وَاِذَا كَالُوْهُمْஇன்னும் அவர்கள் அவர்களுக்காக அளந்து கொடுக்கும் போதுاَوْஅல்லதுوَّزَنُوْهُمْஅவர்களுக்காக நிறுத்து கொடுக்கும் போதுيُخْسِرُوْنَؕகுறைத்துக் கொடுக்கிறார்கள்
வ இதா காலூஹும் அவ் வZஜனூஹும் யுக்ஸிரூன்
முஹம்மது ஜான்
ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுத்தாலும் அல்லது நிறுத்துக் கொடுத்தாலும் குறைத்து (அவர்களை நஷ்டப்படுத்தி) விடுகின்றனர்.
IFT
அவர்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறைத்துக் கொடுக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆனால்) தாங்கள் அவர்களுக்கு (-மற்ற மனிதர்களுக்கு) அளந்து கொடுத்தாலும், அல்லது அவர்களுக்கு நிறுத்துக் கொடுத்தாலும் (குறைத்து மோசடி செய்து அவர்களை) நஷ்டப்படுத்தி விடுகின்றனர்.
Saheeh International
But if they give by measure or by weight to them, they cause loss.
அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவ்வாறல்ல. அவர்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்களே அவர்களின் உள்ளங்கள் மீது (துருவாகப்படிந்து) மூடிக் கொண்டன. (ஆதலால்தான், இவ்வாறு கூறுகின்றனர்.)
IFT
ஒருபோதும் அவ்வாறில்லை. மாறாக, உண்மை யாதெனில், அவர்களுடைய தீயசெயல்களின் கறை அவர்களின் உள்ளங்களில் படிந்து விட்டிருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவ்வாறன்று! பின்னர் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களின் இதயங்களின் மீது துருவாகப்படிந்து விட்டன. (ஆதலால்தான், இவ்வாறு கூறுகின்றனர்).
Saheeh International
No! Rather, the stain has covered their hearts of that which they were earning.
(தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவ்வாறல்ல. (விசாரணைக்காகக் கொண்டு வரப்படும்) அந்நாளில் நிச்சயமாக இவர்கள் தங்கள் இறைவனை விட்டும் தடுக்கப்பட்டு விடுவார்கள்.
IFT
ஒருபோதும் அவ்வாறில்லை! திண்ணமாக, அவர்கள் அந்நாளில் தம் இறைவனைக் காணும் பேற்றினை விட்டு தடுத்து வைக்கப்படுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(காஃபிர்கள் தங்களுக்கு இரட்சகனிடம் நெருக்கமிருப்பதாகக் கூறிக் கொண்டிருந்தார்களே அது) அவ்வாறல்ல! (விசாரணைக்காகக் கொண்டு வரப்படும்) அந்நாளில் நிச்சயமாக அவர்கள் தங்களுடைய இரட்சகனை (ப் பார்ப்பதை) விட்டும் மறைக்கப்பட்டவர்களாவர்.
Saheeh International
No! Indeed, from their Lord, that Day, they will be partitioned.
وَاِذَا انْقَلَبُوْۤاஇன்னும் அவர்கள் திரும்பும் போதுاِلٰٓى اَهْلِهِمُதங்கள் குடும்பத்தாரிடம்انْقَلَبُوْاதிரும்புகிறார்கள்فَكِهِيْنَ ۖமகிழ்ச்சியாளர்களாக
வ இதன் கலBபூ இலா அஹ்லிஹிமுன் கலBபூ Fபகிஹீன்
முஹம்மது ஜான்
இன்னும் அவர்கள் தம் குடும்பத்தார்பால் திரும்பிச் சென்றாலும், (தாங்கள் செய்தது பற்றி) மகிழ்வுடனேயே திரும்பிச் செல்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களை விட்டும் விலகித்) தங்கள் குடும்பத்தார்களிடம் சென்று விட்டபோதிலும், இவர்களுடைய விஷயங்களையே (பரிகாசமாகப் பேசி) மகிழ்ச்சியடைகின்றனர்.
IFT
மேலும், தம் குடும்பத்தாரிடம் திரும்பும்போது மகிழ்ச்சி ஆரவாரத்துடன் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், தங்கள் குடும்பத்தார்பால் திரும்பிச் செல்வார்களாயின் (தாங்கள் செய்ததைப்பற்றி மகிழ்ச்சியடைந்தவர்களாகத் திரும்புகின்றனர்.
Saheeh International
And when they returned to their people, they would return jesting.