يُّبَصَّرُوْنَهُمْؕஅவர்கள் அவர்களை காண்பிக்கப்படுவார்கள்يَوَدُّஆசைப்படுவான்الْمُجْرِمُகுற்றவாளிلَوْ يَفْتَدِىْஈடாக கொடுக்க வேண்டுமேمِنْ عَذَابِதண்டனையிலிருந்துيَوْمِٮِٕذٍۢஅந்நாளின்بِبَنِيْهِۙதன் பிள்ளைகளை
யுBபஸ்ஸரூனஹும்; ய வத்துல் முஜ்ரிமு லவ் யFப்ததீ மின் 'அதாBபி யவ்ம'இதிம் BபிBபனீஹ்
முஹம்மது ஜான்
அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்; தன் மக்களையும்-
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கொள்வார்கள். குற்றவாளி, அந்நாளில் தன் வேதனைக்குப் பரிகாரமாகத் தன் பிள்ளைகளையும்,
IFT
ஆனால், அவர்கள் ஒருவர் மற்றவருக்குக் காண்பிக்கப்படுவார்கள். குற்றவாளி அந்நாளின் வேதனையிலிருந்து தப்புவதற்காகத் தன் பிள்ளைகளையும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் (தங்களின் நண்பர்களுக்குக்) காண்பிக்கப்படுவர், (எனினும் ஒருவர் மற்றவரைப்பற்றி கேட்டுக் கொள்ளமாட்டார்; ஒருவரை ஒருவர் அறியாதவர் போன்று வெருண்டோடுவா்.) அந்நாளுடைய வேதனையிலிருந்து (தன்னைக் காப்பாற்றிக்கொள்ள) குற்றவாளி தன்னுடைய மக்களை ஈடாகக்கொடுக்க விரும்புவான்.
Saheeh International
They will be shown each other. The criminal will wish that he could be ransomed from the punishment of that Day by his children.
தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், தங்கள் மனைவிகளிடத்திலும், தங்கள் அடிமைப் பெண்களிடத்திலும் தவிர. நிச்சயமாக அவர்கள் (இவர்களுடன் சம்பந்தப்படுவதைப் பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.
IFT
அவர்களுடைய மனைவியரிடமோ அடிமைப் பெண்களிடமோ தவிர! அவ்வாறு அவர்களிடம் அவற்றைப் பாதுகாக்காமல் இருப்பதால் அவர்கள் பழிப்புக்குரியவர்கள் அல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தங்கள் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் தவிர அப்போது நிச்சயமாக அவர்கள் நிந்திக்கப்பட்டவர்களல்லர்.
Saheeh International
Except from their wives or those their right hands possess, for indeed, they are not to be blamed -
اَيَطْمَعُஆசைப்படுகின்றானா?كُلُّஒவ்வொருامْرِىءٍமனிதனும்مِّنْهُمْஅவர்களில்اَنْ يُّدْخَلَநுழைக்கப்பட வேண்டும் என்றுجَنَّةَசொர்க்கத்தில்نَعِيْمٍۙஇன்பம் நிறைந்த
ஆகவே, அவர்களுக்கு வாக்களிக்கப் பட்ட அந்த நாளை அவர்கள் சந்திக்கும் வரையில், அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கவும் (வீணானவற்றில்) மூழ்கிக் கிடக்கவும், அவர்களை நீர் விட்டுவிடுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே!) அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளை அவர்கள் சந்திக்கும் வரை, அவர்கள் விளையாடிக்கொண்டும், (வீண் காரியங்களில்) ஆழ்ந்து கிடக்குமாறும் அவர்களை நீர் விட்டுவிடுவீராக.
IFT
எனவே இவர்களை இவர்களுடைய அபத்தமான பேச்சுக்களிலும் விளையாட்டிலும் வீழ்ந்து கிடக்குமாறு நீர் விட்டுவிடும்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளினை இவர்கள் அடையும் வரை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே, நபியே!) அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளை அவர்கள் சந்திக்கும் வரை வீண் காரியங்களில் மூழ்கியும் விளையாடிக் கொண்டுமிருக்கவும் அவர்களை நீர் விட்டு விடுவீராக!
Saheeh International
So leave them to converse vainly and amuse themselves until they meet their Day which they are promised -
நிச்சயமாக அவர்கள் (தாங்கள் ஆராதனை செய்யும்) எல்லைக் கற்களின்பால் விரைந்து செல்பவர்களைப் போல் அந்நாளில் (தங்கள்) மண்ணறைகளிலிருந்து விரைவாக வெளியாவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்களுக்கு ஒரு நாளை நீர் ஞாபகமூட்டுவீராக. (சிலை வணங்குபவர்கள் தங்கள் திருநாள்களில் பூஜைக்காக நட்டுவைக்கப்பட்ட) கொடிகளின் பக்கம் விரைந்தோடுவதைப் போலவே, சமாதிகளிலிருந்து வெளிப்பட்டு (ஹஷ்ருடைய மைதானத்திற்கு) வெகு தீவிரமாகச் செல்வார்கள்.
IFT
இவர்கள் தங்களுடைய மண்ணறைகளிலிருந்து வெளி யேறி ஓடிக்கொண்டிருக்கும் நாளில் தங்கள் தெய்வச் சிலைகளின் ஆலயங்களை நோக்கி விரைவாக ஓடுவதைப்போல;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இணைவைப்போர்) நடப்பட்டவைக(ளான சிலைக)ளின் பால் விரைந்து செல்பவர்களைப்போன்று மண்ணறைகளிலிருந்து விரைந்தவர்களாக அவர்கள் வெளியேறி வரும்நாள்,
Saheeh International
The Day they will emerge from the graves rapidly as if they were, toward an erected idol, hastening.
அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியிருக்கும்; இழிவு அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும்; அவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்களே அது அந்த நாள்தான்.
அப்துல் ஹமீது பாகவி
(அந்நாளில்) பயந்த பார்வையுடன் ஓடுவார்கள். இழிவும் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். (நபியே!) இந்நாள்தான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும்.
IFT
இவர்களின் பார்வைகள் தாழ்ந்துவிட்டிருக்கும்; இழிவு இவர்களைக் கவ்வியிருக்கும்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்தது அந்நாளே ஆகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுடைய பார்வை கீழ்நோக்கியவையாக (இருக்கும் நிலையில்) இழிவு அவர்களைச் சூழ்ந்து கொள்ளும், (நபியே!) அது அவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்களே அத்தகைய நாளாகும்.
Saheeh International
Their eyes humbled, humiliation will cover them. That is the Day which they had been promised.