73. ஸூரத்துல் முஸ்ஸம்மில் (போர்வை போர்த்தியவர்)

மக்கீ, வசனங்கள்: 20

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
یٰۤاَیُّهَا الْمُزَّمِّلُ ۟ۙ
يٰۤاَيُّهَا الْمُزَّمِّلُۙ‏போர்வை போர்த்தியவரே!
யா அய்யுஹல் முZஜ்Zஜம்மில்
முஹம்மது ஜான்
போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!
அப்துல் ஹமீது பாகவி
போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!
IFT
போர்த்திக் கொண்டு படுத்திருப்பவரே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!
Saheeh International
O you who wraps himself [in clothing]
قُمِ الَّیْلَ اِلَّا قَلِیْلًا ۟ۙ
قُمِ الَّيْلَஇரவில் எழுவீராக!اِلَّاதவிரقَلِيْلًا ۙ‏குறைந்த நேரத்தை
குமில் லய்ல இல்லா கலீலா
முஹம்மது ஜான்
இரவில் - சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக;
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இரவில் நீர் (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக. (முழு இரவிலுமல்ல; அதிலொரு) சொற்ப பாகம். (அதாவது:)
IFT
இரவில் எழுந்து தொழுவீராக; ஆனால் கொஞ்ச நேரம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இரவில் (தொழுவதற்காக) எழுவீராக! சொற்ப (நேர)ம் தவிர-
Saheeh International
Arise [to pray] the night, except for a little -
نِّصْفَهٗۤ اَوِ انْقُصْ مِنْهُ قَلِیْلًا ۟ۙ
نِّصْفَهٗۤஅதன் பாதியில்اَوِ انْقُصْஅல்லது குறைப்பீராக!مِنْهُஅதில்قَلِيْلًا ۙ‏கொஞ்சம்
னிஸ்Fபஹூ அவின்குஸ் மின்ஹு கலீலா
முஹம்மது ஜான்
அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக!
அப்துல் ஹமீது பாகவி
அதில் பாதி (நேரம்). அதில் நீர் சிறிது குறைத்தும் கொள்ளலாம்;
IFT
அதாவது, பாதி இரவு அல்லது அதைவிடச் சற்று குறைவாகவோ
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதில் பாதி, (நேரத்தில் தொழுவீராக!) அல்லது அதிலிருந்து சொற்ப (நேர)த்தைக் குறைத்துக் கொள்வீராக!
Saheeh International
Half of it - or subtract from it a little
اَوْ زِدْ عَلَیْهِ وَرَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِیْلًا ۟ؕ
اَوْஅல்லதுزِدْஅதிகப்படுத்துவீராக!عَلَيْهِஅதற்கு மேல்وَرَتِّلِஇன்னும் நிறுத்தி நிதானமாக ஓதுவீராக!الْقُرْاٰنَகுர்ஆனைتَرْتِيْلًا ؕ‏நிறுத்தி நிதானமாக ஓதுதல்
அவ் Zஜித் 'அலய்ஹி வ ரத்திலில் குர்'ஆன தர்தீலா
முஹம்மது ஜான்
அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக; மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
அல்லது அதில் சிறிது கூட்டியும் கொள்ளலாம். (அதில்) இந்த குர்ஆனை நன்கு திருத்தமாக ஓதுவீராக.
IFT
அல்லது கூடுதலாகவோ (தொழுவீராக!) மேலும், குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது அதை விட (ச்சற்று நேரத்தை) அதிகப்படுத்திக் கொள்வீராக! (இரவுத் தொழுகையான) அதில் குர் ஆனை (நன்கு திருத்தமாக) நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக!
Saheeh International
Or add to it, and recite the Qur’an with measured recitation.
اِنَّا سَنُلْقِیْ عَلَیْكَ قَوْلًا ثَقِیْلًا ۟
اِنَّاநிச்சயமாக நாம்سَنُلْقِىْஇறக்குவோம்عَلَيْكَஉம்மீதுقَوْلًاவேதத்தைثَقِيْلًا‏மிக கனமான
இன்னா ஸனுல்கீ 'அலய்க கவ்லன் தகீலா
முஹம்மது ஜான்
நிச்சயமாக, நாம் விரைவில் கனமான உறுதியான - ஒரு வாக்கை உம்மீது இறக்கி வைப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் அதிசீக்கிரத்தில், மிக உறுதியான ஒரு வார்த்தையை உம் மீது இறக்கிவைப்போம்.
IFT
திண்ணமாக, நாம் உம் மீது கன மானதொரு வாக்கை இறக்கப் போகின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, நாம் அடுத்து பளுவான வாக்கை உம்மீது போடுவோம். (வஹீயின் மூலம் அறிவிப்போம்.)
Saheeh International
Indeed, We will cast upon you a heavy word.
اِنَّ نَاشِئَةَ الَّیْلِ هِیَ اَشَدُّ وَطْاً وَّاَقْوَمُ قِیْلًا ۟ؕ
اِنَّநிச்சயமாகنَاشِئَةَவணக்கம்الَّيْلِஇரவுهِىَஅதுதான்اَشَدُّமிகவும் வலுவானوَطْـاًதாக்கமுடையது(ம்)وَّاَقْوَمُமிகத் தெளிவானதும்قِيْلًا ؕ‏அறிவுரையால்
இன்ன் னாஷி'அதல் லய்லி ஹிய அஷத்த்து வத் அ(ன்)வ் வ அக்வமு கீலா
முஹம்மது ஜான்
நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இரவில் எழுந்திருப்பது, (ஆத்மாவை) மிக அதிகம் பழக்கி, (அடக்கி வைப்பதுடன்) எதையும் உள்ளமும், நாவும் ஒத்துக் கூறும்படியும் செய்கிறது.
IFT
உண்மையில், இரவில் எழுந்திருப்பது மனத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாகவும் (குர்ஆனை) நேர்த்தியாக ஓதுவதற்கு மிகவும் ஏற்றதாகவும் இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இரவில் (வணக்கத்தை நிறைவேற்ற) எழுவதானது_ அதுவே (மனமும் நாவும்) ஒன்றிணைந்திருக்க மிக்க உறுதியானதும், மேலும் கூற்றால் மிக்க உறுதியானதுமாகும்.
Saheeh International
Indeed, the hours of the night are more effective for concurrence [of heart and tongue] and more suitable for words.
اِنَّ لَكَ فِی النَّهَارِ سَبْحًا طَوِیْلًا ۟ؕ
اِنَّநிச்சயமாகلَـكَஉமக்குفِى النَّهَارِபகலில்سَبْحًا طَوِيْلًا ؕ‏நீண்ட பணிகள்
இன்ன லக Fபின் னஹாரி ஸBப்ஹன் தவீலா
முஹம்மது ஜான்
நிச்சயமாகப் பகலில் உமக்கு நெடிய (கடினமான) வேலைகள் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக உமக்குப் பகலில் நீண்ட வேலைகள் இருக்கின்றன.
IFT
பகல் நேரங்களிலோ உமக்கு நிறையப் பணிகள் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக உமக்குப் பகலில் நீண்ட வேலை இருக்கின்றது.
Saheeh International
Indeed, for you by day is prolonged occupation.
وَاذْكُرِ اسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ اِلَیْهِ تَبْتِیْلًا ۟ؕ
وَاذْكُرِஇன்னும் நினைவு கூறுவீராகاسْمَபெயரைرَبِّكَஉமது இறைவனின்وَتَبَتَّلْஇன்னும் ஒதுங்கிவிடுவீராக!اِلَيْهِஅவன் பக்கம்تَبْتِيْلًا ؕ‏முற்றிலும் ஒதுங்குதல்
வத்குரிஸ் ம ரBப்Bபிக வ தBபத்தல் இலய்ஹி தBப்தீலா
முஹம்மது ஜான்
எனினும் (இரவிலும், பகலிலும்) உம்முடைய இறைவனின் பெயரை தியானிப்பீராக! இன்னும் அவனளவிலேயே முற்றிலும் திரும்பியவராக இருப்பீராக.
அப்துல் ஹமீது பாகவி
நீர் (அவற்றில் இருந்து ஓய்வுபெற்று) அவனளவில் முற்றிலும் திரும்பி, அவனுடைய திருப்பெயரை நினைவு செய்து கொண்டிருப்பீராக!
IFT
உம் இறைவனின் பெயரை நினைவுகூர்ந்து கொண்டிருப்பீராக! மேலும், அனைத்தையும் விட்டு அவனுக்காகவே ஆகிவிடுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், உமதிரட்சகனின் பெயரை நினைவு கூர்வீராக! (அவனுக்கே வணக்கத்தையும், பிரார்த்தனையையும் ஆக்கி) அவன்பால் முற்றிலும் ஆகிவிடுவீராக!
Saheeh International
And remember the name of your Lord and devote yourself to Him with [complete] devotion.
رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ فَاتَّخِذْهُ وَكِیْلًا ۟
رَبُّஇறைவன்الْمَشْرِقِகிழக்குوَالْمَغْرِبِஇன்னும் மேற்கின்لَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّا هُوَஅவனைத் தவிரفَاتَّخِذْهُஆகவே அவனையே ஆக்கிக் கொள்வீராக!وَكِيْلًا‏பொறுப்பாளனாக
ரBப்Bபுல் மஷ்ரிகி வல் மக்ரிஇBபி லா இலாஹ இல்லா ஹுவ Fபத்தகித்ஹு வகீலா
முஹம்மது ஜான்
(அவனே) கிழக்கிற்கும், மேற்கிற்கும் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை; ஆகவே அவனையே நீர் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்வீராக.
அப்துல் ஹமீது பாகவி
அவனே கீழ் திசைக்கும் மேல் திசைக்கும் எஜமான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. ஆகவே, அவனையே நீர் (உமது) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்வீராக.
IFT
அவன் கிழக்கு மேற்குத் திசைகளின் அதிபதி ஆவான். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே, அவனையே உமக்குப் பொறுப்பேற்பவனாக (வகீல்) ஆக்கிக் கொள்வீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவனே) கிழக்கிற்கும், மேற்கிற்கும் இரட்சகன; அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை. ஆகவே, அவனையே நீர் (உமது) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்வீராக.
Saheeh International
[He is] the Lord of the East and the West; there is no deity except Him, so take Him as Disposer of [your] affairs.
وَاصْبِرْ عَلٰی مَا یَقُوْلُوْنَ وَاهْجُرْهُمْ هَجْرًا جَمِیْلًا ۟
وَاصْبِرْஇன்னும் சகிப்பீராக!عَلٰى مَا يَقُوْلُوْنَஅவர்கள் பேசுவதைوَاهْجُرْஇன்னும் விட்டு விடுவீராக!هُمْஅவர்களைهَجْرًاவிட்டு விடுதல்جَمِيْلًا‏அழகிய விதத்தில்
வஸ்Bபிர் 'அலா மா யகூ லூன வஹ்ஜுர்ஹும் ஹஜ்ரன் ஜமீலா
முஹம்மது ஜான்
அன்றியும், அவர்கள் (உமக்கெதிராகக்) கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக; மேலும், அழகான கண்ணியமான - முறையில் அவர்களை விட்டும் வெறுத்து ஒதுங்கி விடுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்கள் (உம்மைப்பற்றிக் குற்றங்குறைகள்) கூறுவதைச் சகித்துக் கொண்டு, கண்ணியமான முறையில் அவர்களை விட்டு விலகி வெறுத்திருப்பீராக.
IFT
மேலும், இம்மக்கள் எவற்றையெல்லாம் புனைந்துரைக்கின்றார்களோ அவற்றின் மீது பொறுமை கொள்வீராக! மேலும், கண்ணியமான முறையில் அவர்களை விட்டும் விலகிவிடுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், (நபியே!) அவர்கள் (உமக்கெதிராகச்) சொல்வதின் மீது நீர் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும், அழகான வெறுப்பாக அவர்களை (அல்லாஹ்வுக்காக) நீர் வெறுத்து விடுவிராக!
Saheeh International
And be patient over what they say and avoid them with gracious avoidance.
وَذَرْنِیْ وَالْمُكَذِّبِیْنَ اُولِی النَّعْمَةِ وَمَهِّلْهُمْ قَلِیْلًا ۟
وَذَرْنِىْஎன்னையும் விட்டு விடுவீராக!وَالْمُكَذِّبِيْنَபொய்ப்பித்தவர்களையும்اُولِى النَّعْمَةِசுகவாசிகளானوَمَهِّلْهُمْஇன்னும் அவர்களுக்கு அவகாசம் தருவீராக !قَلِيْلًا‏கொஞ்சம்
வ தர்னீ வல்முகத் திBபீன உலின் னஃமதி வ மஹ்ஹில்ஹும் கலீலா
முஹம்மது ஜான்
என்னையும், பொய்ப்பிப்வர்களாகிய அந்தச் சுக வாசிகளையும் விட்டுவிடும்; அவர்களுக்குச் சிறிது அவகாசமும் கொடுப்பீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! நீர் அவர்களுக்குச் சிபாரிசு செய்யாது) என்னையும், என்னைப் பொய்யாக்கி வைக்கும் அந்தச் சுகவாசிகளையும் விட்டுவிடுவீராக! அவர்களுக்குச் சிறிது அவகாசமும் கொடுப்பீராக.
IFT
பொய்யென வாதிடுபவர்களான இந்த சுகவாசிகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுவீராக! மேலும், சிறிது காலத்திற்கு இவர்களை இப்படியே விட்டு வைப்பீராக.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
என்னையும், சுகத்தையுடையவர்களான பொய்ப்பிக்கக் கூடியவர்களையும், நீர் விட்டுவிடுவீராக! (நான் ஏற்படுத்திய தவணையை அவர்கள் அடையும்வரை) அவர்களுக்குச் சிறிது அவகாசமும் கொடுப்பீராக!
Saheeh International
And leave Me with [the matter of] the deniers, those of ease [in life], and allow them respite a little.
اِنَّ لَدَیْنَاۤ اَنْكَالًا وَّجَحِیْمًا ۟ۙ
اِنَّநிச்சயமாகلَدَيْنَاۤநம்மிடம்اَنْـكَالًاகை, கால் விலங்குகளும்وَّجَحِيْمًا ۙ‏சுட்டெரிக்கும்நரகமும்
இன்ன லதய்னா அன்கால(ன்)வ் வ ஜஹீமா
முஹம்மது ஜான்
நிச்சயமாக நம்மிடத்தில் (அவர்களுக்காக) விலங்குகளும், நரகமும் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நம்மிடத்தில் (அவர்களுக்கு கை கால்களில் போடப்படும்) விலங்குகளும் இருக்கின்றன; நரகமும் இருக்கிறது.
IFT
நம்மிடம் (இவர்களுக்காகக்) கனத்த விலங்குகளும் கொழுந்துவிட்டெரியும் நெருப்பும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நம்மிடத்தில் (அவர்களுக்காக) விலங்குகளும், நரகமும் இருக்கின்றன.
Saheeh International
Indeed, with Us [for them] are shackles and burning fire.
وَّطَعَامًا ذَا غُصَّةٍ وَّعَذَابًا اَلِیْمًا ۟ۗ
وَّطَعَامًا ذَا غُصَّةٍஉணவும்/தொண்டையில் சிக்கிக் கொள்ளும்وَّعَذَابًاவேதனையும்اَلِيْمًا‏வலி தரக்கூடிய
வ த'ஆமன் தா குஸ்ஸ தி(ன்)வ் வ'அதாBபன் அலீமா
முஹம்மது ஜான்
(தொண்டையில்) விக்கிக் கொள்ளும் உணவும், நோவினை செய்யும் வேதனையும் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
விக்கிக் கொள்ளக்கூடிய உணவும் (அவர்களுக்காக) இருக்கிறது; துன்புறுத்தும் வேதனையும் இருக்கிறது.
IFT
தொண்டையில் சிக்கிக் கொள்ளும் உணவும், துன்புறுத்தும் வேதனையும் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (அவர்களுக்குத் தொண்டையில்) விக்கிக் கொள்ளக்கூடிய உணவும் துன்புறுத்தும் வேதனையும் (இருக்கின்றன).
Saheeh International
And food that chokes and a painful punishment -
یَوْمَ تَرْجُفُ الْاَرْضُ وَالْجِبَالُ وَكَانَتِ الْجِبَالُ كَثِیْبًا مَّهِیْلًا ۟
يَوْمَநாளில்تَرْجُفُகுலுங்குகின்றالْاَرْضُபூமி(யும்)وَالْجِبَالُமலைகளும்وَكَانَتِஆகிவிடும்الْجِبَالُமலைகள்كَثِيْبًاமணலாகمَّهِيْلًا‏தூவப்படுகின்ற
யவ்ம தர்ஜுFபுல் அர்ளு வல்ஜிBபாலு வ கானதில் ஜிBபாலு கதீBபம் மஹீலா
முஹம்மது ஜான்
அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்ககளாகிவிடும்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில், பூமியும் மலைகளும் ஆட்டம் கொடுத்து (ஒன்றோடொன்று மோதி) மலைகள் சிதறுண்ட மண் குவியல்களாகி விடும்.
IFT
இது நடைபெறும் அந்நாளில் பூமியும் மலைகளும் நடுங்கும். மேலும், மலைகள் சரிந்து போகும்; மணற்குவியலைப் போன்றாகிவிடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பூமியும், மலைகளும் ஆட்டம்கண்டு (அதிலிருப்போரை உலுக்கி,) இன்னும், மலைகள் சிதறுண்ட மண் குவியல்களாகிவிடும் நாளில்-(அவர்களுக்கு நடந்தேறும் வேதனை உண்டு.)
Saheeh International
On the Day the earth and the mountains will convulse and the mountains will become a heap of sand pouring down.
اِنَّاۤ اَرْسَلْنَاۤ اِلَیْكُمْ رَسُوْلًا ۙ۬ شَاهِدًا عَلَیْكُمْ كَمَاۤ اَرْسَلْنَاۤ اِلٰی فِرْعَوْنَ رَسُوْلًا ۟ؕ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَرْسَلْنَاۤஅனுப்பினோம்اِلَيْكُمْஉங்களிடம்رَسُوْلًا ۙஒரு தூதரைشَاهِدًاசாட்சி கூறுகின்றعَلَيْكُمْஉங்களைப் பற்றிكَمَاۤ اَرْسَلْنَاۤநாம் அனுப்பியது போன்றுاِلٰى فِرْعَوْنَஃபிர்அவ்னுக்குرَسُوْلًا ؕ‏ஒரு தூதரை
இன்னா அர்ஸல்னா இலய்கும் ரஸூலன் ஷாஹிதன் 'அலீய்கும் கமா அர்ஸல்னா இலா Fபிர்'அவ்ன ரஸூலா
முஹம்மது ஜான்
நிச்சயமாக ஃபிர்அவ்னிடம் தூதரை நாம் அனுப்பியது போல், உங்களிடமும், உங்கள் மீது சாட்சி சொல்பவராகிய தூதரை நாம் அனுப்பி வைத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களிடம் (நமது) தூதர் ஒருவரை அனுப்பி வைத்தோம். (மறுமையில்) அவர் உங்களுக்குச் சாட்சியாக வருவார். இவ்வாறே ஃபிர்அவ்னிடமும் முன்னர் ஒரு தூதரை நாம் அனுப்பிவைத்தோம்.
IFT
திண்ணமாக, நாம் ஒரு தூதரை, உங்களின் மீது சான்று பகரக்கூடியவராக ஆக்கி உங்களிடம் அனுப்பினோம்; ஃபிர்அவ்னிடம் நாம் ஒரு தூதரை அனுப்பியது போன்று!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஃபிர் அவ்னின்பால் நாம் ஒரு தூதரை அனுப்பி வைத்தது போன்று, உங்கள் மீது சாட்சியாளராக ஒரு தூதரை உங்களிடம் நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம்.
Saheeh International
Indeed, We have sent to you a Messenger as a witness upon you just as We sent to Pharaoh a messenger.
فَعَصٰی فِرْعَوْنُ الرَّسُوْلَ فَاَخَذْنٰهُ اَخْذًا وَّبِیْلًا ۟
فَعَصٰىமாறுசெய்தான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்الرَّسُوْلَஅந்த தூதருக்குفَاَخَذْنٰهُஆகவே, நாம் அவனை பிடித்தோம்اَخْذًاபிடியால்وَّبِيْلًا‏தாங்கிக் கொள்ள முடியாத
Fப'அஸா Fபிர்'அவ்னுர் ரஸூல Fப அகத்னாஹு அக்த(ன்)வ் வBபீலா
முஹம்மது ஜான்
எனினும் ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான்; எனவே, அவனைக் கடினமான பிடியாக, நாம் பிடித்துக் கொண்டோம்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான். ஆகவே, நாம் அவனைப் பலமாகப் பிடித்துக் கொண்டோம்.
IFT
(பிறகு, பார்த்துக் கொள்ளுங்கள்:) ஃபிர்அவ்ன் அந்தத் தூதரின் பேச்சை ஏற்காதபோது, நாம் அவனை மிகவும் கடுமையாகப் பிடித்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், ஃபிர் அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான்; ஆகவே, கடினமான பிடியாக அவனை நாம் பிடித்துக்கொண்டோம்.
Saheeh International
But Pharaoh disobeyed the messenger, so We seized him with a ruinous seizure.
فَكَیْفَ تَتَّقُوْنَ اِنْ كَفَرْتُمْ یَوْمًا یَّجْعَلُ الْوِلْدَانَ شِیْبَا ۟ۗۖ
فَكَيْفَஎப்படி?تَتَّقُوْنَகாத்துக் கொள்வீர்கள்اِنْ كَفَرْتُمْநீங்கள் நிராகரித்தால்يَوْمًاஒரு நாளைيَّجْعَلُஆக்கிவிடுகின்றالْوِلْدَانَபிள்ளைகளைشِيْبَا  ۖ‏வயோதிகர்களாக
Fபகய்Fப தத்தகூன இன் கFபர்தும் யவ்ம(ன்)ய் யஜ்'அலுல் வில்தான ஷீBபா
முஹம்மது ஜான்
எனவே, நீங்கள் நிராகரித்தீர்களானால், குழந்தைகளையும் நரைத்தவர்களாக்கும் அந்த நாளிலிருந்து எவ்வாறு தப்பிக்க போகிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் (இதை) நிராகரித்துவிட்டால், எவ்வாறு நீங்கள் (நம் பிடியிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்? (நாம் பிடிக்கின்ற) அந்நாளில் (திடுக்கம்) சிறு குழந்தைகளையும் நரைத்தவர்களாக ஆக்கிவிடும்.
IFT
நீங்கள் நிராகரித்து விட்டால் அந்த நாளில் எப்படித் தப்பித்துக் கொள்வீர்கள்? அதுவோ, குழந்தைகளை நரைக்கச் செய்துவிடும்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் நிராகரித்துவிட்டீர்களானால், குழந்தைகளை நரைத்த கிழவர்களாக ஆக்கிவிடும் நாளில், (நம்முடைய பிடியிலிருந்து தப்பித்து உங்களை) நீங்கள் எவ்வாறு காத்துக் கொள்வீர்கள்?
Saheeh International
Then how can you fear, if you disbelieve, a Day that will make the children white-haired?
لسَّمَآءُ مُنْفَطِرٌ بِهٖ ؕ كَانَ وَعْدُهٗ مَفْعُوْلًا ۟
اۨلسَّمَآءُவானம்مُنْفَطِرٌ ۢவெடித்து பிளந்து விடும்بِهٖ‌ؕஅதில்كَانَஆகும்وَعْدُهٗஅவனுடைய வாக்குمَفْعُوْلًا‏நிறைவேறியே
அஸ்ஸமா'உ முன்Fபதிரும் Bபிஹ்; கான வஃதுஹூ மFப்'ஊலா
முஹம்மது ஜான்
அதில் வானம் பிளந்து விடும்; அவனுடைய வாக்குறுதி செயல்படுத்தப்படும்.
அப்துல் ஹமீது பாகவி
(அந்நாளில்) வானம் பிளந்துவிடும்; இது நடந்தே தீரவேண்டிய அவனுடைய வாக்குறுதியாகும்.
IFT
அதன் கடினத்தால் வானம் வெடித் துத் தகர்ந்து போய்விடும். அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீர வேண்டியுள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(ந்நாளில் நிகழும் பெரும் அமளியான)தன் காரணமாக வானம் வெடித்துப் போய்விடும், அவனுடைய வாக்கு (சந்தேகமின்றி) செயல்படுத்தப்பட்டதாகிவிடும்.
Saheeh International
The heaven will break apart therefrom; ever is His promise fulfilled.
اِنَّ هٰذِهٖ تَذْكِرَةٌ ۚ فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰی رَبِّهٖ سَبِیْلًا ۟۠
اِنَّநிச்சயமாகهٰذِهٖஇதுتَذْكِرَةٌ ۚஓர் அறிவுரையாகும்فَمَنْஆகவே, யார்شَآءَநாடுகின்றாரோاتَّخَذَஏற்படுத்திக் கொள்ளட்டும்اِلٰى رَبِّهٖதன் இறைவன் பக்கம்سَبِيْلًا‏ஒரு பாதையை
இன்ன ஹாதிஹீ தத்கிரதுன் Fப மன் ஷா'அத் தகத இலா ரBப்Bபிஹீ ஸBபீலா
முஹம்மது ஜான்
நிச்சயமாக இது நினைவூட்டும் நல்லுபதேசமாகும்; ஆகவே எவர் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவனிடம் (செல்லும் இவ்)வழியை எடுத்துக் கொள்வாராக.  
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இது மிக்க நல்லுபதேசமாகும். ஆகவே, விரும்பியவர் தன் இறைவனிடம் செல்லக்கூடிய (இவ்)வழியை எடுத்துக்கொள்ளவும்.
IFT
திண்ணமாக, இது ஓர் அறிவுரையாகும். எனவே, இனி விரும்புகிறவர் தன்னுடைய இறைவனின் பக்கம் செல்லும் வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இது ஒரு உபதேசமாகும், ஆகவே, எவர் நாடுகிறாரோ அவர் தன் இரட்சகனின்பால் (செல்லக்கூடிய) வழியை எடுத்துக் கொள்வார்.
Saheeh International
Indeed, this is a reminder, so whoever wills may take to his Lord a way.
اِنَّ رَبَّكَ یَعْلَمُ اَنَّكَ تَقُوْمُ اَدْنٰی مِنْ  الَّیْلِ وَنِصْفَهٗ وَثُلُثَهٗ وَطَآىِٕفَةٌ مِّنَ الَّذِیْنَ مَعَكَ ؕ وَاللّٰهُ یُقَدِّرُ الَّیْلَ وَالنَّهَارَ ؕ عَلِمَ اَنْ لَّنْ تُحْصُوْهُ فَتَابَ عَلَیْكُمْ فَاقْرَءُوْا مَا تَیَسَّرَ مِنَ الْقُرْاٰنِ ؕ عَلِمَ اَنْ سَیَكُوْنُ مِنْكُمْ مَّرْضٰی ۙ وَاٰخَرُوْنَ یَضْرِبُوْنَ فِی الْاَرْضِ یَبْتَغُوْنَ مِنْ فَضْلِ اللّٰهِ ۙ وَاٰخَرُوْنَ یُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ ۖؗ فَاقْرَءُوْا مَا تَیَسَّرَ مِنْهُ ۙ وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا ؕ وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَیْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ هُوَ خَیْرًا وَّاَعْظَمَ اَجْرًا ؕ وَاسْتَغْفِرُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
اِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்يَعْلَمُஅறிவான்اَنَّكَநிச்சயமாக நீர்تَقُوْمُநின்று வணங்குகிறீர்اَدْنٰىகுறைவாகمِنْ ثُلُثَىِமூன்றில் இரண்டு பகுதிகளைவிடالَّيْلِஇரவின்وَ نِصْفَهٗஇன்னும் அதன் பாதிوَثُلُثَهٗஇன்னும் அதன் மூன்றில் ஒரு பகுதிوَطَآٮِٕفَةٌஒரு கூட்டமும்مِّنَ الَّذِيْنَ مَعَكَ‌ؕஉம்முடன் இருப்பவர்களில்وَاللّٰهُஅல்லாஹ்தான்يُقَدِّرُநிர்ணயிக்கின்றான்الَّيْلَஇரவை(யும்)وَالنَّهَارَ‌ؕபகலையும்عَلِمَநன்கறிவான்اَنْ لَّنْ تُحْصُوْهُஅதற்கு சக்திபெறவே மாட்டீர்கள்فَتَابَஆகவே மன்னித்தான்عَلَيْكُمْ‌உங்களைفَاقْرَءُوْاஓதுங்கள்!مَا تَيَسَّرَஇலகுவானதைمِنَ الْقُرْاٰنِ‌ؕகுர்ஆனில்عَلِمَஅறிவான்اَنْ سَيَكُوْنُஇருப்பார்(கள்)مِنْكُمْஉங்களில்مَّرْضٰى‌ۙநோயாளிகள்وَاٰخَرُوْنَஇன்னும் மற்றும் சிலர்يَضْرِبُوْنَபயணம் செய்வார்கள்فِى الْاَرْضِபூமியில்يَبْتَغُوْنَதேடியவர்களாகمِنْ فَضْلِஅருளைاللّٰهِ‌ۙஅல்லாஹ்வின்وَاٰخَرُوْنَஇன்னும் மற்றும் சிலர்يُقَاتِلُوْنَபோரிடுவார்கள்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِ ۖஅல்லாஹ்வின்فَاقْرَءُوْاஆகவே, ஓதுங்கள்!مَا تَيَسَّرَஇலகுவானதைمِنْهُ‌ ۙஅதிலிருந்துوَاَقِيْمُواஇன்னும் நிலை நிறுத்துங்கள்!الصَّلٰوةَதொழுகையைوَاٰتُواஇன்னும் கொடுங்கள்الزَّكٰوةَஸகாத்தைوَاَقْرِضُواஇன்னும் கடன் கொடுங்கள்!اللّٰهَஅல்லாஹ்விற்குقَرْضًاகடனாகحَسَنًا‌ ؕஅழகியوَمَا تُقَدِّمُوْاநீங்கள் எதை முற்படுத்துகிறீர்களோلِاَنْفُسِكُمْஉங்களுக்காகمِّنْ خَيْرٍநன்மையில்تَجِدُوْهُஅதை பெறுவீர்கள்عِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்هُوَஅதுخَيْرًاமிகச் சிறப்பாகவும்وَّاَعْظَمَமிகப் பெரியதாகவும்اَجْرًا‌ ؕகூலியால்وَاسْتَغْفِرُواஇன்னும் பாவமன்னிப்புத் தேடுங்கள்اللّٰهَ ؕஅல்லாஹ்விடம்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
இன்ன ரBப்Bபக யஃலமு அன்னக தகூமு அத்னா மின் துலுத யில் லய்லி வ னிஸ்Fபஹூ வ துலுதஹூ வ தா'இFபதும் மினல் லதீன ம'அக்; வல் லாஹு யுகத்திருல் லய்ல வன்ன ஹார்; 'அலிம அல் லன் துஹ்ஸூஹு FபதாBப 'அலய்கும் Fபக்ர'ஊ மா தயஸ்ஸர மினல் குர்'ஆன்; 'அலிம அன் ஸ யகூனு மின்கும் மர்ளா வ ஆகரூன யள்ரிBபூன Fபில் அர்ளி யBப்தகூன மின் Fபள்லில் லாஹி வ ஆகரூன யுகாதிலூன Fபீ ஸBபீலில் லாஹி Fபக்ர'ஊ ம தயஸ்ஸர மின்ஹு வ அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ் Zஜகாத வ அக்ரிளுல் லாஹ கர்ளன் ஹஸனா; வமா துகத்திமூ லி அன்Fபுஸிகும் மின் கய்ரின் தஜிதூஹு 'இன்தல் லாஹி ஹுவ கய்ர(ன்)வ் வ அஃளம அஜ்ரா; வஸ்தக்Fபிருல் லாஹா இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்.
முஹம்மது ஜான்
நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவோ, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான்; அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான்; அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான்; ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான். எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும்; அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் செல்லும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் மற்றும் சிலரும், உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான்; ஆகவே, அதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள்; தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள்; நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக நீரும், உம்மோடு இருப்பவர்களில் ஒரு கூட்டத்தினரும், சற்றேறக்குறைய இரவில் மூன்றில் இரண்டு பாகம் அல்லது பாதி அல்லது மூன்றில் ஒரு பாக நேரம் (தொழுகையில்) நின்று வருகிறீர்கள் என்பதை நிச்சயமாக உமது இறைவன் அறிவான். இரவு பகலைக் கணக்கிட அல்லாஹ்வால்தான் முடியும். நீங்கள் அதைச் சரிவரக் கணக்கிட முடியாதென்பதை அவன் அறிந்து (இருப்பதனால்தான், இரவில் இன்ன நேரத்தில், இவ்வளவு தொழவேண்டுமெனக் குறிப்பிட்டுக் கூறாது,) உங்களை அவன் மன்னித்து விட்டான். ஆகவே, (இரவில் நீங்கள் தொழுதால்) குர்ஆனில் உங்களுக்குச் சாத்தியமான அளவு ஓதுங்கள். ஏனென்றால், உங்களில் நோயாளிகள் இருக்கக்கூடுமென்பதையும், வேறு சிலர் அல்லாஹ்வின் அரு(ளாகிய பொரு)ளைத் தேடி, பூமியின் பல பாகங்களிலும் செல்ல வேண்டியதிருக்கும் என்பதையும், வேறு சிலர் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியச் செல்ல வேண்டியதிருக்குமென்பதையும் அவன் நன்கறிவான். ஆதலால், (உங்கள் அவகாசத்திற்குத் தக்கவாறு கூட்டியோ குறைத்தோ) உங்களுக்குச் சௌகரியமான அளவே ஓதுங்கள். (ஆயினும்) தொழுகையை (தவறவிடாது) சரியாக நிலை நிறுத்துங்கள். இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். (ஏழைகளுக்கு உதவுவதன் மூலம்) அல்லாஹ்வுக்கு அழகான முறையில் கடனும் கொடுங்கள். நன்மையான காரியங்களில் எவற்றை நீங்கள் உங்களுக்காக, (உங்கள் மரணத்திற்கு முன்னதாகவே) செய்து வைத்துக் கொண்டீர்களோ அவற்றையே, மேலான நன்மைகளாகவும் மகத்தான கூலியாகவும் நீங்கள் அல்லாஹ்விடத்தில் காண்பீர்கள். (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.
IFT
(நபியே!) உம் இறைவன் அறிந்திருக்கின்றான் ஏறத்தாழ இரவின் மூன்றில் இரண்டு பகுதி வரை, சில சமயம் பாதி இரவு வரை, சிலசமயம் அதன் மூன்றில் ஒரு பகுதி வரை, நீர் இறைவழிபாட்டில் கழிக்கின்றீர் என்பதையும், உம்முடைய தோழர்களிலும் ஒரு குழுவினர் இவ்வாறு செய்து வருகின்றார்கள் என்பதையும்! அல்லாஹ்தான் இரவையும் பகலையும் கணக்கிட்டு வைத்துள்ளான். அவற்றைத் துல்லியமாகக் கணக்கிட உங்களால் முடியாது என்பது அவனுக்குத் தெரியும். ஆதலால், அவன் உங்கள் மீது கருணை புரிந்தான். உங்களுக்கு குர்ஆனிலிருந்து சுலபமாக எந்த அளவுக்கு ஓத முடியுமோ அந்த அளவுக்கு ஓதிக் கொள்ளுங்கள். உங்களில் சிலர் நோயாளிகளாய் இருப்பார்கள் என்பதும், வேறு சிலர் அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்கின்றார்கள் என்பதும், இன்னும் சிலர் அல்லாஹ்வின் வழியில் போர் புரிகின்றார்கள் என்பதும் அவனுக்கு நன்கு தெரியும். எனவே, குர்ஆனிலிருந்து சுலபமாக எந்த அளவுக்கு ஓத முடியுமோ அந்த அளவுக்கு ஓதிக் கொள்ளுங்கள்; தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஜகாத்தும் கொடுங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு அழகிய கடனை அளித்து வாருங்கள். நீங்கள் உங்களுக்காக முன்கூட்டியே செய்து அனுப்பும் நன்மைகள் எவையோ அவற்றை அல்லாஹ்விடத்தில் காண்பீர்கள். அதுவே மிகச் சிறந்ததாகும். அதன் கூலியும் மகத்தானதாகும். அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கோருங்கள். ஐயமின்றி அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிச்சயமாக நீரும், உம்மோடு இருப்போரில் ஒரு கூட்டத்தினரும், இரவில் மூன்றில் இரு பாகங்களைவிட மிகக் குறைவாக, இன்னும், அதில் பாதியில், இன்னும், அதில் மூன்றில் ஒருபாக (நேர)த்தில் (இரவுத் தொழுகைக்காக) நிற்கிறீர்கள் என்பதை நிச்சயமாக உமதிரட்சகன் அறிவான்; இன்னும் இரவையும், பகலையும் அல்லாஹ்தான் நிர்ணயம் செய்து (அதன் நேரங்களை அளவாக அமைத்து)ள்ளான்; நீங்கள் அதனை சரிவரக் கணக்கிடவே முடியாதென்பதை அவன் அறிந்துள்ளான்; ஆகவே, உங்களை அவன் மன்னித்துவிட்டான்; எனவே குர் ஆனிலிருந்து (உங்களுக்கு) இயன்றதை ஓதுங்கள்; (ஏனெனில்,) உங்களில் இரவு வணக்கத்தை விட்டும், அனுமதி பெறும் நோயாளிகளும், அல்லாஹ்வின் பேரருளைத் தேடியவர்களாக பூமியில் பிரயாணம் செய்யும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் வேறு சிலரும், இருப்பார்கள் என்பதை அவன் அறிந்துளளான்; ஆகவே, அதிலிருந்து இயன்றதை ஓதுங்கள்; மேலும், தொழுகையை முறையாக நிறைவேற்றுங்கள்; ஜகாத்தையும் கொடுங்கள்; அல்லாஹ்விற்கு அழகான கடனாக கடனும் கொடுங்கள்; மேலும், நன்மையிலிருந்து உங்களுக்காக எதை நீங்கள் முற்படுத்துகிறீர்களோ, அது அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்ததாகவும், (நற்)கூலியில் மிக மகத்தானதாகவும் அதனை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்; அல்லாஹ்விடம் மன்னிப்பும் தேடுங்கள்; நிச்சயமாக, அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்.
Saheeh International
Indeed, your Lord knows, [O Muhammad], that you stand [in prayer] almost two thirds of the night or half of it or a third of it, and [so do] a group of those with you. And Allah determines [the extent of] the night and the day. He has known that you [Muslims] will not be able to do it and has turned to you in forgiveness, so recite what is easy [for you] of the Qur’an. He has known that there will be among you those who are ill and others traveling throughout the land seeking [something] of the bounty of Allah and others fighting for the cause of Allah. So recite what is easy from it and establish prayer and give zakah and loan Allah a goodly loan. And whatever good you put forward for yourselves - you will find it with Allah. It is better and greater in reward. And seek forgiveness of Allah. Indeed, Allah is Forgiving and Merciful.