(முஃமின்களே!) முஷ்ரிக்குகளில் (இணைவைத்து வணங்குபவர்களில்) எவர்களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ, அவர்களிடமிருந்து அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்குபவர்களில் எவர்களிடம் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தீர்களோ அவர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்!
IFT
நீங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள இணைவைப்பாளர்களுக்கு, அவர்களை விட்டு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர் என்று விடுக்கப்படும் அறிவிப்பாகும் இது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளே! இது) இணைவைத்துக் கொண்டிருப்போரில் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தீர்களே அத்தகையோர் பால் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீங்கிக் கொண்ட(து பற்றிய)தாகும்.
Saheeh International
[This is a declaration of] disassociation, from Allah and His Messenger, to those with whom you had made a treaty among the polytheists.
நீங்கள் நான்கு மாதங்கள் (வரையில்) இப் பூமியில் சுற்றித் திரியுங்கள்; நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை இழிவு படுத்துவான் என்பதையும் நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (இன்றிலிருந்து) நான்கு மாதங்கள் வரை (மக்காவின்) பூமியில் (எங்கும்) சுற்றித் திரியலாம். நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க மாட்டீர்கள் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை இழிவுபடுத்துவான் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்'' (என்று நபியே! நீர் கூறுவீராக.)
IFT
எனவே, (இணை வைப்பாளரான) நீங்கள் நான்கு மாதங்களுக்கு பூமியில் நடமாடிக் கொள்ளுங்கள்; மேலும் திண்ணமாக நீங்கள் அல்லாஹ்வை தோல்வியுறச் செய்ய முடியாது என்பதையும், சத்தியத்தை நிராகரிப்பவர்களை நிச்சயம் அல்லாஹ் இழிவுபடுத்துவான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே (இணைவைத்துக் கொண்டிருப்போரே,) நீங்கள் இவற்றிலிருந்து நான்கு மாதங்கள் (வரையில்) பூமியில் (எங்கும்) சுற்றித்திரியுங்கள், நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை இயலாமையில் ஆக்கக்கூடியவர்களல்லர் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரை இழிவுபடுத்தக்கூடியவன் என்பதையும், நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்!” என்று நபியே! நீர் கூறுவீராக!
Saheeh International
So travel freely, [O disbelievers], throughout the land [during] four months but know that you cannot cause failure to Allah and that Allah will disgrace the disbelievers.
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் முஷ்ரிக்குகளுடன் (செய்திருந்த உடன்படிக்கையை) விட்டும் நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்பதை ஹஜ்ஜுல் அக்பர் (மாபெரும் ஹஜ்ஜுடைய) நாளில் மனிதர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெளிப்படையாக அறிவிக்கின்றனர்; எனவே நீங்கள் (இணை வைப்பதிலிருந்து மனந்திருந்தி) விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நலமாகும்; நீங்கள் (சத்தியத்தை) புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதை (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நிராகரிப்போருக்கு நோவினை தரும் வேதனை இருக்கிறது என்று நீர் நன்மாராயம் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் இணைவைத்து வணங்குபவர்களுடன் (செய்திருந்த உடன்படிக்கையில்) இருந்து நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்ற விஷயத்தை இம்மாபெரும் ஹஜ்ஜூடைய நாளில் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் மக்களுக்குப் பகிரங்கமாக அறிவிக்கின்றனர். ஆகவே, (இணைவைத்து வணங்குபவர்களே! இணைவைப்பதிலிருந்தும் நிராகரிப்பதில் இருந்தும்) நீங்கள் விலகிக் கொண்டால் அது உங்களுக்குத்தான் மிக்க நன்று. (இல்லையெனில்,) நீங்கள் புறக்கணித்தாலோ நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். (நபியே! இந்) நிராகரிப்பவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு நீர் நற்செய்தி கூறுவீராக.
IFT
மேலும், மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் சார்பில் எல்லா மக்களுக்கும் விடுக்கப்படும் பொது அறிவிப்பு என்னவெனில், இறைவனுக்கு இணைவைப்பவர்களை விட்டு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் திண்ணமாக விலகி விட்டார்கள். ஆகவே, நீங்கள் பாவமன்னிப்புத் தேடி மீளுவீர்களாயின் அது உங்களுக்கு நன்மை பயக்கும். நீங்கள் புறக்கணித்தால், அல்லாஹ்வை நீங்கள் தோல்வியுறச் செய்ய முடியாது என்பதை நன்கறிந்து கொள்ளுங்கள். மேலும், (நபியே!) கடுமையான வேதனை உண்டெனும் நற்செய்தியை இறைமறுப்பாளர்களுக்கு அறிவிப்பீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இது) நிச்சயமாக அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்) இணைவைத்துக் கொண்டிருப்போரிலிருந்து விலகிக் கொண்டவர்கள் என்ற விஷயத்தை (ஹஜ்ஜுல் அக்பர் எனும்) இம்மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் அல்லாஹ்விடமிருந்தும் அவனின் தூதரிடமிருந்தும் மனிதர்கள்பால் பகிரங்கமாக அறிவிப்பதாகும், ஆகவே, (இணைவைத்துக் கொண்டிருப்போரே!) நீங்கள் தவ்பாச்செய்து கொண்டால், அது உங்களுக்குத்தான் மிக்க நன்று, (அவ்வாறின்றி) நீங்கள் புறக்கணித்தாலோ, நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை இயலாமையில் ஆக்கக்கூடியவர்களல்லர் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள், (நபியே! (இந்) நிராகரிப்போருக்கு துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு நீர் நன்மாராயங் கூறுவீராக!
Saheeh International
And [it is] an announcement from Allah and His Messenger to the people on the day of the greater pilgrimage that Allah is disassociated from the disbelievers, and [so is] His Messenger. So if you repent, that is best for you; but if you turn away - then know that you will not cause failure to Allah. And give tidings to those who disbelieve of a painful punishment.
ஆனால், நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில், எதையும் குறைத்துவிடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர: அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், நீங்கள் உடன்படிக்கை செய்துகொண்ட இந்த இணைவைத்து வணங்குபவர்களில் எவர்கள் (தங்கள் உடன்படிக்கையில்) எதையும் உங்களுக்குக் குறைவு செய்யாதும், உங்களுக்கு எதிராக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றனரோ அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அதன் தவணை வரை (ஒரு குறைவுமின்றி) முழுமைப்படுத்தி வையுங்கள். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையவர்களை நேசிக்கிறான்.
IFT
ஆனால் இணைவைப்பாளர்களில் எவர்களுடன் உங்களுக்கு உடன்படிக்கை ஏற்பட்டு, பின்னர் அவர்கள் (தமது வாக்குறுதியை நிறைவேற்றுவதில்) உங்களிடம் எந்தக் குறைபாடும் செய்யாமலும், உங்களுக்கு எதிராக எவருக்கும் உதவாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. அத்தகையவர்களின் உடன்படிக்கையை உரிய தவணை வரை நிறைவாக்குங்கள்! ஏனெனில், திண்ணமாக அல்லாஹ் இறையச்சம் உடையோரையே நேசிக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
.(ஆயினும்) இணைவைத்துக் கொண்டிருப்போரிலிருந்து நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டு பிறகு யாதொன்றையும் உங்களுக்குக் குறைவு செய்யாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றனரே அத்தகையோரைத் தவிர, அவர்களின் உடன்படிக்கையை அதன் தவணை வரையில் அவர்களுக்குப் பூர்த்தியாக்கி வையுங்கள், நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
Saheeh International
Excepted are those with whom you made a treaty among the polytheists and then they have not been deficient toward you in anything or supported anyone against you; so complete for them their treaty until their term [has ended]. Indeed, Allah loves the righteous [who fear Him].
(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(ஒவ்வொரு வருடத்திலும் துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய சிறப்புற்ற இந்நான்கு மாதங்களிலும் போர்புரிவது ஆகாது.) சிறப்புற்ற (இந்நான்கு) மாதங்கள் சென்றுவிட்டால் இணைவைப்பவர்களைக் கண்ட இடமெல்லாம் வெட்டுங்கள்; அவர்களைச் சிறைப்பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் (அவர்கள் வரவை எதிர்பார்த்து) அவர்களுக்காக நீங்கள் பதுங்கியிருங்கள். அவர்கள் (தங்கள் விஷமத்திலிருந்தும், நிராகரிப்பிலிருந்தும்) பாவத்திலிருந்து(ம்) விலகி (நம்பிக்கை கொண்டு) தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வந்தால் அவர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள். (அவர்கள் விஷயத்தில் குறுக்கிடாதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவான்.
IFT
எனவே, சங்கைக்குரிய மாதங்கள் கழிந்துவிட்டால், இறைவனுக்கு இணைவைப்போரை நீங்கள் எங்கு கண்டாலும் கொன்று விடுங்கள்! மேலும், அவர்களைச் சிறைப்பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள்! மேலும், எல்லா இடங்களிலிருந்தும் அவர்களைக் கண்காணியுங்கள். பிறகு, அவர்கள் பாவமன்னிப்புக் கோரி, தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தையும் கொடுத்தால் அவர்களை விட்டுவிடுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் அதிகம் மன்னிப்பவனாகவும் பெரிதும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, சிறப்புற்ற மாதங்கள் சென்றுவிட்டால், இணைவைத்துக் கொண்டிருப்போரை – அவர்களைக் கண்டவிடமெல்லாம் கொன்றுவிடுங்கள், இன்னும், அவர்களைப் பிடியுங்கள், அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும், அவர்களைக் குறிவைத்து உட்காருங்கள், பின்னர் அவர்கள் (தங்கள் பாவங்களுக்கு) பச்சாதாபப்பட்டு விலகி, (விசுவாசித்துத் தொழுகையையும் நிறைவேற்றி ஜகாத்தையும் கொடுத்து வந்தால், அவர்கள் வழியில் (அவர்களை) விட்டு விடுங்கள், நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிகக் கிருபையுடையவன்.
Saheeh International
And when the inviolable months have passed, then kill the polytheists wherever you find them and capture them and besiege them and sit in wait for them at every place of ambush. But if they should repent, establish prayer, and give zakah, let them [go] on their way. Indeed, Allah is Forgiving and Merciful.
(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக; அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இணைவைத்து வணங்குபவர்களில் எவனும் உம்மிடம் பாதுகாப்பைக் கோரினால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவன் செவியுறும்வரை அவனுக்கு பாதுகாப்பு அளிப்பீராக. (அவன் அதை செவியுற்றும் நம்பிக்கை கொள்ளாவிட்டால்) அவனை அவனுக்கு பாதுகாப்புள்ள (வேறு) இடத்திற்கு அனுப்பிவிடுவீராக! ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அறிவில்லாத மக்கள் ஆவர்.
IFT
இணைவைப்பாளர்களில் எவரேனும் அடைக்கலம் கோரி உம்மிடம் (அல்லாஹ்வின் வேதத்தைச் செவியுறுவதற்காக) வந்தால், அப்பொழுது அல்லாஹ்வின் வேதத்தை அவர் செவியுறும் வரையில் அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பிறகு அவரை அவருடைய பாதுகாப்பிடத்தில் சேர்த்து விடுவீராக! இவ்வாறு ஏன் செய்ய வேண்டும் எனில், திண்ணமாக அவர்கள் அறியாத சமூகத்தினராய் இருக்கின்றனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) இணைவைத்துக் கொண்டிருப்போரில் எவரொருவர் உம்மிடம் அபயம் தேடினால் அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக! பின்னர், அவருக்கு அபயமளிக்கும் (வேறு) இடத்தில் அவரைச்சேர்த்து வைப்பீராக! அது (ஏனென்றால்) நிச்சயமாக அவர்கள் அறியாத சமூகத்தினர் என்ற காரணத்தினாலாகும்.
Saheeh International
And if any one of the polytheists seeks your protection, then grant him protection so that he may hear the words of Allah [i.e., the Qur’an]. Then deliver him to his place of safety. That is because they are a people who do not know.
كَيْفَஎப்படி?يَكُوْنُஇருக்கும்لِلْمُشْرِكِيْنَஇணைவைப்பவர்களுக்குعَهْدٌஒப்பந்தம்عِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்وَعِنْدَ رَسُوْلِهٖۤஇன்னும் அவனுடைய தூதரிடம்اِلَّاதவிரالَّذِيْنَஎவர்கள்عَاهَدتُّمْநீங்கள் ஒப்பந்தம் செய்தீர்கள்عِنْدَ الْمَسْجِدِமஸ்ஜிதிடம்الْحَـرَامِ ۚபுனித(மானது)فَمَا اسْتَقَامُوْاஅவர்கள் ஒழுங்காக நடந்து கொள்ளும் வரைلَـكُمْஉங்களுடன்فَاسْتَقِيْمُوْاஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்لَهُمْ ؕஅவர்களுடன்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يُحِبُّநேசிப்பான்الْمُتَّقِيْنَஅஞ்சுபவர்களை
அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் முஷ்ரிக்குகளுக்கு எப்படி உடன்படிக்கை இருக்க முடியும்? ஆனால், நீங்கள் மஸ்ஜிதுல் ஹராம் (கஃபத்துல்லாஹ்) முன்(எவர்களுடன்) உடன்படிக்கை செய்து கொண்டீர்களோ, அவர்களைத் தவிர; அவர்கள் (தம் உடன்படிக்கைப்படி) உங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளும்வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் இணைவைத்து வணங்குபவர்களின் உடன்படிக்கைக்கு எவ்வாறு மதிப்பிருக்க முடியும்? ஆயினும், சிறப்புற்ற மஸ்ஜிதின் முன் உங்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் (தங்கள் உடன்படிக்கையின்படி) உங்களுடன் உறுதியாக இருக்கும் வரை, நீங்களும் அவர்களுடன் உறுதியாகவே இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையவர்களை நேசிக்கிறான்.
IFT
அல்லாஹ்விடத்திலும் அவனுடைய தூதரிடத்திலும் இந்த இணைவைப்பாளர்களின் உடன்படிக்கைக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்? ஆனால் மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகில் யாருடன் நீங்கள் உடன்படிக்கை செய்திருந்தீர்களோ அவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. அவர்கள் உங்களோடு நேர்மையுடன் நடந்து கொள்ளும் வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாய் நடந்துகொள்ளுங்கள்! ஏனென்றால், அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களை விரும்புகின்றான் .
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் இணைவைத்துக் கொண்டிருப்போருக்கு எப்படி உடன்படிக்கை இருக்க முடியும்? (ஆயினும், மஸ்ஜிதுல் ஹராமாகிய) சிறப்புற்ற மஸ்ஜிதில் நீங்கள் உடன்படிக்கை செய்துகொண்டீர்களே அவர்களைத் தவிர, ஆகவே, அவர்கள் (தங்களுடைய உடன்படிக்கையின்படி) உங்களுடன் உறுதியாக இருக்கும் வரையில், நீங்களும் அவர்களுடன் உறுதியாகவே இருங்கள், நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
Saheeh International
How can there be for the polytheists a treaty in the sight of Allah and with His Messenger, except for those with whom you made a treaty at al-Masjid al-haram? So as long as they are upright toward you, be upright toward them. Indeed, Allah loves the righteous [who fear Him].
(எனினும் அவர்களுடன்) எப்படி (உடன்படிக்கை இருக்க முடியும்?) உங்கள் மேல் அவர்கள் வெற்றி கொண்டால் உங்களிடையே உள்ள உறவின் முறையையும், (உங்களிடையே இருக்கும்) உடன்படிக்கையையும் அவர்கள் பொருட்படுத்துவதேயில்லை; அவர்கள் தம் வாய்(மொழி)களைக் கொண்டு(தான்) உங்களைத் திருப்திபடுத்துகிறார்கள்; ஆனால் அவர்களின் உள்ளங்கள் (அதனை) மறுக்கின்றன - அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாக இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(எனினும் அவர்களின் உடன்படிக்கையையும்) எவ்வாறு (நம்ப முடியும்)? அவர்கள் உங்களை வெற்றி கொண்டாலோ (நீங்கள் அவர்களுக்கு) உறவினர்கள் என்பதையும் (உங்களுக்கும் அவர்களுக்கும் இடையிலுள்ள) உடன்படிக்கையையும் பொருட்படுத்துவதேயில்லை. தங்கள் வார்த்தைகளைக் கொண்டு (மட்டும்) உங்களைத் திருப்திபடுத்துகின்றனர்; ஆனால், அவர்களுடைய உள்ளங்களோ (உங்களிடமிருந்து) விலகிக் கொள்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் பாவிகளே ஆவர்.
IFT
(அவர்களைத் தவிர மற்ற இணைவைப்பாளர்களிடம்) எவ்வாறு உடன்படிக்கை வைத்துக்கொள்ள முடியும்? அவர்கள் (இப்படித்தான் நடந்து கொள்கின்றனர்.) உங்களை வெற்றிகொண்டு விட்டால் உங்கள் விஷயத்தில் எந்த உறவுமுறையையும் பார்ப்பதில்லை; மேலும் ஒப்பந்தத்தின் எந்தப் பொறுப்பையும் மதிப்பதில்லை. தங்களுடைய வாய்ப்பேச்சுகளால் உங்களைத் திருப்திப்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால், அவர்களின் உள்ளங்கள் அவற்றை மறுக்கின்றன. மேலும், அவர்களில் பெரும்பாலோர் தீயவர்களாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(எனினும்) எப்படி (உடன்படிக்கை இருக்க முடியும்)? இன்னும் உங்களை அவர்கள் வெற்றி கொண்டால் உங்களிலே (இருந்துவரும்) உறவையும் (செய்துகொண்ட) உடன்படிக்கையையும் பொருட்படுத்த மாட்டார்கள், தங்கள் வாய்களைக் கொண்டு உங்களைத் திருப்திப்படுத்துகின்றனர், அவர்களுடைய இதயங்களோ விலகிக் கொள்கின்றன, இன்னும், அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாவர்.
Saheeh International
How [can there be a treaty] while, if they gain dominance over you, they do not observe concerning you any pact of kinship or covenant of protection? They satisfy you with their mouths, but their hearts refuse [compliance], and most of them are defiantly disobedient.
அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்பவிலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய பாதையிலிருந்து (மக்களைத்) தடுக்கிறார்கள் - நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்கள் மிகவும் கெட்டவை.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை சொற்ப விலைக்கு விற்று விட்டு (மக்கள்) அவனுடைய பாதையில் செல்வதையும் தடுக்கின்றனர். நிச்சயமாக அவர்கள் செய்யும் காரியம் மிகவும் கெட்டது.
IFT
அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்றார்கள். பின்னர் அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாமல் (மக்களைத்) தடுத்தார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்கள் எத்துணைக் கெட்டவை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களுக்குப்பகரமாக சொற்பக் கிரயத்தை வாங்கிக் கொண்டனர், பின்னர் (மனிதர்களை) அவனுடைய பாதையை விட்டும் தடுக்கின்றனர், நிச்சயமாக அவர்கள் - அவர்கள் செய்து கொண்டிருந்தார்களே அது மிகக் கெட்டது.
Saheeh International
They have exchanged the signs of Allah for a small price and averted [people] from His way. Indeed, it was evil that they were doing.
அவர்கள் எந்த முஃமினின் விஷயத்திலும் உறவையும் உடன்படிக்கையையும் பொருட்படுத்த மாட்டார்கள்; மேலும் அவர்களே வரம்பு மீறியவர்கள் ஆவார்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் எந்த நம்பிக்கையாளரைப் பற்றியும் (அவர் தமது) உறவினர் என்பதையும், (அவர்களுடன் செய்திருக்கும்) உடன்படிக்கையையும் பொருட்படுத்துவதேயில்லை. நிச்சயமாக இவர்கள்தான் வரம்பு மீறியவர்கள் ஆவர்.
IFT
இறைநம்பிக்கையாளனின் விஷயத்தில் எந்த உறவுமுறையையும் பார்ப்பதில்லை; ஒப்பந்தத்தின் எந்தப் பொறுப்பையும் அவர்கள் மதிப்பதில்லை. மேலும், இத்தகையவர்கள்தாம் எப்போதும் வரம்பு மீறுபவர்களாய் இருக்கின்றனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள், எந்த விசுவாசியின் விஷயத்திலும் உறவையும், உடன்படிக்கையையும் பொருட்படுத்த மாட்டார்கள், மேலும், இத்தகையோர்தாம் வரம்பு மீறியவர்கள்.
Saheeh International
They do not observe toward a believer any pact of kinship or covenant of protection. And it is they who are the transgressors.
ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைபிடித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் (தங்கள் நிராகரிப்பிலிருந்து விலகி அல்லாஹ்விடம்) மன்னிப்புக்கோரி, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வந்தால் (அவர்கள்) உங்கள் மார்க்க சகோதரர்களே. அறிவுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை (இவ்வாறு) விவரிக்கிறோம்.
IFT
ஆயினும், இவர்கள் பாவமீட்சி பெற்று தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தையும் கொடுத்தால், தீனில் மார்க்கத்தில் இவர்கள் உங்கள் சகோதரர்களாவர். மேலும், அறியக்கூடிய சமூகத்தாருக்கு நம்முடைய கட்டளைகளை நாம் நன்கு விளக்கிக் கூறுகின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர்கள் (தங்கள் பாவங்களிலிருந்து விலகிப்) பச்சாதாபப்பட்டு தொழுகையையும் நிறைவேற்றி, ஜகாத்தையும் கொடுத்து வந்தால் அப்பொழுது (அவர்கள்) உங்களுக்கு மார்க்கத்தில் சகோதரர்களாவர், இன்னும், அறிவுள்ள சமூகத்தார்க்கு நாம் வசனங்களை (இவ்வாறு) விவரிக்கின்றோம்.
Saheeh International
But if they repent, establish prayer, and give zakah, then they are your brothers in religion; and We detail the verses for a people who know.
வ இன் னகதூ அய்மானஹும் மிம் Bபஃதி 'அஹ்திஹிம் வ த'அனூ Fபீ தீனிகும் Fபகாதிலூ அ'இம்மதல் குFப்ரி இன்னஹும் லா அய்மான லஹும் ல'அல்லஹும் யன்தஹூன்
முஹம்மது ஜான்
அவர்களுடைய உடன்படிக்கைக்குப்பின், தம் சத்தியங்களை அவர்கள் முறித்துக் கொண்டு, உங்களுடைய மார்க்கத்தைப் பற்றியும் இழித்துக் குறை சொல்லி கொண்டு இருப்பார்களானால், அவர்கள் (மேற்கூறிய செயல்களிலிருந்து) விலகிக் கொள்வதற்காக நிராகரிப்பவர்களின் தலைவர்களுடன் போர் புரியுங்கள்; ஏனெனில் அவர்களுக்கு நிச்சயமாக ஒப்பந்தங்கள் (என்று எதுவும்) இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
(சத்தியம் செய்து) உடன்படிக்கை செய்து கொண்டதன் பின்னரும், அவர்கள் தங்கள் சத்தியங்களை முறித்து உங்கள் மார்க்கத்தைப் பற்றியும் தவறான குற்றங்குறைகள் கூறிக்கொண்டிருந்தால், நிச்சயமாக நிராகரிக்கும் (இத்தகைய) மக்களின் வாக்குறுதிகள் முறிந்துவிட்டன. ஆகவே, (இத்தகைய விஷமத்திலிருந்து) அவர்கள் விலகிக்கொள்வதற்காக நீங்கள் நிராகரிப்பை உடைய (அந்த) தலைவர்களிடம் போர் புரியுங்கள்.
IFT
உடன்படிக்கை செய்துகொண்ட பிறகு இவர்கள் தங்களுடைய சத்தியங்களை முறித்து விட்டு உங்களுடைய மார்க்கத்தைத் தாக்க முற்பட்டால், இறைநிராகரிப்பின் தலைவர்களோடு போர் புரியுங்கள்! ஏனென்றால், அவர்களுடைய சத்தியங்களுக்கு எவ்வித மதிப்பு மில்லை. அவர்கள் (பின்னர் வாளுக்கு அஞ்சியேனும் இத்தகைய விஷமத்தனங்களிலிருந்து) விலகியிருக்கக்கூடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தங்களுடைய உடன்படிக்கைக்குப் பின்னரும், அவர்கள் தங்களுடைய சத்தியங்களை முறித்து உங்களுடைய மார்க்கத்தைப் பற்றி குறைகள் கூறிக் கொண்டிருப்பார்களானால் (அவர்கள் மேற்கூறிய செயலிலிருந்து) விலகிக்கொள்வதற்காக நிராகரிப்போரின் தலைவர்களுடன் போரிடுங்கள், ஏனெனில், நிச்சயமாக அவர்கள்- அவர்களுக்கு சத்தியங்கள் (அவற்றைப் பேணிக்காத்தல்) எதுவுமில்லை.
Saheeh International
And if they break their oaths after their treaty and defame your religion, then combat the leaders of disbelief, for indeed, there are no oaths [sacred] to them; [fight them that] they might cease.
தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டு, (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் திட்டமிட்ட மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்களே (வாக்குறுதி மீறி உங்களைத் தாக்க) முதல் முறையாக துவங்கினர்; நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? (அப்படியல்ல!) நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களானால், நீங்கள் அஞ்சுவதற்கு தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனேதான்.
அப்துல் ஹமீது பாகவி
தங்கள் சத்திய உடன்படிக்கைகளை முறித்து (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் விரும்பி (அதற்காக) முயற்சித்த மக்களிடம் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்கள்தான் (இத்தகைய விஷமத்தை) உங்களிடம் முதலில் ஆரம்பித்தனர். அவர்களுக்கு நீங்கள் பயப்படுகிறீர்களா? உண்மையாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள் பயப்படத் தகுதியானவன் அல்லாஹ் (ஒருவன்)தான்.
IFT
எவர்கள் தங்கள் உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டே இருக்கின்றார்களோ, மேலும், எவர்கள் இறைத்தூதரை நாட்டைவிட்டு வெளியேற்ற முடிவு செய்திருந்தார்களோ அக்கிரமம் செய்யத் தொடங்கியது முதலில் அவர்களாகவே இருந்தும் அத்தகைய மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்களுக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்? நீங்கள் நம்பிக்கையுடையவர்களாயின் நீங்கள் அஞ்சுவதற்கு மிகவும் தகுதியுள்ளவன் அல்லாஹ்வே ஆவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தங்களுடைய சத்தியங்களை முறித்து (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் உறுதிகொண்ட மக்களுடன் நீங்கள் யுத்தம் புரிய வேண்டாமா? அவர்கள்தாம் உங்களிடம் முதன்முறையாக ஆரம்பித்தனர், அவர்களுக்கு நீங்கள் பயப்படுகிறீர்களா? நீங்கள் விசுவாசங்கொண்டவர்களாயின், அல்லாஹ் - அவனே நீங்கள் பயப்படுவதற்கு மிகத் தகுதியானவன்.
Saheeh International
Would you not fight against a people who broke their oaths and determined to expel the Messenger, and they had begun [the attack upon] you the first time? Do you fear them? But Allah has more right that you should fear Him, if you are [truly] believers.
நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள்; உங்களுடைய கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனையளித்து அவர்களை இழிவு படுத்தி, அவர்களுக்கெதிராக அவன் உங்களுக்கு உதவி (செய்து அவர்கள் மேல் வெற்றி கொள்ளச்) செய்வான். இன்னும் முஃமின்களின் இதயங்களுக்கு ஆறுதலும் அளிப்பான்.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் அவர்களிடம் போர் புரியுங்கள். உங்கள் கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனை கொடுத்து, அவர்களை இழிவுபடுத்தி, அவர்களை நீங்கள் வெற்றிபெற உங்களுக்கு உதவியும் புரிந்து, நம்பிக்கை கொண்ட மக்களின் உள்ளங்களுக்குத் திருப்தியுமளிப்பான்.
IFT
நீங்கள் அவர்களோடு போர் புரியுங்கள்; அல்லாஹ் உங்களுடைய கைகளால் அவர்களுக்குத் தண்டனை அளிக்கச் செய்வான். மேலும், அவர்களை இழிவுபடுத்துவான். இன்னும் நீங்கள் அவர்களை வென்றிட உங்களுக்கு உதவி புரிவான். மேலும், நம்பிக்கை கொண்ட மக்களின் இதயங்களைக் குளிரச் செய்வான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் அவர்களுடன் யுத்தம் செய்யுங்கள், உங்கள் கைகளைக் கொண்டே, அல்லாஹ் அவர்களை வேதனை செய்வான், அவர்களை இழிவும் படுத்துவான், அவர்களுக்கு பாதகமாக உங்களுக்கு உதவியும் செய்வான், மேலும், விசுவாசங் கொண்ட சமூகத்தாரின் நெஞ்சங்களுக்கு ஆறுதலுமளிப்பான்.
Saheeh International
Fight them; Allah will punish them by your hands and will disgrace them and give you victory over them and satisfy the breasts [i.e., desires] of a believing people
அவர்களுடைய இதயங்களிலுள்ள கோபத்தையும் போக்கி விடுவான்; தான் நாடியவரின் தவ்பாவை (மன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், (பூரண) ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்கள் மீது) இவர்கள் உள்ளங்களில் (குமுறிக் கொண்டு) உள்ள கோபங்களையும் போக்கிவிடுவான். அல்லாஹ் (அவர்களிலும்) தான் விரும்பியவர்களின் மன்னிப்புக்கோருதலை அங்கீகரிக்கிறான். ஏனென்றால், அல்லாஹ் மிக அறிந்தவன் ஞானமுடையவன் ஆவான்.
IFT
மேலும், அவர்களுடைய உள்ளங்களிலிருந்து கடுஞ்சினத்தையும் அகற்றிவிடுவான். மேலும், தான் நாடுகின்றவர்களுக்கு பாவமீட்சி பெறுவதற்கான பேற்றை அருள்வான். அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனும், நுண்ணறிவாளனுமாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசங்கொண்ட) அவர்களுடைய இதயங்களின் ஆத்திரத்தை அவன் (வெற்றியளிப்பதின் மூலம்) போக்கியும் விடுவான், இன்னும், அல்லாஹ் (அவர்களில்) தான் நாடியவர்களின் தவ்பாவை ஏற்றுக்கொள்வான், இன்னும், அல்லாஹ் நன்கறிகிறவன், தீர்க்கமான அறிவுடையவன்.
Saheeh International
And remove the fury in their [i.e., the believers'] hearts. And Allah turns in forgiveness to whom He wills; and Allah is Knowing and Wise.
(முஃமின்களே!) உங்களில் யார் (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர் என்பதையும்; அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், முஃமின்களையும் தவிர (வேறு எவரையும்) அந்தரங்க நண்பர்களாக ஆக்கிக் கொள்ளவில்லை என்பதையும், அல்லாஹ் (உங்களைச் சோதித்து) அறியாத நிலையில், நீங்கள் விட்டுவிடப் படுவீர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாகவே இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) உங்களில் (உண்மையாகவே மனம் விரும்பி) போர் புரிந்தவர்கள் யாரென்பதையும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், நம்பிக்கையாளர்களையும் தவிர (மற்றெவரையும் தங்கள்) அந்தரங்க நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதவர்கள் யார் என்பதையும், அல்லாஹ் (உங்களைச் சோதித்து) அறிவிக்காமல், நீங்கள் விட்டு விடப்படுவீர்கள் என்று எண்ணிக் கொண்டீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
IFT
உங்களில் (இறைவழியில்) உயிர்த்தியாகம் செய்தவர்கள் யார், இன்னும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், இறைநம்பிக்கையாளர்களையும் விடுத்து வேறெவரையும் அந்தரங்க நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதவர்கள் யார் என அல்லாஹ் இன்னும் வேறுபடுத்தி அறிந்திடாத நிலையில் நீங்கள் வெறுமனே விடப்பட்டு விடுவீர்கள் என்று நினைத்துக்கொண்டீர்களா? நீங்கள் செய்வதனைத்தையும் அல்லாஹ் நன்கு தெரிந்தே இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசிகளே! உங்களில் யுத்தம் செய்தோரையும் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விசுவாசிகளையும் தவிர (வேறு எவரையும் தங்களுடைய அந்தரங்க நண்பர்களாக (உங்களில்) எவரும் எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும், அல்லாஹ் (சோதித்து) அறியாத நிலையில் நீங்கள் விட்டுவிடப் படுவீர்களென்று எண்ணிக் கொண்டீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்குணர்பவன்.
Saheeh International
Do you think that you will be left [as you are] while Allah has not yet made evident those among you who strive [for His cause] and do not take other than Allah, His Messenger and the believers as intimates? And Allah is [fully] Aware of what you do.
“குஃப்ரின்” மீது தாங்களே சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும், இந்த முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை; அவர்களுடைய (நற்)கருமங்கள் (யாவும் பலன் தராது) அழிந்துவிட்டன - அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இணைவைத்து வணங்கும் இவர்கள், தாங்கள் நிராகரிப்பவர்கள்தான் என்று (பகிரங்கமாக) கூறிக் கொண்டிருக்கும் வரை, அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய அவர்களுக்கு உரிமையில்லை. இவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. அவர்கள் என்றென்றும் நரகத்திலேயே தங்கி விடுவார்கள்.
IFT
தாங்கள் நிராகரிப்பாளர்கள் என்பதற்குத் தாங்களே சான்று வழங்கிக் கொண்டிருக்கும் இந்த இணைவைப்பாளர்களுக்கு இறையில்லங்களைப் பராமரிக்கும் உரிமை இல்லை. அத்தகையவர்களின் எல்லாச் செயல்களும் பாழாகிவிட்டன. மேலும், அவர்கள் நரகத்திலேயே என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இணை வைத்துக்கொண்டிருப்போருக்கு, இவர்கள் தங்களுக்குத் தாங்களே நிராகரிப்பைக் கொண்டு சாட்சி கூறிக்கொள்பவர்களாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வுடைய பள்ளிகளை இவர்கள் பரிபாலனம் செய்ய எவ்வித உரிமையுமில்லை, அத்தகையோர்- அவர்களுடைய செயல்கள் அழிந்து விட்டன, இன்னும், அவர்கள் நரக நெருப்பில் நிரந்தரமாக தங்கி இருப்பவர்கள்.
Saheeh International
It is not for the polytheists to maintain the mosques of Allah [while] witnessing against themselves with disbelief. [For] those, their deeds have become worthless, and in the Fire they will abide eternally.
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு தொழுகையையும் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருவதுடன், அல்லாஹ்வைத் தவிர மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கிறார்களோ, அவர்கள்தான் அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளைப் பராமரிக்கத் தகுதியுடையவர்கள். இவர்கள்தான் நேரான வழியில் இருப்பவர்கள்.
IFT
யார் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புகின்றார்களோ, மேலும், தொழுகையை நிலைநாட்டி, ஜகாத் கொடுக்கின்றார்களோ, மேலும், அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாமல் இருக்கின்றார்களோ அவர்கள்தாம் இறையில்லங்களைப் பராமரிப்பவர்களாய் (அவற்றின் ஊழியர்களாய்) ஆக முடியும்! அத்தகையவர்களே நேர்வழியில் செல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வுடைய பள்ளிகளைப் பரிபாலனம் செய்கிறவரெல்லாம் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசித்து தொழுகையையும் நிறைவேற்றி ஜகாத்தும் கொடுத்து அல்லாஹ்வையன்றி மற்றவெருக்கும் பயப்படாமலும் இருக்கின்றவர்கள்தாம், எனவே அத்தகையோர் நேர்வழி பெற்றவர்களில் அவர்கள் இருக்கப் போதுமானவர்கள்.
Saheeh International
The mosques of Allah are only to be maintained by those who believe in Allah and the Last Day and establish prayer and give zakah and do not fear except Allah, for it is expected that those will be of the [rightly] guided.
(ஈமான் கொள்ளாத நிலையில்) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவோரையும் கஃபத்துல்லாஹ்வை (புனிதப்பள்ளியை) நிர்வாகம் செய்வோரையும் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோருக்குச் சமமாக ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள் - அநியாயக்காரர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கை கொள்ளாமல் இருந்துகொண்டு) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுபவர் களையும், சிறப்புற்ற மஸ்ஜிதுக்கு ஊழியம் செய்பவர்களையும் அல்லாஹ்வை இன்னும் இறுதிநாளை நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிபவர்களுக்குச் சமமாக நீங்கள் ஆக்கி விட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள். அல்லாஹ், அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.
IFT
ஹஜ் செய்பவர்களுக்குத் தண்ணீர் புகட்டுவதும், சங்கைமிகு கஅபா பள்ளிவாசலுக்கு ஊழியம் புரிவதும் அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் பாதையில் கடுமையாக உழைப்பவனின் பணிக்குச் சமம் ஆகுமா? அல்லாஹ்விடத்தில் இவையிரண்டும் சமம் ஆகமாட்டா. மேலும், அக்கிரமம் புரியும் சமூகத்தாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசங் கொள்ளாமல் இருந்து கொண்டு) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவோரையும், சிறப்புற்ற அப்பள்ளியைப் பரிபாலஞ்செய்வோரையும் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் விசுவாசங்கொண்டு அல்லாஹ்வுடைய பாதையில் யுத்தம் புரிந்தோரைப் போன்று (சமமானவர்களாக) நீங்கள் ஆக்கி விட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருசாராரும்) சமமாக மாட்டார்கள், மேலும், அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்த மாட்டான்.
Saheeh International
Have you made the providing of water for the pilgrim and the maintenance of al-Masjid al-haram equal to [the deeds of] one who believes in Allah and the Last Day and strives in the cause of Allah? They are not equal in the sight of Allah. And Allah does not guide the wrongdoing people.
எவர்கள் ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள் மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள், நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊர்களிலிருந்து வெளியேறி, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர்புரிகின்றனரோ அவர்கள் அல்லாஹ்விடத்தில் மகத்தான பெரும் பதவி பெற்றவர்கள். இவர்கள்தான் வெற்றி அடைந்தவர்கள்.
IFT
எவர்கள் நம்பிக்கை கொண்டு, (இறைவழியில்) யாவற்றையும் துறந்து, தம் உயிர்களாலும், பொருள்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போராடினார்களோ அவர்கள் அல்லாஹ்விடம் உயர்ந்த படித்தரம் பெற்றவர்களாவர். மேலும், அத்தகையவர்கள் வெற்றியாளர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங் கொண்டு (தங்கள்) ஊர்களிலிருந்தும் (ஹிஜ்ரத்துச் செய்து வெளியேறி அல்லாஹ்வுடைய பாதையில், தங்கள் செல்வங்களாலும், தங்கள் உயிர்களாலும் யுத்தம் புரிகின்றனரே அத்தகையோர் அல்லாஹ்விடம் பதவியால் மிக மகத்தானவர்கள், மேலும், இத்தகையோர்தாம் வெற்றியடைந்தவர்கள்.
Saheeh International
The ones who have believed, emigrated and striven in the cause of Allah with their wealth and their lives are greater in rank in the sight of Allah. And it is those who are the attainers [of success].
அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன்னுடைய கிருபையையும், திருப்பொருத்தத்தையும் (அளித்து) சுவனபதிகளையும் (தருவதாக) நன்மாராயம் கூறுகிறான்; அங்கு அவர்களுக்கு நிரந்தரமான பாக்கியங்களுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன் அன்பையும், திருப்பொருத்தத்தையும் அளித்து சொர்க்கங்களையும் தருவதாக நற்செய்தி கூறுகிறான். அவர்களுக்கு அவற்றில் என்றென்றும் நிலையான சுகபோகங்கள் உண்டு.
IFT
தன்னுடைய அருளும் உவப்பும் சுவனங்களும் அவர்களுக்கு இருக்கின்றன என்று அவர்களின் இறைவன் நற்செய்தி அறிவிக்கின்றான். அங்கே அவர்களுக்கு நிலையான அருட்பேறுகள் இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுடைய இரட்சகன் தன்னிடமிருந்து கிருபையையும் பொருத்தத்தையும் (அளித்து) சுவனங்களையும் (தருவதாக) அவர்களுக்கு நன்மாராயங் கூறுகிறான், அவர்களுக்கு அவற்றில் என்றென்றும் நிலையான சுகங்களுண்டு.
Saheeh International
Their Lord gives them good tidings of mercy from Him and approval and of gardens for them wherein is enduring pleasure.
ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! உங்கள் தந்தைகளும், சகோதரர்களும் நம்பிக்கையை விட்டு நிராகரிப்பை விரும்பினால், நீங்கள் அவர்களை (உங்கள்) பாதுகாப்பாளர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களில் எவரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால் நிச்சயமாக அவர்கள்தான் வரம்பு மீறியவர்கள்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களின் தந்தையரும், உங்களின் சகோதரர்களும் இறைநம்பிக்கையைக் கைவிட்டு நிராகரிப்புக்கு முன்னுரிமை தந்தால், நீங்கள் அவர்களை உங்களுடைய ஆதரவாளர்களாக்கிக் கொள்ள வேண்டாம். உங்களில் யார் அவர்களை ஆதரவாளர்களாக்கிக் கொள்கின்றார்களோ அவர்கள்தாம் அக்கிரமக்காரர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! உங்களுடைய தந்தையர்களையும் உங்களுடைய சகோதரர்களையும் விசுவாசத்தைவிட நிராகரிப்பை அவர்கள் நேசித்தால்- நீங்கள் அவர்களை (உங்கள்) பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம், உங்களில் எவரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்.
Saheeh International
O you who have believed, do not take your fathers or your brothers as allies if they have preferred disbelief over belief. And whoever does so among you - then it is those who are the wrongdoers.
(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! நம்பிக்கையாளர்களை நோக்கி) நீர் கூறுவீராக: உங்கள் தந்தைகளும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் மனைவிகளும், உங்கள் குடும்பங்களும், நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் (உங்கள்) பொருள்களும், நஷ்டமாகிவிடுமோ என நீங்கள் பயந்து (மிக எச்சரிக்கையுடன்) செய்து வரும் வர்த்தகமும், உங்களுக்கு மிக்க விருப்பமுள்ள (உங்கள்) வீடுகளும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விடவும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிவதைவிடவும் உங்களுக்கு மிக விருப்பமானவையாக இருந்தால் (நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களல்ல. நீங்கள் அடைய வேண்டிய தண்டனையைப் பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரை நீங்கள் எதிர்ப்பார்த்திருங்கள். (இப்படிப்பட்ட) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை.
IFT
(நபியே!) நீர் கூறிவிடுவீராக: “உங்கள் தந்தையர், உங்கள் பிள்ளைகள், உங்கள் சகோதரர்கள், உங்கள் மனைவியர், உங்களுடைய உறவினர்கள், நீங்கள் சம்பாதித்த செல்வங்கள் மற்றும் தேக்கநிலை ஏற்பட்டுவிடுமோ என நீங்கள் அஞ்சுகின்ற உங்களுடைய வணிகம் மற்றும் உங்களுக்கு விருப்பமான இல்லங்கள் ஆகியவை அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும்விட அவன் வழியில் போராடுவதைவிட உங்களுக்கு நேசமானவையாயிருந்தால், அல்லாஹ் தன்னுடைய தீர்ப்பினை (உங்களிடம்) செயல்படுத்தும் வரை நீங்கள் எதிர்பார்த்திருங்கள்! அல்லாஹ் தீய சமுதாயத்துக்கு நேர்வழி காட்டுவதில்லை.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! விசுவாசிகளிடம்) நீர் கூறுவீராக! உங்களுடைய தந்தைகளும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவியரும், உங்களுடைய குடும்பத்தினரும், நீங்கள் எதனை சம்பாதித்து வைத்திருக்கிறீர்களோ அந்தச் செல்வங்களும், நீங்கள் எதனுடைய நஷ்டத்தைப் பயப்படுகிறீர்களோ அத்தகைய வியாபாரமும் நீங்கள் எதனை திருப்திப் படுகிறீர்களோ, அத்தகைய (உங்கள்) குடியிருப்பிடங்களும் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அவனுடைய பாதையில் போர் செய்வதையும் விட உங்களுக்கு மிக்க விருப்பமானவைகளாக இருந்தால், அப்போது நீங்கள் (தண்டனையைப் பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரையில் எதிர்பார்த்திருங்கள், மேலும், பாவிகளான கூட்டத்தினரை அல்லாஹ் நேர் வழியில் செலுத்தவுமாட்டான்.
Saheeh International
Say, [O Muhammad], "If your fathers, your sons, your brothers, your wives, your relatives, wealth which you have obtained, commerce wherein you fear decline, and dwellings with which you are pleased are more beloved to you than Allah and His Messenger and jihad [i.e., striving] in His cause, then wait until Allah executes His command. And Allah does not guide the defiantly disobedient people."
நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் பல போர்க்களங்களில் உதவி செய்திருக்கின்றான்; (நினைவு கூறுங்கள்:) ஆனால் ஹுனைன் (போர் நடந்த) அன்று. உங்களைப் பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவில்லை, (மிகவும்) பரந்த பூமி உங்களுக்கு (அப்போது) சுருக்கமாகிவிட்டது. அன்றியும் நீங்கள் புறங்காட்டிப் பின்வாங்கலானீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
பல போர்க்களங்களில் (உங்கள் எண்ணிக்கைக் குறைவாக இருந்தும்) நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். எனினும், ஹுனைன் போர் அன்று உங்களை பெருமையில் ஆழ்த்திக் கொண்டிருந்த உங்கள் அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு ஒரு பலனும் அளிக்கவில்லை. பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அதுசமயம் அது) உங்களுக்கு மிக நெருக்கமாகி (குறுகி) விட்டது. நீங்கள் புறங்காட்டி ஓடவும் தலைப்பட்டீர்கள்.
IFT
(இதற்கு முன்னர்) பெரும்பாலான சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்துள்ளான். (இப்போது) ஹுனைன் (போர் நடைபெற்ற) நாளிலும் (அவன் உதவி செய்ததை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்). அன்று உங்களின் படைப்பெருக்கம் உங்களை இறுமாப்பில் ஆழ்த்தியிருந்தது. ஆயினும், அது உங்களுக்கு எத்தகைய பலனுமளிக்கவில்லை. மேலும், பூமி இவ்வளவு விரிவாயிருந்தும் உங்களுக்குக் குறுகிப் போய்விட்டது. பின்னர் நீங்கள் புறங்காட்டி ஓடிவிட்டீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அநேக யுத்த களங்களில் திட்டமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கின்றான், இன்னும், ‘ஹுனைன்’ யுத்தத்தன்று உங்களை அகமகிழச்செய்து கொண்டிருந்த உங்களுடைய (ஜனத்தொகையின்) அதிகம் உங்களுக்கு யாதொரு பயனுமளிக்கவில்லை-பூமியானது அது விசாலமாகயிருந்தும் உங்களுக்கு நெருக்கடியாகிவிட்டது, பின்னர் நீங்கள் புறமுதுகிட்டவர்களாகத் திரும்பிவிட்டீர்கள்.
Saheeh International
Allah has already given you victory in many regions and [even] on the day of hunayn, when your great number pleased you, but it did not avail you at all, and the earth was confining for you with [i.e., in spite of] its vastness; then you turned back, fleeing.
பின்னர் அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், முஃமின்கள் மீதும் தன்னுடைய சாந்தியை இறக்கியருளினான்; நீங்கள் பார்க்க முடியாப் படைகளையும் இறக்கி வைத்தான். (அதன் மூலம்) நிராகரிப்போரை வேதனைக்குள்ளாக்கினான் - இன்னும் இதுவே நிராகரிப்போரின் கூலியாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(இதன்) பின்னர், அல்லாஹ் தன் தூதர் மீதும், நம்பிக்கையாளர்கள் மீதும் தன் அமைதியை இறக்கி அருள்புரிந்தான். உங்கள் கண்ணுக்குத் தெரியாத படைகளையும் (உங்கள் உதவிக்காக) இறக்கி வைத்து நிராகரிப்பவர்களை வேதனை செய்தான். இதுதான் நிராகரிப்பவர்களுக்குரிய கூலியாகும்.
IFT
பிறகு அல்லாஹ் தன் தூதர் மீதும், நம்பிக்கை கொண்டோர் மீதும் தனது சாந்தியை இறக்கி அருளினான். மேலும், உங்களின் பார்வையில் தென்படாதிருந்த படைகளை இறக்கி இறைமறுப்பாளர்களைத் தண்டித்தான். இதுதான் (சத்தியத்தை) மறுத்தோருக்குரிய கூலி!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அல்லாஹ் தன்னுடைய தூதரின்மீதும் விசுவாசிகளின்மீதும் தன்னுடைய அமைதியை இறக்கியருளினான், இன்னும், படைகளை (உங்களுக்கு உதவியாக) இறக்கிவைத்தான், அவற்றை நீங்கள் பார்க்கவில்லை, இன்னும் நிராகரித்துக் கொண்டிருந்தோரை வேதனை செய்தான், இதுவே நிராகரிப்போருக்குரிய கூலியாகும்.
Saheeh International
Then Allah sent down His tranquility upon His Messenger and upon the believers and sent down soldiers [i.e., angels] whom you did not see and punished those who disbelieved. And that is the recompense of the disbelievers.
அல்லாஹ் இதற்குப் பின்னர், தான் நாடியவருக்கு (அவர்கள் மனந்திருந்தி மன்னிப்புக் கோரினால்) மன்னிப்பளிக்கின்றான்; அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
இதன் பின்னரும் (அவர்கள் பாவமன்னிப்புக் கோரினால் அவர்களில்) அல்லாஹ் விரும்பியவர்களை மன்னித்து அங்கீகரித்துக் கொள்கிறான். அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன்.
IFT
பின்னர், இவ்வாறு தண்டனை வழங்கிய பிறகு அல்லாஹ் தான் நாடுகின்றவர்களுக்கு பாவமீட்சி பெறும் பேற்றினை வழங்குகின்றான் (என்பதையும் நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள்). அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும், கருணையுடையவனும் ஆவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்பால்-(அவர்கள் மனம்திருந்தி மன்னிப்புக் கோரினால்) அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு அதன் பின்னரும், தவ்பாவை (-பாவமன்னிப்பை) அங்கீகரித்துக் கொள்கிறான், மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிகக் கிருபையுடையவன்.
Saheeh International
Then Allah will accept repentance after that for whom He wills; and Allah is Forgiving and Merciful.
யா அய்யுஹல் லதீன ஆமனூ இன்னமல் முஷ்ரிகூன னஜஸுன் Fபலா யக்ரBபுல் மஸ்ஜிதல் ஹராம Bபஃத 'ஆமிஹிம் ஹாத; வ இன் கிFப்தும் 'அய்லதன் Fபஸவ்Fப யுக்னீ குமுல் லாஹு மின் Fபள்லிஹீ இன் ஷா'; இன்னல்லாஹ 'அலீமுன் ஹகீம்
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே; ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப் பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது; (அதனால் உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தீர்களாயின் - அல்லாஹ் நாடினால் - அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான் - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக இணைவைத்து வணங்குபவர்கள் அசுத்தமானவர்களே. ஆகவே, அவர்கள் இந்த ஆண்டுக்குப் பின்னர் இனி சிறப்புற்ற இந்த மஸ்ஜிதை நெருங்க வேண்டாம். (அவர்களைத் தடை செய்தால் அவர்களால் கிடைத்து வந்த செல்வம் நின்று உங்களுக்கு) வறுமை வந்துவிடுமோ என்று நீங்கள் பயந்தால் (அதைப் பற்றி பாதகமில்லை.) அல்லாஹ் நாடினால், அதிசீக்கிரத்தில் தன் அருளைக் கொண்டு உங்களை செல்வந்தர்களாக்கி விடுவான் (என்பதை அறிந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! இணை வைப்பாளர்கள் அசுத்தமானவர்கள்தாம்! எனவே, அவர்கள் இந்த ஆண்டுக்குப் பின் சங்கைமிகு கஅபா பள்ளிவாசலின் அருகில்கூட நெருங்கக் கூடாது. நீங்கள் வறுமைக்கு அஞ்சுவீர்களாயின், அல்லாஹ் நாடினால் தன் கருணையினால் விரைவில் உங்களுக்குச் செல்வத்தை வழங்குவான். திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! நிச்சயமாக இணை வைத்துக்கொண்டிருப்போரெல்லாம் அசுத்தமானவர்களே, ஆகவே, அவர்கள் இவ்வருடத்திற்குப் பின்னர் சிறப்புற்ற இப்பள்ளியை (மஸ்ஜிதுல் ஹராமை) நெருங்க வேண்டாம், வறுமையை நீங்கள் பயந்தால் அல்லாஹ் விரைவில் தன் பேரருளைக் கொண்டு அவன் நாடினால், உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான் என்பதை அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ், யாவரையும் நன்கறிகிறவன், தீர்க்கமான அறிவுடையவன்.
Saheeh International
O you who have believed, indeed the polytheists are unclean, so let them not approach al-Masjid al-haram after this, their [final] year. And if you fear privation, Allah will enrich you from His bounty if He wills. Indeed, Allah is Knowing and Wise.
قَاتِلُواபோர் புரியுங்கள்الَّذِيْنَஎவர்களிடம்لَا يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَلَاஇன்னும் இல்லைبِالْيَوْمِ الْاٰخِرِமறுமை நாளைوَلَا يُحَرِّمُوْنَஇன்னும் தடை செய்ய மாட்டார்கள்مَاஎதைحَرَّمَதடை செய்தான்اللّٰهُஅல்லாஹ்وَ رَسُوْلُهٗஇன்னும் அவனுடைய தூதர்وَلَا يَدِيْنُوْنَமார்க்கமாக ஏற்க மாட்டார்கள்دِيْنَமார்க்கத்தைالْحَـقِّஉண்மை, சத்தியம்مِنَஇருந்துالَّذِيْنَஎவர்கள்اُوْتُواகொடுக்கப்பட்டார்கள்الْـكِتٰبَவேதம்حَتّٰىவரைيُعْطُواகொடுப்பார்கள்الْجِزْيَةَவரியை (ஜிஸ்யா)عَنْ يَّدٍஉடனேوَّهُمْஅவர்கள் இருக்கصٰغِرُوْنَபணிந்தவர்கள்
வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) வேதம் அருளப்பட்டவர்களில் எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொள்ளாமல், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் தடை செய்தவற்றை தடையாகக் கருதாமல், மேலும், இந்த சத்திய மார்க்கத்தைப் பின்பற்றாமலும் இருக்கின்றனரோ அவர்கள், (தங்கள்) கையால் பணிவுடன் ‘ஜிஸ்யா' (என்னும் கப்பம்) கட்டும் வரை நீங்கள் அவர்களிடம் போர் புரியுங்கள்.
IFT
வேதம் வழங்கப்பட்டவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்தவற்றை ‘தடுக்கப்பட்டவை’ என்று கருதாமலும் சத்திய மார்க்கத்தைப் பின்பற்றாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள்; அவர்கள் சிறுமை அடைந்தவர்களாகி (தமது) கையால் ஜிஸ்யா வரியைச் செலுத்தும் வரை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசிகளே! வேதம் கொடுக்கப்பட்டவர்களில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங்கொள்ளாமலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலக்கியவைகளை விலக்கிக் கொள்ளாமலும், இந்த உண்மை மார்க்கத்தை மார்க்கமாக ஏற்காமலும் இருக்கின்றனரே, அத்தகையோரை-இழிவடைந்தவர்களாக அவர்கள் தங்கள் (கையால் ஜிஸ்வா) வரியை கொடுக்கும்வரை நீங்கள் (அவர்களுடன்) யுத்தம் புரியுங்கள்.
Saheeh International
Fight against those who do not believe in Allah or in the Last Day and who do not consider unlawful what Allah and His Messenger have made unlawful and who do not adopt the religion of truth [i.e., Islam] from those who were given the Scripture - [fight] until they give the jizyah willingly while they are humbled.
யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?
அப்துல் ஹமீது பாகவி
யூதர்கள் (நபி) ‘உஜைரை' அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர். (இவ்வாறே) கிறிஸ்தவர்கள் ‘மஸீஹை' அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர். இவர்கள் தங்கள் வாய்களால் கூறும் இக்கூற்றானது இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்பவர்களின் கூற்றையே ஒத்திருக்கிறது. அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான். (சத்தியத்தைப் புறக்கணித்து) இவர்கள் எங்கு வெருண்டோடுகின்றனர்?
IFT
“உஸைர் அல்லாஹ்வின் புதல்வர்” என்று யூதர்கள் கூறுகின்றார்கள். “மஸீஹ் அல்லாஹ்வின் புதல்வர்” என்று கிறிஸ்தவர்கள் கூறுகின்றார்கள். அவர்கள் தங்களுடைய நாவினால் கூறும் (உண்மைக்குப் புறம்பான) கூற்றுகளாகும் இவை. இவர்களுக்கு முன்னர் இறைநிராகரிப்பை மேற்கொண்டிருந்தவர்கள் கூறியதைப்போல் இவர்களும் கூறுகின்றனர். அல்லாஹ் இவர்களை நாசப்படுத்துவானாக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றார்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், யூதர்கள் ‘உஜைர்’ அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர், கிறிஸ்தவர்கள் “மஸீஹ்” அல்லாஹ்வுடைய மகன் என்றும் கூறுகின்றனர், அது இவர்கள் தங்கள் வாய்களால் கூறும் கூற்றே ஆகும், இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு (கூற்றால் அவர்களைப் போன்று) ஒத்திருக்கிறார்கள், அல்லாஹ் இவர்களை அழித்து விடுவானாக! (சத்தியத்தைப் புறக்கணித்து) இவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்?
Saheeh International
The Jews say, "Ezra is the son of Allah"; and the Christians say, "The Messiah is the son of Allah." That is their statement from their mouths; they imitate the saying of those who disbelieved before [them]. May Allah destroy them; how are they deluded?
அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் அல்லாஹ்வைத் தவிர்த்து தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும், (தங்கள்) கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், வணக்கத்திற்குரிய ஒரே ஓர் இறைவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே இவர்கள் அனைவரும் ஏவப்பட்டு இருக்கின்றனர். வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர (வேறெவனும்) இல்லை. அவர்கள் இணைவைக்கும் இவற்றைவிட்டு அவன் மிகவும் பரிசுத்தமானவன்.
IFT
அவர்கள் அல்லாஹ்வை விடுத்து மார்க்க மேதைகளையும், துறவிகளையும் தங்களின் ரப் கடவுளராக்கிக் கொண்டார்கள். மேலும் (இதே போன்று) மர்யத்தின் குமாரர் மஸீஹையும் (இறைவனாக்கிக் கொண்டனர்). உண்மை யாதெனில், ஒரே இறைவனைத் தவிர வேறெவரையும் வணங்க அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டதில்லை. வணக்கத்திற்குரிய இறைவன் அவனையன்றி யாரும் இல்லை. அவர்கள் செய்யும் இணைவைப்புச் செயல்களிலிருந்து அவன் தூய்மையானவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வாறே) அவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் பாதிரிகளையும், தங்கள் சந்நியாசிகளையும் மர்யமுடைய குமாரர் மஸீஹையும் தங்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர். இன்னும், ஒரே ஒரு இரட்சகனையே வணங்க வேணடுமென்றல்லாது (வேறு எதனையும்) அவர்கள் கட்டளையிடப்படவில்லை, அவனையன்றி வணக்கத்திற்குரியவன் (வேறெவரும்) இல்லை, அவர்கள் இணைவைப்பவற்றைவிட்டும் அவன் மிகவும் பரிசுத்தமானவன்.
Saheeh International
They have taken their scholars and monks as lords besides Allah, and [also] the Messiah, the son of Mary. And they were not commanded except to worship one God; there is no deity except Him. Exalted is He above whatever they associate with Him.
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் தங்கள் வாய்களைக் கொண்டே (ஊதி) அல்லாஹ்வுடைய பிரகாசத்தை அணைத்துவிட விரும்புகின்றனர். எனினும், இந்நிராகரிப்பவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தனது பிரகாசத்தை முழுமைப்படுத்தி வைக்காமல் இருக்கப்போவதில்லை.
IFT
அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாயால் ஊதி அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள். ஆயினும் அல்லாஹ் தன் ஒளியை நிறைவு செய்யாமல் விடமாட்டான். இறைநிராகரிப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் தங்கள் வாய்களினால் (ஊதி) அல்லாஹ்வின் பிரகாசத்தை அணைத்துவிட நாடுகின்றனர்; இந்நிராகரிப்போர் வெறுத்தபோதிலும், அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை பூர்த்தியாக்கி வைப்பதைத் தவிர (வேறெதையும்) நாடவில்லை.
Saheeh International
They want to extinguish the light of Allah with their mouths, but Allah refuses except to perfect His light, although the disbelievers dislike it.
அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பிவைத்தான். இணைவைத்து வணங்குபவர்கள் (அதை) வெறுத்தபோதிலும் (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் அந்த சத்திய மார்க்க(மான இஸ்லா)ம் வென்றுவிடும்படி அவன் செய்வான்.
IFT
அல்லாஹ்தான் தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பிவைத்தான்; அவர் அந்த மார்க்கத்தை ஏனைய அனைத்து மார்க்கங்களை விடவும் மேலோங்கச் செய்யவேண்டும் என்பதற்காக! இணைவைப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், தன்னுடைய தூதரை நேர்வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக்கொண்டும் அனுப்பி வைத்தான், இணை வைத்துக்கொண்டிருப்போர் (அதனை) வெறுத்தபோதிலும், (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்யவே (அவ்வாறு செய்தான்.)
Saheeh International
It is He who has sent His Messenger with guidance and the religion of truth to manifest it over all religion, although they who associate others with Allah dislike it.
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும்,சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! (வேதக்காரர்களின்) பாதிரிகளிலும், (சிலை வணங்கிகளின்) சந்நியாசிகளிலும் பலர் மக்களின் செல்வங்களைத் தப்பான முறையில் விழுங்கி வருவதுடன் அல்லாஹ்வுடைய பாதையில் (மக்கள்) செல்வதையும் தடை செய்கின்றனர். ஆகவே, (இவர்களுக்கும் இன்னும் எவர்கள்) தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு, அதை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாதிருக்கின்றனரோ அவர்களுக்கும் (நபியே!) நீர் துன்புறுத்தும் வேதனையை நற்செய்தியாகக் கூறுவீராக.
IFT
இறைநம்பிக்கையாளர்களே! (வேதம் வழங்கப்பட்டவர்களைச் சார்ந்த) பெரும்பாலான அறிஞர்களும், துறவிகளும் மக்களின் பொருள்களைத் தவறான முறையில் விழுங்குகிறார்கள். மேலும் அவர்களை அல்லாஹ்வின் வழியில் செல்லவிடாமல் தடுக்கிறார்கள். எவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாமலிருக்கின்றார்களோ அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது எனும் ‘நற்செய்தி’யினை நீர் அறிவிப்பீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் அநேகர், மனிதர்களின் பொருட்களைத் தவறான முறையில் உண்ணுகிறார்கள், இன்னும், (மக்கள்) அல்லாஹ்வுடைய வழியில் செல்வதற்கும் தடை விதிக்கின்றனர், (ஆகவே, இவர்களுக்கும்) இன்னும், பொன்னையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு அதனை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாதிருக்கின்றனரே அத்தகையவர்களுக்கும், (நபியே!) நீர் துன்புறுத்தும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக.
Saheeh International
O you who have believed, indeed many of the scholars and the monks devour the wealth of people unjustly and avert [them] from the way of Allah. And those who hoard gold and silver and spend it not in the way of Allah - give them tidings of a painful punishment.
(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) “இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
(தங்கம், வெள்ளியாகிய) அவற்றை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சி அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், அவர்களுடைய விலாக்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் சூடிட்டு ‘‘உங்களுக்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்தவை இவைதான். ஆகவே, நீங்கள் சேகரித்து வைத்திருந்த இவற்றை சுவைத்துப் பாருங்கள்'' என்று கூறப்படும் நாளை (நபியே! நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக).
IFT
ஒருநாள் வரும்; அந்நாளில் இதே தங்கமும், வெள்ளியும் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு பிறகு அவற்றால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் இவைதாம் நீங்கள் உங்களுக்காக சேகரித்து வைத்திருந்த கருவூலங்கள்! எனவே நீங்கள் சேகரித்து வைத்திருந்த செல்வத்தைச் சுவையுங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பொன், வெள்ளியாகிய) அவற்றை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு பின்னர் அவற்றைக்கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் சூடுபோடப்படும் நாளில்-“உங்களுக்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்தது இதுதாம், ஆகவே, நீங்கள் சேகரித்து வைத்திருந்ததை சுவைத்துப் பாருங்கள்” (என்று அப்போது அவர்களுக்குக் கூறப்படும்).
Saheeh International
The Day when it will be heated in the fire of Hell and seared therewith will be their foreheads, their flanks, and their backs, [it will be said], "This is what you hoarded for yourselves, so taste what you used to hoard."
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் நீங்களும், அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டுக்கு) பன்னிரண்டுதான். (இவ்வாறே) வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு (மாதங்கள்) சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே, இவற்றில் நீங்கள் (போர் புரிந்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம். எனினும், இணைவைத்து வணங்குபவர்களில் எவரேனும் (அம்மாதங்களில்) உங்களுடன் போர் புரிந்தால் அவ்வாறே நீங்களும் அவர்கள் அனைவருடனும் (அம்மாதங்களிலும்) போர் புரியுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
IFT
உண்மையாக, அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். வானங்களையும் பூமியையும் அவன் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் இவ்வாறே உள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. இதுதான் சரியான நெறிமுறையாகும். எனவே, இம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்துக் கொள்ளாதீர்கள்! எவ்வாறு, இணை வைப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உங்களோடு போரிடுகிறார்களோ அவ்வாறே நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களுடன் போர்புரியுங்கள்! மேலும் இறையச்சம் உள்ளவர்களோடு அல்லாஹ் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களையும், பூமியையும் படைத்த நாளில் (இருந்து மறுமை நாள் வரை நடந்தேறும் அனைத்து விஷயங்களும் எழுதப்பட்ட) அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளவாறு நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடத்தில் (ஒரு வருடத்திற்குப்) பன்னிரண்டு மாதங்களாகும், அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவையாகும், (இவ்வாறு அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று செயல்படுவதற்குரிய) அதுதான் நேரான மார்க்கமாகும், ஆகவே, அவற்றில் (நீங்கள் வரம்புமீறி) உங்களுக்கு நீங்களே அநீதமிழைத்துக் கொள்ளாதீர்கள், இன்னும், இணைவைப்பவர்களுடன் அவர்கள் ஒருங்கிணைந்து உங்களுடன் போர் செய்வதைப்போன்று நீங்களும் ஒருங்கிணைந்து போர் செய்யுங்கள், நிச்சயமாக அல்லாஹ், பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
Saheeh International
Indeed, the number of months with Allah is twelve [lunar] months in the register of Allah [from] the day He created the heavens and the earth; of these, four are sacred. That is the correct religion [i.e., way], so do not wrong yourselves during them. And fight against the disbelievers collectively as they fight against you collectively. And know that Allah is with the righteous [who fear Him].
اِنَّمَا النَّسِىْٓءُபிற்படுத்துவதெல்லாம்زِيَادَةٌஅதிகப்படுத்துவதுفِى الْكُفْرِநிராகரிப்பில்يُضَلُّவழி கெடுக்கப்படுகின்றனர்بِهِஇதன் மூலம்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்يُحِلُّوْنَهٗஆகுமாக்குகின்றனர்/அதைعَامًاஓர் ஆண்டில்وَّيُحَرِّمُوْنَهٗஇன்னும் அதைத் தடை செய்கின்றனர்عَامًاஓர் ஆண்டில்لِّيُوَاطِـــٴُـــوْاஅவர்கள் ஒத்து வருவதற்காகعِدَّةَஎண்ணிக்கைக்குمَاஎதைحَرَّمَதடை செய்தான்اللّٰهُஅல்லாஹ்فَيُحِلُّوْاஆகுமாக்குவார்கள்مَاஎதைحَرَّمَதடை செய்தான்اللّٰهُ ؕஅல்லாஹ்زُيِّنَஅலங்கரிக்கப்பட்டனلَهُمْஅவர்களுக்குسُوْۤءُதீய(வை)اَعْمَالِهِمْ ؕஅவர்களுடைய செயல்கள்وَاللّٰهُஅல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி செலுத்த மாட்டான்الْقَوْمَமக்களைالْـكٰفِرِيْنَநிராகரிப்பவர்களான
(போர் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட இம்மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப்படி) முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் குஃப்ரை (நிராகரிப்பை)யே அதிகப்படுத்துகிறது; இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப் படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அ(ம்மாதங்களில் போர் புரிவ)தை அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கிறார்கள்;) மற்றொரு வருடத்தில் அதைத் தடுத்து விடுகின்றனர். இதற்கு காரணம் (தாங்கள் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டுவிட்டன; அல்லாஹ், காஃபிர்கள் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
(போர் செய்யக்கூடாதென்று தடுக்கப்பட்டுள்ள மாதங்களை அவர்கள் தங்கள் இஷ்டப்படி) முன் பினோக்குவதெல்லாம் நிச்சயமாக நிராகரிப்பையே அதிகப்படுத்துகிறது. இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப்படுகின்றனர். ஏனென்றால், (அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பினோக்கி) ஓர் ஆண்டில் (அம்மாதங்களில் போர் புரிவதை) ஆகுமாக்கிக் கொள்கின்றனர். மற்றோர் ஆண்டில் (அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று) தடுத்து விடுகின்றனர். (இவ்வாறு அவர்கள் செய்வதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். அவர்களுடைய இத்தீயச் செயல்கள், (ஷைத்தானால்) அவர்களுக்கு அழகாக்கப்பட்டு விட்டன. நிராகரிக்கும் (இந்த) மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை.
IFT
‘நஸீஃ’ நிராகரிப்பை அதிகப்படுத்தும் செயலாகும். நிராகரிப்பை மேற்கொண்ட மக்கள் இதனால் மேலும் வழிகெடுக்கப்படுகின்றார்கள். ஏதேனும் ஓர் ஆண்டில் (போர் விலக்கப்பட்ட) ஒரு மாதத்தை (போருக்காக) அவர்கள் அனுமதிக்கப்பட்டதாக்கிக் கொள்கின்றார்கள். ஆனால் மறு ஆண்டில் அதே மாதத்தில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். ஏனெனில், அல்லாஹ்வினால் (போர்புரிய) தடைசெய்யப்பட்டுள்ள மாதங்களின் எண்ணிக்கையை நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காக! இவ்வாறாக அல்லாஹ்வினால் தடுக்கப்பட்ட மாதத்தை இவர்கள் அனுமதிக்கப்பட்டதாய் ஆக்கிக் கொள்கின்றனர் அவர்களுடைய தீய செயல்கள் அவர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன. சத்தியத்தை மறுக்கும் மக்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(சிறப்புற்ற மாதங்களை அவர்கள் விருப்படி) முன்பின் ஆக்குவதெல்லாம் நிச்சயமாக நிராகரிப்பில் அதிகப்படுத்துவதாகும், அதனால் நிராகரித்துக் கொண்டிருப்போர் வழி கெடுக்கப்படுகின்றனர், ஒரு வருடத்தில் அ(வ்வாறு முன்பின் ஆக்குவ)தை ஆகுமாக்கிக் கொள்கின்றனர், மற்றொரு வருடத்தில் அதை ஆகாதாக்கி விடுகின்றனர், (இவ்வாறு செய்வதெல்லாம்,) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்கு (அவர்களின் எண்ணிக்கையை) சரியாக்குவதற்காகத்தான், (பின்னர்) அல்லாஹ் தடுத்தவற்றை அவர்கள் ஆகுமாக்கிக் கொள்கின்றனர், அவர்களுடைய செயல்களின் தீமை (ஷைத்தானால்) அவர்களுக்கு அலங்காரமாக ஆக்கப்பட்டு விட்டது, மேலும், அல்லாஹ் நிராகரிக்கும் (இக்) கூட்டத்தாரை நேர் வழியில் செலுத்த மாட்டான்.
Saheeh International
Indeed, the postponing [of restriction within sacred months] is an increase in disbelief by which those who have disbelieved are led [further] astray. They make it lawful one year and unlawful another year to correspond to the number made unlawful by Allah and [thus] make lawful what Allah has made unlawful. Made pleasing to them is the evil of their deeds; and Allah does not guide the disbelieving people.
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்குப் புறப்பட்டுச்) செல்லுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால், நீங்கள் பூமியின் பக்கம் சாய்ந்து விடுகிறீர்களே உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பு இவ்வுலக வாழ்க்கையின் இன்பம் மிகவும் அற்பமானது.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போர் புரிய) நீங்கள் புறப்படுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால் (அவ்வாறு புறப்படாமல்) நீங்கள் ஊரில் தங்கிவிடுவதன் காரணம் என்ன? மறுமையை விட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டு நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பாக இவ்வுலக வாழ்க்கை வெகு அற்பமானதே!
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? ‘அல்லாஹ்வின் வழியில் புறப்படுங்கள்’ என்று உங்களிடம் கூறப்பட்டால், பூமியிலேயே அமிழ்ந்து கிடக்கின்றீர்களே! மறுமையைவிட உலக வாழ்க்கையில் நிறைவடைந்து விட்டீர்களா? (அவ்வாறாயின் அறிந்து கொள்ளுங்கள்:) உலக வாழ்க்கையின் இன்பங்கள் அனைத்தும் மறுமைக்கு முன் மிக அற்பமானவையாகவே இருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! “அல்லாஹ்வுடைய பாதையில் (போர் செய்ய) நீங்கள் புறப்படுங்கள்” என்று உங்களுக்குக் கூறப்பட்டால், (அவ்வாறு புறப்படாமல்) நீங்கள் பூமியின்பால் சாய்ந்துவிடுகிறீர்களே, உங்களுக்கு என்ன (நேர்ந்து விட்டது)? மறுமையைவிட இவ்வுலக வாழ்கையைக் கொண்டு நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பாக இவ்வுலக வாழ்வின் இன்பம் வெகு சொற்பமே தவிர (வேறு) இல்லை.
Saheeh International
O you who have believed, what is [the matter] with you that, when you are told to go forth in the cause of Allah, you adhere heavily to the earth? Are you satisfied with the life of this world rather than the Hereafter? But what is the enjoyment of worldly life compared to the Hereafter except a [very] little.
நீங்கள் (அவ்வாறு புறப்பட்டுச்) செல்லவில்லையானால், (அல்லாஹ்) உங்களுக்கு நோவினை மிக்க வேதனை கொடுப்பான்; நீங்கள் அல்லாத வேறு சமூகத்தை மாற்றி (உங்களிடத்தில் அமைத்து) விடுவான். நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது - அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையோனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(உங்களை போருக்கு அழைக்கப்பட்டு) நீங்கள் செல்லாவிட்டால், உங்களை மிகத் துன்புறுத்தும் வேதனையால் வேதனை செய்வான். (மேலும், உங்களைப் போக்கி) உங்கள் இடத்தில் மற்றவர்களை ஏற்படுத்தி விடுவான். (இதற்காக) நீங்கள் அவனுக்கு ஒரு தீங்கும் இழைக்க முடியாது. ஏனென்றால், அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன்.
IFT
நீங்கள் இறைவழியில் புறப்படவில்லையாயின், அல்லாஹ் உங்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை அளிப்பான். மேலும், உங்களுக்குப் பதிலாக வேறொரு சமூகத்தினரைக் கொண்டு வருவான். மேலும், அல்லாஹ்வுக்கு நீங்கள் எந்த ஒரு தீங்கும் செய்திட முடியாது. அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்ய அழைக்கப்பட்டு) நீங்கள் புறப்படாவிடில் மிகத் துன்புறுத்தும் வேதனையால் (அல்லாஹ்வாகிய) அவன் உங்களை வேதனை செய்வான், அன்றியும் (உங்களைப் போக்கி உங்களிடத்தில்) உங்களல்லாத (வேறு) சமூகத்தாரை பகரமாக்கி விடுவான், நீங்கள் எந்த ஒன்றாலும் அவனுக்குத் தீங்கிழைக்கவுமுடியாது, (ஏனென்றால்) அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
Saheeh International
If you do not go forth, He will punish you with a painful punishment and will replace you with another people, and you will not harm Him at all. And Allah is over all things competent.
(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை;) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், “கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நம் தூதருக்கு) நீங்கள் உதவி செய்யாவிட்டால் (அதனால் அவருக்கு ஏதும் நஷ்டம் ஏற்பட்டு விடாது. ஏனென்றால்) நிராகரிப்பவர்கள் அவரை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவிசெய்தே இருக்கிறான். (மலைக்) குகையில் இருந்த இருவரில் ஒருவராக அவர் இருந்த (போது எதிரிகள் சூழ்ந்துகொண்ட) சமயத்தில் தன்னுடன் (குகையில்) இருந்த தோழ(ராகிய அபூபக்)ரை நோக்கி ‘‘நீர் கவலைப்படாதீர்! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்'' என்று கூறியபோதும் அல்லாஹ் அவருக்குத் தன் புறத்திலிருந்து மனநிம்மதியை அளித்தான். (மற்ற போர் சமயங்களிலும்) நீங்கள் காணமுடியாத படைகளைக் கொண்டு அவருக்கு உதவி செய்து நிராகரிப்பவர்களின் வார்த்தையை (மார்க்கத்தை) தாழ்த்தினான். ஏனென்றால், அல்லாஹ்வின் வார்த்தை (மார்க்கம்)தான் மிக உயர்வானது. இன்னும், அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.
IFT
நீங்கள் இந்த நபிக்கு உதவி செய்யாவிட்டால் (அதனால் என்ன), நிராகரிப்பாளர்கள் அவரை வெளியேற்றியபோது திண்ணமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்துள்ளான். அவர்கள் இருவரும் குகையில் தங்கியிருந்தபோது இருவரில் இரண்டாமவராய் இருந்த அவர் தன் தோழரை நோக்கி “கவலை கொள்ளாதீர்; அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அல்லாஹ் அவருக்குத் தன்னிடமிருந்து மனஅமைதியை இறக்கி அருளினான். மேலும், உங்களின் பார்வைக்குத் தென்படாதிருந்த படைகளின் மூலம் அவருக்கு உதவி செய்தான். மேலும், இறைநிராகரிப்பாளர்களின் வாக்கைத் தாழ்த்தினான். மேலும், அல்லாஹ்வின் வாக்குதான் மேலானதாக இருக்கிறது. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நம்முடைய தூதராகிய அவருக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டால் (அதனால் அவருக்கு எந்த நஷ்டமும் ஏற்பட்டு விடாது, ஏனென்றால்,) நிராகரிப்போர் அவரை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமயத்தில் திட்டமாக அல்லாஹ் (அவருக்கு உதவி செய்து இருக்கின்றான், இருவரில் ஒருவராக அவர் இருக்க-(எதிரிகள் சூழ்ந்து கொண்ட சமயத்தில் அந்த) இருவரும் (“தவ்ர்”) மலைக்குகையில் இருந்தபோது (நம் தூதர்) தன்னுடன் (குகையில்) இருந்த தோழ(ராகிய அபூபக்)ரை நோக்கி நீர் கவலைப்படாதீர், நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று அவர் கூறிய நேரத்தில்- (அல்லாஹ் அவருக்கு உதவி செய்துள்ளான்.) அப்போது அல்லாஹ் அவர் மீது தன்னுடைய அமைதியை இறக்கி வைத்தான், மேலும், அவரைப் படைகளைக் கொண்டு பலப்படுத்தினான், அவற்றை நீங்கள் பார்க்கவில்லை, இன்னும், நிராகரிப்போரின் வாக்கை (நிறைவேறாது) கீழாக்கினான், (ஏனென்றால்) மேலும், அல்லாஹ்வின் வாக்கு-அதுதான் (எப்போதும்) உயர்வுடையது, அன்றியும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
Saheeh International
If you do not aid him [i.e., the Prophet (ﷺ] - Allah has already aided him when those who disbelieved had driven him out [of Makkah] as one of two, when they were in the cave and he [i.e., Muhammad (ﷺ] said to his companion, "Do not grieve; indeed Allah is with us." And Allah sent down His tranquility upon him and supported him with soldiers [i.e., angels] you did not see and made the word of those who disbelieved the lowest, while the word of Allah - that is the highest. And Allah is Exalted in Might and Wise.
நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் சொற்ப ஆயுதமுடையவர்களாக இருந்தாலும் சரி, முழு ஆயுத பாணிகளாக இருந்தாலும் சரி, நீங்கள் (கால்நடையாகவோ குதிரைமீதேறியோ) புறப்பட்டு, அல்லாஹ்வுடைய பாதையில் உங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரியுங்கள். நீங்கள் அறிவுடையவர்களாய் இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று.
IFT
கனமாக இருந்தாலும் சரி, இலேசாக இருந்தாலும் சரி, நீங்கள் புறப்படுங்கள்! உங்களுடைய உடைமைகளைக் கொண்டும் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் வழியில் போராடுங்கள்! நீங்கள் அறிவுடையோராயின் இதுவே உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இலேசாகவும், கனமாகவும் (-இளைஞர்கள், முதியவர்கள், செல்வந்தர்கள், செல்வமில்லாதவர்கள், வாகனத்தில் ஏறியவர்கள், நடப்பவர்கள் ஆகியோர்) புறப்பட்டு, உங்களின் செல்வங்களாலும், உங்களின் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யுங்கள், நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
Saheeh International
Go forth, whether light or heavy, and strive with your wealth and your lives in the cause of Allah. That is better for you, if you only knew.
“(நபியே! போர்ப் பிராயாணம்) நடுத்தரமான பிரயாணமாகவும் (அதில் கிடைக்கும் வெற்றிப் பொருள்கள்) எளிதில் (பெறப்படும் வெற்றிப்) பொருளாகவும் இருந்தால் அவர்கள் உம்மைப் பின்பற்றியிருப்பார்கள். எனினும் (போர்க்)களம் தூரமாக இருக்கின்றது. நாங்கள் சக்தி பெற்றிருந்தால் உங்களுடன் புறப்பட்டிருப்போம்” என்று அல்லாஹ்வின் மீது ஆணையிடுகிறார்கள். அவர்கள் தங்களையே அழித்துக் கொள்கின்றனர், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்பதை அல்லாஹ் அறிவான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) எளிதில் ஏதும் பொருள் கிடைக்கக் கூடியதாயிருந்து (நீங்கள் சென்ற இடம்) சமீபத்திலும் இருந்திருந்தால் நிச்சயமாக அவர்கள் உம்மைப் பின்பற்றி வந்தே இருப்பார்கள். எனினும் (நீர் சென்ற இடம் அவர்களுக்கு) வெகு தூரமாகி பெரும் சிரமமாகத் தோன்றியது. (ஆதலால்தான் அவர்கள் உம்மைப் பின்பற்றி வரவில்லை. ஆகவே, நீர் அவர்களை நோக்கி ‘‘நீங்கள் ஏன் வரவில்லை'' எனக் கேட்பீராயின் அதற்கவர்கள்) ‘‘எங்களுக்குச் சாத்தியப்பட்டிருந்தால் நிச்சயமாக நாங்கள் உங்களுடன் வந்திருப்போம்'' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்(து கூறு)வார்கள். (இவ்வாறு பொய் சத்தியம் செய்யும்) அவர்கள் தங்களையே அழித்துக் கொள்கின்றனர். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்.
IFT
(நபியே!) விரைவில் பலன் கிட்டுவதாயும், பயணம் சிரமமின்றியும் இருந்திருப்பின், நிச்சயமாக அவர்கள் உம்மைப் பின்தொடர்ந்து வந்திருப்பார்கள். ஆனால், இப்பயணம் அவர்களுக்கு மிகவும் சிரமமாகத் தோன்றியது. “எங்களால் இயலுமாயின் நிச்சயம் நாங்கள் உங்களோடு கிளம்பியிருப்போம்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுவார்கள். அவர்கள் தம்மைத் தாமே அழிவுக்குள்ளாக்குகிறார்கள். அவர்கள் பொய்யர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! நீர் எதன்பால் அவர்களை அழைத்தீரோ) அது சமீபமான (உடனே கிடைக்கக்கூடியதான) பொருளாகவும், (வெகு தூரமில்லாத) நடு நிலையான பயணமாகவுமிருந்தால், நிச்சயமாக அவர்கள் உம்மைப் பின்பற்றி வந்தேயிருப்பார்கள், எனினும், மிக தூரமான பயணம் அவர்கள் மீது பெரும் சிரமத்தை தந்தது, (ஆதலால், அவர்கள்) “நாங்கள் சக்தி பெற்றிருந்தால், நிச்சயமாக நாங்கள் உங்களுடன் வந்திருப்போம்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுவார்கள், (இதனால்) அவர்கள் தங்களையே அழித்துக் கொள்கின்றனர், மேலும், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்பதை அல்லாஹ் நன்கறிகிறவன்.
Saheeh International
Had it been a near [i.e., easy] gain and a moderate trip, they [i.e., the hypocrites] would have followed you, but distant to them was the journey. And they will swear by Allah, "If we were able, we would have gone forth with you," destroying themselves [through false oaths], and Allah knows that indeed they are liars.
(நபியே!) அல்லாஹ் உம்மை மன்னித் தருள்வானாக! அவர்களில் உண்மை சொன்னவர்கள் யார், பொய்யர்கள் யார் என்பதை நீர் தெளிவாக அறிவதற்குமுன் ஏன் அவர்களுக்கு (போருக்கு புறப்படாதிருக்க) அனுமதியளித்தீர்?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அல்லாஹ் உம்மை மன்னித்தருள்வானாக! (அவர்கள் உம்முடன் போருக்கு வராது தங்கிவிட உங்களிடம் அனுமதி கோரிய சமயத்தில்) நீர் ஏன் அவர்களுக்கு அனுமதியளித்தீர்? (அனுமதி அளிக்காது இருந்திருந்தால் அவர்களில்) உண்மை சொல்பவர்கள் (யார் என்று) உமக்குத் தெளிவாகி, (அவர்களில்) பொய் சொல்பவர்களை (அவர்கள் யார் என்பதையும்) நீர் நன்கு அறிந்திருப்பீர்.
IFT
(நபியே!) அல்லாஹ் உம்மை மன்னித்தருள்வானாக! (போரில் கலந்திடாமல் இருக்க) நீர் ஏன் அவர்களுக்கு அனுமதி அளித்தீர்? (நீர் அனுமதி அளிக்காமல் இருந்திருந்தால்) வாய்மையாளர்கள் யார் என்றும், பொய்யர்கள் யார் என்றும் உமக்கு வெளிப்படையாகத் தெரிந்திருக்குமே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அல்லாஹ் உம்மை மன்னித்தருள்வானாக! (போருக்கு வராது தங்கிவிட்ட) அவர்களில் உண்மை சொல்பவர்கள் (யார் என்பது) உமக்குத் தெளிவாகி, பொய்யர்களை நீர் அறியும் வரை ஏன் அவர்களுக்கு நீர் அனுமதியளித்தீர்.
Saheeh International
Allah has pardoned you, [O Muhammad, but] why did you give them permission [to remain behind]? [You should not have] until it was evident to you who were truthful and you knew [who were] the liars.
لَاமாட்டார்(கள்)يَسْتَـاْذِنُكَஉம்மிடம் அனுமதி கோரالَّذِيْنَஎவர்கள்يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்வார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَالْيَوْمِ الْاٰخِرِஇன்னும் இறுதி நாளைاَنْ يُّجَاهِدُوْاஅவர்கள் போரிடுவதிலிருந்துبِاَمْوَالِهِمْதங்கள் செல்வங்களால்وَاَنْفُسِهِمْؕஇன்னும் தங்கள் உயிர்களால்وَاللّٰهُஅல்லாஹ்عَلِيْمٌۢநன்கறிந்தவன்بِالْمُتَّقِيْنَஅஞ்சுபவர்களை
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டவர்கள், தங்கள் பொருட்களையும் உயிர்களையும் அர்ப்பணம் செய்து, போர் புரியாமலிருக்க உம்மிடம் அனுமதி கேட்கவேமாட்டார்கள் - பயபக்தியுடையவர்களை அல்லாஹ் நன்கு அறிவான்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வையும் இறுதிநாளையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரியாமலிருக்க உம்மிடம் அனுமதி கோரவே மாட்டார்கள். இறையச்சம் உடைய (இ)வர்களை அல்லாஹ் நன்கறிவான்.
IFT
அல்லாஹ்வின் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொள்கின்றவர்கள் தங்களுடைய உடைமைகளையும், உயிர்களையும் அர்ப்பணித்துப் போர்புரிவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்று ஒருபோதும் உம்மிடம் கோரமாட்டார்கள். அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களை நன்கறிபவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வையும், இறுதிநாளையும் விசுவாசங்கொள்கிறார்களே, அத்தகையோர்-தங்கள் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் யுத்தம் புரிவதற்கு உம்மிடம் அனுமதி கோரமாட்டார்கள், மேலும், பயபக்தியுடையவர்களை அல்லாஹ் நன்கறிகிறவன்.
Saheeh International
Those who believe in Allah and the Last Day would not ask permission of you to be excused from striving [i.e., fighting] with their wealth and their lives. And Allah is Knowing of those who fear Him.
(போரில் கலந்துகொள்ளாதிருக்க) உம்மிடம் அனுமதி கேட்பவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் ஈமான் கொள்ளாதவர்கள்தாம்; அவர்களுடைய இருதயங்கள் தங்கள் சந்தேகத்திலேயே இருக்கின்றன; ஆகவே, அவர்கள் தம் சந்தேகங்களினாலே (இங்கு மங்கும்) உழலுகின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(போருக்கு வராதிருக்க) உம்மிடம் அனுமதி கோருவதெல்லாம், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உண்மையாகவே நம்பிக்கை கொள்ளாதவர்கள்தான். அவர்களுடைய உள்ளங்கள் சந்தேகத்தில் ஆழ்ந்துவிட்டன. ஆகவே, அவர்கள் தங்கள் சந்தேகத்திலேயே சிக்கித் தடுமாறுகின்றனர்.
IFT
எவர்கள் அல்லாஹ்வின் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொள்வதில்லையோ, மேலும் தங்களுடைய உள்ளங்களில் சந்தேகம் கொண்டிருக்கின்றார்களோ, மேலும், அந்த சந்தேகத்திலேயே தடுமாறிக் கொண்டிருக்கின்றார்களோ அவர்கள்தாம் இத்தகைய கோரிக்கைகளை உம்மிடம் சமர்ப்பிக்கின்றனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(போருக்குச் செல்லாமலிருக்க) உம்மிடம் அனுமதி கேட்பதெல்லாம் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் விசுவாசங்கொள்ளாதவர்கள்தாம், இன்னும், அவர்களுடைய இதயங்கள் சந்தேகத்தில் ஆழ்ந்து விட்டன, ஆகவே, அவர்கள் தங்கள் சந்தேகத்திலேயே தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்
Saheeh International
Only those would ask permission of you who do not believe in Allah and the Last Day and whose hearts have doubted, and they, in their doubt, are hesitating.
அவர்கள் (போருக்குப்) புறப்பட நாடியிருந்தால், அதற்கு வேண்டிய தயாரிப்புகளைச் செய்திருப்பார்கள்; எனினும் அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து, அவர்கள் புறப்படாதவாறு தடை செய்துவிட்டான்; (போரில் கலந்து கொள்ள முடியாப் பெண்கள், முதியவர்களைப்போல்) “தங்குபவர்களுடன், நீங்களும் தங்கிவிடுங்கள்” என்று (அவர்களுக்கு) கூறப்பட்டது.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் (உங்களுடன் போருக்கு) புறப்பட (உண்மையாகவே) எண்ணியிருந்தால் அதற்கு வேண்டிய தயாரிப்புகளை (முன்னதாகவே) அவர்கள் செய்திருப்பார்கள். எனினும் (உங்களுடன்) அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து அவர்கள் புறப்படாது தடை செய்து விட்டான். ஆகவே, (முதியோர் சிறியோர் பெண்கள் போன்ற, போருக்கு வரமுடியாது வீட்டில்) தங்குபவர்களுடன் நீங்களும் தங்கி விடுங்கள் என்று (அவர்களுக்குக்) கூறப்பட்டு விட்டது.
IFT
மேலும், உண்மையிலேயே (ஜிஹாதுக்காகப்) புறப்பட அவர்கள் நாடியிருந்தால், அதற்கு வேண்டிய சில ஆயத்தங்களை அவர்கள் செய்திருப்பார்கள். ஆனால், அவர்கள் கிளம்புவதை அல்லாஹ் விரும்பவேயில்லை. எனவே, அவன் அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டான். ஆகவே, ‘தங்கியிருப்பவர்களோடு சேர்ந்து நீங்களும் தங்கி விடுங்கள்!’ என்று அவர்களுக்குக் கூறப்பட்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்கள் (போர் செய்யப்) புறப்படுவதை நாடியிருந்தார்களானால், அதற்கு வேண்டிய தயாரிப்புகளை அவர்கள் செய்திருப்பார்கள், எனினும் (உம்முடன்) அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து, அவர்களை (ப் புறப்படாது) தடுத்தும் விட்டான், “(யுத்தத்திற்கு வர முடியாது வீட்டில்) உட்கார்ந்திருப்போருடன் நீங்களும் உட்கார்ந்து விடுங்கள்” என்று (அவர்களுக்குக்), கூறப்பட்டுவிட்டது.
Saheeh International
And if they had intended to go forth, they would have prepared for it [some] preparation. But Allah disliked their being sent, so He kept them back, and they were told, "Remain [behind] with those who remain."
لَوْخَرَجُوْاஅவர்கள் வெளியேறி இருந்தால்فِيْكُمْஉங்களுடன்مَّا زَادُوْஅதிகப்படுத்தி இருக்க மாட்டார்கள்كُمْஉங்களுக்குاِلَّاதவிரخَبَالًاதீமையைوَّلَا۟اَوْضَعُوْاஇன்னும் விரைந்திருப்பார்கள்خِلٰلَـكُمْஉங்களுக்கிடையில்يَـبْغُوْنَـكُمُதேடுவார்கள்/உங்களுக்குالْفِتْنَةَ ۚகுழப்பத்தைوَفِيْكُمْஇன்னும் உங்களுடன்سَمّٰعُوْنَஒற்றர்கள்لَهُمْ ؕஅவர்களுக்குوَاللّٰهُஅல்லாஹ்عَلِيْمٌۢநன்கறிந்தவன்بِالظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களை
உங்களோடு அவர்கள் புறப்பட்டிருந்தால் குழப்பத்தைத் தவிர (வேறெதையும்) உங்களுக்கு அவர்கள் அதிகப்படுத்தியிருக்க மாட்டார்கள், மேலும் உங்களுக்கிடையே கோள்மூட்டி இருப்பார்கள். குழப்பத்தையும் உங்களுக்கு விரும்பியிருப்பார்கள். அவர்களின் (கூற்றை) செவியேற்பவர்களும் உங்களில் இருக்கிறார்கள்; அல்லாஹ் அநியாயக்காரர்களை அறிந்தவனாக இருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் உங்களுடன் வந்திருந்தால் ஒழுங்கீனத்தைத் தவிர (வேறு எதையும்) உங்களுக்கு அதிகரிக்கச் செய்திருக்க மாட்டார்கள். விஷமத்தைக் கருதி உங்கள் மத்தியில் அலங்கோலத்தையும் உண்டு பண்ணி இருப்பார்கள். அவர்களுடைய ஒற்றர்களும் உங்களுடன் இருக்கின்றனர். ஆனால், அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்காரர்களை நன்கறிந்தவன் ஆவான்.
IFT
அவர்கள் உங்களோடு வந்திருந்தால், வீண் குழப்பங்களைத் தவிர வேறு எதனையும் அவர்கள் உங்களிடையே அதிகப்படுத்தியிருக்க மாட்டார்கள். உங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக உங்களுக்கிடையே விஷமம் செய்துகொண்டு திரிந்திருப்பார்கள். ஆனால் (உங்களுடைய நிலை என்னவெனில்) இன்னும்கூட அவர்களுடைய வார்த்தைகளுக்குச் செவிசாய்ப்பவர் உங்களில் பலர் இருக்கின்றனர். அல்லாஹ் அக்கிரமக்காரர்களை நன்கறிபவனாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் உங்களுடன் புறப்பட்டிருந்தாலும் குழப்பத்தைத் தவிர (வேறெதையும்) உங்களுக்கு அவர்கள் அதிகப்படுத்தியிருக்க மாட்டார்கள், மேலும், உங்களுக்கு குழப்பத்தைத் தேடியவர்களாக இருக்கும் நிலையில் உங்களுக்கிடையே கோள்மூட்டியும் இருப்பார்கள், அவர்களுக்காக (உங்களின் விஷயங்களை) செவியேற்போரும் உங்களில் இருக்கிறார்கள், இன்னும், அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிகிறவன்.
Saheeh International
Had they gone forth with you, they would not have increased you except in confusion, and they would have been active among you, seeking [to cause] you fitnah [i.e., chaos and dissension]. And among you are avid listeners to them. And Allah is Knowing of the wrongdoers.
நிச்சயமாக இதற்கு முன்னரும் அவர்கள் குழப்பத்தை விரும்பியிருக்கிறார்கள். உமது காரியங்களை புரட்டியும் இருக்கிறார்கள். முடிவில் சத்தியம் வந்தது. அவர்கள் வெறுக்கக் கூடியவர்களாக உள்ள நிலையில் அல்லாஹ்வுடைய காரியம் (மார்க்கம்) மேலோங்கியது.
அப்துல் ஹமீது பாகவி
(உங்களுக்கு) வெற்றி கிடைக்கும் வரை இதற்கு முன்னரும் அவர்கள் விஷமம் செய்யக் கருதி உங்கள் காரியங்களை (தலைகீழாய்)ப் புரட்டிக்கொண்டே இருந்தனர். (உங்கள் வெற்றியை) அவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ்வுடைய கட்டளையே வெற்றியடைந்தது.
IFT
இதற்கு முன்னரும் அவர்கள் குழப்பம் செய்ய முயன்றிருக்கிறார்கள். மேலும், உம்மைத் தோல்வியுறச் செய்ய எல்லாவிதமான தில்லுமுல்லுகளையும் கையாண்டிருக்கிறார்கள். இறுதியில், அவர்கள் விரும்பாத நிலையிலும் சத்தியம் வந்தது; அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்கவே செய்தது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இதற்கு முன்னரும், திட்டமாக அவர்கள் குழப்பத்தையே தேடிக்கொண்டிருந்தார்கள், உம்முடைய காரியங்களையும் (தலைகீழாய்ப்) புரட்டிக் கொண்டே இருந்தனர், முடிவாக உண்மை வந்து விட்டது- மேலும், அவர்கள் வெறுக்கக்கூடியவர்களாக இருக்க அல்லாஹ்வின் காரியம் (மார்க்கம்) வெளிப்பட்டு (மேலோங்கி)விட்டது.
Saheeh International
They had already desired dissension before and had upset matters for you until the truth came and the ordinance [i.e., victory] of Allah appeared, while they were averse.
“(வீட்டிலேயே தங்கியிருக்க) எனக்கு அனுமதி தாருங்கள்; என்னை சோதனைக்கு உள்ளாக்காதீர்கள்” என்று சொல்வோரும் அவர்களிடையே இருக்கிறார்கள்; அவர்கள் சோதனையிலன்றோ வீழ்ந்துவிட்டார்கள். மேலும் நிச்சயமாக நரகம் காஃபிர்களை (எல்லாப் பக்கங்களிலிருந்தும்) சுற்றி வளைத்துக் கொள்ளும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! ‘‘போருக்கு அழைத்து) நீர் என்னைச் சோதனைக் குள்ளாக்காமலே (வீட்டில் நான் தங்கியிருக்க) எனக்கு அனுமதி தருவீராக'' என்று கோருபவர்களும் அவர்களில் சிலர் இருக்கின்றனர். (எனினும் இவ்வாறு கோரும்) அவர்கள் (கஷ்டமான பல) சோதனைகளிலேயே மூழ்கிக் கிடக்கவில்லையா? நிராகரிப்பவர்களை நிச்சயமாக நரகம் சூழ்ந்து கொண்டிருக்கிறது.
IFT
மேலும் (போருக்குச் செல்லாதிருக்க) “எனக்கு அனுமதி தாரும்; என்னைச் சோதனைக்குள்ளாக்காதீர்!” என்று கூறுவோரும் அவர்களில் இருக்கின்றனர். இதோ கேளுங்கள்; சோதனையிலேயே அவர்கள் வீழ்ந்து கிடக்கிறார்கள். மேலும் நரகம் இத்தகைய இறைநிராகரிப்பாளர்களைத் திண்ணமாக சூழ்ந்து கொண்டிருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! நான் வீட்டில் தங்கியிருக்க) “எனக்கு அனுமதி தாரும், நீர் என்னைச் சோதனைக்குள்ளாக்கியும் விடாதீர்” என்று கூறுவோரும் அவர்களில் (சிலர்) இருக்கின்றனர், (இவ்வாறு கூறும்) அவர்கள் சோதனையில் விழுந்து விட்டனர் என்பதை அறிந்து கொள்ளுங்கள், மேலும், நிச்சயமாக நரகம் நிராகரித்துக் கொண்டிருப்போரை சூழ்ந்து கொண்டிருக்கிறது.
Saheeh International
And among them is he who says, "Permit me [to remain at home] and do not put me to trial." Unquestionably, into trial they have fallen. And indeed, Hell will encompass the disbelievers.
இன் துஸிBப்க ஹஸனதுன் தஸு'ஹும்; வ இன் துஸிBப்க முஸீBபது(ன்)ய் யகூலூ கத் அகத்னா அம்ரனா மின் கBப்லு வ யதவல்லவ் வ ஹும் Fபரிஹூன்
முஹம்மது ஜான்
உமக்கு ஏதாவது ஒரு நன்மை ஏற்பட்டால், அது அவர்களுக்குத் துக்கத்தைத் தருகின்றது; உமக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால், அவர்கள் “நிச்சயமாக நாங்கள் எங்களுடைய காரியத்தில் முன்னரே எச்சரிக்கையாக இருந்து கொண்டோம்” என்று கூறிவிட்டு மிக்க மகிழ்ச்சியுடன் (உம்மை விட்டுச்) சென்று விடுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அவர்களுக்குத் துன்பத்தைத் தருகிறது. உமக்கு ஒரு தீங்கேற்பட்டாலோ ‘‘நிச்சயமாக நாங்கள் எங்கள் காரியத்தில் (உங்களைச் சம்பந்தப்படுத்தாது) ஏற்கனவே எச்சரிக்கையாய் இருந்து கொண்டோம்'' என்று கூறி மிக்க மகிழ்ச்சியுடன் உம்மை விட்டு) விலகிச் செல்கின்றனர்.
IFT
உமக்கு ஏதேனும் நன்மை கிடைத்தால், அது அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகின்றது. மேலும், உமக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் “நாங்கள் முன்னரே எங்கள் விஷயத்தில் எச்சரிக்கையாய் இருந்துகொண்டோம்” என்று கூறிக்கொண்டு மிகவும் மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்கின்றனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) உமக்கு யாதொரு நன்மை ஏற்படின் (அது) அவர்களுக்குத் துன்பத்தைத் தருகின்றது; உமக்கு யாதொரு துன்பம் ஏற்படின் “திட்டமாக (இதற்கு) முன்னரே எங்களுடைய காரியத்தை (உங்களை சம்பந்தப்படுத்தாது எச்சரிக்கையாக) நாங்கள் எடுத்துக் கொண்டோம்” என்று கூறி மிக்க மகிழ்ச்சியடைந்தவர்களாக (உம்மை விட்டுத்) திரும்பிச் சென்றும் விடுகின்றனர்.
Saheeh International
If good befalls you, it distresses them; but if disaster strikes you, they say, "We took our matter [in hand] before," and turn away while they are rejoicing.
“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே, நபியே! அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் நிச்சயமாக எங்களை அணுகாது. அவன் தான் எங்கள் இறைவன்'' என்று நீர் கூறுவீராக. நம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைக்கவும்.
IFT
நீர் அவர்களிடம் கூறுவீராக: “(நன்மையோ, தீமையோ) அல்லாஹ் எங்களுக்காக விதித்து வைத்திருப்பவற்றைத் தவிர எதுவும் எங்களை அடையாது. அவன்தான் எங்களின் பாதுகாவலன். மேலும், நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே முழுமை யாய்ச் சார்ந்திருக்க வேண்டும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே நபியே! அவர்களிடம்) “அல்லாஹ் எங்களுக்கு விதித்துள்ளதைத் தவிர (வேறொன்றும்) நிச்சயமாக எங்களை அணுகவே செய்யாது, அவன் (தான்) எங்களுடைய பாதுகாவலன்” என்று நீர் கூறுவீராக! அல்லாஹ்வின் மீதே விசுவாசிகள் (தங்களுடைய காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைக்கவும்.
Saheeh International
Say, "Never will we be struck except by what Allah has decreed for us; He is our protector." And upon Allah let the believers rely.
(நபியே!) நீர் கூறுவீராக: ”(வெற்றி அல்லது வீர மரணம் ஆகிய) இரு அழகிய நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதையும் நீங்கள் எங்களுக்காக எதிர்பார்க்க முடியுமா?” ஆனால் உங்களுக்கோ அல்லாஹ் தன்னிடத்திலிருந்தோ அல்லது எங்கள் கைகளினாலோ வேதனையை அளிப்பான் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம் - ஆகவே நீங்கள் எதிர்பார்த்திருங்கள், நாங்களும் உங்களோடு எதிர்பார்த்திருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: (வெற்றி அல்லது சொர்க்கம் ஆகிய) மிகச் சிறந்த இவ்விரண்டு நன்மைகளில் ஒன்றைத்தவிர (வேறெந்தத் தீங்கையும்) நீங்கள் எங்களுக்கு எதிர்பார்க்க முடியுமா? (ஆகவே, இந்த இரண்டில் எது கிடைத்த போதிலும் எங்களுக்கு நன்மையே ஆகும்.) எனினும், உங்களுக்கோ அல்லாஹ் தன் வேதனையைக் கொண்டோ அல்லது எங்கள் கைகளைக் கொண்டோ உங்களுக்குக் கஷ்டம் உண்டாக்குவதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆகவே, நீங்கள் (எங்களுக்கு வரவேண்டியதை) எதிர்பார்த்திருங்கள்; நாங்களும் (உங்களுக்கு வரவேண்டியதை) உங்களுடன் எதிர்பார்க்கிறோம்.
IFT
அவர்களிடம் கூறும்: “எங்கள் விஷயத்தில் இரு நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதனை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்? ஆனால், நாங்கள் உங்கள் விஷயத்தில் எதிர்பார்ப்பது, அல்லாஹ்வே உங்களுக்குத் தண்டனை கொடுக்கின்றானா? அல்லது எங்கள் கைகளின் மூலம் கொடுக்க வைக்கின்றானா என்பதைத்தான்! ஆக, நீங்களும் எதிர்பார்த்திருங்கள்! நாங்களும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக! (வெற்றி அல்லது வீர மரணம் ஆகிய) இரு அழகிய நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதையும் நீங்கள் எங்களுக்காக எதிர்பார்க்கின்றீர்களா? ஆனால் அல்லாஹ் தன்னிடத்திலிருந்தோ, அல்லது எங்கள் கைகளைக் கொண்டோ உங்களுக்கு வேதனையை ஏற்படுத்துவதை உங்களுக்காக நாங்கள் எதிர்பார்க்கின்றோம், (ஆகவே) நீங்கள் (எங்களுக்கு வரவேண்டியதை) எதிர்பாருங்கள், நிச்சயமாக நாங்கள் (உங்களுக்கு வர வேண்டியதை) உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
Saheeh International
Say, "Do you await for us except one of the two best things [i.e., martyrdom or victory] while we await for you that Allah will afflict you with punishment from Himself or at our hands? So wait; indeed we, along with you, are waiting."
(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் விருப்புடனோ, அல்லது வெறுப்புடனோ (தர்மத்திற்குச்) செலவு செய்தாலும் அது உங்களிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது - ஏனெனில் நிச்சயமாக நீங்கள் பாவம் செய்யும் கூட்டத்தாராகவே இருக்கின்றீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘நீங்கள் விருப்பத்துடனோ அல்லது வெறுப்புடனோ (எதைத்) தானம் செய்த போதிலும் (அது) உங்களிடமிருந்து அங்கீகரிக்கப்படவே மாட்டாது. ஏனென்றால், நிச்சயமாக நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்'' என்றும் (நபியே!) நீர் கூறிவிடுவீராக.
IFT
அவர்களிடம் நீர் கூறும்: “நீங்கள் (உங்கள் பொருளை) விருப்புடனோ, வெறுப்புடனோ எவ்வாறேனும் செலவு செய்யுங்கள்; ஆனால், அது உங்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஏனென்றால், திண்ணமாக நீங்கள் பாவம் செய்யும் சமூகத்தினராய் இருக்கின்றீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீங்கள் விருப்பத்துடனோ அல்லது வெறுப்புடனோ (தர்மமாகச்) செலவு செய்யுங்கள், (அது) உங்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படவே மாட்டாது, (ஏனென்றால்,) நிச்சயமாக நீங்கள் பாவம் செய்யும் கூட்டத்தினர்களாகவே இருக்கின்றீர்கள்” என்றும் (நபியே!) நீர் கூறிவிடும்.
Saheeh International
Say, "Spend willingly or unwillingly; never will it be accepted from you. Indeed, you have been a defiantly disobedient people."
அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் செய்யும் தானம் அங்கீகரிக்கப்பட மாட்டாது என்று (இறைவன்) தடுத்திருப்பதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்ததுதான். மேலும், அவர்கள் மிகச் சடைந்தவர்களாகவே தவிர தொழுவதில்லை; வெறுப்புடனே தவிர அவர்கள் தானம் செய்வதுமில்லை.
IFT
அவர்கள் செலவு செய்த பொருள்கள் அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படாததற்குக் காரணம், அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும், தொழுகைக்கு வரும்போது சோம்பல் பட்டவர்களாகவே வருகின்றார்கள். இறைவழியில் செலவழிக்கும்போதும் மனமில்லாமலேயே செலவழிக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுடைய (தர்மச்)செலவுகள் (அல்லாஹ்வினால்) அங்கீகரிக்கப்படுவதை அவர்களுக்குத் தடுத்தது, நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நிராகரித்து விட்டார்கள் என்பதற்காக அல்லாமல் (வேறு) இல்லை, மேலும், அவர்கள் சோம்பேறிகளாகவேயன்றி தொழுகைக்கு வருவதில்லை, வெறுப்படைந்தவர்களாகவே தவிர அவர்கள் (தர்மச்) செலவுகள் செய்வதுமில்லை.
Saheeh International
And what prevents their expenditures from being accepted from them but that they have disbelieved in Allah and in His Messenger and that they come not to prayer except while they are lazy and that they do not spend except while they are unwilling.
فَلَاவேண்டாம்تُعْجِبْكَஉம்மை ஆச்சரியப்படுத்தاَمْوَالُهُمْசெல்வங்கள்/அவர்களுடையوَلَاۤ اَوْلَادُஇன்னும் பிள்ளைகள்هُمْؕஅவர்களுடையاِنَّمَاஎல்லாம்يُرِيْدُநாடுவான்اللّٰهُஅல்லாஹ்لِيُعَذِّبَهُمْவேதனை செய்வதை/அவர்களைبِهَاஅவற்றின் மூலம்فِى الْحَيٰوةِவாழ்க்கையில்الدُّنْيَاஉலகம்وَتَزْهَقَஇன்னும் பிரிந்து சென்று விடுவதை, அழிந்து விடுவதைاَنْفُسُهُمْஅவர்களுடைய உயிர்கள்وَهُمْஅவர்கள் இருக்கكٰفِرُوْنَநிராகரிப்பவர்களாக
அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய மக்கள் (பெருக்கமும்) உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; அல்லாஹ் அவற்றைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையிலேயே அவர்களை வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கிற நிலையில் அவர்களுடைய உயிர்கள் பிரிவதையும் நாடுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய மக்களும் (பெருகியிருப்பது) உங்களை ஆச்சரியப்படுத்த வேண்டாம். அல்லாஹ் (அவற்றை அவர்களுக்குக் கொடுத்து) அவற்றைக் கொண்டு அவர்களை இவ்வுலக வாழ்விலேயே வேதனை செய்ய நிச்சயமாக நாடுகிறான். இன்னும், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கும் நிலைமையில் அவர்களுடைய உயிர் போவதையும் நாடுகிறான்.
IFT
அவர்களிடமுள்ள செல்வங்களும், அவர்களின் மக்களும் உம்மை வியப்பில் ஆழ்த்திட வேண்டாம்! அல்லாஹ்வோ இவற்றின் மூலம் உலக வாழ்க்கையில் அவர்களை வேதனையில் ஆழ்த்திட வேண்டும் என்றும், சத்தியத்தை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவர்களின் உயிர்கள் பிரிய வேண்டும் என்றும்தான் நாடுகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (நபியே!) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய மக்களும் (பெருகியிருப்பது) உம்மை வியப்படையச் செய்ய வேண்டாம், அல்லாஹ் நாடுவதெல்லாம் அவைகளைக் கொண்டு அவர்களை இவ்வுலக வாழ்விலேயே வேதனை செய்யவும், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கும் நிலைமையில் அவர்களுடைய உயிர்கள் பிரிவதையும்தான்.
Saheeh International
So let not their wealth or their children impress you. Allah only intends to punish them through them in worldly life and that their souls should depart [at death] while they are disbelievers.
நிச்சயமாகத் தாங்களும் உங்களைச் சார்ந்தவர்களே என்று அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்து சொல்கின்றனர்; அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் அல்லர்;என்றாலும் அவர்கள் பயந்த கூட்டத்தினர்தான்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘நிச்சயமாக நாங்களும் உங்களைச் சார்ந்தவர்கள்தான்'' என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். எனினும், அவர்கள் உங்களைச் சார்ந்தவர்களல்ல. அவர்கள் (தங்கள் உண்மைக் கோலத்தை வெளிப்படுத்த அஞ்சும்) கோழைகள்.
IFT
மேலும், “நாங்கள் உங்களைச் சார்ந்தவர்கள்தாம்” என்று அல்லாஹ்வின் மீது மீண்டும் மீண்டும் சத்தியம் செய்து அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால், ஒருபோதும் அவர்கள் உங்களைச் சார்ந்தவர்களல்லர். உண்மையில், அவர்கள் (உங்களைக் கண்டு) அஞ்சுகின்ற மக்களாவர்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள்தாம்” என்று அவர்கள் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியமும் செய்கின்றனர்; அவர்களோ உங்களைச் சார்ந்தவர்களன்று, எனினும் அவர்கள் பயந்த கூட்டத்தவராவர்.
Saheeh International
And they swear by Allah that they are from among you while they are not from among you; but they are a people who are afraid.
ஓர் ஒதுங்கும் இடத்தையோ, அல்லது குகைகளையோ, அல்லது ஒரு சுரங்கத்தையோ அவர்கள் காண்பார்களாயின் (உம்மை விட்டு) அதன் பக்கம் விரைந்து ஓடிவிடுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
தப்பித்துக்கொள்ளக்கூடிய ஓர் இடத்தை அல்லது (மலைக்) குகைகளை அல்லது ஒரு சுரங்கத்தை அவர்கள் காண்பார்களேயானால் (உங்களிடமிருந்து விலகி) அவற்றின் பக்கம் அல்லோலமாக விரைந்து ஓடுவார்கள்.
IFT
ஏதேனும் ஒரு தஞ்சம் புகும் இடத்தையோ, குகையையோ, நுழைவிடத்தையோ அவர்கள் காண்பார்களானால் அங்கே விரைந்து ஓடி ஒளிந்து கொள்வார்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(தப்பித்துக்கொள்ள) ஓர் ஒதுங்குமிடத்தையோ அல்லது, (மலைக்)குகைகளையோ அல்லது ஒரு சுரங்கத்தையோ அவர்கள் காண்பார்களேயானால், (உம்மிடமிருந்து விலகி) விரைந்தோடிய நிலையில் அவற்றின் பக்கம் அவர்கள் ஒதுங்கிவிடுவார்கள்.
Saheeh International
If they could find a refuge or some caves or any place to enter [and hide], they would turn to it while they run heedlessly.
(நபியே!) தானங்கள் விஷயத்தில் (பாரபட்சம் உடையவர்) என்று உம்மைக் குறை கூறுபவரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆனால் அவற்றிலிருந்து அவர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்கப்பட்டால் திருப்தியடைகின்றார்கள் - அப்படி அவற்றிலிருந்து கொடுக்கப்படவில்லையானால், அவர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் தானங்களைப் பங்கிடுவதில் பாரபட்சமுடையவர் என்று உம்மைக் குறை கூறுபவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். (அவர்கள் விருப்பப்படி) அதிலிருந்து அவர்களுக்குக் கொடுக்கப்பட்டால் அவர்கள் திருப்தியடைகின்றனர். அதிலிருந்து (அவர்கள் விருப்பப்படி) கொடுக்கப்படாவிட்டாலோ ஆத்திரம் கொள்கின்றனர்.
IFT
மேலும், (நபியே!) அவர்களில் சிலர், தானதர்மங்களைப் பங்கிடும் விஷயத்தில் உம்மைக் குறைகூறுகிறார்கள். அவற்றிலிருந்து அவர்களுக்குச் சிறிது கொடுக்கப்பட்டால் மனநிறைவு கொள்கின்றார்கள். அவற்றிலிருந்து அவர்களுக்கு கொடுக்கப்படவில்லையானால், அவர்கள் கோபம் அடைகிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! நீர்) தர்ம(ங்களை பங்கீடு செய்யும் விஷயங்)களில் உம்மைக் குறை கூறுவோரும் அவர்களில் (சிலர்) இருக்கின்றனர், ஆகவே, அதிலிருந்து அவர்களுக்குக் கொடுக்கப்பட்டால் அவர்கள் திருப்தியடைகின்றனர், அதிலிருந்து அவர்களுக்கு கொடுக்கப்படாவிட்டாலோ அப்பொழுது ஆத்திரமடைகின்றனர்.
Saheeh International
And among them are some who criticize you concerning the [distribution of] charities. If they are given from them, they approve; but if they are not given from them, at once they become angry.
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததைக் கொண்டு திருப்தியடைந்து, “அல்லாஹ் நமக்குப் போதுமானவன்! அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவன் அருட்கொடையிலிருந்து நமக்கு மேலும் அளிப்பார்கள்; நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே விரும்பக்கூடியவர்கள்” என்று கூறியிருப்பார்களானால் (அது அவர்களுக்கு நன்மையாக இருக்கும்).
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததைப் பற்றி திருப்தியடைந்து, ‘‘அல்லாஹ் நமக்குப் போதுமானவன்; அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் இன்னும் நமக்கு அருள்புரியக் கூடும்; நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே நம்பியிருக்கிறோம்'' என்று அவர்கள் கூற வேண்டாமா?
IFT
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு அவர்கள் மனநிறைவு கொண்டு “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்; அல்லாஹ் தன்னுடைய அருட்கொடையிலிருந்து எங்களுக்கு இன்னும் அதிகம் வழங்குவான். அவனுடைய தூதரும் எங்களுக்கு வழங்குவார்கள். அல்லாஹ்விடமே நாங்கள் ஆவல் கொண்டிருக்கின்றோம்” என்று கூறியிருந்தார்களேயானால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்கு கொடுத்ததைக் கொண்டு திருப்தியடைந்து, அல்லாஹ் நமக்குப் போதுமானவன், அல்லாஹ் தன் பேரருளிலிருந்தும், அவனுடைய தூதரும் (போர்க்களத்தில் கிடைத்த, வெற்றிப் பொருட்களிலிருந்து) கொடுப்பார்கள், நிச்சயமாக அல்லாஹ்வின்பாலே (அவனிடமிருப்பதையே) நாங்கள் ஆசை கொண்டவர்கள்” என்றும் நிச்சயமாக அவர்கள் கூறியிருப்பார்களேயானால் (அது அவர்களுக்கு நலமாக இருந்திருக்கும்.)
Saheeh International
If only they had been satisfied with what Allah and His Messenger gave them and said, "Sufficient for us is Allah; Allah will give us of His bounty, and [so will] His Messenger; indeed, we are desirous toward Allah," [it would have been better for them].
(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.
அப்துல் ஹமீது பாகவி
(‘ஜகாத்து' மார்க்கவரியாகிய) தானமெல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்பவர்களுக்கும், புதிதாக இஸ்லாமைத் தழுவியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்வதற்கும், வழிப்போக்கர்களுக்கும் (உரித்தானதாக) அல்லாஹ் ஏற்படுத்திய கட்டாய கடமையாகும். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்.
IFT
இந்த தானதர்மங்களெல்லாம் ஏழைகள், வறியவர்கள், இந்த தானதர்மங்களை வசூலிக்கவும் பங்கிடவும் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டியவர்கள் ஆகியோருக்கும், பிடரிகளை விடுவிப்பதற்கும், கடனாளிகளுக்கும் மற்றும் இறைவழியில் செலவு செய்வதற்கும், பயணிகளுக்கும் உரியனவாகும். இது அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட கடமையாகும்! மேலும் அல்லாஹ் யாவற்றையும் அறிந்தோனும் நுண்ணறிவாளனுமாயிருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தர்மங்களெல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதற்காக (வசூல் செய்வது, கணக்கிடுவது போன்ற வேலைகளில்) உழைப்பவர்களுக்கும், (புதிதாக இஸ்லாத்தை தழுவியோரில்) எவர்களின் இதயங்கள் அன்பு செலுத்தப்பட வேண்டுமோ அத்தகையோருக்கும், இன்னும் (அடிமைகளின்) பிடரிகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் செலவழிப்பதிலும், வழிப்போக்கருக்கும் உரித்தானதாகும், (இது) அல்லாஹ் ஏற்படுத்திய கடமையாகும், மேலும், அல்லாஹ் நன்கறிகிறவன். தீர்க்கமான அறிவுடையவன்.
Saheeh International
Zakah expenditures are only for the poor and for the needy and for those employed for it and for bringing hearts together [for Islam] and for freeing captives [or slaves] and for those in debt and for the cause of Allah and for the [stranded] traveler - an obligation [imposed] by Allah. And Allah is Knowing and Wise.
(இந்த நபியிடம் யார் எதைச் சொன்னாலும்) அவர் கேட்டுக் கொள்பவராகவே இருக்கிறார் எனக்கூறி நபியைத் துன்புறுத்துவோரும் அவர்களில் இருக்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்: “(நபி அவ்வாறு) செவியேற்பது உங்களுக்கே நன்மையாகும். அவர் அல்லாஹ்வை நம்புகிறார்; முஃமின்களையும் நம்புகிறார்; அன்றியும் உங்களில் ஈமான் கொண்டவர்கள் மீது அவர் கருணையுடையோராகவும் இருக்கின்றார்;” எனவே எவர்கள் அல்லாஹ்வின் தூதரை துன்புறுத்துகிறார்களோ, அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
(‘‘இந்த நபியிடம் எவர் எதைக் கூறியபோதிலும் அதற்குச்) செவி கொடுக்கக் கூடியவராக அவர் இருக்கிறார்'' என்று கூறி (நம்) நபியைத் துன்புறுத்துபவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். அதற்கு (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘(அவ்வாறு அவர்) நன்மைக்கு செவி கொடுப்பது உங்களுக்கே நன்று. அவர் அல்லாஹ்வையும் நம்புகிறார்; நம்பிக்கையாளர்களையும் நம்புகிறார். இன்னும், உங்களில் நம்பிக்கை கொண்டவர்கள் மீது மிகக் கருணை உடையவராகவும் இருக்கிறார்.'' ஆகவே, (உங்களில்) எவர்கள் (இவ்வாறு கூறி) அல்லாஹ்வுடைய தூதரைத் துன்புறுத்துகிறார்களோ அவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு.
IFT
மேலும், நபிக்கு மனவேதனை அளிக்(கும் முறையில் பேசு)கின்ற சிலரும் அவர்களில் இருக்கின்றனர். அவர்கள் கூறுகின்றார்கள்: “இவர் தம்முடைய காதில் விழுவதையெல்லாம் நம்புகிறார்!” நீர் கூறும்: “உங்களுக்கு நன்மை அளிப்பவற்றைத் தான் செவியேற்கிறார். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றார். மேலும் நம்பிக்கையாளர்களை நம்புகின்றார். உங்களில் யார் நம்பிக்கையாளர்களாய் விளங்குகின்றார்களோ அவர்களுக்கு முற்றிலும் அருட்கொடையாயும் இருக்கிறார். ஆனால், எவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு நோவினை தருகின்றார்களோ அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(வேஷதாரிகளான) அவர்களில் நபியைத் துன்புறுத்துவோரும் இருக்கின்றனர், “அவர் (எதைக் கூறியபோதிலும் அதைக்கேட்டு உண்மைப்படுத்தும்) செவி” என்றும் அவர்கள் கூறுகின்றனர், (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக! (அவர்) “உங்களுக்கு நன்மையின் செவியாக இருக்கிறார்; அவர் அல்லாஹ்வை ஈமான் கொள்கிறார், விசுவாசிகளையும் உண்மைப்படுத்துகிறார்; அன்றியும் உங்களில் விசுவாசங்கொண்டோருக்கு அருளாகவும் ஆவார், (ஆகவே) அல்லாஹ்வுடைய (அந்தத்) தூதரைத் துன்புறுத்துகிறார்களே அத்தகையோர் அவர்களுக்கு, துன்புறுத்தும் வேதனையுண்டு.
Saheeh International
And among them are those who abuse the Prophet and say, "He is an ear." Say, "[It is] an ear of goodness for you that believes in Allah and believes the believers and [is] a mercy to those who believe among you." And those who abuse the Messenger of Allah - for them is a painful punishment.
(முஃமின்களே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களிடத்தில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப் படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய ரஸூலும் தான்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்கள் முன்னிலையில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். அவர்கள் மெய்யாகவே நம்பிக்கையாளர்களாயிருந்தால், அவர்கள் திருப்திப்படுத்த அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான் மிகவும் தகுதியுடையவர்கள் (என்பதை அறிந்துகொள்வர்).
IFT
அவர்கள் உங்களைத் திருப்தியுறச் செய்வதற்காக உங்களிடம் அல்லாஹ்வின் பெயர் கூறி சத்தியம் செய்கின்றார்கள். உண்மையில் அவர்கள் நம்பிக்கையாளர்களாய் இருந்தால், அவர்கள் திருப்தியுறச் செய்வதற்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே மிகவும் தகுதியானவர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களுக்காக அவர்கள் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்கின்றனர், அவர்கள் விசுவாசிகளாயிருந்தால் அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே-அவர்களை அவர்கள் திருப்திப்படுத்துவதற்கு – மிகத் தகுதியுடையோர் என்பதை அறிந்திருப்பார்கள்.
Saheeh International
They swear by Allah to you [Muslims] to satisfy you. But Allah and His Messenger are more worthy for them to satisfy, if they were to be believers.
எவர் அல்லாஹ்வுக்கும் அவனது ரஸூலுக்கும் விரோதம் செய்கின்றாரோ நிச்சயமாக அவருக்குத்தான் நரக நெருப்பு இருக்கிறது என்பதை அவர் அறிந்து கொள்ளவில்லையா? அவர் அதில் என்றென்றும் தங்கியிருப்பார் - இது பெரும் இழிவாகும்.
அப்துல் ஹமீது பாகவி
எவன் உண்மையாகவே அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறானோ அவனுக்கு நிச்சயமாக நரகத்தின் நெருப்புதான் கிடைக்கும். அதில் அவன் (என்றென்றும்) தங்கிவிடுவான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வில்லையா? இதுதான் மகத்தான இழிவாகும்.
IFT
எவன் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் பகைக்கின்றானோ அவனுக்குத் திண்ணமாக நரக நெருப்பு இருக்கிறது! அதில் அவன் என்றென்றும் வீழ்ந்து கிடப்பான்! இது மாபெரும் இழிவாகும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றாரோ அப்பொழுது, நிச்சயமாக அவருக்குத்தான் நரக நெருப்பு இருக்கிறது, அதில் அவர் நிரந்தரமாக(த் தங்கி இருப்பவர் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ளவில்லையா? அது மாபெரிய இழிவாகும்.
Saheeh International
Do they not know that whoever opposes Allah and His Messenger - that for him is the fire of Hell, wherein he will abide eternally? That is the great disgrace.
முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பவற்றை அவர்களுக்கு உணர்த்திவிடக்கூடிய ஓர் அத்தியாயம் இறக்கி வைக்கப்படுமோ என அஞ்சுகிறார்கள் - (நபியே!) நீர் கூறும்: “ நீங்கள் பரிகாசம் செய்து கொண்டே இருங்கள். நீங்கள் அஞ்சிக் கொண்டிருப்பதை நிச்சயமாக அல்லாஹ் வெளிப்படுத்துபவனாகவே இருக்கின்றான்.”
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அத்தியாயம் அருளப்பட்டு அது தங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை வெளிப்படுத்திவிடுமோ என்று பயப்படுகி(ன்றவர்களைப் போல் நயவஞ்சகர்கள் நடித்து பரிகசிக்கின்)றனர். (நபியே! அவர்களை நோக்கி) நீர் கூறும்: ‘‘நீங்கள் பரிகசித்துக் கொண்டே இருங்கள். ஆயினும், நீங்கள் பயப்படுவதை நிச்சயமாக அல்லாஹ் வெளியாக்கியே தீருவான்.''
IFT
இறைநம்பிக்கையாளர்கள் மீது ஏதேனும் ஓர் அத்தியாயம் இறக்கியருளப்பட்டு, அது தம்முடைய உள்ளங்களில் உள்ளவற்றை அவர்களுக்கு வெளிப்படுத்திவிடுமோ என்று இந்நயவஞ்சகர்கள் அஞ்சுகிறார்கள். (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “நீங்கள் பரிகாசம் செய்து கொண்டே இருங்கள். எவை வெளிப்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ அவற்றை அல்லாஹ் வெளிப்படுத்தியே தீருவான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளாகிய) அவர்கள் மீது தங்கள் இதயங்களிலுள்ளவற்றை வெளிப்படுத்தி விடும் ஓர் அத்தியாயம் இறக்கிவைக்கப்படுவதை முனாஃபிக்குகள் (வேஷதாரிகள்) பயப்படுகின்றனர், (நபியே! அவர்களிடம்) நீர் கூறுவீராக! நீங்கள் பரிகாசம் செய்து கொண்டிருங்கள், நீங்கள் பயப்படுவதை(யே) நிச்சயமாக அல்லாஹ் வெளிப்படுத்தக் கூடியவன்.
Saheeh International
The hypocrites are apprehensive lest a sūrah be revealed about them, informing them of what is in their hearts. Say, "Mock [as you wish]; indeed, Allah will expose that which you fear."
(இதைப்பற்றி) நீர் அவர்களைக் கேட்டால், அவர்கள், “நாங்கள் வெறுமனே விவாதித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும்தான் இருந்தோம்” என்று நிச்சயமாகக் கூறுவார்கள். “அல்லாஹ்வையும், அவன் வசனங்களையும், அவன் தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டு இருந்தீர்கள்?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.
அப்துல் ஹமீது பாகவி
(இதைப் பற்றி) நீங்கள் அவர்களைக் கேட்பீராயின் ‘‘விளையாட்டுக்காக நாங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தோம்'' என்று அவர்கள் கூறுவார்கள். அதற்கு (நபியே! அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா நீங்கள் பரிகசிக்கிறீர்கள்?'' என்று நீர் கேட்பீராக.
IFT
(நீங்கள் என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று) அவர்களிடம் நீர் கேட்பீராயின் உடனே அவர்கள் கூறுவர்: “நாங்கள் நகைச்சுவையாகவும் விளையாட்டாகவும்தான் பேசிக்கொண்டிருந்தோம்.” அவர்களிடம் நீர் கூறும்: “அல்லாஹ்வையும் அவனுடைய வசனங்களையும் அவனுடைய தூதரையும்தான் நீங்கள் பரிகாசம் செய்து கொண்டிருக்க வேண்டுமா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இதனைப் பற்றி) நீர் அவர்களைக் கேட்பீராயின், “நாங்கள் (வீண்) பேச்சில் மூழ்கியும், விளையாடிக் கொண்டுமிருந்தோம்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள், (அதற்கு நபியே! அவர்களிடம்) “அல்லாஹ்வையும் அவனது வசனங்களையும் அவனது தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டிருந்தீர்கள்?” என்று நீர் கேட்பீராக!
Saheeh International
And if you ask them, they will surely say, "We were only conversing and playing." Say, "Is it Allah and His verses and His Messenger that you were mocking?"
லா தஃததிரூ கத் கFபர்தும் Bபஃத ஈமானிகும்; இன் னஃFபு 'அன் தா'இFபதின் மின்கும் னு'அத் திBப் தா'இFபதன் Bபி அன்னஹும் கானூ முஜ்ரிமீன்
முஹம்மது ஜான்
புகல் கூற வேண்டாம், நீங்கள் ஈமான் கொண்டபின் நிச்சயமாக நிராகரிப்போராய் விட்டீர்கள், நாம் உங்களில் ஒரு கூட்டத்தாரை மன்னித்தபோதிலும், மற்றொரு கூட்டத்தாரை அவர்கள் குற்றவாளிகளாகவே இருப்பதால் நாம் வேதனை செய்வோம்.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் (செய்யும் விஷமத்தனமான பரிகாசத்திற்கு) வீண் புகழ் கூற வேண்டாம். நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் நிச்சயமாக (அதை) நிராகரித்துவிட்டீர்கள். ஆகவே, உங்களில் ஒரு கூட்டத்தினரை நாம் மன்னித்த போதிலும் மற்றொரு கூட்டத்தினர் நிச்சயமாக குற்றவாளிகளாகவே இருப்பதனால், நாம் அவர்களை வேதனை செய்தே தீருவோம் (என்றும் நபியே! நீர் கூறுவீராக.)
IFT
உங்கள் தவறுகளை நீங்கள் நியாயப்படுத்த வேண்டாம். நீங்கள் இறைநம்பிக்கை கொண்டபின் திண்ணமாக நிராகரித்துவிட்டீர்கள். உங்களில் ஒரு கூட்டத்தாரை நாம் மன்னித்துவிட்டாலும் மற்றொரு கூட்டத்தாருக்கு நாம் தண்டனை வழங்கியே தீருவோம்! ஏனென்றால், அவர்கள் குற்றவாளிகளாகி விட்டனர்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீங்கள் (செய்யும் பரிகாசத்திற்கு வீண்) புகல் கூற வேண்டாம், உங்களின் விசுவாசத்திற்குப்பின்னர், திட்டமாக (அதனை) நீங்கள் நிராகரித்தே விட்டீர்கள், (ஆகவே) உங்களில் ஒரு கூட்டத்தினரை நாம் மன்னித்தபோதிலும், மற்றொரு கூட்டத்தினரை நிச்சயமாக அவர்கள் குற்றவாளிகளாகவே இருப்பதனால், நாம் வேதனை செய்வோம்” (என்று நபியே! நீர் கூறுவீராக!
Saheeh International
Make no excuse; you have disbelieved [i.e., rejected faith] after your belief. If We pardon one faction of you - We will punish another faction because they were criminals.
நயவஞ்சகர்களான ஆடவரும், நயவஞ்சகர்களான பெண்டிரும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பாவங்களை தூண்டி, நன்மைகளை விட்டும் தடுப்பார்கள். (அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல்) தம் கைகளை மூடிக் கொள்வார்கள்; அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆகவே அவன் அவர்களை மறந்து விட்டான் - நிச்சயமாக நயவஞ்சகர்கள் பாவிகளே ஆவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆணாயினும் பெண்ணாயினும் நயவஞ்சகர்கள் அனைவரும் ஒரே இனத்தவரே! அவர்கள் (அனைவருமே) பாவமான காரியங்களைச் செய்யும்படித் தூண்டுவார்கள்; நன்மையான காரியங்களைத் தடை செய்வார்கள். (செலவு செய்ய அவசியமான சமயங்களில்) தங்கள் கைகளை மூடிக்கொள்வார்கள். அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆதலால், அல்லாஹ்வும் அவர்களை மறந்து விட்டான். நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் தான் (சதி செய்யும்) கொடிய பாவிகள்.
IFT
நயவஞ்சக ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒரேவித மானவர்கள்தாம்! அவர்கள் தீமை புரியுமாறு ஏவுகிறார்கள்; நன்மையை விட்டுத் தடுக்கிறார்கள். மேலும், தங்களுடைய கைகளை (நன்மையானவற்றை விட்டு) முடக்கிக் கொள்கின்றார்கள். அவர்கள் அல்லாஹ்வை மறந்ததனால் அல்லாஹ்வும் அவர்களை மறந்தான்! திண்ணமாக, இந்நயவஞ்சகர்கள் தீயவர்கள்தாம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
முனாஃபிக்குகளான (வேஷதாரிகளான) ஆடவர்களும் முனாஃபிக்குகளான பெண்களும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள் (-ஒத்த செயல்களையுடையவர்கள்,) அவர்கள் பாவமான காரியத்தை(ச் செய்யுமாறு பிறரை) ஏவுவார்கள், நன்மையை (ச் செய்வதை) விட்டும் (பிறறைத்) தடுப்பார்கள், (அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாது) தங்கள் கைகளை இறுக்கி (மூடி)யும் கொள்வார்கள், இவர்கள் அல்லாஹ்வை மறந்தும் விட்டார்கள், ஆதலால், அவன் இவர்களை மறந்துவிட்டான், நிச்சயமாக இந்த முனாஃபிக்குகள் -அவர்கள் பாவிகள்.
Saheeh International
The hypocrite men and hypocrite women are of one another. They enjoin what is wrong and forbid what is right and close their hands. They have forgotten Allah, so He has forgotten them [accordingly]. Indeed, the hypocrites - it is they who are the defiantly disobedient.
நயவஞ்சகர்களான ஆடவருக்கும், நயவஞ்சகர்களான பெண்டிருக்கும், காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான்; அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள்; அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும்; இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் - அவர்களுக்கு நிரந்தரமான வேதனையுமுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
நயவஞ்சகரான ஆண்களுக்கும் பெண்களுக்கும் (அவ்வாறே மற்ற) நிராகரிப்பவர்களுக்கும் நரக நெருப்பையே அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். அதுவே அவர்களுக்குப் போதுமா(ன கூலியா)கும். இன்னும், அல்லாஹ் அவர்களை சபித்தும் இருக்கிறான். மேலும், அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு.
IFT
இந்நயவஞ்சக ஆண்களுக்கும், பெண்களுக்கும் மற்றும் நிராகரிப்பாளர்களுக்கும் நரக நெருப்பு உண்டென்று அல்லாஹ் எச்சரிக்கை செய்திருக்கின்றான். அதில் அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்! அதுவே அவர்களுக்குப் பொருத்தமான இடமாகும். மேலும், அவர்கள்மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படும். அவர்களுக்கு நிலையான வேதனையும் இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
முனாஃபிக்குகளான (வேஷதாரிகளான) ஆடவர்களும் முனாஃபிக்குகளான பெண்களும் (அவ்வாறே மற்ற) நிராகரிப்போருக்கும் நரக நெருப்பையே அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். அதில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கி இருப்பார்கள், அல்லாஹ் அவர்களைச் சபித்துவிட்டான், அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு.
Saheeh International
Allah has promised the hypocrite men and hypocrite women and the disbelievers the fire of Hell, wherein they will abide eternally. It is sufficient for them. And Allah has cursed them, and for them is an enduring punishment.
(முனாஃபிக்குகளே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது; அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும், மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள்; (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள்; உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக்கிடந்தவாறே நீங்களும் மூழ்கி விட்டீர்கள்; இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன - அவர்கள்தான் நஷ்டவாளிகள்.
அப்துல் ஹமீது பாகவி
(நயவஞ்சகர்களே! உங்கள் நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது. அவர்கள் உங்களைவிட பலசாலிகளாகவும், (உங்களை விட) அதிக பொருளுடையவர்களாகவும், அதிக சந்ததியுடையவர்களாகவும் இருந்து (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த இப்பாக்கியங்களைக் கொண்டு சுகமடைந்தார்கள். உங்களுக்கு முன்னிருந்த இவர்கள் தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக்கொண்டு (இவ்வுலகில்) சுகமடைந்தவாறே, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு சுகமடைந்து விட்டீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக் கிடந்தவாறே நீங்களும் மூழ்கிவிட்டீர்கள். இம்மையிலும் மறுமையிலும் அவர்களுடைய (நற்)செயல்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. (அதனால்) அவர்கள் பெரும் நஷ்டமடைந்து விட்டார்கள். (அவ்வாறே நீங்களும் நஷ்டமடைவீர்கள்.)
IFT
உங்களுக்கு முன்னிருந்தவர்களைப் போன்றே நீங்களும் நடந்து கொள்கின்றீர்கள். அவர்கள் உங்களைவிடவும் அதிக ஆற்றல் பெற்றவர்களாயும், அதிகப் பொருள்களும் வழித்தோன்றல்களும் உடையவர்களாயும் இருந்தனர். உலகில் தமக்குரிய பங்கினை அவர்கள் அனுபவித்தார்கள். உங்களுக்கு முன் சென்றவர்கள், தமக்குரிய பங்கினை அனுபவித்தது போன்று நீங்கள் உங்களுக்குரிய பங்கினை அனுபவித்து விட்டீர்கள்! மேலும், வீண்வாதங்களில் ஈடுபட்டிருந்த அவர்களைப் போன்று நீங்களும் ஈடுபட்டீர்கள். (இறுதியில் அவர்களுக்கு என்ன கதி ஏற்பட்டதென்றால்) அவர்கள் செய்த எல்லாச் செயல்களும் இம்மையிலும், மறுமையிலும் வீணாகிவிட்டன. மேலும், அத்தகையவர்களே இழப்புக்குரியவர்களாவர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(முனாஃபிக்குகளே! நீங்கள்) உங்களுக்கு முன்னிருந்தவர்களைப் போன்றிருக்கிறீர்கள், அவர்கள் பலத்தால் உங்களைவிட மிகக் கடினமானவர்களாவும், செல்வங்களாலும், மக்களாலும் மிக அதிகமானவர்களாகவும் இருந்தார்கள், ஆகவே, (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பங்கைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள், உங்களுக்கு முன்னிருந்த அவர்கள் தங்களுக்குக் கிடைத்த பங்கைக் கொண்டு (இவ்வுலகில்) சுகமடைந்தவாறே, நீங்களும் உங்களுக்கு கிடைத்த பங்கைக் கொண்டு சுகமடைந்து விட்டீர்கள், அவர்கள் (இவ்வுலக வாழ்வில்) மூழ்கிக்கிடந்தவாறே நீங்களும் மூழ்கிவிட்டீர்கள், அத்தகையோர்-அவர்களுடைய (நற்) செயல்கள் யாவும் இம்மையிலும், மறுமையிலும் அழிந்துவிட்டன, மேலும், அவர்கள் தாம் நஷ்டமடைந்தவர்கள்.
Saheeh International
[You disbelievers are] like those before you; they were stronger than you in power and more abundant in wealth and children. They enjoyed their portion [of worldly enjoyment], and you have enjoyed your portion as those before you enjoyed their portion, and you have engaged [in vanities] like that in which they engaged. [It is] those whose deeds have become worthless in this world and in the Hereafter, and it is they who are the losers.
இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய சமுதாயம், ஆது, ஸமூதுடைய சமுதாயம் இப்ராஹீம் உடைய சமுதாயம் மத்யன் வாசிகள் தலைகீழாய்ப் புரண்டுபோன ஊரார் ஆகியவர்களின் வரலாறு அவர்களிடம் வரவில்லையா? அவர்களுக்கு (நாம் அனுப்பிய) அவர்களுக்குரிய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளை கொண்டு வந்தார்கள்; (தூதர்களை நிராகரித்ததினால் அவர்கள் அழிந்தனர்.) அல்லாஹ் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை; எனினும் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களுக்கு முன்னிருந்த நூஹ் (நபி) உடைய மக்களின் சரித்திரமும், ஆத், ஸமூத் (என்பவர்களின்) சரித்திரமும், இப்றாஹீம் (நபி) உடைய மக்களின் சரித்திரமும், மத்யன் (என்னும்) ஊராரின் சரித்திரமும், தலைகீழாகப் புரண்டுபோன ஊர்களின் சரித்திரங்களும் அவர்களுக்குக் கிடைக்கவில்லையா? (நம்மால் அனுப்பப்பட்ட) அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைத்தான் அவர்களிடம் கொண்டு வந்தார்கள். (அவ்வாறிருந்தும் அந்த தூதர்களை அவர்கள் நிராகரித்ததன் காரணமாக அவர்கள் அனைவரும் அழிந்துவிட்டனர். இதில்) அல்லாஹ் அவர்களுக்கு (ஒரு) தீங்கும் இழைத்து விடவில்லை. எனினும், அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்(டு அழிந்து விட்)டனர்.
IFT
தமக்கு முன்சென்றவர்களான நூஹுடைய சமூகத்தினர், ஆத் மற்றும் ஸமூத் கூட்டத்தினர், இப்ராஹீமின் சமூகத்தினர், மத்யன்வாசிகள் மற்றும் தலைகீழாகப் புரட்டப்பட்ட ஊர்கள் ஆகியோரின் வரலாறு இவர்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளை அவர்களிடம் கொண்டு வந்தார்கள். எனவே, அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. ஆனால் அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டிருந்தார்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவர்களுக்கு முன்னிருந்த (நபி)நூஹ் உடைய கூட்டத்தினர், ஆது, ஸமூது (வர்க்கத்தினர்) இப்ராஹீமுடைய கூட்டத்தினர் மத்யன் வாசிகள், தலைகீழாகப் புரட்டியடிக்கப்பட்ட ஊரார் ஆகியோரின் செய்தி அவர்களுக்கு வரவில்லையா? (நம்மால் அனுப்பப்பட்ட) அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தனர், ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்பவனாக இல்லை, எனினும், அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டிருந்தனர்.
Saheeh International
Has there not reached them the news of those before them - the people of Noah and [the tribes of] ʿAad and Thamūd and the people of Abraham and the companions [i.e., dwellers] of Madyan and the towns overturned? Their messengers came to them with clear proofs. And Allah would never have wronged them, but they were wronging themselves.
وَالْمُؤْمِنُوْنَநம்பிக்கை கொண்ட ஆண்கள்وَالْمُؤْمِنٰتُஇன்னும் நம்பிக்கை கொண்ட பெண்கள்بَعْضُهُمْஅவர்களில் சிலர்اَوْلِيَآءُபொறுப்பாளர்கள்بَعْضٍۘசிலருக்குيَاْمُرُوْنَஏவுகின்றனர்بِالْمَعْرُوْفِநன்மையைوَيَنْهَوْنَஇன்னும் தடுக்கின்றனர்عَنِ الْمُنْكَرِதீமையைவிட்டுوَيُقِيْمُوْنَஇன்னும் நிலை நிறுத்துகின்றனர்الصَّلٰوةَதொழுகையைوَيُؤْتُوْنَஇன்னும் கொடுக்கின்றனர்الزَّكٰوةَஸகாத்தைوَيُطِيْعُوْنَஇன்னும் கீழ்ப்படிகின்றனர்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَرَسُوْلَهٗؕஇன்னும் அவனுடைய தூதருக்குاُولٰۤٮِٕكَஅவர்கள்سَيَرْحَمُهُمُஇவர்களுக்கு கருணை புரிவான்اللّٰهُؕஅல்லாஹ்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்عَزِيْزٌமிகைத்தவன்حَكِيْمٌஞானவான்
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும் (தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாய் இருக்கின்றனர். அவர்கள், (ஒருவர் மற்றவரை) நன்மை செய்யும்படித் தூண்டியும், பாவம் செய்யாது தடுத்தும், தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்து கொடுத்தும் வருவார்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடப்பார்கள். இவர்களுக்கு அதிசீக்கிரத்தில் அல்லாஹ் அருள் புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.
IFT
இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாய் இருக்கின்றார்கள். அவர்கள் நன்மை புரியுமாறு ஏவுகிறார்கள்; தீமையிலிருந்து தடுக்கிறார்கள். மேலும், தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்; ஜகாத்தும் கொடுக்கிறார்கள். மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகிறார்கள். அத்தகையோர் மீதுதான் அல்லாஹ்வின் கருணை பொழிந்து கொண்டிருக்கும்! திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்ட ஆண்களும், பெண்களும் அவர்களில் சிலர் சிலருக்கு உற்ற காரியஸ்தர்களாயிருக்கின்றனர், அவர்கள், (பிறரை) நன்மையைக் கொண்டு ஏவுகிறார்கள், (மார்க்கத்தில் மறுக்கப்பட்ட) தீமையைவிட்டும் விலக்குகிறார்கள், தொழுகையையும் நிறைவேற்றுகிறார்கள், ஜகாத்தையும் கொடுத்து வருகிறார்கள், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்பட்டு நடக்கிறார்கள், இத்தகையோர் அல்லாஹ் அவர்களுக்கு அருள்புரிவான்- நிச்சயமாக அல்லாஹ், யாவரையும் மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
Saheeh International
The believing men and believing women are allies of one another. They enjoin what is right and forbid what is wrong and establish prayer and give zakah and obey Allah and His Messenger. Those - Allah will have mercy upon them. Indeed, Allah is Exalted in Might and Wise.
முஃமினான ஆண்களுக்கும் முஃமினான பெண்களுக்கும் அல்லாஹ் சுவனபதிகளை வாக்களித்துள்ளான் - அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன; அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். (அந்த) நித்திய சுவனபதிகளில் அவர்களுக்கு உன்னத மாளிகைகள் உண்டு - அல்லாஹ்வின் திருப்தி தான் மிகப்பெரியது - அதுதான் மகத்தான வெற்றி.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் அல்லாஹ் சொர்க்கங்களை வாக்களித்திருக்கிறான். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அவற்றிலேயே (என்றென்றும்) தங்கியும் விடுவார்கள். (அந்த) நிரந்தரமான சொர்க்கங்களில் நல்ல (அழகிய உயர்ந்த) மாளிகைகளையும் (வாக்களித்திருக்கிறான். அவை அங்கு அவர்களுக்குக் கிடைக்கும்.) ஆனால் (இவை அனைத்தையும்விட) அல்லாஹ்வின் திருப்பொருத்தம் மிகப் பெரியது. (அதுவும் அங்கு அவர்களுக்குக் கிடைக்கும். அனைத்தையும் விட) இது மகத்தான பெரும் பாக்கியமாகும்.
IFT
கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்களை வழங்குவதாக இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள்! மேலும், அந்த நிலையான சுவனங்களில் தூய்மையான இல்லங்கள் அவர்களுக்கு இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலான அல்லாஹ்வின் உவப்பும் அவர்களுக்குக் கிட்டும். இதுவே மாபெரும் வெற்றியாகும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்ட ஆண்களுக்கும், விசுவாசங்கொண்ட பெண்களுக்கும் அல்லாஹ், சுவனங்களை வாக்களித்திருக்கின்றான், அவற்றின்கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள், அவற்றிலேயே நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள், (‘அத்னு’ எனும் நிலையான சுவனங்களில் பரிசுத்தமான (அழகிய உயர்ந்த) குடியிருப்புகளையும் (அவன் வாக்களித்திருக்கின்றான்.) இன்னும், (இவை யாவற்றையும்விட) அல்லாஹ்விடமிருந்துள்ள பொருத்தம் மிகப் பெரியது, அதுதான் மகத்தான வெற்றியாகும்.
Saheeh International
Allah has promised the believing men and believing women gardens beneath which rivers flow, wherein they abide eternally, and pleasant dwellings in gardens of perpetual residence; but approval from Allah is greater. It is that which is the great attainment.
நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் அறப்போர் செய்வீராக; மேலும் அவர்களை கண்டிப்பாக நடத்துவீராக; (மறுமையில்) அவர்களுடைய புகலிடம் நரகமே - தங்குமிடங்களிலெல்லாம் அது மிகவும் கெட்டது.
அப்துல் ஹமீது பாகவி
நபியே! நிராகரிப்பவர்களுடனும் நயவஞ்சகர்களுடனும் நீர் போர் செய்வீராக. அவர்களை (தாட்சண்யமின்றி) கண்டிப்பாக நடத்துவீராக. அவர்கள் தங்குமிடம் நரகம்தான். (அது) தங்குமிடங்களில் மிகக் கெட்டது.
IFT
நபியே! இறைநிராகரிப்பாளர்கள், நயவஞ்சகர்கள் ஆகியோருடன் (முழு வலிமையோடு) போராடுவீராக! மேலும், அவர்களிடம் கடினமாக நடந்து கொள்வீராக! இறுதியில், அவர்களின் தங்குமிடம் நரகமாகும். அது மிகக் கெட்ட இருப்பிடமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நபியே! நிராகரிப்போருடனும் (வேஷதாரிகளான) முனாஃபிக்குகளுடனும் நீர் போரிடுவீராக! அவர்கள் மீது கண்டிப்பாகவும் நடந்து கொள்வீராக! அவர்கள் தங்குமிடம் நரகம்தான், சென்றடையுமிடத்தில் அது மிகவும் கெட்டது.
Saheeh International
O Prophet, fight against the disbelievers and the hypocrites and be harsh upon them. And their refuge is Hell, and wretched is the destination.
இவர்கள் நிச்சயமாக “குஃப்ருடைய” சொல்லைச் சொல்லிவிட்டு அதைச் சொல்லவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டபின் நிராகரித்தும் இருக்கின்றனர், (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதித்) தங்களால் அடைய முடியாததையும் (அடைந்துவிட) முயன்றனர்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவனுடைய அருட்கொடையினால் அவர்களைச் சீமான்களாக்கியதற்காகவா (இவ்வாறு) பழிவாங்க முற்பட்டனர்? எனவே அவர்கள் (தம் தவறிலிருந்து) மீள்வார்களானால், அவர்களுக்கு நன்மையாக இருக்கும்; ஆனால் அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் அவர்களை நோவினை மிக்க வேதனை கொண்டு இம்மையிலும், மறுமையிலும் வேதனை செய்வான்; அவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவியாளனோ இவ்வுலகில் எவரும் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே! நயவஞ்சகர்களாகிய) இவர்கள் நிராகரிப்பான வார்த்தையை மெய்யாகவே கூறியிருந்தும் (அதைத்) தாங்கள் கூறவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். மேலும், இவர்கள் இஸ்லாமில் சேர்ந்த பின்னர் (அதை) நிராகரித்தும் இருக்கின்றனர். (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதி) தங்களால் சாத்தியப்படாமல் போனதொரு காரியத்தைச் செய்யவும் அவர்கள் முயற்சித்தனர். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும், தங்கள் அருளைக் கொண்டு இவர்களை சீமான்களாக ஆக்கியதற்காகவா (முஸ்லிம்களாகிய உங்களை) அவர்கள் வெறுக்கின்றனர். இனியேனும் அவர்கள் கைசேதப்பட்டு இறைவனிடம் மன்னிப்புக் கோரி விலகிக் கொண்டால் (அது) அவர்களுக்கே நன்மையாகும். மேலும், அவர்கள் புறக்கணித்தாலோ இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் அவர்களை மிகத் துன்புறுத்தும் வேதனையால் வேதனை செய்வான். அவர்களை பாதுகாப்பவர்களோ உதவி செய்பவர்களோ இவ்வுலகில் (ஒருவரும்) இல்லை.
IFT
இறைநிராகரிப்புச் சொல்லினைத் திண்ணமாக கூறியிருந்தும், ‘நாங்கள் அவ்வாறு கூறவில்லை’ என்று அல்லாஹ்வின் மீது அவர்கள் (மீண்டும் மீண்டும்) சத்தியம் செய்கின்றார்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபின் நிராகரிப்பை மேற்கொண்டு விட்டார்கள். மேலும் தம்மால் செய்ய முடியாத செயலைச் செய்ய நினைத்தார்கள். தன்னுடைய அருளால் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குச் செல்வம் வழங்கியதற்காகவா, அவர்கள் இவ்வளவு வெறுப்புக் கொள்கிறார்கள். அவர்கள் தம்முடைய இந்நடத்தையிலிருந்து விலகிக்கொண்டால் அது அவர்களுக்குச் சிறந்ததாகும். விலகிக்கொள்ளாவிட்டால் அல்லாஹ் அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனை அளிப்பான். இப்பூமியில் அவர்களை ஆதரிப்பாரும், அவர்களுக்கு உதவி புரிவாரும் யாரும் இரார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிராகரிப்பான வார்த்தையை திட்டமாகக் கூறியிருந்தும் தாங்கள் கூறவே இல்லை என்று அல்லாஹ்வைக் கொண்டு (முனாஃபிக்குகளாகிய) அவர்கள் சத்தியம் செய்கின்றனர், அன்றியும் இவர்கள் இஸ்லாத்தில் சேர்ந்ததன் பின்னர் (அதனை) நிராகரித்தும் இருக்கின்றனர், அவர்கள் அடைய முடியாததையும் நாடினார்கள், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவனுடைய பேரருளைக் கொண்டு இவர்களைச் சீமான்களாக்கியதற்காகவே தவிர இவர்கள் (முஸ்லிம்களாகிய உங்களை) பழிவாங்கவில்லை, இனியேனும், இவர்கள் பச்சாதாபப்பட்(டு விலகிக் கொண்)டால் (அது) அவர்களுக்கே நன்மையாகும், அன்றியும் அவர்கள் புறக்கணித்தாலோ, இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் அவர்களை மிகத் துன்புறுத்தும் வேதனையாக வேதனை செய்வான், இன்னும், பாதுகாப்பவரோ, உதவி செய்பவரோ அவர்களுக்கு இப்பூமியில் (ஒருவரும்) இல்லை.
Saheeh International
They swear by Allah that they did not say [anything against the Prophet (ﷺ] while they had said the word of disbelief and disbelieved after their [pretense of] Islam and planned that which they were not to attain. And they were not resentful except [for the fact] that Allah and His Messenger had enriched them of His bounty. So if they repent, it is better for them; but if they turn away, Allah will punish them with a painful punishment in this world and the Hereafter. And there will not be for them on earth any protector or helper.
وَمِنْهُمْஅவர்களில்مَّنْஎவர்கள்عَاهَدَஒப்பந்தம்செய்தார்கள்اللّٰهَஅல்லாஹ்விடம்لَٮِٕنْஅவன் கொடுத்தால்اٰتٰٮنَاஎங்களுக்குمِنْ فَضْلِهٖதன் அருளிலிருந்துلَـنَصَّدَّقَنَّநிச்சயமாக நாம் தர்மம்செய்வோம்وَلَنَكُوْنَنَّநிச்சயமாக நாம் ஆகிவிடுவோம்مِنَ الصّٰلِحِيْنَநல்லவர்களில்
அவர்களில் சிலர், “அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்தால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்” என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்கள், ‘‘அல்லாஹ் தன் அருளைக் கொண்டு நமக்கு ஏதும் கொடுத்தால் நிச்சயமாக நாம் (அதை) நல்வழியில் (தாராளமாக) தானம் செய்து, நிச்சயமாக நாம் நல்லவர்களாகவும் ஆகிவிடுவோம்'' என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தனர்.
IFT
அவர்களில் இப்படிச் சிலர் இருக்கின்றனர்: “அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து எங்களுக்கு வழங்கினால், நிச்சயம் நாங்கள் தானதர்மங்கள் செய்வோம்; மேலும், நல்லவர்களாவோம்” என்று அல்லாஹ்விடம் அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், “அல்லாஹ் தன் பேரருளிலிருந்து நமக்கு (செல்வத்தை)க்,கொடுத்தால், நிச்சயமாக நாம் தர்மம் செய்வோம், நிச்சயமாக நாம் நல்லடியார்களிலும் ஆகிவிடுவோம்” என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தவர்களும் அவர்களில் (சிலர்) இருக்கின்றனர்.
Saheeh International
And among them are those who made a covenant with Allah, [saying], "If He should give us from His bounty, we will surely spend in charity, and we will surely be among the righteous."
(அவ்வாறே) அவன் அவர்களுக்குத் தன் அருட்கொடையிலிருந்து வழங்கியபோது, அதில் அவர்கள் உலோபித்தனம் செய்து, அவர்கள் புறக்கணித்தவர்களாக பின் வாங்கிவிட்டனர்.
அப்துல் ஹமீது பாகவி
அவன் (அவ்வாறு) அவர்களுக்குத் தன் அருட்கொடையை அளித்த பொழுது, அவர்கள் கஞ்சத்தனம் செய்து (தங்கள் வாக்குறுதியிலிருந்து) திரும்பி விட்டனர். அவ்வாறு புறக்கணிப்பது அவர்கள் வழக்கமாகவும் இருந்து வருகிறது.
IFT
ஆனால், அல்லாஹ் தன்னுடைய அருட் கொடையிலிருந்து அவர்களுக்கு வழங்கியபோது, அதில் அவர்கள் கஞ்சத்தனம் செய்தார்கள். மேலும், சிறிதும் பொருட்படுத்தாதவர்களாய் (தமது வாக்குறுதியிலிருந்து) நழுவிச் சென்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, அவன் அவர்களுக்குத் தன் பேரருளிலிருந்து (செல்வத்தை) கொடுத்தபொழுது அவர்கள் அதில் உலோபித்தனம் செய்தனர் - அவர்கள் (தங்கள் வாக்குறுதியைப்) புறக்கணித்தவர்களாகத் திரும்பியும் விட்டனர்.
Saheeh International
But when He gave them from His bounty, they were stingy with it and turned away while they refused.
எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவனை சந்திக்கும் (இறுதி)நாள் வரை அவர்களுடைய உள்ளங்களில் வஞ்சகத்தை ஏற்படுத்தி விட்டான். இதன் காரணம், அவர்கள் அல்லாஹ்வுக்குச் செய்த வாக்குறுதிகளுக்கு மாறு செய்துகொண்டும், பொய் சொல்லிக் கொண்டும் இருந்ததாகும்.
IFT
எனவே, அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதிக்கு அவர்கள் மாறுசெய்த காரணத்தாலும், பொய்யுரைத்துக் கொண்டிருந்ததாலும் அல்லாஹ் அவர்களின் உள்ளத்தில் வஞ்சக எண்ணத்தை ஏற்படுத்தினான். அவனை அவர்கள் சந்திக்கும் நாள் வரை அது அவர்களிடம் இருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அல்லாஹ்வுக்கு-அவனுக்கு வாக்களித்ததில், அவர்கள் அவனுக்கு மாறு செய்துகொண்டும், பொய் சொல்லிக் கொண்டுமிருந்ததன் காரணமாக அவனைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் (தண்டனையாக) அவர்களுடைய இதயங்களில் அவர்களுக்கு நிஃபாக்கை (கபடத்தனத்தை)த் தொடருமாறு அவன் செய்து விட்டான்.
Saheeh International
So He penalized them with hypocrisy in their hearts until the Day they will meet Him - because they failed Allah in what they promised Him and because they [habitually] used to lie.
அவர்களுடைய இரகசிய எண்ணங்களையும், அவர்களுடைய அந்தரங்க ஆலோசனைகளையும் அல்லாஹ் அறிவான் என்பதையும்; இன்னும், மறைவானவற்றை எல்லாம் நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாக இருக்கின்றான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் (தங்கள் உள்ளத்தில்) மறைத்து வைத்திருப்பதையும் (தங்களுக்குள்) அவர்கள் இரகசியமாகப் பேசிக்கொள்வதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகிறான் என்பதுடன், நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய மற்ற) இரகசியங்கள் அனைத்தையும் நன்கறிகிறான் என்பதையும் அவர்கள் அறிய வேண்டாமா?
IFT
அவர்களுடைய அந்தரங்கத்தையும், அதைவிட இரகசியமானவற்றையும் திண்ணமாக அல்லாஹ் அறிகின்றான் என்பதையும் மறைவான உண்மைகள் அனைத்தையும் அவன் முழுமையாக அறியக்கூடியவன் ஆவான் என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ளவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ், அவர்களுடைய இரகசியத்தையும் அவர்களுடைய இரகசிய ஆலோசனையையும் அறிவான் என்பதையும் இன்னும், நிச்சயமாக அல்லாஹ் மறைவானவற்றை மிக்க அறிந்தவன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?
Saheeh International
Did they not know that Allah knows their secrets and their private conversations and that Allah is the Knower of the unseen?
இ(ம் முனாஃபிக்கான)வர்கள் முஃமின்களில் தாராளமாக தர்மம் செய்பவர்களையும் (வேறு பொருள் எதுவுமில்லாததால்) தங்கள் உழைப்பை தானமாகக் கொடுப்பவர்களையும் குறை கூறி, ஏளனமும் செய்கிறார்கள். இவர்களை அல்லாஹ் ஏளனம் செய்கிறான். இவர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் நம்பிக்கையாளர்களில் உள்ள செல்வந்தர்கள் (தங்கள் பொருள்களை) நல்வழியில் (தாராளமாக) தானம் செய்வது பற்றியும் (குறிப்பாக,) கூலிவேலை செய்து சம்பாதிப்போர் (தங்கள் பொருளை இவ்வாறு தானம் செய்வது) பற்றியும் குற்றம் கூறி அவர்களைப் பரிகசிக்கின்றனர். (நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கும்) அவர்களை அல்லாஹ் பரிகசிக்கிறான். மேலும், (மறுமையில்) துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
IFT
இக்கஞ்சர்கள் (என்ன செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் அறிகிறான்.) இறைநம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரி வழங்குவோரின் தானதர்மங்களைப் பற்றியும் இவர்கள் குறை கூறுகின்றார்கள். (இறைவழியில் செலவழிப்பதற்காக) சிரமப்பட்டு சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதவர்களைப் பற்றியும் இவர்கள் கேலி செய்கின்றார்கள். அல்லாஹ் இவர்களைக் கேலி செய்கின்றான். மேலும், இவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனையும் இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவர்கள் எத்தகையோரென்றால், விசுவாசிகளில் தாராளமாக தர்மம் செய்பவர்களையும், தங்களது உழைப்பைத் தவிர வேறு எதையும் (தர்மம் செய்வதற்கு பெறாதவர்களையும்) குறை கூறுகிறார்கள், பின்னர் அவர்களை ஏளன(மு)ம் செய்கிறார்கள், (விசுவாசிகளை ஏளனம் செய்யும்) அவர்களை அல்லாஹ் ஏளனம் செய்கின்றான், அன்றியும் (மறுமையில்) துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்குண்டு.
Saheeh International
Those who criticize the contributors among the believers concerning [their] charities and [criticize] the ones who find nothing [to spend] except their effort, so they ridicule them - Allah will ridicule them, and they will have a painful punishment.
اِسْتَغْفِرْநீர் மன்னிப்புத்தேடுவீராகلَهُمْஅவர்களுக்காகاَوْஅல்லதுلَا تَسْتَغْفِرْமன்னிப்புத் தேடாதீர்لَهُمْؕஅவர்களுக்காகاِنْ تَسْتَغْفِرْநீர் மன்னிப்புத் தேடினாலும்لَهُمْஅவர்களுக்காகسَبْعِيْنَஎழுபதுمَرَّةًமுறைفَلَنْ يَّغْفِرَமன்னிக்கவே மாட்டான்اللّٰهُஅல்லாஹ்لَهُمْؕஅவர்களைذٰلِكَ بِاَنَّهُمْஅதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்بِاللّٰهِஅல்லாஹ்வைوَرَسُوْلِهٖؕஇன்னும் அவனுடைய தூதரைوَاللّٰهُஅல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி செலுத்த மாட்டான்الْقَوْمَமக்கள்الْفٰسِقِيْنَபாவிகளான
இஸ்தக்Fபிர் லஹும் அவ் லா தஸ்தக்Fபிர் லஹும் இன் தஸ்தக்Fபிர் லஹும் ஸBப்'ஈன மர்ரதன் Fபல(ன்)ய் யக்Fபிரல் லாஹு லஹும்; தாலிக Bபி அன்னஹும் கFபரூ Bபில்லாஹி வ ரஸூலிஹ்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மல் Fபாஸிகீன்
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது இவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோராவிட்டாலும் சரியே! இவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவ மன்னிப்புக் கோரினாலும் - நிச்சயமாக அல்லாஹ் இவர்களை மன்னிக்க மாட்டான். ஏனென்றால் இவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள் - இத்தகைய பாவிகளின் கூட்டத்தை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் அவர்களுக்குப் பாவமன்னிப்பைக் கோரினாலும் அல்லது நீர் அவர்களுக்குப் பாவ மன்னிப்பைக் கோராவிட்டாலும் (இரண்டும்) சமம்தான். (ஏனென்றால்), அவர்களை மன்னிக்கும்படி நீர் எழுபது முறை மன்னிப்புக் கோரினாலும் நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னிக்கவே மாட்டான். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் (மனமுரண்டாக) நிராகரித்ததுதான் இதற்குக் காரணமாகும். அல்லாஹ், பாவம் செய்யும் (இத்தகைய) மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.
IFT
(நபியே!) நீர் இவர்களுக்காக பாவமன்னிப் புக் கோரினாலும் சரி, கோராவிட்டாலும் சரி, எழுபது தடவைகள் இவர்களுக்காக நீர் மன்னிப்புக் கோரினாலும் அல்லாஹ் இவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டான்! ஏனென்றால் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் இவர்கள் நிராகரித்து விட்டார்கள். பாவம் புரியும் மக்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டு வதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் அவர்களுக்குப் பாவ மன்னிப்பைக் கோரும், அல்லது நீர் அவர்களுக்குப் பாவ மன்னிப்பைக் கோராமலிரும், (இரண்டும் சமம்தான். ஏனென்றால்,) அவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவ மன்னிப்பைக் கோரியபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னிக்கவே மாட்டான், அது ஏனெனில் நிச்சயமாக அவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (மனமுரண்டாக) நிராகரித்தார்கள் என்பதினாலாகும், அல்லாஹ் பாவம் செய்யும் (இத்தகைய) கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தவுமாட்டான்.
Saheeh International
Ask forgiveness for them, [O Muhammad], or do not ask forgiveness for them. If you should ask forgiveness for them seventy times - never will Allah forgive them. That is because they disbelieved in Allah and His Messenger, and Allah does not guide the defiantly disobedient people.
(தபூக் போரில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு விரோதமாக(த் தம் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றனர்; அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருட்களையும், உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிவதையும் வெறுத்து (மற்றவர்களை நோக்கி); “இந்த வெப்ப (கால)த்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்” என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் “நரக நெருப்பு இன்னும் கடுமையான வெப்பமுடையது” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (இதை) அவர்கள் விளங்கியிருந்தால் (பின் தங்கியிருக்க மாட்டார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
(போருக்குச் செல்லாது) பின் தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதரு(டைய கட்டளை)க்கு மாறாக(த் தங்கள் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி சந்தோஷ மடைகின்றனர். இன்னும், அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருள்களையும், உயிர்களையும் தியாகம் செய்து போர் செய்வதை வெறுத்து (மற்றவர்களை நோக்கி) ‘‘இந்த வெப்பகாலத்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்'' என்றும் கூறுகின்றனர். (அதற்கு நபியே! அவர்களை நோக்கி) ‘‘நரகத்தின் நெருப்பு (இதைவிட) கொடிய உஷ்ணமானது'' என்று நீர் கூறுவீராக. (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
IFT
போருக்குச் செல்லாமல் தங்கிவிட அனுமதி பெற்றவர்கள், அல்லாஹ்வின் தூதர் புறப்பட்டதற்குப் பின்னால் தத்தம் வீடுகளில் இருப்பது குறித்து மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்கள் தங்கள் உயிர்களையும், உடைமைகளையும் அல்லாஹ்வின் வழியில் அர்ப்பணித்துப் போராடுவதை வெறுத்தார்கள். மேலும், ‘கடுமையான இந்த வெப்ப காலத்தில் போருக்குப் புறப்படாதீர்கள்’ என்று (மக்களிடம்) கூறினார்கள். (இவர்களிடம்) நீர் கூறுவீராக: “நரக நெருப்பு இதைவிட அதிக வெப்பமுடையது.” அந்தோ! இதனை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டாமா!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(தபூக் யுத்தத்திற்குச் செல்லாது) பின் தங்கி விட்டவர்கள், அல்லாஹ்வின் தூதருக்கு மாறாக)த் தங்கள் வீடுகளில்) அவர்கள் இருந்து கொண்டதைப் பற்றி மகிழச்சியடைகின்றனர், அன்றியும் அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருட்காளாலும், தங்கள் உயிர்களாலும் யுத்தம் செய்வதையும் வெறுக்கின்றனர், (மற்றவர்களிடம்) “இந்த வெப்பத்தில் நீங்கள் (யுத்தத்திற்குச்) செல்லாதீர்கள்” என்றும் கூறுகின்றனர், (அதற்கு நபியே! அவர்களிடம்) நரகத்தின் நெருப்பு வெப்பத்தால் (இதைவிட) மிகக் கடுமையானதாகும்” என்று நீர் கூறுவீராக! (இதனை) அவர்கள் விளங்குபவர்களாக இருந்தால் (பின்தங்கி இருக்க மாட்டார்கள்.)
Saheeh International
Those who remained behind rejoiced in their staying [at home] after [the departure of] the Messenger of Allah and disliked to strive with their wealth and their lives in the cause of Allah and said, "Do not go forth in the heat." Say, "The fire of Hell is more intense in heat" - if they would but understand.
எனவே அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்ததற்குக் கூலியாகக் குறைவாகவே சிரிக்கட்டும், அதிகமாக அழட்டும்.
அப்துல் ஹமீது பாகவி
(இம்மையில்) அவர்கள் வெகு குறைவாகவே சிரிக்கவும். அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலுக்குப் பிரதிபலனாக (மறுமையில்) அதிகமாகவே அழுது கொள்ளட்டும்!
IFT
இனி அவர்கள் குறைவாக சிரிக்கட்டும்; அதிகமாக அழட்டும்! ஏனெனில் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீவினையின் விளைவு இவ்வாறுதான் இருக்கிறது. (அதனால் அவர்கள் அதிகம் அழட்டும்!)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே (இம்மையில்) அவர்கள் வெகு சொற்பமாகவே சிரிக்கட்டும், அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த (தீய)வற்றின் பிரதிபலனாக (மறுமையில்) அதிகமாக அவர்கள் அழட்டும்.
Saheeh International
So let them laugh a little and [then] weep much as recompense for what they used to earn.
(நபியே!) உம்மை அல்லாஹ் அவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் திரும்பி வருமாறு செய்து (உம் வெற்றியையும், பொருட்களையும் பார்த்துவிட்டு மறு யுத்தத்திற்குப்) புறப்பட்டு வர உம்மிடம் அனுமதி கோரினால், நீர் அவர்களிடம் “நீங்கள் ஒருக்காலும் என்னுடன் புறப்படாதீர்கள்; இன்னும் என்னுடன் சேர்ந்து எந்த விரோதியுடனும் நீங்கள் போர் செய்யாதீர்கள். ஏனெனில் நீங்கள் முதன் முறையில் (போருக்குப் புறப்படாமல் தன் வீடுகளில்) உட்கார்ந்திருப்பதைத் தான் பொருத்த மெனக்கொண்டீர்கள் - எனவே (இப்பொழுதும் தம் இல்லங்களில்) தங்கியவர்களுடனேயே இருந்து விடுங்கள்” என்று கூறுவீராக!.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் (போரில் வெற்றி பெற்றவராக) அவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் திரும்ப வரும்படி அல்லாஹ் செய்து (உங்கள் வெற்றியையும், நீங்கள் கொண்டு வந்த பொருள்களையும் அவர்கள் கண்டு, உங்களுடன் மற்றொரு போருக்குப்) புறப்பட உங்களிடம் அனுமதி கோரினால் (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (போருக்கு) ஒருக்காலத்திலும் என்னுடன் புறப்படவேண்டாம். என்னுடன் சேர்ந்து எந்த எதிரியிடமும் நீங்கள் போர்புரிய வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக நீங்கள் முதன் முறையில் (வீட்டில்) தங்கிவிடுவதையே விரும்பினீர்கள். ஆதலால், (இப்பொழுதும்) நீங்கள் (வீட்டில்) தங்கிவிடுபவர்களுடன் இருந்து விடுங்கள்'' என்று (நபியே! நீர்) கூறுவீராக.
IFT
அவர்களிடையே அல்லாஹ் உம்மைத் திரும்பக் கொண்டு வரும்போது (ஜிஹாதுக்காகப்) புறப்பட அவர்களில் ஒரு பிரிவினர் உம்மிடம் அனுமதி கோரினால், நீர் அவர்களிடம் (தெளிவாகக்) கூறிவிட வேண்டும்: “இனி ஒருபோதும் உங்களால் என்னுடன் வர இயலாது; என்னோடு வந்து எந்தப் பகைவர்களையும் எதிர்த்துப் போரிட உங்களால் முடியாது. ஏனெனில், முதல் தடவை (போருக்கு) வராமல் தங்கி விடுவதை நீங்கள் விரும்பினீர்கள். ஆகையால் (இனி) வராமல் தங்கி விட்டவர்களுடன் நீங்களும் தங்கி விடுங்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் அவர்களில் ஒரு சாராரின்பால் அல்லாஹ் உம்மை திரும்பி (வெற்றியுடன்) வரச்செய்து விட்டால் (உமது வெற்றியை அவர்கள் கண்டு உம்முடன் மற்றொரு யுத்தத்திற்குப்) புறப்பட உம்மிடம் அனுமதி கேட்பார்கள், அப்பொழுது “நீங்கள் ஒரு காலத்திலும் என்னுடன் புறப்படவே வேண்டாம், என்னுடன் சேர்ந்து எந்த விரோதியுடனும் நீங்கள் ஒருபோதும் யுத்தம் புரியவும் வேண்டாம், ஏனென்றால், நிச்சயமாக நீங்கள் முதற்தடவையில், (வீட்டில்) தங்கிவிடுவதையே பொருந்திக் கொண்டீர்கள், ஆதலால் (இது சமயமும்) நீங்கள் வீட்டில் தங்கிவிடுவோருடன் இருந்து விடுங்கள்” என்று நீர் கூறுவீராக!
Saheeh International
If Allah should return you to a faction of them [after the expedition] and then they ask your permission to go out [to battle], say, "You will not go out with me, ever, and you will never fight with me an enemy. Indeed, you were satisfied with sitting [at home] the first time, so sit [now] with those who stay behind."
அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்க வேண்டாம்; ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்துப் பாவிகளாகவே இறந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அவர்களில் எவர் இறந்துவிட்டாலும் அவர்கள் மீது ஒருபோதும் (ஜனாஸா) தொழுகையும் தொழாதீர். அவர்களுடைய கப்ரில் (அவர்களுக்காக மன்னிப்புக்கோரி) நிற்காதீர். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து விட்டதுடன் பாவிகளாகவே இறந்தும் இருக்கின்றனர்.
IFT
(இனி,) அவர்களில் எவரேனும் இறந்துவிட்டால் ஒருபோதும் அவருக்காக (ஜனாஸா) மரணத்தொழுகை தொழாதீர்; மேலும், அவருக்குப் பிரார்த்தனை செய்வதற்காக அவருடைய அடக்கத்தலத்தில் நிற்காதீர்! ஏனென்றால், திண்ணமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நிராகரித்து விட்டார்கள். மேலும், தீயவர்களாகவே அவர்கள் இறந்து போனார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், அவர்களில் இறந்துபோன எந்த ஒருவரின் மீதும் ஒருபோதும் நீர் தொழுகையும் வைக்காதீர், அவருடைய கப்ரின்மீதும் (மன்னிப்புக்கோர) நிற்கவும் வேண்டாம், (ஏனென்றால்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தார்கள், இன்னும் அவர்கள் பாவிகளாகவே இறந்துமிருக்கின்றனர்.
Saheeh International
And do not pray [the funeral prayer, O Muhammad], over any of them who has died - ever - or stand at his grave. Indeed, they disbelieved in Allah and His Messenger and died while they were defiantly disobedient.
இன்னும் அவர்களுடைய செல்வங்களும், பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; நிச்சயமாக இவற்றைக் கொண்டு அவர்களை இவ்வுலகத்திலேயே வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களின் உயிர் போவதையும் அல்லாஹ் விரும்புகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுடைய செல்வங்களும் அவர்களுடைய சந்ததிகளும் (அதிகரித்திருப்பது) உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம். (ஏனென்றால்) அவற்றைக்கொண்டு இவ்வுலகிலேயே அவர்களைத் துன்புறுத்துவதையும், அவர்கள் (கர்வம்கொண்டு) நிராகரித்த வண்ணமே அவர்களின் உயிர் போவதையும்தான் அல்லாஹ் விரும்புகிறான்.
IFT
அவர்களுடைய செல்வங்களும், அதிகமான பிள்ளைகளும் உம்மை வியப்பிலாழ்த்த வேண்டாம். இவற்றின் மூலம் அவர்களுக்கு இவ்வுலகிலே தண்டனை வழங்கிட வேண்டும் என்றும், நிராகரிப்பவர்களாகவே அவர்களின் உயிர்கள் பிரிய வேண்டும் என்றும்தான் அல்லாஹ் நாடுகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய மக்களும் (அதிகரிப்பது) உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம், அல்லாஹ் நாடுவதெல்லாம் அவற்றைக்கொண்டு இவ்வுலகிலேயே அவர்களை அவன் வேதனை செய்வதையும் அவர்கள் (கர்வங்கொண்டு) நிராகரித்த வண்ணமே அவர்களின் உயிர்பிரிவதையும்தான்.
Saheeh International
And let not their wealth and their children impress you. Allah only intends to punish them through them in this world and that their souls should depart [at death] while they are disbelievers.
மேலும், அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, அவனுடைய தூதருடன் சேர்ந்து போர் புரியுங்கள்” என்று ஏதாவது ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், அவர்களில் வசதிபடைத்த செல்வந்தர்கள்: “எங்களை விட்டு விடுங்கள்; நாங்கள் (போருக்கு வராமல்) தங்கியிருப்போருடன் இருந்து கொள்கின்றோம்” என்று உம்மிடம் அனுமதி கோருகின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனுடைய தூதருடன் சேர்ந்து போர் புரியுமாறு ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், அவர்களிலுள்ள பணக்காரர்கள் (போர் புரிய வராதிருக்க) உங்களிடம் அனுமதிகோரி ‘‘எங்களை விட்டுவிடுங்கள்; (வீட்டில்) தங்கி இருப்பவர்களுடன் நாங்களும் தங்கிவிடுகிறோம்'' என்று கூறுகின்றனர்.
IFT
“அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; மேலும், அவனுடைய தூதருடன் சேர்ந்து ஜிஹாத் செய்யுங்கள்!” என்று (அறிவுறுத்தும்) ஏதேனும் ஓர் அத்தியாயம் இறக்கியருளப்பட்டால், அவர்களில் சக்தி பெற்றவர்கள் (ஜிஹாதில் கலந்து கொள்ளாதிருக்க) அனுமதி வழங்குமாறு உம்மிடம் கோருவார்கள். “எங்களை விட்டுவிடும்; தங்கியிருப்பவர்களுடன் நாங்களும் சேர்ந்து விடுகின்றோம்” என்றும் கூறுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “அல்லாஹ்வை விசுவாசம் கொள்ளுங்கள், அவனுடைய தூதருடன் (சேர்ந்து) யுத்தமும் புரியுங்கள்” என ஏதாவது ஒரு அத்தியாயம் இறக்கப்பட்டால், அவர்களிலுள்ள வசதி படைத்தவர்கள் (வீட்டில் தங்கிவிட) உம்மிடம் அனுமதி கோரி, “எங்களை விட்டு விடும், (வீட்டில்) தங்கியிருப்பவர்களுடன் நாங்களும் தங்கி விடுகின்றோம்” என்றும் கூறுகின்றனர்.
Saheeh International
And when a sūrah was revealed [enjoining them] to believe in Allah and to fight with His Messenger, those of wealth among them asked your permission [to stay back] and said, "Leave us to be with them who sit [at home]."
(போரில் கலந்துகொள்ள முடியாப் பெண்கள், முதியவர்களைப்போல்) பின் தங்கியவர்களுடன் இருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்; அவர்களுடைய இருதயங்கள்மீது முத்திரையிடப்பட்டு விட்டது. ஆகவே (இதன் இழிவை) அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(சிறியோர், முதியோர், பெண்கள் போன்ற போருக்கு வரமுடியாமல் வீட்டில்) தங்கிவிடுபவர்களுடன் தாங்களும் இருந்துவிடவே விரும்புகின்றனர். அவர்களுடைய உள்ளங்கள் மீது முத்திரையிடப்பட்டுவிட்டது. (ஆதலால் இதிலுள்ள இழிவை) அவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.
IFT
அத்தகையவர்கள் வீட்டில் தங்கியிருக்கும் பெண்கள் மற்றும் இயலாதோருடன் சேர்ந்துவிட விரும்பி விட்டார்கள். மேலும், அவர்களுடைய உள்ளங்கள் மீது முத்திரையிடப்பட்டுவிட்டது. எனவே அவர்கள் எதையும் புரிந்து கொள்ளமாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(போரில் கலந்து கொள்ளாதிருக்க அனுமதியளிக்கப்பட்ட) பின்தங்கி விடுபவர்களுடன் தாங்களும் இருந்துவிடுவதை அவர்கள் பொருந்திக் கொண்டுவிட்டார்கள், அவர்களுடைய இதயங்களின்மீது முத்திரையிடப்பட்டுவிட்டது, ஆதலால் (இதிலுள்ள தீமையை) அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
Saheeh International
They were satisfied to be with those who stay behind, and their hearts were sealed over, so they do not understand.
எனினும், (அல்லாஹ்வின்) தூதரும், அவருடன் இருக்கும் முஃமின்களும், தங்கள் செல்வங்களையும், தங்கள் உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிகிறார்கள்; அவர்களுக்கே எல்லா நன்மைகளும் உண்டு - இன்னும் அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும் (அல்லாஹ்வுடைய) தூதரும், அவருடனுள்ள நம்பிக்கையாளர்களும் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரிவார்கள். (இம்மை, மறுமையின்) நன்மைகள் அனைத்தும் இவர்களுக்குத்தான் உரியன. நிச்சயமாக இவர்கள்தான் வெற்றியாளர்கள்.
IFT
ஆனால், இறைத்தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் தம் உயிர்களையும் உடைமைகளையும் அர்ப்பணித்து ஜிஹாத் செய்தார்கள். (இனி) அத்தகையவர்களுக்கே எல்லா நன்மைகளும் இருக்கின்றன. அவர்கள்தாம் வெற்றி பெற்றவர்களுமாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனினும், (அல்லாஹ்வுடைய) தூதரும் அவருடன் உள்ள விசுவாசிகளும் தங்கள் செல்வங்களாலும், தங்கள் உயிர்களாலும் (அர்ப்பணம்செய்வது கொண்டு) யுத்தம் புரிகின்றார்கள், அத்தகையோர்-அவர்களுக்குத்தான் நன்மைகள் (யாவும்) உண்டு, மேலும், அத்தகையோர்-அவர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்.
Saheeh International
But the Messenger and those who believed with him fought with their wealth and their lives. Those will have [all that is] good and it is those who are the successful.
அவர்களுக்கு அல்லாஹ் சுவனபதிகளைச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் எந்நாளும் இருப்பார்கள். இதுவே மகத்தான பெரும் வெற்றியாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ், அவர்களுக்காக சொர்க்கங்களை தயார் செய்துவைத்திருக்கிறான் அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். அவற்றில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். இதுவோ மாபெரும் பாக்கியமாகும்.
IFT
கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களை அல்லாஹ் அவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கின்றான்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். இதுவே மாபெரும் வெற்றியாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுக்காக சுவனபதிகளை அல்லாஹ் தயார் செய்து வைத்திருக்கின்றான், அவற்றின்கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவற்றில் அவர்கள், நிரந்தரமாகத் தங்கி இருப்பவர்கள், அதுவே மகத்தான வெற்றியாகும்.
Saheeh International
Allah has prepared for them gardens beneath which rivers flow, wherein they will abide eternally. That is the great attainment.
கிராம வாசிகளில் சிலர் உம்மிடம் புகல் சொல்லிக் கொண்டு, (போரில் கலந்து கொள்ளாமலிருக்கத்) தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டுமென்று கேட்க வந்தனர்; இன்னும் அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் பொய்யுரைத்தவர்கள் (அனுமதி கேட்காமலே வீடுகளில்) உட்கார்ந்து கொண்டார்கள் - அவர்களில் நிராகரித்தவர்களை வெகு விரைவில் நோவினை செய்யும் வேதனை வந்தடையும்.
அப்துல் ஹமீது பாகவி
கிராமத்து அரபிகளில் சிலர், (போருக்குச் செல்லாதிருக்க) அனுமதிகோரி (உங்களிடம்) வந்து காரணம் கூறுகின்றனர். எனினும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் பொய்யாக்கியவர்களோ (அனுமதி கோராமலேயே வீட்டில்) உட்கார்ந்து கொண்டனர். ஆகவே, இவர்களிலுள்ள (இந்)நிராகரிப்பவர்களை அதிசீக்கிரத்தில் மிகத் துன்புறுத்தும் வேதனை வந்தடையும்.
IFT
மேலும், (போருக்குச் செல்லாமலிருக்க) தங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக, சாக்குப் போக்குகள் கூறக்கூடிய நாட்டுப்புற அரபிகள் பலர் வந்தனர். இதுபோல், ஈமான் நம்பிக்கை கொள்வதாக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் பொய்யான வாக்குறுதி அளித்தவர்களும் போருக்குச் செல்லாமல் பின்தங்கி விட்டார்கள். இந்த நாட்டுப்புற அரபிகளில் எவர்கள் நிராகரிக்கும் போக்கினைக் கடைப்பிடித்தார்களோ அவர்களைத் துன்புறுத்தும் தண்டனை அதிவிரைவில் சூழ்ந்து கொள்ளும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மதீனாவைச் சுற்றியுள்ள அரபிகளான) கிராமவாசிகளில் புகல் கூறுபவர்கள் (சிலர் யுத்தத்திற்குச் செல்லாதிருக்கத்) தங்களுக்காக அனுமதி அளிக்கப்பட வேண்டுமென்று (உம்மிடம்) வந்தனர், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் பொய்யாக்கியவர்கள் (அனுமதி கோராமலேயே வீட்டில்) உட்கார்ந்து கொண்டனர், ஆகவே, இவர்களிலுள்ள (இந்) நிராகரித்தவர்களை மிகத் துன்புறுத்தும் வேதனையும் வந்தடையும்.
Saheeh International
And those with excuses among the bedouins came to be permitted [to remain], and they who had lied to Allah and His Messenger sat [at home]. There will strike those who disbelieved among them a painful punishment.
பலஹீனர்களும், நோயாளிகளும், (அல்லாஹ்வின் வழியில்) செலவு செய்ய வசதியில்லாதவர்களும், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உண்மையுடன் இருப்பார்களானால், (இத்தகைய) நல்லோர்கள் மீது எந்த குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; கிருபையுள்ளவன்.
அப்துல் ஹமீது பாகவி
பலவீனர்களும், நோயாளிகளும், போருக்குச் செலவு செய்யும் பொருளை அடையாதவர்களும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கலப்பற்ற நம்பிக்கையாளர்களாக இருந்தால் (அதுவே போதுமானது. அவர்கள் போருக்குச் செல்லாவிட்டாலும் அதைப் பற்றி) அவர்கள் மீது ஒரு குற்றமுமில்லை. (இத்தகைய) நல்லவர்கள் மீது (குற்றம் கூற) ஒரு வழியும் இல்லை. அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுள்ளவன் ஆவான்.
IFT
இயலாதவர்கள், நோயாளிகள் மற்றும் ஜிஹாதில் கலந்துகொள்ள வசதி வாய்ப்பு அற்றவர்கள் ஆகியோர் அவர்கள் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதருக்கு வாய்மையாளர்களாய் இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது யாதொரு குற்றமும் இல்லை. இத்தகைய நன்னடத்தையுடையோரை ஆட்சேபிக்க எந்தக் காரணமும் இல்லை. மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பலவீனர்களின் மீதும், நோயாளிகளின்மீதும், (யுத்தத்திற்குச்) செலவிடுவதற்கு எதையும் பெற்றுக் கொள்ளவில்லையே அவர்கள் மீதும் அல்லாஹ்விற்காகவும் அவனுடைய தூதருக்காகவும் அவர்கள் நன்மையை நாடியிருந்தார்களானால் (போருக்குச் செல்லாது வீட்டில் தங்கிவிடுவது) குற்றமில்லை, நன்மை செய்வோரின் மீது (குறை) எந்த வழியும் இல்லை, இன்னும், அல்லாஹ் மிகவும் மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்.
Saheeh International
There is not upon the weak or upon the ill or upon those who do not find anything to spend any discomfort [i.e., guilt] when they are sincere to Allah and His Messenger. There is not upon the doers of good any cause [for blame]. And Allah is Forgiving and Merciful.
போருக்குச் செல்லத் தங்களுக்கு வாகனம் தேவைப்பட்டு உம்மிடம் வந்தவர்களிடம் “உங்களை நான் ஏற்றி விடக்கூடிய வாகனங்கள் என்னிடம் இல்லையே” என்று நீர் கூறிய போது, (போருக்காகத்) தாங்களே செலவு செய்து கொள்ள வசதியில்லையே என்று எண்ணித் துக்கத்தால் தங்களின் கண்களில் கண்ணீர் வடித்தவர்களாகத் திரும்பிச் சென்று விட்டார்களே அவர்கள் மீதும் (போருக்குச் செல்லாதது பற்றி) எவ்வித குற்றமும் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் (போருக்குரிய) வாகனத்தை நீர் தருவீர் என உம்மிடம் வந்து, ‘‘உங்களை நான் ஏற்றி அனுப்பக்கூடிய வாகனம் என்னிடம் இல்லையே'' என்று நீர் கூறிய சமயத்தில், தங்களிடமும் செலவுக்குரிய பொருள் இல்லாதுபோன துக்கத்தினால் தங்கள் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடித்தவர்களாக (தம் இருப்பிடம்) திரும்பிச் சென்றார்களோ அவர்கள் மீதும் (போருக்குச் செல்லாததைப் பற்றி ஒரு குற்றமும் இல்லை.)
IFT
இதேபோன்று பின்வருபவர்கள் மீதும் எவ்வித ஆட்சேபணையும் இல்லை: அவர்களாகவே உம்மிடம் வந்து தங்களுக்கு வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும் எனக் கோரினர். “உங்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்வதற்கு என்னிடம் வசதி எதுவும் இல்லையே!” என நீர் கூறியபோது வேறு வழியின்றி அவர்கள் திரும்பிச் சென்றனர். மேலும், ஜிஹாதில் கலந்து கொள்வதற்காக, சொந்தமாக செலவு செய்யும் ஆற்றலைப் பெற்றிருக்கவில்லையே என்ற துயரத்தில் அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(யுத்தத்திற்குரிய) வாகனத்தை நீர் தருவீரென உம்மிடம் அவர்கள் வந்தபொழுது “எதன் மீது உங்களை நான் ஏற்றிச் செல்வேனோ அத்தகைய (வாகனத்தை) நான் பெற்றுக் கொள்ளவில்லையே” என்று கூறினீர், அவர்கள்தாம் செலவு செய்வதற்கு எதையும் பெற்றுக்கொள்ளவில்லையே என்ற துக்கத்தினால் தங்கள் கண்கள் கண்ணீர் வடித்தவாறு (தம் இருப்பிடம்) திரும்பிச் சென்றார்களே அவர்கள்மீது குற்றம் இல்லை.
Saheeh International
Nor [is there blame] upon those who, when they came to you for you to take them along, you said, "I can find nothing upon which to carry you." They turned back while their eyes overflowed with tears out of grief that they could not find something to spend [for the cause of Allah].
குற்றம் பிடிக்கப்பட வேண்டியவர்கள் (யாரெனில், தாம்) செல்வந்தர்களாக இருந்தும், (போருக்குச் செல்லாதிருக்க) உம்மிடம் அனுமதிகோரி, பின் தங்கியிருப்பவர்களுடன் தாங்களும் இருந்துவிட விரும்பினார்களே அவர்கள் தாம்; அவர்களுடைய இருதயங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான் - ஆகவே அவர்கள் (இதன் இழிவை) அறிய மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(எனினும்,) எவர்கள் பணக்காரர்களாகவும் இருந்து (போருக்குச் செல்லாதிருக்க) உம்மிடம் அனுமதி கோரி (போருக்குச் செல்லாது வீட்டில்) தங்கி விடுபவர்களுடன் தாங்களும் இருந்துவிட விரும்பினார்களோ அவர்கள் மீதுதான் குற்றம். இவர்களுடைய உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். ஆகவே, அவர்கள் (இதனால் ஏற்படும் இழிவை) அறிந்துகொள்ள மாட்டார்கள்.
IFT
ஆனால், எவர்கள் செல்வந்தர்களாயிருந்தும் (ஜிஹாதில் கலந்து கொள்ளாதிருக்க) உம்மிடம் அனுமதி கோருகின்றார்களோ அவர்கள் மீதே ஆட்சேபணை இருக்கின்றது. வீட்டில் தங்கியிருக்கும் பெண்கள் மற்றும் இயலாதோருடன் சேர்ந்திருக்கவே அவர்கள் விரும்பினார்கள். மேலும், அல்லாஹ் அவர்களின் உள்ளங்கள் மீது முத்திரையிட்டுவிட்டான்! ஆகவே, இவர்கள் (தங்களின் இந்த நடத்தை அல்லாஹ்வின் திருமுன் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை) இப்பொழுது அறிந்தார் இலர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(குற்றம் சுமத்தப்படும்) வழியெல்லாம் அவர்கள் பணக்காரர்களாக இருக்க உம்மிடம் அனுமதி கோரி (யுத்தத்திற்குச் செல்லாது வீட்டில்) தங்கிவிடுவோர்களுடன் தாங்களும் இருந்து விடுவதைப் பொருந்திக் கொண்டார்களே, அத்தகையவர்கள் மீதுதான், மேலும், அவர்களுடைய இதயங்கள்மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான், ஆகவே, அவர்கள் (இதனால் இதன் தீமையை) அறிந்து கொள்ள மாட்டார்கள்.
Saheeh International
The cause [for blame] is only upon those who ask permission of you while they are rich. They are satisfied to be with those who stay behind, and Allah has sealed over their hearts, so they do not know.
(முஃமின்களே! போரிலிருந்து வெற்றியோடு) நீங்கள் அவர்களிடம் திரும்பிய போது, (போருக்கு வராமலிருந்தது பற்றி) உங்களிடம் வந்து புகல் கூறுகின்றனர்; “புகல் கூறாதீர்கள்; நிச்சயமாக நாங்கள் உங்களை நம்ப மாட்டோம்; நிச்சயமாக உங்களைப் பற்றிய செய்திகளை எங்களுக்கு அல்லாஹ் (முன்னமேயே) அறிவித்து விட்டான்; சீக்கிரமே அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் உங்கள் செயல்களைக் கவனிப்பார்கள்; மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் நன்கறியும் அவனிடத்தில் பின்னர் நீங்கள் கொண்டுவரப்படுவீர்கள்; அப்போது அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான்” என்று (நபியே!) நீர் கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே! போர் செய்து) நீங்கள் (வெற்றியோடும், சுகத்தோடும்) அவர்களிடம் திரும்பிய சமயத்தில், உங்களிடம் அவர்கள் (வந்து போருக்கு வராததைப் பற்றி மன்னிப்பைத் தேடி) காரணம் சொல்கின்றனர். (அதற்கு அவர்களை நோக்கி நபியே!) நீர் கூறுவீராக: ‘‘நீங்கள் காரணம் கூறாதீர்கள். நாங்கள் உங்களை நம்பவே மாட்டோம். உங்கள் (வஞ்சக) விஷயங்களை நிச்சயமாக அல்லாஹ் எங்களுக்கு அறிவித்துவிட்டான். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அதிசீக்கிரத்தில் உங்கள் செயலை அறிந்து கொள்வார்கள். முடிவில், மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிந்த (அ)வனிடம் தான் கொண்டு போகப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அது சமயம் அவனே உங்களுக்கு அறிவிப்பான்.
IFT
நீங்கள் அவர்களிடம் திரும்ப வருவீர்களானால், உங்களிடம் அவர்கள் (விதவிதமான) சாக்குப் போக்குகள் கூறுவார்கள். ஆனால், நீர் கூறும்: “சாக்குப் போக்கு கூறாதீர்கள்; நீங்கள் கூறும் எதனையும் நாங்கள் ஏற்கமாட்டோம். உங்களுடைய நிலைமைகளை அல்லாஹ் எங்களுக்கு அறிவித்து விட்டான். இனி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களுடைய செயல் முறையை நிச்சயம் பார்ப்பார்கள்! பின்னர் மறைவானவை, வெளிப்படையானவை ஆகிய அனைத்தையும் அறியக் கூடியவன் பக்கம் நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்! அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதனை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளே! போர்செய்து) நீங்கள் (வெற்றியோடு) அவர்களிடம் திரும்புவீர்களானால் உங்களிடம் அவர்கள் (வராததற்காக) புகல் கூறுகின்றனர், (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக! “நீங்கள் புகல் கூறாதீர்கள், நாங்கள் உங்களை நம்பவே மாட்டோம், உங்கள் விஷயங்களை திட்டமாக அல்லாஹ் எங்களுக்கு அறிவித்து விட்டான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்கள் செயலைக் காணுவார்கள், பின்னர் மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிந்தவனிடம் நீங்கள் திருப்பப்படுவீர்கள், நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளை உங்களுக்கு அவன் அறிவிப்பான்.
Saheeh International
They will make excuses to you when you have returned to them. Say, "Make no excuse - never will we believe you. Allah has already informed us of your news [i.e., affair]. And Allah will observe your deeds, and [so will] His Messenger; then you will be taken back to the Knower of the unseen and the witnessed, and He will inform you of what you used to do."
(போரிலிருந்து வெற்றியுடன்) அவர்களிடம் நீங்கள் திரும்பி வருங்கால், நீங்கள் அவர்களைக்(குற்றம் பிடிக்காது) புறக்கணித்து விட்டுவிட வேண்டுமென்று அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள்; ஆகவே நீங்களும் அவர்களைப் புறக்கணித்துவிட்டு விடுங்கள் - அவர்கள் நிச்சயமாக அசுத்தமானவர்கள்; அவர்களுக்குப் புகலிடம் நரகமே; அதுவே அவர்களுக்கு தீவினைக்குரிய (சரியான) கூலியாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே! போரிலிருந்து வெற்றியுடன்) அவர்களிடம் நீங்கள் திரும்ப வந்தால், நீங்கள் அவர்களை(க் குற்றம் பிடிக்காது) புறக்கணித்து (விட்டு)விட, அவர்கள் அல்லாஹ்வின் மீது உங்கள் முன் சத்தியம் செய்வார்கள். ஆகவே, நீங்களும் அவர்களை புறக்கணித்து (விட்டு)விடுங்கள். நிச்சயமாக அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்கள் செல்லுமிடம் நரகம்தான். (அதுவே) அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலுக்குரிய தண்டனையாகும்.
IFT
நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிட வேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுங்கள்! ஏனென்றால், அவர்கள் அசுத்தமானவர்கள்; உண்மையில் அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீவினைகளுக்கு இதுவே கூலியாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளே! வெற்றியுடன்) அவர்களிடம் நீங்கள் திரும்பி விடுவீர்களானால் நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விட்டு விடுவதற்காக அல்லாஹ்வைக்கொண்டு அவர்கள் உங்களிடம் சத்தியம் செய்வார்கள், ஆகவே, நீங்களும் அவர்களைப் புறக்கணித்து விட்டுவிடுங்கள். நிச்சயமாக அவர்கள் அசுத்தமானவர்கள், அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவற்றிற்குக் கூலியாக அவர்கள் செல்லுமிடமும் நரகம்தான்.
Saheeh International
They will swear by Allah to you when you return to them that you would leave them alone. So leave them alone; indeed they are evil; and their refuge is Hell as recompense for what they had been earning.
யஹ்லிFபூன லகும் லிதர்ளவ் 'அன்ஹும் Fப இன் தர்ளவ் 'அன்ஹும் Fப இன்னல் லாஹ லா யர்ளா 'அனில் கவ்மில் Fபாஸிகீன்
முஹம்மது ஜான்
அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடையும் பொருட்டு அவர்கள் உங்களிடம் இவ்வாறு சத்தியம் செய்கிறார்கள்; நீங்கள் அவர்களைப் பற்றித் திருப்தியடைந்தாலும் மெய்யாக அல்லாஹ் பாவிகளான (இக்) கூட்டத்தாரைப் பற்றித் திருப்தியடைய மாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தி அடைவதற்காக அவர்கள் உங்களிடம் (இவ்வாறு பொய்) சத்தியம் செய்கின்றனர். அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடைந்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான இந்த மக்களைப் பற்றி திருப்தி அடையவே மாட்டான்.
IFT
நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டுவிட வேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டாலும் திண்ணமாக அல்லாஹ் பாவிகளான இத்தகைய மக்கள் மீது ஒருபோதும் திருப்தி கொள்ள மாட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடைவதற்காக அவர்கள் உங்களிடம் சத்தியம் செய்கின்றனர், ஆகவே, அவர்களைப்பற்றி நீங்கள் திருப்தியடைந்தாலும், நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான இந்தக் கூட்டத்தாரைப் பற்றித் திருப்தியடையமாட்டான்.
Saheeh International
They swear to you so that you might be satisfied with them. But if you should be satisfied with them - indeed, Allah is not satisfied with a defiantly disobedient people.
காட்டரபிகள் குஃப்ரிலும் (நிராகரிப்பிலும்) நயவஞ்சகத்திலும் மிகவும் கொடியவர்கள்; அல்லாஹ் தன்னுடைய தூதர் மீது அருளியிருக்கும் வேதத்தின் வரம்புகளை அவர்கள் அறியாதிருக்கவே தகுதியானவர்கள். இன்னும் அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும்; ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நிராகரிப்பிலும் வஞ்சகத்திலும் கிராமத்து அரபிகள் மிகக் கொடியவர்கள். அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கி இருக்கும் (வேதத்தின்) சட்ட வரம்புகளை அறிந்து கொள்ளவும் வசதியற்றவர்கள். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவன், மிக்க ஞானமுடையவன் ஆவான்.
IFT
இந்த நாட்டுப்புற அரபிகள் இறைநிராகரிப்பிலும் நயவஞ்சகத்திலும் மிகவும் கடுமையானவர்களாவர். மேலும், அல்லாஹ் தன்னுடைய தூதர் மீது இறக்கியருளிய தீனின் (நெறியின்) வரையறைகளை அவர்கள் அறியாதிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அவர்களிடம் அதிகம் இருக்கின்றன. மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அரபிகளிலுள்ள) கிராமவாசிகள் நிராகரிப்பிலும் ‘நிஃபாக்’கிலும் (-கபடத்தனத்திலும்) மிகக் கொடியவர்கள், அன்றியும், அல்லாஹ் தன் தூதர்மீது இறக்கிவைத்திருக்கும் (வேத வரம்புகளை அறியாதிருக்கவும் மிகத் தகுதியானவர்கள், (கல்வியால் குறைந்தவர்களாவா்.) இன்னும் அல்லாஹ் யாவற்றையும் நன்கறிகிறவன், தீர்க்கமான அறிவுடையவன்.
Saheeh International
The bedouins are stronger in disbelief and hypocrisy and more likely not to know the limits of what [laws] Allah has revealed to His Messenger. And Allah is Knowing and Wise.
கிராமப்புறத்தவர்களில் சிலர் (தர்மத்திற்காகச்) செலவு செய்வதை நஷ்டமாகக் கருதுபவர்களும் இருக்கிறார்கள்; நீங்கள் (காலச் சுழலில் சிக்கித்) துன்பம் அடைய வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறார்கள் - ஆனால் அவர்கள் மீதுதான் கெட்டகாலம் சுழன்று கொண்டு இருக்கிறது - இன்னும், அல்லாஹ் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும்(யாவற்றையும்) நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(கல்வி ஞானமற்ற) கிராமத்து அரபிகளில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (தர்மத்திற்காகச்) செய்யும் செலவை நஷ்டம் என்று கருதி, நீங்கள் (காலச்) சக்கரத்தில் சிக்கி (கஷ்டத்திற்குள்ளாகி) விடுவதை எதிர்பார்க்கின்றனர். எனினும், அவர்கள் (தலை)மீதுதான் வேதனையின் சக்கரம் சுற்றிக் கொண்டு இருக்கிறது. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
IFT
இந்த நாட்டுப்புற அரபிகளில் சிலர் இப்படியும் இருக்கின்றனர்; இறைவழியில் சிறிதளவு செலவு செய்வதை (தங்கள் மீது விதிக்கப்பட்ட) தண்டத் தொகையாகக் கருதுகின்றார்கள். உங்களுக்குக் கெட்ட காலம் வரவேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். (அதாவது, நீர் ஏதேனும் துன்பத்தில் மாட்டிக் கொண்டால் அப்போது நீர் எந்த அமைப்பில் அவர்களைப் பிணைத்து வைத்திருக்கின்றீரோ அந்த அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்து தம்மை முற்றிலும் விடுவித்துக் கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.) உண்மை யாதெனில், கெட்ட காலம் அவர்களையே சூழ்ந்துள்ளது. மேலும், அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அரபிகளிலுள்ள) கிராமவாசிகளில் (சிலர்) அவர்கள் (தர்மத்திற்காகச்) செய்யும் செலவை நஷ்டமாக (க்கருதி அதை) ஆக்குவோரும் இருக்கின்றனர். (ஆபத்துச்) சுழற்ச்சிகளையும் அவர்கள் உங்களுக்கு எதிர் பார்க்கின்றனர். (ஆபத்துகளின்) தீயசுழற்ச்சி அவர்கள் மீதுதான் இருக்கிறது, மேலும், அல்லாஹ் செவியுறுகிறவன்; நன்கறிந்தவன்.
Saheeh International
And among the bedouins are some who consider what they spend as a loss and await for you turns of misfortune. Upon them will be a misfortune of evil. And Allah is Hearing and Knowing.
கிராமப்புறத்தவர்களில் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொள்பவர்களும் இருக்கின்றார்கள்; தாம் (தர்மத்திற்காகச்) செலவு செய்வது தங்களுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தையும், இறை தூதரின் பிரார்த்தனையும் (தங்களுக்குப்) பெற்றுத்தரும் என நம்புகிறார்கள்; நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வின்) அண்மையில் கொண்டு சேர்ப்பதுதான்; அதி சீக்கிரத்தில் அல்லாஹ் அவர்களைத் தன் ரஹ்மத்தில் (பேரருளில்) புகுத்துவான் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட (நாட்டுப்புறத்து) அரபிகளில் பலர் இருக்கின்றனர். அவர்கள், தாங்கள் செய்யும் தானங்களை அல்லாஹ்விடம் தங்களை நெருக்கமாக்கி வைக்கும் வணக்கங்களாகவும், (அவனுடைய) தூதரின் பிரார்த்தனைகளுக்கு வழியாகவும் எடுத்துக் கொள்கின்றனர். நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வுக்கு)ச் சமீபமாக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் அவர்களை அதிசீக்கிரத்தில் தன் அன்பிலும் புகுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுத்துக் கருணை செய்பவன் ஆவான்.
IFT
இந்த நாட்டுப்புற அரபிகளில் சிலர் இவ்வாறும் உள்ளனர்: அல்லாஹ்வின் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொள்கின்றனர். மேலும், அவர்கள் எதனைச் செலவழித்தாலும், அதனை அல்லாஹ்விடம் நெருக்கத்தையும் தூதரிடமிருந்து அருள்பாலிக்கப்படுவதற்குரிய பிரார்த்தனைகளையும் அடைவதற்கான சாதனமாக எடுத்துக்கொள்கின்றார்கள். ஆம்! திண்ணமாக, அது (அல்லாஹ்விடம்) அவர்கள் நெருங்குவதற்குரிய சாதனமாகும். தன்னுடைய கருணையில் அல்லாஹ் அவர்களை நிச்சயம் நுழைவிப்பான்! திண்ணமாக, அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அரபிகளிலுள்ள) கிராமவாசிகளில் (சிலர்) அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங் கொள்கின்ற சிலரும் இருக்கின்றனர், அவர்கள், தாம் (தர்மமாகச்) செலவு செய்வதை அல்லாஹ்விடத்தில் நெருக்கங்களுக்காகவும் (அவனுடைய தூதரின் பிரார்த்தனைகளுக்காகவும் ஆக்குகின்றனர், நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வுக்கு)ச் சமீபமாக்கிவைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ் அவர்களை தன் அருளில் நுழைவிப்பான்; நிச்சயமாக அல்லாஹ், மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்.
Saheeh International
But among the bedouins are some who believe in Allah and the Last Day and consider what they spend as means of nearness to Allah and of [obtaining] invocations of the Messenger. Unquestionably, it is a means of nearness for them. Allah will admit them to His mercy. Indeed, Allah is Forgiving and Merciful.
இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
அப்துல் ஹமீது பாகவி
முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாமில்) முதலாவதாக முந்திக் (கொண்டு நம்பிக்கை) கொண்டார்களோ அவர்களையும், நற்செயல்களில் (மெய்யாகவே) இவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகிறான். இவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர். மேலும், தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களை இவர்களுக்கென தயார்படுத்தி வைத்திருக்கிறான். அவற்றிலேயே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.
IFT
(இஸ்லாத்தின் அழைப்புக்கு) முதன் முதலில் பதிலளித்த முஹாஜிர்கள், அன்ஸாரிகளைக் குறித்தும், அவர்களை யார் நேர்மையோடு பின்பற்றினார்களோ அவர்களைக் குறித்தும் அல்லாஹ் திருப்தி கொண்டான். அவர்களும் அவனைக் குறித்து திருப்தி அடைந்தார்கள். கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனத் தோப்புகளை அல்லாஹ் அவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கின்றான்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் (இஸ்லாத்தை ஏற்க) முதலாவதாக முந்திக் கொண்டவர்களும் (அவர்களின் சொல், செயல்களாகிய) நற்கருமத்தில் அவர்களைப் பின்பற்றினார்களே அவர்களும்-அவர்களை அல்லாஹ் திருப்தியடைந்தான், அவர்களும் (அல்லாஹ்வாகிய) அவனை திருப்தியடைந்தனர், அன்றியும், சுவனபதிகளை அவர்களுக்கென அவன் தயாராக்கி வைத்திருக்கின்றான், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள், அவற்றிலேயே நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள், இது மகத்தான வெற்றியாகும்.
Saheeh International
And the first forerunners [in the faith] among the Muhajireen and the Anṣar and those who followed them with good conduct - Allah is pleased with them and they are pleased with Him, and He has prepared for them gardens beneath which rivers flow, wherein they will abide forever. That is the great attainment.
உங்களைச் சுற்றியுள்ள கிராமப்புறத்தவர்களில் நயவஞ்சகர்களும் இருக்கிறார்கள்; இன்னும் மதீனாவில் உள்ளவர்களிலும் நயவஞ்சகத்தில் நிலைபெற்றுவிட்டவர்களும் இருக்கிறார்கள் - (நபியே!) அவர்களை நீர் அறிய மாட்டீர், நாம் அவர்களை நன்கறிவோம்; வெகுசீக்கிரத்தில் நாம் அவர்களை இருமுறை வேதனை செய்வோம் - பின்னர் அவர்கள் கடுமையான வேதனையின்பால் தள்ளப்படுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) உங்களைச் சூழவுள்ள (கிராமங்களில் வசிக்கும்) கிராமத்து அரபிகளில் நயவஞ்சகர்கள் (பலர்) இருக்கின்றனர். (அதிலும்) மதீனாவிலுள்ள பலர் வஞ்சகத்திலேயே ஊறிக் கிடக்கின்றனர். (நபியே!) நீர் அவர்களை அறியமாட்டீர்; நாம் அவர்களை நன்கு அறிவோம். அதிசீக்கிரத்தில் நாம் அவர்களை இருமுறை (கடினமாக) வேதனை செய்வோம். முடிவில் மகத்தான வேதனையின் பக்கம் அவர்கள் விரட்டப்படுவார்கள்.
IFT
உங்களைச் சுற்றியுள்ள நாட்டுப்புற அரபிகளில் பலர் நயவஞ்சகர்களாக இருக்கின்றனர். இதேபோன்று மதீனாவாசிகளிலும் உள்ளனர். அவர்களோ நயவஞ்சகத்தில் ஊறித் திளைத்து இருக்கிறார்கள். அவர்களை நீர் அறிய மாட்டீர்; நாம் அறிவோம். வெகு விரைவில் அவர்களுக்கு இருமடங்கு தண்டனை வழங்குவோம். பிறகு, அவர்கள் மாபெரும் தண்டனைக்காக திரும்பக் கொண்டுவரப்படுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களைச் சுற்றியுள்ள (அரபிகளிலுள்ள) கிராமத்துவாசிகளில் முனாஃபிக்குகளும் (வேஷதாரிகளும்) இருக்கின்றனர், மதீனாவாசிகளிலும் சிலர் நிஃபாக்கிலேயே (கபடத்திலேயே) நிலைத்து விட்டவர்களும் இருக்கின்றார்கள், (நபியே!) நீர் அவர்களை அறியமாட்டீர், நாமே அவர்களை அறிவோம், அவர்களை இருமுறை நாம் வேதனை செய்வோம், பின்னர் (முடிவாக) கடுமையான வேதனையின்பால் அவர்கள் திருப்பப்படுவார்கள்.
Saheeh International
And among those around you of the bedouins are hypocrites, and [also] from the people of Madīnah. They have persisted in hypocrisy. You, [O Muhammad], do not know them, [but] We know them. We will punish them twice [in this world]; then they will be returned to a great punishment.
வேறு சிலர் தம் குற்றங்களை ஒப்புக்கொள்கின்றனர்; ஆனால் அவர்கள் (அறியாது நல்ல) ஸாலிஹான காரியத்தைக் கெட்டகாரியத்துடன் சேர்த்து விடுகிறார்கள். ஒரு வேளை அல்லாஹ் அவர்களின் (தவ்பாவை ஏற்று) மன்னிக்கப் போதும். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
வேறு சிலர் (இருக்கின்றனர். அவர்கள்) தங்கள் குற்றங்களை ஒப்புக் கொள்கின்றனர். (அறியாமையினால்) நல்ல காரியத்தையும் மற்ற (சில) கெட்ட(காரியத்)தையும் கலந்து செய்துவிட்டனர். அல்லாஹ் அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்துவிடலாம். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிகக் கருணையாளன் ஆவான்.
IFT
மேலும், தம் குற்றங்களை ஒப்புக்கொண்டிருக்கும் வேறு சிலரும் (அவர்களில்) உள்ளனர்; அவர்கள் நற்செயலோடு தீயசெயலையும் கலந்துவிட்டிருக்கின்றார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்கள் மீது கருணை புரியக்கூடும். ஏனென்றால் திண்ணமாக அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனும், கருணை புரிபவனுமாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் வேறு சிலர், (அவர்கள்) தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்கின்றனர்; நல்ல செயலை மற்றொரு தீய செயலைக் கொண்டும் கலந்து விட்டனர்; அல்லாஹ் அவர்(களுடைய தவ்பாவை ஏற்று பாவங்)களை மன்னித்துவிடப் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ், மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்.
Saheeh International
And [there are] others who have acknowledged their sins. They had mixed [i.e., polluted] a righteous deed with another that was bad. Perhaps Allah will turn to them in forgiveness. Indeed, Allah is Forgiving and Merciful.
(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக; நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! அவர்கள் தங்கள் குற்றத்திற்குப் பரிகாரமாகக் கொண்டு வந்திருக்கும்) அவர்களுடைய பொருள்களிலிருந்து தர்மத்தை நீர் எடுத்துக் கொண்டு அவர்களை (உள்ளும் புறமும்) பரிசுத்தமாக்கி வைத்து அவர்களுக்காக (துஆ) பிரார்த்தனை செய்வீராக. உங்கள் (துஆ) பிரார்த்தனை நிச்சயமாக அவர்களுக்கு ஆறுதலளிக்கும். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிபவன் ஆவான்.
IFT
(நபியே!) அவர்களுடைய பொருள்களிலிருந்து தானத்தை வசூல் செய்துகொண்டு அதன் மூலம் அவர்களைத் தூய்மையாக்குவீராக; (நல்வழியில்) அவர்களை முன்னேறச் செய்வீராக! மேலும், அவர்களுக்காக (நல்லருள் வேண்டிப்) பிரார்த்திப்பீராக! ஏனென்றால், உம்முடைய பிரார்த்தனை திண்ணமாக அவர்களுக்கு சாந்தி அளிக்கக்கூடியதாகும். மேலும், அல்லாஹ் யாவற்றையும் கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை (ஜகாத்தை) எடுப்பீராக! அதனால் அவர்களை நீர் சுத்தப்படுத்தி அவர்களின் அகங்களை தூய்மையாக்கி வைப்பீராக! மேலும், அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! நிச்சயமாக உமது பிரார்த்தனை அவர்களுக்கு நிம்மதியளிப்பதாகும், மேலும் அல்லாஹ், செவியேற்கிறவன், மிக்க அறிகிறவன்.
Saheeh International
Take, [O Muhammad], from their wealth a charity by which you purify them and cause them increase, and invoke [Allah's blessings] upon them. Indeed, your invocations are reassurance for them. And Allah is Hearing and Knowing.
நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களிடமிருந்து தவ்பாவை - மன்னிப்புக் கோருதலை - ஒப்புக்கொள்கிறான் என்பதையும், (அவர்களுடைய) தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள் புரிபவன்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக, அல்லாஹ் தன் அடியார்களின் மன்னிப்புக் கோருதலை அங்கீகரிக்கிறான் என்பதையும், தர்மங்களை அவனே எடுத்துக் கொள்கிறான் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை மன்னித்துக் கருணை காட்டுபவன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?
IFT
திண்ணமாக, அல்லாஹ் தன்னுடைய அடிமைகளின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்கின்றான்; அவர்களின் தானதர்மங்களை அங்கீகரிக்கின்றான் என்பதையும், அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கின்றான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ்-தன் அடியார்களிடமிருந்து தவ்பாவை (மன்னிப்புக் கோருதலை) அவனே ஒப்புக்கொள்கின்றான் என்பதையும், தருமங்களையும் அவனே எடுத்துக் கொள்கிறான் என்பதையும் இன்னும் நிச்சயமாக அல்லாஹ், அவனே தவ்பாக்களை மிகுதியாக ஏற்போன், மிகக் கிருபையுடையோன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?
Saheeh International
Do they not know that it is Allah who accepts repentance from His servants and receives charities and that it is Allah who is the Accepting of Repentance, the Merciful?
(நபியே! அவர்களிடம்:) “நற் செயல்களைச் செய்யுங்கள்; திடனாக உங்கள் செயல்களை அல்லாஹ்வும், அவன் தூதரும், முஃமின்களும் பார்த்துக் கொண்டுதானிருப்பார்கள்; மேலும், இரகசியங்களையும், பரகசிங்களையும் அறியும் இறைவனிடத்தில் நீங்கள் மீட்டப்படுவீர்கள் - அப்பொழுது, அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு அறிவிப்பான்” என்று கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘நீங்கள் செய்பவற்றை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்ற நம்பிக்கையாளர்களும் உங்கள் செயலை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். மேலும், மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அறிந்தவன் பக்கம் நிச்சயமாக நீங்கள் கொண்டு போகப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்த(து எத்தகையது என்ப)தை அது சமயம் அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான்.
IFT
மேலும், (நபியே! இம்மக்களிடம்) கூறிவிடுவீராக: “நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருங்கள்! அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், இறை நம்பிக்கையாளர்களும் உங்களுடைய நடத்தை எப்படியிருக்கிறது என்பதைப் பார்க்கத்தான் செய்வார்கள். பிறகு, மறைவான வெளிப்படையான அனைத்தையும் அறிந்தவனிடம் அதிவிரைவில் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்தவை குறித்து உங்களுக்கு அவன் அறிவித்து விடுவான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) நீர் கூறுவீராக “நீங்கள் செய்பவற்றைச் செய்யுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விசுவாசிகளும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள், மேலும், மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிந்தவன்பால் நிச்சயமாக நீங்கள் திருப்பப்படுவீர்கள், அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான்.
Saheeh International
And say, "Do [as you will], for Allah will see your deeds, and [so will] His Messenger and the believers. And you will be returned to the Knower of the unseen and the witnessed, and He will inform you of what you used to do."
அல்லாஹ்வின் உத்தரவை எதிர்ப்பார்க்கப்படுகின்ற மற்றும் சிலரும் இருக்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களை தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னிக்கலாம். அல்லாஹ் அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து(த் தீர்ப்புக்காக) நிறுத்தப்பட்டுள்ள வேறு சிலரும் இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னித்துவிடலாம். அல்லாஹ் (அவர்களுடைய செயல்களை) நன்கறிந்தவன், மிக்க ஞானமுடையவன் ஆவான்.
IFT
மேலும், இப்படியும் சிலர் இருக்கின்றார்கள்: அவர்களின் விவகாரம் அல்லாஹ்வின் ஆணைக்காக தாமதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவன் நாடினால் அவர்களைத் தண்டிப்பான்; நாடினால் அவர்களை மன்னித்து விடுவான். அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனும், நுண்ணறிவாளனுமாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வேறு சிலரோ அல்லாஹ்வின் உத்தரவிற்காக பிற்படுத்தப்பட்டுள்ளனர், (அல்லாஹ்) ஒருவேளை அவர்களை வேதனை செய்யலாம் அல்லது அவர்களை மன்னித்து (விட்டு அவர்களின் தவ்பாவை அங்கீகரித்து)ம் விடலாம், மேலும், அல்லாஹ் (அவர்கள் செயலை) நன்கறிகிறவன், தீர்க்கமான அறிவுடையவன்.
Saheeh International
And [there are] others deferred until the command of Allah - whether He will punish them or whether He will forgive them. And Allah is Knowing and Wise.
இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்: “நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் (தங்கள் உள்ளங்களிலுள்ள) நிராகரிப்பின் காரணமாக, நம்பிக்கை யாளர்களுக்கு இடையில் பிரிவினையை உண்டு பண்ணி தீங்கு இழைப்பதற்காக, முன்னர் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் புரிந்தவர்களுக்குப் பதுங்குமிடமாக இருப்பதற்கு ஒரு மஸ்ஜிதைக் கட்டி இருக்கிறார்களோ அவர்கள், (தங்கள் குற்றத்தை மறைத்துவிடக் கருதி) ‘‘நிச்சயமாக நாங்கள் நன்மையைத் தவிர (தீமையைக்) கருதவில்லை'' என்று சத்தியம் செய்கின்றனர். ஆனால் அல்லாஹ்வோ நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்று சாட்சி கூறுகிறான்.
IFT
மேலும், (அவர்களில்) சிலர் ஒரு பள்ளிவாசலை உருவாக்கியிருக்கின்றார்கள்; எதற்காகவெனில் (சத்திய அழைப்பிற்கு) ஊறு விளைவிக்க வேண்டும்; (அல்லாஹ்வுக்கு அடிபணிவதற்குப் பதிலாக அவனை) நிராகரிக்க வேண்டும்; மேலும், நம்பிக்கையாளர்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும்; மேலும், இதற்குமுன் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துக் கொண்டிருந்த ஒருவனுக்குப் பதுங்குமிடமாக்க வேண்டும் என்பதற்காக! மேலும், “நாங்கள் நன்மையைத் தவிர வேறெதனையும் நாடவில்லை” என்று அவர்கள் சத்தியம் செய்து கூறுவார்கள். ஆனால், திண்ணமாக அவர்கள் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சி அளிக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(முஸ்லிம்களுக்குத்) தீங்கிழைப்பதற்காகவும் (அல்லாஹ்வை) நிராகரிப்பதற்காகவும் விசுவாசிகளுக்கிடையில் பிரிவினையை உண்டு பண்ணுவதற்காகவும் முன்னர் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் விரோதமாய் போர் புரிந்தவர்களுக்குப் பதுங்குமிடமாயிருப்பதற்காகவும் ஒரு பள்ளியைக் கட்டியிருக்கின்றார்களே அத்தகையோர்-(அந்நயவஞ்சகர்களில் இருக்கின்றனர்.) மேலும், “நிச்சயமாக நாங்கள் நன்மையைத் தவிர வேறெதனையும் நாடவில்லை” என்று திண்ணமாக சத்தியமும் செய்கின்றனர், இன்னும், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்.
Saheeh International
And [there are] those [hypocrites] who took for themselves a mosque for causing harm and disbelief and division among the believers and as a station for whoever had warred against Allah and His Messenger before. And they will surely swear, "We intended only the best." And Allah testifies that indeed they are liars.
ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே!) நீர் ஒருக்காலத்திலும் (அங்கு போய்) அதில் நிற்க வேண்டாம். ஆரம்ப தினத்திலேயே (அல்லாஹ்வின்) பயத்தின் மீது (பரிசுத்தமான எண்ணத்துடன்) அமைக்கப்பட்ட மஸ்ஜிதுதான் நீர் நின்று தொழ(வும் தொழவைக்கவும்) மிகத் தகுதியுடையது. அதிலிருக்கும் மனிதர்களும் பரிசுத்தவான்களாக இருப்பதையே விரும்புகின்றனர். அல்லாஹ்வும் (இத்தகைய) பரிசுத்தவான்களையே நேசிக்கிறான்.
IFT
அப்படிப்பட்ட இடத்தில் நீர் ஒருபோதும் தொழ வேண்டாம். தொடக்க நாளிலிருந்து இறையச்சத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டிருக்கின்ற பள்ளிவாசல்தான் நீர் தொழுவதற்கு மிகவும் தகுதியானதாகும். தூய்மையுடன் வாழ விரும்பும் மனிதர்கள் அங்கு உள்ளனர். தூய்மையை மேற்கொள்பவர்களைத்தாம் அல்லாஹ்வும் நேசிக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் ஒருபோதும் அதில் (தொழுவதற்காக) நிற்க வேண்டாம், ஆரம்ப நாளிலிருந்தே (அல்லாஹ்வின்) பயபக்தியின் மீது அஸ்திவாரமிடப்பட்ட பள்ளியானது, அதில்தான், நீர் (தொழுகைக்காக) நிற்பது மிகத் தகுதியுடையது, பரிசுத்தமாக இருப்பதையே விரும்பும் சிறந்த மனிதர்கள் அதில் இருக்கின்றனர், அல்லாஹ்வும் (இத்தகைய) பரிசுத்தமாக இருப்போரை நேசிக்கின்றான்.
Saheeh International
Do not stand [for prayer] within it - ever. A mosque founded on righteousness from the first day is more worthy for you to stand in. Within it are men who love to purify themselves; and Allah loves those who purify themselves.
யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா? அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை - அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி, பரிசுத்த(மான எண்ண)த்தின் மீதே மஸ்ஜிதின் அஸ்திவாரத்தை அமைத்தவன் மேலா? அல்லது (சரிந்துவிடக் கூடியவாறு) ஓடையின் அருகில் அதுவும் சரிந்து அவனுடன் நரக நெருப்பில் விழக்கூடியவாறு மஸ்ஜிதின் அஸ்திவாரத்தை அமைத்தவன் மேலா? (இத்தகைய) அநியாயக்கார மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை.
IFT
(இனி நீர் என்ன கருதுகின்றீர்?) இறையச்சத்தையும், இறை உவப்பையும் அடிப்படையாகக் கொண்டு தம் கட்டடத்தை நிர்மாணித்தவர் சிறந்தவரா? அல்லது வெள்ளத்தால் அரிக்கப்பட்ட உறுதியற்ற ஓடைக்கரையின் மீது தனது கட்டடத்தை நிர்மாணித்து, பிறகு அக்கட்டடத்துடன் சேர்ந்து தானும் நரக நெருப்பில் நேராக வந்து விழுந்து விட்டானே அவன் சிறந்தவனா? அக்கிரமம் இழைக்கும் இத்தகையக் கூட்டத்தாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அல்லாஹ்விடமிருந்துள்ள பயபக்தியின் மீதும் (அவனுடைய) பொருத்தத்தின் மீதும் தன் கட்டடத்தை அஸ்திவாரமிட்டவர் சிறந்தவரா? அல்லது தன் கட்டிடத்தை வெள்ளத்தால் அரிக்கப்பட்டு விழுந்துவிடும் ஓரக்கரையின்மீது அஸ்திவாரமிட்டவரா? ஆகவே, அது அவருடன் சேர்ந்து நரக நெருப்பில் சரிந்து விழுந்துவிட்டது, மேலும், அநியாயக்கார சமூகத்தாரை அல்லாஹ் நேர் வழியில், செலுத்தமாட்டான்.
Saheeh International
Then is one who laid the foundation of his building on righteousness [with fear] from Allah and [seeking] His approval better or one who laid the foundation of his building on the edge of a bank about to collapse, so it collapsed with him into the fire of Hell? And Allah does not guide the wrongdoing people.
அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் (இடிக்கப்பட்டது); அவர்கள் உள்ளங்களிலே ஒரு வடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும்வரை (அதாவது மரணிக்கும் வரை). அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானமிக்கவன்.
அப்துல் ஹமீது பாகவி
தங்கள் உள்ளங்களில் சந்தேகத்துடன் அவர்கள் கட்டிய இக்கட்டடம் அவர்களுடைய உள்ளங்கள் துண்டு துண்டாகும் வரை (முள்ளைப் போல் தைத்துக் கொண்டே) இருக்கும். அல்லாஹ் (இவர்கள் அனைவரையும்) நன்கறிந்தவன், மிக்க ஞானமுடையவன் ஆவான்.
IFT
அவர்கள் எழுப்பிய இந்தக் கட்டடம் அவர்களின் உள்ளங்களில் என்றைக்கும் அமைதியின்மையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்; அவர்களின் உள்ளங்கள் நொறுங்கினால் ஒழிய (அந்த அமைதியின்மை நீங்குவதற்கு எவ்வழியும் இல்லை!) அல்லாஹ் அனைத்தையும் தெரிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் கட்டிய அவர்களின் கட்டடம் அவர்களின் இதயங்களில் சந்தேகத்தை உடையதாகவே-அவர்களுடைய இதயங்கள் துண்டு துண்டா(கி அவர்கள் மரணிக்)கும்வரை இருந்து கொண்டிருக்கும், மேலும், அல்லாஹ் யாவரையும் நன்கறிகிறவன், தீர்க்கமான அறிவுடையவன்.
Saheeh International
Their building which they built will not cease to be a [cause of] skepticism in their hearts until their hearts are cut [i.e., stopped]. And Allah is Knowing and Wise.
(நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ், நம்பிக்கையாளர்களுடைய உயிர்களையும் பொருள்களையும் கண்டிப்பாக அவர்களுக்குச் சொர்க்கம் தருவதாக(க் கூறி,) நிச்சயமாக விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்து (எதிரிகளை) கொல்வார்கள்; (அல்லது) கொல்லப்பட்டு (இறந்து) விடுவார்கள். (இவ்விரு நிலைமைகளிலும் அவர்களுக்குச் சொர்க்கம் தருவதாக) தவ்றாத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் (அல்லாஹ்) வாக்களித்துத் தன்மீது கடமையாக்கிக் கொண்டிருக்கிறான். அல்லாஹ்வைவிட வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவன் யார்? ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் செய்த இவ்வர்த்தகத்தைப் பற்றி மகிழ்ச்சியடையுங்கள். நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றி.
IFT
உண்மையாக, அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களின் உயிர்களையும், உடைமைகளையும் சுவனத்திற்குப் பகரமாய் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் வழியில் போர் புரிகின்றார்கள்; கொல்கின்றார்கள்; கொல்லப்படுகின்றார்கள் அவர்களுக்கு (சுவனம் கிடைக்கும் எனும் இந்த வாக்குறுதி) அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள ஒரு திடமான வாக்குறுதியாகும். இதுவோ தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் ஆகியவற்றிலும் உள்ளது. மேலும், அல்லாஹ்வைவிட தனது வாக்குறுதியை சிறப்பாக நிறைவேற்றுபவன் யார்? எனவே, நீங்கள் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட உங்களுடைய இந்த வியாபாரம் குறித்து மகிழ்ச்சி கொண்டாடுங்கள்! இதுவே மாபெரும் வெற்றியாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ், விசுவாசிகளிடமிருந்து அவர்களின் உயிர்களையும் அவர்களது செல்வங்களையும் நிச்சயமாக அவர்களுக்குச் சுவனம் உண்டு என்பதற்குப் பகரமாக (விலைக்கு) வாங்கிக் கொண்டான், அவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்து, அப்போது (விரோதிகளைக்) கொன்று விடுவார்கள், (அல்லது விரோதிகளால்) கொல்லப்பட்டும் விடுவார்கள், (இவர்களுக்குச் சுவனபதி தருவதாக) தவ்றாத்திலும், இன்ஜீலிலும் குர்ஆனிலும் (அல்லாஹ்) தன்மீது உண்மையான வாக்குறுதியாக (ஆக்கிக் கொண்டிருக்கின்றான்.) அல்லாஹ்வைவிட தன் வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே (விசுவாசிகளாகிய) நீங்கள் எதைக் கொண்டு ஒப்பந்தம் செய்து கொண்டீர்களோ அத்தகைய உங்களுடைய (இவ்)வர்த்தகத்தைக் கொண்டு மகிழ்ச்சியடையுங்கள், மேலும், இதுவேதான் மகத்தான வெற்றியாகும்.
Saheeh International
Indeed, Allah has purchased from the believers their lives and their properties [in exchange] for that they will have Paradise. They fight in the cause of Allah, so they kill and are killed. [It is] a true promise [binding] upon Him in the Torah and the Gospel and the Qur’an. And who is truer to his covenant than Allah? So rejoice in your transaction which you have contracted. And it is that which is the great attainment.
மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!
அப்துல் ஹமீது பாகவி
பாவத்திலிருந்து விலகிக் கொண்டவர்களும், (இறைவன் ஒருவனையே) வணங்குபவர்களும், (இரவு பகலாக அவனைத்) துதி செய்து புகழ்பவர்களும், நோன்பு நோற்பவர்களும், (மார்க்கக் கல்வியைக் கற்றல், மார்க்கப் பிரச்சாரம் செய்தல் போன்ற மார்க்க விஷயத்திற்காக) பிரயாணம் செய்பவர்களும், குனிந்து சிரம் பணி(ந்து தொழு)பவர்களும் நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவுபவர்களும், பாவமான காரியங்களை விலக்குபவர்களும், அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளைப் பேணி நடப்பவர்களும் ஆகிய இத்தகைய (உண்மை) நம்பிக்கையாளர்களுக்கு (சொர்க்கம் கிடைக்குமென்று நபியே!) நற்செய்தி கூறுவீராக.
IFT
அல்லாஹ்விடம் மீண்டும் மீண்டும் திரும்புபவர்கள். அவனுக்கு அடிபணிந்து வாழ்பவர்கள், அவன் புகழ்பாடுபவர்கள், அவனுக்காகச் சுற்றித்திரிபவர்கள், அவன் முன்னால் குனிந்தும் சிரம் பணிந்தும் வணங்குபவர்கள், நன்மை புரியுமாறு ஏவுபவர்கள், மேலும் தீமையிலிருந்து தடுப்பவர்கள், அல்லாஹ்வின் வரம்புகளைக் காப்பவர்கள் (இத்தகைய மாண்புடைய இறை நம்பிக்கையாளர்கள் தாம் அல்லாஹ்விடம் ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் ஆவர்). மேலும் (நபியே!) நீர் இந்நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி அறிவிப்பீராக!
[Such believers are] the repentant, the worshippers, the praisers [of Allah], the travelers [for His cause], those who bow and prostrate [in prayer], those who enjoin what is right and forbid what is wrong, and those who observe the limits [set by] Allah. And give good tidings to the believers.
முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல.
அப்துல் ஹமீது பாகவி
இணைவைத்து வணங்குபவர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கோ நம்பிக்கையாளர்களுக்கோ தகுமானதல்ல; அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய உறவினர்களாகயிருந்தாலும் சரியே! அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தான் என்று இவர்களுக்குத் தெளிவானதன் பின்னர் (எவ்வாறு அவர்களுக்கு மன்னிப்புக் கோரலாம்?)
IFT
இறைவனுக்கு இணைவைப்பவர்கள் நரகத்திற்குரியவர்கள் என்பது நன்கு தெளிவாகிவிட்ட பின்னர் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திப்பது நபிக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் ஏற்ற செயல் அல்ல அவர்கள் நெருங்கிய உறவினராய் இருப்பினும் சரியே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நபிக்கோ,-விசுவாசிகளுக்கோ இணைவைத்துக் கொண்டிருப்போருக்காக–அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய பந்துக்களாக இருந்தாலும் அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தாம் என்று இவர்களுக்கு தெளிவானதன் பின்னர் - மன்னிப்புக் கோருவது ஆகுமானதல்ல.
Saheeh International
It is not for the Prophet and those who have believed to ask forgiveness for the polytheists, even if they were relatives, after it has become clear to them that they are companions of Hellfire.
இப்ராஹீம் (நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தம் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவேயன்றி வேறில்லை; மெய்யாகவே, அவர் (தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்பது தெளிவாகியதும் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார் - நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.
அப்துல் ஹமீது பாகவி
இப்றாஹீம் (நபி) தன் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தன் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவே தவிர வேறில்லை. (அவருடைய தந்தை) அல்லாஹ்வுக்கு எதிரி எனத் தெளிவாகத் தெரிந்ததும் அ(வருக்காக மன்னிப்புக் கோருவ)திலிருந்து அவர் விலகிக் கொண்டார். நிச்சயமாக இப்றாஹீம் அதிகம் பிரார்த்திப்பவரும் மிக இரக்கமும் அடக்கமும் உடையவரும் ஆவார்.
IFT
இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவமன்னிப்புக் கோரியது அவருக்குத் தாம் அளித்திருந்த வாக்குறுதியின் காரணமாகத்தான். ஆனால், தம்முடைய தந்தை அல்லாஹ்வுக்குப் பகைவனாக இருக்கின்றார் என்பது இப்ராஹீமுக்குத் தெளிவாகி விட்டபோது, அவர் தம் தந்தையை விட்டு விலகிக் கொண்டார். திண்ணமாக, இப்ராஹீம் மிக இளகிய மனமும், இறையச்சமும், சகிப்புத்தன்மையும் உடையவராய் இருந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபி) இப்ராஹீம் தன் தந்தைக்காக மன்னிப்புக் கோரியது ஒரு வாக்குறுதியே தவிர வேறில்லை, அதை அவருக்கு அவர் வாக்களித்திருந்தார், பின்னர் நிச்சயமாக (அவருடைய தந்தையாகிய) அவர் அல்லாஹ்வுக்கு விரோதி எனத் தெளிவாகிவிட்ட பொழுது அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார், நிச்சயமாக இப்ராஹீம் மிக்க இரக்க மனமுடையவர், துன்பங்களைச் சகித்துக் கொள்ளக்கூடியவர்.
Saheeh International
And the request of forgiveness of Abraham for his father was only because of a promise he had made to him. But when it became apparent to him [i.e., Abraham] that he [i.e., the father] was an enemy to Allah, he disassociated himself from him. Indeed was Abraham compassionate and patient.
எந்தவொரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வரை அவர்களை அவன் வழி கெடுப்பவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிந்தவன்.
அப்துல் ஹமீது பாகவி
ஒரு கூட்டத்தினரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்திய பின்னர், அவர்கள் தவறிழைக்கும்படி அவன் (விட்டு) விடமாட்டான், - அவர்கள் விலகிக்கொள்ள வேண்டிய விஷயங்கள் எவை என்பதை அவன் அவர்களுக்கு தெளிவாக அறிவிக்கின்ற வரை. நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் மிக அறிந்தவன் ஆவான்.
IFT
ஒரு சமூகத்தாருக்கு நேர்வழி அளித்த பின்னால், எவற்றிலிருந்தெல்லாம் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்காத வரை அவர்களை வழிகேட்டிற்குள்ளாக்குவது அல்லாஹ்வின் நியதி அல்ல! திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எந்தக் கூட்டத்தினரையும் -அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டிய பின்னர், அவர்கள் விலகிக் கொள்ள வேண்டியதை அவன் அவர்களுக்கு விவரமாகத் தெளிவுபடுத்துகின்றவரை, அவர்களை அவன் வழி கெடுப்பவனாக இல்லை, நிச்சயமாக அல்லாஹ், ஒவ்வொரு பொருளைப் பற்றியும் நன்கறிகிறவன்.
Saheeh International
And Allah would not let a people stray after He has guided them until He makes clear to them what they should avoid. Indeed, Allah is Knowing of all things.
வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது; (அவனே) உயிர் கொடுக்கிறான்; (அவனே) மரணிக்கும்படியும் செய்கிறான் - அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு வேறு பாதுகாவலரும் இல்லை, உதவியாளரும் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
வானங்கள், பூமியின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியதே! (அவனே) உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கும்படியும் செய்கிறான். ஆகவே, அல்லாஹ்வை தவிர்த்து உங்களை பாதுகாப்பவர்களும் இல்லை; (உங்களுக்கு) உதவி செய்பவர்களும் இல்லை.
IFT
உண்மையாகவே வானங்கள் மற்றும் பூமியினுடைய ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்குரியதாகும். வாழ்வும், மரணமும் அவன் கைவசமே உள்ளன. மேலும், அல்லாஹ்வைத் தவிர உங்களைப் பாதுகாப்பவரும் உதவிபுரிபவரும் யாருமில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ், அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது, (அவனே) உயிர்ப்பிக்கின்றான், (அவனே) மரணிக்கும்படியும் செய்கின்றான், அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த பாதுகாவலரும் இல்லை, எந்த உதவியாளரும் இல்லை.
Saheeh International
Indeed, to Allah belongs the dominion of the heavens and the earth; He gives life and causes death. And you have not besides Allah any protector or any helper.
நிச்சயமாக அல்லாஹ் நபியையும் கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களையும், அன்ஸாரிகளையும் மன்னித்தான் அவர்களில் ஒரு பிரிவினருடைய நெஞ்சங்கள் தடுமாறத் துவங்கிய பின்னர், அவர்களை மன்னித்(து அருள் புரிந்)தான் - நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நபியின் மீது நிச்சயமாக அல்லாஹ் மன்னித்தருள் புரிந்தான். (அவ்வாறே) கஷ்டகாலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மீதும், அன்ஸாரிகள் மீதும் (மன்னித்தருள் புரிந்தான்). அவர்களில் ஒரு பிரிவினருடைய உள்ளங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து, அவர்கள் மீது அருள்புரிந்)தான். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மீது மிக இரக்கமும் மிக்க கருணையும் உடையவன் ஆவான்.
IFT
நபியையும், துன்பம் சூழ்ந்த நேரத்தில் அவருக்கு உறுதுணையாய் இருந்த முஹாஜிர்களையும் அன்ஸார்களையும்* அல்லாஹ் பொறுத்தருளினான், அவர்களில் ஒரு சிலரின் உள்ளங்கள் நெறி தவறுதலின்பால் சற்று சாய்ந்துவிட்டிருந்த போதிலும்! (ஆனால் அவர்கள் நெறி தவறிச் செல்லாமல் நபிக்கு பக்கபலமாக இருந்தனர். அப்போது) அல்லாஹ் அவர்களை மன்னித்துவிட்டான். திண்ணமாக, அவன் அவர்கள் விஷயத்தில் அதிகப் பரிவும் கருணையும் கொண்டவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அல்லாஹ் தன்னுடைய நபியின் மீதும், (அவ்வாறே) ‘முஹாஜிர்கள்’ மீதும் இன்னும் அன்ஸார்கள் மீதும் (தவ்பாவை ஏற்று) திட்டமாக அல்லாஹ் பாவமன்னிப்புச் செய்தான், அவர்கள் எத்தகையவர்களென்றால், அவர்களில் ஒரு சாராரின் இதயங்கள் சறுகி விடுவதற்கு நெருங்கிய பின்னர் நெருக்கடி சமயத்தில் (நமது நபியாகிய) அவரை முழு மனதுடன்) பின்பற்றினர், பின்னும், அவர்கள் மீது (தவ்பாவை ஏற்று) பாவமன்னிப்புச் செய்தான், நிச்சயமாக அவன் அவர்களோடு மிக்க இரக்கமுடையவன், மிகக் கிருபையுடையவன்.
Saheeh International
Allah has already forgiven the Prophet and the Muhajireen and the Anṣar who followed him in the hour of difficulty after the hearts of a party of them had almost inclined [to doubt], and then He forgave them. Indeed, He was to them Kind and Merciful.
(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும், (அல்லாஹ் மன்னித்து விட்டான்;) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் கஷ்டமாகி விட்டது - அல்லாஹ்(வின் புகழ்) அன்றி அவனைவிட்டுத் தப்புமிடம் வேறு அவர்களுக்கு இல்லையென்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் - ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் (தவ்பாவை ஏற்று) மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்துத் தீர்ப்புக் கூறாது) விட்டு வைக்கப்பட்ட மூவரையும் (அல்லாஹ் மன்னித்துவிட்டான்). பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அது) அவர்களுக்கு மிக்க நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் மிக்க கஷ்டமாகி விட்டது. அல்லாஹ்வை விட்டுத் தப்புமிடம் அவனிடமே தவிர வேறு அவர்களுக்கு இல்லவே இல்லை என்பதையும் அவர்கள் நிச்சயமாக அறிந்துகொண்டனர். ஆதலால், அவர்கள் (பாவத்தில் இருந்து) விலகிக் கொள்வதற்காக அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்(து அவர்களுக்கு அருள் புரிந்)தான். நிச்சயமாக அல்லாஹ்தான் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.
IFT
மேலும், விவகாரம் ஒத்திப்போடப்பட்டிருந்த மூவரையும் அவன் மன்னித்தான்; அவர்கள் நிலைமை எந்த அளவு மோசமாகி விட்டிருந்ததெனில், பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர்களைப் பொறுத்தவரை அது குறுகி அவர்கள் உயிர்வாழ்வதே கஷ்டமாகி விட்டிருந்தது! இன்னும் அல்லாஹ்விடமிருந்து தப்பிப்பதற்கு அவனுடைய அருளின் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். பின்னர், அவர்கள் பாவமன்னிப்புக்கோரி தன்னிடம் மீண்டுவர வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்கள் மீது கருணை பொழிந்தான். திண்ணமாக, அவன் மிக மன்னிப்போனும், கருணையுடையோனுமாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பிற்படுத்தி வைக்கப்பட்டிருந்தோரான மூவரின் மீதும் (அல்லாஹ் அவர்களின் தவ்பாவை ஏற்று மன்னித்துவிட்டான்) முடிவில் பூமி – அது விஸ்தீரணமாக இருந்தும் அவர்களுக்கு நெருக்கடியாகிவிட்டது, இன்னும், அவர்கள்மீது அவர்களின் உயிர்களும் நெருக்கடியாகிவிட்டன, அல்லாஹ்விடமிருந்து ஒதுங்குமிடம் அவனின்பால் அல்லாது இல்லை என்பதையும் அவர்கள் உறுதியாக அறிந்துகொண்டனர், ஆதலால் அவர்கள் (பாவத்திலிருந்து) விலகிக் கொள்வதற்காக, அவர்களை மன்னித்து அருள் புரிந்தான், நிச்சயமாக அல்லாஹ்வே தவ்பாவை மிகவும் ஏற்)று மிக்க மன்னிப்ப)வன், மிகக் கிருபையுடையவன்.
Saheeh International
And [He also forgave] the three who were left alone [i.e., boycotted, regretting their error] to the point that the earth closed in on them in spite of its vastness and their souls confined [i.e., anguished] them and they were certain that there is no refuge from Allah except in Him. Then He turned to them so they could repent. Indeed, Allah is the Accepting of Repentance, the Merciful.
மதீனா வாசிகளானாலும் சரி, அல்லது அவர்களைச் சூழ்ந்திருக்கும் கிராமவாசிகளானாலும் சரி, அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப்பிரிந்து பின் தங்குவதும், அல்லாஹ்வின் தூதரின் உயிரைவிடத் தம் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுதியுடையதல்ல; ஏனென்றால் அல்லாஹ்வின் பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு (துயர்) பசி, காஃபிர்களை ஆத்திரமூட்டும்படியான இடத்தில் கால்வைத்து அதனால் பகைவனிடமிருந்து துன்பத்தையடைதல் ஆகிய இவையாவும் இவர்களுக்கு நற்கருமங்களாகவே பதிவு செய்யப்படுகின்றன - நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்க மாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
மதீனாவாசிகள் இன்னும் அவர்களைச் சூழ்ந்து வசிக்கும் கிராமத்து அரபிகள் ஆகிய இவர்கள் அல்லாஹ்வுடைய தூதரை விட்டுப் (பிரிந்து) பின் தங்குவதும்; (அல்லாஹ்வுடைய) தூதரின் உயிரைவிட தங்கள் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுமானதல்ல. ஏனென்றால், அல்லாஹ்வுடைய பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு, பசி (ஆகியவையும்), நிராகரிப்பவர்களைக் கோபமூட்டும்படியான இடத்தில் கால் வைத்து, அதனால் எதிரியிடமிருந்து ஒரு துன்பத்தை அடைதல் ஆகிய இவையனைத்தும் அவர்களுக்கு நன்மைகளாகவே பதிவு செய்யப்படுகின்றன. நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) நன்மை செய்பவர்களின் (அழகிய பண்பாளர்களின்) கூலியை வீணாக்கி விடுவதில்லை.
IFT
அல்லாஹ்வுடைய தூதருடன் போருக்குச் செல்லாமல் தங்கிவிடுவதும், அவரைப் பொருட்படுத்தாமல் தங்களைப் பற்றியே அதிக அக்கறை கொள்வதும் மதீனாவாசிகளுக்கும் அவர்களைச் சுற்றி வாழும் நாட்டுப்புற அரபிகளுக்கும் அழகல்ல! ஏனெனில் அல்லாஹ்வின் பாதையில் பசி, தாகம் மற்றும் உடற்களைப்பின் எந்த ஒரு துன்பத்தை அவர்கள் சகித்துக் கொண்டாலும், மேலும் சத்தியத்தை நிராகரிப்பவர்களுக்கு வெறுப்பாக இருக்கும் பாதையில் எந்த ஓர் அடியை அவர்கள் எடுத்து வைத்தாலும், மேலும் எந்த ஒரு பகைவனிடமும் (சத்திய விரோதப் போக்கிற்காக) எந்தப் பழியை அவர்கள் வாங்கினாலும் அவை ஒவ்வொன்றுக்கும் பகரமாக அவர்களின் பெயரில் ஒரு நன்மை எழுதப்படாமல் ஒருபோதும் விடப்படமாட்டாது. திண்ணமாக, அல்லாஹ்விடம் நன்னடத்தை உடையோரின் கூலி வீணாக்கப்படுவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மதீனாவாசிகளுக்கும் (அரபிகளிலுள்ள) கிராமவாசிகளில் அவர்களைச் சூழ வசிப்பவருக்கும்-அவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் உயிரைவிடத் தங்களின் உயிர்களையே (பெரிதாகக் கருதி) ஆசைவைப்பதும் அவர்களுக்குத் தகுமானதல்ல, அதன் காரணமாவது, “நிச்சயமாக அவர்கள், அல்லாஹ்வின் பாதையில் (செல்கையில்)தாகம், களைப்பு, பசி ஆகியவையும் அவர்களுக்கு ஏற்படுவதில்லை, (அதுபோன்றே) நிராகரிப்பவர்களை ஆத்திரமூட்டக்கூடிய எந்த இடத்திலும் அவர்கள் மிதிப்பதுமில்லை, எதிரியிடமிருந்து எ(ந்த துன்பத்)தையும் அவர்கள் அடைவதுமில்லை, அவற்றுக்குப் பகரமாக அவர்களுக்கு நல்ல செயல் (அதனுடைய நன்மை) எழுதப்பட்டே தவிர” என்பதாகும், நிச்சயமாக அல்லாஹ், (இத்தகைய) நன்மை செய்தோரின் கூலியை வீணாக்கிவிடமாட்டான்.
Saheeh International
It was not [proper] for the people of Madīnah and those surrounding them of the bedouins that they remain behind after [the departure of] the Messenger of Allah or that they prefer themselves over his self. That is because they are not afflicted by thirst or fatigue or hunger in the cause of Allah, nor do they tread on any ground that enrages the disbelievers, nor do they inflict upon an enemy any infliction but that it is registered for them as a righteous deed. Indeed, Allah does not allow to be lost the reward of the doers of good.
இவர்கள் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ, (எந்த அளவு) அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலும், அல்லது (அல்லாஹ்வுக்காக) எந்தப் பள்ளத்தாக்கை கடந்து சென்றாலும், அது அவர்களுக்காக (நற்கருமங்களாய்) பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை; அவர்கள் செய்த காரியங்களுக்கு, மிகவும் அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் சிறிதோ பெரிதோ (அல்லாஹ்வுடைய பாதையில்) எதைச் செலவு செய்தபோதிலும் (அவ்வாறே அல்லாஹ்வுடைய பாதையில்) எந்த பூமியைக் கடந்தபோதிலும் அவர்களுக்காக அது பதிவு செய்யப்படுகிறது. ஏனெனில், அவர்கள் செய்த இவற்றைவிட மிக அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான்.
IFT
(இதேபோல்) அவர்கள் (அல்லாஹ்வின் வழியில்) சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ செலவு செய்யும் எது ஒன்றும், மேலும் (ஜிஹாதுக்காக) ஏதேனும் ஒரு பள்ளத்தாக்கைக் கடந்து செல்வதும் அவர்களுடைய பேரில் பதிவு செய்யப்படாமல் ஒருபோதும் விடப்பட மாட்டாது. எதற்காகவெனில், இவர்களுடைய சிறப்பான சாதனைகளுக்கான நற்கூலியை அல்லாஹ் இவர்களுக்கு வழங்கிட வேண்டும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்கள் சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ செலவு செய்வதுமில்லை, எந்தப் பள்ளத்தாக்கையும் அவர்கள் கடப்பதுமில்லை, அவர்களுக்கு (அவைகள் நற்கருமங்களாக) எழுதப்பட்டே தவிர, காரணம் அவர்கள் செய்து கொண்டிருந்தவைக்கு மிக அழகான கூலியை அவர்களுக்கு அல்லாஹ் நல்குவதற்காகவே.
Saheeh International
Nor do they spend an expenditure, small or large, or cross a valley but that it is registered for them that Allah may reward them for the best of what they were doing.
முஃமின்கள் ஒட்டு மொத்தமாக புறப்பட்டுச் செல்லலாகாது. ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் சன்மார்க்க (ஞானத்தைக்) கற்று கொள்வதற்காகவும், (வெளியேறி சென்ற அவர்கள் பின்னே தங்கியவர்களிடம்) திரும்பி வந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்பட வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(உங்கள் எதிரிகள் உங்களை அழித்துவிடுவதற்கு சந்தர்பத்தை எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பதனால்) நம்பிக்கையாளர்கள் அனைவருமே (தங்கள் ஊரை விட்டு) வெளிப்பட்டு விடுவது எப்பொழுதுமே தகாது. மார்க்க விஷயங்களை அறிந்துகொள்ள(க் கருதினாலும் அதற்காக) உங்களில் ஒவ்வொரு கூட்டத்தில் இருந்தும் சிலர் மாத்திரம் புறப்பட்டால் போதாதா? (அவர்கள் மார்க்க விஷயத்தைக் கற்று) தங்கள் மக்களிடம் திரும்பி வந்து அவர்களுக்கு(த் தாங்கள் கற்றதைக் கூறி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வார்கள். (ஊரில் இருப்பவர்கள்) எச்சரிக்கையாக இருந்து (தங்கள் மக்களைக் காத்துக்) கொள்வார்கள்.
IFT
மேலும், இறைநம்பிக்கை கொண்டவர்கள் அனைவருமே புறப்பட வேண்டுமென்பது தேவையில்லை. எனினும், அவர்கள் வாழும் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒரு சிலர் மட்டும் புறப்படலாமே! எதற்காகவெனில், மார்க்க அறிவை அவர்கள் பெற்றுக்கொண்டு தம் சமுதாயத்தாரிடம் திரும்பிவந்து அவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக! இதன் வாயிலாக (இஸ்லாத்திற்கு மாற்றமான போக்கை) அவர்கள் தவிர்த்துக் கொள்ளக்கூடும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசிகள் ஒட்டுமொத்தமாக (ஊரை விட்டு) புறப்பட்டுச் செல்லலாகாது, அவர்களில் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் மார்க்கத்தை விளங்கிக் கொள்வதற்காகவும், இன்னும் அவர்களின் கூட்டத்தாரை அவர்கள் பால் திரும்பிவிடும்பொழுது எச்சரிக்கை செய்வதற்காகவும் அவர்கள் புறப்பட்டுச் செல்ல வேண்டாமா? (அதன் மூலம்) அவர்கள் (தீயவைகளை) தவிர்த்துக் கொள்ளலாம்.
Saheeh International
And it is not for the believers to go forth [to battle] all at once. For there should separate from every division of them a group [remaining] to obtain understanding in the religion and warn [i.e., advise] their people when they return to them that they might be cautious.
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் (தொல்லை விளைவிக்கும்) காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! பகைமையையும், விஷமத்தனத்தையும் வெளிப்படுத்துகின்ற உங்களை அடுத்திருக்கும் நிராகரிப்பவர்களுடன் போர் புரியுங்கள். அவர்கள் உங்களிடம் கடுமையையே காணவேண்டும். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சம் உடையவர்களுடன் இருக்கிறான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறை மறுப்பாளர்களில் யார் உங்களை அடுத்திருக்கிறார்களோ அவர்களுடன் போர் புரியுங்கள்! அவர்கள் உங்களிடம் கடினமான போக்கைக் காணவேண்டும். மேலும், அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களோடு இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! நிராகரிப்போரிலிருந்து உங்களை அடுத்திருப்போருடன் போர் செய்யுங்கள், அவர்கள் உங்களிடம் கடுமையையே காணவேண்டும், இன்னும், நிச்சயமாக அல்லாஹ், பயபக்தியுடையோர்களுடன் இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
Saheeh International
O you who have believed, fight against those adjacent to you of the disbelievers and let them find in you harshness. And know that Allah is with the righteous.
ஏதேனும் ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், “இது உங்களில் யாருடைய ஈமானை (நம்பிக்கையை) அதிகப்படுத்தி விட்டது?” என்று கேட்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர்; யார் ஈமான் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை இது (மெய்யாகவே) அதிகப்படுத்திவிட்டது இன்னும் அவர்கள் (இது குறித்து) மகிழ்ச்சி அடைகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஒரு (புதிய) அத்தியாயம் அருளப்பட்டால் ‘‘உங்களில் யாருடைய நம்பிக்கையை இது அதிகப்படுத்தியது?'' என்று கேட்கக்கூடியவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். மெய்யாகவே எவர்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை (இது) அதிகப்படுத்தியே விட்டது. இதைப் பற்றி அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
IFT
ஏதேனும் ஒரு (புதிய) அத்தியாயம் இறக்கியருளப்பட்டால், அவர்களில் சிலர் “இது உங்களில் எவருடைய நம்பிக்கையை அதிகப்படுத்தியது?” என்று (முஸ்லிம்களிடம் பரிகாசமாய்க்) கேட்கின்றார்கள். உண்மையில் யார் நம்பிக்கையாளர்களோ அவர்களின் நம்பிக்கையை ஒவ்வோர் அத்தியாயமும் அதிகமாக்கியே இருக்கிறது. அதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், ஏதேனும் ஓர் (புதிய) அத்தியாயம் இறக்கிவைக்கப்பட்டால் “உங்களில் யாருக்கு இது விசுவாசத்தை அதிகப்படுத்தியிருக்கிறது?” என்று கேட்கக்கூடியவர்களும் அவர்களில் இருக்கின்றனர், ஆகவே, விசுவாசங்கொண்டிருக்கிறார்களே அத்தகையோர் அவர்களுக்கு அது விசுவாசத்தை அதிகப்படுத்திவிட்டது, (இதுகுறித்து) அவர்களோ மகிழ்ச்சியடைகின்றனர்.
Saheeh International
And whenever a sūrah is revealed, there are among them [i.e., the hypocrites] those who say, "Which of you has this increased in faith?" As for those who believed, it has increased them in faith, while they are rejoicing.
ஆனால், எவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களுடைய (நெஞ்சங்களிலுள்ள) அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே (அது) அவர்களுக்கு அதிகப்படுத்தி விட்டது; அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே மரிப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆனால், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களுடைய (உள்ளங்களிலுள்ள) அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே (அது) அதிகரித்து விட்டது! அவர்கள் நிராகரித்தவர்களாகவே இறந்தும் விட்டனர்.
IFT
ஆயினும், எவர்களுடைய உள்ளங்களில் (நயவஞ்சகப்) பிணி குடிகொண்டிருந்ததோ அவர்களிடம் ஏற்கனவே இருந்த அசுத்தத்தை அந்த (புதிய) அத்தியாயம் ஒவ்வொன்றும் மேலும் அதிகரிக்கச் செய்தது. மேலும், நிராகரிப்பாளர்களாகவே அவர்கள் மரணமடைந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும் எவர்களுடைய இதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையோர் அவர்களுக்கு அவர்களுடைய அசுத்தத்துக்கு மேல் அசுத்தத்தையே அது அதிகப்படுத்திவிட்டது, இன்னும், அவர்கள் நிராகரித்தவர்களாக இறந்தும் விட்டனர்.
Saheeh International
But as for those in whose hearts is disease, it has [only] increased them in evil [in addition] to their evil. And they will have died while they are disbelievers.
ஒவ்வோர் ஆண்டிலும், ஒரு முறையோ, இரு முறையோ அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள்” என்பதை அவர்கள் காணவில்லையா? அப்படியிருந்தும் அவர்கள் தவ்பா செய்து மீள்வதுமில்லை;(அது பற்றி) நினைவு கூர்ந்து நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
ஒவ்வோர் ஆண்டிலும் ஒரு முறையோ அல்லது இருமுறைகளோ அவர்கள் சிரமத்திற்குள்ளாகி சோதிக்கப்படுகின்றனர் என்பதை அவர்கள் காணவில்லையா? இவ்வாறிருந்தும் அவர்கள் பாவத்தை விட்டுவிடுவதுமில்லை; நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை.
IFT
ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறையோ இரு முறையோ அவர்கள் சோதனைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள் என்பதை அவர்கள் கவனிப்பதில்லையா? இவ்வாறிருந்தும் அவர்கள் பாவமன்னிப்புக் கோருவதுமில்லை; நல்லுரை பெறுவதும் இல்லை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு வருடத்திலும் ஒரு தடவையோ அல்லது இரு தடவையோ (துன்பங்களுக்குள்ளாகிச்) சோதிக்கப்படுகின்றனர்” என்பதையும் (அதன்) பிறகும் அவர்கள் தவ்பாச்செய்து மீள்வதுமில்லை, நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை, என்பதையும் அவர்கள் காணவில்லையா?
Saheeh International
Do they not see that they are tried every year once or twice but then they do not repent nor do they remember?
யாதொரு (புதிய) அத்தியாயம் இறக்கப்பட்டால் அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: “உங்களை யாராவது பார்த்து விட்டார்களோ?” என்று கேட்டுக் கொண்டே திரும்பி(ப் போய்) விடுகின்றனர்; அல்லாஹ் அவர்களுடைய நெஞ்சங்களை (ஒளியின் பக்கத்திலிருந்து) திருப்பி விட்டான் - (காரணமென்னவெனில்) அவர்கள் சத்தியத்தை அறிந்து கொள்ள முடியாத மக்களாக இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(புதிய) அத்தியாயம் ஒன்று அருளப்பட்டால், அவர்களில் சிலர் சிலரை விரைக்கப் பார்த்து (கண்ணால் ஜாடை செய்து) ‘‘உங்களை யாரும் பார்த்துக் கொண்டார்களோ?'' என்று (கேட்டு) பின்னர் (அங்கிருந்து) திரும்பி விடுகின்றனர். நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தை) அறிந்துகொள்ள முடியாத மக்களாக இருப்பதனால், அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களையும் திருப்பிவிட்டான்.
IFT
ஏதாவது ஓர் அத்தியாயம் இறக்கியருளப்பட்டால் அவர்களில் ஒருவர் மற்றவரிடம் “உங்களை யாரும் பார்க்கவில்லையே?” என்று கண்களாலேயே சாடை காட்டி, (அங்கிருந்து) நழுவிச் சென்று விடுகின்றார்கள். அல்லாஹ் அவர்களுடைய இதயங்களைப் புரட்டி விடுகின்றான். ஏனெனில் அவர்கள் எதையும் புரிந்து கொள்ளாத மக்களாய் இருக்கின்றனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், ஓர் அத்தியாயம் இறக்கிவைக்கப்பட்டால், அவர்களில் சிலர் சிலரைப் பார்க்கின்றனர், (கண்ணால் சாடை காட்டி, விசுவாசிகளில்) “உங்களை எவரும் பார்த்தாரா? என்று (கேட்டுவிட்டுப்) பின்னர் திரும்பி விடுகின்றனர், நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தை) விளங்கிக் கொள்ள முடியாத கூட்டத்தாராக இருப்பதன் காரணத்தால் அல்லாஹ் அவர்களுடைய இதயங்களை திருப்பிவிட்டான்.
Saheeh International
And whenever a sūrah is revealed, they look at each other, [as if saying], "Does anyone see you?" and then they dismiss themselves. Allah has dismissed their hearts because they are a people who do not understand.
(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே! நம்) தூதர் ஒருவர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கிறார்; அவர் உங்களிலுள்ளவர்தான். (உங்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் கஷ்டத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தமாகவே இருக்கும். (அவ்வளவு தூரம் உங்கள் மீது அன்புடையவர்.) உங்கள் நன்மையையே பெரிதும் விரும்புகிறவராகவும், நம்பிக்கையாளர்(களாகிய உங்)கள் மீது மிக்க இரக்கமும் கருணையும் அன்பும் உடையவராகவும் இருக்கிறார்.
IFT
(பாருங்கள்!) உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்காளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்களுடைய வெற்றியில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்கள் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கின்றார்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளே! உங்களிலிருந்தே திட்டமாக ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார், (உங்களுக்கு யாதொரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் கஷ்டப்படுவது அவருக்கு மிக வருத்தமாக இருக்கும், உங்கள் மீது மிக்க பேராசை கொண்டவர், விசுவாசிகளோடு மிக இரக்கமுள்ளவர், மிகக் கிருபையுடையவர்.
Saheeh International
There has certainly come to you a Messenger from among yourselves. Grievous to him is what you suffer; [he is] concerned over you [i.e., your guidance] and to the believers is kind and merciful.
فَاِنْ تَوَلَّوْاஅவர்கள் திரும்பினால்فَقُلْகூறுவீராகحَسْبِىَ اللّٰهُ அல்லாஹ் எனக்குப் போதுமானவன்لَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّا هُوَ ؕதவிர/அவனைعَلَيْهِஅவன் மீதேتَوَكَّلْتُ ؕநான் நம்பிக்கை வைத்து விட்டேன்وَهُوَ رَبُّஅவன் அதிபதிالْعَرْشِஅர்ஷின்الْعَظِيْمِமகத்தானது
Fப இன் தவல்லவ் Fபகுல் ஹஸ்Bபியல் லாஹு லா இலாஹ இல்லா ஹுவ 'அலய்ஹி தவக்க்கல்து வ ஹுவ ரBப்Bபுல் 'அர்ஷில் 'அளீம்
முஹம்மது ஜான்
(நபியே! இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” என்று நீர் கூறுவீராக!
அப்துல் ஹமீது பாகவி
(நபியே இதற்குப்) பின்னரும் அவர்கள் (உம்மைப் பின்பற்றாது) விலகிக் கொண்டால் (அவர்களை நோக்கி) கூறுவீராக ‘‘அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை; (என் காரியங்கள் அனைத்தையும்) அவனிடமே நான் நம்பிக்கை வைத்து (ஒப்படைத்து) விட்டேன்; அவன்தான் மகத்தான ‘அர்ஷின்' அதிபதி ஆவான்.
IFT
(இனி) அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் (நபியே!) நீர் கூறிவிடும்: “அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கின்றேன். மேலும், அவன் மகத்தான அர்ஷின்* அதிபதியாயிருக்கின்றான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! இதற்குப்)பின்னரும், அவர்கள் (உம்மை ஏற்காது) விலகிக் கொண்டாலும், (அவர்களிடம்,) நீர் கூறுவீராக “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன், அவனைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு நாயனில்லை) அவன் மீது (என் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைத்துள்ளேன், அவனே மகத்தான அர்ஷின் அதிபதியாவான்”
Saheeh International
But if they turn away, [O Muhammad], say, "Sufficient for me is Allah; there is no deity except Him. On Him I have relied, and He is the Lord of the Great Throne."