நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாரிடம்: “நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக” என (ரஸூலாக) அனுப்பினோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய மக்களிடம் (நம்) தூதராக அனுப்பிவைத்து, (அவரை நோக்கி) ‘‘நீர் உமது மக்களுக்குத் துன்புறுத்தும் வேதனை வருவதற்கு முன்னதாகவே, அவர்களுக்கு அதைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக'' என்று கட்டளையிட்டோம்.
IFT
நாம் நூஹை இந்த ஏவுரையுடன் அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். உம்முடைய சமுதாயத்தை எச்சரிப்பீராக; துன்புறுத்தும் வேதனை அவர்களிடம் வருவதற்கு முன்பாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தவரின்பால் “துன்புறுத்தும் வேதனை அவர்களுக்கு வரும் முன், உம்முடைய சமூகத்தினருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!” என்று (தூதராக) நாம் அனுப்பி வைத்தோம்.
Saheeh International
Indeed, We sent Noah to his people, [saying], "Warn your people before there comes to them a painful punishment."
يَغْفِرْஅவன் மன்னிப்பான்لَـكُمْஉங்களுக்குمِّنْ ذُنُوْبِكُمْஉங்கள் பாவங்களைوَيُؤَخِّرْكُمْஇன்னும் அவன் உங்களுக்கு அவகாசம் அளிப்பான்اِلٰٓى اَجَلٍதவணை வரைمُّسَمًّىؕகுறிப்பிட்டاِنَّநிச்சயமாகاَجَلَதவணைاللّٰهِஅல்லாஹ்வின்اِذَا جَآءَவந்துவிட்டால்لَا يُؤَخَّرُۘஅது பிற்படுத்தப்படாதுلَوْ كُنْتُمْ تَعْلَمُوْنَநீங்கள் அறிபவர்களாக இருக்க வேண்டுமே!
யக்Fபிர் லகும் மின் துனூBபிகும் வ யு'அக்கிர்கும் இலா அஜலிம் முஸம்மா; இன்னா அஜலல் லாஹி இதா ஜா'அ லா யு'அக்கர்; லவ் குன்தும் தஃலமூன்
முஹம்மது ஜான்
“(இவ்வாறு நீங்கள் நடந்தால்) உங்களுடைய பாவங்களை அவன் மன்னிப்பான்; மேலும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவன் உங்களுக்கு அவகாசமளிப்பான்; நிச்சயமாக அல்லாஹ்வின் தவணை வரும்போது, அது பிற்படுத்தப்படமாட்டாது - (இதை) நீங்கள் அறிந்து கொண்டவர்களாக இருந்தால்” (என்றும் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறு நீங்கள் நடந்தால், அல்லாஹ்) உங்கள் குற்றங்களை மன்னித்து, குறிப்பிட்ட காலம் வரை உங்களை (அமைதியாக வாழ) விட்டு வைப்பான். நிச்சயமாக (வேதனைக்காகக் குறிப்பிடப்பட்ட) அல்லாஹ்வுடைய தவணை வரும் சமயத்தில், அது ஒரு சிறிதும் பிந்தாது (இதை) நீங்கள் உறுதியாக நம்ப வேண்டாமா?''
IFT
அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான். மேலும், ஒரு நிர்ணயிக்கப்பட்ட காலம் வரையில் உங்களை விட்டு வைப்பான். திண்ணமாக அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட நேரம் வந்துவிட்டால் அது ஒத்தி வைக்கப்பட மாட்டாது. அந்தோ, இதை நீங்கள் அறிந்திருக்க வேண்டுமே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(அவ்வாறு நீங்கள் நடந்தால்) உங்களுடைய குற்றங்களை உங்களுக்கு அவன் மன்னிப்பான், இன்னும், குறிப்பிடப்பட்ட காலம் வரையில் உங்களை (அமைதியாக வாழவிட்டு)ப் பிற்ப்படுத்தி வைப்பான், நிச்சயமாக அல்லாஹ்வுடைய தவணை-அது வந்துவிடுமானால் அது பிற்படுத்தப்படமாட்டாது, (இதனை) நீங்கள் அறிந்து கொண்டவர்களாக இருந்தால்” (என்றும் கூறினார்).
Saheeh International
He [i.e., Allah] will forgive you of your sins and delay you for a specified term. Indeed, the time [set by] Allah, when it comes, will not be delayed, if you only knew."
பின்னர் அவர்: “என் இறைவா! நிச்சயமாக, நான் என் சமூகத்தாரை இரவிலும், பகலிலும் (நேர்வழியின்பால்) அழைத்தேன்.
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறு அவர் எவ்வளவோ காலம் கூறியும் அவர்கள் அதை மறுத்து அவரைப் புறக்கணித்து விடவே, அவர் தன் இறைவனை நோக்கி) கூறினார்: ‘‘என் இறைவனே! நிச்சயமாக நான் என் மக்களை இரவு பகலாக அழைத்தேன்.
IFT
அவர் பணிந்து கூறினார்: “என் அதிபதியே! நான் என் சமூகத்தினருக்கு இரவு பகலாக அழைப்பு விடுத்தேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர் நீண்ட காலம் ஏகத்துவப்பிரச்சாரம் செய்தும் அவரைப் புறக்கணித்து விடவே,) “என் இரட்சகனே! நிச்சயமாக நான் என்னுடைய சமூகத்தாரை (உன் வழியில்) இரவிலும், பகலிலும் அழைத்தேன்” என்று கூறினார்.
Saheeh International
He said, "My Lord, indeed I invited my people [to truth] night and day.
“அன்றியும்: நீ அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதற்காக, (உன் பக்கம்) நிச்சயமாக அவர்களை நான் அழைத்தபோதெல்லாம், தம் காதுகளில் தம் விரல்களை வைத்துக் கொண்டனர்; மேலும், தங்களைத் தம் ஆடைகளைக் கொண்டு மூடிக் கொண்டனர், அன்றியும், அவர்கள் (தம் வழிகேட்டில்) பிடிவாதமாகவும்; பெரும் மமதை பெருமையடித்துக் கொள்வோராகவுமே இருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நீ அவர்களுக்கு மன்னிப்பளிக்க (உன் பக்கம்) நான் அவர்களை அழைத்த போதெல்லாம், தங்கள் காதுகளில் தங்கள் விரல்களைப் புகுத்தி அடைத்துக் கொண்டு, (என்னைப் பார்க்காது) தங்கள் ஆடைகளைக் கொண்டும் தங்களை மறைத்துக் கொண்டார்கள். பெரும் அகங்காரம் கொண்டு, (தங்கள் தவறின் மீதே பிடிவாதமாக) நிலைத்திருந்தார்கள்.
IFT
மேலும், நீ அவர்களை மன்னிக்க வேண்டும் என்பதற்காக நான் அவர்களை அழைத்த போதெல்லாம் அவர்கள் காதுகளில் விரல்களைத் திணித்துக் கொண்டார்கள். மேலும், தம் துணிகளால் முகத்தை மூடிக்கொண்டார்கள். மேலும், தம்முடைய தவறான நடத்தையில் பிடிவாதமாய் இருந்தார்கள். மிகவும் அகம்பாவம் கொண்டிருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக நான்-“அவர்களுக்கு நீ மன்னிப்பளிப்பதற்காக (உன்பால்) நான் அவர்களை அழைத்த பொழுதெல்லாம் (அதைக்கேட்காதிருக்க) தங்களுடைய காதுகளில் தங்களுடைய விரல்களை விட்டுக்கொண்டார்கள், (என்னைப் பார்க்காதிருக்க) தங்கள் ஆடைகளைக் கொண்டு தங்(களின் முகங்க)ளை மூடிக்கொண்டுமிருந்தனர், மேலும், (தங்கள் தவறின் மீதே பிடிவாதமாக) நிலைத்திருந்தனர், பெரும் அகந்தையாகவும் அகந்தை கொண்டனர்.
Saheeh International
And indeed, every time I invited them that You may forgive them, they put their fingers in their ears, covered themselves with their garments, persisted, and were arrogant with [great] arrogance.
“செல்வங்களையும், ஆண் மக்களையும் (கொடுப்பது) கொண்டு, உங்களுக்கு உதவி புரிவான், உங்களுக்காகத் தோட்டங்களையும் ஆக்குவான், உங்களுக்காக ஆறுகளையும் (அவற்றில்) ஆக்குவான்”
Saheeh International
And give you increase in wealth and children and provide for you gardens and provide for you rivers.
நூஹ் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர்; அன்றியும், எவர்களுக்கு அவர் பொருளும், அவர் மக்களும் நஷ்டத்தையன்றி (வேறு எதையும்) அதிகரிக்கவில்லையோ, அ(த்தகைய)வர்களையே அவர்கள் பின்பற்றுகின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(பின்னர் நூஹ் நபி தன் இறைவனை நோக்கி) கூறினார்: ‘‘என் இறைவனே! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர். பொருள்களும் சந்ததிகளும் எவர்களுக்கு நஷ்டத்தை தவிர வேறு எதையும் அதிகப்படுத்தவில்லையோ, அவர்களையே பின்பற்றுகின்றனர்.
IFT
நூஹ் கூறினார்: “என் அதிபதியே! இவர்கள் என் பேச்சை நிராகரித்து விட்டார்கள். மேலும், இவர்கள் சில (தலைவ)ர்களைப் பின்பற்றியுள்ளார்கள். அந்தத் தலைவர்களுக்குத் தங்கள் செல்வமும் பிள்ளைகளும் அதிக நஷ்டத்தைத் தவிர வேறு எந்தப் பயனையும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பின்னும்) நூஹ் கூறினார், “என் இரட்சகனே! நிச்சயமாக அவர்கள் என(து கட்டளை)க்கு மாறு செய்து விட்டனர், அன்றியும், எவருக்கு அவருடைய செல்வமும், அவருடைய மக்களும் நஷ்டத்தைத்தவிர வேறு எதையும் அதிகப்படுத்தவில்லையோ, அவரையே அவர்கள் பின்பற்றினர்”.
Saheeh International
Noah said, "My Lord, indeed they have disobeyed me and followed him whose wealth and children will not increase him except in loss.
மேலும் அவர்கள்: “உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள்; இன்னும் வத்து, ஸுவாஉ, யகூஸு, யஊக், நஸ்ரு ஆகியவற்றை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்” என்றும் சொல்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(மற்றவர்களை நோக்கி) நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள். ‘வத்' (என்னும் விக்கிரகத்)தையும் விடாதீர்கள். ‘ஸுவாஉ' ‘எகூஸ்' ‘யஊக்' ‘நஸ்ர்' (ஆகிய விக்கிரகங்)களையும் விட்டுவிடாதீர்கள்'' என்று கூறுகின்றனர்,
IFT
“உங்களுடைய கடவுள்களை விட்டுவிடாதீர்கள். வத், ஸுவாஉ, யஃகூஸ், யஊஃக் மற்றும் நஸ்ர் ஆகியவற்றை விட்டுவிடாதீர்கள்” என்று இவர்கள் கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“மேலும், அவர்கள் (தம் சமூகத்தாரிடம்) உங்களுடைய (வணக்கத்திற்குரிய) தெய்வங்களை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள், வத்து ஸுவாஉ, எகூஸ், யஊக், நஸ்ர், (ஆகிய விக்கிரகங்)களையும் நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்” என்றும் கூறினார்கள்.
Saheeh International
And said, 'Never leave your gods and never leave Wadd or Suwaʿ or Yaghūth and Yaʿūq and Nasr.'
وَقَدْதிட்டமாகاَضَلُّوْاஅவர்கள் வழி கெடுத்தனர்كَثِيْرًا ۚபலரைوَلَا تَزِدِநீ அதிகப்படுத்தாதே!الظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களுக்குاِلَّا ضَلٰلًاவழிகேட்டைத் தவிர
“நிச்சயமாக அவர்கள் அநேகரை வழிகெடுத்துவிட்டனர்; ஆகவே இவ்வநியாயக் காரர்களுக்கு வழி கேட்டைத் தவிர, வேறு எதையும் நீ அதிகப்படுத்தாதே.”
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக பலரை வழிகெடுத்து விட்டனர். (ஆகவே, என் இறைவனே!) இந்த அநியாயக்காரர்களுக்கு வழிகேட்டைத் தவிர வேறு எதையும் நீ அதிகப்படுத்தி விடாதே!'' (என்றும் பிரார்த்தித்தார்).
IFT
இவர்கள் பலரை வழிகெடுத்திருக்கின்றார்கள். நீயும் இந்தக் கொடுமையாளர்களுக்கு வழிகேட்டைத் தவிர வேறு எதிலும் முன்னேற்றத்தை அளிக்காதே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக அவர்கள் அநேகரை வழி கெடுத்தும் விட்டனர், (ஆகவே, என் இரட்சகனே!) அநியாயக்காரர்களுக்கு வழிக்கேட்டைத் தவிர வேறு எதையும் நீ அதிகப்படுத்தி விடாதே!” (என்றும் பிரார்த்தித்தார்.)
Saheeh International
And already they have misled many. And, [my Lord], do not increase the wrongdoers except in error."
ஆகவே, அவர்கள் தம் பாவங்களினால் மூழ்கடிக்கப்பட்டு, பின்னால் நரக நெருப்பிலும் புகுத்தப்பட்டனர். எனவே, அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு உதவி செய்வோரை அவர்கள் காணவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்த பாவத்தின் காரணமாக, (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடிக்கப்பட்டு, பின்னர் நரகத்திலும் புகுத்தப்பட்டனர். அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவி செய்பவர்களை அவர்கள் காணவில்லை.
IFT
தங்கள் தவறுகளின் காரணத்தால்தான் அவர்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டார்கள்; மேலும், நெருப்பில் வீசி எறியப்பட்டார்கள். பின்பு அல்லாஹ்விடமிருந்து தங்களைக் காப்பாற்றி உதவுவோர் எவரையும் அவர்கள் பெற்றிடவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர்களுடைய பாவங்களின் காரணமாக (பெரு வெள்ளத்தில்) அவர்கள் மூழ்கடிக்கப்பட்டு, (பின்னர்) நரகத்திலும் புகுத்தப்பட்டனர், அல்லாஹ்வைத் தவிர அவர்களுக்கு உதவி செய்வோரை அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை.
Saheeh International
Because of their sins they were drowned and put into the Fire, and they found not for themselves besides Allah [any] helpers.
“நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால். உன் அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்; அன்றியும், பாவிகளையும், காஃபிர்களையும் அன்றி அவர்கள் பெற்றெடுக்கமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால், உன் (மற்ற) அடியார்களையும் வழிகெடுத்தே விடுவார்கள். பாவிகளையும் நிராகரிப்பவர்களையும் தவிர, (வேறொரு குழந்தையை) அவர்கள் பெற்றெடுக்க மாட்டார்கள்.
IFT
நீ இவர்களைவிட்டு வைத்தால் இவர்கள் உன் அடிமைகளை வழிகெடுத்து விடுவார்கள். மேலும் இவர்களின் சந்ததியில் யார் பிறந்தாலும் தீயவனாகவும் நிராகரிப் பாளனாகவும்தான் இருப்பான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நீ அவர்களை விட்டுவைத்தால் உன்னுடைய (மற்ற) அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள், நிராகரிக்கின்ற பாவியைத் தவிர (வேறு நல்லவர் எவரையும்) அவர்கள் பெற்றெடுக்கவுமாட்டார்கள்” (என்றும்)
Saheeh International
Indeed, if You leave them, they will mislead Your servants and not beget except [every] wicked one and [confirmed] disbeliever.
رَبِّஎன் இறைவா!اغْفِرْلِىْஎன்னை(யும்) மன்னிப்பாயாக!وَلِـوَالِدَىَّஎன் பெற்றோரையும்وَلِمَنْ دَخَلَநுழைந்து விட்டவரையும்بَيْتِىَஎன் வீட்டில்مُؤْمِنًاநம்பிக்கையாளராகوَّلِلْمُؤْمِنِيْنَநம்பிக்கை கொண்ட ஆண்களையும்وَالْمُؤْمِنٰتِؕநம்பிக்கை கொண்ட பெண்களையும்وَلَا تَزِدِஅதிகப்படுத்தாதே!الظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களுக்குاِلَّا تَبَارًاஅழிவைத் தவிர
“என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே” (என்றும் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
என் இறைவனே! எனக்கும் என் தாய் தந்தைக்கும், நம்பிக்கை கொண்டவராக என் வீட்டில் நுழைந்தவருக்கும், (வீட்டில் நுழையாத மற்ற) நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் நீ மன்னித்தருள் புரிவாயாக! இந்த அநியாயக்காரர்களுக்கு அழிவைத் தவிர நீ அதிகப்படுத்தாதே!''
IFT
என் அதிபதியே! எனக்கும் என் தாய் தந்தையருக்கும், என் வீட்டில் இறைநம்பிக்கை கொண்டவனாக நுழைந்திருக்கும் ஒவ்வொருவனுக்கும், மேலும், நம்பிக்கை கொண்ட ஆண் பெண்கள் அனைவருக்கும் நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், கொடுமைக்காரர்களுக்கு அதிக அழிவைத் தவிர வேறு எதையும் கொடுக்காதே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என் இரட்சகனே! எனக்கும், என்னுடைய பெற்றோருக்கும், விசுவாசம் கொண்டவராக என்னுடைய வீட்டில் நுழைந்தவருக்கும் விசுவாசங்கொண்ட ஆண்களுக்கும், விசுவாசங்கொண்ட பெண்களுக்கும் நீ மன்னிப்பளிப்பாயாக! இந்த அநியாயக்காரர்களுக்கு அழிவையே தவிர (வேறு எதையும்) நீ அதிகப்படுத்தாதிருப்பாயாக!” (என்றும் பிரார்த்தித்தார்.)
Saheeh International
My Lord, forgive me and my parents and whoever enters my house a believer and the believing men and believing women. And do not increase the wrongdoers except in destruction."