85. ஸூரத்துல் புரூஜ்(கிரகங்கள்)

மக்கீ, வசனங்கள்: 22

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
وَالسَّمَآءِ ذَاتِ الْبُرُوْجِ ۟ۙ
وَالسَّمَآءِவானத்தின் மீது சத்தியமாக!ذَاتِ الْبُرُوْجِۙ‏கோள்களுடைய
வஸ்ஸமா'இ தாதில் Bபுரூஜ்
முஹம்மது ஜான்
கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,
அப்துல் ஹமீது பாகவி
கோள்கள் நிறைந்த வானத்தின் மீது சத்தியமாக,
IFT
உறுதியான கோட்டைகளைக் கொண்ட வானத்தின் மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
கிரகங்களுடைய வானின்மீது சத்தியமாக!
Saheeh International
By the sky containing great stars
وَالْیَوْمِ الْمَوْعُوْدِ ۟ۙ
وَالْيَوْمِநாள் மீது சத்தியமாகالْمَوْعُوْدِۙ‏வாக்களிக்கப்பட்ட
வல் யவ்மில் மவ்'ஊத்
முஹம்மது ஜான்
இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
அப்துல் ஹமீது பாகவி
வாக்களிக்கப்பட்ட (மறுமை) நாள் மீது சத்தியமாக,
IFT
வாக்களிக்கப்பட்ட அந்த நாளின் மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வாக்களிக்கப்பட்ட (மறுமை) நாளின் மீதும் சத்தியமாக!
Saheeh International
And [by] the promised Day
وَشَاهِدٍ وَّمَشْهُوْدٍ ۟ؕ
وَشَاهِدٍசாட்சியாளர் மீது சத்தியமாகوَّمَشْهُوْدٍؕ‏சாட்சியாக்கப்பட்டதின் மீது சத்தியமாக
வ ஷாஹிதி(ன்)வ் வ மஷ்ஹூத்
முஹம்மது ஜான்
மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
அப்துல் ஹமீது பாகவி
சாட்சியின் மீதும், சாட்சி சொல்ல வேண்டிய நாளின் மீதும் சத்தியமாக!
IFT
மேலும், பார்க்கின்றவர் மீதும், பார்க்கப்படும் பொருளின் மீதும் சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சாட்சியாளர் மீதும், சாட்சி சொல்லப்படுகின்றவற்றின் மீதும் சத்தியமாக!
Saheeh International
And [by] the witness and what is witnessed,
قُتِلَ اَصْحٰبُ الْاُخْدُوْدِ ۟ۙ
قُتِلَஅழிக்கப்பட்டார்கள்اَصْحٰبُ الْاُخْدُوْدِۙ‏அகழ்காரர்கள்
குதில அஸ் ஹாBபுல் உக்தூத்
முஹம்மது ஜான்
(நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் சபிக்கப்பட்டனர்.
அப்துல் ஹமீது பாகவி
அகழுடையவர்கள் அழிக்கப்பட்டார்கள். (அவ்வாறே இம்மக்காவாசிகளும் அழிக்கப்படுவார்கள்.)
IFT
தீக்குண்டத்தார் அழிக்கப்பட்டார்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நெருப்புக்) குண்டங்களையுடையோர் சபிக்கப்பட்டுவிட்டனர்.
Saheeh International
Destroyed [i.e., cursed] were the companions of the trench
النَّارِ ذَاتِ الْوَقُوْدِ ۟ۙ
النَّارِநெருப்புடையவர்கள்ذَاتِ الْوَقُوْدِۙ‏விறகுகளுடைய
அன்னாரி தாதில் வகூத்
முஹம்மது ஜான்
விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).
அப்துல் ஹமீது பாகவி
அது, விறகுகள் போட்டெரித்த நெருப்பு (அகழ்).
IFT
(அது எத்தகைய தீக்குண்டமெனில்) அதில் நன்கு கொழுந்து விட்டெரியும் எரிபொருள் இருந்தது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எரிபொருளுடைய (பெரும்) நெருப்பு(க்குண்டம்)
Saheeh International
[Containing] the fire full of fuel,
اِذْ هُمْ عَلَیْهَا قُعُوْدٌ ۟ۙ
اِذْபோதுهُمْஅவர்கள்عَلَيْهَاஅதனருகில்قُعُوْدٌ ۙ‏உட்கார்ந்திருந்தனர்
இத் ஹும் 'அலய்ஹா கு'ஊத்
முஹம்மது ஜான்
அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,
அப்துல் ஹமீது பாகவி
அதன் முன் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த சமயத்தில்,
IFT
அவர்கள் அதன் ஓரத்தில் அமர்ந்திருந்து
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதன்மேல் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த போது (சபிக்கப்பட்டுவிட்டனர்.)
Saheeh International
When they were sitting near it.
وَّهُمْ عَلٰی مَا یَفْعَلُوْنَ بِالْمُؤْمِنِیْنَ شُهُوْدٌ ۟ؕ
وَّهُمْஇன்னும் அவர்கள்عَلٰى مَاஎதைيَفْعَلُوْنَசெய்வார்கள்بِالْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களுக்குشُهُوْدٌ ؕ‏ஆஜராகி இருந்தார்கள்
வ ஹும் 'அலா மா யFப்'அலூன Bபில்மு 'மினீன ஷுஹூத்
முஹம்மது ஜான்
முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களை (நெருப்புக் கிடங்கில் போட்டு) நோவினை செய்வதை அவர்கள் (வேடிக்கையாகப்) பார்த்துக் கொண்டுமிருந்தார்கள்.
IFT
இறைநம்பிக்கையாளர்களுக்குத் தாம் செய்து கொண்டிருந்த செயல்களைப் பார்த்த வண்ணம் இருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசிகளை அவர்கள் (நெருப்புக்குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு (அவர்களே) சாட்சியாளர்கள்.
Saheeh International
And they, to what they were doing against the believers, were witnesses.
وَمَا نَقَمُوْا مِنْهُمْ اِلَّاۤ اَنْ یُّؤْمِنُوْا بِاللّٰهِ الْعَزِیْزِ الْحَمِیْدِ ۟ۙ
وَمَا نَقَمُوْاஇன்னும் தண்டிக்கவில்லைمِنْهُمْஅவர்களைاِلَّاۤதவிரاَنْ يُّؤْمِنُوْاஅவர்கள் நம்பிக்கை கொண்டதற்காகவேبِاللّٰهِஅல்லாஹ்வைالْعَزِيْزِமிகைத்தவன்الْحَمِيْدِۙ‏புகழாளன்
வமா னகமூ மின்ஹும் இல்லா அய்யு'மினூ Bபில்லாஹில் 'அZஜீZஜில் ஹமீத்
முஹம்மது ஜான்
(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கை கொண்ட) அவர்களில் ஒரு குற்றத்தையும் அவர்கள் காணவில்லை. எனினும், மிக்க புகழுடையவனும், (அனைவரையும்) மிகைத்தவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பிக்கை கொண்டதையே அவர்கள் குற்றமாகக் கண்டனர்.
IFT
அந்த இறை நம்பிக்கையாளர்களிடம் இவர்கள் பகைமை பாராட்டியதற்குக் காரணம் இதைத் தவிர வேறு எதுவும் இல்லை: யாவற்றையும் மிகைத்தவனும் தனக்குத்தானே புகழுக்குரியவனுமான அல்லாஹ்வின் மீது அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதுதான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(யாவரையும்) மிகைத்தோன், மிக்க புகழுக்குரியோனாகிய அல்லாஹ்வை அவர்கள் விசுவாசித்ததற்காகவே தவிர (வேறு எதற்கும் விசுவாசிகளான) அவர்களை அவர்கள் பழிவாங்கவில்லை.
Saheeh International
And they resented them not except because they believed in Allah, the Exalted in Might, the Praiseworthy,
الَّذِیْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟ؕ
الَّذِىْஎப்படிப்பட்டவன்لَهٗஅவனுக்குரியதேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமிوَ اللّٰهُஇன்னும் அல்லாஹ்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாப் பொருள்கள் மீதும்شَهِيْدٌ ؕ‏சாட்சியாளன்
அல்லதீ லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ள்; வல்லாஹு 'அலா குல்லி ஷய் 'இன் ஷஹீத்
முஹம்மது ஜான்
வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! (அவனை நம்பிக்கை கொண்டதற்காகவே அந்த பாவிகள் அவர்களை நெருப்பில் எறிந்தனர்.) அல்லாஹ்வோ, (இவர்கள் செய்த) அனைத்திற்கும் சாட்சி ஆவான்.
IFT
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரத்திற்கு உரிமையாளனும் அந்த இறைவனே. மேலும், அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால் வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; அல்லாஹ்வோ ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளன்.
Saheeh International
To whom belongs the dominion of the heavens and the earth. And Allah, over all things, is Witness.
اِنَّ الَّذِیْنَ فَتَنُوا الْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ ثُمَّ لَمْ یَتُوْبُوْا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِیْقِ ۟ؕ
اِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்கள்فَتَـنُواதுன்புறுத்தினார்கள்الْمُؤْمِنِيْنَநம்பிக்கை கொண்ட ஆண்களைوَ الْمُؤْمِنٰتِஇன்னும் நம்பிக்கை கொண்ட பெண்களைثُمَّபிறகுلَمْ يَتُوْبُوْاஅவர்கள் திருந்தவில்லைفَلَهُمْஅவர்களுக்குعَذَابُவேதனைجَهَنَّمَஜஹன்னம் என்ற நரகத்தின்وَلَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابُவேதனைالْحَرِيْقِؕ‏சுட்டெரிக்கக்கூடிய
இன்னல் லதீன Fபதனுல் மு'மினீன வல் மு'மினாதி தும்ம லம் யதூBபூ Fபலஹும் 'அதாBபு ஜஹன்னம வ லஹும் 'அதாBபுல் ஹரீக்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் இவ்வாறு துன்புறுத்தி பின்னர், அதைப்பற்றி அவர்கள் (கைசேதப்பட்டு) மன்னிப்புக் கோரவும் இல்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக வேதனை உண்டு. மேலும், (அவர்கள் நம்பிக்கையாளர்களை நெருப்பிட்டவாறு) அவர்களுக்கும் பொசுக்குகின்ற வேதனையுண்டு.
IFT
இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மீது எவர்கள் கொடுமைகள் புரிந்தார்களோ, பிறகு, அதற்காக மன்னிப்புக் கோரி மீளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயம் நரகவேதனை இருக்கிறது. மேலும், சுட்டெரிக்கும் தண்டனையும் உண்டு,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே,) நிச்சயமாக விசுவாசங்கொண்ட ஆண்களையும், விசுவாசங்கொண்ட பெண்களையும் (இவ்வாறு) துன்புறுத்திப் பின்னர், அவர்கள் (தவ்பாச் செய்து) மன்னிப்புக் கோரவுமில்லையோ அத்தகையோர் - அவர்களுக்கு நரக வேதனையுண்டு; அவர்களுக்கு (விசுவாசிகளை அவர்கள் கரித்தவாறு நெருப்பால்) கரிக்கும் வேதனையுமுண்டு.
Saheeh International
Indeed, those who have tortured the believing men and believing women and then have not repented will have the punishment of Hell, and they will have the punishment of the Burning Fire.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؔؕ۬ ذٰلِكَ الْفَوْزُ الْكَبِیْرُ ۟ؕ
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநற்செயல்களைلَهُمْஅவர்களுக்குجَنّٰتٌசொர்க்கங்கள்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழிருந்துالْاَنْهٰرُ ؕؔநதிகள்ذٰلِكَஅதுதான்الْفَوْزُவெற்றிالْكَبِيْرُؕ‏பெரும்
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் ஜன்னாதுன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹார்; தாலிகல் Fபவ்Zஜுல் கBபீர்
முஹம்மது ஜான்
ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ நிச்சயமாக அவர்களுக்கு தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களுண்டு. இதுதான் மாபெரும் வெற்றி.
IFT
எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களுக்குத் திண்ணமாக சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். இதுவே பெரும் வெற்றியாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக விசுவாசங்கொணடு நற்கருமங்களையும் செய்கின்றார்களே அத்தகையோர் - அவர்களுக்குச் சுவனங்கள் உண்டு; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அது மாபெரும் வெற்றியாகும்.
Saheeh International
Indeed, those who have believed and done righteous deeds will have gardens beneath which rivers flow. That is the great attainment.
اِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِیْدٌ ۟ؕ
اِنَّநிச்சயமாகبَطْشَபிடிرَبِّكَஉம் இறைவனின்لَشَدِيْدٌ ؕ‏கடுமையானதுதான்
இன்ன Bபத்ஷ ரBப்Bபிக லஷதீத்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! இந்த விஷமிகளைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால்) நிச்சயமாக உமது இறைவனின் பிடி மிக்க கடுமையானது. (அதிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது.)
IFT
உண்மையில், உம் இறைவனின் பிடி மிகக் கடுமையானது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிச்சயமாக உமதிரட்சகனின் பிடி மிகக் கடுமையானது.
Saheeh International
Indeed, the assault [i.e., vengeance] of your Lord is severe.
اِنَّهٗ هُوَ یُبْدِئُ وَیُعِیْدُ ۟ۚ
اِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்يُبْدِئُஉற்பத்திசெய்கிறான்وَيُعِيْدُ‌ ۚ‏இன்னும் மீட்கிறான்
இன்னஹூ ஹுவ யுBப்தி'உ வ யு'ஈத்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்திற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவன்தான் (அவர்களை) உற்பத்தி செய்கிறான். (அவர்கள் மரணித்த பின்னரும்) அவர்களை மீளவைப்பான்.
IFT
திண்ணமாக, அவனே முதன் முதலாகப் படைக்கின்றான். அவனே மீண்டும் படைப்பான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவன்தான் (அவர்களை) ஆரம்பமாக படைக்கிறான், (அவர்கள் மரணித்த பின்னரும் அவர்களை) அவனே மீளவைப்பான்.
Saheeh International
Indeed, it is He who originates [creation] and repeats.
وَهُوَ الْغَفُوْرُ الْوَدُوْدُ ۟ۙ
وَهُوَஇன்னும் அவன்தான்الْغَفُوْرُமகா மன்னிப்பாளன்الْوَدُوْدُۙ‏மகா நேசன்
வ ஹுவல் கFபூருல் வதூத்
முஹம்மது ஜான்
அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் (நம்பிக்கை கொண்டவர்களை) மிக்க மன்னிப்பவனும், மிக நேசிப்பவனும் ஆவான்.
IFT
மேலும், அவன் அதிகம் மன்னித்தருள்பவனாகவும், அன்பு செலுத்துபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் அவனே (விசுவாசங்கொண்டோரான தன் அடியார்களை) மிக்க மன்னிப்பவன், மிக்க நேசிப்பவன்-
Saheeh International
And He is the Forgiving, the Affectionate,
ذُو الْعَرْشِ الْمَجِیْدُ ۟ۙ
ذُو الْعَرْشِஅர்ஷுடையவன்الْمَجِيْدُ ۙ‏பெரும் மதிப்பிற்குரியவன்
துல் 'அர்ஷில் மஜீத்
முஹம்மது ஜான்
(அவனே) அர்ஷுக்குடையவன்; பெருந்தன்மை மிக்கவன்.
அப்துல் ஹமீது பாகவி
(அவன்தான்) அர்ஷுடையவன், மகா கீர்த்தியுடையவன்.
IFT
அர்ஷின் உரிமையாளனாகவும், மேன்மை மிக்கவனாகவும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவன்தான்) அர்ஷுடையவன், பெரும் கீர்த்தியுடையவன்-
Saheeh International
Honorable Owner of the Throne,
فَعَّالٌ لِّمَا یُرِیْدُ ۟ؕ
فَعَّالٌசெய்து முடிப்பவன்لِّمَا يُرِيْدُ ؕ‏தான் நாடுவதை
Fப' 'ஆலுல் லிமா யுரீத்
முஹம்மது ஜான்
தான் விரும்பியவற்றைச் செய்கிறவன்.
அப்துல் ஹமீது பாகவி
தான் விரும்பியதையெல்லாம் செய்யக் கூடியவன்.
IFT
தான் நாடுகின்றவற்றை செயல்படுத்துபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தான் நாடியதையெல்லாம் மிகுதியாகச் செய்யக்கூடியவன்.
Saheeh International
Effecter of what He intends.
هَلْ اَتٰىكَ حَدِیْثُ الْجُنُوْدِ ۟ۙ
هَلْ اَتٰٮكَஉமக்கு வந்ததா?حَدِيْثُசெய்திالْجُـنُوْدِۙ‏ராணுவங்களின்
ஹல் அதாக ஹதீதுல் ஜுனூத்
முஹம்மது ஜான்
(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு எட்டியதா? (யாருடைய படைகள்?)
IFT
படைகளைப் பற்றிய செய்தி உமக்கு எட்டியதா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்தப் படைகளின் செய்தி (நபியே!) உமக்கு வந்ததா?
Saheeh International
Has there reached you the story of the soldiers -
فِرْعَوْنَ وَثَمُوْدَ ۟ؕ
فِرْعَوْنَஃபிர்அவ்ன்وَثَمُوْدَؕ‏இன்னும் ஸமூது
Fபிர்'அவ்ன வ தமூத்
முஹம்மது ஜான்
ஃபிர்அவ்னுடையவும், ஸமூதுடையவும்,
அப்துல் ஹமீது பாகவி
ஃபிர்அவ்ன், ஸமூதுடைய (படைகள்).
IFT
ஃபிர்அவ்ன் மற்றும் ஸமூத் சமுதாயத்தினரின் (படைகளைப் பற்றிய) செய்தி
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஃபிர் அவ்னுடையவும் ஸமூதுடையவும்;
Saheeh International
[Those of] Pharaoh and Thamūd?
بَلِ الَّذِیْنَ كَفَرُوْا فِیْ تَكْذِیْبٍ ۟ۙ
بَلِமாறாகالَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பாளர்கள்فِىْ تَكْذِيْبٍۙ‏பொய்ப்பிப்பதில்தான்
Bபலில் லதீன கFபரூ Fபீ தக்தீBப்
முஹம்மது ஜான்
எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், இந்நிராகரிப்பவர்கள் (குர்ஆனைப்) பொய்யாக்குவதிலேயே (முனைந்து) கிடக்கின்றனர்.
IFT
ஆனால், நிராகரிப்பாளர்கள் பொய்யெனத் தூற்றுவதில் முனைந்துள்ளார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனினும், நிராகரிப்போர் (குர் ஆனைப்) பொய்யாக்குவதிலேயே (மூழ்கி) இருக்கின்றனர்.
Saheeh International
But they who disbelieve are in [persistent] denial,
وَّاللّٰهُ مِنْ وَّرَآىِٕهِمْ مُّحِیْطٌ ۟ۚ
وَّاللّٰهُஇன்னும் அல்லாஹ்مِنْ وَّرَآٮِٕهِمْஅவர்களுக்குப் பின்னாலிருந்துمُّحِيْطٌۚ‏சூழ்ந்திருக்கின்றான்
வல்லாஹு மி(ன்)வ் வரா'இஹிம் முஹீத்
முஹம்மது ஜான்
ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வோ, அவர்களை முற்றிலும் சூழ்ந்து கொண்டிருக்கிறான்.
IFT
ஆயினும், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்து கொண்டிருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆனால்) அல்லாஹ்வோ, அவர்களுக்கு அப்பாலிருந்து (அவர்களை எல்லாப் பகுதிகளிலிருந்தும்) சூழ்ந்து கொண்டிருக்கின்றான்.
Saheeh International
While Allah encompasses them from behind.
بَلْ هُوَ قُرْاٰنٌ مَّجِیْدٌ ۟ۙ
بَلْமாறாகهُوَஇதுقُرْاٰنٌகுர்ஆன்مَّجِيْدٌ ۙ‏பெரும்மதிப்பிற்குரிய
Bபல் ஹுவ குர்'ஆனும் மஜீத்
முஹம்மது ஜான்
(நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
(இது கவியல்ல.) மாறாக, இது கீர்த்திமிக்க குர்ஆன்,
IFT
(அவர்கள் பொய்யெனத் தூற்றுவதால் இந்தக் குர்ஆனுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்பட்டுவிடாது) மாறாக, இந்தக் குர்ஆன் அதிக மகத்துவம் மிக்கது;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனினும், அது கீர்த்திமிக்க குர் ஆனாகும்.
Saheeh International
But this is an honored Qur’an
فِیْ لَوْحٍ مَّحْفُوْظٍ ۟۠
فِىْ لَوْحٍபலகையில்مَّحْفُوْظٍ‏பாதுகாக்கப்பட்டது
Fபீ லவ்ஹிம் மஹ்Fபூள்
முஹம்மது ஜான்
(எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
(இது) லவ்ஹுல் மஹ்பூளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (அதை இவர்கள் நிராகரிப்பதனால் ஆகக்கூடியதென்ன?)
IFT
பாதுகாக்கப்பட்ட பலகையில் (பதிக்கப்பட்டு) உள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பாதுகாக்கப்பட்ட (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பலகையில் (உள்ளது)
Saheeh International
[Inscribed] in a Preserved Slate.