75. ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)

மக்கீ, வசனங்கள்: 40

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
لَاۤ اُقْسِمُ بِیَوْمِ الْقِیٰمَةِ ۟ۙ
لَاۤ اُقْسِمُசத்தியம் செய்கிறேன்!بِيَوْمِநாளின் மீதுالْقِيٰمَةِۙ‏மறுமை
லா உக்ஸிமு Bபி யவ்மில் கியாமஹ்
முஹம்மது ஜான்
கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
அப்துல் ஹமீது பாகவி
மறுமை நாளின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
IFT
இல்லை! நான் மறுமைநாளின் மீது சத்தியம் செய்கின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மறுமைநாளைக் கொண்டு நான் சத்தியம் செய்கிறேன்.
Saheeh International
I swear by the Day of Resurrection
وَلَاۤ اُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ ۟ؕ
وَلَاۤ اُقْسِمُஇன்னும் சத்தியம் செய்கிறேன் !بِالنَّفْسِஆன்மாவின் மீதுاللَّوَّامَةِؕ‏பழிக்கின்ற
வ லா உக்ஸிமு Bபின் னFப்ஸில் லவ்வாமஹ்
முஹம்மது ஜான்
நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
அப்துல் ஹமீது பாகவி
(குற்றம் செய்தவனை) நிந்திக்கும் அவனுடைய மனசாட்சியின் மீதும் நான் சத்தியம் செய்கிறேன்.
IFT
இல்லவே இல்லை; இடித்துரைக்கும் மனத்தின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(வழிபாட்டில் மனிதன் குறைவு செய்துவிட்டதைப்பற்றி) மிக நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவைக் கொண்டும் நான் சத்தியம் செய்கிறேன்.
Saheeh International
And I swear by the reproaching soul [to the certainty of resurrection].
اَیَحْسَبُ الْاِنْسَانُ اَلَّنْ نَّجْمَعَ عِظَامَهٗ ۟ؕ
اَيَحْسَبُஎண்ணுகின்றானாالْاِنْسَانُமனிதன்اَلَّنْ نَّجْمَعَஅறவே ஒன்று சேர்க்க மாட்டோம் என்றுعِظَامَهٗؕ‏அவனுடைய எலும்புகளை
அயஹ்ஸBபுல் இன்ஸானு அல் லன் னஜ்ம்'அ 'இளாமஹ்
முஹம்மது ஜான்
(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?
அப்துல் ஹமீது பாகவி
(இறந்து உக்கி மண்ணாய்ப் போன) அவனுடைய எலும்புகளை, நாம் ஒன்று சேர்க்கமாட்டோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறானா?
IFT
அவனுடைய எலும்புகளை நம்மால் ஒன்றுதிரட்ட முடியாது என்று மனிதன் கருதிக் கொண்டிருக்கின்றானா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதன் (இறப்பெய்தி, மண்ணோடு மண்ணாக மக்கிப்போன பின்னர்) அவனுடைய எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று எண்ணுகின்றானா?
Saheeh International
Does man think that We will not assemble his bones?
بَلٰى قٰدِرِیْنَ عَلٰۤی اَنْ نُّسَوِّیَ بَنَانَهٗ ۟
بَلٰىஏன் முடியாது!قٰدِرِيْنَஆற்றலுடையவர்கள்عَلٰٓى اَنْ نُّسَوِّىَநாம் சரியாக அமைப்பதற்குبَنَانَهٗ‏அவனுடைய விரல் நுனிகளை
Bபலா காதிரீன 'அலா அன் னுஸவ்விய Bபனானஹ்
முஹம்மது ஜான்
அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவ்வாறல்ல! அவனுடைய (சரீர) அமைப்பை (இறந்த பின்னரும் முன்னிருந்தபடி) சரிப்படுத்த நாம் ஆற்றலுடையோம்.
IFT
ஏன் முடியாது? நாமோ அவனுடைய விரல்களின் நுனியைக்கூட மிகத் துல்லியமாக அமைப்பதற்கு ஆற்றல் பெற்றுள்ளோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆம்! அவனுடைய விரல்களின் நுனிகளை (-முன்பிருந்தது போல் இணைத்துச் சரிப்படுத்திச் செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோராக இருக்கிறோம்.
Saheeh International
Yes. [We are] Able [even] to proportion his fingertips.
بَلْ یُرِیْدُ الْاِنْسَانُ لِیَفْجُرَ اَمَامَهٗ ۟ۚ
بَلْமாறாகيُرِيْدُநாடுகின்றான்الْاِنْسَانُமனிதன்لِيَفْجُرَபாவம் செய்வதற்கேاَمَامَهٗ‌ۚ‏தனது வருங்காலத்திலும்
Bபல் யுரீதுல் இன்ஸானு லியFப்ஜுர அமாமஹ்
முஹம்மது ஜான்
எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், மனிதன் இறைவன் முன்பாகவே குற்றம் செய்யக் கருதுகிறான்.
IFT
ஆனால், மனிதன் எதிர்காலத்திலும் தீமைகளைச் செய்துகொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மாறாக மனிதன் தன் எதிர்காலத்திலும் (பாவத்திலிருந்து விலகிவிடாது) பாவம் செய்யவே நாடுகிறான்.
Saheeh International
But man desires to continue in sin.
یَسْـَٔلُ اَیَّانَ یَوْمُ الْقِیٰمَةِ ۟ؕ
يَسْأَلُகேட்கிறான்اَيَّانَஎப்போது வரும்يَوْمُ الْقِيٰمَةِؕ‏மறுமை நாள்
யஸ்'அலு அய்ய்யான யவ்முல் கியாமஹ்
முஹம்மது ஜான்
“கியாம நாள் எப்போழுது வரும்?” என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(பரிகாசமாக) ‘‘மறுமை நாள் எப்பொழுது வரும்'' என்று கேட்கிறான்.
IFT
“அந்த மறுமைநாள் எப்போது வரும்?” என்று அவன் கேட்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“மறுமைநாள் எப்பொழுது (வரும்)?” என (அதிசயமாக) அவன் கேட்கிறான்.
Saheeh International
He asks, "When is the Day of Resurrection?"
فَاِذَا بَرِقَ الْبَصَرُ ۟ۙ
فَاِذَا بَرِقَதிகைத்துவிட்டால்الْبَصَرُۙ‏பார்வை
Fப இதா Bபரிகல் Bபஸர்
முஹம்மது ஜான்
ஆகவே, பார்வையும் மழுங்கி-
அப்துல் ஹமீது பாகவி
அது (வரும்) சமயம் பார்வை தட்டழிந்து விடும்,
IFT
பிறகு, பார்வை நிலைகுத்தி விடும்போது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அந்நாளின் அமளிகளைக்கண்டு திடுக்கிட்டு பார்வை நிலைகுத்திவிட்டால்,
Saheeh International
So when vision is dazzled.
وَخَسَفَ الْقَمَرُ ۟ۙ
وَخَسَفَஇன்னும் ஒளி இழந்து விட்டால்الْقَمَرُۙ‏சந்திரன்
வ கஸFபல் கமர்
முஹம்மது ஜான்
சந்திரனும் ஒளியும் மங்கி-
அப்துல் ஹமீது பாகவி
சந்திரனின் பிரகாசம் மங்கி விடும்,
IFT
மேலும், சந்திரன் ஒளி குன்றிப் போகும்போது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சந்திரனும் ஒளி இழந்து (விடுமானால்),
Saheeh International
And the moon darkens.
وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ ۟ۙ
وَجُمِعَஇன்னும் ஒன்று சேர்க்கப்பட்டால்الشَّمْسُசூரியனும்وَالْقَمَرُۙ‏சந்திரனும்
வ ஜுமி'அஷ் ஷம்ஸு வல் கமர்
முஹம்மது ஜான்
சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.
அப்துல் ஹமீது பாகவி
(அதுநாள் வரை பிரிந்திருந்த) சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டு விடும்(போது),
IFT
மேலும் சந்திரனும், சூரியனும் ஒன்றாக இணைக்கப்படும்போது;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சூரியனும், சந்திரனும் ஒன்றாக்கப்பட்டு விடும். (ஆனால்),
Saheeh International
And the sun and the moon are joined,
یَقُوْلُ الْاِنْسَانُ یَوْمَىِٕذٍ اَیْنَ الْمَفَرُّ ۟ۚ
يَقُوْلُகூறுவான்الْاِنْسَانُமனிதன்يَوْمَٮِٕذٍஅந்நாளில்اَيْنَஎங்கே?الْمَفَرُّ‌ ۚ‏தப்பிக்குமிடம்
யகூலுல் இன்ஸானு யவ் ம 'இதின் அய்னல் மFபர்ர்
முஹம்மது ஜான்
அந்நாளில் “(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?” என்று மனிதன் கேட்பான்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் (தப்பித்துக்கொள்ள) “எங்கு ஓடுவது'' என்று மனிதன் கேட்பான்.
IFT
அந்நாளில் இதே மனிதன் “நான் எங்கே சென்று ஓடி ஒளிவது?” என்று கேட்பான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்நாளில் “எங்கு விரண்டோடுவது?” என மனிதன் கூறுவான்.
Saheeh International
Man will say on that Day, "Where is the [place of] escape?"
كَلَّا لَا وَزَرَ ۟ؕ
كَلَّاஅவ்வாறல்லلَا وَزَرَؕ‏தப்பித்து ஓட அறவே முடியாது
கல்லா லா வZஜர்
முஹம்மது ஜான்
“இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!” (என்று கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘முடியவே முடியாது. தப்ப இடமில்லை'' (என்று கூறப்படும்).
IFT
ஒருபோதுமில்லை! அங்கு எந்தப் புகலிடமும் இருக்காது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இல்லை! தப்ப இடமில்லை.
Saheeh International
No! There is no refuge.
اِلٰى رَبِّكَ یَوْمَىِٕذِ لْمُسْتَقَرُّ ۟ؕ
اِلٰى رَبِّكَஉமது இறைவன் பக்கம்தான்يَوْمَٮِٕذِஅந்நாளில்اۨلْمُسْتَقَرُّ ؕ‏இறுதியாக நிலையான தங்குமிடம்
இலா ரBப்Bபிக யவ்ம 'இதினில் முஸ்தகர்ர்
முஹம்மது ஜான்
அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அந்நாளில் உமது இறைவனிடமே (அனைவரும்) நிற்க வேண்டியதிருக்கிறது.
IFT
அந்த நாளில் உன் அதிபதியின் முன்பே சென்றடைய வேண்டியிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்நாளில் (அனைவரின்) தங்குமிடம் உம் இரட்சகனிடத்திலாகும்.
Saheeh International
To your Lord, that Day, is the [place of] permanence.
یُنَبَّؤُا الْاِنْسَانُ یَوْمَىِٕذٍۭ بِمَا قَدَّمَ وَاَخَّرَ ۟ؕ
يُنَبَّؤُاஅறிவிக்கப்படுவான்الْاِنْسَانُமனிதன்يَوْمَٮِٕذٍۢஅந்நாளில்بِمَا قَدَّمَதான் முந்தி செய்ததையும்وَاَخَّرَؕ‏பிந்தி செய்ததையும்
யுனBப்Bப 'உல் இன்ஸானு யவ்ம 'இதிம் Bபிமா கத்தம வ அக்கர்
முஹம்மது ஜான்
அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதன், முன் பின் செய்த பாவங்களைப் பற்றி அந்நாளில் அவனுக்கு அறிவுறுத்தப்படும்.
IFT
அந்த நாளில் மனிதனுக்கு, அவனுடைய முந்தைய, பிந்தைய செயல்கள் அனைத்தும் எடுத்துக் காண்பிக்கப்படும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதன்-அவன் முற்படுத்தி வைத்ததையும் அவன் பிற்படுத்தி வைத்ததையும் (பற்றி) அந்நாளில் அறிவிக்கப்படுவான்.
Saheeh International
Man will be informed that Day of what he sent ahead and kept back.
بَلِ الْاِنْسَانُ عَلٰی نَفْسِهٖ بَصِیْرَةٌ ۟ۙ
بَلِமாறாகالْاِنْسَانُமனிதன்عَلٰى نَفْسِهٖஅவனுக்கேبَصِيْرَةٌ ۙ‏சாட்சியாக இருப்பான்
Bபலில் இன்ஸானு 'அலா னFப்ஸிஹீ Bபஸீரஹ்
முஹம்மது ஜான்
எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
தவிர, ஒவ்வொரு மனிதனும் தன் நிலைமையைத் தானாகவும் அறிந்துகொள்வான்.
IFT
ஏன், மனிதன் தன்னைப் பற்றி நன்கு அறிந்தவனாக இருப்பான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஏன், மனிதன் தன் மீது பார்வையுடையவனாக (தன் செயல்களுக்குச் சாட்சியாக) இருப்பான்.
Saheeh International
Rather, man, against himself, will be a witness,
وَّلَوْ اَلْقٰى مَعَاذِیْرَهٗ ۟ؕ
وَّلَوْ اَلْقٰىஅவன் கூறினாலும்مَعَاذِيْرَهٗؕ‏தனது காரணங்களை
வ லவ் அல்கா ம'ஆதீரஹ்
முஹம்மது ஜான்
அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவன் (தன் குற்றங்களுக்கு) எவ்வளவு புகல்களைக் கூறிய போதிலும் (அது அங்கீகரிக்கப்படாது).
IFT
அவன் எவ்வளவுதான் சாக்கு போக்குகளைக் கூறினாலும் சரியே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே, தன் குற்றங்களை மறைக்க) அவன் தன் புகல்களைப்போட்ட போதிலும் சரியே (அவை அங்கீகரிக்கப்பட மாட்டா).
Saheeh International
Even if he presents his excuses.
لَا تُحَرِّكْ بِهٖ لِسَانَكَ لِتَعْجَلَ بِهٖ ۟ؕ
لَا تُحَرِّكْ بِهٖஅசைக்காதீர்/இதற்குلِسَانَكَஉமது நாவைلِتَعْجَلَநீர் அவசரமாக செய்வதற்காகبِهٖؕ‏இதை
லா துஹர்ரிக் Bபிஹீ லிஸா னக லிதஃஜல Bபிஹ்
முஹம்மது ஜான்
(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதுவதற்காக) உம் நாவை அசைக்காதீர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! வஹ்யி மூலம் ஜிப்ரயீல் ஓதிக்காண்பிக்கும் வசனங்கள் தவறி விடுமோ என்று பயந்து, அவர் ஓதி முடிப்பதற்கு முன்னர்) நீர் அவசரப்பட்டு அதை ஓத உமது நாவை அசைக்காதீர்.
IFT
(நபியே!) இந்த வஹியை* அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) வஹீ மூலம் அறிவிக்கப்படுபவை தவறிவிடுமோ என பயந்து அதற்காக நீர் அவசரப்பட்டு உம் நாவை அசைக்காதீர்.
Saheeh International
Move not your tongue with it, [O Muhammad], to hasten with it [i.e., recitation of the Qur’an].
اِنَّ عَلَیْنَا جَمْعَهٗ وَقُرْاٰنَهٗ ۟ۚۖ
اِنَّநிச்சயமாகعَلَيْنَاநம்மீது கடமையாகும்جَمْعَهٗஅதை ஒன்று சேர்ப்பதும்وَقُرْاٰنَهٗۚ ۖ‏அதை ஓதவைப்பதும்
இன்ன 'அலய்னா ஜம்'அஹூ வ குர் ஆனஹ்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.
அப்துல் ஹமீது பாகவி
ஏனென்றால், அதை ஒன்று சேர்த்து (நீர்) ஓதும்படி செய்வது நிச்சயமாக நம்மீதுள்ள கடமையாகும்.
IFT
அதை நினைவில் நிறுத்தச் செய்வதும், ஓதும்படிச் செய்வதும் நமது பொறுப்பாகும்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உம் உள்ளத்தில்) அதனை ஒன்று சேர்ப்பதும், (உமது நாவால்) அதனை ஓதச்செய்வதும் நிச்சயமாக நம் மீதா(ன கடமையா)கும்.
Saheeh International
Indeed, upon Us is its collection [in your heart] and [to make possible] its recitation.
فَاِذَا قَرَاْنٰهُ فَاتَّبِعْ قُرْاٰنَهٗ ۟ۚ
فَاِذَا قَرَاْنٰهُஇதை நாம் ஓதினால்فَاتَّبِعْநீர் பின்தொடர்வீராக!قُرْاٰنَهٗ‌ۚ‏அது ஓதப்படுவதை
Fப இதா கரானாஹு Fபத்தBபிஃ குர் ஆனஹ்
முஹம்மது ஜான்
எனவே (ஜிப்ரீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (ஜிப்ரயீல் மூலம்) அதை நாம் (உமக்கு) ஓதிக்காண்பித்தால், (அவர் ஓதி முடித்த பின்னர்) அவ்வாறே அதை நீர் பின்தொடர்ந்து ஓதுவீராக.
IFT
ஆகையால் நாம் இதனை ஓதிக் காட்டும்போது அவ்வாறு ஓதிக்காட்டுவதை நீர் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருக்கவும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (ஜிப்ரீல் மூலம்) அதனை நாம் (உமக்கு) ஓதுவோமாயின் (ஓதப்படும்) அதன் ஓதுதலை நீர் பின் தொட(ர்ந்து ஓது)வீராக!
Saheeh International
So when We have recited it [through Gabriel], then follow its recitation.
ثُمَّ اِنَّ عَلَیْنَا بَیَانَهٗ ۟ؕ
ثُمَّபிறகுاِنَّநிச்சயமாகعَلَيْنَاநம்மீது கடமையாகும்بَيَانَهٗؕ‏அதை விவரிப்பது
தும்ம இன்ன 'அலய்னா Bபயானஹ்
முஹம்மது ஜான்
பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், அதை விவரித்துக் கூறுவதும் நம்மீதுள்ள கடமையாகும்.
IFT
பின்னர், இதன் கருத்தை விளக்குவதும் நமது பொறுப்பே ஆகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், நிச்சயமாக அதனைத் தெளிவு செய்வதும், நம் மீதா(ன கடமையா)கும்.
Saheeh International
Then upon Us is its clarification [to you].
كَلَّا بَلْ تُحِبُّوْنَ الْعَاجِلَةَ ۟ۙ
كَلَّاஅவ்வாறல்லبَلْமாறாகتُحِبُّوْنَநீங்கள் நேசிக்கிறீர்கள்الْعَاجِلَةَ ۙ‏உலக வாழ்க்கையை
கல்லா Bபல் துஹிBப்Bபூனல் 'ஆஜிலஹ்
முஹம்மது ஜான்
எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும் (மனிதர்களே!) நீங்கள் (அவசரமான) உலக வாழ்க்கையைத்தான் விரும்புகிறீர்கள்.
IFT
ஒருபோதுமில்லை. உண்மை யாதெனில், நீங்கள் உடனடியாகக் கிடைக்கக் கூடியதை (அதாவது இம்மையை) நேசிக்கின்றீர்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஏன் இல்லை! பின்னர் (மனிதர்களே!) நீங்கள் அவசரமானதை (இம்மையை) விரும்புகின்றீர்கள்.
Saheeh International
No! But you [i.e., mankind] love the immediate
وَتَذَرُوْنَ الْاٰخِرَةَ ۟ؕ
وَتَذَرُوْنَவிட்டு விடுகிறீர்கள்الْاٰخِرَةَ ؕ‏மறுமையை
வ ததரூனல் ஆகிரஹ்
முஹம்மது ஜான்
ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆதலால்தான், இம்மையை விரும்பி) மறுமையை நீங்கள் விட்டு விடுகிறீர்கள்.
IFT
மறுமையை விட்டுவிடுகின்றீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும் மறுமையை நீங்கள் விட்டுவிடுகின்றீர்கள்.
Saheeh International
And leave [i.e., neglect] the Hereafter.
وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ نَّاضِرَةٌ ۟ۙ
وُجُوْهٌசில முகங்கள்يَّوْمَٮِٕذٍஅந்நாளில்نَّاضِرَةٌ ۙ‏செழிப்பாக இருக்கும்
வுஜூஹு(ன்)ய் யவ்ம 'இதின் னாளிரஹ்
முஹம்மது ஜான்
அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் சில(ருடைய) முகங்கள் மிக்க ஒளிவுடன் மகிழ்ச்சியுடையவையாக இருக்கும்.
IFT
அந் நாளில் சில முகங்கள் பொலிவுடன் விளங்கும்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்நாளில் சில(ருடைய) முகங்கள் (சந்தோஷத்தால்) மலர்ச்சியானவையாக இருக்கும்.
Saheeh International
[Some] faces, that Day, will be radiant,
اِلٰى رَبِّهَا نَاظِرَةٌ ۟ۚ
اِلٰى رَبِّهَاதமது இறைவனைنَاظِرَةٌ‌ ۚ‏பார்த்துக் கொண்டிருக்கும்
இலா ரBப்Bபிஹா னாளிரஹ்
முஹம்மது ஜான்
தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
(அவை) தங்கள் இறைவனை நோக்கிய வண்ணமாக இருக்கும்.
IFT
தம்முடைய அதிபதியைப் பார்த்த வண்ணமிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவை) தங்கள் இரட்சகனை நோக்கிக் கொண்டிருக்கும்.
Saheeh International
Looking at their Lord.
وَوُجُوْهٌ یَّوْمَىِٕذٍۭ بَاسِرَةٌ ۟ۙ
وَوُجُوْهٌஇன்னும் சில முகங்கள்يَّوْمَٮِٕذٍۢஅந்நாளில்بَاسِرَةٌ ۙ‏கருத்து காய்ந்துபோய் இருக்கும்
வ வுஜூஹு(ன்)ய் யவ்ம 'இதிம் Bபாஸிரஹ்
முஹம்மது ஜான்
ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
வேறு சில(ருடைய) முகங்களோ அந்நாளில் (துக்கத்தால்) வாடியவையாக இருக்கும்.
IFT
வேறுசில முகங்கள் துயரமடைந்திருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அந்நாளில் சிலருடைய) முகங்கள் (துக்கத்தால் கறுத்து) சோகமானவையாக இருக்கும்.
Saheeh International
And [some] faces, that Day, will be contorted,
تَظُنُّ اَنْ یُّفْعَلَ بِهَا فَاقِرَةٌ ۟ؕ
تَظُنُّஅறிந்துகொள்ளும்اَنْ يُّفْعَلَநிகழப்போகிறதுஎன்றுبِهَاஅதற்குفَاقِرَةٌ ؕ‏கடுமையான ஒரு பிரச்சனை
தளுன்னு அ(ன்)ய் யுFப்'அல Bபிஹா Fபாகிரஹ்
முஹம்மது ஜான்
இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
(பாவச் சுமையின் காரணமாகத்) தங்கள் இடுப்பு முறிந்துவிடுமோ என்று எண்ணி(ப் பயந்து) கொண்டிருப்பார்கள்.
IFT
மேலும், இடுப்பை முறிக்கும் அனுபவங்கள் அவற்றிற்கு ஏற்படப்போகின்றன என்று புரிந்து கொண்டிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
முதுகுகளை முறித்துவிடும் பேராபத்து தங்களுக்கு உண்டாக்கப்படும் என்று அவை உறுதிகொண்டிருக்கும்.
Saheeh International
Expecting that there will be done to them [something] backbreaking.
كَلَّاۤ اِذَا بَلَغَتِ التَّرَاقِیَ ۟ۙ
كَلَّاۤஅவ்வாறல்ல!اِذَا بَلَغَتِஉயிர் அடைந்தால்التَّرَاقِىَۙ‏தொண்டைக் குழியை
கல்லா இதா Bபலகதித் தராகீ
முஹம்மது ஜான்
அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,-
அப்துல் ஹமீது பாகவி
எனினும், (எவனேனும் நோய்வாய்ப்பட்டு, அவனின்) உயிர் தொண்டைக் குழியை அடைந்துவிட்டால்,
IFT
ஒருபோதுமில்லை! உயிர் தொண்டை வரை எட்டும்போது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மறுமைநாள் வெகுதூரமென நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களே!) அவ்வாறல்ல! (இதோ அதன் தொடக்கமாக மரணவேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்துவிட்டால்,
Saheeh International
No! When it [i.e., the soul] has reached the collar bones
وَقِیْلَ مَنْ ٚ رَاقٍ ۟ۙ
وَقِيْلَகேட்கப்பட்டால்مَنْ ٚ رَاقٍۙ‏யாரும்/ஒதிப்பார்ப்பவர்
வ கீல மன் ராக்
முஹம்மது ஜான்
“மந்திரிப்பவன் யார்?” எனக் கேட்கப்படுகிறது.
அப்துல் ஹமீது பாகவி
(அவனுக்குச் சமீபத்தில் இருப்பவர்கள் அவனைச் சுகமாக்க) மந்திரிப்பவன் யார்? (எங்கிருக்கிறான்?) என்று கேட்கின்றனர்.
IFT
மேலும், “மந்திரித்து ஊதுபவர் எவரேனும் உண்டா?” என்று கேட்கப்படும்போது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“மந்திரிப்பவன் எவன்?” என்றும் கேட்கப்படுகிறது.
Saheeh International
And it is said, "Who will cure [him]?"
وَّظَنَّ اَنَّهُ الْفِرَاقُ ۟ۙ
وَّظَنَّஇன்னும் அறிந்து கொண்டால்اَنَّهُநிச்சயமாக இதுالْفِرَاقُۙ‏பிரிவுதான்
வ ளன்ன அன்னஹுல் Fபிராக்
முஹம்மது ஜான்
ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அவனோ நிச்சயமாக இதுதான் (தன்) பிரிவினை என்பதை (உறுதியாக) அறிந்துகொள்கிறான்.
IFT
மேலும் இது உலகைவிட்டுப் பிரியும் நேரம் என்று மனிதன் புரிந்துகொள்ளும் போது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆனால்) அவனோ நிச்சயமாக இதுதான் தன்னுடைய (பிரிவுக்குரிய காலம்) என்பதை (உறுதியாக) அறிந்து கொள்கிறான்.
Saheeh International
And he [i.e., the dying one] is certain that it is the [time of] separation
وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ ۟ۙ
وَالْتَفَّتِபின்னிக்கொண்டால்السَّاقُகெண்டைக் கால்بِالسَّاقِۙ‏கெண்டைக் காலுடன்
வல்தFப்Fபதிஸ் ஸாகு Bபிஸ்ஸாக்
முஹம்மது ஜான்
இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.
அப்துல் ஹமீது பாகவி
(அவனுடைய) கெண்டைக்கால், கெண்டைக் காலோடு பின்னிக் கொள்ளும்.
IFT
கெண்டைக்கால், கெண்டைக்காலுடன் பின்னிப் பிணையும் போது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (அவனுடைய) கெண்டைக்கால், கெண்டைக் காலோடு பின்னிக்கொள்ளும்.
Saheeh International
And the leg is wound about the leg,
اِلٰى رَبِّكَ یَوْمَىِٕذِ لْمَسَاقُ ۟ؕ۠
اِلٰى رَبِّكَஉமது இறைவனிடமேيَوْمَٮِٕذِஅந்நாளில்اۨلْمَسَاقُؕ‏ஓட்டிக்கொண்டு வரப்படுகின்ற இடம்
இலா ரBப்Bபிக யவ்ம'இதினில் மஸாக்
முஹம்மது ஜான்
உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.  
அப்துல் ஹமீது பாகவி
அச்சமயம், அவன் (காரியம் முடிவு பெற்று) உமது இறைவன் பக்கம் ஓட்டப்பட்டு விடுகிறான்.
IFT
அந்நாளில்தான் உன் அதிபதியின் பக்கம் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்நாளில் இழுத்துச் செல்லப்படுதல் உமதிரட்சகன்பால் இருக்கிறது.
Saheeh International
To your Lord, that Day, will be the procession.
فَلَا صَدَّقَ وَلَا صَلّٰى ۟ۙ
فَلَا صَدَّقَஉண்மைப்படுத்தவில்லைوَلَا صَلّٰىۙ‏தொழவும் இல்லை
Fபலா ஸத்தக வலா ஸல்லா
முஹம்மது ஜான்
ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை; அவன் தொழவுமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(அவனோ அல்லாஹ்வுடைய வசனங்களை) உண்மையாக்கவுமில்லை; தொழவுமில்லை.
IFT
ஆனால், அவன் உண்மையென ஏற்கவுமில்லை; தொழவுமில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அல்லாஹ்வுடைய வேதத்தையும், அவனின் தூதரையும்) அவன் உண்மையாக்கவில்லை, அவன் இரட்சகனைத் தொழவுமில்லை.
Saheeh International
And he [i.e., the disbeliever] had not believed, nor had he prayed.
وَلٰكِنْ كَذَّبَ وَتَوَلّٰى ۟ۙ
وَلٰڪِنْஎனினும்كَذَّبَபொய்ப்பித்தான்وَتَوَلّٰىۙ‏இன்னும் விலகிச் சென்றான்
வ லாகின் கத்தBப வ தவல்லா
முஹம்மது ஜான்
ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும் (அவன் அவற்றைப்) பொய்யாக்கி வைத்து(த் தொழாதும்) விலகிக்கொண்டான்.
IFT
மாறாகப் பொய்யென வாதிட்டான்; திரும்பிச் சென்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனினும் அவன் பொய்யாக்கி புறக்கணித்தும் விட்டான்.
Saheeh International
But [instead], he denied and turned away.
ثُمَّ ذَهَبَ اِلٰۤی اَهْلِهٖ یَتَمَطّٰى ۟ؕ
ثُمَّபிறகுذَهَبَசென்றான்اِلٰٓى اَهْلِهٖதனது குடும்பத்தாரிடம்يَتَمَطّٰىؕ‏கர்வம் கொண்டவனாக
தும்ம தஹBப இலா அஹ்லிஹீ யதமத்தா
முஹம்மது ஜான்
பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், கர்வம்கொண்டு தன் குடும்பத்துடன் (தன் வீட்டிற்குச்) சென்று விட்டான்.
IFT
பின்னர், ஆணவம் கொண்டு தன் குடும்பத்தாரிடம் சென்றுவிட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், தன் குடும்பத்தாரிடம் அகம்பாவம் கொண்டவனாகச் சென்று விட்டான்.
Saheeh International
And then he went to his people, swaggering [in pride].
اَوْلٰى لَكَ فَاَوْلٰى ۟ۙ
اَوْلٰىகேடுதான்لَكَஉனக்குفَاَوْلٰىۙ‏இன்னும் கேடுதான்
அவ்லா லக Fப அவ்லா
முஹம்மது ஜான்
கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!
அப்துல் ஹமீது பாகவி
(மனிதனே!) உனக்குக் கேடுதான்; மேலும் கேடுதான்!
IFT
இந்த நடத்தை உனக்குத்தான் பொருத்தமானது; உனக்குத்தான் அழகானது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதனே!) உன்னை அழிக்கக்கூடியது நெருங்கிவிட்டது.! பின்னரும் உன்னை அழிக்கக்கூடியது நெருங்கிவிட்டது.
Saheeh International
Woe to you, and woe!
ثُمَّ اَوْلٰى لَكَ فَاَوْلٰى ۟ؕ
ثُمَّபிறகு(ம்)اَوْلٰىகேடுதான்لَكَஉனக்குفَاَوْلٰىؕ‏இன்னும் கேடுதான்
தும்ம அவ்லா லக Fப அவ்லா
முஹம்மது ஜான்
பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், உனக்குக் கேடுதான்! மேலும் கேடுதான் (உனக்கு)!
IFT
ஆம்! இந்த நடத்தை உனக்குத்தான் பொருத்தமானது; உனக்குத்தான் அழகானது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னும் உன்னை அழிக்கக்கூடியது நெருங்கிவிட்டது! அப்பாலும் உன்னை அழிக்கக்கூடியது நெருங்கிவிட்டது.
Saheeh International
Then woe to you, and woe!
اَیَحْسَبُ الْاِنْسَانُ اَنْ یُّتْرَكَ سُدًی ۟ؕ
اَيَحْسَبُஎண்ணுகின்றானாالْاِنْسَانُமனிதன்اَنْ يُّتْرَكَவிட்டு விடப்படுவான் என்றுسُدًىؕ‏சும்மா
அயஹ்ஸBபுல் இன்ஸானு அய் யுத்ரக ஸுதா
முஹம்மது ஜான்
வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?
அப்துல் ஹமீது பாகவி
(ஒரு கேள்வியும் தம்மிடம் கேட்காது) சும்மா விட்டு விடப்படுவோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டானா?
IFT
மனிதன் வெறுமனே விட்டுவிடப்படுவான் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றானா என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(எத்தகைய கேள்விக்கணக்கும் கேட்கப்படாமல்) வீணாக விடப்பட்டு விடுவான் என்று மனிதன் எண்ணிக்கொண்டானா?
Saheeh International
Does man think that he will be left neglected?
اَلَمْ یَكُ نُطْفَةً مِّنْ مَّنِیٍّ یُّمْنٰى ۟ۙ
اَلَمْ يَكُஅவன் இருக்கவில்லையா?نُطْفَةًஒரு துளி விந்தாகمِّنْ مَّنِىٍّஇந்திரியத்தின்يُّمْنٰىۙ‏இந்திரியம் செலுத்தப்படுகின்றது
அலம் யகு னுத்Fபதம் மிம் மனிய்யி(ன்)ய் யும்னா
முஹம்மது ஜான்
(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
அவன் (கர்ப்பத்தில்) செலுத்தப்பட்ட ஓர் இந்திரியத் துளியாக இருக்க வில்லையா?
IFT
(கருவறையில்) செலுத்தப்படும் அற்பமான இந்திரியத் துளியாய் அவன் இருக்கவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(கர்ப்பத்தில்) செலுத்தப்படும் ஓர் இந்திரியத் துளியாக அவன் இருக்கவில்லையா?
Saheeh International
Had he not been a sperm from semen emitted?
ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوّٰى ۟ۙ
ثُمَّபிறகுكَانَஇருந்தான்عَلَقَةًகருவாகفَخَلَقَஆக, அவன் படைத்தான்فَسَوّٰىۙ‏இன்னும் செம்மையாக ஆக்கினான்
தும்ம கான 'அலகதன் Fபகலக Fபஸவ்வா
முஹம்மது ஜான்
பின்னர் அவன் “அலக்” என்ற நிலையில் இருந்தான்; அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.
அப்துல் ஹமீது பாகவி
(இந்திரியமாக இருந்த) பின்னர், அவன் கருவாக மாறினான் (அவனை) அல்லாஹ்தான் படைத்து முழுமையான மனிதனாக ஆக்கிவைத்தான்.
IFT
பின்னர் அவன் ஓர் இரத்தக்கட்டியாக ஆனான். பின்னர், அல்லாஹ் அவனுடைய உடலைப் படைத்தான். அவனுடைய உறுப்புகளைப் பொருத்தமாக அமைத்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் அவன் (அட்டைப்பூச்சி போன்று ஒட்டிக்கொண்டிருக்கும்) இரத்தக் கட்டியாக இருந்தான், பின்னர் (அவனை) அவன் படைத்து(ப் பின்னர்) செவ்வையாக்கி வைத்தான்.
Saheeh International
Then he was a clinging clot, and [Allah] created [his form] and proportioned [him]
فَجَعَلَ مِنْهُ الزَّوْجَیْنِ الذَّكَرَ وَالْاُ ۟ؕ
فَجَعَلَஇன்னும் ஆக்கினான்مِنْهُஅதிலிருந்துالزَّوْجَيْنِஜோடிகளைالذَّكَرَஆண்وَالْاُنْثٰىؕ‏இன்னும் பெண்
Fபஜ'அல மின்ஹுZஜ் Zஜவ்ஜய்னித் தகர வல் உன்தா
முஹம்மது ஜான்
பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆண், பெண் ஜோடிகளையும் அதிலிருந்து உற்பத்தி செய்கிறான்.
IFT
பிறகு, அவனிலிருந்து ஆண் பெண் என இரு இனங்களை உருவாக்கினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் (மனிதனாகிய) அவனிலிருந்து ஆண், பெண் என்ற இரு வகையை அவன் ஆக்கினான்.
Saheeh International
And made of him two mates, the male and the female.
اَلَیْسَ ذٰلِكَ بِقٰدِرٍ عَلٰۤی اَنْ یُّحْیِ الْمَوْتٰى ۟۠
اَلَيْسَஇல்லையா?ذٰلِكَஇவன்بِقٰدِرٍஆற்றல் உள்ளவனாகعَلٰٓى اَنْ يُّحْـىَِۧஉயிர்ப்பிப்பதற்குالْمَوْتٰىஇறந்தவர்களை
அலய்ஸ தாலிக Bபிகாதிரின் 'அலா அ(ன்)ய் யுஹ்யியல் மவ்தா
முஹம்மது ஜான்
(இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?
அப்துல் ஹமீது பாகவி
(இவற்றையெல்லாம் செய்த) அவன் மரணித்தவர்களை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவனாக இல்லையா?
IFT
இத்தகைய இறைவன் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பித்திட ஆற்றலுடையவன் இல்லையா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வாறு செய்த) அவன் மரணித்தோரை உயிர்ப்பிக்க ஆற்றல் உடையவனா இல்லையா?
Saheeh International
Is not that [Creator] Able to give life to the dead?