82. ஸூரத்துல் இன்ஃபிதார்(வெடித்துப் போதல்)

மக்கீ, வசனங்கள்: 19

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
اِذَا السَّمَآءُ انْفَطَرَتْ ۟ۙ
اِذَاபோதுالسَّمَآءُவானம்انْفَطَرَتْۙ‏பிளந்துவிடும்
இதஸ் ஸமா'உன் Fபதரத்
முஹம்மது ஜான்
வானம் பிளந்து விடும்போது-
அப்துல் ஹமீது பாகவி
(உலக முடிவில்) வானம் வெடித்துவிட்டால்,
IFT
வானம் வெடித்து விடும்போது
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானம் வெடித்துவிடும்போது-
Saheeh International
When the sky breaks apart
وَاِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ ۟ۙ
وَاِذَاஇன்னும் போதுالْكَوَاكِبُநட்சத்திரங்கள்انْتَثَرَتْۙ‏விழுந்து சிதறும்
வ இதல் கவாகிBபுன் ததரத்
முஹம்மது ஜான்
நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
அப்துல் ஹமீது பாகவி
நட்சத்திரங்கள் சிதறிவிட்டால்,
IFT
மேலும், தாரகைகள் உதிர்ந்துவிடும்போது
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நட்சத்திரங்ளும் உதிர்ந்து (சிதறி) விடும்போது-
Saheeh International
And when the stars fall, scattering,
وَاِذَا الْبِحَارُ فُجِّرَتْ ۟ۙ
وَاِذَاஇன்னும் போதுالْبِحَارُகடல்கள்فُجِّرَتْۙ‏பிளக்கப்பட்டு
வ இதல் Bபிஹாரு Fபுஜ்ஜிரத்
முஹம்மது ஜான்
கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,
அப்துல் ஹமீது பாகவி
கடல்கள் பிளக்கப்பட்டுவிட்டால்,
IFT
மேலும், கடல்கள் பிளக்கப்படும்போது
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
கடல்களும் பொங்க வைக்கப்பட்டு (அவைகளுக்கு மத்தியிலுள்ள திரைகள் அகற்றப்பட்டு ஒன்றாகி)விடும்போது-
Saheeh International
And when the seas are erupted
وَاِذَا الْقُبُوْرُ بُعْثِرَتْ ۟ۙ
وَاِذَاஇன்னும் போதுالْقُبُوْرُசமாதிகள்بُعْثِرَتْۙ‏புரட்டப்படும்
வ இதல் குBபூரு Bபுஃதிரத்
முஹம்மது ஜான்
மண்ணறைகள் திறக்கப்படும் போது,
அப்துல் ஹமீது பாகவி
சமாதிகளும் திறக்கப்பட்டால் (மரணித்தவர்கள் உயிர் பெற்றெழுந்து,)
IFT
மேலும், அடக்கத்தலங்கள் திறந்துவிடப்படும்போது
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மண்ணறைகளும் மேலும் கீழுமாக புரட்டப்பட்டு (அவற்றிலுள்ள இறப்பெய்தியோரை வெளியேற்றப்பட்டுவிடும்போது-
Saheeh International
And when the [contents of] graves are scattered [i.e., exposed],
عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَاَخَّرَتْ ۟ؕ
عَلِمَتْஅறியும்نَفْسٌஓர் ஆன்மாمَّاஎதைقَدَّمَتْமுற்படுத்தியதுوَاَخَّرَتْؕ‏இன்னும் பிற்படுத்தியது
'அலிமத் னFப்ஸும் மா கத்தமத் வ அக்கரத்
முஹம்மது ஜான்
ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.
அப்துல் ஹமீது பாகவி
ஒவ்வோர் ஆத்மாவும் தான் (உலகத்தில்) முன்னர் செய்தவற்றையும், (உலகத்தில்) தான் விட்டு வந்தவற்றையும் நன்கறிந்துகொள்ளும்.
IFT
ஒவ்வொரு மனிதனும் தான் முன்பும் பின்பும் செய்த செயல்கள் அனைத்தையும் அப்போது நன்கு அறிந்துகொள்வான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஓவ்வோர் ஆத்மாவும், (மறுமைக்காக) தான் முற்படுத்தியதையும் பிற்படுத்தியதையும் நன்கறிந்து கொள்ளும்.
Saheeh International
A soul will [then] know what it has put forth and kept back.
یٰۤاَیُّهَا الْاِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِیْمِ ۟ۙ
يٰۤاَيُّهَا الْاِنْسَانُமனிதனே!مَاஎது?غَرَّكَஉன்னை ஏமாற்றியதுبِرَبِّكَஉன் இறைவனைப் பற்றிالْكَرِيْمِۙ‏கண்ணியவான்
யா அய்யுஹல் இன்ஸானு மா கர்ரக Bபி ரBப்Bபிகல் கரீம்
முஹம்மது ஜான்
மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?
அப்துல் ஹமீது பாகவி
மனிதனே! மிக கண்ணியம் உள்ள உனது இறைவனைப் பற்றி உன்னை மயக்கிவிட்டது எது?
IFT
மனிதனே! அருட்கொடையாளனாகிய உன் இறைவனைக் குறித்து உன்னை ஏமாற்றத்தில் வீழ்த்தியது எது?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதனே! கொடையாளனாகிய உமதிரட்சகனுக்கு மாறு செய்ய உன்னை ஏமாற்றியது எது?
Saheeh International
O mankind, what has deceived you concerning your Lord, the Generous,
الَّذِیْ خَلَقَكَ فَسَوّٰىكَ فَعَدَلَكَ ۟ۙ
الَّذِىْஎப்படிப்பட்டவன்خَلَقَكَஉன்னைப் படைத்தான்فَسَوّٰٮكَஇன்னும் உன்னை சீர்செய்தான்فَعَدَلَـكَۙ‏இன்னும் உன்னைத் திருப்பினான்
அல்லதீ கலகக Fபஸவ் வாக Fப'அதலக்
முஹம்மது ஜான்
அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் (ஒன்றுமில்லாதிருந்த) உன்னைப் படைத்து மேலான விதத்தில் மிக ஒழுங்காக உன்னை அமைத்தான்.
IFT
அவனே உன்னைப் படைத்தான்; உன்னைக் குறைகள் எதுவுமின்றிச் செம்மைப்படுத்தினான்; உனக்குப் பொருத்தமான உறுப்புகளை அளித்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உமதிரட்சகனாகிய) அவன் எத்தகையவனென்றால், உன்னை (ஒரு துளி விந்திலிருந்து)ப் படைத்து பின்னர் உன்னை ஒழுங்காக அமைத்து (உன் தோற்றத்தை) சரியாக ஆக்கினான்.
Saheeh International
Who created you, proportioned you, and balanced you?
فِیْۤ اَیِّ صُوْرَةٍ مَّا شَآءَ رَكَّبَكَ ۟ؕ
فِىْۤ اَىِّ صُوْرَةٍ مَّاஎந்த உருவத்தில்شَآءَநாடினானோرَكَّبَكَؕ‏உன்னைப் பொறுத்தினான்
Fபீ அய்யீ ஸூரதிம் மா ஷா'அ ரக்கBபக்
முஹம்மது ஜான்
எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன் விரும்பிய (மிக்க அழகான) கோலத்தில் உன் அவயங்களைப் பொறுத்தினான்.
IFT
மேலும், தான் நாடிய உருவத்தில் உன்னை ஒருங்கிணைத்து உண்டாக்கினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எந்த வடிவத்தில் அவன் நாடினானோ (அதில்) உன்னைப் பொருத்தினான்.
Saheeh International
In whatever form He willed has He assembled you.
كَلَّا بَلْ تُكَذِّبُوْنَ بِالدِّیْنِ ۟ۙ
كَلَّاஅவ்வாறல்லبَلْமாறாகتُكَذِّبُوْنَபொய்ப்பிக்கிறீர்கள்بِالدِّيْنِۙ‏கூலி கொடுக்கப்படுவதை
கல்லா Bபல் துகத்திBபூன Bபித் தீன்
முஹம்மது ஜான்
இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், (மனிதர்களே!) நீங்கள் கூலி கொடுக்கும் (தீர்ப்பு) நாளைப் பொய்யாக்குகிறீர்கள்.
IFT
ஒருபோதும் அவ்வாறில்லை! மாறாக, (உண்மை யாதெனில்) கூலி கொடுக்கப்படுவதை நீங்கள் பொய்யெனத் தூற்றுகின்றீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்று! எனினும் கூலிகொடுக்கப்படும் (மறுமை) நாளை நீங்கள் பொய்யாக்குகின்றீர்கள்.
Saheeh International
No! But you deny the Recompense.
وَاِنَّ عَلَیْكُمْ لَحٰفِظِیْنَ ۟ۙ
وَاِنَّ عَلَيْكُمْஇன்னும் நிச்சயமாக உங்கள் மீதுلَحٰـفِظِيْنَۙ‏காவலர்கள்
வ இன்ன 'அலய்கும் லஹா Fபிளீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக உங்கள் மீது காவலாளர்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.
IFT
நிச்சயமாக உங்கள் மீது கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக உங்கள் மீது பாதுகாவலர்களும் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
Saheeh International
And indeed, [appointed] over you are keepers,
كِرَامًا كَاتِبِیْنَ ۟ۙ
كِرَامًاகண்ணியமானவர்கள்كَاتِبِيْنَۙ‏எழுத்தாளர்கள்
கிராமன் காதிBபீன்
முஹம்மது ஜான்
(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் (வானவர்களில் உள்ள) கண்ணியமான எழுத்தாளர்கள்.
IFT
அவர்களோ கண்ணியமிக்க எழுத்தர்களாவர்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் (மலக்குகளிலுள்ள) கண்ணியமான எழுத்தாளர்கள்.
Saheeh International
Noble and recording;
یَعْلَمُوْنَ مَا تَفْعَلُوْنَ ۟
يَعْلَمُوْنَஅவர்கள் அறிகிறார்கள்مَا تَفْعَلُوْنَ‏நீங்கள் செய்வதை
யஃலமூன ம தFப்'அலூன்
முஹம்மது ஜான்
நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் செய்பவற்றையெல்லாம் அவர்கள் (தவறாது) அறிந்து (எழுதிக்) கொள்வார்கள்.
IFT
உங்களுடைய ஒவ்வொரு செயலையும் அறிகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் செய்பவற்றை அவர்கள் அறிந்து (எழுதிக்) கொள்வார்கள்.
Saheeh International
They know whatever you do.
اِنَّ الْاَبْرَارَ لَفِیْ نَعِیْمٍ ۟ۙ
اِنَّநிச்சயமாகالْاَبْرَارَநல்லோர்لَفِىْ نَعِيْمٍۚ‏நயீம் என்ற சொர்க்கத்தில்தான்
இன்னல் அBப்ரார லFபீ ன'ஈம்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள், இன்பம் நிறைந்த சொர்க்கத்தில் இருப்பார்கள்.
IFT
திண்ணமாக, நல்லவர்கள் இன்பத்தில் திளைத்திருப் பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நல்லோர் சுகபோகத்தில் இருப்பார்கள்.
Saheeh International
Indeed, the righteous will be in pleasure,
وَاِنَّ الْفُجَّارَ لَفِیْ جَحِیْمٍ ۟ۚۖ
وَاِنَّஇன்னும் நிச்சயமாகالْفُجَّارَதீயோர்لَفِىْ جَحِيْمٍ ۚۖ‏ஜஹீம் என்ற நரகத்தில்தான்
வ இன்னல் Fபுஜ்ஜார லFபீ ஜஹீம்
முஹம்மது ஜான்
இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாகத் தீயவர்கள் நரகத்தில்தான் இருப்பார்கள்.
IFT
மேலும், சந்தேகமின்றி, தீயவர்கள் நரகத்துக்குச் செல்வார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நிச்சயமாக தீயோர் நரகத்தில் இருப்பார்கள்.
Saheeh International
And indeed, the wicked will be in Hellfire.
یَّصْلَوْنَهَا یَوْمَ الدِّیْنِ ۟
يَّصْلَوْنَهَاஅதில் எரிவார்கள்يَوْمَநாளில்الدِّيْنِ‏கூலி
யஸ்லவ்னஹா யவ்மத் தீன்
முஹம்மது ஜான்
நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
கூலி கொடுக்கும் நாளில் அதையே அவர்கள் அடைவார்கள்.
IFT
கூலி கொடுக்கப்படும் நாளில், அதில் அவர்கள் நுழைவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
கூலி கொடுக்கப்படும் நாளில் அதில் அவர்கள் நுழைவார்கள்.
Saheeh International
They will [enter to] burn therein on the Day of Recompense,
وَمَا هُمْ عَنْهَا بِغَآىِٕبِیْنَ ۟ؕ
وَمَاஇன்னும் இல்லைهُمْஅவர்கள்عَنْهَاஅதிலிருந்துبِغَآٮِٕبِيْنَؕ‏மறைபவர்களாக
வமா ஹும் 'அன்ஹா Bபிகா 'இBபீன்
முஹம்மது ஜான்
மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் அதிலிருந்து மறைந்து (தப்பி ஓடி) விட முடியாது.
IFT
மேலும், அதிலிருந்து அவர்கள் காணாமல் போய்விட முடியாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் அதிலிருந்து மறைந்து (தப்பி) விடக்கூடியவர்களுமல்லர்.
Saheeh International
And never therefrom will they be absent.
وَمَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الدِّیْنِ ۟ۙ
وَمَاۤஇன்னும் எதுاَدْرٰٮكَஉமக்கு அறிவித்ததுمَاஎன்ன(வென்று)يَوْمُ الدِّيْنِۙ‏கூலி நாள்
வ மா அத்ராக மா யவ்முத் தீன்
முஹம்மது ஜான்
நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று நீர் அறிவீரா?
IFT
மேலும், கூலி கொடுக்கப்படும் நாள் என்னவென்று நீர் அறிவீரா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) கூலி கொடுக்கப்படும் நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
Saheeh International
And what can make you know what is the Day of Recompense?
ثُمَّ مَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الدِّیْنِ ۟ؕ
ثُمَّபிறகுمَاۤஎது?اَدْرٰٮكَஉமக்கு அறிவித்ததுمَاஎன்ன(வென்று)يَوْمُ الدِّيْنِؕ‏கூலி நாள்
தும்ம மா அத்ராக மா யவ்முத் தீன்
முஹம்மது ஜான்
பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது?
அப்துல் ஹமீது பாகவி
பிறகு, கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று உமக்கு எவரேனும் அறிவித்தனரா?
IFT
ஆம்! கூலி கொடுக்கப்படும் அந்நாள் எத்தகையது என்று உமக்குத் தெரியுமா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னும், கூலி கொடுக்கப்படும் நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
Saheeh International
Then, what can make you know what is the Day of Recompense?
یَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَیْـًٔا ؕ وَالْاَمْرُ یَوْمَىِٕذٍ لِّلّٰهِ ۟۠
يَوْمَநாள்لَا تَمْلِكُஉரிமை பெறாதுنَفْسٌஓர் ஆன்மாلِّنَفْسٍஓர் ஆத்மாவிற்குشَيْئًا‌ ؕஎதையும்وَالْاَمْرُஇன்னும் அதிகாரம்يَوْمَٮِٕذٍஅந்நாளில்لِّلّٰهِ‏அல்லாஹ்விற்கே
யவ்ம லா தம்லிகு னFப்ஸுல் லினFப்ஸின் ஷய்'அ வல் அம்ரு யவ்ம'இதில் லில்லாஹ்
முஹம்மது ஜான்
அந்நாளில் ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது; அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் ஓர் ஆத்மா, மற்றோர் ஆத்மாவுக்கு ஒரு பயனுமளிக்க சக்தி பெறாது. அதிகாரமும் அந்நாளில் அல்லாஹ்வுக்கே இருக்கும்.
IFT
அந்நாளில் எந்த மனிதனுக்காகவும் எதையும் செய்திட எவருக்கும் சக்தியிராது. தீர்ப்பு வழங்குவது, அந்நாளில் முற்றிலும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் இருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அந்நாள் தான்) எந்த ஆத்மாவும் (பிறிதோர்) ஆத்மாவுக்கு எதையும் செய்ய சக்தி பெறாத நாள்; இன்னும் அதிகாரம் (முழுவதும்) அன்றையத் தினத்தில் அல்லாஹ்வுக்கே உரியது.
Saheeh International
It is the Day when a soul will not possess for another soul [power to do] a thing; and the command, that Day, is [entirely] with Allah.