பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)
அப்துல் ஹமீது பாகவி
இன்னும், ஸமூத் என்னும் மக்களை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?) இவர்கள் பள்ளத்தாக்கில் மலைகளைக் குடைந்து, (அதில் வசித்துக்) கொண்டிருந்தார்கள்.
IFT
மேலும், பள்ளத்தாக்கில் பாறைகளைக் குடைந்த ஸமூத் சமுதாயத்தாருடனும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், பள்ளத்தாக்கில் பாறையைக் குடைந்து அதில் வசித்து வந்தவர்களான ஸமூது கூட்டத்தையும் -
Saheeh International
And [with] Thamūd, who carved out the rocks in the valley?
ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்: “என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்” என்று கூறுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, இறைவன் மனிதனைச் சோதித்து அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகிறான்.
IFT
ஆனால், மனிதனின் நிலை எப்படி இருக்கின்றதெனில், அவனுடைய இறைவன் அவனைச் சோதிக்க நாடினால் மேலும், அவனை கண்ணியப்படுத்தி, அருட்கொடைகளையும் வழங்கினால், “என்னுடைய இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான்” என்று கூறுகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, மனிதன், அவனுடைய இரட்சகன் அவனை சோதித்து பின்னர் அவனைக் கண்ணியப்படுத்தி, அவனுக்கு அருட்கொடைகளையும் அளித்தால் “என்னை என்னுடைய இரட்சகன் கண்ணியப்படுத்தினான்” என்று கூறுகிறான்.
Saheeh International
And as for man, when his Lord tries him and [thus] is generous to him and favors him, he says, "My Lord has honored me."
எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், “என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்” எனக் கூறுகின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், (இறைவன்) அவனைச் சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று (குறை) கூறுகிறான்.
IFT
மேலும், அவனைச் சோதிக்க நாடினால் மேலும், அவனுடைய வாழ்க்கை வசதிகளைக் குறைத்து விட்டால் “என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான்” என்று கூறுகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (அல்லாஹ்) அவனைச் சோதித்து அவனுடைய வாழ்வாதாரங்களை நெருக்கடியாக்கி விட்டால், அப்போது “எனதிரட்சகன் என்னை இழிவுபடுத்திவிட்டான்” என்று அவன்(குறை) கூறுகிறான்.
Saheeh International
But when He tries him and restricts his provision, he says, "My Lord has humiliated me."
அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் (பாவிகளுக்காக) நரகம் கொண்டுவரப்படும். அந்நாளில் மனிதனுக்கு நல்லறிவு உதயமாகும். எனினும், அப்போது (உதயமாகின்ற) அறிவால் அவனுக்கு என்ன பயன்?
IFT
மேலும், அந்நாளில் நரகம் கண்ணெதிரில் கொண்டு வரப்படும்போது அந்நாளில்தான் மனிதன் புரிந்து கொள்வான். அப்போது அவன் புரிந்துகொள்வது என்ன பயனை அளிக்கும்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்நாளில் (பாவிகளுக்காக) நரகமும் கொண்டுவரப்பட்டுவிட்டால், அந்நாளில் மனிதன் (உலகில் அவன் அல்லாஹ்விற்கு மாற்றமாக நடந்ததை) நினைவு கூர்வான்; இன்னும், (அச்சமயம்) அவனுக்கு நினைவு கூர்வது எவ்வாறு (பயனுள்ளதாக) ஆகும்?
Saheeh International
And brought [within view], that Day, is Hell - that Day, man will remember, but how [i.e., what good] to him will be the remembrance?