எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கைளைச் செய்தார்களோ அவர்களுக்கு என்றும் முடிவில்லாத (நற்)கூலியுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்து வருகிறார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் மேலான தன்மையில் இருப்பதுடன்) அவர்களுக்கு (என்றென்றுமே) தடைபடாத (நற்)கூலியுண்டு.
IFT
ஆனால், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்து கொண்டிருந்தவர்களைத் தவிர! அவர்களுக்கு முடிவில்லாத நற்கூலி இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்கின்றார்களே அத்தகையோரைத் தவிர, அவர்களுக்கு முடிவடையாத (நற்) கூலியுண்டு.
Saheeh International
Except for those who believe and do righteous deeds, for they will have a reward uninterrupted.