94. ஸூரத்து அலம் நஷ்ரஹ்(விரிவாக்கல்)

மக்கீ, வசனங்கள்: 8

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
اَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ ۟ۙ
اَلَمْ نَشْرَحْநாம் விரிவாக்கவில்லையாلَـكَஉமக்குصَدْرَكَۙ‏உம் நெஞ்சத்தை
அலம் னஷ்ரஹ் லக ஸத்ரக்
முஹம்மது ஜான்
நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமது உள்ளத்தை நாம் உமக்கு விரிவாக்கவில்லையா?
IFT
(நபியே!) நாம் உம்முடைய இதயத்தை உமக்காக விரிவாக்கித் தரவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) உமது நெஞ்சை உமக்காக நாம் விரிவாக்கவில்லையா?
Saheeh International
Did We not expand for you, [O Muhammad], your breast?
وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ ۟ۙ
وَوَضَعْنَاஇன்னும் அகற்றினோம்عَنْكَஉம்மை விட்டுوِزْرَكَۙ‏உம் சுமையை
வ வ ளஃன 'அன்க விZஜ்ரக்
முஹம்மது ஜான்
மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
உமது சுமையையும் உம்மைவிட்டும் நாம் இறக்கிவிட்டோம்.
IFT
மேலும், உம்முடைய சுமையை உம்மைவிட்டு நாம் இறக்கிவைத்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், உமது சுமையை உம்மைவிட்டும் நாம் இறக்கிவிட்டோம்.
Saheeh International
And We removed from you your burden
الَّذِیْۤ اَنْقَضَ ظَهْرَكَ ۟ۙ
الَّذِىْۤஎதுاَنْقَضَமுறித்ததுظَهْرَكَۙ‏உம் முதுகை
அல்லதீ அன்கள ளஹ்ரக்
முஹம்மது ஜான்
அது உம் முதுகை முறித்துக் கொண்டிருந்தது.
அப்துல் ஹமீது பாகவி
அது, உமது இடுப்பையே முறித்துக் கொண்டிருந்தது.
IFT
(அது) உம்முடைய முதுகை முறித்துக் கொண்டிருந்தது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(ச்சுமையான)து எத்தகையதென்றால், உமது முதுகை முறித்து(உமக்குப் பளுவாகி) விட்டது.
Saheeh International
Which had weighed upon your back
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ ۟ؕ
وَرَفَعْنَاஇன்னும் உயர்த்தினோம்لَـكَஉமக்குذِكْرَكَؕ‏உம் நினைவை
வ ரFபஃன லக திக்ரக்
முஹம்மது ஜான்
மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
உமது கீர்த்தியையும் நாம் உயர்த்தினோம்.
IFT
மேலும், உமக்காக உம் புகழினை உயர்த்தினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உமது நினைவை (கீர்த்தியை) உமக்காக நாமே உயர்த்தினோம்.
Saheeh International
And raised high for you your repute.
فَاِنَّ مَعَ الْعُسْرِ یُسْرًا ۟ۙ
فَاِنَّஆகவே,நிச்சயமாகمَعَஉடன்الْعُسْرِசிரமம்يُسْرًا ۙ‏இலேசு
Fப இன்ன ம'அல் உஸ்ரி யுஸ்ரா
முஹம்மது ஜான்
ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது.
IFT
உண்மையில் சிரமத்துடன் இலகுவும் இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, நிச்சயமாக கஷ்டத்துடன் இலேசு இருக்கிறது.
Saheeh International
For indeed, with hardship [will be] ease [i.e., relief].
اِنَّ مَعَ الْعُسْرِ یُسْرًا ۟ؕ
اِنَّநிச்சயமாகمَعَஉடன்الْعُسْرِசிரமம்يُسْرًا ؕ‏இலேசு
இன்ன ம'அல் 'உஸ்ரி யுஸ்ரா
முஹம்மது ஜான்
நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
மெய்யாகவே சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது.
IFT
திண்ணமாக, சிரமத்துடன் இலகுவும் இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக கஷ்டத்துடன் இலேசு இருக்கிறது.
Saheeh International
Indeed, with hardship [will be] ease.
فَاِذَا فَرَغْتَ فَانْصَبْ ۟ۙ
فَاِذَا فَرَغْتَஆகவே நீர் ஓய்வு பெற்றால்فَانْصَبْۙ‏முயல்வீராக.
Fப இத Fபரக் த Fபன்ஸBப்
முஹம்மது ஜான்
எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (மார்க்கப் பிரச்சாரத்திலிருந்து) நீர் விடுபட்டதும், (இறைவனை வணங்குவதற்கு) சிரத்தை எடுப்பீராக.
IFT
எனவே, நீர் ஓய்வு பெறும்போது வணக்க வழிபாட்டின் கடும் உழைப்பில் முனைப்புடன் ஈடுபடுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, நீர் (உலகக் காரியங்களிலிருந்து விடுபட்டால் (தொழுவதற்கு) நீர் சிரத்தை எடுத்துக் கொள்வீராக!
Saheeh International
So when you have finished [your duties], then stand up [for worship].
وَاِلٰی رَبِّكَ فَارْغَبْ ۟۠
وَاِلٰىஇன்னும் பக்கம்رَبِّكَஉம் இறைவன்فَارْغَبْ‏ஆர்வம் கொள்வீராக
வ இலா ரBப்Bபிக Fபர் கBப்
முஹம்மது ஜான்
மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், (துன்பத்திலும் இன்பத்திலும்) உமது இறைவனையே நீர் நோக்கி நிற்பீராக!
IFT
மேலும், உம் இறைவனின் பக்கமே ஆர்வம் கொள்வீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், உமதிரட்சகன் பக்கம் நீர் விருப்பம் கொள்வீராக!
Saheeh International
And to your Lord direct [your] longing.