86. ஸூரத்துத் தாரிஃக்(விடிவெள்ளி)

மக்கீ, வசனங்கள்: 17

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
وَالسَّمَآءِ وَالطَّارِقِ ۟ۙ
وَالسَّمَآءِவானத்தின் மீது சத்தியமாகوَالطَّارِقِۙ‏‘தாரிக்’கின் மீது சத்தியமாக
வஸ்ஸமா'இ வத்தாரிக்
முஹம்மது ஜான்
வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக
அப்துல் ஹமீது பாகவி
வானத்தின் மீதும், (இரவில்) உதயமாகக்கூடியதின் மீதும் சத்தியமாக!
IFT
வானத்தின் மீது சத்தியமாக! மேலும், இரவில் தோன்றக்கூடியதன் மீதும் சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானத்தின் மீதும், “தாரிக்”கின் மீதும் சத்தியமாக.
Saheeh International
By the sky and the night comer
وَمَاۤ اَدْرٰىكَ مَا الطَّارِقُ ۟ۙ
وَمَاۤஇன்னும் எதுاَدْرٰٮكَஉமக்கு அறிவித்ததுمَاஎன்ன(வென்று)الطَّارِقُۙ‏தாரிக்
வ மா அத்ராக மத்தாரிக்
முஹம்மது ஜான்
தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உதயமாகக்கூடியது என்னவென்று நீர் அறிவீரா!
IFT
இரவில் தோன்றக்கூடியது எது என்று உமக்குத் தெரியுமா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“தாரிக்”, என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
Saheeh International
And what can make you know what is the night comer?
النَّجْمُ الثَّاقِبُ ۟ۙ
النَّجْمُநட்சத்திரம்الثَّاقِبُۙ‏மின்னக்கூடிய
அன்னஜ்முத் தாகிBப்
முஹம்மது ஜான்
அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.
அப்துல் ஹமீது பாகவி
(இதுதான்) இரவெல்லாம் சுடரிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற நட்சத்திரம்.
IFT
அது ஓர் ஒளிரும் தாரகை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதுதான்) பிரகாசித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரம்.
Saheeh International
It is the piercing star
اِنْ كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَیْهَا حَافِظٌ ۟ؕ
اِنْஇல்லைكُلُّஒவ்வொருنَفْسٍஆன்மாவும்لَّمَّاதவிரعَلَيْهَاஅதன் மீதுحَافِظٌؕ‏ஒரு காவலர்
இன் குல்லு னFப்ஸில் லம்மா 'அலய்ஹா ஹாFபிள்
முஹம்மது ஜான்
ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.
அப்துல் ஹமீது பாகவி
ஒவ்வொரு மனிதனிடமும் (நம்மால் ஏற்படுத்தப்பட்ட) கண்காணிக்கக் கூடிய ஒரு (வான)வர் இல்லாமலில்லை.
IFT
பாதுகாப்பாளன் இல்லாத எந்த ஓர் உயிருமில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஓவ்வொரு ஆத்மாவுக்கும் (நம்மால் ஏற்படுத்தப்பட்ட) பாதுகாப்பாளர் ஒருவா் அதன் மீதில்லாமலில்லை.
Saheeh International
There is no soul but that it has over it a protector.
فَلْیَنْظُرِ الْاِنْسَانُ مِمَّ خُلِقَ ۟ؕ
فَلْيَنْظُرِஆகவே பார்க்கட்டும்الْاِنْسَانُமனிதன்مِمَّஎதிலிருந்துخُلِقَؕ‏படைக்கப்பட்டான்
Fபல் யன்ளுரில் இன்ஸானு மிம்ம குலிக்
முஹம்மது ஜான்
மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, மனிதன், தான் எதனால் படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை கவனிக்கவும்.
IFT
பிறகு, மனிதன் தான் எப்பொருளிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றான் என்பதையாவது சற்று கவனித்துப் பார்க்கட்டுமே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, மனிதன், (தான்) எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றானென்பதை அவன் (கவனித்துப்)பார்க்கவும்.
Saheeh International
So let man observe from what he was created.
خُلِقَ مِنْ مَّآءٍ دَافِقٍ ۟ۙ
خُلِقَபடைக்கப்பட்டான்مِنْ مَّآءٍதண்ணீரிலிருந்துدَافِقٍۙ‏வேகமாக ஊற்றப்படக்கூடிய
குலிக மிம் மா'இன் தாFபிக்
முஹம்மது ஜான்
குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
குதித்து வெளிப்படும் ஒரு துளித் தண்ணீரைக் கொண்டே படைக்கப்பட்டான்.
IFT
பீறிட்டுப் பாயும் நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ளான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்படடான்.
Saheeh International
He was created from a fluid, ejected,
یَّخْرُجُ مِنْ بَیْنِ الصُّلْبِ وَالتَّرَآىِٕبِ ۟ؕ
يَّخْرُجُஅது வெளியேறுகிறதுمِنْۢ بَيْنِமத்தியிலிருந்துالصُّلْبِமுதுகந்தண்டுக்கும்وَالتَّرَآٮِٕبِؕ‏நெஞ்செலும்புகளுக்கும்
யக்ருஜு மிம் Bபய்னிஸ்ஸுல்Bபி வத் தரா'இBப்
முஹம்மது ஜான்
முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
அப்துல் ஹமீது பாகவி
அது, முதுகந்தண்டுக்கும் நெஞ்சுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.
IFT
அது, முதுகெலும்புக்கும், நெஞ்செலும்புக்கும் இடையிலிருந்து வெளியாகின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அது (ஆணிண்) முதுகந்தண்டிற்கும் (பெண்ணின் மார்பகங்களுக்கு மேல்) நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகின்றது.
Saheeh International
Emerging from between the backbone and the ribs.
اِنَّهٗ عَلٰی رَجْعِهٖ لَقَادِرٌ ۟ؕ
اِنَّهٗநிச்சயமாக அவன்عَلٰى رَجْعِهٖஅவனை மீட்பதற்குلَقَادِرٌؕ‏ஆற்றல் மிக்கவனே
இன்னஹூ 'அலா ரஜ்'இஹீ லகாதிர்
முஹம்மது ஜான்
இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு படைக்கின்ற) அவன் (மனிதன் இறந்தபின் உயிர் கொடுத்து) அவனை மீளவைக்கவும் நிச்சயமாக ஆற்றலுடையவன்ன!
IFT
திண்ணமாக, அவன் (அந்தப் படைப்பாளன்) மீண்டும் அவனைப் படைப்பதற்கு ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவன், அவனை மீளவைப்பதின் மீது ஆற்றலுடையோன்.
Saheeh International
Indeed, He [i.e., Allah], to return him [to life], is Able.
یَوْمَ تُبْلَی السَّرَآىِٕرُ ۟ۙ
يَوْمَநாளில்تُبْلَىசோதிக்கப்படுகின்றالسَّرَآٮِٕرُۙ‏இரகசியங்கள்
யவ்ம துBப்லஸ் ஸரா'இர்
முஹம்மது ஜான்
இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.
அப்துல் ஹமீது பாகவி
என்றைய தினம் எல்லா மர்மங்களும் வெளிப்பட்டுவிடுமோ,
IFT
எந்நாளில் மறைவான இரகசியங்கள் சோதனை இடப்படுமோ அந்நாளில்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சகல மர்மங்களும் வெளிப்பட்டுவிடும் நாளில்-
Saheeh International
The Day when secrets will be put on trial,
فَمَا لَهٗ مِنْ قُوَّةٍ وَّلَا نَاصِرٍ ۟ؕ
فَمَاஆகவே இல்லைلَهٗஅவனுக்குمِنْ قُوَّةٍஎந்த சக்தியும்وَّلَا نَاصِرٍؕ‏இன்னும் எந்த உதவியாளரும் இல்லை
Fபமா லஹூ மின் குவ்வதி(ன்)வ் வலா னாஸிர்
முஹம்மது ஜான்
மனிதனுக்கு எந்த பலமும் இராது; (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
(அன்றைய தினம்) மனிதனுக்கு ஒரு சக்தியும் இருக்காது. உதவி செய்பவனும் இருக்க மாட்டான்.
IFT
மனிதனிடம் எந்த சுய வலிமையும் இராது; அவனுக்குத் துணை புரிபவர் எவரும் இருக்கமாட்டார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவனுக்கு யாதொரு சக்தியுமிராது, (அவனுக்கு) உதவி செய்பவரும் இருக்கமாட்டார்.
Saheeh International
Then he [i.e., man] will have no power or any helper.
وَالسَّمَآءِ ذَاتِ الرَّجْعِ ۟ۙ
وَالسَّمَآءِவானத்தின் மீது சத்தியமாகذَاتِ الرَّجْعِۙ‏மழைபொழியும்
வஸ்ஸமா'இ தாதிர் ரஜ்'
முஹம்மது ஜான்
(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
அப்துல் ஹமீது பாகவி
மழை பொழியும் வானத்தின் மீது சத்தியமாக!,
IFT
மழையைப் பொழிகின்ற வானத்தின் மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(திருமபத் திரும்ப) மழை பொழிதலையுடைய வானத்தின் மீது சத்தியமாக,
Saheeh International
By the sky which sends back
وَالْاَرْضِ ذَاتِ الصَّدْعِ ۟ۙ
وَالْاَرْضِபூமியின் மீது சத்தியமாகذَاتِ الصَّدْعِۙ‏தாவரங்களை முளைப்பிக்கும்
வல் அர்ளி தாதிஸ் ஸத்'
முஹம்மது ஜான்
(தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
அப்துல் ஹமீது பாகவி
(புற்பூண்டுகள் முளைக்க) வெடிக்கும் பூமியின் மீதும் சத்தியமாக!
IFT
மேலும் (தாவரங்கள் முளைக்கின்ற போது) பிளந்துவிடுகின்ற பூமியின் மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(தாவர வர்க்கங்கள் முளைக்க) வெடிப்பையுடைய பூமியின் மீதும் சத்தியமாக,
Saheeh International
And [by] the earth which splits,
اِنَّهٗ لَقَوْلٌ فَصْلٌ ۟ۙ
اِنَّهٗநிச்சயமாக இதுلَقَوْلٌகூற்றுதான்فَصْلٌۙ‏பிரித்தறிவிக்கக்கூடிய
இன்னஹூ லகவ்லுன் Fபஸ்ல்
முஹம்மது ஜான்
நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.
அப்துல் ஹமீது பாகவி
மெய்யாகவே இது (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கக்கூடிய சொல்லாகும்.
IFT
திண்ணமாக, இது தீர்க்கமான சொல்லே
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இது (சத்திய அசத்தியத்தைப்) பிரித்தறிவிக்கக்கூடிய சொல்லாகும்.
Saheeh International
Indeed, it [i.e., the Qur’an] is a decisive statement,
وَّمَا هُوَ بِالْهَزْلِ ۟ؕ
وَّمَا هُوَஇன்னும் இது இல்லைبِالْهَزْلِؕ‏விளையாட்டாக
வமா ஹுவ Bபில் ஹZஜ்ல்
முஹம்மது ஜான்
அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.
அப்துல் ஹமீது பாகவி
இது வீண் பரிகாசமா(ன வார்த்தைய)ல்ல.
IFT
தவிர கேலியோ விளையாட்டோ அல்ல!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், இது (வீண்) பரிகாசமன்று.
Saheeh International
And it is not amusement.
اِنَّهُمْ یَكِیْدُوْنَ كَیْدًا ۟ۙ
اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்يَكِيْدُوْنَசூழ்ச்சி செய்கிறார்கள்كَيْدًا ۙ‏சூழ்ச்சிதான்
இன்னஹும் யகீதூன கய்தா
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக அவர்கள் (உமக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்கிறார்கள்.
IFT
(மக்காவின் இறைநிராகரிப்பாளர்களான) இவர்கள் சில சூழ்ச்சிகள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கின்றார்கள்.
Saheeh International
Indeed, they are planning a plan,
وَّاَكِیْدُ كَیْدًا ۟ۚۖ
وَّاَكِيْدُஇன்னும் சூழ்ச்சி செய்கிறேன்كَيْدًا ۚۖ‏சூழ்ச்சிதான்
வ அகீது கய்தா
முஹம்மது ஜான்
நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.
அப்துல் ஹமீது பாகவி
நானும் (அவர்களுக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்வேன்.
IFT
நானும் ஒரு சூழ்ச்சி செய்து கொண்டிருக்கின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நானும் (அவர்களுக்கெதிராக அதை முறியடிக்க) ஒரு சூழ்ச்சி செய்வேன்.
Saheeh International
But I am planning a plan.
فَمَهِّلِ الْكٰفِرِیْنَ اَمْهِلْهُمْ رُوَیْدًا ۟۠
فَمَهِّلِஆகவே அவகாசமளிப்பீராகالْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குاَمْهِلْهُمْஅவர்களுக்கு அவகாசம் அளிப்பீராகرُوَيْدًا‏கொஞ்சம்
Fபமஹ்ஹிலில் காFபிரீன அம்ஹில்ஹும் ருவய்தா
முஹம்மது ஜான்
எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக; சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, இந்நிராகரிப்பவர்களுக்கு (அது வரை) நீர் அவகாசமளிப்பீராக. (அதிகமல்ல;) ஒரு சொற்ப அவகாசம் அவர்களுக்கு அளிப்பீராக.
IFT
எனவே (நபியே!) விட்டுவிடுவீராக, இந்நிராகரிப்பாளர்களை! சொற்ப காலம் (அவர்களுடைய நிலையிலே) அவர்களை விட்டுவிடுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, நிராகரிப்போருக்கு நீர் அவகாசமளிப்பீராக! சொற்பமாக அவர்களுக்கு அவகாசமளிப்பீராக!
Saheeh International
So allow time for the disbelievers. Leave them awhile.