81. ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்)

மக்கீ, வசனங்கள்: 29

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
اِذَا الشَّمْسُ كُوِّرَتْ ۟
اِذَاபோதுالشَّمْسُசூரியன்كُوِّرَتْۙ‏மங்க வைக்கப்படும்
இதஷ் ஷம்ஸு குவ்விரத்
முஹம்மது ஜான்
சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது-
அப்துல் ஹமீது பாகவி
(உலக முடிவுக்காகச்) சூரியனின் பிரகாசம் மங்க வைக்கப்படும்போது,
IFT
சூரியன் சுருட்டப்பட்டுவிடும்போது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சூரியன் (ஒளி நீக்கப்பட்டுச்) சுருட்டப்பட்டுவிடும்போது-
Saheeh International
When the sun is wrapped up [in darkness]
وَاِذَا النُّجُوْمُ انْكَدَرَتْ ۟
وَاِذَاஇன்னும் போதுالنُّجُوْمُநட்சத்திரங்கள்انْكَدَرَتْۙ‏உதிர்ந்துவிடும்
வ இதன் னுஜூமுன் கதரத்
முஹம்மது ஜான்
நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-
அப்துல் ஹமீது பாகவி
நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்போது,
IFT
மேலும், தாரகைகள் உதிர்ந்து விடும்போது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நட்சத்திரங்களும் (ஒளியிழந்து) உதிர்ந்துவிடும்போது-
Saheeh International
And when the stars fall, dispersing,
وَاِذَا الْجِبَالُ سُیِّرَتْ ۟
وَاِذَاஇன்னும் போதுالْجِبَالُமலைகள்سُيِّرَتْۙ‏அகற்றப்படும்
வ இதல் ஜிBபாலு ஸுய்யிரத்
முஹம்மது ஜான்
மலைகள் பெயர்க்கப்படும் போது-
அப்துல் ஹமீது பாகவி
மலைகள் அதனிடங்களில் இருந்து அகற்றப்படும் போது,
IFT
மேலும், மலைகள் நடத்திச் செல்லப்படும்போது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மலைகளும் (பூமியிலிருந்து) பெயர்க்கப்பட்டு விடும்போது-
Saheeh International
And when the mountains are removed
وَاِذَا الْعِشَارُ عُطِّلَتْ ۟
وَاِذَاஇன்னும் போதுالْعِشَارُநிறைமாத ஒட்டகங்கள்عُطِّلَتْۙ‏கவனிப்பற்று விடப்படும்
வ இதல் 'இஷாரு 'உத்திலத்
முஹம்மது ஜான்
சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-
அப்துல் ஹமீது பாகவி
(இந்த அமளிகளால் பத்துமாத) கர்ப்பமடைந்த ஒட்டகங்கள் (கவனிப்பின்றி) விடப்படும்போது.
IFT
மேலும், பத்து மாத நிறைகர்ப்ப ஒட்டகங்கள் அப்படியே விட்டு விடப்படும்போது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பத்துமாத நிறை கர்ப்பமுடைய ஒட்டகங்களும் கவனிப்பாரற்று (அலைய)விடப்படும்போது-
Saheeh International
And when full-term she-camels are neglected
وَاِذَا الْوُحُوْشُ حُشِرَتْ ۟
وَاِذَاஇன்னும் போதுالْوُحُوْشُகாட்டு மிருகங்கள்حُشِرَتْۙ‏ஒன்று சேர்க்கப்படும்
வ இதல் வுஹூஷு ஹுஷிரத்
முஹம்மது ஜான்
காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-
அப்துல் ஹமீது பாகவி
காட்டு மிருகங்கள் (பயந்து ஊர்களில் வந்து) ஒன்றுகூடும்போது.
IFT
மேலும், வன விலங்குகள் ஒன்று திரட்டப்படும்போது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வனவிலங்குகளும் (ஊர்களுக்குள் வந்து) ஒன்று திரட்டப்படும்போது-
Saheeh International
And when the wild beasts are gathered
وَاِذَا الْبِحَارُ سُجِّرَتْ ۟
وَاِذَاஇன்னும் போதுالْبِحَارُகடல்கள்سُجِّرَتْۙ‏தீ மூட்டப்படும்
வ இதல் Bபிஹாரு ஸுஜ்ஜிரத்
முஹம்மது ஜான்
கடல்கள் தீ மூட்டப்படும்போது-
அப்துல் ஹமீது பாகவி
கடல் நீர் நெருப்பாக மாற்றப்படும்போது. (இவ்வாறு உலகம் முடிவுபெற்று, விசாரணைக் காலம் ஏற்படும்.)
IFT
மேலும், கடல்கள் கொளுத்தப்படும்போது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
கடல்களும் தீ மூட்டப்படும்போது-
Saheeh International
And when the seas are filled with flame
وَاِذَا النُّفُوْسُ زُوِّجَتْ ۟
وَاِذَاஇன்னும் போதுالنُّفُوْسُஉயிர்கள்زُوِّجَتْۙ‏இணைக்கப்படும்
வ இதன் னுFபூஸு Zஜுவ்விஜத்
முஹம்மது ஜான்
உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-
அப்துல் ஹமீது பாகவி
அப்போது உயிர்கள் உடலுடன் (மீண்டும்) சேர்க்கப்படும்.
IFT
மேலும், உயிர்கள் (உடல்களுடன்) ஒன்றிணைக்கப்படும்போது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உயிர்களும் ஒன்று சேர்க்கப்படும்போது-
Saheeh International
And when the souls are paired
وَاِذَا الْمَوْءٗدَةُ سُىِٕلَتْ ۟
وَاِذَاஇன்னும் போதுالْمَوْءٗدَةُபுதைக்கப்பட்ட பெண் குழந்தைسُٮِٕلَتْۙ‏விசாரிக்கப்படும்
வ இதல் மவ்'ஊதது ஸு'இலத்
முஹம்மது ஜான்
உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-
அப்துல் ஹமீது பாகவி
அப்போது (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தைகளை நோக்கி கேட்கப்படும்,
IFT
மேலும், உயிருடன் புதைக்கப்பட்ட சிறுமியிடம் கேட்கப்படும்போது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உயிருடன் புதைக்கப்ப்டட (பெண் குழந்தையான)வளும் வினவப்படும்போது-
Saheeh International
And when the girl [who was] buried alive is asked
بِاَیِّ ذَنْۢبٍ قُتِلَتْ ۟ۚ
بِاَىِّ ذَنْۢبٍஎந்தக் குற்றத்திற்காகقُتِلَتْ‌ۚ‏கொல்லப்பட்டாள்
Bபி அய்யி தம்Bபின் குதிலத்
முஹம்மது ஜான்
“எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று-
அப்துல் ஹமீது பாகவி
‘‘எந்த குற்றத்திற்காக நீங்கள் (உயிருடன் புதைக்கப்பட்டுக்) கொலை செய்யப்பட்டீர்கள்?'' என்று.
IFT
எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் என்று
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எக்குற்றத்திற்காக அவள் கொல்லப்பட்டாள் (என்று வினவப்படும்போது)-
Saheeh International
For what sin she was killed
وَاِذَا الصُّحُفُ نُشِرَتْ ۟
وَاِذَاஇன்னும் போதுالصُّحُفُஏடுகள்نُشِرَتْۙ‏விரிக்கப்படும்
வ இதஸ் ஸுஹுFபு னுஷிரத்
முஹம்மது ஜான்
பட்டோலைகள் விரிக்கப்படும் போது-
அப்துல் ஹமீது பாகவி
அப்போது (விசாரணைக்காக மனிதர்களுடைய) ஏடுகள் விரிக்கப்படும்.
IFT
மேலும், வினைச் சுவடிகள் விரிக்கப்படும்போது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசாரணைக்காக மனிதர்களுடைய) பதிவுப் புத்தகங்களும் விரிக்கப்படும்போது-
Saheeh International
And when the pages are spread [i.e., made public]
وَاِذَا السَّمَآءُ كُشِطَتْ ۟
وَاِذَاஇன்னும் போதுالسَّمَآءُவானம்كُشِطَتْۙ‏அகற்றப்படும்
வ இதஸ் ஸமா'உ குஷிதத்
முஹம்மது ஜான்
வானம் அகற்றப்படும் போது-
அப்துல் ஹமீது பாகவி
அப்போது வானம் (பிளந்து) அகற்றப்பட்டுவிடும்.
IFT
மேலும், வானத் திரை அகற்றப்படும்போது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானமும் (பிளந்து) அகற்றப்படும்போது-
Saheeh International
And when the sky is stripped away
وَاِذَا الْجَحِیْمُ سُعِّرَتْ ۟
وَاِذَاஇன்னும் போதுالْجَحِيْمُநரகம்سُعِّرَتْۙ‏கடுமையாக எரிக்கப்படும்
வ இதல் ஜஹீமு ஸு'-'இரத்
முஹம்மது ஜான்
நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-
அப்துல் ஹமீது பாகவி
அப்போது நரகம் எரிக்கப்படும்.
IFT
மேலும், நரகம் எரிக்கப்படும்போது
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நரகமும் கடுமையாக எரிக்கப்படும்போது-
Saheeh International
And when Hellfire is set ablaze
وَاِذَا الْجَنَّةُ اُزْلِفَتْ ۟
وَاِذَاஇன்னும் போதுالْجَـنَّةُசொர்க்கம்اُزْلِفَتْۙ‏சமீபமாக்கப்படும்
வ இதல் ஜன்னது உZஜ்லிFபத்
முஹம்மது ஜான்
சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-
அப்துல் ஹமீது பாகவி
அப்போது சொர்க்கம் சமீபமாகக் கொண்டு வரப்படும்.
IFT
மேலும், சுவனம் அருகே கொண்டு வரப்படும்போது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சுவனமும் (பயபக்தியுடையோருக்காக அலங்கரிக்கப்பட்டு,) சமீபமாகக் கொண்டு வரப்படும்போது-
Saheeh International
And when Paradise is brought near,
عَلِمَتْ نَفْسٌ مَّاۤ اَحْضَرَتْ ۟ؕ
عَلِمَتْஅறியும்نَفْسٌஓர் ஆன்மாمَّاۤஎதைاَحْضَرَتْؕ‏தான் கொண்டு வந்தது
அலிமத் னFப்ஸும் மா அஹ்ளரத்
முஹம்மது ஜான்
ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.
அப்துல் ஹமீது பாகவி
(அந்நாளில்) ஒவ்வோர் ஆத்மாவும் (நன்மையோ தீமையோ) தான் செய்து கொண்டு வந்திருப்பதை நன்கறிந்து கொள்ளும்.
IFT
அந்நேரத்தில் ஒவ்வொரு மனிதனும் எதனைக் கொண்டு வந்துள்ளான் என்பதை அறிந்து கொள்வான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஓவ்வோர் ஆத்மாவும் தான் (உலகில் செய்து) கொண்டு வந்ததை நன்கறிந்து கொள்ளும்.
Saheeh International
A soul will [then] know what it has brought [with it].
فَلَاۤ اُقْسِمُ بِالْخُنَّسِ ۟ۙ
فَلَاۤ اُقْسِمُசத்தியம் செய்கிறேன்!بِالْخُنَّسِۙ‏மறைகின்ற நட்சத்திரங்கள் மீது
Fபலா உக்ஸிமு Bபில் குன்னஸ்
முஹம்மது ஜான்
எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே!) சென்றவழியே மேலும் செல்லும் நட்சத்திரங்கள் மீது சத்தியமாக!
IFT
அவ்வாறில்லை! மீண்டும் மீண்டும் திரும்பி வரக்கூடிய தாரகைகள்மீதும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்களே! நட்சத்திரங்களில்) பின் சென்று விலகக்கூடியவற்றைக் கொண்டு நான் சத்தியம் செய்கிறேன்.
Saheeh International
So I swear by the retreating stars -
الْجَوَارِ الْكُنَّسِ ۟ۙ
الْجَوَارِவேகமாகச் செல்கின்ற நட்சத்திரங்கள்الْكُنَّسِۙ‏தோன்றுகின்ற
அல் ஜவாரில் குன்னஸ்
முஹம்மது ஜான்
முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),
அப்துல் ஹமீது பாகவி
தோன்றி மறையும் (வால்) நட்சத்திரங்கள் மீது சத்தியமாக!
IFT
மறையக்கூடிய தாரகைகள் மீதும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவை) செல்கின்றவை, மறையக்கூடியவை.
Saheeh International
Those that run [their courses] and disappear [i.e., set]
وَالَّیْلِ اِذَا عَسْعَسَ ۟ۙ
وَالَّيْلِஇரவின் மீது சத்தியமாகاِذَا عَسْعَسَۙ‏பின்செல்லும் போது
வல்லய்லி இதா 'அஸ்'அஸ்
முஹம்மது ஜான்
பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,
அப்துல் ஹமீது பாகவி
செல்கின்ற இரவின் மீதும் சத்தியமாக!
IFT
விடை பெற்றுச் செல்லும் இரவின் மீதும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இரவின் மீதும் சத்தியமாக அது பின்னோக்கிச் சென்றுவிடும்போது-
Saheeh International
And by the night as it closes in
وَالصُّبْحِ اِذَا تَنَفَّسَ ۟ۙ
وَالصُّبْحِகாலைப் பொழுதின் மீது சத்தியமாகاِذَا تَنَفَّسَۙ‏அது தெளிவாகிவிடும் போது
வஸ்ஸுBப்ஹி இதா தனFப்Fபஸ்
முஹம்மது ஜான்
மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.
அப்துல் ஹமீது பாகவி
உதயமாகும் காலையின் மீதும் சத்தியமாக!
IFT
புலரும் வைகறையின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
காலையின் மீதும் சத்தியமாக! அது (வெளிப்பட்டு, அதன் ஒளி) தெளிவாகிவிடும்போது-
Saheeh International
And by the dawn when it breathes [i.e., stirs]
اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِیْمٍ ۟ۙ
اِنَّهٗநிச்சயாக இதுلَقَوْلُகூற்றாகும்رَسُوْلٍதூதர்كَرِيْمٍۙ‏கண்ணியத்திற்குரியவர்
இன்னஹூ லகவ்லு ரஸூலின் கரீம்
முஹம்மது ஜான்
நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரீல் மூலம் வந்த) சொல்லாகும்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக (திரு குர்ஆன் என்னும்) இது மிக்க கண்ணியமுள்ள (ஜிப்ரயீல் என்னும்) ஒரு (வானவத்) தூதர் மூலம் கூறப்பட்டதாகும்.
IFT
உண்மையில், இது கண்ணியமிக்க தூதர் ஒருவரின் வாக்காகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக (குர் ஆன் என்னும்) இது மிக்க கண்ணியமுள்ள (ஜிப்ரீல் என்னும்) ஒரு தூதரின் (மூலம் அனுப்பப்பட்ட) கூற்றாகும்.
Saheeh International
[That] indeed, it [i.e., the Qur’an] is a word [conveyed by] a noble messenger [i.e., Gabriel]
ذِیْ قُوَّةٍ عِنْدَ ذِی الْعَرْشِ مَكِیْنٍ ۟ۙ
ذِىْ قُوَّةٍபலமுடையவர்عِنْدَ ذِى الْعَرْشِஅர்ஷுடையவனிடம்مَكِيْنٍۙ‏பதவியாளர்
தீ குவ்வதின் 'இன்த தில் 'அர்ஷி மகீன்
முஹம்மது ஜான்
(அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.
அப்துல் ஹமீது பாகவி
அவர் மிக்க பலவான். அவருக்கு அர்ஷுடையவனிடத்தில் பெரும் பதவியுண்டு.
IFT
அவர் வலிமையுடையவர்; அர்ஷுக்குரியவனிடம் உயர் மதிப்பு பெற்றவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் மிக்க சக்தியுடையவர்; அர்ஷுக்குரியவனிடம் பெரும் பதவியுடையவர்
Saheeh International
[Who is] possessed of power and with the Owner of the Throne, secure [in position],
مُّطَاعٍ ثَمَّ اَمِیْنٍ ۟ؕ
مُّطَاعٍகீழ்ப்படியப்படுகிறவர்ثَمَّஅங்குاَمِيْنٍؕ‏நம்பிக்கைக்குரியவர்
முதா'இன் தம்ம அமீன்
முஹம்மது ஜான்
(வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர் அவ்விடத்திலுள்ள வானவர்களின்) தலைவர்; மிக்க நம்பிக்கையுடையவர்.
IFT
அங்கு அவருடைய கட்டளை ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அவர் நம்பிக்கைக்குரியவராயும் இருக்கின்றார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(வானுலகமான) அங்கு (மலக்குகளால்) கீழ்ப்படியப்படுபவர்; மிக்க நம்பிக்கைக்குரியவர்.
Saheeh International
Obeyed there [in the heavens] and trustworthy.
وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُوْنٍ ۟ۚ
وَ مَا صَاحِبُكُمْஇன்னும் உங்கள் தோழர் இல்லைبِمَجْنُوْنٍ‌ۚ‏பைத்தியக்காரராக
வமா ஸாஹிBபுகும் Bபிமஜ்னூன்
முஹம்மது ஜான்
மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.
அப்துல் ஹமீது பாகவி
(மக்காவாசிகளே! நம் தூதராகிய) உங்கள் தோழர் பைத்தியக்காரரல்ல.
IFT
மேலும், (மக்காவாசிகளே!) உங்கள் நண்பர் பைத்தியக்காரர் அல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மக்காவாசிகளே! நம்முடைய தூதராகிய) உங்களுடைய தோழர் பைத்தியக்காரருமல்லர்.
Saheeh International
And your companion [i.e., Prophet Muhammad (ﷺ ] is not [at all] mad.
وَلَقَدْ رَاٰهُ بِالْاُفُقِ الْمُبِیْنِ ۟ۚ
وَلَقَدْஇன்னும் திட்டவட்டமாகرَاٰهُஅவர் அவரைக் கண்டார்بِالْاُفُقِகோடியில்الْمُبِيْنِ‌ۚ‏தெளிவான
வ லகத் ர ஆஹு BபிலுFபுகில் முBபீன்
முஹம்மது ஜான்
அவர் திட்டமாக அவரை (ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவர் (ஜிப்ரயீலை) தெளிவான வானத்தின் கோடியில் மெய்யாகவே கண்டார்.
IFT
திண்ணமாக, அவர் அந்தத் தூதரை தெளிவான அடிவானத்தில் கண்டார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், திட்டமாக (ஜிப்ரீலாகிய) அவரைத் தெளிவான அடிவானத்தில் அவர் கண்டார்.
Saheeh International
And he has already seen him [i.e., Gabriel] in the clear horizon.
وَمَا هُوَ عَلَی الْغَیْبِ بِضَنِیْنٍ ۟ۚ
وَمَا هُوَஇன்னும் அவர் இல்லைعَلَى الْغَيْبِமறைவானவற்றில்بِضَنِيْنٍ‌ۚ‏கஞ்சனாக
வமா ஹுவ 'அலல் கய்Bபி Bபிளனீன்
முஹம்மது ஜான்
மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.
அப்துல் ஹமீது பாகவி
(அச்சமயம் அவர் கண்ட) மறைவானவற்றை (அறிவிப்பதில்) கஞ்சத்தனம் செய்பவரல்ல.
IFT
மேலும், அவர் மறைவான உண்மைகள் (எனும் இந்த அறிவை மக்களிடம் எடுத்துக்கூறும்) விஷயத்தில் கஞ்சர் அல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர், (அவருக்கு வானிலிருந்து அறிவிக்கப்படும்) மறைவானவற்றின் மீது உலோபத்தனம் செய்பவருமல்லர்.
Saheeh International
And he [i.e., Muhammad (ﷺ] is not a withholder of [knowledge of] the unseen.
وَمَا هُوَ بِقَوْلِ شَیْطٰنٍ رَّجِیْمٍ ۟ۙ
وَمَا هُوَஇன்னும் அது இல்லைبِقَوْلِகூற்றாகشَيْطٰنٍஷைத்தானின்رَّجِيْمٍۙ‏எறியப்பட்ட
வமா ஹுவ Bபிகவ்லி ஷய்தானிர் ரஜீம்
முஹம்மது ஜான்
அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.
அப்துல் ஹமீது பாகவி
இன்னும், இது வெருட்டப்பட்ட ஷைத்தானின் சொல்லுமல்ல.
IFT
மேலும், இது விரட்டியடிக்கப்பட்ட ஷைத்தானின் சொல்லும் அன்று.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இது விரட்டப்பட்ட ஷைத்தானின் சொல்லும் அல்ல.
Saheeh International
And it [i.e., the Qur’an] is not the word of a devil, expelled [from the heavens].
فَاَیْنَ تَذْهَبُوْنَ ۟ؕ
فَاَيْنَஆகவே எங்கே?تَذْهَبُوْنَؕ‏நீங்கள் செல்கிறீர்கள்
Fப அய்ன தத்ஹBபூன்
முஹம்மது ஜான்
எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (இதைவிட்டு) நீங்கள் எங்கு செல்லுகிறீர்கள்?
IFT
பின்னர், நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றீர்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (இதனை ஒதுக்கிவிட்டு) நீங்கள் எங்கு செல்கிறீர்கள்?
Saheeh International
So where are you going?
اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِیْنَ ۟ۙ
اِنْ هُوَஅது இல்லைاِلَّاதவிரذِكْرٌஓர் அறிவுரையாகவேلِّلْعٰلَمِيْنَۙ‏அகிலத்தார்களுக்கு
இன் ஹுவ இல்லா திக்ருல் லில்'ஆலமீன்
முஹம்மது ஜான்
இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
இது உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை.
IFT
இதுவோ அனைத்துலக மக்களுக்கும் உரிய ஓர் அறிவுரையாகும்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இது அகிலத்தார்க்கெல்லாம் உபதேசமேயன்றி வேறில்லை.
Saheeh International
It is not except a reminder to the worlds
لِمَنْ شَآءَ مِنْكُمْ اَنْ یَّسْتَقِیْمَ ۟ؕ
لِمَنْ شَآءَநாடியவருக்குمِنْكُمْஉங்களில்اَنْ يَّسْتَقِيْمَؕ‏நேர்வழி நடக்க
லிமன் ஷா'அ மின்கும் அய் யஸ்தகீம்
முஹம்மது ஜான்
உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).
அப்துல் ஹமீது பாகவி
உங்களில் எவர் நேரான பாதையில் செல்ல விரும்புகிறாரோ அவருக்கு (இது பயனளிக்கும்).
IFT
உங்களில், நேர்வழியில் நடந்திட விரும்பும் ஒவ்வொருவருக்கும் உரியது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களில் (நேர் வழியில்) நிலைத்திருக்க நாடுகிறவருக்கு (இது ஒரு அறிவுரையாகும்.)
Saheeh International
For whoever wills among you to take a right course.
وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِیْنَ ۟۠
وَمَا تَشَآءُوْنَஇன்னும் நாடமாட்டீர்கள்اِلَّاۤதவிரاَنْ يَّشَآءَநாடினால்اللّٰهُஅல்லாஹ்رَبُّஇறைவனானالْعٰلَمِيْنَ‏அகிலத்தார்களின்
வமா தஷா'ஊன இல்லா அய் யஷா 'அல் லாஹு ரBப்Bபுல் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ் நாடினால் தவிர, நீங்கள் (நல்லுணர்ச்சி பெற) விரும்பமாட்டீர்கள்.
IFT
மேலும், நீங்கள் நாடுவதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை, பிரபஞ்சம் அனைத்திற்கும் அதிபதியான அல்லாஹ் நாடாத வரையில்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் (நல்லறிவு பெற) நாடமாட்டீர்கள்.
Saheeh International
And you do not will except that Allah wills - Lord of the worlds.