77. ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை)

மக்கீ, வசனங்கள்: 50

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
وَالْمُرْسَلٰتِ عُرْفًا ۟ۙ
وَالْمُرْسَلٰتِ عُرْفًا ۙ‏தொடர்ச்சியாக வீசுகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!
வல் முர்ஸலாதி'உர்Fபா
முஹம்மது ஜான்
தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக-
அப்துல் ஹமீது பாகவி
நன்மைக்காக அனுப்பப்படுபவர்கள் மீது சத்தியமாக!
IFT
தொடர்ந்து அனுப்பப்படுகின்ற காற்றுகள் மீது சத்தியமாக;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தொடர்ச்சியாக (ஒன்றன் பின் ஒன்றாக) அனுப்பப்படுபவைகளின் மீது சத்தியமாக-
Saheeh International
By those [winds] sent forth in gusts
فَالْعٰصِفٰتِ عَصْفًا ۟ۙ
فَالْعٰصِفٰتِ عَصْفًا ۙ‏அதிவேகமாக வீசுகின்ற புயல்காற்றுகள் மீது சத்தியமாக!
Fபல்'ஆஸிFபாதி 'அஸ்Fபா
முஹம்மது ஜான்
வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-
அப்துல் ஹமீது பாகவி
இன்னும் அதி வேகமாகச் செல்லும் (புயல்) காற்றுகள் மீது சத்தியமாக!
IFT
பிறகு, புயல் வேகத்தில் வீசுகின்றவற்றின் மீது சத்தியமாக;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வீசும் கடும்புயல் காற்றுகளின் மீது சத்தியமாக!
Saheeh International
And the winds that blow violently
وَّالنّٰشِرٰتِ نَشْرًا ۟ۙ
وَّالنّٰشِرٰتِ نَشْرًا ۙ‏பரப்புகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!
வன்னாஷிராதி னஷ்ரா
முஹம்மது ஜான்
(மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-
அப்துல் ஹமீது பாகவி
(மேகங்களை பல திசைகளில்) பரப்பிவிடுபவர்கள் மீதும் சத்தியமாக!
IFT
(மேகங்களை) பரப்புகின்றவற்றின் மீது சத்தியமாக;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மேகங்களைக்) கிளப்பி பரப்பிவிடுபவைகளின் மீது சத்தியமாக!
Saheeh International
And [by] the winds that spread [clouds]
فَالْفٰرِقٰتِ فَرْقًا ۟ۙ
فَالْفٰرِقٰتِ فَرْقًا ۙ‏தெளிவாக பிரித்துவிடக்கூடியவற்றின் மீது சத்தியமாக!
Fபல்Fபாரிகாதி Fபர்கா
முஹம்மது ஜான்
(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-
அப்துல் ஹமீது பாகவி
(உண்மை, பொய்களுக்கிடையில்) தெளிவாகப் பிரித்தறிவிப்பவை(யான வேதங்கள்) மீதும் சத்தியமாக!
IFT
பிறகு, அவற்றைத் துண்டு துண்டாகப் பிளக்கின்றவற்றின் மீது சத்தியமாக;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறு படுத்திக் காட்டு(ம் வஹீ எனும் கட்டளையைக் கொண்டு இறங்கு)பவர்கள் மீது சத்தியமாக!
Saheeh International
And those [angels] who bring criterion
فَالْمُلْقِیٰتِ ذِكْرًا ۟ۙ
فَالْمُلْقِيٰتِ ذِكْرًا ۙ‏இறக்குகின்றவர்கள் மீது சத்தியமாக!
Fபல்முல்கியாதி திக்ரா
முஹம்மது ஜான்
(இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-
அப்துல் ஹமீது பாகவி
மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!
IFT
பிறகு, (இதயங்களில் இறைவனின்) நினைவை உண்டாக்குபவைமீது சத்தியமாக;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(தூதர்கள்பால்) வஹீயைக் கொண்டுவந்து கொடுப்பவர்கள் மீது சத்தியமாக!
Saheeh International
And those [angels] who deliver a message.
عُذْرًا اَوْ نُذْرًا ۟ۙ
عُذْرًاஒரு காரணமாகاَوْஅல்லதுنُذْرًا ۙ‏எச்சரிக்கையாக இருப்பதற்காக!
'உத்ரன் அவ் னுத்ரா
முஹம்மது ஜான்
(அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்)
அப்துல் ஹமீது பாகவி
மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!
IFT
மன்னிப்புப் பெறுவதற்காக அல்லது அச்சமூட்டி எச்சரிப்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அந்த வஹீயின் மூலம் அறிவிக்கப்பட்டவை) மன்னிப்பாக அல்லது எச்சரிக்கையாக இருக்கும்.
Saheeh International
As justification or warning,
اِنَّمَا تُوْعَدُوْنَ لَوَاقِعٌ ۟ؕ
اِنَّمَا تُوْعَدُوْنَநிச்சயமாக நீங்கள் எச்சரிக்கப்படுவதுلَوَاقِعٌ ؕ‏நிகழ்ந்தே தீரும்
இன்னமா தூ'அதூன லவாகி'
முஹம்மது ஜான்
நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக உங்களுக்குப் பயமுறுத்தப்படும் (நாள்) வந்தே தீரும்.
IFT
எதைப் பற்றி உங்களிடம் வாக்களிக்கப்படுகின்றதோ, அது திண்ணமாக நிகழக்கூடியதே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப்படுவதெல்லாம் நிகழக்கூடியதேயாகும்.
Saheeh International
Indeed, what you are promised is to occur.
فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْ ۟ۙ
فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْۙ‏நட்சத்திரங்கள் ஒளி மங்கிவிடும்போது
Fப இதம் னுஜூமு துமிஸத்
முஹம்மது ஜான்
இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது-
அப்துல் ஹமீது பாகவி
அந்நேரத்தில், நட்சத்திரங்கள் அழிக்கப்பட்டுவிடும்.
IFT
பிறகு, நட்சத்திரங்கள் ஒளியிழந்து போகும்பொழுது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, நட்சத்திரங்கள் -(அவற்றின் ஒளி) அழிக்கப்பட்டுவிடும்போது-
Saheeh International
So when the stars are obliterated
وَاِذَا السَّمَآءُ فُرِجَتْ ۟ۙ
وَ اِذَا السَّمَآءُ فُرِجَتْۙ‏வானம் பிளக்கப்படும் போது
வ இதஸ் ஸமா'உ Fபுரிஜத்
முஹம்மது ஜான்
மேலும், வானம் பிளக்கப்படும் போது-
அப்துல் ஹமீது பாகவி
அப்போது வானம் திறக்கப்பட்டுவிடும்.
IFT
வானம் பிளக்கப்படும்பொழுது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், வானம் - அது பிளக்கப்பட்டுவிடும்போது-
Saheeh International
And when the heaven is opened
وَاِذَا الْجِبَالُ نُسِفَتْ ۟ۙ
وَاِذَا الْجِبَالُ نُسِفَتْۙ‏மலைகள் சுக்கு நூறாக பொசுக்கப்படும்போது
வ இதல் ஜிBபாலு னுஸிFபத்
முஹம்மது ஜான்
அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது-
அப்துல் ஹமீது பாகவி
அப்போது மலைகள் (தூசிகளைப் போல்) தவிடு பொடியாக்கப்படும்.
IFT
மலைகள் தூள்தூளாக் கப்படும்பொழுது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், மலைகள் (தூசிகளைப்போன்று) பறக்கடிக்கப்பட்டு விடும்போது-
Saheeh International
And when the mountains are blown away
وَاِذَا الرُّسُلُ اُقِّتَتْ ۟ؕ
وَاِذَا الرُّسُلُ اُقِّتَتْؕ‏தூதர்கள் ஒன்று சேர்க்கப்படும்போது
வ இதர் ருஸுலு உக்கிதத்
முஹம்மது ஜான்
மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது-
அப்துல் ஹமீது பாகவி
அப்போது தூதர்கள் விசாரணைக்காகக் கொண்டு வரப்படுவார்கள்.
IFT
இறைத்தூதர்கள் ஆஜராகும் நேரம் வரும் பொழுது (அது நிகழ்ந்துவிடும்).
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், தூதர்களுக்கு நேரம் குறிக்கப்பட்டு விடும்போது-
Saheeh International
And when the messengers' time has come...
لِاَیِّ یَوْمٍ اُجِّلَتْ ۟ؕ
لِاَىِّ يَوْمٍஎந்த நாளுக்காக?اُجِّلَتْؕ‏அவர்கள் தாமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்
லி அய்யி யவ்மின் உஜ்ஜிலத்
முஹம்மது ஜான்
எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?
அப்துல் ஹமீது பாகவி
(இவை எல்லாம்) எதுவரை பிற்படுத்தப்பட்டிருக்கின்றன (என்பதை நபியே! நீர் அறிவீரா)?
IFT
எந்த நாளுக்காக இந்தக் காரியம் பிற்படுத்தப்பட்டுள்ளது?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எந்த நாளுக்காக (இவை யாவும்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?
Saheeh International
For what Day was it postponed?
لِیَوْمِ الْفَصْلِ ۟ۚ
لِيَوْمِ الْفَصْلِ‌ۚ‏தீர்ப்பு நாளுக்காக
லி யவ்மில் Fபஸ்ல்
முஹம்மது ஜான்
தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்.
அப்துல் ஹமீது பாகவி
தீர்ப்பு கூறப்படும் நாள் வரைதான்!
IFT
தீர்ப்பு நாளுக்காகத் தான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தீர்ப்பு நாளுக்காக (பிற்படுத்தப்பட்டன என்று கூறப்படும்)
Saheeh International
For the Day of Judgement.
وَمَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الْفَصْلِ ۟ؕ
وَمَاۤ اَدْرٰٮكَஉமக்குத் தெரியுமா?مَا يَوْمُ الْفَصْلِؕ‏தீர்ப்பு நாள் என்னவென்று
வ மா அத்ராக மா யவ்முல் Fபஸ்ல்
முஹம்மது ஜான்
மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) தீர்ப்பு கூறப்படும் நாளின் தன்மையை நீர் அறிவீரா?.
IFT
அந்தத் தீர்ப்புநாள் என்னவென்று உமக்குத் தெரியுமா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் (நபியே!) தீர்ப்பு (க்கூறப்படும்) நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
Saheeh International
And what can make you know what is the Day of Judgement?
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
وَيْلٌநாசம்தான்يَّوْمَٮِٕذٍஅந்நாளில்لِّلْمُكَذِّبِيْنَ‏பொய்ப்பித்தவர்களுக்கு
வய்லு(ன்)ய் யவ்ம 'இதில்லில்முகத்திBபீன்
முஹம்மது ஜான்
(நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.
அப்துல் ஹமீது பாகவி
(நம் வசனங்களைப்) பொய்யாக்கியவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
IFT
பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
Saheeh International
Woe, that Day, to the deniers.
اَلَمْ نُهْلِكِ الْاَوَّلِیْنَ ۟ؕ
اَلَمْ نُهْلِكِநாம் அழிக்கவில்லையா?الْاَوَّلِيْنَؕ‏முன்னோர்களை
அலம் னுஹ்லிகில் அவ்வலீன்
முஹம்மது ஜான்
முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
(அதைப் பொய்யாக்கிக் கொண்டிருந்த) முன்னிருந்தவர்களையும் நாம் அழித்துவிடவில்லையா?
IFT
நாம் முன் சென்றோரை அழிக்கவில்லையா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதனைப் பொய்யாக்கிக் கொண்டிருந்த) முன்னிருந்தோரை, நாம் அழிக்கவில்லையா?
Saheeh International
Did We not destroy the former peoples?
ثُمَّ نُتْبِعُهُمُ الْاٰخِرِیْنَ ۟
ثُمَّபிறகுنُتْبِعُهُمُஅவர்களுக்கு பின்தொடர வைத்தோம்الْاٰخِرِيْنَ‏பின்னோர்களை
தும்ம னுத்Bபி'உஹுமுல் ஆகிரீன்
முஹம்மது ஜான்
பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு பின்னுள்ளவர்களையும் (அழிந்து போன அவர்களைப்) பின்தொடரும்படி நாம் செய்வோம்,
IFT
பின்னர் அவர்களின் அடிச்சுவட்டில்தானே பின்வருவோரையும் நடக்கச் செய்வோம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், பின்னுள்ளோரை (அழிக்கப்பட்ட) அவர்களைப் பின் தொடருமாறு நாம் செய்தோம்.
Saheeh International
Then We will follow them with the later ones.
كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِیْنَ ۟
كَذٰلِكَஇவ்வாறுதான்نَفْعَلُநாம் செய்வோம்بِالْمُجْرِمِيْنَ‏குற்றவாளிகளுக்கு
கதலிக னFப்'அலு Bபில்முஜ்ரிமீன்
முஹம்மது ஜான்
குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்).
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களையும் அழித்தோம்.) அவ்வாறே, இக்குற்றவாளிகளையும் நாம் (அழிந்துபோகச்) செய்வோம்.
IFT
குற்றவாளிகளிடம் நாம் இப்படித்தான் நடந்துகொள்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
குற்றவாளிகளை அவ்வாறுதான் நாம் (அழித்து நாசம்) செய்வோம்.
Saheeh International
Thus do We deal with the criminals.
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
وَيْلٌநாசம்தான்!يَّوْمَٮِٕذٍஅந்நாளில்لِّلْمُكَذِّبِيْنَ‏பொய்ப்பித்தவர்களுக்கு
வய்லு(ன்)வ் யவ்ம 'இதில் லில் முகத்திBபீன்
முஹம்மது ஜான்
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நம் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
IFT
பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
Saheeh International
Woe, that Day, to the deniers.
اَلَمْ نَخْلُقْكُّمْ مِّنْ مَّآءٍ مَّهِیْنٍ ۟ۙ
اَلَمْ نَخْلُقْكُّمْநாம் உங்களை படைக்கவில்லையா?مِّنْ مَّآءٍஒரு நீரிலிருந்துمَّهِيْنٍۙ‏பலவீனமான
அலம் னக்லுக்கும் மிம்மா'இம் மஹீன்
முஹம்மது ஜான்
அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
ஓர் அற்பத் துளியைக் கொண்டு நாம் உங்களைப் படைக்கவில்லையா?
IFT
என்ன, நாம் உங்களை அற்பமானதொரு நீரிலிருந்து படைக்கவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இழிவான நீரிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?
Saheeh International
Did We not create you from a liquid disdained?
فَجَعَلْنٰهُ فِیْ قَرَارٍ مَّكِیْنٍ ۟ۙ
فَجَعَلْنٰهُஅதை வைத்தோம்فِىْ قَرَارٍஓர் இடத்தில்مَّكِيْنٍۙ‏உறுதியான
Fபஜ'அல்னாஹு Fபீ கராரிம் மகீன்
முஹம்மது ஜான்
பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம்,
IFT
மேலும், அதனை பாதுகாப்பான ஓர் இடத்தில் வைக்கவில்லையா
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அதனைப் பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப் பையில்) ஆக்கினோம்.
Saheeh International
And We placed it in a firm lodging [i.e., the womb]
اِلٰی قَدَرٍ مَّعْلُوْمٍ ۟ۙ
اِلٰى قَدَرٍஒரு தவணை வரைمَّعْلُوْمٍۙ‏குறிப்பிட்ட
இல்லா கத்ரிம் மஃலூம்
முஹம்மது ஜான்
ஒரு குறிப்பிட்ட (கால) அளவு வரை.
அப்துல் ஹமீது பாகவி
அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம்,
IFT
ஒரு குறிப்பிட்ட காலம்வரை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
குறிப்பிட்ட (கால) அளவு வரை,
Saheeh International
For a known extent.
فَقَدَرْنَا ۖۗ فَنِعْمَ الْقٰدِرُوْنَ ۟
فَقَدَرْنَا ۖநாம் திட்டமிட்டோம்فَنِعْمَ الْقٰدِرُوْنَ‏நாமே சிறந்த திட்டமிடுபவர்கள்
Fபகதர்னா Fபனிஃமல் காதிரூன்
முஹம்மது ஜான்
இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர் நாமே அதை (மனிதனாகவும்) நிர்ணயம் செய்தோம். நிர்ணயம் செய்பவர்களில் நாமே மிக மேலானோர்.
IFT
(இதோ பாருங்கள்!) நாம் இதற்கான ஆற்றலுடையவர்கள்தாம். ஆம்! நாம் மிகச் சிறந்த ஆற்றல் கொண்டவர்கள்தாம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், நாமே அதனை (சிசுவாக) ஏற்படுத்தினோம்; ஏற்படுத்துவோரில் (நாம்) நல்லோராவோம்.
Saheeh International
And We determined [it], and excellent [are We] to determine.
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
وَيْلٌநாசம்தான்يَّوْمَٮِٕذٍஅந்நாளில்لِّلْمُكَذِّبِيْنَ‏பொய்ப்பித்தவர்களுக்கு
வய்லு(ன்)ய் யவ்ம 'இதில் லில்முகத்திBபீன்
முஹம்மது ஜான்
பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
IFT
பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே இவைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
Saheeh International
Woe, that Day, to the deniers.
اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ كِفَاتًا ۟ۙ
اَلَمْ نَجْعَلِநாம் ஆக்கவில்லையா?الْاَرْضَபூமியைكِفَاتًا ۙ‏ஒன்று சேர்க்கக்கூடியதாக
அலம் னஜ்'அலில் அர்ள கிFபாதா
முஹம்மது ஜான்
பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா?
IFT
நாம் பூமியை ஒன்று திரட்டி வைக்கக்கூடியதாக ஆக்கவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அணைத்துக் கொள்ளக்கூடியதாக பூமியை நாம் ஆக்கவில்லையா?
Saheeh International
Have We not made the earth a container
اَحْیَآءً وَّاَمْوَاتًا ۟ۙ
اَحْيَآءًஉயிருள்ளவர்களையும்وَّاَمْوَاتًا ۙ‏இறந்தவர்களையும்
அஹ்யா'அ(ன்)வ் வ அம்வாதா
முஹம்மது ஜான்
உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது).
அப்துல் ஹமீது பாகவி
பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா?
IFT
உயிருள்ளவர்களையும் மரித்தவர்களையும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உயிரோடிருப்போரையும், மரணித்தோரையும் (அணைத்துக் கொள்ளக் கூடியதாக அதை நாம் ஆக்கினோம்.)
Saheeh International
Of the living and the dead?
وَّجَعَلْنَا فِیْهَا رَوَاسِیَ شٰمِخٰتٍ وَّاَسْقَیْنٰكُمْ مَّآءً فُرَاتًا ۟ؕ
وَّجَعَلْنَاநாம் ஆக்கினோம்فِيْهَاஅதில்رَوَاسِىَமலைகளைشٰمِخٰتٍமிக பிரமாண்டமானوَّ اَسْقَيْنٰكُمْஇன்னும் உங்களுக்கு புகட்டினோம்مَّآءًநீரைفُرَاتًا ؕ‏மதுரமான
வ ஜ'அல்னா Fபீஹா ரவாஸிய ஷாமிகாதி(ன்)வ் வ அஸ்கய்னாகும் மா'அன் Fபுராதா
முஹம்மது ஜான்
அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம்.
அப்துல் ஹமீது பாகவி
அதில் உயர்ந்த மலைகளையும் நாம் அமைத்து (அவற்றிலிருந்து) மதுரமான நீரையும் உங்களுக்குப் புகட்டுகிறோம்.
IFT
மேலும், மிக உயர்ந்த மலைகளை அதில் நாம் நாட்டவில்லையா? உங்களுக்கு சுவையான நீரைப் புகட்டவும் இல்லையா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் அமைத்து, இனிமையான நீரையும் (அவற்றிலிருந்து) உங்களுக்குப் புகட்டுகின்றோம்.
Saheeh International
And We placed therein lofty, firmly set mountains and have given you to drink sweet water.
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
وَيْلٌநாசம்தான்يَّوْمَٮِٕذٍஅந்நாளில்لِّلْمُكَذِّبِيْنَ‏பொய்ப்பித்தவர்களுக்கு
வய்லு(ன்)ய் யவ்ம 'இதில் லில்முகத்திBபீன்
முஹம்மது ஜான்
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
அப்துல் ஹமீது பாகவி
(நம் அருட்கொடைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
IFT
பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நம்முடைய இவ்வருட்கொடையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
Saheeh International
Woe, that Day, to the deniers.
اِنْطَلِقُوْۤا اِلٰی مَا كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ۟ۚ
اِنْطَلِقُوْۤاசெல்லுங்கள்اِلٰى مَاஎதன் பக்கம்كُنْتُمْஇருந்தீர்களோبِهٖஅதைتُكَذِّبُوْنَ‌ۚ‏பொய்ப்பிப்பவர்களாக
இன்தலிகூ இலா மா குன்தும் Bபிஹீ துகத்திBபூன்
முஹம்மது ஜான்
“நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்களாக” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘எ(ந்த நரகத்)தை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ, அதன் பாலே நீங்கள் செல்லுங்கள்.
IFT
இப்போது செல்லுங்கள், நீங்கள் எதனைப் பொய்யென்று கூறிக் கொண்டிருந்தீர்களோ அதன் பக்கம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மறுமையில் இவர்களிடம்) எ(ந்த நரகத்)தை நீங்கள் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ அதன்பாலே நீங்கள் நடந்து செல்லுங்கள் (என்றும்)
Saheeh International
[They will be told], "Proceed to that which you used to deny.
اِنْطَلِقُوْۤا اِلٰی ظِلٍّ ذِیْ ثَلٰثِ شُعَبٍ ۟ۙ
اِنْطَلِقُوْۤاசெல்லுங்கள்اِلٰى ظِلٍّபுகையின் பக்கம்ذِىْஉடையثَلٰثِமூன்றுشُعَبٍۙ‏கிளைகளை
இன்தலிகூ இலா ளில்லின் தீ தலாதி ஷு'அBப்
முஹம்மது ஜான்
மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக.
அப்துல் ஹமீது பாகவி
மூன்று கிளைகளையுடைய (நரகத்தின்) புகையின் நிழலின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்'' (என்றும் கூறப்படும்).
IFT
செல்லுங்கள், மூன்று கிளைகளையுடைய நிழலின் பக்கம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மூன்று கிளைகளையுடைய (நரகப் புகையின்) நிழலின்பால் நீங்கள் நடந்து செல்லுங்கள் (என்றும் அவர்களுக்குக் கூறப்படும்.)
Saheeh International
Proceed to a shadow [of smoke] having three columns.
لَّا ظَلِیْلٍ وَّلَا یُغْنِیْ مِنَ اللَّهَبِ ۟ؕ
لَّا ظَلِيْلٍநிழல்தரக் கூடியது அல்லوَّلَا يُغْنِىْஅது தடுக்காதுمِنَ اللَّهَبِؕ‏ஜுவாலையை
லா ளலீலி(ன்)வ் வலா யுக்னீ மினல் லஹBப்
முஹம்மது ஜான்
(அது) நிழலளிப்பதுமல்ல; (நரகின்) தீச்சுவாலையை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல.
அப்துல் ஹமீது பாகவி
அதில் (குளிர்ச்சிதரும்) நிழலுமிராது; உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய எதுவுமிராது.
IFT
அது குளிரச் செய்யக்கூடியதுமன்று, தீச்சுவாலையிலிருந்து காப்பாற்றக்கூடியதுமன்று.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அது குளிர்ச்சி தரும்) நிழல் தரக்கூடியதல்ல; தீச்சுவாலையிலிருந்து அது காக்கக்கூடியதுமல்ல.
Saheeh International
[But having] no cool shade and availing not against the flame."
اِنَّهَا تَرْمِیْ بِشَرَرٍ كَالْقَصْرِ ۟ۚ
اِنَّهَاநிச்சயமாக அதுتَرْمِىْஎறியும்بِشَرَرٍநெருப்பு கங்குகளைكَالْقَصْرِ‌ۚ‏மாளிகையைப் போல் உள்ள
இன்னஹா தர்மீ Bபிஷரரின் கல்கஸ்ர்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
(எனினும்,) பெரிய மாளிகைகளைப்போன்ற நெருப்புக் கங்குகளை அது கக்கிக் கொண்டே இருக்கும்.
IFT
அந்த நெருப்பு, மாளிகைகளைப் போன்ற பெரும் பெரும் தீக்கங்குகளைக் கக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(எனினும்) நிச்சயமாக அது-(பெரிய) மாளிகையைப் போன்ற நெருப்புப் பொறிகளை அது வீசி எறியும்.
Saheeh International
Indeed, it throws sparks [as huge] as a fortress,
كَاَنَّهٗ جِمٰلَتٌ صُفْرٌ ۟ؕ
كَاَنَّهٗபோல்/அவையோجِمٰلَتٌஒட்டகைகளைصُفْرٌ ؕ‏கரு மஞ்சள் நிற
க அன்னஹூ ஜிமாலதுன் ஸுFப்ர்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
அவை மஞ்சள் நிறமுள்ள (பெரிய) ஒட்டகங்களைப் போல் தோன்றும்.
IFT
அது (குமுறி எழும்போது) மஞ்சள் நிற ஒட்டகங்களைப் போலிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அது மஞ்சள் நிறமான (பெரிய) ஒட்டகங்களைப்போல் இருக்கும்.
Saheeh International
As if they were yellowish [black] camels.
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
وَيْلٌநாசம்தான்يَّوْمَٮِٕذٍஅந்நாளில்لِّلْمُكَذِّبِيْنَ‏பொய்ப்பித்தவர்களுக்கு
வய்லு(ன்)ய் யவ்ம 'இதில் லில்முகதிBபீன்
முஹம்மது ஜான்
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
அப்துல் ஹமீது பாகவி
(இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
IFT
பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
Saheeh International
Woe, that Day, to the deniers.
هٰذَا یَوْمُ لَا یَنْطِقُوْنَ ۟ۙ
هٰذَاஇதுيَوْمُநாளாகும்لَا يَنْطِقُوْنَۙ‏அவர்கள் பேசாத
ஹாதா யவ்மு லா யன்திகூன்
முஹம்மது ஜான்
இது, அவர்கள் (எதுவும்) பேச முடியாத நாள்.
அப்துல் ஹமீது பாகவி
இது ஒரு நாளாகும். (இந்நாளில் எதுவுமே) அவர்கள் பேச சக்தி பெறமாட்டார்கள்.
IFT
இது எத்தகைய நாள் எனில், இதில் அவர்கள் எதுவும் பேசமாட்டார்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இது அவர்கள் பேச முடியாத நாளாகும்.
Saheeh International
This is a Day they will not speak,
وَلَا یُؤْذَنُ لَهُمْ فَیَعْتَذِرُوْنَ ۟
وَلَا يُؤْذَنُஅனுமதி தரப்படாதுلَهُمْஅவர்களுக்குفَيَـعْتَذِرُوْنَ‏அவர்கள் காரணம் கூறுவதற்கு
வ லா யு'தனு லஹும் Fப யஃததிரூன்
முஹம்மது ஜான்
அன்றியும் (தப்புவிப்பதற்காகப்) புகல் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், புகல் கூறவும் அவர்களுக்கு அனுமதி கிடைக்காது.
IFT
எந்தச் சாக்குப்போக்கும் கூறிட அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படமாட்டாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், அவர்களுக்கு (எதுவும் கூற) அனுமதிக்கப்படமாட்டாது; (அவ்வாறிருந்தும் வேதனை தாங்காது) அவர்கள் புகல் கூறுவர்.
Saheeh International
Nor will it be permitted for them to make an excuse.
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
وَيْلٌநாசம்தான்يَّوْمَٮِٕذٍஅந்நாளில்لِّلْمُكَذِّبِيْنَ‏பொய்ப்பித்தவர்களுக்கு
வய்லு(ன்)வ் யவ்ம 'இதில் லில்முகத்திBபீன்
முஹம்மது ஜான்
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
அப்துல் ஹமீது பாகவி
(இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
IFT
பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
Saheeh International
Woe, that Day, to the deniers.
هٰذَا یَوْمُ الْفَصْلِ ۚ جَمَعْنٰكُمْ وَالْاَوَّلِیْنَ ۟
هٰذَاஇதுيَوْمُநாளாகும்الْفَصْلِ‌ۚதீர்ப்புجَمَعْنٰكُمْஉங்களை(யும்) ஒன்று சேர்த்துள்ளோம்وَالْاَوَّلِيْنَ‏முன்னோரையும்
ஹாத யவ்முல் Fபஸ்லி ஜம 'னாகும் வல் அவ்வலீன்
முஹம்மது ஜான்
இது தீர்ப்புக்குரிய நாளாகும். உங்களையும், (உங்களுக்கு) முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும் (நாள்).
அப்துல் ஹமீது பாகவி
இதுவே தீர்ப்பு நாள். உங்களையும், (உங்களுக்கு) முன்னுள்ளோரையும் (விசாரணைக்காக) நாம் ஒன்று சேர்த்துவிடுவோம்.
IFT
இது தீர்ப்பளிக்கும் நாளாகும். நாம் உங்களையும் உங்களுக்கு முன் சென்றவர்களையும் ஒன்று திரட்டியுள்ளோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இது தீர்ப்பு நாள், உங்களையும், (உங்களுக்கு) முன்னுள்ளோரையும் (அந்நாளைக்காக) நாம் ஒன்று சேர்த்துவிட்டோம்.
Saheeh International
This is the Day of Judgement; We will have assembled you and the former peoples.
فَاِنْ كَانَ لَكُمْ كَیْدٌ فَكِیْدُوْنِ ۟
فَاِنْ كَانَஇருந்தால்لَـكُمْஉங்களிடம்كَيْدٌஒரு சூழ்ச்சிفَكِيْدُوْنِ‏எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள்
Fப இன் கான லகும் கய்துன் Fபகீதூன்
முஹம்மது ஜான்
எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (அந்நாளில் அவர்களை நோக்கி, ‘‘தப்பித்துக் கொள்ள) நீங்கள் ஏதும் சூழ்ச்சி செய்யக் கூடுமானால் சூழ்ச்சி செய்து பாருங்கள்'' (என்றும் கூறப்படும்).
IFT
இப்போது உங்களால் ஏதேனும் சூழ்ச்சி செய்ய முடியுமெனில், எனக்கெதிராக சூழ்ச்சி செய்து பாருங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (“தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள) உங்களிடம் ஏதும் சூழ்ச்சி இருந்தால் என்னிடம் சூழ்ச்சி செய்து பாருங்கள்” (என்றும் கூறப்படும்)
Saheeh International
So if you have a plan, then plan against Me.
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟۠
وَيْلٌநாசம்தான்يَّوْمَٮِٕذٍஅந்நாளில்لِّلْمُكَذِّبِيْنَ‏பொய்ப்பித்தவர்களுக்கு
வய்லு(ன்)ய் யவ்ம'இதில் லில்முகத்திBபீன்
முஹம்மது ஜான்
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
அப்துல் ஹமீது பாகவி
(இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
IFT
பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
Saheeh International
Woe, that Day, to the deniers.
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ ظِلٰلٍ وَّعُیُوْنٍ ۟ۙ
اِنَّநிச்சயமாகالْمُتَّقِيْنَஇறையச்சமுடையவர்கள்فِىْ ظِلٰلٍநிழல்களிலும்وَّعُيُوْنٍۙ‏ஊற்றுகளிலும்
இன்னல் முத்தகீன Fபீ ளிலாலி(ன்)வ் வ 'உயூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இறையச்சமுடையவர்கள், நிச்சயமாக (அந்நாளில் சொர்க்கத்திலுள்ள மரங்களின்) நிழல்களிலும் (அதன் அடியில் உள்ள) ஊற்றுக்களிலும் இருப்பார்கள்.
IFT
இறையச்சம் கொண்டோர் (இன்று) நிழல்களிலும், ஊற்றுகளிலும் தங்கி வாழ்கிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக பயபக்தியுடையோர்கள், (அந்நாளில் சுவனபதியிலுள்ள மரங்களின்) நிழல்களிலும், ஊற்றுகளின் அருகிலும் இருப்பார்கள்-
Saheeh International
Indeed, the righteous will be among shades and springs
وَّفَوَاكِهَ مِمَّا یَشْتَهُوْنَ ۟ؕ
وَّفَوَاكِهَபழங்களிலும்مِمَّا يَشْتَهُوْنَؕ‏அவர்கள் விரும்புகின்ற
வ Fபவாகிஹ மிம்மா யஷ்தஹூன்
முஹம்மது ஜான்
இன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் விரும்பிய கனிவர்க்கங்கள் அவர்களுக்குண்டு.
IFT
மேலும், அவர்கள் விரும்பும் பழங்கள் (அவர்களுக்காக உள்ளன).
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் விரும்பியவற்றிலுள்ள கனிகளி(லிருந்து புசித்து இன்புறு)வதிலும் இருப்பார்கள்.
Saheeh International
And fruits from whatever they desire,
كُلُوْا وَاشْرَبُوْا هَنِیْٓـًٔا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
كُلُوْاஉண்ணுங்கள்وَاشْرَبُوْاஇன்னும் பருகுங்கள்هَنِيْٓئًا ۢஇன்பமாகبِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கு பகரமாக
குலூ வஷ்ரBபூ ஹனீ 'அம் Bபிமா குன்தும் தஃமலூன்
முஹம்மது ஜான்
“நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்” (என்று கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் செய்து கொண்டிருந்த நன்மையின் காரணமாக, மிக தாராளமாக இவற்றைப் புசித்துப் பருகிக் கொண்டிருங்கள்'' (என்று கூறப்படும்).
IFT
நன்கு உண்ணுங்கள்; பருகுங்கள்; நீங்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்குப் பரிசாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(“உலகில் நற்செயல்களை) நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக இன்பமாக உண்ணுங்கள்; இன்னும் பருகுங்கள்” (என்று அவர்களிடம் கூறப்படும்.)
Saheeh International
[Being told], "Eat and drink in satisfaction for what you used to do."
اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
اِنَّاநிச்சயமாக நாம்كَذٰلِكَஇவ்வாறுதான்نَجْزِىகூலி கொடுப்போம்الْمُحْسِنِيْنَ‏நல்லறம் புரிபவர்களுக்கு
இன்னா கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுப்போம்.
IFT
நாம் நல்லவர்களுக்கு இத்தகைய கூலியைத்தான் வழங்குகின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நிச்சயமாக நாம் கூலி வழங்குவோம்.
Saheeh International
Indeed, We thus reward the doers of good.
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
وَيْلٌநாசம்தான்يَّوْمَٮِٕذٍஅந்நாளில்لِّلْمُكَذِّبِيْنَ‏பொய்ப்பித்தவர்களுக்கு
வய்லு(ன்)ய் யவ்ம 'இதில் லில்முத்கத்திBபீன்
முஹம்மது ஜான்
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
அப்துல் ஹமீது பாகவி
(இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
IFT
பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இதனைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
Saheeh International
Woe, that Day, to the deniers.
كُلُوْا وَتَمَتَّعُوْا قَلِیْلًا اِنَّكُمْ مُّجْرِمُوْنَ ۟
كُلُوْاஉண்ணுங்கள்وَتَمَتَّعُوْاஇன்புறுங்கள்قَلِيْلًاகொஞ்ச காலம்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்مُّجْرِمُوْنَ‏குற்றவாளிகள்
குலூ வ தமத்த'ஊ கலீலன் இன்னகும் முஜ்ரிமூன்
முஹம்மது ஜான்
(பொய்யாக்குவோரே உலகில்) இன்னும் கொஞ்ச (கால)ம் நீங்கள் புசித்துக் கொண்டும், சுகித்துக்கொண்டும் இருங்கள் - நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே.
அப்துல் ஹமீது பாகவி
(இதைப் பொய்யாக்குபவர்களே! இம்மையில்) நீங்கள் புசித்துச் சிறிது சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்தான்.
IFT
உண்ணுங்கள்; சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள், சில நாட்களுக்கு! உண்மையில் நீங்கள் குற்றவாளிகள்தாம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நம் அத்தாட்சிகளைப்) பொய்யாக்குபவர்களே! உலகில்) நீங்கள் புசியுங்கள், கொஞ்சம் சுகமும் அனுபவியுங்கள்; நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே-
Saheeh International
[O disbelievers], eat and enjoy yourselves a little; indeed, you are criminals.
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
وَيْلٌநாசம்தான்يَّوْمَٮِٕذٍஅந்நாளில்لِّلْمُكَذِّبِيْنَ‏பொய்ப்பித்தவர்களுக்கு
வய்லுன்(ன்)ய் யவ்ம 'இதில் லில்முகத்திBபீன்
முஹம்மது ஜான்
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
அப்துல் ஹமீது பாகவி
(இறைவனின் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
IFT
பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவு தான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அல்லாஹ்வின் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
Saheeh International
Woe, that Day, to the deniers.
وَاِذَا قِیْلَ لَهُمُ ارْكَعُوْا لَا یَرْكَعُوْنَ ۟
وَاِذَا قِيْلَசொல்லப்பட்டால்لَهُمُஅவர்களுக்குارْكَعُوْاதொழுங்கள்لَا يَرْكَعُوْنَ‏தொழ மாட்டார்கள்
வ இதா கீல லஹுமுர் க'ஊ லா யர்க'ஊன்
முஹம்மது ஜான்
“நீங்கள் குனிந்து வணங்குங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களை நோக்கி, ‘‘(இறைவன் முன்) நீங்கள் குனிந்து வணங்குங்கள்'' என்று கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கவே மாட்டார்கள்.
IFT
“(அல்லாஹ்வின் திருமுன்) அடிபணிந்து விடுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் அடிபணிவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்களிடம், “நீங்கள் குனிந்து (தொழுது) கொள்ளுங்கள்” என்று கூறப்பட்டால், அவர்கள் (தொழுது) குனியமாட்டார்கள்.
Saheeh International
And when it is said to them, "Bow [in prayer]," they do not bow.
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
وَيْلٌஎந்த குர்ஆனைيَّوْمَٮِٕذٍஅந்நாளில்لِّلْمُكَذِّبِيْنَ‏பொய்ப்பித்தவர்களுக்கு
வய்லுன்(ன்)ய் யவ்ம 'இதில் லில்முகத்திBபீன்
முஹம்மது ஜான்
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
அப்துல் ஹமீது பாகவி
(அவனுடைய இக்கட்டளையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
IFT
பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவனது இக்கட்டளையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
Saheeh International
Woe, that Day, to the deniers.
فَبِاَیِّ حَدِیْثٍ بَعْدَهٗ یُؤْمِنُوْنَ ۟۠
فَبِاَىِّ حَدِيْثٍۢஎந்த குர்ஆனைبَعْدَهٗஇதற்குப் பின்னர்يُؤْمِنُوْنَ‏இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்
FபBபி அய்யி ஹதீதிம் Bபஃதஹூ யு'மினூன்
முஹம்மது ஜான்
எனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்?
அப்துல் ஹமீது பாகவி
இதற்குப் பின்னர், எவ்விஷயத்தைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்களோ!
IFT
இனி, இதற்குப் பின் (இந்தக் குர்ஆனுக்குப்பின்) இவர்கள் எந்த வாக்கின் மீதுதான் நம்பிக்கை கொள்ளப் போகின்றார்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே (குர் ஆனாகிய) இதற்குப் பின்னர், எவ்விஷயத்தைத்தான் அவர்கள் விசுவாசிப்பார்கள்?
Saheeh International
Then in what statement after it [i.e., the Qur’an] will they believe?