87. ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்)

மக்கீ, வசனங்கள்: 19

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَی ۟ۙ
سَبِّحِதுதித்து தூய்மைப் படுத்துவீராகاسْمَபெயரைرَبِّكَஉம் இறைவனின்الْاَعْلَىۙ‏மிக உயர்ந்தவனாகிய
ஸBப்Bபிஹிஸ்ம ரBப்Bபிகல் அஃலா
முஹம்மது ஜான்
(நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) மிக மேலான உமது இறைவனின் திருப்பெயரை நீர் புகழ்ந்து துதி செய்வீராக;
IFT
(நபியே!) உயர்வான உம் இறைவனுடைய திருப் பெயரைத் துதிப்பீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) மிக உயர்வானவனாகிய உமதிரட்சகனின் பெயரை நீர் (புகழ்ந்து) துதி செய்வீராக!
Saheeh International
Exalt the name of your Lord, the Most High,
الَّذِیْ خَلَقَ فَسَوّٰی ۟
الَّذِىْ خَلَقَஅவன்தான் படைத்தான்فَسَوّٰى ۙ‏இன்னும் ஒழுங்கு படுத்தினான்
அல்லதீ கலக Fபஸவ்வா
முஹம்மது ஜான்
அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.
அப்துல் ஹமீது பாகவி
அவனே (எல்லா படைப்புகளையும்) படைத்து, (அவற்றை) ஒழுங்குபடுத்தியவன்.
IFT
அவன் எத்தகையவன் எனில், அவன்தான் படைத்தான்; பொருத்தமாகவும் அமைத்தான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், அவனே (படைப்பினங்களனைத்தையும்) படைத்து பிறகு (அவற்றைச்) செவ்வையாக்கினான்.
Saheeh International
Who created and proportioned
وَالَّذِیْ قَدَّرَ فَهَدٰی ۟
وَالَّذِىْ قَدَّرَஅவன்தான் நிர்ணயம் செய்தான்فَهَدٰى ۙ‏இன்னும் வழிகாட்டினான்
வல்லதீ கத்தர Fபஹதா
முஹம்மது ஜான்
மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.
அப்துல் ஹமீது பாகவி
அவனே (அவற்றுக்கு வேண்டிய சகலவற்றையும்) நிர்ணயம் செய்து, (அவற்றை அடையக் கூடிய) வழிகளையும் (அவற்றுக்கு) அறிவித்தான்.
IFT
மேலும் விதியை நிர்ணயித்தான்; பிறகு வழிகாட்டினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவன் எத்தகையவனென்றால், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) நிர்ணயம் செய்து பிறகு (அவற்றை அடைய) நேர்வழி காட்டினான்.
Saheeh International
And who destined and [then] guided
وَالَّذِیْۤ اَخْرَجَ الْمَرْعٰی ۟
وَالَّذِىْۤ اَخْرَجَஅவன்தான் வெளியாக்கினான்الْمَرْعٰى ۙ‏பசுமையான புல்லை
வல்லதீ அக்ரஜல் மர்'ஆ
முஹம்மது ஜான்
அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.
அப்துல் ஹமீது பாகவி
அவனே (கால்நடைகளுக்கு) மேய்ச்சல் பொருள்களையும் வெளிப்படுத்துகிறான்.
IFT
மேலும், தாவரங்களை முளைக்கச் செய்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் அவன் எத்தகையவனென்றால், அவனே (கால்நடைகளுக்கு) மேய்ச்சலுக்குரியவற்றை வெளியாக்கினான்.
Saheeh International
And who brings out the pasture
فَجَعَلَهٗ غُثَآءً اَحْوٰی ۟ؕ
فَجَعَلَهٗஇன்னும் அதை ஆக்கினான்غُثَآءًசருகாகاَحْوٰىؕ‏கருத்த (காய்ந்த)
Fபஜ'அலஹூ குதா'அன் அஹ்வா
முஹம்மது ஜான்
பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர் அவற்றை உலர்ந்த சருகுகளாக ஆக்குகிறான்.
IFT
பின்னர், அவற்றைக் காய்ந்து கருகிய குப்பைக் கூளங்களாய் ஆக்கினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் அவைகளை உலர்ந்த கருத்த கூளங்களாக ஆக்கினான்.
Saheeh International
And [then] makes it black stubble.
سَنُقْرِئُكَ فَلَا تَنْسٰۤی ۟ۙ
سَنُقْرِئُكَஉமக்குக் கற்பிப்போம்فَلَا تَنْسٰٓىۙ‏ஆகவே நீர் மறக்க மாட்டீர்
ஸனுக்ரி'உக Fபலா தன்ஸா
முஹம்மது ஜான்
(நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! இந்த குர்ஆனை) நாம் உமக்கு ஓதக் கற்பிப்போம். (அதில் எதையும்) நீர் மறக்க மாட்டீர்.
IFT
(நபியே!) நாம் உம்மை ஓதிடச் செய்வோம். பிறகு நீர் மறக்க மாட்டீர்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! நம் வசனங்களை) நாம் உம்மை ஓதிடச் செய்வோம்; பிறகு நீர் மறக்கமாட்டீர்.
Saheeh International
We will make you recite, [O Muhammad], and you will not forget,
اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ اِنَّهٗ یَعْلَمُ الْجَهْرَ وَمَا یَخْفٰی ۟ؕ
اِلَّاதவிரمَا شَآءَநாடியதைاللّٰهُ‌ؕஅல்லாஹ்اِنَّهٗநிச்சயமாக அவன்يَعْلَمُஅறிவான்الْجَهْرَவெளிப்படையானதைوَمَا يَخْفٰىؕ‏இன்னும் மறைந்திருப்பதை
இல்லா மா ஷா'அல் லாஹ்; இன்னஹூ யஃலமுல் ஜஹ்ர வமா யக்Fபா
முஹம்மது ஜான்
அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் நாடினாலே தவிர. நிச்சயமாக அவன் மறைந்திருப்பவற்றையும் வெளிப்படையானதையும் நன்கறிகிறான்.
IFT
ஆனால், அல்லாஹ் நாடியதைத் தவிர! திண்ணமாக, அவன் வெளிப்படையாகவும், மறைவாகவும் இருக்கும் யாவற்றையும் அறிகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் நாடியதைத் தவிர; நிச்சயமாக அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் நன்கறிவான்.
Saheeh International
Except what Allah should will. Indeed, He knows what is declared and what is hidden.
وَنُیَسِّرُكَ لِلْیُسْرٰی ۟ۚۖ
وَنُيَسِّرُكَஉமக்கு இலகுவாக்குவோம்لِلْيُسْرٰى ۖ‌ۚ‏சொர்க்கப் பாதையை
வ னு-யஸ்ஸிருக லில்யுஸ்ரா
முஹம்மது ஜான்
அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.
அப்துல் ஹமீது பாகவி
சொர்க்கப் பாதையை நாம் உமக்கு எளிதாக்கித் தருவோம்.
IFT
மேலும், இலகுவான பாதையை நாம் உமக்கு ஏற்படுத்தித் தருவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (ஈருலக நன்மைகளைச் செய்ய) இலகுவானதன் பால் உமக்கு நாம் எளிதாக்குவோம்.
Saheeh International
And We will ease you toward ease.
فَذَكِّرْ اِنْ نَّفَعَتِ الذِّكْرٰی ۟ؕ
فَذَكِّرْஆகவே, அறிவுரை கூறுவீராகاِنْ نَّفَعَتِபலனளித்தால்الذِّكْرٰىؕ‏அறிவுரை
Fபதக்கிர் இன் னFப'அதித்திக்ரா
முஹம்மது ஜான்
ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, நல்லுபதேசம் (மக்களுக்குப்) பயனளிக்கின்ற வரை நீர் உபதேசித்துக் கொண்டே வருவீராக.
IFT
எனவே, அறிவுரை வழங்குவீராக, அறிவுரை பலனளிக்குமாயின்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, நல்லுபதேசம் (ஜனங்களுக்குப்) பயனளிக்குமாயின் நீர் (உபதேசித்து) நினைவுபடுத்துவீராக!
Saheeh International
So remind, if the reminder should benefit;
سَیَذَّكَّرُ مَنْ یَّخْشٰی ۟ۙ
سَيَذَّكَّرُஅறிவுரை பெறுவார்مَنْஎவர்يَّخْشٰىۙ‏பயப்படுகிறார்
ஸ யத்தக்கரு மய்யக்-ஷா
முஹம்மது ஜான்
(அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக எவர் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ அவர், (இதைக் கொண்டு) நல்லறிவை அடைவார்.
IFT
எவர் அஞ்சுகிறாரோ, அவர் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகின்றவர் (இதனைக்கொண்டு) உபதேசத்தைப் பெறுவார்.
Saheeh International
He who fears [Allah] will be reminded.
وَیَتَجَنَّبُهَا الْاَشْقَی ۟ۙ
وَيَتَجَنَّبُهَاஇன்னும் அதைத் தவிர்த்துவிடுவான்الْاَشْقَىۙ‏பெரும் துர்ப்பாக்கியவான்
வ யதஜன்னBபுஹல் அஷ்கா
முஹம்மது ஜான்
ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.
அப்துல் ஹமீது பாகவி
துர்ப்பாக்கியமுடையவனோ, இதிலிருந்து விலகிக்கொள்வான்.
IFT
ஆனால் துர்ப்பாக்கியவானோ அதனைத் தவிர்த்துக்கொள்வான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மிகுந்த துர்பாக்கியமுடையவனோ, அதிலிருந்து விலகிக் கொள்வான்.
Saheeh International
But the wretched one will avoid it
الَّذِیْ یَصْلَی النَّارَ الْكُبْرٰی ۟ۚ
الَّذِىْஎவன்يَصْلَىபற்றி எரிவான்النَّارَநெருப்பில்الْكُبْرٰى‌ۚ‏மாபெரும்
அல்லதீ யஸ்லன் னாரல் குBப்ரா
முஹம்மது ஜான்
அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.
அப்துல் ஹமீது பாகவி
(எனினும்,) அவன் (நரகத்தின்) பெரிய நெருப்பை அடைவான்.
IFT
அவன் பெரும் நெருப்பில் நுழைவான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால் (நரகத்தின்) பெரும் நெருப்பில் அவன் நுழைவான்.
Saheeh International
[He] who will [enter and] burn in the greatest Fire,
ثُمَّ لَا یَمُوْتُ فِیْهَا وَلَا یَحْیٰی ۟ؕ
ثُمَّபிறகுلَا يَمُوْتُமரணிக்கவும் மாட்டான்فِيْهَاஅதில்وَلَا يَحْيٰىؕ‏இன்னும் வாழவும் மாட்டான்
தும்ம லா யமூது Fபீஹா வலா யஹ்யா
முஹம்மது ஜான்
பின்னர், அதில் அவன் மரணிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், அதில் அவன் மரணிக்கவுமாட்டான்; (சுகமாக) வாழவும் மாட்டான்.
IFT
பிறகு அதில் மரணமடையவும் மாட்டான்; வாழவும் மாட்டான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அதில் அவன் மரணிக்கவுமாட்டான், வாழவுமாட்டான்.
Saheeh International
Neither dying therein nor living.
قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰی ۟ۙ
قَدْதிட்டமாகاَفْلَحَவெற்றி பெற்றார்مَنْஎவர்تَزَكّٰىۙ‏பரிசுத்தமடைந்தார்
கத் அFப்லஹ மன் தZஜக்கா
முஹம்மது ஜான்
தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
எவர் (பாவங்களை விட்டு விலகிப்) பரிசுத்தவானாக ஆனாரோ அவர், நிச்சயமாக வெற்றி பெற்றார்.
IFT
நிச்சயமாக வெற்றி அடைந்து விட்டார், தூய்மையை மேற்கொண்டு
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பரிசுத்தமடைந்தவர் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டார்.
Saheeh International
He has certainly succeeded who purifies himself
وَذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰی ۟ؕ
وَذَكَرَஇன்னும் நினைவு கூர்ந்தார்اسْمَபெயரைرَبِّهٖதன் இறைவனின்فَصَلّٰى‌ ؕ‏இன்னும் தொழுதார்
வ தகரஸ் ம ரBப்Bபிஹீ Fபஸல்லா
முஹம்மது ஜான்
மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன் தன் இறைவனின் திருப்பெயரை நினைவு செய்து கொண்டும், தொழுது கொண்டுமிருப்பார்.
IFT
மேலும், தன் இறைவனின் பெயரை நினைவு கூர்ந்து தொழுகையை நிறைவேற்றியவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர் தன் இரட்சகனின் பெயரைக் கூறி பிறகு தொழுதார்.
Saheeh International
And mentions the name of his Lord and prays.
بَلْ تُؤْثِرُوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا ۟ۚۖ
بَلْமாறாகتُؤْثِرُوْنَதேர்ந்தெடுக்கிறீர்கள்الْحَيٰوةَவாழ்வைالدُّنْيَا ۖ‏உலக(ம்)
Bபல் து'திரூனல் ஹயாதத் துன்யா
முஹம்மது ஜான்
எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், நீங்களோ (மறுமையை விட்டுவிட்டு) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.
IFT
ஆனால், நீங்கள் இம்மை வாழ்விற்கே முன்னுரிமை அளிக்கின்றீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனினும், நீங்களோ இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றீர்கள்.
Saheeh International
But you prefer the worldly life,
وَالْاٰخِرَةُ خَیْرٌ وَّاَبْقٰی ۟ؕ
وَالْاٰخِرَةُமறுமையோخَيْرٌமிகச் சிறந்ததுوَّ اَبْقٰىؕ‏இன்னும் என்றும் நிலையானது
வல் ஆகிரது கய்ரு(ன்)வ் வ அBப்கா
முஹம்மது ஜான்
ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.
அப்துல் ஹமீது பாகவி
மறுமையின் வாழ்க்கைதான் மிக்க மேலானதும் நிலையானதுமாகும்.
IFT
உண்மையில், மறுமையே மிகவும் மேலானதாகவும், நிலைத்து நிற்கக்கூடியதாகவும் இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மறுமையின் வாழ்க்கைதான் மிகச் சிறந்ததும், மிக்க நிலையானதுமாகும்.
Saheeh International
While the Hereafter is better and more enduring.
اِنَّ هٰذَا لَفِی الصُّحُفِ الْاُوْلٰی ۟ۙ
اِنَّநிச்சயமாகهٰذَاஇதுلَفِى الصُّحُفِவேதங்களிலும்الْاُوْلٰىۙ‏முந்திய
இன்ன ஹாதா லFபிஸ் ஸுஹு Fபில் ஊலா
முஹம்மது ஜான்
நிச்சயமாக இது முந்திய ஆகமங்களிலும்-
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இது முன்னுள்ள வேதங்களிலும்,
IFT
நிச்சயமாக இதே விஷயம் முன்னர் அருளப்பட்ட வேதங்களிலும் சொல்லப்பட்டிருந்தது;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இது முன்னுள்ள ஆகமங்களில் இருக்கிறது. (அதுவே)
Saheeh International
Indeed, this is in the former scriptures,
صُحُفِ اِبْرٰهِیْمَ وَمُوْسٰی ۟۠
صُحُفِவேதங்களாகியاِبْرٰهِيْمَஇப்றாஹீமுடையوَمُوْسٰى‏இன்னும் மூஸாவுடைய
ஸுஹுFபி இBப்ராஹீம வ மூஸா
முஹம்மது ஜான்
இப்ராஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் இருக்கிறது.
IFT
இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களில்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இப்றாஹீம் மூஸாவுடைய ஆகமங்களிலும் இருக்கிறது.
Saheeh International
The scriptures of Abraham and Moses.