அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம்,
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளைப் பற்றிப் பயப்படக்கூடியவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரே தவிர வேறில்லை. (அது வரும் காலத்தையும், நேரத்தையும் அறிவிப்பது உமது கடமையல்ல.)
IFT
அந்நேரத்தை அஞ்சும் ஒவ்வொருவருக்கும் நீர் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நீர் அதைப் பயப்படக்கூடியவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியவர்தான்.
كَاَنَّهُمْபோன்றே/நிச்சயமாக அவர்கள்يَوْمَநாளில்يَرَوْنَهَاஅவர்கள் அதைக் காணுகின்றلَمْ يَلْبَثُوْۤاதங்கவில்லைاِلَّاதவிரعَشِيَّةًஒரு மாலைاَوْஅல்லதுضُحٰٮهَاஅதன் முற்பகல்
க அன்னஹும் யவ்ம யரவ்னஹா லம் யல்Bபதூ இல்லா 'அஷிய்யதன் அவ் ளுஹாஹா
முஹம்மது ஜான்
நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.
அப்துல் ஹமீது பாகவி
அதை அவர்கள் கண்ணால் காணும் நாளில், மாலையிலோ அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமே தவிர (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்றே அவர்களுக்குத் தோன்றும்.
IFT
இவர்கள் அதனைக் கண்டு கொள்ளும் நாளில், ஒரு பிற்பகல் அல்லது முற்பகல் வரையில் மட்டுமே (இவ்வுலகில் அல்லது மரணநிலையில்) தாங்கள் தங்கியிருந்தது போன்று அவர்களுக்குத் தோன்றும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதனை அவர்கள் (கண்ணால்) காணும் நாளில் மாலையிலோ அல்லது அதன் முற்பகலிலோ (ஒரு சொற்ப நேரமே) தவிர தங்கியிருக்காதது போன்று (அவர்களுக்குத் தோன்றும்).
Saheeh International
It will be, on the Day they see it, as though they had not remained [in the world] except for an afternoon or a morning thereof.