பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.
அப்துல் ஹமீது பாகவி
பிறகு, எவர்கள் நம்பிக்கை கொண்டும் ஒருவருக்கொருவர் பொறுமையைக் கடைபிடிக்குமாறு நல்லுபதேசம் செய்துகொண்டும், கருணை காட்டவேண்டும் என்று ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்துகொண்டும் இருக்கிறார்களோ அவர்களிலும் அவர் சேர்ந்துவிடுவார்.
IFT
பின்னர் (அத்துடன்) எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, பொறுமையை மேற்கொள்ளவும் (மக்கள் மீது) இரக்கம் காட்டவும், ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுகின்றார்களோ, அவர்களில் ஒருவனாக அவன் இருக்கவேண்டும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் விசுவாசங்கொண்டு பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், (அல்லாஹ்வின் அடியார்களுக்கு) அன்பு செலுத்துமாறு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்துகொண்டும் இருந்தோரில் உள்ளவராக அவர் இருப்பதாகும்.
Saheeh International
And then being among those who believed and advised one another to patience and advised one another to compassion.