அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் மனிதர்கள், (நன்மையோ தீமையோ) தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக(ப் பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள்.
IFT
அன்று மக்கள் பல்வேறு நிலைமைகளில் திரும்புவார்கள், தங்களுடைய செயல்கள் தங்களுக்குக் காண்பிக்கப்படுவதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவ்வாறு பூமி அசைக்கப்பட்டு அதன் வயிற்றினுள் உள்ளதை வெளியாக்கிவிடும்) அந்நாளில் மனிதர்கள்,அவர்களின் செயல்கள் (அவர்களுக்குக்) காண்பிக்கப்படுவதற்காக பல பிரிவினர்களாக(மண்ணறைகளிலிருந்து) புறப்பட்டு வருவார்கள்.
Saheeh International
That Day, the people will depart separated [into categories] to be shown [the result of] their deeds.