“ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (மறுமையில் அவர்களை நோக்கி) ‘‘வேதனையைத் தவிர நாம் உங்களுக்கு (வேறெதையும்) அதிகப்படுத்த மாட்டோம். ஆகவே, (இதைச்) சுவைத்துப் பாருங்கள்'' (என்று கூறுவோம்).
IFT
“இதோ, சுவையுங்கள்! உங்களுக்கு வேதனையைத் தவிர வேறெதனையும் நாம் அதிகமாக்கவே மாட்டோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆகவே சுவையுங்கள், வேதனையைத் தவிர (வேறெதனையும்) உங்களுக்கு நாம் அதிகப்படுத்தவே மாட்டோம்” (என்று கூறப்படும்).
Saheeh International
"So taste [the penalty], and never will We increase you except in torment."
(இவையெல்லாம் இவர்களின் நன்மைகளுக்குக்) கணக்கான கூலியாகவும் (கிடைக்கும். அதற்கு மேல்) உமது இறைவன் புறத்தால் நன்கொடையாகவும் (இன்னும் அதிகம்) அவர்களுக்குக் கிடைக்கும்.
IFT
இது உம்முடைய அதிபதியிடமிருந்து கிடைத்த கூலியும் போதிய வெகுமதியுமாகும்.
(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவனே வானங்கள், பூமி, இவற்றுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் உரிமையாளனும் அளவற்ற அருளாளனும் ஆவான். எனினும், (அந்நாளில் எவருமே) அவன் முன் பேச சக்தி பெறமாட்டார்கள்.
IFT
வானங்கள் மற்றும் பூமிக்கும் அவற்றிற்கிடைப்பட்ட ஒவ்வொன்றுக்கும் உரிமையாளனாகிய அந்தக் கருணை மிக்க இறைவனிடமிருந்து (கிடைத்த கூலியும் போதிய வெகுமதியுமாகும்). அவனுக்கு முன்னால் பேசுவதற்கு யாருக்கும் திராணி இல்லை.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவனே) வானங்கள் மற்றும் பூமி இன்னும் இவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றிற்கும் இரட்சகன்; (அவனே) அளவற்ற அருளாளன்; அவன்முன் அவர்கள் பேச சக்தி பெறமாட்டார்கள்.
Saheeh International
[From] the Lord of the heavens and the earth and whatever is between them, the Most Merciful. They possess not from Him [authority for] speech.
யவ்ம யகூ முர் ரூஹு வல் மலா-இகது ஸFப்-Fபல் லா யதகல்லமூன இல்ல்-லா மன் அதின லஹுர் ரஹ்மானு வ கால ஸவாBபா
முஹம்மது ஜான்
ரூஹு (என்ற ஜிப்ரீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.
அப்துல் ஹமீது பாகவி
ஜிப்ரயீலும், வானவர்களும் அணி அணியாக நிற்கும் அந்நாளில், எவருமே அவன் முன் பேச (சக்தி பெற) மாட்டார்கள். எனினும், ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுத்து ‘‘சரி! பேசுவீராக!'' எனவும் கூறினானோ அவர் (மட்டும்) பேசுவார்.
IFT
ரூஹும்* வானவர்களும் அணிவகுத்து நிற்கும் அந்நாளில் எவரும் பேசமாட்டார்; ஆனால், கருணைமிக்க இறைவன் எவருக்கு அனுமதி கொடுப்பானோ அவரையும், நேர்மையைச் சொல்பவரையும் தவிர!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஜிப்ரீலாகிய) ரூஹும், மலக்குகளும் அணிவகுத்து நிற்கும் நாளில் (மிகக் கிருபையுடையவனாகிய) அர்ரஹ்மான் எவருக்கு அனுமதியளித்து - இன்னும் சரியானதைக் கூறியிருந்தாரோ அவரைத்தவிர (மற்றெவரும் அவன் முன்) பேசமாட்டார்கள்.
Saheeh International
The Day that the Spirit [i.e., Gabriel] and the angels will stand in rows, they will not speak except for one whom the Most Merciful permits, and he will say what is correct.
நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இரு கைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் “அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!” என்று (பிரலாபித்துக்) கூறுவான்.
அப்துல் ஹமீது பாகவி
சமீபத்தில் நிச்சயமாக உங்களுக்கு வரக்கூடிய ஒரு வேதனையைப் பற்றி நாம் எச்சரிக்கை செய்கிறோம். அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தன் கரங்கள் செய்த செயலின் பலனை(த் தன் கண்ணால்) கண்டுகொள்வான். நிராகரிப்பவனோ தான் மண்ணாக ஆகவேண்டுமே என்று புலம்புவான்!
IFT
நெருங்கிவிட்டிருக்கும் வேதனை குறித்துத் திண்ணமாக நாம் உங்களுக்கு எச்சரிக்கை செய்து விட்டோம். அந்நாளில் மனிதன் தன்னுடைய கைகளால் முன்னர் செய்தனுப்பிய அனைத்தையும் காண்பான். நிராகரித்தவனோ புலம்புவான்: “அந்தோ! நான் மண்ணாய் இருந்திருக்கக்கூடாதா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, சமீபித்துவரும் வேதனையைப் பற்றி நாம் உங்களுக்கு எச்சரிக்கிறோம்; (விசுவாசியான) மனிதர் தன் இருகரங்கள் முற்படுத்தியதைக் (கண்கூடாகக்) காணும் நாள்; இன்னும் நிராகரித்தவனோ (அந்நாளில் “நான் மண்ணாக ஆகியிருக்க வேண்டுமே” என்று கூறுவான்.
Saheeh International
Indeed, We have warned you of an impending punishment on the Day when a man will observe what his hands have put forth and the disbeliever will say, "Oh, I wish that I were dust!"