوْفَ تَرٰٮنِىْ‌ ۚநீர் என்னைப் பார்ப்பீர்فَلَمَّاபோதுتَجَلّٰىவெளிப்பட்டான்رَبُّهٗஅவருடைய இறைவன்لِلْجَبَلِஅம்மலை மீதுجَعَلَهٗஆக்கினான்/அதைدَكًّاதுகளாகوَّخَرَّஇன்னும் விழுந்தார்مُوْسٰىமூஸாصَعِقًا‌ ۚமூர்ச்சையானவராகفَلَمَّاۤபோதுاَفَاقَதெளிவுபெற்றார்قَالَகூறினார்سُبْحٰنَكَநீ மிகப் பரிசுத்தமானவன்تُبْتُநான் திருந்தி திரும்புகிறேன்اِلَيْكَஉன் பக்கம்وَاَنَاநான்اَوَّلُமுதலாமவன்الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கை கொள்பவர்களில்
வ லம்மா ஜா'அ மூஸா லிமீகாதினா வ கல்லமஹூ ரBப்Bபுஹூ கால ரBப்Bபி அரினீ அன்ளுர் இலய்க்; கால லன் தரானீ வ லாகினின்ளுர் இலல் ஜBபலி Fப இனிஸ்தகர்ர மகானஹூ Fபஸவ்Fப தரானீ; Fபலம்மா தஜல்லா ரBப்Bபுஹூ லில்ஜBபலி ஜ'அலஹூ தக்க(ன்)வ் வ கர்ர மூஸா ஸ'இகா; Fபலம்மா அFபாக கால ஸுBப்ஹானக துBப்து இலய்க வ அன அவ்வலுல் மு'மினீன்
முஹம்மது ஜான்
நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா: “என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், “(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் (குறிப்பிட்ட இடத்திற்கு) குறிப்பிட்ட நேரத்தில் மூஸா வந்த பொழுது அவருடைய இறைவன் அவருடன் பேசினான். (அப்பொழுது மூஸா தன் இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! நான் உன்னை (என் கண்ணால்) பார்க்க (விரும்புகிறேன்.) நீ உன்னை எனக்கு காண்பி'' என்று கூறினார். (அதற்கு இறைவன் ‘‘நேர்முகமாக) என்னைக் காண உம்மால் ஒருக்காலும் முடியாது. எனினும் இம்மலையை நீர் நோக்குவீராக. அது தன் இடத்தில் நிலைத்திருந்தால் பின்னர் நீர் என்னைக் காண்பீர்'' என்று கூறினான். அவருடைய இறைவன் அம்மலை மீது தோற்றமளிக்கவே அது தவிடு பொடியாயிற்று. மூஸா திடுக்கிட்டு (மூர்ச்சையாகி) விழுந்தார். அவர் தெளிவு பெறவே (இறைவனை நோக்கி) ‘‘நீ மிகப் பரிசுத்தமானவன். நான் (உன்னைப் பார்க்கக் கோரிய குற்றத்திலிருந்து விலகி) உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். அன்றி, உன்னை நம்பிக்கை கொள்பவர்களில் நான் முதன்மையானவன்'' என்று கூறினார்.
IFT
நாம் குறிப்பிட்டிருந்த நேரத்தில் மூஸா வந்தார். பிறகு அவருடைய இறைவன் அவரிடம் உரையாடியபோது அவர் வேண்டினார்: “என் இறைவா! எனக்கு உன்னைப் பார்க்கும் வலிமையை வழங்குவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்.” அதற்கு இறைவன் கூறினான்: “என்னை நீர் காண முடியாது. ஆயினும் (எதிரிலுள்ள) மலையைப் பாரும்! அது தனது இருப்பிடத்தில் நிலைத்திருந்தால், என்னை நீர் காண முடியும்.” அவருடைய இறைவன் அம்மலையின் மீது வெளிப்பட்டபோது அது பொடிப் பொடியாகிவிட்டது. மூஸாவும் திடுக்கிட்டு மயங்கி விழுந்தார். பிறகு உணர்வு பெற்றபோது கூறினார்: “நீ மிகவும் தூய்மையானவன். நான் உன்னிடம் மன்னிப்புக் கோரி மீளுகின்றேன். மேலும், நான் நம்பிக்கை கொள்வோரில் முதன்மையானவனாக இருக்கின்றேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நாம் குறிப்பிட்ட நேரத்தில் (குறிப்பிட்ட இடத்திற்கு) மூஸா வந்து அவருடைய இரட்சகனும் அவருடன் பேசியபொழுது, “என் இரட்சகனே! நீ (உன்னை) எனக்குக் காண்பிப்பாயாக! உன்பால் நான் பார்ப்பேன்” என்று கூறினார்; (அதற்கு, அல்லாஹ், மூஸாவே!) நீர் என்னை ஒருபோதும் பார்க்க முடியாது, எனினும், இம்மலையை நீர் பார்ப்பீராக! அது தன்னுடைய இடத்தில் நிலைத்திருந்தால் அப்போது நீர் என்னை காண்பீர், என்று கூறினான்; ஆகவே, அவருடைய இரட்சகன் அம்மலைமீது வெளிப்பட்டபோது அவ்வாறு வெளிப்பட்ட நிலையான)து, அ(ம்மலையான)தை தூளாக்கிவிட்டது, இன்னும் மூஸா (திடுக்கிட்டு) மூர்ச்சையாகி விழுந்து விட்டார்; பின்னர் அவர் தெளிவு பெற்றபோது (அல்லாஹ்விடம்) “நீ மிகப் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் பாவமீட்சி கோருகின்றேன்; இன்னும், (உன்னை) விசுவாசிப்போரில் நான் முதன்மையானவன்” என்று கூறினார்,
Saheeh International
And when Moses arrived at Our appointed time and his Lord spoke to him, he said, "My Lord, show me [Yourself] that I may look at You." [Allah] said, "You will not see Me, but look at the mountain; if it should remain in place, then you will see Me." But when his Lord appeared to the mountain, He rendered it level, and Moses fell unconscious. And when he awoke, he said, "Exalted are You! I have repented to You, and I am the first [among my people] of the believers."
قَالَ یٰمُوْسٰۤی اِنِّی اصْطَفَیْتُكَ عَلَی النَّاسِ بِرِسٰلٰتِیْ وَبِكَلَامِیْ ۖؗ فَخُذْ مَاۤ اٰتَیْتُكَ وَكُنْ مِّنَ الشّٰكِرِیْنَ ۟
قَالَகூறினான்يٰمُوْسٰٓىமூஸாவே!اِنِّىநிச்சயமாக நான்اصْطَفَيْتُكَதேர்ந்தெடுத்தேன்/ உம்மைعَلَى النَّاسِமக்களை விடبِرِسٰلٰتِىْஎன் தூதுகளுக்கும்وَ بِكَلَامِىْ ‌ۖ இன்னும் என் பேச்சுக்கும்فَخُذْஆகவே பற்றிப்பிடிப்பீராகمَاۤ اٰتَيْتُكَஎதை/கொடுத்தேன்/உமக்குوَكُنْஆகிவிடுவீராகمِّنَ الشّٰكِرِيْنَ‏நன்றிசெலுத்துவோரில்
கால யா மூஸா இன்னிஸ் தFபய்துக 'அலன் னாஸி Bபி ரிஸாலாதீ வ Bபி கலாமீ Fபகுத் மா ஆதய்துக வ கும் மினஷ் ஷாகிரீன்
முஹம்மது ஜான்
அதற்கு அவன், “மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை என் தூதுவத்தைக் கொண்டும் (உம்முடன் நேரில்) நான் பேசியதைக் கொண்டும், (உம்மை) மனிதர்களிலிருந்து (மேலானவராக இக்காலை) தேர்ந்து எடுத்துள்ளேன் - ஆகவே நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு இறைவன்) ‘‘மூஸாவே! என் தூதராக அனுப்புவதற்கும், என்னுடன் பேசுவதற்கும் (உங்கள் காலத்தில் உள்ள) மனிதர்கள் அனைவரிலிருந்தும் நிச்சயமாக நான் உம்மைத் தேர்ந்தெடுத்து இருக்கிறேன். ஆகவே, நான் உமக்குக் கொடுப்பதை (பலமாக)ப் பற்றிப் பிடித்துக் கொள்வீராக! மேலும், (அதற்காக) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராக) நீரும் இருப்பீராக'' என்று கூறினான்.
IFT
அதற்கு அல்லாஹ், “மூஸாவே! என்னுடைய தூதுப் பணிகளுக்காகவும், என்னுடன் உரையாடுவதற்காகவும் மனிதர்கள் யாவரையும் விட (முன்னுரிமை வழங்கி) உம்மை நான் தேர்ந்தெடுத்திருக்கின்றேன். எனவே, நான் உமக்கு வழங்கியதைப் பெற்றுக் கொள்வீராக! மேலும், நன்றி செலுத்து வோராய்த் திகழ்வீராக!” என்று கூறினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) “மூஸாவே! என்னுடைய தூதுகளைக் கொண்டும், என்னுடைய பேச்சைக் கொண்டும் (எல்லா) மனிதர்களைவிட, நிச்சயமாக நான் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றேன், ஆகவே, நான் உமக்கு கொடுப்பதைப் (பலமாகப் பற்றிப்பிடித்துக் கொள்வீராக!) நன்றி செலுத்துபவர்களிலும் நீர் ஆகிவிடுவீராக” என்று கூறினார்.
Saheeh International
[Allah] said, "O Moses, I have chosen you over the people with My messages and My words [to you]. So take what I have given you and be among the grateful."
وَكَتَبْنَا لَهٗ فِی الْاَلْوَاحِ مِنْ كُلِّ شَیْءٍ مَّوْعِظَةً وَّتَفْصِیْلًا لِّكُلِّ شَیْءٍ ۚ فَخُذْهَا بِقُوَّةٍ وَّاْمُرْ قَوْمَكَ یَاْخُذُوْا بِاَحْسَنِهَا ؕ سَاُورِیْكُمْ دَارَ الْفٰسِقِیْنَ ۟
وَكَتَبْنَاஇன்னும் எழுதினோம்لَهٗஅவருக்குفِى الْاَلْوَاحِபலகைகளில்مِنْ كُلِّ شَىْءٍஎல்லாவற்றின்مَّوْعِظَةً(ஓர்) அறிவுரையைوَّتَفْصِيْلًاஇன்னும் விளக்கத்தைلِّـكُلِّ شَىْءٍ‌ ۚஎல்லாவற்றுக்குரியفَخُذْهَاஆகவே இவற்றைப் பற்றிப் பிடிப்பீராகبِقُوَّةٍபலமாகوَّاْمُرْஇன்னும் ஏவுவீராகقَوْمَكَஉம் சமுதாயத்தைيَاْخُذُوْاஅவர்கள் பற்றிப் பிடிக்கட்டும்بِاَحْسَنِهَا‌ ؕஅவற்றில் மிக அழகியவற்றைسَاُورِيْكُمْகாண்பிப்பேன்/உங்களுக்குدَارَஇல்லத்தைالْفٰسِقِيْنَ‏பாவிகளின்
வ கதBப்னா லஹூ Fபில் அல்வாஹி மின்குல்லி ஷய்'இம் மவ்'இளா(ன்)வ் வ தFப்ஸீலல் லிகுல்லி ஷய்'இன் Fபகுத்ஹா Bபிகுவ்வதி(ன்)வ் வ'முர் கவ்மக ய'குதூ Bபி அஹ்ஸனிஹா; ஸ'ஊரீகும் தாரல் Fபாஸிகீன்
முஹம்மது ஜான்
மேலும் நாம் அவருக்கு பலகைகளில், ஒவ்வொரு விஷயம் பற்றிய நல்லுபதேசங்களையும், (கட்டளைகளையும்,) ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கங்களையும் எழுதி: “அவற்றை உறுதியாகப் பற்றிப் பிடிப்பீராக! இன்னும் உம்முடைய சமூகத்தாரை அவற்றில் அழகானவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கட்டளையிடுவீராக! அதிசீக்கிரம் பாவிகளின் தங்குமிடத்தை நான் உங்களுக்கு காட்டுவேன்” (என்று கூறினான்).
அப்துல் ஹமீது பாகவி
(நாம் அவருக்குக் கொடுத்த கற்)பலகைகளில் நல்லுபதேசங்கள் அனைத்தையும், ஒவ்வொரு கட்டளையின் விவரத்தையும் அவருக்காக நாம் எழுதி ‘‘நீர் இதைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொண்டு அதிலிருக்கும் மிக அழகியவற்றை எடுத்து நடக்கும் படி உம் மக்களுக்கு நீர் கட்டளையிடுங்கள். (உமக்கு மாறு செய்யும்) பாவிகள் தங்கும் இடத்தை அதிசீக்கிரத்தில் நாம் உங்களுக்குக் காண்பிப்போம்'' (என்றும் நாம் மூஸாவுக்குக் கூறினோம்).
IFT
இதன் பின்னர், நாம் மூஸாவுக்கு (வாழ்க்கைத் துறை) ஒவ்வொன்றுக்கும் வேண்டிய அறிவுரையையும், ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கத்தையும் பலகைகளில் எழுதிக் கொடுத்தோம். மேலும், (நாம் அவருக்குக் கூறினோம்:) “இந்த அறிவுரைகளை நீர் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்வீராக! மேலும், இவற்றிலுள்ள சிறந்த கருத்துகளைப் பின்பற்றும்படி உம்முடைய சமுதாயத்தாருக்கு நீர் கட்டளையிடுவீராக! அதிவிரைவில் பாவம் புரிவோர்க்குரிய இருப்பிடத்தை நான் உங்களுக்குக் காண்பிப்பேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நாம் அவருக்குக் கொடுத்த) பலகைகளில் ஒவ்வொரு விஷயத்திலிருந்து நல்லுபதேசத்தையும், ஒவ்வொரு விஷயத்திற்குரிய விளக்கத்தையும் அவருக்காக நாம் எழுதி இருந்தோம், (ஆகவே), ”நீர் இதனைப் பலமாகப் (பற்றிப்) பிடித்துக் கொண்டு அதிலிருக்கும் நல்லவைகளை எடுத்து செயல்பட்டு)க் கொள்ளுமாறு உம்முடைய சமூகத்தாரை நீர் கட்டளையும் இடுவீராக! (உமக்கு மாறு செய்யும்) பாவிகளின் வீட்டை (தங்குமிடத்தை) நான் உங்களுக்குக் காண்பிப்பேன்” என்றும் (கூறினான்.)
Saheeh International
And We wrote for him on the tablets [something] of all things - instruction and explanation for all things, [saying], "Take them with determination and order your people to take the best of it. I will show you the home of the defiantly disobedient."
سَاَصْرِفُ عَنْ اٰیٰتِیَ الَّذِیْنَ یَتَكَبَّرُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ ؕ وَاِنْ یَّرَوْا كُلَّ اٰیَةٍ لَّا یُؤْمِنُوْا بِهَا ۚ وَاِنْ یَّرَوْا سَبِیْلَ الرُّشْدِ لَا یَتَّخِذُوْهُ سَبِیْلًا ۚ وَاِنْ یَّرَوْا سَبِیْلَ الْغَیِّ یَتَّخِذُوْهُ سَبِیْلًا ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَكَانُوْا عَنْهَا غٰفِلِیْنَ ۟
سَاَصْرِفُதிருப்புவேன்عَنْவிட்டுاٰيٰتِىَஎன் அத்தாட்சிகள், என் வசனங்கள்الَّذِيْنَஎவர்கள்يَتَكَبَّرُوْنَபெருமையடிப்பார்கள்فِى الْاَرْضِபூமியில்بِغَيْرِ الْحَـقِّ ؕநியாயமின்றிوَاِنْ يَّرَوْاஅவர்கள் பார்த்தால்كُلَّஎல்லாம்اٰيَةٍஅத்தாட்சிلَّا يُؤْمِنُوْاநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்بِهَا‌ ۚஅவற்றைوَاِنْ يَّرَوْاஇன்னும் அவர்கள் பார்த்தால்سَبِيْلَபாதையைالرُّشْدِநேரியلَاமாட்டார்கள்يَتَّخِذُوْهُஅதை எடுத்துக் கொள்ளسَبِيْلًا‌ ۚபாதையாகوَّاِنْ يَّرَوْاஅவர்கள் பார்த்தால்سَبِيْلَபாதையைالْغَىِّவழிகேட்டின்يَتَّخِذُوْهُஎடுத்துக் கொள்வார்கள்/அதைسَبِيْلًا‌ ؕபாதையாகذٰ لِكَஅதுبِاَنَّهُمْகாரணம்/நிச்சயமாக அவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தனர்بِاٰيٰتِنَاநம் வசனங்களைوَكَانُوْاஇருந்தார்கள்عَنْهَاஅவற்றை விட்டுغٰفِلِيْنَ‏கவனமற்றவர்களாக
ஸ அஸ்ரிFபு 'அன் ஆயாதியல் லதீன யதகBப்Bபரூன Fபில் அர்ளி Bபிகய்ரில் ஹக்க்; வ இ(ன்)ய்-யரவ் குல்ல ஆயதில் லா யு'மினூ Bபிஹா வ இ(ன்)ய்-யரவ் ஸBபீலர் ருஷ்தி லா யத்தகிதூஹு ஸBபீல(ன்)வ் வ இ(ன்)ய்-யரவ் ஸBபீலல் கய்யி யத்தகிதூஹு ஸBபீலா; தாலிக Bபி அன்னஹும் கத்தBபூ Bபி ஆயாதினா வ கானூ 'அன்ஹா காFபிலீன்
முஹம்மது ஜான்
எவ்வித நியாயமுமின்றி, பூமியில் பெருமையடித்து நடப்பவர்களை, என் கட்டளைகளை விட்டும் திருப்பி வைத்து விடுவேன்; அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் கண்ட போதிலும் அவற்றை நம்ப மாட்டார்கள்; அவர்கள் நேர் வழியைக் கண்டால் அதனைத் (தங்களுக்குரிய) வழியென ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - ஆனால் தவறான வழியைக் கண்டால், அதனை(த் தங்களுக்கு நேர்) வழியென எடுத்துக் கொள்வார்கள்; ஏனெனில் அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறினார்கள். இன்னும் அவற்றைப் புறக்கணித்தும் இருந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டலைபவர்கள் நம் கட்டளைகளைப் புறக்கணிக்கும்படிச் செய்து விடுவோம். ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகள் அனைத்தையும் (தங்கள் கண்ணால்) கண்டபோதிலும் அவற்றை நம்பவே மாட்டார்கள். அவ்வாறே நேரான வழியை அவர்கள் கண்டபோதிலும் அவர்கள் அதை (தாங்கள்) செல்லும் வழியாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எனினும், தவறான வழியைக் கண்டாலோ அதையே (தாங்கள்) செல்லும் வழியாக எடுத்துக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அவற்றைப் புறக்கணித்து பராமுகமாயிருந்ததே இதற்குரிய காரணமாகும்.
IFT
பூமியில் நியாயமின்றிப் பெருமை கொள்பவர்(களின் பார்வை)களை என்னுடைய சான்றுகளை விட்டு நான் திருப்பி விடுவேன். அவர்கள் எந்தச் சான்றுகளைக் கண்டாலும் (ஒருபோதும்) அவற்றின் மீது நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். மேலும், நேர்வழியினை(த் தம் கண்ணெதிரே) அவர்கள் கண்டாலும்கூட அதனை மேற்கொள்ள மாட்டார்கள். ஆனால், வழிகேடான பாதையைக் காண்பார்களானால், அதனை மேற்கொள்ள முனைந்து விடுகின்றார்கள். அதற்குக் காரணம் யாதெனில், அவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய்யெனக் கூறினார்கள். மேலும், அவற்றை அலட்சியப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நியாயமின்றி, பூமியில் கர்வங்கொண்டிருப்போரை, என்னுடைய அத்தாட்சிகளை (விளங்கிக் கொள்வதை) விட்டும் திருப்பி வைத்து விடுவேன், அவர்கள் அத்தாட்சிகள் யாவையும் கண்டபோதிலும் அவைகளை நம்பிக்கை கொள்ளவுமாட்டார்கள், (அவ்வாறே) நேர் வழியை அவர்கள் கண்டாலும் அதனை அவர்கள் (நேரான) வழியாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள், ஆனால், தவறான வழியை அவர்கள் கண்டாலோ, அதனையே (தங்களுக்குரிய) வழியாக எடுத்துக் கொள்வார்கள், அது (ஏனெனில்) நிச்சயமாக அவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கினர் என்பதாலும், அவைகளை விட்டும் அவர்கள் மறந்தவர்களாகவும் இருந்தார்கள் என்ற காரணத்தினாலுமாகும்.
Saheeh International
I will turn away from My signs those who are arrogant upon the earth without right; and if they should see every sign, they will not believe in it. And if they see the way of consciousness, they will not adopt it as a way; but if they see the way of error, they will adopt it as a way. That is because they have denied Our signs and they were heedless of them.
وَالَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَلِقَآءِ الْاٰخِرَةِ حَبِطَتْ اَعْمَالُهُمْ ؕ هَلْ یُجْزَوْنَ اِلَّا مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟۠
وَالَّذِيْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தனர்بِاٰيٰتِنَاநம் வசனங்களைوَلِقَآءِஇன்னும் சந்திப்பைالْاٰخِرَةِமறுமையின்حَبِطَتْபாழாகினاَعْمَالُهُمْ‌ؕ(நற்)செயல்கள்/அவர்களுடையهَلْ يُجْزَوْنَகூலி கொடுக்கப்படுவார்களா?اِلَّاதவிரمَاஎவற்றைكَانُوْاஇருந்தனர்يَعْمَلُوْنَ‏செய்வார்கள்
வல்லதீன கத்தBபூ Bபி ஆயாதினா வ லிகா'இல் ஆகிரதி ஹBபிதத் அஃமாலுஹும்; ஹல் யுஜ்Zஜவ்ன இல்லா மா கானூ யஃமலூன்
முஹம்மது ஜான்
எவர்கள் நம் வசனங்களையும், (அத்தாட்சிகளையும்) மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யெனக் கூறுகின்றார்களோ அவர்களுடைய நற்கருமங்கள் யாவும் அழிந்துவிடும்; அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்களோ அதற்குத்தகுந்த கூலியைத் தவிர வேறு எதைப் பெற முடியும்?  
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, எவர்கள் நம் வசனங்களையும், மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யாக்குகிறார்களோ அவர்களுடைய (நற்)காரியங்கள் அனைத்தும் அழிந்து விடும். (நம் வசனங்களைப் பொய்யாக்கி) அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களுக்குத் தவிர (வேறெதற்கும்) கூலி கொடுக்கப்படுவார்களா?
IFT
எனவே எவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய் எனக் கூறினார்களோ, மேலும் மறுமைநாளைச் சந்திக்க இருப்பதையும் மறுத்தார்களோ அவர்களுடைய செயல்கள் அனைத்தும் வீணாகிவிட்டன. தாங்கள் செய்து கொண்டிருக்கும் செயல்களுக்குரிய கூலியைத் தவிர வேறு எதனை இவர்கள் பெறமுடியும்?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நம்முடைய வசனங்களையும், மறுமையின் சந்திப்பையும் பொய்யாக்குகின்றார்களே அத்தகையோர்-அவர்களுடைய (நற்) காரியங்கள் யாவும் அழிந்து விட்டன, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கே தவிர (வேறெதற்கும்) கூலி கொடுக்கப்படுவார்களா?
Saheeh International
Those who denied Our signs and the meeting of the Hereafter - their deeds have become worthless. Are they recompensed except for what they used to do?
وَاتَّخَذَ قَوْمُ مُوْسٰی مِنْ بَعْدِهٖ مِنْ حُلِیِّهِمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ ؕ اَلَمْ یَرَوْا اَنَّهٗ لَا یُكَلِّمُهُمْ وَلَا یَهْدِیْهِمْ سَبِیْلًا ۘ اِتَّخَذُوْهُ وَكَانُوْا ظٰلِمِیْنَ ۟
وَاتَّخَذَஎடுத்துக் கொண்டனர்قَوْمُசமுதாயம்مُوْسٰىமூஸாவுடையمِنْۢ بَعْدِهٖஅவருக்குப் பின்னர்مِنْ حُلِيِّهِمْதங்கள் நகையிலிருந்துعِجْلًاஒரு காளைக் கன்றைجَسَدًاஓர் உடலைلَّهٗஅதற்குخُوَارٌ‌ ؕமாட்டின் சப்தம்اَلَمْ يَرَوْاஅவர்கள் பார்க்கவில்லையா?اَنَّهٗநிச்சயமாக அதுلَاஇல்லைيُكَلِّمُهُمْஅவர்களுடன் பேசுவதுوَلَاஇன்னும் இல்லைيَهْدِيْهِمْஅவர்களுக்கு (நேர்)வழி காட்டுவதுسَبِيْلًا ۘபாதையைاِتَّخَذُوْهُஎடுத்துக் கொண்டார்கள்/அதைوَكَانُوْاஇன்னும் ஆகிவிட்டனர்ظٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களாக
வத்தகத கவ்மு மூஸா மிம் Bபஃதிஹீ மின் ஹுலிய்யிஹிம் 'இஜ்லன் ஜஸதல் லஹூ குவார்; அலம் யரவ் அன்னஹூ லா யுகல்லிமுஹும் வலா யஹ்தீஹிம் ஸBபீலா; இத்தகதூஹு வ கானூ ளாலிமீன்
முஹம்மது ஜான்
மூஸாவின் சமூகத்தார் அவர் (சென்ற) பின் தங்கள் நகைகளைக் கொண்டு ஒரு காளைக் கன்றின் சிலையை(ச் செய்து அதைத் தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள்; அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போல் வெறும்) சப்தமிருந்தது; நிச்சயமாக அது அவர்களிடம் பேசவும் மாட்டாது, இன்னும் அவர்களுக்கு (நேர்) வழி காட்டவும் செய்யாது என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா, அவர்கள் அதனையே (தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள் - இன்னும் அவர்கள் (தமக்குத் தாமே) அநியாயம் செய்து கொண்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(தன் இறைவனிடம் உரையாட மூஸா சென்றதற்குப்) பின்னர் மூஸாவுடைய மக்கள் தங்கள் ஆபரணங்களைக் கொண்(டு செய்யப்பட்)ட கன்றுக் குட்டியின் சிலையை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டார்கள். அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போன்ற) சப்தமிருந்தது. எனினும் (அது உயிரற்ற வெறும் சிலை.) நிச்சயமாக அது அவர்களுடன் பேசுவதுமில்லை; அவர்களுக்கு ஒரு வழியை அறிவிப்பதுமில்லை என்பதையும் அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? எனினும், அவர்கள் அதையே (தெய்வமாக) எடுத்துக் கொண்டு (அதனால் தங்களுக்குத்தாமே) தீங்கிழைத்துக் கொண்டவர்களாக ஆகிவிட்டார்கள்.
IFT
மூஸா (சினாய் மலைக்குச்) சென்ற பிறகு அவருடைய சமூகத்தார் தங்களுடைய ஆபரணங்களை உருக்கி, கன்றுக்குட்டியின் வடிவத்தை உருவாக்கி(வணங்கி)னார்கள். அதற்கு மாட்டின் சப்தம் இருந்தது. அது அவர்களிடம் பேசுவதுமில்லை; (எந்த விவகாரங்களிலும்) அவர்களுக்கு வழிகாட்டுவதுமில்லை என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? ஆயினும், அதனை அவர்கள் தெய்வமாக்கிக் கொண்டார்கள். மேலும், அவர்கள் பெரும் அக்கிரமக்காரர்களாகிவிட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மூஸாவுடைய சமூகத்தார் அவருக்குப் பின்னர், தங்கள் ஆபரணங்களிலிருந்து ஒரு காளைக் கன்றை (அதன்)-உடலை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டார்கள், அதற்கு, (மாட்டின் சப்தத்தைப் போன்ற) சப்தமிருந்தது, நிச்சயமாக அது அவர்களுடன் பேசவுமாட்டாது, அவர்களுக்கு யாதொரு வழியைக் காட்டவுமாட்டாது என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (எனினும்) அவர்கள் அதனையே (தெய்வமாக) எடுத்துக் கொண்டார்கள், அவர்கள் (தமக்குத் தாமே) அநியாயக்காரர்களாகவும் ஆகிவிட்டனர்.
Saheeh International
And the people of Moses made, after [his departure], from their ornaments a calf - an image having a lowing sound. Did they not see that it could neither speak to them nor guide them to a way? They took it [for worship], and they were wrongdoers.
وَلَمَّا سُقِطَ فِیْۤ اَیْدِیْهِمْ وَرَاَوْا اَنَّهُمْ قَدْ ضَلُّوْا ۙ قَالُوْا لَىِٕنْ لَّمْ یَرْحَمْنَا رَبُّنَا وَیَغْفِرْ لَنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِیْنَ ۟
وَلَمَّاபோதுسُقِطَ فِىْۤ اَيْدِيْهِمْஅவர்கள் கைசேதப் பட்டனர்وَرَاَوْاஇன்னும் அறிந்தனர்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்قَدْ ضَلُّوْا ۙவழிதவறிவிட்டனர்قَالُوْاகூறினார்கள்لَٮِٕنْ لَّمْ يَرْحَمْنَاகருணைபுரியவில்லையென்றால்/எங்களுக்குرَبُّنَاஎங்கள் இறைவன்وَيَغْفِرْஇன்னும் மன்னிக்க வில்லையென்றால்لَـنَاஎங்களைلَنَكُوْنَنَّநிச்சயம் நாங்கள் ஆகிவிடுவோம்مِنَ الْخٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளில்
வ லம்மா ஸுகித Fபீ அய்தீஹிம் வ ர அவ் அன்னஹும் கத் ளல்லூ காலூ ல'இல் லம் யர்ஹம்னா ரBப்Bபுனா வ யக்Fபிர் லனா லனகூனன்ன மினல் காஸிரீன்
முஹம்மது ஜான்
அவர்கள் செய்துவிட்ட தவறு பற்றி கைசேதப் பட்டு, நிச்சயமாக தாங்களே வழி தவறி விட்டதை அறிந்து கொண்ட போது, அவர்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் நிச்சயமாகத் தாங்கள் வழிகெட்டு விட்டோம் என்பதைக் கண்டு கைசேதப்பட்டபொழுது ‘‘எங்கள் இறைவன் எங்களுக்கு அருள் புரிந்து எங்கள் குற்றங்களை மன்னிக்காவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'' என்று கூறினார்கள்.
IFT
பிறகு அவர்கள் உருவாக்கியவை அனைத்தும் தகர்ந்துவிட்டன; மேலும், உண்மையிலேயே வழிதவறிவிட்டோம் என்பதை அவர்கள் உணர்ந்தனர். அப்போது அவர்கள் கூறலானார்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்குக் கருணை புரிந்து, எங்களுக்கு மன்னிப்பு வழங்கியிராவிட்டால், நிச்சயமாக நாங்கள் இழப்புக்குள்ளாகியிருப்போம்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்கள் (செய்து விட்டது பற்றி) மிகவும் கைசேதப்பட்டு திட்டமாகத் தாங்களே வழிதவறி விட்டார்கள் என்பதையும் அவர்கள் கண்டபொழுது, “எங்கள் இரட்சகன் எங்களுக்கு அருள் புரிந்து எங்களை மன்னிக்காவிடில் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
Saheeh International
And when regret overcame them and they saw that they had gone astray, they said, "If our Lord does not have mercy upon us and forgive us, we will surely be among the losers."
وَلَمَّا رَجَعَ مُوْسٰۤی اِلٰی قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا ۙ قَالَ بِئْسَمَا خَلَفْتُمُوْنِیْ مِنْ بَعْدِیْ ۚ اَعَجِلْتُمْ اَمْرَ رَبِّكُمْ ۚ وَاَلْقَی الْاَلْوَاحَ وَاَخَذَ بِرَاْسِ اَخِیْهِ یَجُرُّهٗۤ اِلَیْهِ ؕ قَالَ ابْنَ اُمَّ اِنَّ الْقَوْمَ اسْتَضْعَفُوْنِیْ وَكَادُوْا یَقْتُلُوْنَنِیْ ۖؗ فَلَا تُشْمِتْ بِیَ الْاَعْدَآءَ وَلَا تَجْعَلْنِیْ مَعَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟
وَلَمَّاபோதுرَجَعَதிரும்பினார்مُوْسٰٓىமூஸாاِلٰى قَوْمِهٖதன் சமுதாயத்திடம்غَضْبَانَகோபித்தவராகاَسِفًا ۙஆவேசப்பட்டவராக, துக்கித்தவராகقَالَகூறினார்بِئْسَمَاகெட்டுவிட்டது/எதுخَلَفْتُمُوْنِىْநான் சென்றதற்குப்பிறகு செய்தீர்கள்/எனக்குمِنْۢ بَعْدِىْ ۚஎனக்குப் பின்னர்اَعَجِلْتُمْஅவசரப்பட்டீர்களாاَمْرَகட்டளையைرَبِّكُمْ‌ ۚஉங்கள் இறைவனின்وَاَلْقَىஎறிந்தார்الْاَلْوَاحَபலகைகளைوَاَخَذَஇன்னும் பிடித்தார்بِرَاْسِதலையைاَخِيْهِதன் சகோதரனின்يَجُرُّهٗۤஇழுத்தார்/அவரைاِلَيْهِ‌ؕதன் பக்கம்قَالَகூறினார்ابْنَ اُمَّஎன் தாயின் மகனேاِنَّநிச்சயமாகالْـقَوْمَசமுதாயம்اسْتَضْعَفُوْنِىْபலவீனப்படுத்தினர்/என்னைوَكَادُوْاஇன்னும் முற்பட்டனர்يَقْتُلُوْنَنِىْ ۖ கொல்வார்கள்/என்னைفَلَا تُشْمِتْநகைக்கச் செய்யாதீர்بِىَஎன்னைக் கொண்டுالْاَعْدَآءَஎதிரிகளைوَ لَا تَجْعَلْنِىْஆக்கிவிடாதீர்/ என்னைمَعَ الْقَوْمِமக்களுடன்الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்கள்
வ லம்மா ரஜ'அ மூஸா இலா கவ்மிஹீ கள்Bபான அஸிFபன் கால Bபி'ஸமா கலFப்துமூனீ மின் Bபஃதீ 'அ-'அஜில்தும் அம்ர ரBப்Bபிகும் வ அல்கல் அல்வாஹ வ அகத Bபிர'ஸி அகீஹி யஜுர்ருஹூ இலய்ய்ஹ்; காலBப் ன உம்ம இன்னல் கவ்மஸ் தள்'அFபூனீ வ கதூ யக்து லூனனீ; Fபலா துஷ்மித் Bபியல் அஃதா'அ வலா தஜ்'அல்னீ ம'அல் கவ்மிள் ளாலிமீன்
முஹம்மது ஜான்
(இதனையறிந்த) மூஸா தன் சமூகத்தாரிடம் கோபத்துடன், விசனத்துடன் திரும்பி வந்த போது; (அவர்களை நோக்கி) “நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகவும் கெட்டது; உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யைக் (கொண்டு வர) அவசரப்படுகிறீர்களா?” என்று கூறினார்; பின்னர் வேதம் வரையப் (பெற்றிருந்த) பலகைகளை எறிந்து விட்டு, தம் சகோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்துத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) “என் தாயின் மகனே! இந்த மக்கள் என்னை பலஹீனப்படுத்தி என்னை கொலை செய்யவும் முற்பட்டனர். ஆகவே (என்னுடைய) “பகைவர்களுக்கு என்மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடாதீர்” இன்னும் என்னை அநியாயக் காரக் கூட்டத்தாருடன் சேர்த்துவிடாதீர்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(இதைக் கேள்வியுற்ற) மூஸா கோபத்துடனும் துக்கத்துடனும் தன் மக்களிடம் திரும்பி வந்தபொழுது (அவர்களை நோக்கி) ‘‘நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகக் கெட்டது. உங்கள் இறைவனின் கட்டளை(யாகிய வேதனை)யை நீங்கள் அவசரப்படுத்துகிறீர்களா?'' என்று கூறி (இறைவனின் கட்டளைகள் எழுதப்பட்ட கற்)பலகைகளை எறிந்து விட்டு தன் சகோதரரின் தலை (முடி)யைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தார். அ(தற்க)வர் ‘‘என் தாயின் மகனே! இந்த மக்கள் நிச்சயமாக என்னை பலவீனப்படுத்தி என்னைக் கொலை செய்துவிடவும் முற்பட்டனர். (ஆதலால், நான் ஒன்றும் செய்ய முடியாமலாகிவிட்டது. ஆகவே, என்னை அவமானப்படுத்தி) எதிரிகள் சந்தோஷப்படுமாறு நீர் செய்து விடாதீர். (இந்த) அநியாயக்கார மக்களுடனும் என்னை சேர்த்து விடாதீர்'' என்று கூறினார்.
IFT
மூஸா தம் சமுதாயத்தாரிடம் கோபமும் வேதனையும் கொண்டவராகத் திரும்பினார். வந்தவுடனேயே அவர் கூறினார்: “நான் சென்ற பிறகு என்னுடைய பிரதிநிதிகளாய் இருந்து நீங்கள் செய்த செயல் எத்துணைக் கெட்டது! உங்கள் இறைவனின் கட்டளையை எதிர்பார்த்துப் பொறுமையாய் இருந்திடக் கூடாதா?” மேலும் பலகைகளைப் போட்டுவிட்டார்; மேலும் தம் சகோதரரின் (ஹாரூனின்) தலை(முடி)யைப் பிடித்து இழுத்தார். ஹாரூன் கூறினார்: “என் தாயின் மகனே! இம்மக்கள் என்னைப் பலவீனனாகக் கருதி, என்னைக் கொலை செய்யவும் முனைந்து விட்டார்கள். எனவே எதிரிகள் என்னைப் பார்த்து நகைக்குமாறு நீர் செய்துவிடாதீர்! மேலும், இந்த அக்கிரமக்காரக் கூட்டத்தார்களுடன் என்னையும் சேர்த்துவிடாதீர்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (இதனை அறிந்த மூஸா கோபங்கொண்டவராக – பெரும் வருத்தம் நிறைந்தவராக தன் சமூகத்தாரிடம் திரும்பி வந்தபொழுது (அவர்களிடம்) “நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த (இச்செயலான)து மிகக் கெட்டது, உங்கள் இரட்சகனின் கட்டளை (வேதனை) வருவதை நீங்கள் அவசரப்படுகின்றீர்களா?” என்று கூறி (அல்லாஹ்வின் கட்டளைகள் எழுதப்பட்ட) பலகைகளைப் போட்டுவிட்டு, தன் சகோதரரின் தலை (முடி)யைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தார், அ(தற்க)வர், “என் தாயின் மகனே! இந்த மக்கள் நிச்சயமாக என்னை பலவீனப்படுத்தி விட்டனர், என்னைக் கொலை செய்து விடவும் முற்பட்டனர், என்னுடைய விரோதிகள் என்னைப் பார்த்து சிரிக்குமாறு நீர் செய்துவிடாதீர், இந்த அக்கிரமக்கார சமூகத்தாருடன் என்னை ஆக்கியும் விடாதீர்” என்று கூறினார்.
Saheeh International
And when Moses returned to his people, angry and grieved, he said, "How wretched is that by which you have replaced me after [my departure]. Were you impatient over the matter of your Lord?" And he threw down the tablets and seized his brother by [the hair of] his head, pulling him toward him. [Aaron] said, "O son of my mother, indeed the people overpowered me and were about to kill me, so let not the enemies rejoice over me and do not place me among the wrongdoing people."
قَالَ رَبِّ اغْفِرْ لِیْ وَلِاَخِیْ وَاَدْخِلْنَا فِیْ رَحْمَتِكَ ۖؗ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ ۟۠
قَالَகூறினார்رَبِّஎன் இறைவாاغْفِرْமன்னிப்பு வழங்குلِىْஎனக்குوَلِاَخِىْஇன்னும் என் சகோதரருக்குوَ اَدْخِلْنَاஇன்னும் சேர்த்துக்கொள் / எங்களைفِىْ رَحْمَتِكَ ۖ உன் கருணையில்وَاَنْتَ اَرْحَمُநீ மகா கருணையாளன்الرّٰحِمِيْنَ‏கருணையாளர்களில்
கால ரBப்Bபிக்Fபிர்லீ வ லி அகீ வ அத்கில்னா Fபீ ரஹ்மதிக வ அன்த அர்ஹமுர் ராஹிமீன்
முஹம்மது ஜான்
“என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் மன்னிப்பாயாக! உன் ரஹ்மத்தில் (நற்கிருபையில்) - பிரவேசிக்கச் செய்வாயாக! ஏனெனில், நீயே கிருபையாளர்களிலெல்லாம், மிக்க கிருபையாளன்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.  
அப்துல் ஹமீது பாகவி
(பிறகு மூஸா இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! எனக்கும் என் சகோதரருக்கும் நீ பிழை பொருத்தருள்வாயாக! உன் அன்பிலும் எங்களை சேர்த்துக் கொள்வாயாக! நீ கிருபை செய்பவர்களில் எல்லாம் மிக்க கிருபையாளன்'' என்று (பிரார்த்தனை செய்து) கூறினார்.
IFT
(அப்போது) மூஸா, “என் இறைவா! என்னையும், என் சகோதரரையும் மன்னிப்பாயாக! மேலும், உன்னுடைய கருணையில் எங்களைச் சேர்த்துக்கொள்வாயாக! நீ அனைவரையும்விட அதிகம் கருணை புரிபவனாவாய்” என்று இறைஞ்சினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என் இரட்சகனே! என்னையும், என் சகோதரரையும் நீ மன்னித்தருள்வாயாக! உன்னுடைய கிருபையில் எங்களையும் பிரவேசிக்கச் செய்வாயாக! நீ கிருபை செய்வோரிலெல்லாம் மிக்க கிருபையாளன்” என்று (பிரார்த்தனை செய்து) கூறினார்.
Saheeh International
[Moses] said, "My Lord, forgive me and my brother and admit us into Your mercy, for You are the most merciful of the merciful."
اِنَّ الَّذِیْنَ اتَّخَذُوا الْعِجْلَ سَیَنَالُهُمْ غَضَبٌ مِّنْ رَّبِّهِمْ وَذِلَّةٌ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُفْتَرِیْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்اتَّخَذُواஎடுத்துக் கொண்டனர்الْعِجْلَகாளைக் கன்றைسَيَنَالُهُمْஅடையும்/அவர்களைغَضَبٌகோபம்مِّنْஇருந்துرَّبِّهِمْஅவர்களின் இறைவன்وَذِلَّـةٌஇன்னும் இழிவுفِى الْحَيٰوةِவாழ்க்கையில்الدُّنْيَا‌ ؕஉலகம்وَكَذٰلِكَஇவ்வாறேنَجْزِىْகூலி கொடுப்போம்الْمُفْتَرِيْنَ‏இட்டுக்கட்டுபவர்களுக்கு
இன்னல் லதீனத் தகதுல் 'இஜ்ல-ஸ யனாலுஹும் களBபும் மிர் ரBப்Bபிஹிம் வ தில்லதுன் Fபில் ஹயாதித் துன்யா; வ கதாலிக னஜ்Zஜில் முFப்தரீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக எவர்கள் காளைக் கன்றை (இறைவனாக) ஆக்கிக் கொண்டார்களோ அவர்களை, அவர்கள் இறைவனிடமிருந்து கோபமும், இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் சீக்கிரமே வந்து சேரும்; பொய்க் கற்பனை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
(பின்னர் இறைவன் மூஸாவை நோக்கிக் கூறினான்:) ‘‘எவர்கள் காளைக்கன்றை (தெய்வமாக) எடுத்துக் கொண்டார்களோ அவர்களை நிச்சயமாக இறைவனின் கோபமும் இழிவும் இவ்வுலக வாழ்க்கையிலேயே அதிசீக்கிரத்தில் வந்தடையும். பொய்யைக் கற்பனை செய்பவர்களுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்.
IFT
(அதற்கு இவ்வாறு பதில் அளிக்கப்பட்டது:) “எவர்கள் கன்றுக்குட்டியைத் தெய்வமாக எடுத்துக் கொண்டார்களோ அவர்கள் நிச்சயம் தம் இறைவனின் சினத்திற்கு ஆளாகியே தீருவார்கள். மேலும், உலக வாழ்விலும் இழிவுக்குரியவர்களாகி விடுவார்கள். பொய் புனைந்துரைப்பவர்களுக்கு நாம் இவ்வாறே தண்டனை அளிக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக்கொண்டார்களே அத்தகையோர்-அவர்களுடைய இரட்சகனிடமிருந்து கோபமும், இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் அவர்களை வந்தடையும், பொய்க் கற்பனை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்” (என்று அல்லாஹ் கூறினான்.)
Saheeh International
Indeed, those who took the calf [for worship] will obtain anger from their Lord and humiliation in the life of this world, and thus do We recompense the inventors [of falsehood].
وَالَّذِیْنَ عَمِلُوا السَّیِّاٰتِ ثُمَّ تَابُوْا مِنْ بَعْدِهَا وَاٰمَنُوْۤا ؗ اِنَّ رَبَّكَ مِنْ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِیْمٌ ۟
وَالَّذِيْنَஎவர்கள்عَمِلُواசெய்தனர்السَّيِّاٰتِதீமைகளைثُمَّபிறகுتَابُوْاதிருந்தி திரும்பினர்مِنْۢ بَعْدِهَاஅவற்றுக்குப் பின்னர்وَاٰمَنُوْۤاஇன்னும் நம்பிக்கை கொண்டார்கள்اِنَّ رَبَّكَநிச்சயமாக உம் இறைவன்مِنْۢ بَعْدِهَاஅதற்குப் பின்னர்لَغَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏பெரும் கருணையாளன்
வல்லதீன 'அமிலுஸ் ஸய்யிஆதி தும்ம தாBபூ மின் Bபஃதிஹா வ ஆமனூ இன்ன ரBப்Bபக மின் Bபஃதிஹா ல கFபூருர் ரஹீம்
முஹம்மது ஜான்
ஆனால் தீய செயல்கள் செய்து கொண்டிருந்தோர் (மனந்திருந்தி), தவ்பா செய்து; (பாவங்களிலிருந்து விலகி உண்மையாக) நம்பிக்கை கொண்டால் - நிச்சயமாக அதன்பின் உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்பவனாகவுமிருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(எனினும் இத்தகைய) பாவங்கள் செய்து கொண்டிருந்தவர்களிலும் எவர்கள் கைசேதப்பட்டு அதிலிருந்து விலகி உண்மையாகவே நம்பிக்கை கொள்கிறார்களோ (அவர்களை), அதற்குப் பின்னர் நிச்சயமாக உமது இறைவன் மன்னித்துக் கருணை செய்பவன் ஆவான்.
IFT
மேலும், எவர்கள் தீவினைகள் புரிகின்றார்களோ, பின்னர் அவற்றிலிருந்து விலகி மன்னிப்புக்கோரி இறைநம்பிக்கையும் கொண்டார்களேயானால், அதன் பிறகு திண்ணமாக உம் இறைவன் அவர்களை அதிகம் மன்னித்து கிருபை செய்பவனாக இருக்கின்றான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், தீய செயல்கள் செய்துவிட்டு, (மனம் வருந்தி) அதன் பின் பச்சாதாபப்பட்டு, (அதிலிருந்து விலகி, உண்மையாகவே) விசுவாசமும் கொண்டு விட்டார்களே, அத்தகையோர் - (அவர்களுடைய பாவத்தை நிச்சயமாக உமதிரட்சகன் அதற்குப்பின் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபை செய்பவன்.
Saheeh International
But those who committed misdeeds and then repented after them and believed - indeed your Lord, thereafter, is Forgiving and Merciful.
وَلَمَّا سَكَتَ عَنْ مُّوْسَی الْغَضَبُ اَخَذَ الْاَلْوَاحَ ۖۚ وَفِیْ نُسْخَتِهَا هُدًی وَّرَحْمَةٌ لِّلَّذِیْنَ هُمْ لِرَبِّهِمْ یَرْهَبُوْنَ ۟
وَلَمَّاபோதுسَكَتَதனிந்தது, அடங்கியது, அமைதியானதுعَنْ مُّوْسَىமூஸாவிற்குالْغَضَبُகோபம்اَخَذَ الْاَلْوَاحَ ۖ எடுத்தார்/பலகைகளைوَفِىْ نُسْخَتِهَاஅவற்றில் எழுதப்பட்டதில்هُدًىநேர்வழிوَّرَحْمَةٌஇன்னும் கருணைلِّـلَّذِيْنَஎவர்களுக்குهُمْஅவர்கள்لِرَبِّهِمْதங்கள் இறைவனைيَرْهَبُوْنَ‏பயப்படுகிறார்கள்
வ லம்மா ஸகத 'அன் மூஸல் களBபு அகதல் அல்வாஹ வ Fபீ னுஸ்கதிஹா ஹுத(ன்)வ் வ ரஹ்மதுல் லில் லதீன ஹும் லி ரBப்Bபிஹிம் யர்ஹBபூன்
முஹம்மது ஜான்
மூஸாவை விட்டும் கோபம் தணிந்த போது, (அவர் எறிந்த விட்ட) பலகைகளை எடுத்துக் கொண்டார் - அவற்றில் வரையப்பெற்ற குறிப்புகளில் தம் இறைவனுக்குப் பயப்படுபவர்களுக்கு நேர் வழியும், (இறை) கிருபையும் இருந்தன.
அப்துல் ஹமீது பாகவி
மூஸாவுடைய கோபம் தணிந்த பின்னர் அவர்(அக்கற்) பலகைகளை எடுத்துக் கொண்டார். அதன் ஏடுகளில் தங்கள் இறைவனை அஞ்சுபவர்களுக்கு நேரான வழியும் அருளும் இருந்தன.
IFT
மேலும், மூஸாவுக்குக் கோபம் தணிந்தபோது அப்பலகைகளை அவர் எடுத்துக் கொண்டார். மேலும், எவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சுகின்றார்களோ அவர்களுக்கு அவற்றில் எழுதப்பட்டிருந்த அறிவுரைகளில் வழிகாட்டலும் அருளும் இருந்தன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், மூஸாவுடைய கோபம் தணிந்தபோது, அவர் (அந்தப்)பலகைகளை எடுத்துக் கொண்டார், அவற்றில் வரையப்பட்டிருந்ததில் தங்களுடைய இரட்சகனை பயப்படுகின்றார்களே அத்தகையோருக்கு நேர் வழியும் (அவனின் பேரருளும் இருந்தன.)
Saheeh International
And when the anger subsided in Moses, he took up the tablets; and in their inscription was guidance and mercy for those who are fearful of their Lord.
وَاخْتَارَ مُوْسٰی قَوْمَهٗ سَبْعِیْنَ رَجُلًا لِّمِیْقَاتِنَا ۚ فَلَمَّاۤ اَخَذَتْهُمُ الرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ اَهْلَكْتَهُمْ مِّنْ قَبْلُ وَاِیَّایَ ؕ اَتُهْلِكُنَا بِمَا فَعَلَ السُّفَهَآءُ مِنَّا ۚ اِنْ هِیَ اِلَّا فِتْنَتُكَ ؕ تُضِلُّ بِهَا مَنْ تَشَآءُ وَتَهْدِیْ مَنْ تَشَآءُ ؕ اَنْتَ وَلِیُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَیْرُ الْغٰفِرِیْنَ ۟
وَاخْتَارَதேர்ந்தெடுத்தார்مُوْسٰىமூஸாقَوْمَهٗதன் சமுதாயத்தில்سَبْعِيْنَஎழுபதுرَجُلًاஆண்களைلِّمِيْقَاتِنَا‌ ۚநம் குறிப்பிட்ட நேரத்திற்குفَلَمَّاۤபோதுاَخَذَتْهُمُபிடித்தது/அவர்களைالرَّجْفَةُஇடிமுழக்கம்قَالَகூறினார்رَبِّஎன் இறைவாلَوْ شِئْتَநீ நாடியிருந்தால்اَهْلَـكْتَهُمْஅழித்திருப்பாய்/அவர்களைمِّنْ قَبْلُ(இதற்கு) முன்னரேوَاِيَّاىَ‌ ؕஇன்னும் என்னைاَ تُهْلِكُنَاஅழிப்பாயா / எங்களைبِمَا فَعَلَசெய்ததற்காகالسُّفَهَآءُஅறிவீனர்கள்مِنَّا ۚஎங்களில்اِنْஇல்லைهِىَஇதுاِلَّاதவிரفِتْنَـتُكَ ؕஉன் சோதனையேتُضِلُّவழிகெடுக்கிறாய்بِهَاஇதைக் கொண்டுمَنْஎவரைتَشَآءُநாடுகிறாய்وَتَهْدِىْஇன்னும் நேர்வழி செலுத்துகிறாய்مَنْஎவரைتَشَآءُ ؕநாடுகிறாய்اَنْتَநீوَلِيُّنَاஎங்கள் பாதுகாவலன்فَاغْفِرْஆகவே மன்னிப்பு வழங்குلَـنَاஎங்களுக்குوَارْحَمْنَا‌கருணைபுரி/எங்களுக்குوَاَنْتَ خَيْرُநீ மிகச் சிறந்தவன்الْغَافِرِيْنَ‏மன்னிப்பவர்களில்
வக்தார மூஸா கவ்மஹூ ஸBப்'ஈன ரஜுலல் லி மீகாதினா Fபலம்மா அகதத் ஹுமுர் ரஜ்Fபது கால ரBப்Bபி லவ் ஷி'த அஹ்லக்தஹும் மின் கBப்லு வ இய்யாய்; 'அ துஹ்லிகுன Bபிமா Fப'அலஸ் ஸுFபஹா'உ மின்னா இன் ஹிய இல்லா Fபித்னதுக துளில்லு Bபிஹா மன் தஷா'உ வ தஹ்தீ மன் தஷா; அன்த வலிய்யுனா Fபக்Fபிர் லனா வர்ஹம்னா வ அன்த கய்ருல் காFபிரீன்
முஹம்மது ஜான்
இன்னும் மூஸா நாம் குறிப்பிட்ட நேரத்தில் (தூர் மலையில்) நம்மைச் சந்திப்பதற்காக, தம் சமூகத்தாரிலிருந்து எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களைப் பூகம்பம் பற்றிக்கொண்டபோது, அவர், “என் இறைவனே! நீ கருதியிருந்தால், இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் நீ அழித்திருக்கலாமே! எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த (குற்றத்)திற்காக, எங்கள் யாவரையும் நீ அழித்துவிடுகிறாயா? இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை; இதைக்கொண்டு நீ நாடியவர்களை வழிதவற விடுகிறாய்; இன்னும் நீ நாடியவர்களை நேர் வழியில் நடத்துகிறாய். நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்” என்று பிரார்த்தித்தார்.
அப்துல் ஹமீது பாகவி
மூஸா, நாம் குறித்த நேரத்தி(ல் ‘‘தூர்' என்னும் மலைக்குத் தம்முடன் வருவத)ற்காக தம் மக்களில் எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்களை பூகம்பம் பிடித்(து மூர்ச்சையாகி விழுந்)ததும் அவர் (தன் இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! (எங்களை அழித்துவிட வேண்டுமென்று) நீ கருதியிருந்தால் இதற்கு முன்னதாகவே என்னையும் இவர்களையும் நீ அழித்திருக்கலாம். எங்களிலுள்ள சில அறிவீனர்கள் செய்த (குற்றத்)திற்காக எங்கள் அனைவரையும் நீ அழித்து விடுகிறாயா? இது உன் சோதனையே தவிர வேறில்லை. இதைக் கொண்டு நீ நாடியவர்களை வழி தவற விடுகிறாய்; நீ நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகிறாய். நீதான் எங்கள் இறைவன். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு நீ அருள் புரிவாயாக! மன்னிப்பவர்கள் அனைவரிலும் நீ மிக்க மேலானவன்'' என்று(ம் பிரார்த்தித்துக்) கூறினார்.
IFT
மேலும், மூஸா தம் சமுதாயத்தைச் சார்ந்தவர்களில் எழுபது பேரை நாம் குறிப்பிட்ட நேரத்தி(ல் தம்முடன் வருவத)ற்காகத் தேர்ந்தெடுத்தார். கடும் பூகம்பம் அவர்களைத் தாக்கியபோது மூஸா இறைஞ்சினார்: “என் இறைவனே! நீ நாடியிருந்தால் அவர்களையும் என்னையும் முன்பே அழித்துவிட்டிருக்க முடியும்! எங்களில் சில அறிவிலிகள் செய்த தவறுகளுக்காக எங்கள் அனைவரையும் அழிக்கப்போகின்றாயா? இது உன்னுடைய சோதனையே அன்றி வேறில்லை; இதன் மூலம் நீ நாடுகின்றவர்களை வழிகெடுக்கிறாய்; இன்னும் நீ நாடுகின்றவர்களுக்கு நேர்வழியைக் காண்பிக்கின்றாய். எங்கள் பாதுகாவலன் நீயே! எனவே எங்களை மன்னித்து, மேலும் எங்கள் மீது கருணை புரிவாயாக! நீ எல்லோரையும் விட அதிகம் மன்னிப்பவனாய் இருக்கின்றாய்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், மூஸா நாம் குறித்த நேரத்திற்காக தம் சமூகத்தாரில் எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார், அவர்களைப் பூகம்பம் பிடித்தபொழுது (என் இரட்சகனே! நீ நாடியிருந்தால், இதற்கு முன்னதாகவே இவர்களையும், என்னையும் நீ அழித்திருக்கலாமே) எங்களிலுள்ள அறிவீனர்கள் சிலர் செய்ததற்காக, எங்களை நீ அழித்து விடுகிறாயா?” இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை, இதனைக் கொண்டு நீ நாடியவர்களை வழி தவறச் செய்கிறாய், நீ நாடியவர்களை நேர் வழியிலும் செலுத்துகிறாய், நீயே எங்களுடைய பாதுகாவலன், ஆகவே நீ எங்களை மன்னித்தருள்வாயாக! மேலும், எங்களுக்கு நீ அருள் புரிவாயாக, நீயே மன்னிப்பவர்களில் மிக்க மேலானவன்” என்று அவர் (பிரார்த்தித்துக்) கூறினார்.
Saheeh International
And Moses chose from his people seventy men for Our appointment. And when the earthquake seized them, he said, "My Lord, if You had willed, You could have destroyed them before and me [as well]. Would You destroy us for what the foolish among us have done? This is not but Your trial by which You send astray whom You will and guide whom You will. You are our Protector, so forgive us and have mercy upon us; and You are the best of forgivers.
وَاكْتُبْ لَنَا فِیْ هٰذِهِ الدُّنْیَا حَسَنَةً وَّفِی الْاٰخِرَةِ اِنَّا هُدْنَاۤ اِلَیْكَ ؕ قَالَ عَذَابِیْۤ اُصِیْبُ بِهٖ مَنْ اَشَآءُ ۚ وَرَحْمَتِیْ وَسِعَتْ كُلَّ شَیْءٍ ؕ فَسَاَكْتُبُهَا لِلَّذِیْنَ یَتَّقُوْنَ وَیُؤْتُوْنَ الزَّكٰوةَ وَالَّذِیْنَ هُمْ بِاٰیٰتِنَا یُؤْمِنُوْنَ ۟ۚ
وَاكْتُبْஎழுதுவாயாக, விதிப்பாயாகلَـنَاஎங்களுக்குفِىْ هٰذِهِ الدُّنْيَاஇம்மையில்حَسَنَةًஅழகியதை, நல்ல வாழ்வைوَّفِى الْاٰخِرَةِஇன்னும் மறுமையில்اِنَّاநிச்சயமாக நாங்கள்هُدْنَاۤதிரும்பினோம்اِلَيْكَ ؕஉன் பக்கம்قَالَகூறினான்عَذَابِىْۤஎன் வேதனைاُصِيْبُஅடைவேன்بِهٖஅதைக் கொண்டுمَنْ اَشَآءُ‌ ۚஎவரை/நாடுவேன்وَرَحْمَتِىْஎன் கருணைوَسِعَتْவிசாலமாக்கி விட்டதுكُلَّ شَىْءٍ‌ ؕஎல்லாவற்றையும்فَسَاَكْتُبُهَاவிதிப்பேன்/அதைلِلَّذِيْنَஎவர்களுக்குيَتَّقُوْنَஅஞ்சுவார்கள்وَيُؤْتُوْنَஇன்னும் கொடுப்பார்கள்الزَّكٰوةَஸகாத்தைوَالَّذِيْنَஇன்னும் எவர்கள்هُمْஅவர்கள்بِاٰيٰتِنَاநம் வசனங்களைيُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்வார்கள்
வக்துBப் லனா Fபீ ஹாதி ஹித் துன்யா ஹஸனத(ன்)வ் வ Fபில் ஆகிரதி இன்னா ஹுத்னா இலய்க்; கால 'அதாBபீ உஸீBபு Bபிஹீ மன் அஷா'உ வ ரஹ்மதீ வஸி'அத் குல்ல ஷய்'; Fபஸ அக்துBபுஹா லில் லதீன யத்தகூன வ யு'தூனZஜ் Zஜகாத வல் லதீன ஹும் Bபி ஆயாதினா யு'மினூன்
முஹம்மது ஜான்
“இன்னும் இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்” (என்றும் பிரார்த்தித்தார்). அதற்கு இறைவன், ”என்னுடைய வேதனையை கொண்டு நான் நாடியவரை பிடிப்பேன்; ஆனால் என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது; எனினும் அதனை பயபக்தியுடன் (பேணி) நடப்போருக்கும், (முறையாக) ஜகாத்து கொடுத்து வருவோருக்கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள் செய்வேன்” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், ‘‘(இறைவனே!) இம்மையில் நீ எங்களுக்கு நன்மையை முடிவு செய்வாயாக! (அவ்வாறே) மறுமையிலும் (செய்வாயாக)! நிச்சயமாக நாங்கள் உன் பக்கமே முன்னோக்கினோம்'' (என்றும் பிரார்த்தித்தார்). அ(தற்கு இறை)வன் ‘‘நான் நாடியவர்களை என் வேதனை வந்தடையும். எனினும், என் அருட்கொடை அனைத்தையும்விட மிக விரிவானது. ஆகவே, எவர்கள் (எனக்குப்) பயந்து ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் நம் வசனங்களை நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுக்கும் (என் அருளை) நான் முடிவு செய்வேன்'' என்று கூறினான்.
IFT
இன்னும், “எங்களுக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் நன்மையை எழுதிவைப்பாயாக! திண்ணமாக, நாங்கள் உன் பக்கம் திரும்பி விட்டோம்.” அதற்கு இறைவன், “நான் நாடுகின்றவர்களுக்கு தண்டனை அளிப்பேன். ஆயினும், என்னுடைய அருள் அனைத்தையும் சூழ்ந்திருக்கின்றது. எனவே, எவர்கள் இறைவனுக்கு அஞ்சுகின்றார்களோ மேலும், ஜகாத்தையும் அளிக்கின்றார்களோ மேலும், என்னுடைய வசனங்களையும் நம்புகின்றார்களோ அவர்களுக்கு நான் அந்த அருளை உரித்தாக்குவேன்” என்று பதிலுரைத்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், ”இவ்வுலகத்தில் எங்களுக்கு நன்மையை எழுதிவிடுவாயாக! மறுமையிலும் (நன்மையை எழுதுவாயாக!) நிச்சயமாக நாங்கள் உன் பக்கமே திரும்பிவிட்டோம்” (என்றும் பிரார்த்தித்தார்.) அதற்கு அல்லாஹ்வாகிய அவன் “என்னுடைய வேதனையாகிறது – அதனைக்கொண்டு நான் நாடியவர்களை பிடிப்பேன், என்னுடைய அருளோ எல்லா வஸ்துக்களிலும் சூழ்ந்து விசாலமாகியுள்ளது, ஆகவே, “(என்னுடைய அருளாகிய) அதனை, (எனக்குப்) பயந்து ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களே அத்தகையோருக்கும், நம்முடைய வசனங்களை விசுவாசிக்கிறார்களே அத்தகையோருக்கும் நான் (விதித்து) எழுதிவிடுவேன்” என்று கூறினான்.
Saheeh International
And decree for us in this world [that which is] good and [also] in the Hereafter; indeed, we have turned back to You." [Allah] said, "My punishment - I afflict with it whom I will, but My mercy encompasses all things." So I will decree it [especially] for those who fear Me and give zakah and those who believe in Our verses-
اَلَّذِیْنَ یَتَّبِعُوْنَ الرَّسُوْلَ النَّبِیَّ الْاُمِّیَّ الَّذِیْ یَجِدُوْنَهٗ مَكْتُوْبًا عِنْدَهُمْ فِی التَّوْرٰىةِ وَالْاِنْجِیْلِ ؗ یَاْمُرُهُمْ بِالْمَعْرُوْفِ وَیَنْهٰىهُمْ عَنِ الْمُنْكَرِ وَیُحِلُّ لَهُمُ الطَّیِّبٰتِ وَیُحَرِّمُ عَلَیْهِمُ الْخَبٰٓىِٕثَ وَیَضَعُ عَنْهُمْ اِصْرَهُمْ وَالْاَغْلٰلَ الَّتِیْ كَانَتْ عَلَیْهِمْ ؕ فَالَّذِیْنَ اٰمَنُوْا بِهٖ وَعَزَّرُوْهُ وَنَصَرُوْهُ وَاتَّبَعُوا النُّوْرَ الَّذِیْۤ اُنْزِلَ مَعَهٗۤ ۙ اُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟۠
اَ لَّذِيْنَஎவர்கள்يَتَّبِعُوْنَபின்பற்றுவார்கள்الرَّسُوْلَஇத்தூதரைالنَّبِىَّநபியானالْاُمِّىَّஎழுதப் படிக்கத் தெரியாதவர்الَّذِىْஎவர்يَجِدُوْنَهٗகாண்கின்றனர்/அவரைمَكْتُوْبًاகுறிப்பிடப்பட்டவராகعِنْدَهُمْஅவர்களிடம்فِى التَّوْرٰٮةِதவ்றாத்தில்وَالْاِنْجِيْلِஇன்னும் இன்ஜீலில்يَاْمُرُஏவுவார்هُمْஅவர்களுக்குبِالْمَعْرُوْفِநன்மையைوَيَنْهٰٮهُمْஇன்னும் தடுப்பார்/அவர்களைعَنِ الْمُنْكَرِதீமையைவிட்டுوَيُحِلُّஇன்னும் ஆகுமாக்குவார்لَهُمُஅவர்களுக்குالطَّيِّبٰتِநல்ல,சுத்தமானவற்றைوَيُحَرِّمُஇன்னும் தடை செய்வார்عَلَيْهِمُஅவர்களுக்குالْخَبٰۤٮِٕثَகெட்டவற்றை, கெடுதி செய்பவற்றைوَيَضَعُஇன்னும் அகற்றுவார்عَنْهُمْஅவர்களை விட்டுاِصْرَهُمْகடின சுமையை/அவர்களுடையوَالْاَغْلٰلَஇன்னும் விலங்குகளைالَّتِىْஎவைكَانَتْஇருந்தனعَلَيْهِمْ‌ ؕஅவர்கள் மீதுفَالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்بِهٖஅவரைوَعَزَّرُوْهُஇன்னும் பாதுகாத்தனர்/அவரைوَنَصَرُوْهُஇன்னும் உதவினர்/அவருக்குوَ اتَّبَـعُواஇன்னும் பின்பற்றினர்النُّوْرَஒளியைالَّذِىْۤஎதுاُنْزِلَஇறக்கப்பட்டதுمَعَهٗ ۤ‌ ۙஅவருடன்اُولٰۤٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْمُفْلِحُوْنَ‏வெற்றியாளர்கள்
அல்லதீன யத்தBபி'ஊனர் ரஸூலன் னBபிய்யல் உம்மிய்யல் லதீ யஜிதூனஹூ மக்தூBபன் 'இன்தஹும் Fபித் தவ்ராதி வல் இன்ஜீலி ய' முருஹும் Bபில்மஃரூFபி வ யன்ஹாஹும் 'அனில் முன்கரி வ யுஹில்லு லஹுமுல் தய்யிBபாதி வ யுஹர்ரிமு 'அலய்ஹிமுல் கBபா'இத வ யள'உ 'அன்ஹும் இஸ்ரஹும் வல் அக்லாலல் லதீ கானத் 'அலய்ஹிம்; Fபல்லதீன ஆமனூ Bபிஹீ வ 'அZஜ்Zஜரூஹு வ னஸரூஹு வத்தBப'உன் னூரல் லதீ உன்Zஜில ம'அஹூ உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
முஹம்மது ஜான்
எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே, அவர்களில்) எவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத (நம்) தூதராகிய இந்த நபியைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் தங்களிடமுள்ள தவ்றாத்திலும், இன்ஜீலிலும் இவருடைய பெயர் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். (இத்தூதரோ) அவர்களை நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார். நல்லவற்றையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார். மேலும், அவர்களது சுமையையும் அவர்கள் மீதிருந்த (கடினமான சட்ட) விலங்குகளையும் (இறைவனின் அனுமதி கொண்டு) நீக்கிவிடுவார். ஆகவே, எவர்கள் அவரை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, அவரை பலப்படுத்தி அவருக்கு உதவி செய்து, அவருக்கு இறக்கப்பட்ட பிரகாசமான (இவ்வேதத்)தைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்.
IFT
(எனவே இன்று) அந்த அருளுக்குரியவர்கள் எத்தகையவர்களெனில், அவர்கள் ‘உம்மீ’ நபியாகிய இந்தத் தூதரைப் பின்பற்றுவார்கள்; இவரைக் குறித்து அவர்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். இவர் நன்மை செய்யுமாறு அவர்களை ஏவுகின்றார்; தீமைகளிலிருந்து அவர்களைத் தடுக்கின்றார். மேலும், அவர்களுக்குத் தூய்மையானவற்றை அனுமதிக்கின்றார்; தூய்மையில்லாதவற்றைத் தடை செய்கின்றார். மேலும், அவர்களின் மீதுள்ள சுமையை இறக்குகின்றார்; அவர்களைப் பிணைத்திருந்த விலங்குகளையும் உடைத்தெறிகின்றார். எனவே எவர்கள் இந்நபி மீது நம்பிக்கை கொண்டு இவரைக் கண்ணியப்படுத்தி, உதவியும் புரிகின்றார்களோ, மேலும் இவருடன் இறக்கியருளப்பட்ட ஒளி யினைப் பின்பற்றுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், தங்களிடமுள்ள தவ்றாத்திலும், இன்ஜீலிலும், அவரைப் பற்றி எழுதப்பட்டவராகக் காண்கிறார்களே, அத்தகைய (எழுத்தாற்றல் அற்ற) உம்மி நபியான இத்தூதரை பின்பற்றுகிறார்கள், (இத்தூதரோ) அவர்களை நன்மையான காரியங்களை(ச் செய்யுமாறு) ஏவி பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்குவார், நல்லவைகளையே அவர்களுக்கு (உண்ண) அவர் ஆகுமாக்கியும் வைப்பார், கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்தும் விடுவார், அவர்களுடைய பளுவையும், அவர்கள் மீதிருந்தே அத்தகைய கடினமானவைகளையும் (இரட்சகனின் அனுமதி கொண்டு) அவர்களை விட்டும் நீக்கிவிடுவார், ஆகவே. அவரை (உண்மையாகவே) விசுவாசித்து, இன்னும் அவரை கண்ணியம் செய்து, அவருக்கு உதவியும் புரிந்து அவருடன் இறக்கி வைக்கப்பட்ட ஒளி மிக்க (இவ்வேதத்)தையும் பின்பற்றுகிறார்களே அத்தகையோர்-அவர்கள்தாம் வெற்றியாளர்களாவர்.
Saheeh International
Those who follow the Messenger, the unlettered prophet, whom they find written [i.e., described] in what they have of the Torah and the Gospel, who enjoins upon them what is right and prohibits them from what is wrong and makes lawful for them what is good and forbids them from what is evil and relieves them of their burden and the shackles which were upon them. So they who have believed in him, honored him, supported him and followed the light which was sent down with him - it is those who will be the successful.
قُلْ یٰۤاَیُّهَا النَّاسُ اِنِّیْ رَسُوْلُ اللّٰهِ اِلَیْكُمْ جَمِیْعَا لَّذِیْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ یُحْیٖ وَیُمِیْتُ ۪ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهِ النَّبِیِّ الْاُمِّیِّ الَّذِیْ یُؤْمِنُ بِاللّٰهِ وَكَلِمٰتِهٖ وَاتَّبِعُوْهُ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟
قُلْகூறுவீராகيٰۤاَيُّهَا النَّاسُமனிதர்களேاِنِّىْநிச்சயமாக நான்رَسُوْلُதூதர்اللّٰهِஅல்லாஹ்வின்اِلَيْكُمْ جَمِيْعَاْஉங்கள் அனைவருக்கும்ۨالَّذِىْஎவன்لَهٗஅவனுக்குரியதேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்களின்وَالْاَرْضِ‌ۚஇன்னும் பூமியின்لَاۤ اِلٰهَஅறவே இல்லைاِلَّاவணங்கப்படும் இறைவன்هُوَஅவனைத்தவிரيُحْىٖஉயிர்ப்பிக்கிறான்وَيُمِيْتُ‌இன்னும் மரணிக்கச் செய்கிறான்فَاٰمِنُوْاஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைக் கொண்டுوَرَسُوْلِهِஇன்னும் அவனுடைய தூதரைالنَّبِىِّநபிالْاُمِّىِّஎழுதப்படிக்கத் தெரியாதவர்الَّذِىْஎவர்يُؤْمِنُநம்பிக்கைகொள்கிறார்بِاللّٰهِஅல்லாஹ்வைக் கொண்டுوَكَلِمٰتِهٖஇன்னும் அவனுடைய வாக்குகளைوَاتَّبِعُوْهُபின்பற்றுங்கள்/அவரைلَعَلَّكُمْ تَهْتَدُوْنَ‏நீங்கள் நேர்வழிபெறுவதற்காக
குல் யா அய்யுஹன் னாஸு இன்னீ ரஸூலுல் லாஹி இலய்கும் ஜமீ'அனில் லதீ லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி லா இலாஹ இல்லா ஹுவ யுஹ்யீ வ யுமீது Fப ஆமினூ Bபில்லாஹி வ ரஸூலிஹின் னBபிய்யில் உம்மிய் யில் லதீ யு'மினு Bபில்லாஹி வ கலிமாதிஹீ வத்தBபி'ஊஹு ல'அல்லகும் தஹ்ததூன்
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: ‘‘மனிதர்களே! (நீங்கள் எந்த நாட்டவர் ஆயினும் எவ்வகுப்பாராயினும்) நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர் ஆவேன். வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! (வணக்கத்திற்குரிய) இறைவன் அவனைத்தவிர வேறு ஒருவருமில்லை. அவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கும்படி செய்கிறான். ஆகவே, அந்த அல்லாஹ்வையும், எழுதப் படிக்க அறியாத அவனுடைய இத்தூதரையும் நீங்கள் நம்பிக்கை கொள்வீர்களாக! அவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வசனங்களையும் நம்பிக்கை கொள்கிறார். ஆகவே, நீங்கள் நேரான வழியை அடைய அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்.
IFT
(முஹம்மதே!) நீர் கூறும்: “மனிதர்களே! திண்ணமாக, வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியாகிய அல்லாஹ்வின் தூதராக நான் உங்கள் அனைவர்பாலும் அனுப்பப்பட்டுள்ளேன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனே வாழ்வையும் மரணத்தையும் கொடுக்கின்றான். எனவே, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவனால் அனுப்பப்பட்ட ‘உம்மீ’ நபி மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்! அவரோ அல்லாஹ்வையும் அவனுடைய வேதவாக்குகளையும் நம்புகின்றார். மேலும், அவரைப் பின்பற்றுங்கள்! அதனால் நீங்கள் நேர்வழி பெறக்கூடும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக! மனிதர்களே! நிச்சயமாகவே நான் உங்கள் யாவருக்கும், அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன், அவன் எத்தகையோனென்றால், வானங்கள், (பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது, வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர (வேறு எவரும்) இல்லை., அவனே உயிர்ப்பிக்கிறான், அவனே மரணிக்கச் செய்கிறான், ஆகவே, அந்த அல்லாஹ்வையும் (எழுத்தாற்றல் அற்ற) உம்மி நபியாகிய அவனுடைய (இத்)தூதரையும் நீங்கள் விசுவாசிப்பீர்களாக! அவர் எத்தகையவரென்றால்-அல்லாஹ்வையும், அவனுடைய வசனங்களையும் விசுவாசிக்கின்றார், (ஆகவே) நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்.
Saheeh International
Say, [O Muhammad], "O mankind, indeed I am the Messenger of Allah to you all, [from Him] to whom belongs the dominion of the heavens and the earth. There is no deity except Him; He gives life and causes death." So believe in Allah and His Messenger, the unlettered prophet, who believes in Allah and His words, and follow him that you may be guided.
وَمِنْ قَوْمِ مُوْسٰۤی اُمَّةٌ یَّهْدُوْنَ بِالْحَقِّ وَبِهٖ یَعْدِلُوْنَ ۟
وَ مِنْ قَوْمِசமுதாயத்தில்مُوْسٰٓىமூஸாவுடையاُمَّةٌஒரு கூட்டம்يَّهْدُوْنَவழி காட்டுகிறார்கள்بِالْحَـقِّசத்தியத்தின்படிوَبِهٖஇன்னும் அதைக்கொண்டுيَعْدِلُوْنَ‏நீதியாக நடக்கின்றனர்
வ மின் கவ்மி மூஸா உம்மது(ன்)ய் யஹ்தூன Bபில்ஹக்கி வ Bபிஹீ யஃதிலூன்
முஹம்மது ஜான்
உண்மையைக் கொண்டு நேர்வழி பெற்று அதன் மூலம் நீதியும் செலுத்துகின்றவர்களும் மூஸாவின் சமுதாயத்தில் உள்ளனர்.
அப்துல் ஹமீது பாகவி
மூஸாவுடைய மக்களில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (தாங்கள் சத்திய வழியில் செல்வதுடன், மக்களுக்கும்) சத்திய வழியை அறிவித்து, அதன்படி நீதமாகவும் நடக்கின்றனர்.
IFT
சத்தியத்தின் அடிப்படையில் வழிகாட்டி, அதற்கு ஏற்பவே நீதி செலுத்தக்கூடிய ஒரு பிரிவினர் மூஸாவுடைய சமுதாயத்தாரில் இருந்தனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், மூஸாவுடைய சமூகத்தாரில் ஒரு கூட்டத்தினர் இருக்கினறனர், அவர்கள் சத்தியத்தைக் கொண்டு (மற்ற மனிதர்களுக்கு) வழி காண்பிக்கின்றனர், அதன்படி நீதியும் செய்கின்றனர்.
Saheeh International
And among the people of Moses is a community which guides by truth and by it establishes justice.
وَقَطَّعْنٰهُمُ اثْنَتَیْ عَشْرَةَ اَسْبَاطًا اُمَمًا ؕ وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اِذِ اسْتَسْقٰىهُ قَوْمُهٗۤ اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْحَجَرَ ۚ فَانْۢبَجَسَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَیْنًا ؕ قَدْ عَلِمَ كُلُّ اُنَاسٍ مَّشْرَبَهُمْ ؕ وَظَلَّلْنَا عَلَیْهِمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَیْهِمُ الْمَنَّ وَالسَّلْوٰی ؕ كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ ؕ وَمَا ظَلَمُوْنَا وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
وَقَطَّعْنٰهُمُபிரித்தோம்/அவர்களைاثْنَتَىْ عَشْرَةَபன்னிரெண்டுاَسْبَاطًاசந்ததிகளாகاُمَمًا‌ ؕகூட்டங்களாகوَاَوْحَيْنَاۤஇன்னும் வஹீ அறிவித்தோம்اِلٰى مُوْسٰٓىமூஸாவிற்குاِذِ اسْتَسْقٰٮهُபோது/தண்ணீர் கேட்டார்(கள்)/அவரிடம்قَوْمُهٗۤஅவருடைய சமுதாயம்اَنِ اضْرِبْஅடிப்பீராக! என்றுبِّعَصَاكَஉமது தடியால்الْحَجَرَ‌ ۚகல்லைفَانْۢبَجَسَتْபீறிட்டனمِنْهُஅதிலிருந்துاثْنَتَا عَشْرَةَபன்னிரெண்டுعَيْنًا‌ ؕஊற்று(கள்)قَدْ عَلِمَஅறிந்து கொண்டார்(கள்)كُلُّஎல்லாம்اُنَاسٍமக்கள்مَّشْرَبَهُمْ‌ؕதங்கள் அருந்துமிடத்தைوَظَلَّلْنَاஇன்னும் நிழலிடச் செய்தோம்عَلَيْهِمُஅவர்கள் மீதுالْغَمَامَமேகத்தைوَاَنْزَلْنَاஇன்னும் இறக்கினோம்عَلَيْهِمُஅவர்கள் மீதுالْمَنَّ‘மன்னு’ஐوَالسَّلْوٰىؕஇன்னும் ஸல்வாவைكُلُوْاஉண்ணுங்கள்مِنْ طَيِّبٰتِநல்லவற்றைمَا رَزَقْنٰكُمْ‌ؕஎவை/(உணவு) அளித்தோம்/உங்களுக்குوَ مَا ظَلَمُوْنَاஅவர்கள் அநீதியிழைக்கவில்லை/நமக்குوَلٰـكِنْஎனினும்كَانُوْۤاஇருந்தனர்اَنْفُسَهُمْதங்களுக்கேيَظْلِمُوْنَ‏அநீதியிழைப்பவர்களாக
வ கத்தஃ னாஹுமுத் னதய் 'அஷ்ரத அஸ்Bபாதன் உமமா; வ அவ்ஹய்னா இலா மூஸா இதிஸ் தஸ்காஹு கவ்முஹூ அனிள் ரிBப் Bபி'அஸாகல் ஹஜர Fபம்Bபஜஸத் மின்ஹுத் னத 'அஷ்ரத 'அய்னன் கத் 'அலிம குல்லு உனாஸிம் மஷ்ரBபஹும்; வ ளல்லல்னா 'அலய்ஹிமுல் கமாம வ அன்Zஜல்னா 'அலய்ஹிமுல் மன்ன வஸ் ஸல்வா குலூ மின் தய்யிBபாதி மா ரZஜக்னாகும்; வமா ளலமூனா வ லாகின் கானூ அன்Fபுஸஹும் யள்லிமூன்
முஹம்மது ஜான்
மூஸாவின் கூட்டத்தாரைத் (தனித்தனியாகப்) பன்னிரண்டு கூட்டங்களாக பிரித்தோம்; மூஸாவிடம் அவர்கள் குடி தண்ணீர் கேட்டபோது, நாம் அவருக்கு: “உம்முடைய கைத்தடியால் அக்கல்லை அடிப்பீராக!” என்று வஹீ அறிவித்தோம், (அவர் அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கி வந்தன; அவர்களில் ஒவ்வொரு வகுப்பாரும் தாம்(நீர்) அருந்தும் ஊற்றைக் குறிப்பறிந்து கொண்டார்கள்; மேலும், அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம், அவர்களுக்கு மன்னு. ஸல்வாவையும் (மேலான உணவாக) இறக்கிவைத்து : “நாம் உங்களுக்கு அளித்துள்ள தூயவற்றிலிருந்து புசியுங்கள்” (என்று சொன்னோம்; அவ்வாறு இருந்தும் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தார்கள்), அவர்கள் நமக்கு ஒன்றும் தீங்கிழைக்கவில்லை; தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மூஸாவின் மக்களைப் பன்னிரெண்டு கூட்டங்களாகப் பிரித்தோம். மூஸாவிடம் அவர்கள் குடிதண்ணீர் கேட்டபோது (நாம் அவரை நோக்கி) ‘‘உங்கள் (கைத்) தடியைக் கொண்டு இக்கல்லை அடியுங்கள்!'' என்று அவருக்கு வஹ்யி அறிவித்தோம். (அவ்வாறு அவர் அடிக்கவே) அதிலிருந்து பன்னிரெண்டு ஊற்றுக்கள் பீறிட்டோடின. (பன்னிரெண்டு வகுப்பினரில்) ஒவ்வொரு வகுப்பினரும் (அவற்றில்) தாங்கள் அருந்தும் ஊற்றை (குறிப்பாக) அறிந்து கொண்டனர். அன்றி, அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம். அவர்களுக்காக ‘மன்னு ஸல்வா'வையும் இறக்கிவைத்து ‘‘உங்களுக்குக் கொடுக்கும் இந்த நல்ல உணவுகளை (அன்றாடம்) புசித்து வாருங்கள். (அதில் எதையும் நாளைக்கு என்று சேகரித்து வைக்காதீர்கள்'' எனக் கூறினோம். அவ்வாறிருந்தும் அவர்கள் நமக்கு மாறுசெய்தனர். இதனால்) அவர்கள் நமக்கு தீங்கிழைத்து விடவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
IFT
மேலும், நாம் அச்சமூகத்தை பன்னிரண்டு குலங்களாகப் பிரித்து ஒவ்வொன்றையும் தனிப் பெரும் சமுதாயங்களாக அமைத்தோம். மேலும், மூஸாவிடம் அவருடைய சமுதாயத்தார்கள் தண்ணீர் வேண்டியபோது, ‘இன்ன பாறையை உமது கைத்தடியைக் கொண்டு அடியும்!’ என்று அவருக்கு அறிவித்தோம். அப்பாறையிலிருந்து உடனே பன்னிரண்டு ஊற்றுகள் பொங்கின. ஒவ்வொரு குழுவினரும் தாங்கள் தண்ணீர் பருகும் இடத்தை நன்கு அறிந்து கொண்டார்கள். மேலும், நாம் அவர்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மேலும், அவர்களுக்கு மன்னுவும், ஸல்வாவும், இறக்கிவைத்தோம். “நாம் உங்களுக்கு அளித்த தூய்மையான பொருள்களைப் புசியுங்கள்!” (என்று கூறினோம்). ஆனால் அவர்கள் (இதன் பின்னரும் தீயசெயல்களை மேற்கொண்டதனால்) நமக்கு அநீதி இழைத்திடவில்லை; மாறாக தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டிருந்தனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (மூஸாவுடைய கூட்டத்தாராகிய) அவர்களை பன்னிரண்டு பிரிவினர்களாக-கூட்டத்தினர்களாக-நாம் பிரித்தோம், மூஸாவிடம் அவருடைய கூட்டத்தார் தண்ணீர் கேட்டபோது நாம் (அவரிடம்) “உம்முடைய கைத்தடியைக் கொண்டு இக்கல்லை அடிப்பீராக!” என்று அவருக்கு வஹீ அறிவித்தோம், அப்போது (அவர் அவ்வாறு அடிக்கவே,) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கி வந்தன, ஒவ்வொரு பிரிவினரும் (அவற்றில்) தங்கள் நீரருந்துமிடத்தைத் திட்டமாக அறிந்து கொண்டனர், மேலும், அவர்கள் மீது மேகங்களை நிழலிடும்படிச் செய்தோம், அவர்களுக்காக ‘மன்னு’, ‘ஸல்வா’ (எனும் மேலான உண)வையும் இறக்கி வைத்து, நாம் உங்களுக்கு அளித்துள்ள நல்லவற்றிலிருந்து புசியுங்கள், (என்னும் நம் கட்டளைக்கு மாறு செய்தனர். அதனால்) அவர்கள் நமக்கு அநியாயம் செய்துவிடவில்லை, எனினும், அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்கிறவர்களாக இருந்தனர்.
Saheeh International
And We divided them into twelve descendant tribes [as distinct] nations. And We inspired to Moses when his people implored him for water, "Strike with your staff the stone," and there gushed forth from it twelve springs. Every people [i.e., tribe] knew its watering place. And We shaded them with clouds and sent down upon them manna and quails, [saying], "Eat from the good things with which We have provided you." And they wronged Us not, but they were [only] wronging themselves.
وَاِذْ قِیْلَ لَهُمُ اسْكُنُوْا هٰذِهِ الْقَرْیَةَ وَكُلُوْا مِنْهَا حَیْثُ شِئْتُمْ وَقُوْلُوْا حِطَّةٌ وَّادْخُلُوا الْبَابَ سُجَّدًا نَّغْفِرْ لَكُمْ خَطِیْٓـٰٔتِكُمْ ؕ سَنَزِیْدُ الْمُحْسِنِیْنَ ۟
وَاِذْசமயம்قِيْلَகூறப்பட்டதுلَهُمُஅவர்களுக்குاسْكُنُوْاவசித்திருங்கள்هٰذِهِ الْقَرْيَةَஇவ்வூரில்وَكُلُوْاஇன்னும் புசியுங்கள்مِنْهَاஅதில்حَيْثُஇடத்தில்شِئْتُمْநாடினீர்கள்وَقُوْلُوْاஇன்னும் கூறுங்கள்حِطَّةٌநீங்கட்டும்وَّادْخُلُواஇன்னும் நுழையுங்கள்الْبَابَவாசலில்سُجَّدًاசிரம் தாழ்த்தியவர்களாகنَّـغْفِرْமன்னிப்போம்لَـكُمْஉங்களுக்குخَطِيْٓــٰٔــتِكُمْ‌ ؕபாவங்களை / உங்கள்سَنَزِيْدُஅதிகப்படுத்துவோம்الْمُحْسِنِيْنَ‏நல்லறம் புரிவோருக்கு
வ இத் கீல லஹுமுஸ்குனூ ஹாதிஹில் கர்யத வ குலூ மின்ஹா ஹய்து ஷி'தும் வ கூலூ ஹித்தது(ன்)வ் வத்குலுல் BபாBப ஸுஜ்ஜதன் னக்Fபிர் லகும் கதீ'ஆதிகும்; ஸனZஜீதுல் முஹ்ஸினீன்
முஹம்மது ஜான்
இன்னும் அவர்களை நோக்கி: “நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள், இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (நீங்கள் நாடிய பொருட்களைப்) புசித்துக் கொள்ளுங்கள்; “ஹித்ததுன்” (எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதாக,) என்று கூறியவாறு (அதன்) வாயிலில் (பணிவோடு) தலைதாழ்த்தியவர்களாக நுழையுங்கள்; நாம் உங்கள் குற்றங்களை மன்னிப்போம். நன்மை செய்பவர்களுக்கு நாம் அதிகமாகவே (கூலி) கொடுப்போம்” என்று கூறப்பட்டபோது;
அப்துல் ஹமீது பாகவி
(மேலும், அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள். இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (விரும்பிய பொருள்களைப்) புசித்துக் கொள்ளுங்கள். அன்றி ‘ஹித்ததுன்' (எங்கள் பாவச்சுமையை அகற்றுவாயாக!) என்று கூறிக்கொண்டே தலை குனிந்தவர்களாக அதன் வாயிலில் நுழையுங்கள். நாம் உங்கள் குற்றங்களை மன்னித்துவிடுவோம். நன்மை செய்பவர்களுக்கு மேலும், அதிகமாகவே நாம் (நற்)கூலி கொடுப்போம் என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு,
IFT
மேலும், இவ்வாறு அவர்களிடம் கூறப்பட்டதை நீர் நினைவுகூரும்: “நீங்கள் இவ்வூரில் வசியுங்கள்! மேலும் இங்கு (கிடைப்பவற்றை) விரும்பியவாறு தாராளமாகப் புசியுங்கள்; இன்னும் ‘ஹித்ததுன்’ என்று சொல்(லியவாறே செல்)லுங்கள்; மேலும், ஊரின் தலைவாயிலில் சிரம்பணிந்தவாறு நுழையுங்கள்! நாம் உங்களுடைய தவறுகளை மன்னிப்போம். சிறந்த முறையில் நற்செயல் புரிவோருக்கு விரைவில் அதிக நற்கூலி வழங்குவோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (அவர்களிடம்) நீங்கள் இவ்வூரில் குடியிருங்கள், இதில் நீங்கள் நாடிய இடத்திலெல்லாம் உண்ணுங்கள், ஹித்ததுன் (எங்கள் பாவச் சுமை நீங்குக!) என்று கூறுங்கள், (அதன்) வாயிலில் தலை தாழ்த்தியவர்களாகவும் நுழையுங்கள், நாம் உங்களுடைய குற்றங்களை உங்களுக்கு மன்னித்துவிடுவோம், நன்மை செய்வோருக்கு (அதன் கூலியை) நாம் அதிகப்படுத்துவோம்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டபோது
Saheeh International
And [mention, O Muhammad], when it was said to them, "Dwell in this city [i.e., Jerusalem] and eat from it wherever you will and say, 'Relieve us of our burdens [i.e., sins],' and enter the gate bowing humbly; We will [then] forgive you your sins. We will increase the doers of good [in goodness and reward]."
فَبَدَّلَ الَّذِیْنَ ظَلَمُوْا مِنْهُمْ قَوْلًا غَیْرَ الَّذِیْ قِیْلَ لَهُمْ فَاَرْسَلْنَا عَلَیْهِمْ رِجْزًا مِّنَ السَّمَآءِ بِمَا كَانُوْا یَظْلِمُوْنَ ۟۠
فَبَدَّلَமாற்றினர்الَّذِيْنَஎவர்கள்ظَلَمُوْاஅநீதியிழைத்தனர்مِنْهُمْஅவர்களில்قَوْلًاஒரு சொல்லாகغَيْرَஅல்லாதالَّذِىْஎதுقِيْلَகூறப்பட்டதுلَهُمْஅவர்களுக்குفَاَرْسَلْنَاஆகவே அனுப்பினோம் இறக்கினோம்عَلَيْهِمْஅவர்கள் மீதுرِجْزًاஒரு வேதனையைمِّنَ السَّمَآءِவானத்திலிருந்துبِمَا كَانُوْاஅவர்கள் இருந்ததால்يَظْلِمُوْنَ‏அநீதியிழைப்பவர்களாக
FபBபத்தலல் லதீன ளலமூ மின்ஹும் கவ்லன் கய்ரல் லதீ கீல லஹும் Fப அர்ஸல்னா 'அலய்ஹிம் ரிஜ்Zஜன் மினஸ் ஸமா'இ Bபிமா கானூ யள்லிமூன்
முஹம்மது ஜான்
அவர்களில் அநியாயம் செய்தவர்கள் அவர்களுக்கு கூறப்பட்டதை வேறொரு சொல்லாக மாற்றி விட்டார்கள்; எனவே அவர்கள் அநியாயம் செய்ததின் காரணமாக அவர்கள் மீது நாம் வானத்திலிருந்து வேதனையை இறக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில் வரம்பு மீறியவர்களோ, அவர்களுக்குக் கூறப்பட்ட (‘ஹித்ததுன்' என்ப)தை மாற்றி (‘ஹின்த்ததுன்' கோதுமை என்று) கூறினார்கள். ஆகவே, (இவ்வாறு) அவர்கள் அநியாயம் செய்ததன் காரணமாக நாம் அவர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கிவைத்தோம்.
IFT
ஆயினும், அவர்களில் அக்கிரமக்காரர்கள் தங்களுக்குக் கூறப்பட்ட சொல்லை வேறொன்றாக மாற்றிவிட்டார்கள். ஆகவே இவ்வாறு அவர்கள் அக்கிரமம் செய்து கொண்டிருந்த காரணத்தால் வானத்திலிருந்து வேதனையை அவர்கள்மீது அனுப்பினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களில் அநியாயம் செய்தோர் அவர்களுக்குக் கூறப்பட்டதல்லாத (வேறு) வார்த்தையாக (அதை) மாற்றி விட்டார்கள், ஆகவே (இவ்வாறு) அவர்கள் அநியாயம் செய்ததன் காரணமாக நாம் அவர்கள்மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கி வைத்தோம்.
Saheeh International
But those who wronged among them changed [the words] to a statement other than that which had been said to them. So We sent upon them a punishment from the sky for the wrong that they were doing.
وَسْـَٔلْهُمْ عَنِ الْقَرْیَةِ الَّتِیْ كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِ ۘ اِذْ یَعْدُوْنَ فِی السَّبْتِ اِذْ تَاْتِیْهِمْ حِیْتَانُهُمْ یَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَّیَوْمَ لَا یَسْبِتُوْنَ ۙ لَا تَاْتِیْهِمْ ۛۚ كَذٰلِكَ ۛۚ نَبْلُوْهُمْ بِمَا كَانُوْا یَفْسُقُوْنَ ۟
وَسْــٴَــلْهُمْவிசாரிப்பீராக/அவர்களிடம்عَنِ الْـقَرْيَةِஊர் பற்றிالَّتِىْஎதுكَانَتْஇருந்ததுحَاضِرَةَஅருகில்الْبَحْرِ‌ۘகடலுக்குاِذْபோதுيَعْدُوْنَவரம்பு மீறினார்கள்فِى السَّبْتِசனிக்கிழமையில்اِذْபோதுتَاْتِيْهِمْவந்தன/அவர்களிடம்حِيْتَانُهُمْமீன்கள்/அவர்களுடையيَوْمَகிழமையில்سَبْتِهِمْஅவர்களின் சனிشُرَّعًاதலைகளை நீட்டியவையாகوَّيَوْمَநாளில்لَا يَسْبِتُوْنَ‌ ۙஅவர்கள் சனிக்கிழமையில் இல்லாதவர்கள்لَا تَاْتِيْهِمْ‌ ۛۚஅவை வருவதில்லை/அவர்களிடம்كَذٰلِكَ ۛۚஇவ்வாறுنَبْلُوْهُمْசோதித்தோம்/ அவர்களைبِمَا كَانُوْاஅவர்கள் இருந்த காரணத்தால்يَفْسُقُوْنَ‏பாவம் செய்வார்கள்
வஸ்'அல்ஹும் 'அனில் கர்யதில் லதீ கானத் ஹாளிரதல் Bபஹ்ரி இத் யஃதூன Fபிஸ் ஸBப்தி இத் த'தீஹிம் ஹீதானுஹும் யவ்ம ஸBப்திஹிம் ஷுர்ர'அ(ன்)வ் வ யவ்ம லா யஸ்Bபிதூன லா த'தீஹிம்; கதாலிக னBப்லூஹும் Bபிமா கானூ யFப்ஸுகூன்
முஹம்மது ஜான்
(நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே) கடற்கரையிலிருந்த ஊர் (மக்களைப்) பற்றி நீர் அவர்களைக் கேட்பீராக. (ஓய்வு நாளாகிய) சனிக்கிழமையன்று (மீன் வேட்டையாடக் கூடாதென்று தடுக்கப்பட்டிருந்தும்) அவர்கள் வரம்பு மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், சனிக்கிழமையன்று (அக்கடலில் உள்ள) மீன்கள் அவர்கள் முன் வந்து (நீர் மட்டத்திற்குத்) தலைகளை நீட்டிக் கொண்டிருந்தன. சனிக்கிழமையல்லாத நாள்களில் அவர்களிடம் அவை வருவதில்லை. அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை இவ்வாறு (மிகக் கடினமான) சோதனைக்கு உள்ளாக்கினோம்.
IFT
கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்த ஓர் ஊரைப் பற்றியும் இவர்களிடம் நீர் கேளும்! அங்கு வாழ்ந்த மக்கள் ஸப்த் சனிக்கிழமையில் இறைக்கட்டளையை மீறியதை (இவர்களுக்கு) நினைவூட்டும்! அந்தச் சனிக்கிழமைகளில் அவர்களுடைய மீன்கள் தண்ணீரின் மேல் மட்டத்தில் உயர்ந்து அவர்களிடம் வரும். மேலும், சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவ்வாறு அம்மீன்கள் அவர்களிடம் வரமாட்டா. அவர்கள் கீழ்ப்படியாதிருந்த காரணத்தால், அவர்களை இவ்வாறு சோதனைக்குள்ளாக்கியிருந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே) கடலோரத்திலிருந்த ஓர் ஊர் (மக்களைப்)பற்றி நீர் அவர்களைக் கேட்பீராக! (தடுக்கப்பட்ட நாளாகிய) சனிக்கிழமையன்று (மீன் பிடிப்பது தடுக்கப்பட்டிருந்தும்) அவர்கள் வரம்புமீறி (மீன் பிடித்து)க் கொண்டிருந்தார்கள், ஏனென்றால், சனிக்கிழமையன்று (அக்கடலிலிருந்து) மீன்கள் நீர்மட்டத்திற்கு மேலாக தங்கள் தலைகளை நீட்டிக் கொண்டு அவர்கள் முன் வந்தன, சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் அவை வருவதில்லை, இவ்வாறு அவர்கள் பாவங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணத்தால் அவர்களை நாம் சோதனைக்குள்ளாக்கினோம்.
Saheeh International
And ask them about the town that was by the sea - when they transgressed in [the matter of] the sabbath - when their fish came to them openly on their sabbath day, and the day they had no sabbath they did not come to them. Thus did We give them trial because they were defiantly disobedient.
وَاِذْ قَالَتْ اُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُوْنَ قَوْمَا ۙ للّٰهُ مُهْلِكُهُمْ اَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِیْدًا ؕ قَالُوْا مَعْذِرَةً اِلٰی رَبِّكُمْ وَلَعَلَّهُمْ یَتَّقُوْنَ ۟
وَاِذْபோதுقَالَتْகூறியதுاُمَّةٌஒரு கூட்டம்مِّنْهُمْஅவர்களில்لِمَஏன்تَعِظُوْنَஉபதேசிக்கிறீர்கள்قَوْمَاْ ۙமக்களுக்குاۨللّٰهُஅல்லாஹ்مُهْلِكُهُمْஅவர்களை அழிப்பவனாகاَوْஅல்லதுمُعَذِّبُهُمْவேதனை செய்பவனாக/அவர்களைعَذَابًاவேதனையால்شَدِيْدًا‌ ؕகடுமையானதுقَالُوْاகூறினர்مَعْذِرَةًபுகல் கூறுவதற்காகاِلٰى رَبِّكُمْஉங்கள் இறைவனிடம்وَلَعَلَّهُمْ يَتَّقُوْنَ‏அவர்கள் அஞ்சுவதற்காக
வ இத் காலத் உம்மதும் மின்ஹும் லிம த'இளூன கவ் மனில் லாஹு முஹ்லிகுஹும் அவ் மு'அத்திBபுஹும் 'அதாBபன் ஷதீதன் காலூ மஃதிரதன் இலா ரBப்Bபிகும் வ ல'அல்லஹும் யத்தகூன்
முஹம்மது ஜான்
(அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், “அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்): “எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
(இதை அவ்வூரிலிருந்த நல்லோர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து தடை செய்தார்கள். இதைக் கண்ட வேறு) ஒரு கூட்டத்தினர் (அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் எவர்களை அழித்துவிட வேண்டுமென்றோ, கடினமான வேதனைக்குள்ளாக்க வேண்டுமென்றோ நாடியிருக்கிறானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுபதேசம் செய்கிறீர்கள்'' என்று கூறினார்கள். அதற்கவர்கள் ‘‘இதனால் நாம் உங்கள் இறைவனிடம் நம் பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காக (நாங்கள் நல்லுபதேசம் செய்கிறோம் என்றும், இதனால் மீன் பிடிக்கும்) அவர்கள் (ஒருக்கால்) விலகிவிடலாம்'' என்றும் பதில் கூறினார்கள்.
IFT
மேலும், இவர்களுக்கு நினைவூட்டும்; அவர்களில் ஒரு குழுவினர் (மற்றொரு குழு வினரிடம்) “எந்த மக்களை அல்லாஹ் அழிக்கவிருக்கின்றானோ அல்லது கடுமையான தண்டனைக்கு ஆளாக்கவிருக்கின்றானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுரை வழங்குகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “நாங்கள் உங்கள் இறைவனிடம் தகுந்த காரணம் கூறவேண்டும் என்பதற்காகவே இவர்களுக்கு நல்லுரை கூறுகின்றோம். மேலும், இதன் மூலம் இவர்கள் இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளவும் கூடும்” என்று பதில் கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்களில் ஒரு சாரார் (நல்லுபதேசம் செய்தவர்களிடம்) “அல்லாஹ் எவர்களை அழித்துவிடுகிறவனாக அல்லது அவர்களை கடினமான வேதனையாக வேதனை செய்கிறவனாக இருக்கின்றானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுபதேசம் செய்கிறீர்கள்” என்று கூறியபொழுது அவர்கள், இதனால் நாம் உங்கள் இரட்சகனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் (அதனால் மீன் பிடிக்கும்) அவர்கள் (ஒருக்கால் தவறிலிருந்து விலகி அல்லாஹ்வை) அஞ்சி விடலாம்” என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) எனக் கூறினார்கள்.
Saheeh International
And when a community among them said, "Why do you advise [or warn] a people whom Allah is [about] to destroy or to punish with a severe punishment?" they [the advisors] said, "To be absolved before your Lord and perhaps they may fear Him."
فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖۤ اَنْجَیْنَا الَّذِیْنَ یَنْهَوْنَ عَنِ السُّوْٓءِ وَاَخَذْنَا الَّذِیْنَ ظَلَمُوْا بِعَذَابٍۭ بَىِٕیْسٍ بِمَا كَانُوْا یَفْسُقُوْنَ ۟
فَلَمَّاபோதுنَسُوْاமறந்தனர்مَاஎதைذُكِّرُوْاநினைவூட்டப்பட்டனர், உபதேசிக்கப்பட்டனர்بِهٖۤஅதைக் கொண்டுاَنْجَيْنَاபாதுகாத்தோம்الَّذِيْنَ يَنْهَوْنَதடுத்தவர்களைعَنِ السُّوْۤءِதீமையைவிட்டுوَاَخَذْنَاஇன்னும் பிடித்தோம்الَّذِيْنَஎவர்களைظَلَمُوْاஅநீதியிழைத்தனர்بِعَذَابٍۭவேதனையால்بَــِٕيْسٍۭகடுமையானبِمَا كَانُوْاஅவர்கள் இருந்த காரணத்தால்يَفْسُقُوْنَ‏பாவம் செய்வார்கள்
Fபலம்மா னஸூ மா துக்கிரூ Bபிஹீ அன்ஜய்னல் லதீன யன்ஹவ்ன 'அனிஸ் ஸூ'இ வ அகத்னல் லதீன ளலமூ Bபி'அதாBபிம் Bப'ஈஸிம் Bபிமா கானூ யFப்ஸுகூன்
முஹம்மது ஜான்
அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டதை அவர்கள் (பொருட்படுத்தாது) மறந்து (தொடர்ந்து மீன் பிடிக்க முற்பட்டு)விடவே, பாவத்திலிருந்து விலக்கி வந்தவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டு வரம்பு மீறியவர்களை அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக கொடிய வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டோம்.
IFT
இறுதியில் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தவற்றை முற்றிலும் அவர்கள் மறந்து விட்டபோது தீமைகளிலிருந்து தடுத்துக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம். அநீதி புரிந்த அனைவரையும் அவர்கள் கீழ்ப்படியாமலிருந்த காரணத்தால் கடுமையான வேதனை கொடுத்து தண்டித்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் அவர்களுக்கு எதுபற்றி நினைவுபடுத்தப்பட்டதோ அதை அவர்கள் மறந்து (மீன்பிடிக்க முற்பட்டு)விட்டபோது தீமை செய்வதிலிருந்து தடுத்துக் கொண்டிருந்தோரை நாம் காப்பாற்றினோம், அநியாயம் செய்தவர்களை அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக கொடிய வேதனையைக் கொண்டும் நாம் பிடித்துக் கொண்டோம்.
Saheeh International
And when they [i.e., those advised] forgot that by which they had been reminded, We saved those who had forbidden evil and seized those who wronged, with a wretched punishment, because they were defiantly disobeying.
فَلَمَّا عَتَوْا عَنْ مَّا نُهُوْا عَنْهُ قُلْنَا لَهُمْ كُوْنُوْا قِرَدَةً خٰسِىِٕیْنَ ۟
فَلَمَّاபோதுعَتَوْاமீறினர்عَنْஎதைவிட்டுمَّا نُهُوْاதடுக்கப்பட்டனர்عَنْهُஅதை விட்டுقُلْنَاகூறினோம்لَهُمْஅவர்களுக்குكُوْنُوْاஆகிவிடுங்கள்قِرَدَةًகுரங்குகளாகخٰسِـٮِٕیْنَ‏அபாக்கியவான்களாக
Fபலம்மா 'அதவ் 'அம்மா னுஹூ 'அன்ஹு குல்ன லஹும் கூனூ கிரததன் காஸி'ஈன்
முஹம்மது ஜான்
தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, “நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று அவர்களுக்கு நாம் கூறினோம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறவே, அவர்களை நோக்கி ‘‘நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுங்கள்'' என்று (சபித்துக்) கூறினோம். (அவ்வாறே அவர்கள் ஆகிவிட்டனர்.)
IFT
பிறகு அவர்கள் எந்தச் செயல்களைச் செய்யக்கூடாதெனத் தடுக்கப்பட்டார்களோ அவற்றையே அவர்கள் ஆணவத்துடன் செய்து கொண்டிருந்தபோது “நீங்கள் குரங்குகளாகி இழிவடைந்து விடுங்கள்!” என்று நாம் கூறினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, எதனைவிட்டும் அவர்கள் தடுக்கப்பட்டிருந்தனரோ அதனை விட்டும் அவர்கள் வரம்பு மீறியபோது “நீங்கள் இகழப்பட்டவர்களாக குரங்குகளாகி விடுங்கள்” என்று அவர்களுக்கு நாம் (சபித்துக்) கூறினோம்.
Saheeh International
So when they were insolent about that which they had been forbidden, We said to them, "Be apes, despised."
وَاِذْ تَاَذَّنَ رَبُّكَ لَیَبْعَثَنَّ عَلَیْهِمْ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ مَنْ یَّسُوْمُهُمْ سُوْٓءَ الْعَذَابِ ؕ اِنَّ رَبَّكَ لَسَرِیْعُ الْعِقَابِ ۖۚ وَاِنَّهٗ لَغَفُوْرٌ رَّحِیْمٌ ۟
وَاِذْசமயம்تَاَذَّنَஅறிவித்தான்رَبُّكَஉம் இறைவன்لَيَبْعَثَنَّநிச்சயமாக அனுப்புவான்عَلَيْهِمْஅவர்கள் மீதுاِلٰىவரைيَوْمِ الْقِيٰمَةِமறுமை நாள்مَنْஎவர்(கள்)يَّسُوْمُهُمْசிரமம் தருவார்(கள்)/அவர்களுக்குسُوْٓءَகொடியالْعَذَابِ‌ ؕவேதனையால்اِنَّநிச்சயமாகرَبَّكَஉம் இறைவன்لَسَرِيْعُதீவிரமானவன்الْعِقَابِ ۖۚதண்டிப்பதில்وَاِنَّهٗஇன்னும் நிச்சயமாக அவன்لَـغَفُوْرٌமகா மன்னிப்பாளனேرَّحِيْمٌ‏பெரும் கருணையாளனே
வ இத் த அத்தன ரBப்Bபுக ல யBப்'அதன்ன்ன 'அலய்ஹிம் இலா யவ்மில் கியாமதி மய் யஸூமுஹும் ஸூ'அல் 'அதாBப்; இன்ன ரBப்Bபக லஸரீ'உல் 'இகாBபி வ இன்னஹூ ல கFபூருர் ரஹீம்
முஹம்மது ஜான்
(நபியே!) அவர்களுக்குக் கொடிய வேதனை கொடுக்க கூடியவர்களையே, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துமாறு கியாம நாள் வரை நாம் செய்வோமென்று உங்கள் இறைவன் அறிவித்ததை (அவர்களுக்கு நினைவூட்டுவீராக) - நிச்சயமாக உம் இறைவன் தண்டனையளிப்பதில் தீவிரமானவன் - ஆனால் நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்களுக்குக் கொடிய நோவினை செய்யக்கூடியவர்களையே அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும்படி இறுதிநாள் வரை நாம் செய்து வருவோம் என்று உமது இறைவன் அவர்களுக்கு அறிக்கை இட்டதை (நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. நிச்சயமாக உமது இறைவன் வேதனை செய்வதில் மிகத் தீவிரமானவன். மேலும், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், மகா கருணையாளன் ஆவான்.
IFT
மேலும், அவர்களுக்கு மோசமான வேதனையைக் கொடுக்கக்கூடியவர்களையே மறுமைநாள் வரை நாம் அவர்கள் மீது ஏவிக் கொண்டிருப்போம் என உம் இறைவன் அறிவித்ததை நீர் நினைவுகூருவீராக! திண்ணமாக, உம்முடைய இறைவன் தண்டனை வழங்குவதில் மிக விரைவானவன் ஆவான். மேலும், திண்ணமாக அவன் மன்னிப்பவனாகவும் கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) உமதிரட்சகன்-அவர்களுக்குக் கொடிய வேதனை கொடுக்கக் கூடியவர்களையே அவர்கள்மீது (ஆதிக்கம் வகிக்கும்படி) இறுதிநாள் வரையில் அவன் நிச்சயமாக அனுப்பி வருவான் என்று (அவர்களுக்கு அறிவித்ததை நீர் அவர்களுக்கு நினைவூட்டுவீராக!) நிச்சயமாக உமதிரட்சகன் (அவனுக்கு மாறு செய்து வந்தோரை) தண்டிப்பதில் மிக்க தீவிரமானவன், மேலும் நிச்சயமாக (அவன்பால் மீளுகிறவர்களுக்கு) அவன் மிக்க மன்னிக்கிறவன் நிகரற்ற அன்புடையவன்.
Saheeh International
And [mention] when your Lord declared that He would surely [continue to] send upon them until the Day of Resurrection those who would afflict them with the worst torment. Indeed, your Lord is swift in penalty; but indeed, He is Forgiving and Merciful.
وَقَطَّعْنٰهُمْ فِی الْاَرْضِ اُمَمًا ۚ مِنْهُمُ الصّٰلِحُوْنَ وَمِنْهُمْ دُوْنَ ذٰلِكَ ؗ وَبَلَوْنٰهُمْ بِالْحَسَنٰتِ وَالسَّیِّاٰتِ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
وَقَطَّعْنٰهُمْஇன்னும் பிரித்தோம்/அவர்களைفِى الْاَرْضِபூமியில்اُمَمًا‌ ۚ(பல) பிரிவுகளாகمِنْهُمُஅவர்களில்الصّٰلِحُوْنَநல்லவர்கள்وَمِنْهُمْஅவர்களில்دُوْنَ ذٰ لِكَ‌மற்றவர்கள்وَبَلَوْنٰهُمْஇன்னும் சோதித்தோம்/அவர்களைبِالْحَسَنٰتِஇன்பங்களைக் கொண்டுوَالسَّيِّاٰتِஇன்னும் துன்பங்கள்لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏அவர்கள் திரும்புவதற்காக
வ கத்தஃனாஹும் Fபில் அர்ளி உமமன் மின் ஹுமுஸ் ஸாலிஹூன வ மின் ஹும் தூன தாலிக வ Bபலவ்னாஹும் Bபில் ஹஸனாதி வஸ் ஸய்யி'ஆதி ல'அல்லஹும் யர்ஜி'ஊன்
முஹம்மது ஜான்
அவர்களை நாம் பூமியில் பல பிரிவினராகச் (சிதறித்திரியுமாறு) ஆக்கி விட்டோம்; அவர்களில் நல்லவர்களுமிருக்கிறார்கள். அதுவல்லாத கெட்டவர்களும் இருக்கின்றார்கள் - அவர்கள் (நன்மையின் பால்) திரும்பும் பொருட்டு அவர்களை நன்மைகளைக் கொண்டும், தீமைகளைக் கொண்டும் சோதித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களை இப்புவியில் பல பிரிவுகளாகப் பிரித்து (பூமியின் பல பாகங்களிலும் சிதறடித்து) விட்டோம். அவர்களில் நல்லவர்களும் இருக்கின்றனர்; இது அல்லாத (பொல்லாத)வர்களும் அவர்களில் இருக்கின்றனர். அவர்கள் (பாவத்திலிருந்து) மீள்வதற்காக இன்பங்களைக் கொண்டும், துன்பங்களைக் கொண்டும் நாம் அவர்களைச் சோதித்தோம்.
IFT
நாம் இப்பூமியில் அவர்களைப் பல சமூகங்களாகப் பிரித்து பிளவுபடச் செய்தோம். அவர்களில் சிலர் நல்லவர்களாய் இருந்தனர். வேறு சிலர் அப்படி இருக்கவில்லை. மேலும் இன்ப துன்ப நிலைகளுக்கு ஆளாக்கி, அவர்களைச் சோதித்துக் கொண்டிருந்தோம்; அவர்கள் (நல்வழியின் பக்கம்) திரும்ப வேண்டும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்களை இப்புவியில் பல கூட்டத்தினர்களாக நாம் பிரித்து விட்டோம், அவர்களிலிருந்து நல்லோர்களும் இருக்கின்றனர், இதுவல்லாத (பொல்லாதவர்களும்) அவர்களில் இருக்கின்றனர், அவர்கள் (பாவங்களிலிருந்து) மீளுவதற்காக நல்லவைகளைக் கொண்டும், தீயவைகளைக் கொண்டும் நாம் அவர்களைச் சோதித்தோம்.
Saheeh International
And We divided them throughout the earth into nations. Of them some were righteous, and of them some were otherwise. And We tested them with good [times] and bad that perhaps they would return [to obedience].
فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ وَّرِثُوا الْكِتٰبَ یَاْخُذُوْنَ عَرَضَ هٰذَا الْاَدْنٰی وَیَقُوْلُوْنَ سَیُغْفَرُ لَنَا ۚ وَاِنْ یَّاْتِهِمْ عَرَضٌ مِّثْلُهٗ یَاْخُذُوْهُ ؕ اَلَمْ یُؤْخَذْ عَلَیْهِمْ مِّیْثَاقُ الْكِتٰبِ اَنْ لَّا یَقُوْلُوْا عَلَی اللّٰهِ اِلَّا الْحَقَّ وَدَرَسُوْا مَا فِیْهِ ؕ وَالدَّارُ الْاٰخِرَةُ خَیْرٌ لِّلَّذِیْنَ یَتَّقُوْنَ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟
فَخَلَفَபின்தோன்றினார்(கள்)مِنْۢ بَعْدِهِمْஅவர்களுக்குப் பின்னர்خَلْفٌபின்னோர்وَّرِثُواவாரிசுகளாக ஆகினர்الْكِتٰبَவேதத்திற்குيَاْخُذُوْنَவாங்குகிறார்கள்عَرَضَபொருள்هٰذَاஇந்தالْاَدْنٰىஅற்பமானதுوَيَقُوْلُوْنَஇன்னும் கூறுகின்றனர்سَيُغْفَرُ لَـنَا‌ ۚமன்னிக்கப்படும்/எங்களுக்குوَاِنْ يَّاْتِهِمْஇன்னும் வந்தால் / அவர்களுக்குعَرَضٌபொருள்مِّثْلُهٗஇது போன்றيَاْخُذُوْهُ‌ ؕவாங்குவார்கள்/அதைاَلَمْ يُؤْخَذْஎடுக்கப்படவில்லையா?عَلَيْهِمْஅவர்கள் மீதுمِّيْثَاقُஉறுதிமொழிالْـكِتٰبِவேதத்தின்اَنْ لَّا يَقُوْلُوْاஅவர்கள் கூறக்கூடாதுعَلَىமீதுاللّٰهِஅல்லாஹ்اِلَّاதவிரالْحَـقَّஉண்மையைوَدَرَسُوْاஇன்னும் அவர்கள் படித்தனர்مَا فِيْهِ‌ ؕஎதை/அதில்وَالدَّارُவீடுالْاٰخِرَةُமறுமைخَيْرٌசிறந்ததுلِّـلَّذِيْنَஎவர்களுக்குيَتَّقُوْنَ‌ ؕஅஞ்சுகிறார்கள்اَفَلَا تَعْقِلُوْنَ‏நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
FபகலFப மின் Bபஃதிஹிம் கல்Fபு(ன்)வ் வரிதுல் கிதாBப ய'குதூன 'அரள ஹாதல் அத்னா வ யகூலூன ஸயுக்Fபரு லனா வ இ(ன்)ய் ய'திஹிம் 'அரளுன் மித்லுஹூ ய'குதூஹ்; அலம் யு'கத் 'அலய்ஹிம் மீதாகுல் கிதாBபி அன் லா யகூலூ 'அலல் லாஹி இல்லல் ஹக்க வ தரஸூ மா Fபீஹ்; வத் தாருல் ஆகிர்து கய்ருல் லில் லதீன யத்தகூன்; அFபலா தஃகிலூன்
முஹம்மது ஜான்
அவர்களுக்குப் பின் அவர்களுடைய இடத்தை (தகுதியற்ற) ஒரு பிரிவினர் அடைந்தனர்; அவர்கள் வேதத்திற்கும் வாரிசுகள் ஆனார்கள்; இவ்வுலகின் அற்பப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு (அதற்கு தகுந்தபடி வேதத்தை மாற்றி கொண்டார்கள்). “எங்களுக்கு மன்னிப்பு அளிக்கப்படும்” என்றும் கூறிக்கொள்கிறார்கள். இதுபோன்று வேறோர் அற்பப்பொருள் அவர்களுக்கு வந்து விட்டால், அதையும் எடுத்துக் கொள்வார்கள், “அல்லாஹ்வின் மீது உண்மையேயன்றி வேறு ஒன்றும் கூறலாகாது என்று வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதி மொழி வாங்கப் படவில்லையா?” (இன்னும்) அதிலுள்ளவை (போதனைகளை) அவர்கள் ஓதியும் வருகின்றார்கள்; (அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்துவதில்லை) பயபக்தியுடையவர்களுக்கு மறுமையின் வீடே மேலானதாகும். நீங்கள் (நல்லவிதமாக) அறிந்து கொள்ள வேண்டாமா?
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுக்குப் பின்னர் அவர்களுடைய இடத்தை (சிறிதும் தகுதியற்ற) பலர் அடைந்தனர். அவர்கள், (தாங்கள்தான்) வேதத்திற்குச் சொந்தக்காரர்கள் என(க் கூறி), இவ்வற்ப (உலகின்) பொருளைப் பெற்றுக்கொண்டு (அதற்கேற்றவாறு வேத வசனங்களைப் புரட்டுகின்றனர். மேலும், இக்குற்றத்தைப் பற்றி) ‘‘நாங்கள் மன்னிக்கப்படுவோம்'' என்றும் கூறுகின்றனர். (வேதத்தில் இவர்கள் புரட்டியதை தொடர்ந்து முன்பு போல் புரட்டுவதற்காக) இதேபோன்ற அற்பப் பொருள்கள் பின்னரும் அவர்களிடம் வரும் சமயத்தில் அதையும் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதையும்) கூறக்கூடாது என்று (அவர்களுடைய) வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்படவில்லையா? அதை அவர்களும் படித்து (அறிந்து வைத்து)ள்ளனர். (எனினும் அதிலுள்ளவற்றைப் பொருட்படுத்துவது இல்லை.) இறையச்சமுடையவர்களுக்கு மறுமையின் வீடே மிக மேலானது. (யூதர்களே! இவ்வளவு கூட) நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டாமா?
IFT
ஆனால் அந்த முந்தைய சந்ததிகளுக்குப் பிறகு தீயோர் அவர்களின் பிரதிநிதிகளாய் வந்தார்கள். அவர்கள் இறைமறையின் வாரிசுகளாய் இருந்தபோதிலும் இந்த அற்ப உலகின் ஆதாயங்களைப் பெறுகின்றார்கள். “நாங்கள் நிச்சயம் மன்னிக்கப்படுவோம்” என்றும் கூறுகின்றார்கள். பிறகும் அதுபோன்ற ஆதாயங்கள் அவர்களிடம் வரும்போது அவற்றையும் பாய்ந்து பெறுகின்றார்கள். அல்லாஹ்வின் விஷயத்தில் சத்தியத்தைத் தவிர வேறு எதையும் கூறக்கூடாது என்று வேதத்தில் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்பட வில்லையா? மேலும், வேதத்தில் என்ன (எழுதப்பட்டு) உள்ளது என்பதை அவர்கள் படித்திருக்கிறார்களே! இறையச்சமுடையோருக்கு மறுமை இல்லமே சிறந்ததாகும். இதனைக்கூட நீங்கள் புரிந்துகொள்ளமாட்டீர்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுக்குப் பின்னர், அவர்களுடைய இடத்தை தீய ஒரு சாரார் அடைந்தனர், அவர்கள், (தவ்றாத்) வேதத்திற்கு அனந்தரக்காரர்களாக ஆனார்கள், இவ்வற்ப (உலகின்)பொருளைப் பெற்றுக்கொண்டு வேதத்தை மாற்றி விட்டனர், (இதைப்பற்றி) “எங்களுக்கு மன்னிப்பளிக்கப்படும்” என்றும் கூறுகிறார்கள், (பின்னும் முன்போல் புரட்டுவதற்காக) இதேபோன்ற அற்பப்பொருள் அவர்களிடம் வருமானால், அதனை எடுத்துக் கொள்வார்கள், அவர்கள் அல்லாஹ்வின்மீது உண்மையைத் தவிர வேறு எதையும் கூறக்கூடாதென்று (அவர்களுடைய) வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்படவில்லையா? அதில் உள்ளதை அவர்கள் ஓதியும் வருகின்றனர், (எனினும்) அவற்றை அவர்கள் பொருட்படுத்துவதில்லை.) மேலும் பயபக்தியுடையவர்களுக்கு, மறுமையின் வீடே மிக்க மேலானதாகும், நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா?”
Saheeh International
And there followed them successors who inherited the Scripture [while] taking the commodities of this lower life and saying, "It will be forgiven for us." And if an offer like it comes to them, they will [again] take it. Was not the covenant of the Scripture [i.e., the Torah] taken from them that they would not say about Allah except the truth, and they studied what was in it? And the home of the Hereafter is better for those who fear Allah, so will you not use reason?
وَالَّذِیْنَ یُمَسِّكُوْنَ بِالْكِتٰبِ وَاَقَامُوا الصَّلٰوةَ ؕ اِنَّا لَا نُضِیْعُ اَجْرَ الْمُصْلِحِیْنَ ۟
وَالَّذِيْنَ يُمَسِّكُوْنَஉறுதியாக பிடிப்பவர்கள்بِالْـكِتٰبِவேதத்தைوَاَقَامُواஇன்னும் நிலைநிறுத்துவார்கள்الصَّلٰوةَ ؕதொழுகையைاِنَّاநிச்சயமாக நாம்لَا نُضِيْعُவீணாக்க மாட்டோம்اَجْرَகூலியைالْمُصْلِحِيْنَ‏சீர்திருத்தவாதிகளின்
வல்லதீன யுமஸ் ஸிகூன Bபில் கிதாBபி வ அகாமுஸ் ஸலாத இன்னா லா னுளீஉ'அஜ்ரல் முஸ்லிஹீன்
முஹம்மது ஜான்
எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் இவ்வேதத்தை(ச் சிறிதும் மாற்றாது) பலமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்து நிறைவேற்றி வருகிறார்களோ அத்தகைய சீர்திருத்தவாதிகளான நல்லவர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்குவதில்லை.
IFT
யார் யார் வேதத்தை முறையாகக் கடைப்பிடித்து தொழுகையையும் நிலைநிறுத்துகின்றார்களோ, அத்தகைய நல்லொழுக்கமுடையோருக்கான கூலியைத் திண்ணமாக நாம் வீணாக்கமாட்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (இவ்வேதத்தைப் பலமாக)ப் பற்றிப் பிடித்துக் கொண்டு தொழுகையையும் நிறைவேற்றி வருகின்றார்களே அத்தகையோர்-(அதுபோன்ற) நல்லோர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்க மாட்டோம்.
Saheeh International
But those who hold fast to the Book [i.e., the Qur’an] and establish prayer - indeed, We will not allow to be lost the reward of the reformers.
وَاِذْ نَتَقْنَا الْجَبَلَ فَوْقَهُمْ كَاَنَّهٗ ظُلَّةٌ وَّظَنُّوْۤا اَنَّهٗ وَاقِعٌ بِهِمْ ۚ خُذُوْا مَاۤ اٰتَیْنٰكُمْ بِقُوَّةٍ وَّاذْكُرُوْا مَا فِیْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟۠
وَاِذْசமயம்نَـتَقْنَاபிடுங்கினோம்الْجَـبَلَமலையைفَوْقَهُمْஅவர்களுக்கு மேல்كَاَنَّهٗபோன்று/அதுظُلَّةٌநிழலிடும் மேகம்وَّظَنُّوْۤاஇன்னும் எண்ணினர்اَنَّهٗநிச்சயமாக அதுوَاقِعٌ ۢவிழுந்துவிடும்بِهِمْ‌ ۚஅவர்கள் மீதுخُذُوْاபிடியுங்கள்مَاۤ اٰتَيْنٰكُمْஎதை/கொடுத்தோம்/உங்களுக்குبِقُوَّةٍபலமாகوَّاذْكُرُوْاஇன்னும் நினைவு கூருங்கள்مَاஎதுفِيْهِஅதில்لَعَلَّكُمْ تَتَّقُوْنَ‏நீங்கள் அஞ்சுவதற்காக
வ இத் னதக்னல் ஜBபல Fபவ்கஹும் க அன்னஹூ ளுல்லது(ன்)வ் வ ளன்னூ அன்னஹூ வாகி'உன் Bபிஹிம் குதூ மா ஆதய்னாகும் Bபிகுவ்வதி(ன்)வ் வத்குரூ மா Fபீஹி ல'அல்லகும் தத்தகூன்
முஹம்மது ஜான்
நாம் (ஸினாய்) மலையை அவர்களுக்கு மேல் முகட்டைப்போல் உயர்த்தினோம்; அப்போது அவர்கள் அது தங்கள் மீது விழுந்து விடுமோ என்று எண்ணியபோது, நாம் அவர்களை நோக்கி, “நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றைச் சிந்தியுங்கள்; நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்” (என்று கூறினோம்).
அப்துல் ஹமீது பாகவி
தங்கள் மீது விழுந்து விடுமென்று அவர்கள் எண்ணக்கூடியவாறு (சீனாய்) மலையை அவர்களுக்கு மேல் முகட்டைப்போல் நிறுத்தி (அவர்களை நோக்கி) ‘‘நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றை (எப்பொழுதும்) கவனத்தில் வையுங்கள்; (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர்களாகி விடலாம்'' (என்று நாம் அவர்களுக்குக் கூறியதை நபியே!) நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக.
IFT
மேலும், இதையும் அவர்களுக்கு நினைவூட்டுவீராக; நாம் மலையைப் பெயர்த்து அதனை அவர்களுக்கு மேல் குடையைப் போன்று நிழலிடச் செய்தோம். அது தங்கள் மீது விழுந்துவிடுமோ என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். (அப்போது நாம் அவர்களிடம் கூறினோம்:) “நாம் உங்களுக்கு வழங்கியிருக்கின்ற வேதத்தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்! மேலும், அதில் உள்ளவற்றை நினைவில் வையுங்கள்! (அதனால்) நீங்கள் தவறான நடத்தையிலிருந்து தவிர்ந்து கொள்ளக்கூடும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (‘ஸீனாய்’) மலையை அவர்களுக்கு மேல் அது நிழலைப்போன்று (இருக்க) நாம் உயர்த்திய சமயத்தில் நிச்சயமாக அ(ம்மலையான)து அவர்கள் மீது விழுந்து விடுமென்று அவர்கள் எண்ணி (பயந்த)னர், (அப்போது,) “நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள், இன்னும், அதிலுள்ளவற்றை (எப்பொழுதும் கவனத்தில் வைத்து) நினைவு கூருங்கள், (இன்னும் அதிலுள்ளவாறு நீங்கள் செயல்பட்டால்) நீங்கள் பயபக்தியுடையோர்களாகி விடலாம்” (என்று நாம் அவர்களுக்குக் கூறியதை நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூர்வீராக!)
Saheeh International
And [mention] when We raised the mountain above them as if it was a dark cloud and they were certain that it would fall upon them, [and Allah said], "Take what We have given you with determination and remember what is in it that you might fear Allah."
وَاِذْ اَخَذَ رَبُّكَ مِنْ بَنِیْۤ اٰدَمَ مِنْ ظُهُوْرِهِمْ ذُرِّیَّتَهُمْ وَاَشْهَدَهُمْ عَلٰۤی اَنْفُسِهِمْ ۚ اَلَسْتُ بِرَبِّكُمْ ؕ قَالُوْا بَلٰی ۛۚ شَهِدْنَا ۛۚ اَنْ تَقُوْلُوْا یَوْمَ الْقِیٰمَةِ اِنَّا كُنَّا عَنْ هٰذَا غٰفِلِیْنَ ۟ۙ
وَ اِذْசமயம்اَخَذَஎடுத்தான்رَبُّكَஉம் இறைவன்مِنْۢ بَنِىْۤ اٰدَمَஆதமின் சந்ததிகளில்مِنْ ظُهُوْرِهِمْஇருந்து/முதுகுகள்/அவர்களுடையذُرِّيَّتَهُمْஅவர்களின் சந்ததிகளைوَ اَشْهَدَهُمْஇன்னும் சாட்சியாக்கினான் / அவர்களைعَلٰٓىமீதேاَنْفُسِهِمْ‌ ۚஅவர்கள்اَلَسْتُநான் இல்லையா?بِرَبِّكُمْ‌ ؕஉங்கள் இறைவனாகقَالُوْاகூறினர்بَلٰى‌ ۛۚஏன் இல்லைشَهِدْنَا ۛۚநாங்கள் சாட்சி கூறினோம்اَنْ تَقُوْلُوْاநீங்கள் கூறாமல் இருப்பதற்காகيَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்اِنَّاநிச்சயமாக நாங்கள்كُنَّاஇருந்தோம்عَنْ هٰذَاஇதை விட்டுغٰفِلِيْنَ ۙ‏கவனமற்றவர்களாக
வ இத் அகத ரBப்Bபுக மின் Bபனீ ஆதம மின் ளுஹூரிஹிம் துர்ரிய்யதஹும் வ அஷ்ஹதஹும் 'அலா அன்Fபுஸிஹிம் அலஸ்து Bபி ரBப்Bபிகும் காலூ Bபலா ஷஹித்னா; அன் தகூலூ யவ்மல் கியாமதி இன்னா குன்னா 'அன் ஹாதா காFபிலீன்
முஹம்மது ஜான்
உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து: “நான் உங்களுடைய இறைவன் அல்லவா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக;(ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமது இறைவன் ஆதமுடைய மக்களை அவர்களுடைய (தந்தைகளின்) முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளாக வெளியாக்கி, அவர்களையே அவர்களுக்கு சாட்சியாகவும் வைத்து (அவர்களை நோக்கி) ‘‘நான் உங்கள் இறைவனாக இல்லையா?'' என்று கேட்டதற்கு, ‘‘ஏன் இல்லை (நீதான் எங்கள் இறைவன்! என்று) நாங்கள் சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறியதை (நீர்அவர்களுக்கு) ஞாபக மூட்டுவீராக. ஏனென்றால் (இதை ஒருவரும் எங்களுக்கு ஞாபகமூட்டாததால்) நிச்சயமாக நாங்கள் இதை (மறந்து) விட்டுப் பராமுகமாகி இருந்தோம்'' என்று மறுமை நாளில் சொல்லாமல் இருப்பதற்காகவும்,
IFT
மேலும், (நபியே! இதனையும் இம்மக்களுக்கு) நினைவூட்டுவீராக! உம் இறைவன் ஆதம் உடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய வழித்தோன்றல்களை வெளிப்படுத்தி அவர்களையே அவர்களுக்குச் சாட்சியாக்கி, “நான் உங்கள் இறைவன் அல்லவா?” என்று கேட்டான். “ஆம், நிச்சயமாக நீதான் எங்கள் இறைவன்; இதற்கு நாங்கள் சாட்சியாக இருக்கின்றோம்” என்று அவர்கள் கூறினார்கள். எதற்காக நாம் இவ்வாறு செய்தோமெனில், மறுமைநாளில், “நாங்கள் இதனைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களாயிருந்தோம்” என்று நீங்கள் கூறிவிடக் கூடாது;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) உமதிரட்சகன் ஆதமுடைய மக்களில் அவர்களுடைய முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை (வெளியாக்கி) அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக்கி, (அவர்களிடம்) “நான் உங்கள் இரட்சகனல்லவா?” என்று (கேட்டு உடன்படிக்கையை) எடுத்த சமயத்தில் “ஆம் (நீதான் எங்கள் இரட்சகன், அதன் மீது) நாங்கள் சாட்சியம் கூறுகிறோம்” என்று அவர்கள் கூறியதை, (நீர் அவர்களுக்கு நினைவூட்டுவீராக! இது ஏனென்றால், “இதனை ஒருவரும் எங்களுக்கு நினைவூட்டாததனால்) நிச்சயமாக நாங்கள் இதனை மறந்தவர்களாக இருந்துவிட்டோம்” என்று மறுமை நாளில் நீங்கள் சொல்லாதிருப்பதற்காக-
Saheeh International
And [mention] when your Lord took from the children of Adam - from their loins - their descendants and made them testify of themselves, [saying to them], "Am I not your Lord?" They said, "Yes, we have testified." [This] - lest you should say on the Day of Resurrection, "Indeed, we were of this unaware."
اَوْ تَقُوْلُوْۤا اِنَّمَاۤ اَشْرَكَ اٰبَآؤُنَا مِنْ قَبْلُ وَكُنَّا ذُرِّیَّةً مِّنْ بَعْدِهِمْ ۚ اَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ الْمُبْطِلُوْنَ ۟
اَوْஅல்லதுتَقُوْلُوْۤاநீங்கள் கூறாதிருப்பதற்காகاِنَّمَاۤஎல்லாம்اَشْرَكَஇணைவைத்தார்(கள்)اٰبَآؤُنَاஎங்கள் மூதாதைகள்مِنْ قَبْلُமுன்னர்وَكُنَّاஇருக்கிறோம்ذُرِّيَّةًசந்ததிகளாகمِّنْۢவந்த بَعْدِهِمْ‌ۚஅவர்களுக்கு பின்னர்اَفَتُهْلِكُنَاஅழிப்பாயா?/எங்களைبِمَا فَعَلَசெய்ததற்காகالْمُبْطِلُوْنَ‏பொய்யர்கள்
அவ் தகூலூ இன்னமா அஷ்ரக ஆBபா 'உனா மின் கBப்லு வ குன்னா துர்ரிய்யதன் மின் Bபஃதிஹிம் 'அ Fப துஹ்லிகுனா Bபி மா Fப'அலல் முBப்திலூன்
முஹம்மது ஜான்
அல்லது, “இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே; நாங்களோ அவர்களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள் - அந்த வழிகெட்டோரின் செயலுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?” என்று கூறாதிருக்கவுமே! (இதனை நினைவூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.)
அப்துல் ஹமீது பாகவி
அல்லது (பொய்யான தெய்வங்களை) இணையாக்கியதெல்லாம் (நாங்களல்ல;) எங்களுக்கு முன் சென்றுபோன எங்கள் மூதாதைகள்தான். நாங்களோ அவர்களுக்குப் பின்னர் வந்த அவர்களுடைய சந்ததிகள். ஆகவே, (அவர்களை நாங்கள் பின்பற்றினோம்.) அவர்கள் செய்த தகாத காரியங்களுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?'' என்று கூறாதிருப்பதற்காகவே (இதை நாம் ஞாபக மூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.)
IFT
அல்லது முன்னர் எங்கள் மூதாதையர்களே இறைவனுக்கு இணை கற்பிக்கத் தொடங்கி விட்டிருந்தார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னர் வந்த வழித்தோன்றல்கள்தாம்! எனவே தவறான மக்கள் செய்த செயலுக்காக எங்களை நீ தண்டிக்கப் போகின்றாயா என்றும் நீங்கள் கூறக்கூடாது என்பதற்காகத்தான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது, “இணையாக்கியதெல்லாம் (எங்களுக்கு முன்னிருந்த எங்கள் மூதாதையர்கள்தாம், நாங்களோ அவர்களுக்குப் பின்னுள்ள (அவர்களுடைய சந்ததியினராக இருக்கிறோம் - ஆகவே அந்த வழி கெட்டோர்கள் செய்தவற்றுக்காக நீ எங்களை அழித்துவிடலாமா?” என்று நீங்கள் சொல்லாமலிருப்பதற்காக (இதனை உங்களுக்கு நான் நினைவூட்டுகிறோம். என்று நபியே! நீர் கூறுவீராக!)
Saheeh International
Or [lest] you say, "It was only that our fathers associated [others in worship] with Allah before, and we were but descendants after them. Then would You destroy us for what the falsifiers have done?"
وَكَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ وَلَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
وَكَذٰلِكَஇவ்வாறேنُفَصِّلُவிவரிக்கிறோம்الْاٰيٰتِவசனங்களைوَلَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏இன்னும் அவர்கள் திரும்புவதற்காக
வ கதாலிக னுFபஸ்ஸிலுல் ஆயாதி வ ல'அல்லஹும் யர்ஜி'ஊன்
முஹம்மது ஜான்
அவர்கள் (பாவங்களிலிருந்து) விடுபட்டு (நம்மிடம்) திரும்புவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விளக்கிக் கூறுகின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் (பாவங்களிலிருந்து) மீள்வதற்காக (நம்) வசனங்களை இவ்வாறு (தெளிவாக) விவரித்துக் கூறுகிறோம்.
IFT
மேலும், இவ்வாறு நாம் சான்றுகளைத் தெளிவாக எடுத்துரைக்கின்றோம்; (நல்வழியின் பக்கம்) அவர்கள் திரும்பிவிடக்கூடும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், இவ்வாறே (நம்) வசனங்களை நாம் விவரிக்கிறோம், (இதன் மூலம்) அவர்கள் (பாவங்களிலிருந்து விடுபட்டு நம்மிடம்) திரும்புவதற்காகவும் (நாம் விவரித்துக் கூறுகிறோம்.)
Saheeh International
And thus do We [explain in] detail the verses, and perhaps they will return.
وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ الَّذِیْۤ اٰتَیْنٰهُ اٰیٰتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَاَتْبَعَهُ الشَّیْطٰنُ فَكَانَ مِنَ الْغٰوِیْنَ ۟
وَاتْلُஓதிக் காட்டுவீராகعَلَيْهِمْஅவர்கள் மீதுنَبَاَசெய்தியைالَّذِىْۤஎவன்اٰتَيْنٰهُகொடுத்தோம்/அவனுக்குاٰيٰتِنَاநம் அத்தாட்சிகளைفَانْسَلَخَகழண்டான்مِنْهَاஅதிலிருந்துفَاَتْبَعَهُபின்தொடர்ந்தான்/அவனைالشَّيْطٰنُஷைத்தான்فَكَانَஆகிவிட்டான்مِنَ الْغٰوِيْنَ‏வழிகெட்டவர்களில்
வத்லு 'அலய்ஹிம் னBப அல்லதீ ஆதய்னாஹு ஆயாதினா Fபன்ஸலக மின்ஹா Fப அத்Bப'அ ஹுஷ் ஷய்தானூ Fபகான மினல் காவீன்
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் அவர்களுக்கு ஒரு மனிதனுடைய வரலாற்றை ஓதிக்காட்டுவீராக! அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம்; எனினும் அவன் அவற்றை விட்டு முற்றிலும் நழுவிவிட்டான்; அப்போது அவனை ஷைத்தான் பின் தொடர்ந்தான் - அதனால் அவன் வழி தவறியவர்களில் ஒருவனாகி விட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் அவர்களுக்கு (‘பல்ஆம் இப்னு பாஊர்' என்னும்) ஒருவனுடைய சரித்திரத்தை ஓதிக் காண்பிப்பீராக. அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்(து கண்ணியமாக்கி வைத்)திருந்தோம். எனினும் அவன் ‘‘(பாம்பு தன் சட்டையை விட்டு வெளியேறுவதைப் போல) அதிலிருந்து முற்றிலும் வெளியேறிவிட்டான். ஆகவே, ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்; (அவனுடைய சூழ்ச்சிக்குள் சிக்கி) அவன் வழிதவறி விட்டான்.
IFT
மேலும், (நபியே!) ஒரு மனிதனின் நிலையை நீர் இவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவன் எத்தகையவன் என்றால், நாம் அவனுக்கு நம்முடைய வசனங்களின் அறிவை வழங்கியிருந்தும் அவன், அவற்றைப் பின்பற்றாமல் நழுவி ஓடினான். இறுதியில், ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்தான். இவ்வாறாக, அந்த மனிதன் வழிகெட்டவர்களில் ஒருவனாகி விட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாம் எவனுக்கு நம் அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோமோ, அத்தகையவனின் செய்தியை (யூதர்களாகிய) அவர்களுக்கு (நபியே! நீர்) ஒதிக் காண்பிப்பீராக! பின்னர், அவன் அதிலிருந்து கழன்று கொண்டான், ஆகவே. ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்து சென்றான், எனவே, (அவனது சூழ்ச்சிக்குள் சிக்கி) அவன் வழி தவறியவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டான்.
Saheeh International
And recite to them, [O Muhammad], the news of him to whom We gave [knowledge of] Our signs, but he detached himself from them; so Satan pursued him, and he became of the deviators.
وَلَوْ شِئْنَا لَرَفَعْنٰهُ بِهَا وَلٰكِنَّهٗۤ اَخْلَدَ اِلَی الْاَرْضِ وَاتَّبَعَ هَوٰىهُ ۚ فَمَثَلُهٗ كَمَثَلِ الْكَلْبِ ۚ اِنْ تَحْمِلْ عَلَیْهِ یَلْهَثْ اَوْ تَتْرُكْهُ یَلْهَثْ ؕ ذٰلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ۚ فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ یَتَفَكَّرُوْنَ ۟
وَلَوْ شِئْنَاநாம் நாடியிருந்தால்لَرَفَعْنٰهُஉயர்த்தியிருப்போம்/அவனைبِهَاஅவற்றைக் கொண்டுوَلٰـكِنَّهٗۤஎன்றாலும்/நிச்சயமாக அவன்اَخْلَدَநிரந்தரம் தேடினான்اِلَى الْاَرْضِபூமியில்وَاتَّبَعَஇன்னும் பின்பற்றினான்هَوٰٮهُ‌ ۚதன் ஆசையைفَمَثَلُهٗஆகவே அவனுடைய உதாரணம்كَمَثَلِஉதாரணத்தைப் போன்றுالْـكَلْبِ‌ ۚநாய்اِنْ تَحْمِلْநீர் துரத்தினால்عَلَيْهِஅதைيَلْهَثْஅது நாக்கைத் தொங்கவிடும்اَوْஅல்லதுتَتْرُكْهُநீர் விட்டு விட்டால்/அதைيَلْهَثْ ؕஅது நாக்கைத் தொங்கவிடும்ذٰ لِكَ مَثَلُஇது/உதாரணம்الْقَوْمِமக்கள்الَّذِيْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தனர்بِاٰيٰتِنَا‌ ۚநம் வசனங்களைفَاقْصُصِவிவரிப்பீராகالْقَصَصَசரித்திரத்தைلَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ‏அவர்கள் சிந்திப்பதற்காக
வ லவ் ஷி'னா லரFபஃனாஹு Bபிஹா வ லாகின் னஹூ அக்லத இலல் அர்ளி வத்தBப'அ ஹவாஹ்; Fபமதலுஹூ கமதலில் கல்Bபி இன் தஹ்மில் 'அலய்ஹி யல்ஹத் அவ் தத்ருக் ஹு யல்ஹத்; தாலிக மதலுல் கவ்மில் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா; Fபக்ஸுஸில் கஸஸ ல'அல்லஹும் யதFபக்கரூன்
முஹம்மது ஜான்
நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது - இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும் - ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
நாம் எண்ணியிருந்தால் (நம்) அத்தாட்சிகளின் காரணமாக அவனை நாம் உயர்த்தியிருப்போம். எனினும், அவன் இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரம் என எண்ணி தன் (சரீர) இச்சையைப் பின்பற்றிவிட்டான். அவனுடைய உதாரணம் ஒரு நாயின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. நீங்கள் அதைத் துரத்தினாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. அதை(த் துரத்தாது) விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. இதுவே, நம் வசனங்களைப் பொய்யாக்கும் (மற்ற) மக்களுக்கும் உதாரணமாகும். ஆகவே, அவர்கள் சிந்தித்து நல்லுணர்ச்சி பெறுவதற்காக இச்சரித்திரத்தை (அடிக்கடி) ஓதிக் காண்பியுங்கள்.
IFT
நாம் நாடியிருந்தால், அவ்வசனங்களின் மூலம் அவனை உயர்த்தியிருப்போம். ஆயினும் அவன் இவ்வுலக வாழ்விலேயே மோகம் கொண்டான்; மேலும், தன்னுடைய மன இச்சைகளையே பின்பற்றலானான். எனவே அவனுடைய நிலை நாயைப் போன்றதாகும்! அதனை நீர் துரத்தினாலும், நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டுதானிருக்கும்; துரத்தாமல் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டுதானிருக்கும்! நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகின்ற மக்களுக்கு இதுவே உதாரணமாகும். இச்சம்பவங்களை நீர் இவர்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருப்பீராக! அதன் மூலம் இவர்கள் சிந்தித்து உணரக்கூடும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நாம் நாடியிருந்தால், (நம் அத்தாட்சிகளான) அவற்றைக் கொண்டு அவனை நாம் உயர்த்தியிருப்போம், எனினும் அவன் பூமியின் (ஆடம்பர வாழ்க்கையின்)பால் சாய்ந்துவிட்டான், தன் (மன) இச்சையையும் பின்பற்றி விட்டான், ஆகவே அவனுடைய உதாரணம்: (ஒரு) நாயின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது, நீர் அதனைத் துரத்தினாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது, அதனை(த் துரத்தாது) விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது, இதுவே., நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கினார்களே அந்தக் கூட்டத்தினர்க்கு உதாரணமாகும், ஆகவே, அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெருவதற்காக (இத்தகைய) வரலாற்றைக் கூறுவீராக!
Saheeh International
And if We had willed, We could have elevated him thereby, but he adhered [instead] to the earth and followed his own desire. So his example is like that of the dog: if you chase him, he pants, or if you leave him, he [still] pants. That is the example of the people who denied Our signs. So relate the stories that perhaps they will give thought.
سَآءَ مَثَلَا لْقَوْمُ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَاَنْفُسَهُمْ كَانُوْا یَظْلِمُوْنَ ۟
سَآءَகெட்டு விட்டனர்مَثَلَاْஉதாரணமாகۨالْقَوْمُமக்கள்الَّذِيْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தனர்بِاٰيٰتِنَاநம் வசனங்களைوَاَنْفُسَهُمْதங்களுக்கேكَانُوْاஇருந்தனர்يَظْلِمُوْنَ‏அநீதியிழைக்கிறார்கள்
ஸா'அ மதலனில் கவ்முல் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா வ அன்Fபுஸஹும் கானூ யள்லிமூன்
முஹம்மது ஜான்
நம்முடைய வசனங்களைப் பொய்யெனக் கூறிய மக்களின் உதாரணம் மிகவும் கெட்டதாகும்; அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம் வசனங்களைப் பொய்யாக்கிய மக்களின் இவ்வுதாரணம் மிகக் கேவலமானது; அவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
IFT
நம்முடைய வசனங்களைப் பொய்யெனக் கூறி, தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டிருந்த சமுதாயத்தாரின் உவமை எத்துணைக் கெட்டது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கிய கூட்டத்தாரின் உதாரணம் மிகக் கெட்டதாகும், அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்கிறவர்களாகவும் இருந்தனர்.
Saheeh International
How evil an example [is that of] the people who denied Our signs and used to wrong themselves.
مَنْ یَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِیْ ۚ وَمَنْ یُّضْلِلْ فَاُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟
مَنْஎவரைيَّهْدِநேர்வழி செலுத்துகிறான்اللّٰهُஅல்லாஹ்فَهُوَஅவர்தான்الْمُهْتَدِىْ‌ۚநேர்வழிபெற்றவர்وَمَنْஇன்னும் எவர்(களை)يُّضْلِلْவழிகெடுக்கிறான்فَاُولٰۤٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْخٰسِرُوْنَ‏நஷ்டவாளிகள்
மய் யஹ்தில் லாஹு Fப ஹுவல் முஹ்ததீ வ மய் யுள்லில் Fப உலா'இக ஹுமுல் காஸிரூன்
முஹம்மது ஜான்
அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டுகின்றானோ அவர் நேர்வழியை அடைந்தவர் ஆவார்; யாரைத் தவறான வழியில் விட்டு விட்டானோ, அத்தகையவர்கள் முற்றிலும் நஷ்டம் அடைந்தவர்களே.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் எவர்களை நேரான வழியில் செலுத்துகிறானோ அவர்களே நேரான வழியை அடைந்தவர்கள்; எவர்களைத் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவர்கள் முற்றிலும் நஷ்டமடைந்தவர்களே!
IFT
அல்லாஹ் எவருக்கு நேர்வழியை அருளுகின்றானோ அவரே நேர்வழி பெற்றவராவார். மேலும், யாருக்கு அல்லாஹ் தன் வழிகாட்டுதலை வழங்கவில்லையோ அத்தகையவர்களே பேரிழப்புக்கு ஆளானவர்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் யாரை நேர்வழி செலுத்துகின்றானோ அவரே நேர்வழி அடைந்தவர், மேலும், எவரை அவன் வழி தவறச் செய்கிறானோ அத்தகையோர்தாம் நஷ்டவாளிகள்.
Saheeh International
Whoever Allah guides - he is the [rightly] guided; and whoever He sends astray - it is those who are the losers.
وَلَقَدْ ذَرَاْنَا لِجَهَنَّمَ كَثِیْرًا مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ ۖؗ لَهُمْ قُلُوْبٌ لَّا یَفْقَهُوْنَ بِهَا ؗ وَلَهُمْ اَعْیُنٌ لَّا یُبْصِرُوْنَ بِهَا ؗ وَلَهُمْ اٰذَانٌ لَّا یَسْمَعُوْنَ بِهَا ؕ اُولٰٓىِٕكَ كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ ؕ اُولٰٓىِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ ۟
وَلَـقَدْ ذَرَاْنَاபடைத்து விட்டோம்لِجَـهَنَّمَநரகத்திற்காகكَثِيْرًاஅதிகமானோரைمِّنَ الْجِنِّஜின்களில்وَالْاِنْسِ‌ ۖ இன்னும் மனிதர்கள்لَهُمْஅவர்களுக்குقُلُوْبٌஉள்ளங்கள்لَّا يَفْقَهُوْنَசிந்தித்து விளங்க மாட்டார்கள்بِهَا அவற்றைக் கொண்டுوَلَهُمْஇன்னும் அவர்களுக்குاَعْيُنٌகண்கள்لَّا يُبْصِرُوْنَபார்க்க மாட்டார்கள்بِهَا அவற்றைக் கொண்டுوَلَهُمْஇன்னும் அவர்களுக்குاٰذَانٌகாதுகள்لَّا يَسْمَعُوْنَசெவிசாய்க்க மாட்டார்கள்بِهَا ؕஅவற்றைக் கொண்டுاُولٰۤٮِٕكَஅவர்கள்كَالْاَنْعَامِகால்நடைகளைப் போன்றுبَلْமாறாகهُمْஅவர்கள்اَضَلُّ‌ ؕஅதிகம் வழிகெட்டவர்(கள்)اُولٰۤٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْغٰفِلُوْنَ‏கவனமற்றவர்கள்
வ லகத் தர'னா லி ஜஹன்னம கதீரன் மினல் ஜின்னி வல் இன்ஸி லஹும் குலூBபுல் லா யFப்கஹூன Bபிஹா வ லஹும் அஃயுனுல் லா யுBபிஸிரூன Bபிஹா வ லஹும் ஆதானுல் லா யஸ்ம'ஊன Bபிஹா; உலா'இக கல் அன்'ஆமி Bபல் ஹும் அளல்ல்; உலா'இக ஹுமுல் காFபிலூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக மனிதர்களிலும், ஜின்களிலும் பலரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கிறோம். (அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கின்றன; எனினும் அவற்றைக் கொண்டு (நல்லுபதேசங்களை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு கண்களுமுண்டு; எனினும், அவற்றைக்கொண்டு (இவ்வுலகிலுள்ள இறைவனின் அத்தாட்சிகளை) அவர்கள் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு செவிகளுமுண்டு; எனினும், அவற்றைக் கொண்டு அவர்கள் (நல்லுபதேசங்களுக்கு) செவிசாய்க்க மாட்டார்கள். இவர்கள் மிருகங்களைப் போல் அல்லது அவற்றைவிட அதிகமாக வழி கெட்டவர்களாகவே இருக்கின்றனர். இவர்கள்தான் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்கள் ஆவார்.
IFT
மேலும் உண்மை யாதெனில், ஜின் மற்றும் மனித வர்க்கத்தில் பெரும்பாலோரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கின்றோம். அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன; ஆயினும், அவற்றால் அவர்கள் சிந்தித்துணர்வதில்லை; அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றன; ஆயினும் அவற்றால் அவர்கள் பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள்; ஏன் அவற்றை விடவும் அவர்கள் தாழ்ந்தவர்கள்! அவர்கள்தாம் அலட்சியத்தில் மூழ்கியிருப்பவர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
திட்டமாக ஜின்களிலும், மனிதர்களிலும் அநேகரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கின்றோம், (அவர்கள் எத்தகையோரென்றால்,) அவர்களுக்கு இதயங்களிருக்கின்றன, அவற்றைக்கொண்டு (நல்லவற்றை) அவர்கள் விளங்கிக்கொள்ளமாட்டார்கள், அவர்களுக்கு கண்களுமுண்டு, (எனினும் அவற்றைக் கொண்டு (இவ்வுலகிலுள்ள அல்லாஹ்வின் அத்தாட்சிகளை) அவர்கள் பார்க்க மாட்டார்கள், அவர்களுக்குக் காதுகளுமுண்டு, அவற்றைக் கொண்டு அவர்கள் (நல்லவற்றைச்) செவியேற்கமாட்டார்கள், அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள், ஏன் (அவற்றைவிட) அவர்கள் மிக அதிகமாக வழிகெட்டவர்கள்; அவர்களேதாம் (நம் வசனங்களை அலட்சியம் செய்து) பராமுகமானவர்களாவர்.
Saheeh International
And We have certainly created for Hell many of the jinn and mankind. They have hearts with which they do not understand, they have eyes with which they do not see, and they have ears with which they do not hear. Those are like livestock; rather, they are more astray. It is they who are the heedless.
وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰی فَادْعُوْهُ بِهَا ۪ وَذَرُوا الَّذِیْنَ یُلْحِدُوْنَ فِیْۤ اَسْمَآىِٕهٖ ؕ سَیُجْزَوْنَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
وَلِلّٰهِஅல்லாஹ்வுக்கேالْاَسْمَآءُபெயர்கள்الْحُسْنٰىமிக அழகிய(வை)فَادْعُوْهُஆகவே அழையுங்கள்/அவனைبِهَا‌அவற்றைக் கொண்டுوَذَرُواவிட்டு விடுங்கள்الَّذِيْنَஎவர்களைيُلْحِدُوْنَதவறிழைப்பார்கள்فِىْۤ اَسْمَآٮِٕهٖ‌ ؕஅவனுடைய பெயர்களில்سَيُجْزَوْنَகூலி கொடுக்கப்படுவார்கள்مَاஎதற்குكَانُوْاஇருந்தனர்يَعْمَلُوْنَ‏செய்வார்கள்
வ லில்லாஹில் அஸ்மா 'உல் ஹுஸ்னா Fபத்'ஊஹு Bபிஹா வ தருல் லதீன யுல்ஹிதூன Fபீ அஸ்மா'இஹ்; ஸ யுஜ்Zஜவ்ன மா கானூ யஃமலூன்
முஹம்மது ஜான்
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுக்கு மிக அழகான திருப்பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக் கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள். (அவனிடம் துஆ கேளுங்கள்.) அவனுடைய திருப்பெயர்களில் தவறிழைப்பவர்களை நீங்கள் விட்டு விடுங்கள்; இவர்கள் தங்கள் செயலுக்குத் தக்க கூலியை விரைவில் கொடுக்கப்படுவார்கள்.
IFT
அல்லாஹ் அழகிய பெயர்களுக்கு உரித்தானவன்; எனவே, அந்த அழகிய பெயர்களைக் கொண்டே அவனை அழையுங்கள்! மேலும், அவனுக்குப் பெயர்கள் வைப்பதில் வழிபிறழ்ந்து செல்பவர்களை விட்டுவிடுங்கள்! அவர்கள் செய்துகொண்டிருப்பவற்றின் கூலியை அவர்கள் பெற்றே தீருவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அல்லாஹ்வுக்கு மிக்க அழகான பெயர்கள் இருக்கின்றன, ஆகவே அவற்றைக் கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள், அவனுடைய பெயர்களில் (தவறான பொருள் கொண்டு) திரித்துக் கூறுவோரை விட்டுவிடுங்கள், அவர்கள் செய்து கொண்டிருந்தவைக்குரிய கூலியைக் கொடுக்கப்படுவார்கள்.
Saheeh International
And to Allah belong the best names, so invoke Him by them. And leave [the company of] those who practice deviation concerning His names. They will be recompensed for what they have been doing.
وَمِمَّنْ خَلَقْنَاۤ اُمَّةٌ یَّهْدُوْنَ بِالْحَقِّ وَبِهٖ یَعْدِلُوْنَ ۟۠
وَمِمَّنْஎவர்களிலிருந்துخَلَقْنَاۤபடைத்தோம்اُمَّةٌஒரு கூட்டம்يَّهْدُوْنَநேர்வழி காட்டுகின்றனர்بِالْحَـقِّசத்தியத்தைக் கொண்டுوَبِهٖஇன்னும் அதைக்கொண்டேيَعْدِلُوْنَ‏நீதமாக நடக்கின்றனர்
வ மிம்மன் கலக்னா உம்மது(ன்)ய் யஹ்தூன Bபில்ஹக்கி வ Bபிஹீ யஃதிலூன்
முஹம்மது ஜான்
நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள்; அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள்.  
அப்துல் ஹமீது பாகவி
நாம் படைத்தவர்களில் சிலருண்டு; அவர்கள் சத்திய வழியை(ப் பின்பற்றுவதுடன், மற்ற மக்களுக்கும்) அறிவித்து அதைக் கொண்டே நீதியும் செய்கின்றனர்.
IFT
நாம் படைத்த மக்களில் ஒரு பிரிவினர் இப்படியும் இருக்கிறார்கள்; அவர்கள் முற்றிலும் சத்தியத்திற்கேற்பவே வழிகாட்டுகிறார்கள்.மேலும், சத்தியத்திற்கேற்பவே நீதிவழங்குகிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கிறார்கள், அவர்கள் உண்மைக்கு வழிகாட்டுகிறார்கள், (அதைப் பின்பற்றுவதுடன் மற்ற மனிதர்களுக்கும் அறிவித்து) அதனைக் கொண்டே நீதியும் செய்கின்றனர்.
Saheeh International
And among those We created is a community which guides by truth and thereby establishes justice.
وَالَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا سَنَسْتَدْرِجُهُمْ مِّنْ حَیْثُ لَا یَعْلَمُوْنَ ۟ۚۖ
وَالَّذِيْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தனர்بِاٰيٰتِنَاநம் வசனங்களைسَنَسْتَدْرِجُهُمْவிட்டுவிட்டுப் பிடிப்போம்/அவர்களைمِّنْ حَيْثُவிதத்தில்لَا يَعْلَمُوْنَ ۖ ۚ‏அறியமாட்டார்கள்
வல்லதீன கத்தBபூ Bபி ஆயாதினா ஸனஸ்தத்ரிஜுஹும் மின் ஹய்து லா யஃலமூன்
முஹம்மது ஜான்
எவர் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறுகிறார்களோ அவர்களைப் படிப்படியாக அவர்கள் அறியா வண்ணம் பிடிப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களை அவர்கள் உணர்ந்துகொள்ளாத விதத்தில் நாம் படிப்படியாக (கீழ் நிலைக்கு இறக்கி நரகத்திலும்) புகுத்தி விடுவோம்.
IFT
நம்முடைய வசனங்களைப் பொய்யென்றுரைத்தவர்களை, அவர்கள் அறியாத வகையில் படிப்படியாக அழிவின் பக்கம் நாம் கொண்டு செல்வோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகின்றார்களே அத்தகையோர் - (அவர்களுக்கு சகலத்தையும் கொடுத்து) அவர்கள் உணர்ந்து கொள்ளாத விதத்தில் அவர்களை நாம் படிப்படியாக (கீழ்நிலைக்கு இறக்கி)ப்பிடித்துவிடுவோம்.
Saheeh International
But those who deny Our signs - We will progressively lead them [to destruction] from where they do not know.
وَاُمْلِیْ لَهُمْ ۫ؕ اِنَّ كَیْدِیْ مَتِیْنٌ ۟
وَاُمْلِىْஅவகாசமளிப்பேன், பிற்படுத்துவேன்لَهُمْ ؕஅவர்களுக்குاِنَّ كَيْدِىْநிச்சயமாக என் சூழ்ச்சிمَتِيْنٌ‏மிக உறுதியானது
வ உம்லீ லஹும்; இன்ன கய்தீ மதீன்
முஹம்மது ஜான்
(இவ்வுலகில்) நான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கின்றேன்; நிச்சயமாக எனது திட்டம் மிகவும் உறுதியானது.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வுலகில்) நான் அவர்களுக்கு (நீண்ட) அவகாசம் அளிக்கிறேன். நிச்சயமாக என் சூழ்ச்சி (திட்டம்) மிக்க உறுதியானது; (தப்பிக்க முடியாதது.)
IFT
மேலும், நான் அவர்களுக்கு அவகாசம் அளித்துக்கொண்டிருக்கின்றேன்; திண்ணமாக என்னுடைய சூழ்ச்சியை யாராலும் முறியடித்துவிட முடியாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும் (இவ்வுலகில்) நான் அவர்களுக்கு அவகாசம் கொடுப்பேன், நிச்சயமாக என்னுடைய சதி(த் திட்டம்) மிக்க உறுதியானது.
Saheeh International
And I will give them time. Indeed, My plan is firm.
اَوَلَمْ یَتَفَكَّرُوْا ٚ مَا بِصَاحِبِهِمْ مِّنْ جِنَّةٍ ؕ اِنْ هُوَ اِلَّا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟
اَوَلَمْ يَتَفَكَّرُوْا ٚஅவர்கள் சிந்திக்கவில்லையா?مَاஇல்லைبِصَاحِبِهِمْஅவர்களுடைய தோழருக்குمِّنْ جِنَّةٍ‌ؕஅறவே பைத்தியம்اِنْஇல்லைهُوَஅவர்اِلَّاதவிரنَذِيْرٌஎச்சரிப்பவர்مُّبِيْنٌ‏தெளிவானவர்
அவலம் யதFபக்கரூ மா BபிஸாஹிBபிஹிம் மின் ஜின்னஹ்; இன் ஹுவ இல்லா னதீருன் முBபீன்
முஹம்மது ஜான்
அவர்கள் சிந்திக்கவில்லையா? (நம் தூதராகிய) அவர்களுடைய தோழருக்கு எவ்வித பைத்தியமுமில்லை. அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரேயன்றி வேறில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நம் தூதராகிய) அவர்களுடைய (இத்)தோழருக்கு எவ்வித பைத்தியமும் இல்லை என்பதை அவர்கள் சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டாமா? அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றவரே அன்றி வேறில்லை.
IFT
இவர்கள் (எப்போதேனும்) சிந்தித்திருக்கின்றார்களா? இவர்களுடைய தோழருக்கு எவ்விதப் பைத்தியமும் இல்லை. அவர் (தீய விளைவு ஏற்படும் முன்னர் அதைப் பற்றி) தெளிவான முறையில் எச்சரிக்கை செய்பவரேயாவார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நம் நபியாகிய) அவர்களுடைய தோழருக்கு எவ்விதப் பைத்தியமும் இல்லை என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றவரே தவிர வேறில்லை.
Saheeh International
Then do they not give thought? There is in their companion [i.e., Muhammad (ﷺ] no madness. He is not but a clear warner.
اَوَلَمْ یَنْظُرُوْا فِیْ مَلَكُوْتِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا خَلَقَ اللّٰهُ مِنْ شَیْءٍ ۙ وَّاَنْ عَسٰۤی اَنْ یَّكُوْنَ قَدِ اقْتَرَبَ اَجَلُهُمْ ۚ فَبِاَیِّ حَدِیْثٍ بَعْدَهٗ یُؤْمِنُوْنَ ۟
اَوَلَمْ يَنْظُرُوْاஅவர்கள் கவனிக்கவில்லையா?فِىْ مَلَـكُوْتِபேராட்சியில்السَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமிوَمَا خَلَقَஇன்னும் எவற்றைப்படைத்தான்اللّٰهُஅல்லாஹ்مِنْ شَىْءٍ ۙபொருளிலும்وَّاَنْஎன்பதிலும்عَسٰٓىகூடும்اَنْ يَّكُوْنَ قَدِ اقْتَرَبَநெருங்கி இருக்கاَجَلُهُمْ‌ ۚஅவர்களுடைய தவணைفَبِاَىِّ حَدِيْثٍۢஎந்த செய்தியை?بَعْدَهٗஇதற்குப் பின்னர்يُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்வார்கள்
அவலம் யன்ளுரூ Fபீ மலகூதிஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா கலகல் லாஹு மின் ஷய்'இ(ன்)வ் வ அன் 'அஸா அய் யகூன கதிக்தரBப அஜலுஹும் Fப Bபி அய்யி ஹதீதின் Bபஃதஹூ யு'மினூன்
முஹம்மது ஜான்
வானங்கள், பூமி, இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்கவில்லையா?) இதற்குப் பின்னர் எந்த விஷயத்தைத் தான் அவர்கள் ஈமான் கொள்ளப்போகிறார்கள்?
அப்துல் ஹமீது பாகவி
வானங்கள், பூமியினுடைய ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்ற பொருள்களையும் அவர்கள் பார்க்கவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கி இருக்கக் கூடும் என்பதையும் (அவர்கள் எண்ணவில்லையா?) இவ்வேதத்திற்குப் பின்னர் எதைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்.
IFT
வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சியமைப்பைக் குறித்து இவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? மேலும், அல்லாஹ் படைத்திருக்கும் எந்தப் பொருளையேனும் இவர்கள் கண் திறந்து பார்க்கவில்லையா? இன்னும் தங்கள் வாழ்க்கைத் தவணை முடியும் நேரம் நெருங்கிவிட்டது என்பதைக்கூட இவர்கள் சிந்திக்கவில்லையா? ஆக, (தூதரின்) இந்த எச்சரிக்கைக்குப் பின் வேறு எந்த அறிவுரையின் மீதுதான் இவர்கள் நம்பிக்கை கொள்ளப் போகின்றார்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சியிலும், எப்பொருளிலிருந்தும் அல்லாஹ் படைத்திருக்கின்றவற்றிலும், இன்னும் அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியதாக ஆகி இருக்கக் கூடும் என்பதிலும் அவர்கள் (உணர்ந்து) பார்க்கவில்லையா? (குர் ஆனாகிய) இதற்குப் பின்னர் எந்தச் செய்தியைத்தான் அவர்கள் விசுவாசங்கொள்ளப் போகிறார்கள்?
Saheeh International
Do they not look into the realm of the heavens and the earth and everything that Allah has created and [think] that perhaps their appointed time has come near? So in what statement [i.e., message] hereafter will they believe?
مَنْ یُّضْلِلِ اللّٰهُ فَلَا هَادِیَ لَهٗ ؕ وَیَذَرُهُمْ فِیْ طُغْیَانِهِمْ یَعْمَهُوْنَ ۟
مَنْஎவரைيُّضْلِلِவழிகெடுப்பான்اللّٰهُஅல்லாஹ்فَلَاஅறவே இல்லைهَادِىَநேர்வழிசெலுத்துபவர்لَهٗ ؕஅவரைوَ يَذَرُஇன்னும் விட்டுவிடுகிறான்هُمْஅவர்களைفِىْ طُغْيَانِهِمْஅவர்களுடைய அட்டூழியத்தில்يَعْمَهُوْنَ‏கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக
மய் யுள்லில் லில்லாஹு Fபலா ஹாதிய லஹ்; வ யதருஹும் Fபீ துக்யானிஹிம் யஃமஹூன்
முஹம்மது ஜான்
எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவர்களை நேரான வழியில் செலுத்த எவராலும் முடியாது. அவன் அவர்களை தவறான வழியிலேயே தட்டழியுமாறு விட்டுவிடுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவர்களை நேரான வழியில் செலுத்த ஒருவராலும் முடியாது; அவர்கள் தங்கள் வழிகேட்டிலேயே தட்டழி(ந்து கெட்டலை)யும்படி விட்டுவிடுகிறான்.
IFT
அல்லாஹ் எவரை வழிதவறச் செய்கின்றானோ அவரை நேர்வழிப்படுத்துபவர் எவருமிலர். மேலும், அல்லாஹ் இவர்களை தங்களுடைய ஆணவப் போக்கிலேயே உழன்று கொண்டிருக்குமாறு விட்டுவிடுகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவரை அல்லாஹ் தவறான வழியில் செலுத்திவிடுகிறானோ அவரை நேரான வழியில் செலுத்துபவர் எவரும் இலர், தங்கள் வழிகேட்டிலேயே அவர்களை தட்டழிகிறவர்களாக அவன் விட்டும்விடுகின்றான்.
Saheeh International
Whoever Allah sends astray - there is no guide for him. And He leaves them in their transgression, wandering blindly.
یَسْـَٔلُوْنَكَ عَنِ السَّاعَةِ اَیَّانَ مُرْسٰىهَا ؕ قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ رَبِّیْ ۚ لَا یُجَلِّیْهَا لِوَقْتِهَاۤ اِلَّا هُوَ ؔؕۘ ثَقُلَتْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ لَا تَاْتِیْكُمْ اِلَّا بَغْتَةً ؕ یَسْـَٔلُوْنَكَ كَاَنَّكَ حَفِیٌّ عَنْهَا ؕ قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللّٰهِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟
يَسْــٴَــلُوْنَكَஉம்மிடம் கேட்கிறார்கள்عَنِ السَّاعَةِநேரத்தைப் பற்றிاَيَّانَஎப்போதுمُرْسٰٮهَا ؕஅது நிகழ்வதுقُلْகூறுவீராகاِنَّمَاஎல்லாம்عِلْمُهَاஅதன் அறிவுعِنْدَஇடம்தான்رَبِّىْ‌ ۚஎன் இறைவன்لَاமாட்டான்يُجَلِّيْهَاஅதை வெளிப்படுத்தلِوَقْتِهَاۤஅதன் நேரத்தில்اِلَّاதவிரهُوَۘ ؕؔஅவனைثَقُلَتْகனத்து விட்டதுفِى السَّمٰوٰتِவானங்களில்وَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமியில்لَاவராதுتَاْتِيْكُمْஅது உங்களிடம்اِلَّاதவிரبَغْتَةً ؕதிடீரென்றேيَسْــٴَــلُوْنَكَஉம்மிடம் கேட்கிறார்கள்كَاَنَّكَநிச்சயமாக போன்று/நீர்حَفِىٌّஅறிந்தவர்عَنْهَا ؕஅதைப் பற்றிقُلْகூறுவீராகاِنَّمَاஎல்லாம்عِلْمُهَاஅதன் அறிவுعِنْدَஇடம்اللّٰهِஅல்லாஹ்وَلٰـكِنَّஎன்றாலும்اَكْثَرَஅதிகமானோர்النَّاسِமக்களில்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
யஸ்'அலூனக 'அனிஸ் ஸா'அதி அய்யான முர்ஸாஹா குல் இன்னமா 'இல்முஹா 'இன்த ரBப்Bபீ லா யுஜல்லீஹா லிவக்திஹா இல்லா ஹூ; தகுலத் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; லா த'தீகும் இல்லா Bபக்தஹ்; யஸ்'அலூனக க அன்னக ஹFபிய்யுன் 'அன்ஹா குல் இன்னமா 'இல்முஹா 'இன்தல் லாஹி வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
முஹம்மது ஜான்
அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும் : “அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது; அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது - அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடுகூறாக அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்: அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அதை அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இறுதி நாளைப் பற்றி - அது எப்பொழுது வரும் என அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அதன் அறிவு என் இறைவனிடத்தில்தான் இருக்கிறது. அது வரும் நேரத்தை அவனைத் தவிர மற்றெவரும் தெளிவாக்க முடியாது. (அது சமயம்) வானங்களிலும் பூமியிலும் மகத்தான சம்பவங்கள் நிகழும். திடீரென்றே தவிர (அது) உங்களிடம் வராது. அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மை அவர்கள் எண்ணி, (அதைப் பற்றி) உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அதன் அறிவு அல்லாஹ்விடத்தில்தான் இருக்கிறது; மனிதரில் பெரும்பாலானவர்கள் இதை அறிய மாட்டார்கள்.''
IFT
இறுதித் தீர்ப்புக்குரிய நேரத்தைப் பற்றி அது எப்போது வரும் என்று இவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: “அதைப் பற்றிய அறிவு என் இறைவனிடமேயுள்ளது. அவனே அதற்குரிய நேரத்தில் அதனை வெளிப்படுத்துவான். வானங்களிலும், பூமியிலும் (உள்ளவர்களுக்கு) அது மிகக் கடுமையான நேரமாயிருக்கும். அது திடீரென்றுதான் உங்களை வந்தடையும்.” அதைப் பற்றி நீர் ஆராய்ந்து கொண்டிருப்பவரைப் போல உம்மைக் கருதி உம்மிடம் வினவுகின்றார்கள். நீர் கூறும்: “அதைப்பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது.” ஆயினும் மக்களில் பெரும்பாலோர் இவ்வுண்மையை அறியாதிருக்கிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) மறுமை நாள் பற்றி-அதனுடைய வருகை எப்பொழுது என- அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள், (அதற்கு) நீர் கூறுவீராக! அதன் அறிவெல்லாம் என் இரட்சகனிடத்தில்தான், அதை (வரவேண்டிய) அதற்குரிய நேரத்தில் அவனையன்றி வேறு எவரும் வெளிப்படுத்த மாட்டார், (அதுபற்றி முற்றிலும் அறிந்தவன் அவனே! அது சமயம்) வானங்களிலும், பூமியிலும் பளு(வான சம்பவங்கள்) ஏற்பட்டுவிடும், திடீரெனவே தவிர அது உங்களிடம் வராது, நிச்சயமாக நீர் அதனை முற்றிலும் அறிந்து கொண்டவர் போல (அதனைப்பற்றி) உம்மிடம் கேட்கிறார்கள், (அதற்கு) அதன் அறிவெல்லாம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கிறது, எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (அதனை) அறியமாட்டர்கள் என்று நபியே!) நீர் கூறுவீராக.
Saheeh International
They ask you, [O Muhammad], about the Hour: when is its arrival? Say, "Its knowledge is only with my Lord. None will reveal its time except Him. It lays heavily upon the heavens and the earth. It will not come upon you except unexpectedly." They ask you as if you are familiar with it. Say, "Its knowledge is only with Allah, but most of the people do not know."
قُلْ لَّاۤ اَمْلِكُ لِنَفْسِیْ نَفْعًا وَّلَا ضَرًّا اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ وَلَوْ كُنْتُ اَعْلَمُ الْغَیْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَیْرِ ۛۖۚ وَمَا مَسَّنِیَ السُّوْٓءُ ۛۚ اِنْ اَنَا اِلَّا نَذِیْرٌ وَّبَشِیْرٌ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟۠
قُلْகூறுவீராகلَّاۤ اَمْلِكُநான் உரிமை பெறமாட்டேன்لِنَفْسِىْஎனக்குنَـفْعًاஎந்த ஒரு பலனையும்وَّلَا ضَرًّاஎந்த ஒரு கெடுதியையும்اِلَّاதவிரمَاஎதைشَآءَநாடினான்اللّٰهُ ؕஅல்லாஹ்وَلَوْ كُنْتُநான் இருந்திருந்தால்اَعْلَمُஅறிபவனாகالْغَيْبَமறைவானவற்றைلَاسْتَكْثَرْتُஅதிகம்பெற்றிருப்பேன்مِنَ الْخَيْرِ ۖ ‌ۛۚநன்மையில்وَمَا مَسَّنِىَஎன்னை தீண்டி இருக்காதுالسُّۤوْءُ ‌ۛۚதீங்குاِنْ اَنَاநான் இல்லைاِلَّاதவிரنَذِيْرٌஎச்சரிப்பவராகوَّبَشِيْرٌஇன்னும் நற்செய்தி கூறுபவராகلِّقَوْمٍமக்களுக்குيُّؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்கிறார்கள்
குல் லா அம்லிகு லினFப்ஸீ னFப்'அ(ன்)வ் வலா ளர்ரன் இல்லா மா ஷா'அல் லாஹ்; வ லவ் குன்து அஃலமுல் கய்Bப லஸ்தக்தர்து மினல் கய்ரி வமா மஸ்ஸனியஸ் ஸூ'; இன் அன இல்லா னதீரு(ன்)வ் வ Bபஷீருல் லிகவ்மி(ன்)ய் யு'மினூன்
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.”  
அப்துல் ஹமீது பாகவி
(மேலும்,) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ் நாடினாலே தவிர நான் எனக்கு ஒரு நன்மையையோ தீமையையோ செய்து கொள்ள சக்தி பெறமாட்டேன். நான் மறைவானவற்றை அறியக்கூடுமாயின் நன்மைகளையே அதிகமாகத் தேடிக் கொண்டிருப்பேன்; ஒரு தீங்குமே என்னை அணுகி இருக்காது. நான் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நம்பிக்கை கொள்பவர்களுக்கு நற்செய்தி கூறுபவனுமே தவிர வேறில்லை.''
IFT
(நபியே, அவர்களிடம்) நீர் கூறும்: “நான் எனக்கு எவ்வித நன்மையையும், இழப்பையும் ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றிலேன். அல்லாஹ் எதை நாடுகின்றானோ அதுவே நிகழ்கிறது. மறைவானவற்றை நான் அறிபவனாக இருந்திருந்தால் எனக்கு நானே நிறைய ஆதாயங்களைப் பெற்றிருப்பேன். மேலும், எந்தத் தீங்கும் என்னை அணுகியிருக்காது. என்னை நம்புகின்ற மக்களுக்கு நான் எச்சரிக்கை செய்பவனும், நற்செய்தி அறிவிப்பவனுமாகவே இருக்கின்றேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே எவ்வித நன்மையைச் செய்வதற்)கும், தீமை(யைத் தடுத்துக் கொள்வதற்)கும் நான் சக்தி பெறமாட்டேன், மறைவானவற்றை நான் அறிந்தவனாக இருந்திருந்தால், நன்மைகளையே அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன், தீமை என்னைத் தொட்டிருக்காது, நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், விசுவாசங் கொண்ட சமுதாயத்தினருக்கு நன்மாராயங் கூறுபவனுமேயன்றி வேறில்லை”
Saheeh International
Say, "I hold not for myself [the power of] benefit or harm, except what Allah has willed. And if I knew the unseen, I could have acquired much wealth, and no harm would have touched me. I am not except a warner and a bringer of good tidings to a people who believe."
هُوَ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِیَسْكُنَ اِلَیْهَا ۚ فَلَمَّا تَغَشّٰىهَا حَمَلَتْ حَمْلًا خَفِیْفًا فَمَرَّتْ بِهٖ ۚ فَلَمَّاۤ اَثْقَلَتْ دَّعَوَا اللّٰهَ رَبَّهُمَا لَىِٕنْ اٰتَیْتَنَا صَالِحًا لَّنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِیْنَ ۟
هُوَஅவன்الَّذِىْஎவன்خَلَقَكُمْஉங்களைப் படைத்தான்مِّنْஇருந்துنَّـفْسٍஒரு மனிதர்وَّاحِدَةٍஒரேوَّجَعَلَஇன்னும் உருவாக்கினான்مِنْهَاஇன்னும் அவரிலிருந்தேزَوْجَهَاஅவருடைய மனைவியைلِيَسْكُنَஅவர் வசிப்பதற்காக, நிம்மதி பெறுவதற்காகاِلَيْهَا‌ ۚஅவளுடன்فَلَمَّاஎப்போதுتَغَشّٰٮهَاமூடினார்/அவளைحَمَلَتْகர்ப்பமானாள்حَمْلًاகர்ப்பம்خَفِيْفًاலேசானفَمَرَّتْநடந்தாள்بِهٖ‌ ۚஅதைக் கொண்டுفَلَمَّاۤபோதுاَثْقَلَتْகனமானாள்دَّعَوَاஇருவரும் பிரார்த்தித்தனர்اللّٰهَஅல்லாஹ்விடம்رَبَّهُمَاஅவ்விருவரின் இறைவனைلَٮِٕنْ اٰتَيْتَـنَاநீ கொடுத்தால் / எங்களுக்குصَالِحًاநல்ல குழந்தையைلَّـنَكُوْنَنَّநிச்சயமாக ஆகிவிடுவோம்مِنَ الشّٰكِرِيْنَ‏நன்றிசெலுத்துவோரில்
ஹுவல் லதீ கலககும் மின் னFப்ஸி(ன்)வ் வாஹிததி(ன்)வ் வ ஜ'அல மின்ஹா Zஜவ்ஜஹா லியஸ் குன இலய்ஹா Fபலம்மா தகஷ் ஷாஹா ஹமலத் ஹம்லன் கFபீFபன் Fபமர்ரத் Bபிஹீ Fபலம்மா அத்கலத் த'அ வல்லாஹ ரBப்Bபஹுமா ல'இன் ஆதய்தன ஸாலிஹல் லனகூனன்ன மினஷ் ஷாகிரீன்
முஹம்மது ஜான்
அவனே, உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான், அவருடன் கூடி (இணைந்து) வாழ்வதற்காக அவருடைய துணைவியை (அவரிலிருந்தே) படைத்தான் - அவன் அவளை நெருங்கிய போது அவள் இலேசான கர்ப்பவதியானாள்; பின்பு அதனைச் சுமந்து நடமாடிக் கொண்டிருந்தாள்; பின்பு அது பளுவாகவே, அவர்களிருவரும் தம்மிருவரின் இறைவனிடம், “(இறைவனே!) எங்களுக்கு நீ நல்ல (சந்ததியைக்) கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
ஒரே மனிதரிலிருந்து உங்களை படைத்தவன் அவன்தான்; அவருடன் (சுகமாகக்) கூடி வசிப்பதற்காக அவருடைய மனைவியை அவரிலிருந்தே உற்பத்தி செய்தான். அவளை அவர் (தன் தேகத்தைக் கொண்டு) மூடிக் கொண்டபோது அவள் இலேசான கர்ப்பமானாள். பின்னர் அதை(ச் சுமந்து) கொண்டு திரிந்தாள். அவள் சுமை பளுவாகவே ‘‘எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நல்லதொரு சந்ததியை அளித்தால் நிச்சயமாக நாங்கள் உனக்கு நன்றி செலுத்திக் கொண்டிருப்போம்'' என்று அவ்விருவரும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.
IFT
அல்லாஹ்தான் உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான்; மேலும், அதிலிருந்தே அதனுடைய துணையைப் படைத்தான்; அதனிடம் அது அமைதி பெறுவதற்காக! பிறகு ஆண், பெண்ணோடு கூடியபோது அவள் இலேசான கர்ப்பம் தரித்தாள். அதனை அவள் சுமந்து கொண்டு நடமாடிக் கொண்டிருந்தாள். பின்னர், அது கனமானபோது இருவரும் சேர்ந்து தங்கள் இறைவனாகிய அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள்: “நீ எங்களுக்கு நல்லதொரு குழந்தையைத் தந்தால், திண்ணமாக நாங்கள் உனக்கு நன்றி செலுத்துவோராயிருப்போம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், ஒரே ஆத்மாவிலிருந்து உங்களைப் படைத்து அதிலிருந்து அதற்குரிய ஜோடி(யான மனைவி)யை அவளுடன் கூடி வசிப்பதற்காகவும் உண்டாக்கினான், அவளை அவர் மூடிக் கொண்டபோது அவள் இலேசான சுமை சுமந்தாள், பின்னர் அதனை(ச்சுமந்து)க் கொண்டு திரிந்தாள், அது கனமானபோது, “நீ எங்களுக்கு (சந்ததியில்) நல்லதை அளித்தால், நிச்சயமாக நாங்கள் (உனக்கு) நன்றி செலுத்துவோரில் இருப்போம்” என்று அவ்விருவருடைய இரட்சகனாகிய அல்லாஹ்விடம் அவ்விருவரும் பிரார்த்தித்தார்கள்.
Saheeh International
It is He who created you from one soul and created from it its mate that he might dwell in security with her. And when he [i.e., man] covers her, she carries a light burden [i.e., a pregnancy] and continues therein. And when it becomes heavy, they both invoke Allah, their Lord, "If You should give us a good [child], we will surely be among the grateful."
فَلَمَّاۤ اٰتٰىهُمَا صَالِحًا جَعَلَا لَهٗ شُرَكَآءَ فِیْمَاۤ اٰتٰىهُمَا ۚ فَتَعٰلَی اللّٰهُ عَمَّا یُشْرِكُوْنَ ۟
فَلَمَّاۤபோதுاٰتٰٮهُمَاகொடுத்தான்/அவ்விருவருக்கும்صَالِحًـاநல்ல குழந்தையைجَعَلَاஅவ்விருவரும் ஆக்கினர்لَهٗஅவனுக்குشُرَكَآءَஇணைகளைفِيْمَاۤஎதில்اٰتٰٮهُمَا‌ ۚகொடுத்தான் / அவ்விருவருக்குفَتَعٰلَىஉயர்ந்தவன்اللّٰهُஅல்லாஹ்عَمَّاஎவற்றைவிட்டுيُشْرِكُوْنَ‏இணைவைக்கிறார்கள்
Fபலம்மா ஆதாஹுமா ஸாலிஹன் ஜ'அலா லஹூ ஷுரகா'அ Fபீமா ஆதாஹுமா; Fபத'ஆலல் லாஹு 'அம்மா யுஷ்ரிகூன்
முஹம்மது ஜான்
அவர்களுக்கு (அவர்கள் விருப்பப்படி) நல்ல குழந்தையை அவன் கொடுத்தவுடன், அவர்களுக்கு அவன் கொடுத்ததில் அவ்விருவரும் அவனுக்கு இணைகளைக் கற்பிக்கின்றனர் - இவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.”
அப்துல் ஹமீது பாகவி
(அவர்கள் பிரார்த்தனையின்படி) அவர்களுக்கு (இறைவன்) நல்லதோர் சந்ததியை அளித்தாலோ அதை அவர்களுக்கு அளித்ததில் (அவர்களுடைய தெய்வங்களும் துணையாய் இருந்தன என அவற்றை இறைவனுக்குக்) கூட்டாக்குகின்றனர். (அவர்கள் கூறும்) இணை துணைகளிலிருந்து அல்லாஹ் மிக உயர்ந்தவன்.
IFT
ஆனால், அல்லாஹ் அவர்களுக்கு நல்லதொரு குழந்தையை வழங்கியபோது அவன் அவர்களுக்கு வழங்கிய கொடையில், அவனோடு மற்றவர்களையும் இணையாக்கினார்கள். அவர்களுடைய இணைவைப்புச் செயல்களிலிருந்து அல்லாஹ் மிகவும் உயர்ந்தவன் ஆவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவ்விருவருக்கும் நல்ல (சந்ததியான)தை அவன் கொடுத்தபோது அவர்களுக்கு அவன் கொடுத்தவற்றில் அவ்விருவரும் இணையாளர்களை ஆக்கினார்கள், அவர்கள் இணைவைப்பதைவிட்டும் அல்லாஹ் உயர்வானவன்.
Saheeh International
But when He gives them a good [child], they ascribe partners to Him concerning that which He has given them. Exalted is Allah above what they associate with Him.
اَیُشْرِكُوْنَ مَا لَا یَخْلُقُ شَیْـًٔا وَّهُمْ یُخْلَقُوْنَ ۟ؗۖ
اَيُشْرِكُوْنَஇணையாக்குகிறார்களா?مَاஎவர்களைلَا يَخْلُقُபடைக்கமாட்டார்(கள்)شَيْـٴًـــــاஎந்த ஒரு பொருளையும்وَّهُمْஅவர்கள்يُخْلَقُوْنَ‌ ۖ ‏படைக்கப்படுகிறார்கள்
அ யுஷ்ரிகூன மா லா யக்லுகு ஷய்'அ(ன்)வ் வ ஹும் யுக்லகூன்
முஹம்மது ஜான்
எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணையாக்குகிறார்கள்? இன்னும், அவர்களோ (அல்லாஹ்வினாலேயே) படைக்கப்பட்டவர்களாயிற்றே!
அப்துல் ஹமீது பாகவி
ஒரு பொருளையும் படைக்க சக்தியற்றவற்றை அவர்கள் (அவனுக்கு) இணையாக்குகின்றனரா? அவையோ (அவனால்) படைக்கப்பட்டவைதான்.
IFT
(எத்தகைய அறிவிலிகளாக இருக்கின்றார்கள், இவர்கள்!) எப்பொருளையும் படைக்க முடியாதவற்றையா அவனோடு இணை வைக்கின்றார்கள்? அவையே இறைவனால் படைக்கப்பட்டவைதாமே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எப்பொருளையும் படைக்காதவற்றை அவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணையாக்குகின்றனரா? அவர்களும் (அவனால்) படைக்கப்பட்டவர்களே!
Saheeh International
Do they associate with Him those who create nothing and they are [themselves] created?
وَلَا یَسْتَطِیْعُوْنَ لَهُمْ نَصْرًا وَّلَاۤ اَنْفُسَهُمْ یَنْصُرُوْنَ ۟
وَلَا يَسْتَطِيْعُوْنَஇயலமாட்டார்கள்لَهُمْஇவர்களுக்குنَـصْرًاஉதவி செய்யوَّلَاۤ اَنْفُسَهُمْ يَنْصُرُوْنَ‏இன்னும் தங்களுக்கும் உதவிக் கொள்ள மாட்டார்கள்
வ லா யஸ்ததீ'ஊன லஹும் னஸ்ர(ன்)வ் வ லா அன்Fபுஸஹும் யன்ஸுரூன்
முஹம்மது ஜான்
அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்;(அது மாத்திரமல்ல) அவர்கள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவை இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவையாக இருப்பதுடன், தங்களுக்குத்தாமே ஏதும் உதவி செய்துகொள்ளவும் சக்தியற்றவையாக இருக்கின்றன.
IFT
இவர்களுக்கு எவ்வித உதவியும் செய்திட அவற்றால் முடியாது. ஏன் தமக்குத்தாமே உதவி செய்யும் நிலையில்கூட அவை இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவி செய்யச் சக்தி பெற மாட்டார்கள், தங்களுக்குத் தாங்களே (ஏதும்) உதவி செய்து கொள்ளவும் (சக்தி பெற) மாட்டார்கள்.
Saheeh International
And they [i.e., the false deities] are unable to [give] them help, nor can they help themselves.
وَاِنْ تَدْعُوْهُمْ اِلَی الْهُدٰی لَا یَتَّبِعُوْكُمْ ؕ سَوَآءٌ عَلَیْكُمْ اَدَعَوْتُمُوْهُمْ اَمْ اَنْتُمْ صَامِتُوْنَ ۟
وَاِنْ تَدْعُوْநீங்கள் அழைத்தால்هُمْஅவர்களைاِلَى الْهُدٰىநேர்வழிக்குلَا يَتَّبِعُوْபின்பற்ற மாட்டார்கள்كُمْ‌ ؕஉங்களைسَوَآءٌசமம்தான்عَلَيْكُمْஉங்களுக்குاَدَعَوْتُمُوْநீங்கள் அழைத்தாலும்هُمْஅவர்களைاَمْஅல்லதுاَنْـتُمْநீங்கள்صٰمِتُوْنَ‏வாய்மூடியவர்களாக
வ இன் தத்'ஊஹும் இலல்ஹுதா லா யத்தBபி'ஊகும்; ஸவா'உன் 'அலய்கும் அ-த'அவ்துமூஹும் 'அம் அன்தும் ஸாமிதூன்
முஹம்மது ஜான்
(இந்த முஷ்ரிக்குகளை) நீங்கள் நேர்வழிக்கு அழைத்தாலும், உங்களை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்; நீங்கள் அவர்களை அழைப்பதும் அல்லது (அழையாது) வாய்மூடியிருப்பதும் உங்களுக்குச் சமமேயாகும்.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் அவற்றை நேரான வழிக்கு அழைத்தபோதிலும் உங்களை அவை பின்பற்றாது. நீங்கள் அவற்றை அழைப்பதும் அல்லது அழைக்காது வாய்மூடிக் கொண்டிருப்பதும் சமமே.
IFT
நேரான வழியில் வருமாறு அவற்றுக்கு நீங்கள் அழைப்பு விடுத்தால், அவை உங்களைப் பின்பற்றி வரமாட்டா! நீங்கள் அவற்றிடம் பிரார்த்திப்பதும் அல்லது நீங்கள் மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்தவரை சமமே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் அவர்களை நேர் வழியின்பால் அழைத்தபோதிலும் உங்களை அவர்கள் பின்பற்றமாட்டார்கள், நீங்கள் அவர்களை அழைப்பதும் அல்லது அழைக்காது வாய்மூடிக் கொண்டவர்களாக இருப்பதும் உங்களுக்குச் சமமேயாகும்.
Saheeh International
And if you [believers] invite them to guidance, they will not follow you. It is all the same for you whether you invite them or you are silent.
اِنَّ الَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ عِبَادٌ اَمْثَالُكُمْ فَادْعُوْهُمْ فَلْیَسْتَجِیْبُوْا لَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்تَدْعُوْنَபிரார்த்திக்கிறீர்கள்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிعِبَادٌஅடிமைகள்اَمْثَالُـكُمْ‌உங்களைப் போன்றفَادْعُوْபிரார்த்தியுங்கள்هُمْஅவர்களிடம்فَلْيَسْتَجِيْبُوْاஅவர்கள் பதிலளிக்கட்டும்لَـكُمْஉங்களுக்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
இன்னல் லதீன தத்'ஊன மின் தூனில் லாஹி 'இBபாதுன் அம்தாலுகும் Fபத்'ஊஹும் Fபல் யஸ்தஜீBபூ லகும் இன் குன்தும் ஸாதிகீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர எவர்களை நீங்கள் (இறைவனென) அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே! (உங்கள் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்று கூறுவதில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் அழையுங்கள்; உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும்!
IFT
அல்லாஹ்வை விடுத்து எவற்றை நீங்கள் அழைக்கின்றீர்களோ அவை உங்களைப் போன்ற படைப்பினங்களே! அவற்றிடம் பிரார்த்தனை செய்து பாருங்கள்! அவற்றைப் பற்றி உங்கள் எண்ணங்கள் சரியாக இருந்தால் அவை உங்கள் அழைப்பை ஏற்று பதில் தரட்டுமே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர, நீங்கள் (தெய்வங்களென அழைக்கின்றீர்களே அத்தகையவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே, (உங்களுக்குப் பயனளிப்பார்கள் என்ற கூற்றில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள், உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும்.
Saheeh International
Indeed, those you [polytheists] call upon besides Allah are servants [i.e., creations] like you. So call upon them and let them respond to you, if you should be truthful.
اَلَهُمْ اَرْجُلٌ یَّمْشُوْنَ بِهَاۤ ؗ اَمْ لَهُمْ اَیْدٍ یَّبْطِشُوْنَ بِهَاۤ ؗ اَمْ لَهُمْ اَعْیُنٌ یُّبْصِرُوْنَ بِهَاۤ ؗ اَمْ لَهُمْ اٰذَانٌ یَّسْمَعُوْنَ بِهَا ؕ قُلِ ادْعُوْا شُرَكَآءَكُمْ ثُمَّ كِیْدُوْنِ فَلَا تُنْظِرُوْنِ ۟
اَلَهُمْ?/அவர்களுக்குاَرْجُلٌகால்கள்يَّمْشُوْنَநடப்பார்கள்بِهَآஅவற்றைக் கொண்டுاَمْஅல்லதுلَهُمْஅவர்களுக்குاَيْدٍகைகள்يَّبْطِشُوْنَபிடிப்பார்கள்بِهَآஅவற்றைக் கொண்டுاَمْஅல்லதுلَهُمْஅவர்களுக்குاَعْيُنٌகண்கள்يُّبْصِرُوْنَபார்ப்பார்கள்بِهَآஅவற்றைக் கொண்டுاَمْஅல்லதுلَهُمْஅவர்களுக்குاٰذَانٌகாதுகள்يَّسْمَعُوْنَகேட்பார்கள்بِهَا‌ ؕஅவற்றைக் கொண்டுقُلِகூறுவீராகادْعُوْاபிரார்த்தியுங்கள்شُرَكَآءَதெய்வங்களிடம்كُمْஉங்கள்ثُمَّபிறகுكِيْدُوْنِஎனக்கு சூழ்ச்சி செய்யுங்கள்فَلَاஅளிக்காதீர்கள்تُنْظِرُوْنِ‏எனக்கு அவகாசம்
அ லஹும் அர்ஜுலு(ன்)ய் யம்ஷூன Bபிஹா 'அம் லஹும் 'அய்தி(ன்)ய் யBப்திஷூன Bபிஹா 'அம் லஹும் அஃயுனுய் யுBப்ஸிரூன Bபிஹா 'அம் லஹும் ஆதானு(ன்)ய் யஸ்ம'ஊன Bபிஹா; குலித்'ஊ ஷுரகா'அகும் தும்ம கீதூனி Fபலா துன்ளிரூன்
முஹம்மது ஜான்
அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் - (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்” என்று.
அப்துல் ஹமீது பாகவி
(சிலை வணங்கிகளே! நீங்கள் வணங்கும்) அவற்றுக்குக் கால்கள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு நடக்கின்றனவா? அவற்றுக்குக் கைகள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு பிடிக்கின்றனவா? அவற்றுக்குக் கண்கள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு பார்க்கின்றனவா? அவற்றுக்குக் காதுகள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு கேட்கின்றனவா? (அவ்வாறாயின்) ‘‘நீங்கள் இணைவைத்து வணங்கும் (அத்)தெய்வங்களை (உங்களுக்கு உதவியாக) அழைத்துக் கொண்டு (நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்கு ஒரு இடையூறை உண்டுபண்ண) எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். (இதில்) நீங்கள் சிறிதும் எனக்கு அவகாசம் அளிக்க வேண்டாம்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக.
IFT
அவற்றிற்கு கால்கள் இருக்கின்றனவா, நடப்பதற்கு? கைகள் இருக்கின்றனவா, பிடிப்பதற்கு? கண்கள் இருக்கின்றனவா, பார்ப்பதற்கு? காதுகள் உள்ளனவா, கேட்பதற்கு? (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “நீங்களாக ஏற்படுத்திக் கொண்ட இணைக்கடவுள்களை அழையுங்கள்! பிறகு நீங்கள் (அனைவரும் ஒன்றுகூடி) எனக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்யுங்கள்! எனக்கு அறவே அவகாசம் அளிக்காதீர்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இணை வைப்போரே! நீங்கள் வணங்கும்) அவர்களுக்கு எவற்றைக்கொண்டு அவர்கள் நடப்பார்களோ அத்தகைய கால்கள் உண்டா? அல்லது எவற்றைக்கொண்டு அவர்கள் பிடிப்பார்களோ அத்தகைய கைகள் அவர்களுக்கு உண்டா? அல்லது எவற்றைக்கொண்டு அவர்கள் பார்ப்பார்களோ அத்தகைய கண்கள் அவர்களுக்கு உண்டா? அல்லது எவற்றைக் கொண்டு அவர்கள் செவியுறுவார்களோ அத்தகைய செவிகள் அவர்களுக்கு உண்டா? (அவ்வாறாயின்) “நீங்கள் உங்களுடைய இணையாளர்களை அழையுங்கள், பிறகு (எனக்கு இடையூறு செய்ய) சூழ்ச்சி செய்யுங்கள், (இதில்) நீங்கள் சிறிதும் எனக்கு அவகாசம் கொடுக்க வேண்டாம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
Do they have feet by which they walk? Or do they have hands by which they strike? Or do they have eyes by which they see? Or do they have ears by which they hear? Say, [O Muhammad], "Call your 'partners' and then conspire against me and give me no respite.
اِنَّ وَلِیِّ  اللّٰهُ الَّذِیْ نَزَّلَ الْكِتٰبَ ۖؗ وَهُوَ یَتَوَلَّی الصّٰلِحِیْنَ ۟
اِنَّ وَلِىَِّۧநிச்சயமாக என் பாதுகாவலன், என் பொறுப்பாளன்اللّٰهُஅல்லாஹ்الَّذِىْஎவன்نَزَّلَஇறக்கினான்الْـكِتٰبَ ۖ வேதத்தைوَهُوَஅவன்يَتَوَلَّىபொறுப்பேற்கிறான்الصّٰلِحِيْنَ‏நல்லவர்களுக்கு
இன்ன வலிய்யிஅல் லாஹுல் லதீ னZஜ்Zஜலல் கிதாBப வ ஹுவ யதவல்லஸ் ஸாலிஹீன்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்தான்; அவனே இவ்வேதத்தை இறக்கினான். அவனே நல்லடியார்களை பாதுகாக்கிறான்.
IFT
இந்த வேதத்தை இறக்கியருளிய இறைவனே திண்ணமாக, எனக்குப் பாதுகாப்பு அளிப்பவனாவான். மேலும், அவனே நல்லவர்களுக்கு பாதுகாப்பு நல்குகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இவ்வேதத்தை இறக்கிவைத்தவனாகிய அல்லாஹ் தான் என் பாதுகாவலன், மேலும் அவனே நல்லடியார்களைப் பாதுகாக்கின்றான்.
Saheeh International
Indeed, my protector is Allah, who has sent down the Book; and He is an ally to the righteous.
وَالَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا یَسْتَطِیْعُوْنَ نَصْرَكُمْ وَلَاۤ اَنْفُسَهُمْ یَنْصُرُوْنَ ۟
وَالَّذِيْنَஎவர்களிடம்تَدْعُوْنَபிரார்த்திக்கிறீர்கள்مِنْ دُوْنِهٖஅவனையன்றிلَا يَسْتَطِيْعُوْنَஇயலமாட்டார்கள்نَـصْرَكُمْஉங்களுக்கு உதவி செய்யوَلَاۤ اَنْفُسَهُمْ يَنْصُرُوْنَ‏இன்னும் தங்களுக்கு உதவிக்கொள்ள மாட்டார்கள்
வல்லதீன தத்'ஊன மின் தூனிஹீ லா யஸ்ததீ'ஊன னஸ்ரகும் வ லா அன்Fபுஸஹும் யன்ஸுரூன்
முஹம்மது ஜான்
அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (இணைவைத்து வணங்குபவர்களே!) அல்லாஹ்வைத் தவிர எவற்றை (இறைவனென) நீங்கள் அழைக்கிறீர்களோ அவை உங்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவையாக இருப்பதுடன், தமக்குத்தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவையாக இருக்கின்றன.
IFT
ஆனால் அல்லாஹ்வையன்றி எவற்றை நீங்கள் அழைக்கின்றீர்களோ அவற்றால் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. ஏன், அவற்றால் தமக்குத்தாமேகூட உதவி செய்து கொள்ள முடியாது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இணைவைத்து வணங்குவோரே!) அவனையன்றி நீங்கள் அழைக்கின்றீர்களே அத்தகையோர், உங்களுக்கு உதவி செய்ய சக்தி பெற மாட்டார்கள், தமக்குத்தாமே உதவி செய்து கொள்ளவும் மாட்டார்கள்.
Saheeh International
And those you call upon besides Him are unable to help you, nor can they help themselves."
وَاِنْ تَدْعُوْهُمْ اِلَی الْهُدٰی لَا یَسْمَعُوْا ؕ وَتَرٰىهُمْ یَنْظُرُوْنَ اِلَیْكَ وَهُمْ لَا یُبْصِرُوْنَ ۟
وَاِنْ تَدْعُوْநீர் அழைத்தால்هُمْஅவர்களைاِلَى الْهُدٰىநேர்வழிக்குلَا يَسْمَعُوْا‌ ؕசெவியுறமாட்டார்கள்وَتَرٰٮهُمْநீர் காண்கிறீர்/அவர்களைيَنْظُرُوْنَஅவர்கள் பார்ப்பவர்களாகاِلَيْكَஉம்மைوَهُمْஅவர்களோلَا يُبْصِرُوْنَ‏பார்க்க மாட்டார்கள்
வ இன் தத்'ஊஹும் இலல் ஹுதா லா யஸ்ம'ஊ வ தராஹும் யன்ளுரூன இலய்க வ ஹும் லா யுBப்ஸிரூன்
முஹம்மது ஜான்
நீங்கள் அவர்களை நேர் வழியின் பக்கம் அழைப்பீர்களானால், அவர்கள் கேட்கமாட்டார்கள். (நபியே!) அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் உமக்குத் தோன்றும்; ஆனால் அவர்கள் (உம்மைப்)பார்ப்பதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் அவற்றை நேரான பாதையில் அழைத்த போதிலும் (நீங்கள் கூறுவதை) அவை செவியுறாது. (நபியே!) அவை உம்மைப் பார்ப்பதைப்போல உமக்குத் தோன்றுகிறது. உண்மையில் அவை (உம்மைப்) பார்ப்பதே இல்லை.
IFT
மேலும், நீங்கள் அவற்றை நேரிய வழியில் வருமாறு அழைத்தால் உங்கள் பேச்சை அவற்றால் கேட்கவும் இயலாது. வெளித்தோற்றத்தில் அவை உம்மைப் பார்ப்பது போல் உமக்குத் தோன்றலாம்; ஆனால், உண்மையில் அவை (எதையும்) பார்ப்பதில்லை”.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் அவர்களை நேர்வழியின்பக்கம் அழைப்பீர்களானாலும், அதை அவர்கள் கேட்கமாட்டார்கள், (நபியே!) மேலும், அவர்களை உம்பால் அவர்கள் பார்ப்பதாக நீர் காண்பீர் (ஆனால்) அவர்களோ (உண்மையில் உம்மைப்) பார்ப்பதில்லை.
Saheeh International
And if you invite them to guidance, they do not hear; and you see them looking at you while they do not see.
خُذِ الْعَفْوَ وَاْمُرْ بِالْعُرْفِ وَاَعْرِضْ عَنِ الْجٰهِلِیْنَ ۟
خُذِபற்றிப் பிடிப்பீராகالْعَفْوَமன்னிப்பைوَاْمُرْஇன்னும் ஏவுவீராகبِالْعُرْفِநன்மையைக்கொண்டுوَاَعْرِضْஇன்னும் புறக்கணிப்பீராகعَنِ الْجٰهِلِيْنَ‏அறியாதவர்களை
குதில் 'அFப்வ வ முர் Bபில்'உர்Fபி வ அஃரிள் 'அனில் ஜாஹிலீன்
முஹம்மது ஜான்
எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவ்வறிவீனர்(களின் செயல்)களை நீர் மன்னித்துப் புறக்கணித்து விட்டு (பொறுமையையும் கைக்கொண்டு, மற்றவர்களை) நன்மை (செய்யும்படி) ஏவி வருவீராக.
IFT
(நபியே!) மென்மையையும், மன்னிக்கும் நடத்தையையும் மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும், அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் மன்னிப்பை எடுத்துக் கொள்வீராக! நன்மையை ஏவியும் வருவீராக! அறிவீனர்களைப் புறக்கணித்தும் விடுவீராக!
Saheeh International
Take what is given freely, enjoin what is good, and turn away from the ignorant.
وَاِمَّا یَنْزَغَنَّكَ مِنَ الشَّیْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِ ؕ اِنَّهٗ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
وَاِمَّا يَنْزَغَـنَّكَகுழப்பினால் / உம்மைمِنَ الشَّيْطٰنِஷைத்தானிடமிருந்துنَزْغٌஒரு குழப்பம்فَاسْتَعِذْபாதுகாப்புக் கோருவீராகبِاللّٰهِ‌ؕஅல்லாஹ்விடம்اِنَّهٗநிச்சயமாக அவன்سَمِيْعٌநன்கு செவியுறுபவன்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
வ இம்மா யன்Zஜகன்னக மினஷ் ஷய்தானி னZஜ்குன் Fபஸ்த'இத் Bபில்லாஹ்; இன்னஹூ ஸமீ'உன் அலீம்
முஹம்மது ஜான்
ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
ஷைத்தான் ஒரு (தவறான) எண்ணத்தை உமது மனதில் ஊசலாடச் செய்து (தகாததொரு காரியத்தைச் செய்யும்படி உம்மைத் தூண்டினால் உடனே நீர் உம்மை காப்பாற்றும்படி அல்லாஹ்விடம் கோருவீராக. நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன்.
IFT
எப்பொழுதேனும் ஷைத்தானிடமிருந்து ஊசலாட்டம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரும்! திண்ணமாக, அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஷைத்தானிலிருந்து ஓர் (சிறிய) ஊசலாட்டம் உமக்கு நிச்சயமாக ஊசாடுமானால் அல்லாஹ்வைக் கொண்டு நீர் காவல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவன் செவியுறுகிறவன், (யாவையும்) நன்கறிகிறவன்.
Saheeh International
And if an evil suggestion comes to you from Satan, then seek refuge in Allah. Indeed, He is Hearing and Knowing.
اِنَّ الَّذِیْنَ اتَّقَوْا اِذَا مَسَّهُمْ طٰٓىِٕفٌ مِّنَ الشَّیْطٰنِ تَذَكَّرُوْا فَاِذَا هُمْ مُّبْصِرُوْنَ ۟ۚ
اِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்கள்اتَّقَوْاஅஞ்சினார்கள்اِذَاபோதுمَسَّهُمْஅவர்களுக்கு ஏற்பட்டطٰۤٮِٕفٌஓர் எண்ணம்مِّنَஇருந்துالشَّيْطٰنِஷைத்தான்تَذَكَّرُوْاநினைவுகூருகிறார்கள்فَاِذَا هُمْஅப்போது அவர்கள்مُّبْصِرُوْنَ‌ۚ‏பார்த்துக் கொள்கிறார்கள்
இன்னல் லதீனத் தகவ் இதா மஸ்ஸஹும் தா'இFபுன் மினஷ் ஷய்தானி ததக்கரூ Fப இதா ஹும் முBப்ஸிரூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் - அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானுடைய (தவறான) எண்ணம் ஊசலாடினால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கிறார்கள்; அது சமயம் அவர்களுடைய (அறிவுக்) கண் திறந்து விழிப்படைந்து விடுகிறார்கள்.
IFT
உண்மையில், எவர்கள் இறையச்சத்துடன் வாழ்கின்றார்களோ, அவர்களுக்கு ஷைத்தானுடைய தாக்கத்தினால் ஏதேனும் தீய எண்ணம் ஏற்பட்டால் உடனே விழிப்படைந்து விடுவார்கள். அப்போது அவர்களுக்கு(ச் சரியான செயல்முறை எதுவென்பது) தெளிவாய்ப் புலப்பட்டு விடுகின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறார்களே அத்தகையோர்-அவர்களை ஷைத்தானுடைய (தவறான) எண்ணம் தொட்டால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைவு கூறிவிடுவார்கள், அது சமயம் அவர்கள் (கண் திறந்து) விழிப்படைந்தவர்கள் (ஆவர்).
Saheeh International
Indeed, those who fear Allah - when an impulse touches them from Satan, they remember [Him] and at once they have insight.
وَاِخْوَانُهُمْ یَمُدُّوْنَهُمْ فِی الْغَیِّ ثُمَّ لَا یُقْصِرُوْنَ ۟
وَاِخْوَانُهُمْஅவர்களுடைய சகோதரர்கள்يَمُدُّوْنَهُمْஅதிகப்படுத்துகிறார்கள்/அவர்களைفِى الْغَىِّவழிகேட்டில்ثُمَّபிறகுلَا يُقْصِرُوْنَ‏அவர்கள் குறைவு செய்வதில்லை
வ இக்வானுஹும் யமுத்தூனஹும் Fபில் கய்யி தும்ம லா யுக்ஸிரூன்
முஹம்மது ஜான்
ஆனால் ஷைத்தான்களின் சகோதரர்களோ அவர்களை வழி கேட்டிலேயே இழுத்துச் செல்வார்கள் - அவர்கள் (பாவத்தின் பாதையிலான தம் முயற்சியில்) யாதொரு குறையும் செய்ய மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும் ஷைத்தானுடைய சகோதரர்களோ அவர்களை வழி கேட்டிலேயே இழுத்துச் செல்வார்கள். (அவர்களுக்குத் தீங்கிழைப்பதில்) ஒரு குறைவும் செய்வதில்லை.
IFT
ஆனால், அவர்களின் (ஷைத்தான்களின்) சகோதரர்களையோ அவர்களின் வழிதவறிய போக்கிலேயே ஷைத்தான்கள் இழுத்துக்கொண்டு செல்கின்றார்கள். மேலும் அவர்களை வழிகெடுப்பதில் எந்தக் குறையும் வைப்பதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (ஷைத்தான்களாகிய) அவர்களின் சகோதரர்களோ, அவர்களை வழிகேட்டில் இழுத்துச் செல்வார்கள்; பின்னர் யாதொரு குறைவும் செய்யமாட்டார்கள்.
Saheeh International
But their brothers - they [i.e., the devils] increase them in error; then they do not stop short.
وَاِذَا لَمْ تَاْتِهِمْ بِاٰیَةٍ قَالُوْا لَوْلَا اجْتَبَیْتَهَا ؕ قُلْ اِنَّمَاۤ اَتَّبِعُ مَا یُوْحٰۤی اِلَیَّ مِنْ رَّبِّیْ ۚ هٰذَا بَصَآىِٕرُ مِنْ رَّبِّكُمْ وَهُدًی وَّرَحْمَةٌ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
وَاِذَا لَمْ تَاْتِهِمْநீர் வரவில்லையென்றால்/அவர்களிடம்بِاٰيَةٍஒரு வசனத்தைக் கொண்டுقَالُوْاகூறுகின்றனர்لَوْلَا اجْتَبَيْتَهَا‌ ؕநீர் அதை தேர்ந்தெடுத்திருக்க வேண்டாமா?قُلْகூறுவீராகاِنَّمَاۤ اَتَّبِعُநான் பின்பற்றுவதெல்லாம்مَاஎதைيُوْحٰٓىவஹீ அறிவிக்கப்படுகிறதுاِلَىَّஎனக்குمِنْ رَّبِّىْ ۚஎன் இறைவனிடமிருந்துهٰذَاஇவைبَصَآٮِٕرُதெளிவான ஆதாரங்கள், விளக்கங்கள்مِنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவன்وَهُدًىஇன்னும் நேர்வழிوَّ رَحْمَةٌஇன்னும் கருணைلِّقَوْمٍமக்களுக்குيُّؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்கிறார்கள்
வ இதா லம் த'திஹிம் Bபி ஆயதின் காலூ லவ் லஜ்தBபய் தஹா; குல் இன்னமா அத்தBபி'உ மா யூஹா இலய்ய மிர் ரBப்Bபீ; ஹாதா Bபஸா'இரு மிர் ரBப்Bபிகும் வ ஹுத(ன்)வ் வ ரஹ்மதுல் லிகவ்மி(ன்)ய் யு'மினூன்
முஹம்மது ஜான்
நீர் (அவர்களின் விருப்பப்படி) அவர்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வராவிட்டால், “நீர் இந்த அத்தாட்சியை ஏன் கொண்டு வரவில்லை?” என்று கேட்பார்கள்; (நீர் கூறும்:) நான் பின்பற்றுவதெல்லாம் என் இறைவனிடமிருந்து எனக்கு அறிவிக்கப்படுவதைத்தான்; (திருக்குர்ஆன் ஆகிய) இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த அறிவொளியாகவும், நேர்வழியாகவும், நல்லருளாகவும் இருக்கின்றது - நம்பிக்கை கொண்ட மக்களுக்கு.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்கள் விருப்பப்படி) ஒரு வசனத்தை நீர் அவர்களிடம் கொண்டு வராவிட்டால் (அதற்குப் பதிலாகத் தங்கள் விருப்பப்படி கற்பனையாக ஒரு வசனத்தை அமைத்து) ‘‘இதை நீர் வசனமாக எடுத்துக்கொள்ள வேண்டாமா?'' என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘என் இறைவனால் எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நான் பின்பற்றுகிறேன். இதுவோ உங்கள் இறைவனால் (உங்களுக்கு) அளிக்கப்பட்ட நல்லறிவாகவும், நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேர்வழியாகவும், (இறைவனின்) அருளாகவும் இருக்கிறது.
IFT
மேலும் (நபியே!) ஏதேனும் சான்றினை (முஃஜிஸா அற்புதத்தை) நீர் இவர்களுக்குச் சமர்ப்பிக்கவில்லையாயின் அவர்கள் கேட்கிறார்கள்: “நீர் உமக்காக ஒரு சான்றினை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை?” (அதற்கு) நீர் கூறும்: “என் இறைவனிடமிருந்து எனக்கு அனுப்பப்படுகின்ற வஹியை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன். இது உங்கள் இறைவனால் வழங்கப்பட்ட தெளிவான சான்றாகும். மேலும், (இதனை) நம்புகின்ற சமுதாயத்தாருக்கு இது நேர்வழி காட்டக்கூடியதாகவும், ஓர் அருளாகவும் இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், யாதொரு வசனத்தை நீர் அவர்களிடம் கொண்டுவராவிடில் அதனை நீர் (உம்புறத்திலிருந்தே) தேர்ந்தெடுத்திருக்கக் கூடாதா, என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர், அதற்கு (நபியே) நீர் கூறும் “நான் பின்பற்றுவதெல்லாம் என் இரட்சகனால் எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டவைகளைத்தான், இது உங்கள் இரட்சகனால் (உங்களுக்கு) அளிக்கப்பட்ட அறிவொளிகளாகவும், விசுவாசங்கொண்ட சமூகத்தார்க்கு நேர் வழியாகவும் (அல்லாஹ்வின்) அருளாகவும் இருக்கின்றது.
Saheeh International
And when you, [O Muhammad], do not bring them a sign [i.e., miracle], they say, "Why have you not contrived it?" Say, "I only follow what is revealed to me from my Lord. This [Qur’an] is enlightenment from your Lord and guidance and mercy for a people who believe."
وَاِذَا قُرِئَ الْقُرْاٰنُ فَاسْتَمِعُوْا لَهٗ وَاَنْصِتُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟
وَاِذَا قُرِئَஓதப்பட்டால்الْقُرْاٰنُகுர்ஆன்فَاسْتَمِعُوْاசெவி தாழ்த்துங்கள்لَهٗஅதற்குوَاَنْصِتُوْاஇன்னும் வாய்மூடுங்கள்لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‏நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக
வ இதா குரி'அல் குர்'ஆனு Fபஸ்தமி'ஊ லஹூ வ அன்ஸிதூ ல 'அல்லகும் துர்ஹமூன்
முஹம்மது ஜான்
குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள் - (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே!) திரு குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவிதாழ்த்தி அதைக் கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்) அருளை அடைவீர்கள்.
IFT
மேலும், குர்ஆன் (உங்கள் முன்) ஓதப்படும்போது அதனைக் கவனமாய்க் கேளுங்கள்; மௌனமாகவும் இருங்கள்! உங்கள் மீதும் அருள் பொழியப்படலாம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் (மனிதர்களே!) குர் ஆன் ஓதப்பட்டால் அதனை நீங்கள் செவிதாழ்த்திக் கேளுங்கள், வாய் பொத்தியும் இருங்கள், (அதனால்) நீங்கள் அருள் செய்யப்படலாம்.
Saheeh International
So when the Qur’an is recited, then listen to it and pay attention that you may receive mercy.
وَاذْكُرْ رَّبَّكَ فِیْ نَفْسِكَ تَضَرُّعًا وَّخِیْفَةً وَّدُوْنَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ وَلَا تَكُنْ مِّنَ الْغٰفِلِیْنَ ۟
وَاذْكُرْநினைவு கூருவீராகرَّبَّكَஉம் இறைவனைفِىْ نَفْسِكَஉம் மனதில்تَضَرُّعًاபணிந்துوَّخِيْفَةًஇன்னும் பயந்துوَّدُوْنَஇன்றிالْجَـهْرِசப்தம்مِنَ الْقَوْلِசொல்லில்بِالْغُدُوِّகாலையில்وَالْاٰصَالِஇன்னும் மாலையில்وَلَا تَكُنْஆகிவிடாதீர்مِّنَ الْغٰفِلِيْنَ‏கவனமற்றவர்களில்
வத்குர் ரBப்Bபக Fபீ னFப்ஸிக தளர்ரு'அ(ன்)வ் வ கீFபத(ன்)வ் வ தூனல் ஜஹ்ரி மினல் கவ்லி Bபில்குதுவ்வி வல் ஆஸலி வலா தகும் மினல் காFபிலீன்
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமது மனதிற்குள் மிகப் பணிவோடு, உரத்த சப்தமின்றி பயத்தோடு, மெதுவாக காலையிலும், மாலையிலும் உமது இறைவனை நினைவு செய்து கொண்டிருப்பீராக! அவனை மறந்தவர்களில் நீர் ஆகிவிடாதீர்!
IFT
மேலும் (நபியே!) காலையிலும், மாலையிலும் உம் இறைவனை நினைவுகூர்வீராக! உம் மனத்திற்குள் பணிவாகவும் அச்சத்துடனும் மேலும் மெதுவான குரலிலும்! மேலும் அலட்சியமாய் இருப்போர்களுள் நீரும் ஒருவராகி விடாதீர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், பயத்தோடும் (மெதுவாக) சொல்லில் உரத்த சப்தமின்றியும், காலையிலும் மாலையிலும் உமதிரட்சகனை நினைவு கூர்வீராக! (அவனை) மறந்திருப்போரில் நீர் ஆகியும் விடாதீர்.
Saheeh International
And remember your Lord within yourself in humility and in fear without being apparent in speech - in the mornings and the evenings. And do not be among the heedless.
اِنَّ الَّذِیْنَ عِنْدَ رَبِّكَ لَا یَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِهٖ وَیُسَبِّحُوْنَهٗ وَلَهٗ یَسْجُدُوْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்عِنْدَஇடம்رَبِّكَஉம் இறைவன்لَا يَسْتَكْبِرُوْنَபெருமையடிக்க மாட்டார்கள்عَنْ عِبَادَتِهٖஅவனை வணங்குவதைவிட்டுوَيُسَبِّحُوْنَهٗஇன்னும் துதிப்பார்கள்/அவனைوَلَهٗஅவனுக்கேيَسْجُدُوْنَ۩‏சிரம் பணிவார்கள்
இன்னல் லதீன 'இன்த ரBப்Bபிக லா யஸ்தக்Bபிரூன 'அன் 'இBபாததிஹீ வ யுஸBப்Bபிஹூனஹூ வ லஹூ யஸ்ஜுதூன்
முஹம்மது ஜான்
எவர்கள் உமது இறைவனிடத்தில் (நெருங்கி) இருக்கிறார்களோ; அவர்கள் நிச்சயமாக பெருமை கொண்டு அவனை வணங்காமல் இருப்பதில்லை. மேலும் அவனுடைய (புகழைக் கூறித்) துதித்துகொண்டும், அவனுக்குச் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்து கொண்டும் இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் நிச்சயமாக உமது இறைவனிடத்தில் இருக்கிறார்களோ அவர்கள் (வானவர்கள்) இறுமாப்பு கொண்டு அவனை வணங்காதிருப்பதில்லை. எனினும் ‘‘(நீ மிகப் பரிசுத்தமானவன்; நீ மிகப் பரிசுத்தமானவன்'' என்று) அவனை (எப்பொழுதும்) நினைவு செய்து கொண்டும், அவனுக்கு சிரம் பணிந்து (வணங்கிக்) கொண்டும் இருக்கின்றனர்.
IFT
உம் இறைவனிடத்தில் நெருக்கமாய் இருக்கும் வானவர்கள் அவனை வணங்காமல் புறக்கணித்துத் தற்பெருமை கொள்வதில்லை. மாறாக அவனை அவர்கள் துதிக்கிறார்கள். அவனின் திருமுன்னர் மட்டுமே பணிகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக உமதிரட்சகனிடத்தில் இருக்கின்றார்களே அத்தகையவர்கள், அவனை வணங்குவதில் இறுமாப்புக் கொள்ள மாட்டார்கள், இன்னும், அவனை (எப்பொழுதும்) துதி செய்து கொண்டும், அவனுக்குச் சிரம்பணிந்து (வணங்கிக்) கொண்டும் இருப்பர்.
Saheeh International
Indeed, those who are near your Lord [i.e., the angels] are not prevented by arrogance from His worship, and they exalt Him, and to Him they prostrate.