">

தேடல் வார்த்தை: "மூஸா"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

170 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 2 / 4 (முடிவுகள் 51 - 100)

ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُّوْسٰی وَهٰرُوْنَ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ بِاٰیٰتِنَا فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِیْنَ ۟
ثُمَّபின்னர்بَعَثْنَاநாம் அனுப்பினோம்مِنْۢஇருந்துبَعْدِهِمْஅவர்களுக்குப் பின்مُّوْسٰیமூஸாவைوَ هٰرُوْنَமேலும் ஹாரூனைاِلٰیநோக்கிفِرْعَوْنَஃபிர்அவ்னைوَ مَلَاۡىِٕهٖமேலும் அவனது தலைவர்களைبِاٰیٰتِنَاநம் அத்தாட்சிகளுடன்فَاسْتَكْبَرُوْاஎனவே அவர்கள் பெருமையடித்தார்கள்وَ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்قَوْمًاஒரு கூட்டத்தினராகمُّجْرِمِیْنَகுற்றவாளிகளாக
தும்ம Bப'அத்னா மின் Bபஃதிஹிம் மூஸா வ ஹாரூன இலா Fபிர்'அவ்ன வ மல'இஹீ Bபி ஆயாதினா Fபஸ்தக்Bபரூ வ கானூ கவ்மன் முஜ்ரிமீன்
இதன் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவன் தலைவர்களிடமும் நம்முடைய அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; ஆனால் இவர்களும் ஆணவம் கொண்டு குற்றவாளிகளான மக்களாகவே ஆனார்கள்.
قَالَ مُوْسٰۤی اَتَقُوْلُوْنَ لِلْحَقِّ لَمَّا جَآءَكُمْ ؕ اَسِحْرٌ هٰذَا ؕ وَلَا یُفْلِحُ السّٰحِرُوْنَ ۟
قَالَகூறினார்مُوْسٰۤیமூஸாاَتَقُوْلُوْنَநீங்கள் கூறுகிறீர்களாلِلْحَقِّசத்தியத்தைப் பற்றிلَمَّاபோதுجَآءَكُمْ ؕஉங்களிடம் வந்தاَسِحْرٌசூனியமாهٰذَا ؕஇதுوَ لَاமேலும் இல்லைیُفْلِحُவெற்றி பெறுவர்السّٰحِرُوْنَசூனியக்காரர்கள்
காலா மூஸா 'அ தகூலூன லில் ஹக்கி லம்ம்மா ஜா'அ கும் 'அ ஸிஹ்ருன் ஹாதா வலா யுFப்லிஹுஸ் ஸாஹிரூன்
அதற்கு மூஸா: “உங்களிடம் சத்தியமே வந்த போது, அதைப்பற்றியா நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? இதுவா சூனியம்? சூனியக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்” என்று கூறினார்.
فَلَمَّا جَآءَ السَّحَرَةُ قَالَ لَهُمْ مُّوْسٰۤی اَلْقُوْا مَاۤ اَنْتُمْ مُّلْقُوْنَ ۟
فَلَمَّاஎனவேجَآءَவந்தபோதுالسَّحَرَةُசூனியக்காரர்கள்قَالَகூறினார்لَهُمْஅவர்களிடம்مُّوْسٰۤیமூஸாاَلْقُوْاஎறியுங்கள்مَاۤஎதைاَنْتُمْநீங்கள்مُّلْقُوْنَஎறியப்போகிறீர்களோ
Fபலம்மா ஜா'அஸ்ஸ ஹரது கால லஹும் மூஸா அல்கூ மா அன்தும் முல்கூன்
அதன்படி, சூனியக்காரர்கள் வந்ததும், “நீங்கள் (சூனியம் செய்ய) எறிய விரும்புவதை எறியுங்கள்” என்று மூஸா அவர்களிடம் கூறினார்.
فَلَمَّاۤ اَلْقَوْا قَالَ مُوْسٰی مَا جِئْتُمْ بِهِ ۙ السِّحْرُ ؕ اِنَّ اللّٰهَ سَیُبْطِلُهٗ ؕ اِنَّ اللّٰهَ لَا یُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِیْنَ ۟
فَلَمَّاۤபின்னர் எப்போதுاَلْقَوْاஅவர்கள் எறிந்தார்களோقَالَகூறினார்مُوْسٰیமூஸாمَاஎதைجِئْتُمْநீங்கள் கொண்டு வந்தீர்களோبِهِ ۙஅதைக் கொண்டுالسِّحْرُ ؕசூனியம்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَیُبْطِلُهٗ ؕஅதனை அழித்துவிடுவான்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاஇல்லைیُصْلِحُசீராக்குவான்عَمَلَசெயலைالْمُفْسِدِیْنَகுழப்பம் செய்பவர்களின்
Fபலம்மா அல்கவ் கால மூஸா மா ஜி'தும் Bபிஹிஸ் ஸிஹ்ர்; இன்னல் லாஹ ஸ யுBப்திலுஹூ; இன்னல் லாஹ லா யுஸ்லிஹு 'அமலல் முFப்ஸிதீன்
அவர்கள் (எறியக் கூடிய கைத்தடிகளை) எறிந்தபோது, மூஸா: “நீங்கள் கொண்டு வந்தவை (அனைத்தும்) சூனியமே; நிச்சயமாக அல்லாஹ் விரைவிலேயே இவற்றை அழித்துவிடுவான் - அல்லாஹ் விஷமிகளின் செயலை நிச்சயமாக சீர்படச் செய்யமாட்டான்” என்று கூறினார்.
فَمَاۤ اٰمَنَ لِمُوْسٰۤی اِلَّا ذُرِّیَّةٌ مِّنْ قَوْمِهٖ عَلٰی خَوْفٍ مِّنْ فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهِمْ اَنْ یَّفْتِنَهُمْ ؕ وَاِنَّ فِرْعَوْنَ لَعَالٍ فِی الْاَرْضِ ۚ وَاِنَّهٗ لَمِنَ الْمُسْرِفِیْنَ ۟
فَمَاۤஎனவே இல்லைاٰمَنَநம்பிக்கை கொண்டனர்لِمُوْسٰۤیமூஸாவைاِلَّاதவிரذُرِّیَّةٌஒரு சந்ததியினர்مِّنْஇருந்துقَوْمِهٖஅவருடைய சமூகத்தின்عَلٰیமீதுخَوْفٍஅச்சத்தின்مِّنْஇருந்துفِرْعَوْنَஃபிர்அவ்ன்وَ مَلَاۡىِٕهِمْமற்றும் அவர்களின் தலைவர்கள்اَنْஎன்றுیَّفْتِنَهُمْ ؕஅவர்களைத் துன்புறுத்துவான்وَ اِنَّமேலும் நிச்சயமாகفِرْعَوْنَஃபிர்அவ்ன்لَعَالٍநிச்சயமாக மேலோங்கியவன்فِیஇல்الْاَرْضِ ۚபூமிوَ اِنَّهٗமேலும் நிச்சயமாக அவன்لَمِنَநிச்சயமாகالْمُسْرِفِیْنَவரம்பு மீறியவர்களில்
Fபமா ஆமன லி-மூஸா இல்லா துர்ரிய்யதுன் மின் கவ்மிஹீ 'அலா கவ்Fபின் மின் Fபிர்'அவ்ன வ மல'இஹிம் 'அ(ன்)ய் யFப்தினஹும்; வ இன்ன Fபிர்'அவ்ன ல'ஆலின் Fபில் அர்ளி வ இன்னஹூ லமினல் முஸ்ரிFபீன்
ஃபிர்அவ்னும், அவனுடைய பிரமுகர்களும் தங்களைத் துன்புறுத்துவார்களே என்ற பயத்தின் காரணமாக, மூஸாவின் மீது அவருடைய சமூகத்தாரின் சந்ததியினர் சிலரைத் தவிர (வேறு) ஈமான் கொள்ளவில்லை, ஏனெனில், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த பூமியில் வலிமை மிக்கவனாக இருந்தான்; வரம்பு மீறிக் (கொடுமை செய்பவனாகவும்) இருந்தான்.
وَقَالَ مُوْسٰی یٰقَوْمِ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ فَعَلَیْهِ تَوَكَّلُوْۤا اِنْ كُنْتُمْ مُّسْلِمِیْنَ ۟
وَ قَالَமேலும் கூறினார்مُوْسٰیமூஸாیٰقَوْمِஎன் சமூகத்தாரேاِنْஎனின்كُنْتُمْநீங்கள் இருந்தால்اٰمَنْتُمْஈமான் கொண்டவர்களாகبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுفَعَلَیْهِஅவன் மீதேتَوَكَّلُوْۤاமுழுமையாகச் சார்ந்திருங்கள்اِنْஎனின்كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّسْلِمِیْنَமுஸ்லிம்களாக
வ கால மூஸா யா கவ்மி இன் குன்தும் ஆமன்தும் Bபில்லாஹி Fப'அலய்ஹி தவக்கலூ இன் குன்தும் முஸ்லிமீன்
மூஸா (தம் சமூகத்தவரிடம்): “என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்பவர்களாக இருந்து, நீங்கள் மெய்யாகவே அவனை முற்றிலும் வழிபடுபவர்களாகவே (முஸ்லிம்களாக) இருந்தால் அவனையே பூரணமாக நம்பி (உங்கள் காரியங்களை ஒப்படைத்து) விடுங்கள்” என்று கூறினார்.
وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰی وَاَخِیْهِ اَنْ تَبَوَّاٰ لِقَوْمِكُمَا بِمِصْرَ بُیُوْتًا وَّاجْعَلُوْا بُیُوْتَكُمْ قِبْلَةً وَّاَقِیْمُوا الصَّلٰوةَ ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِیْنَ ۟
وَ اَوْحَیْنَاۤமேலும் நாம் வஹீ அறிவித்தோம்اِلٰیபால்مُوْسٰیமூஸாوَ اَخِیْهِஇன்னும் அவருடைய சகோதரர்اَنْஎன்றுتَبَوَّاٰநீங்கள் இருவரும் அமைத்துக் கொள்ளுங்கள்لِقَوْمِكُمَاஉங்கள் இருவருடைய சமூகத்தாருக்காகبِمِصْرَஎகிப்தில்بُیُوْتًاவீடுகளைوَّ اجْعَلُوْاமேலும் ஆக்குங்கள்بُیُوْتَكُمْஉங்கள் வீடுகளைقِبْلَةًகிப்லாவாகوَّ اَقِیْمُواமேலும் நிலைநாட்டுங்கள்الصَّلٰوةَ ؕதொழுகையைوَ بَشِّرِமேலும் நற்செய்தி கூறுவீராகالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களுக்கு
வ அவ்ஹய்னா இலா மூஸா வ அகீஹி அன் தBபவ் வ ஆலி கவ்மிகும Bபி மிஸ்ர Bபுயூத(ன்)வ் வஜ்'அலூ Bபுயூதகும் கிBப்லத(ன்)வ் வ அகீமுஸ் ஸலாஹ்; வ Bபஷ்ஷிரில் மு'மினீன்
ஆகவே, மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும்: “நீங்கள் இருவரும் உங்கள் சமூகத்தாருக்காக பட்டிணத்தில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்; உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக (கிப்லாவாக) ஆக்கி அவற்றில் தவறாமல் தொழுகையை நிலைநிறுத்துங்கள் - மேலும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக!” என்று வஹீ அறிவித்தோம்.
وَقَالَ مُوْسٰی رَبَّنَاۤ اِنَّكَ اٰتَیْتَ فِرْعَوْنَ وَمَلَاَهٗ زِیْنَةً وَّاَمْوَالًا فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۙ رَبَّنَا لِیُضِلُّوْا عَنْ سَبِیْلِكَ ۚ رَبَّنَا اطْمِسْ عَلٰۤی اَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلٰی قُلُوْبِهِمْ فَلَا یُؤْمِنُوْا حَتّٰی یَرَوُا الْعَذَابَ الْاَلِیْمَ ۟
وَ قَالَமேலும் கூறினான்مُوْسٰیமூஸாرَبَّنَاۤஎங்கள் இறைவாاِنَّكَநிச்சயமாக நீاٰتَیْتَவழங்கியுள்ளாய்فِرْعَوْنَஃபிர்அவ்னுக்கும்وَ مَلَاَهٗமேலும் அவனுடைய பிரதானிகளுக்கும்زِیْنَةًஅலங்காரத்தையும்وَّ اَمْوَالًاமேலும் செல்வங்களையும்فِیஇல்الْحَیٰوةِவாழ்க்கைالدُّنْیَا ۙஇவ்வுலகرَبَّنَاஎங்கள் இறைவாلِیُضِلُّوْاஅவர்கள் வழிகெடுப்பதற்காகعَنْஇருந்துسَبِیْلِكَ ۚஉனது பாதையில்رَبَّنَاஎங்கள் இறைவாاطْمِسْஅழித்துவிடுவாயாகعَلٰۤیமீதுاَمْوَالِهِمْஅவர்களின் செல்வங்களின்وَ اشْدُدْமேலும் கடினமாக்குவாயாகعَلٰیமீதுقُلُوْبِهِمْஅவர்களின் இதயங்களின்فَلَاஎனவே அவர்கள் மாட்டார்கள்یُؤْمِنُوْاநம்பிக்கை கொள்ளحَتّٰیவரைیَرَوُاஅவர்கள் காணும்الْعَذَابَவேதனையைالْاَلِیْمَதுன்புறுத்தும்
வ கால மூஸா ரBப்Bபனா இன்னக ஆதய்த Fபிர்'அவ்ன வ மல அஹூ Zஜீனத(ன்)வ் வ அம்வாலன் Fபில் ஹயாதித் துன்யா ரBப்Bபனா லியுளில்லூ 'அன்ஸBபீலிக ரBப்Bபனத் மிஸ் 'அலா அம்வாலிஹிம் வஷ்துத் 'அலா குலூBபிஹிம் Fபலா யு'மினூ ஹத்தா யரவுல் 'அதாBபல் அலீம்
இன்னும்: “எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் அலங்காரத்தையும், இவ்வுலக வாழ்க்கையின் செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய்; எங்கள் இறைவனே! (அவற்றைக் கொண்டு) அவர்கள் உன் பாதையை விட்டு வழி கெடுக்கிறார்கள்; எங்கள் இறைவனே! அவர்களுடைய செல்வங்களை அழித்து, அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காதவரையில், அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்” என்று மூஸா கூறினார்.
اَفَمَنْ كَانَ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّهٖ وَیَتْلُوْهُ شَاهِدٌ مِّنْهُ وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰۤی اِمَامًا وَّرَحْمَةً ؕ اُولٰٓىِٕكَ یُؤْمِنُوْنَ بِهٖ ؕ وَمَنْ یَّكْفُرْ بِهٖ مِنَ الْاَحْزَابِ فَالنَّارُ مَوْعِدُهٗ ۚ فَلَا تَكُ فِیْ مِرْیَةٍ مِّنْهُ ۗ اِنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّكَ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یُؤْمِنُوْنَ ۟
اَفَمَنْஅப்படியானால் எவர்كَانَஇருக்கிறாரோعَلٰیமீதுبَیِّنَةٍதெளிவான சான்றின்مِّنْஇருந்துرَّبِّهٖதன் இறைவனிடம்وَ یَتْلُوْهُமேலும் அதனைத் தொடர்ந்து வருகிறதோشَاهِدٌஒரு சாட்சிمِّنْهُஅவனிடமிருந்துوَ مِنْமேலும் இருந்துقَبْلِهٖஅதற்கு முன்னர்كِتٰبُவேதம்مُوْسٰۤیமூஸாவுடையاِمَامًاவழிகாட்டியாகவும்وَّ رَحْمَةً ؕஅருளாகவும்اُولٰٓىِٕكَஅத்தகையோர்یُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்கள்بِهٖ ؕஅதில்وَ مَنْமேலும் எவர்یَّكْفُرْநிராகரிக்கிறாரோبِهٖஅதனைمِنَஇருந்துالْاَحْزَابِகூட்டத்தினரில்فَالنَّارُநரக நெருப்பேمَوْعِدُهٗ ۚஅவருக்கு வாக்களிக்கப்பட்ட இடமாகும்فَلَاஎனவே வேண்டாம்تَكُநீர் இருக்கفِیْஇல்مِرْیَةٍசந்தேகத்தில்مِّنْهُ ۗஅதைப் பற்றிاِنَّهُநிச்சயமாக அதுالْحَقُّசத்தியமாகும்مِنْஇருந்துرَّبِّكَஉமது இறைவனிடம்وَ لٰكِنَّஆனால்اَكْثَرَபெரும்பாலானالنَّاسِமனிதர்கள்لَاஇல்லைیُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்கள்
அFபமன் கான 'அல Bபய்யினதிம் மிர் ரBப்Bபிஹீ வ யத்லூஹு ஷாஹிதும் மின்ஹு வ மின் கBப்லிஹீ கிதாBபு மூஸா இமாம(ன்)வ் வ ரஹ்மஹ்; உலா 'இக யு'மினூன Bபிஹ்; வ மய் யக்Fபுர் Bபிஹீ மினல் அஹ்ZஜாBபி Fபன் னாரு மவ்'இதுஹ்; Fபலா தகு Fபீ மிர்யதிம் மின்ஹ்; இன்னஹுல் ஹக்கு மிர் ரBப்Bபிக வ லாகின்ன அக்தரன் னாஸி லா யு'மினூன்
எவர் தன் இறைவனிடமிருந்து (பெற்ற)தெளிவின் மீது இருக்கிறாரோ மேலும் இறைவனிடமிருந்து ஒரு சாட்சியாளர் எவரிடம் (பக்க பலமாய்) வந்திருக்கிறாரோ மேலும் இதற்கு முன்னால் மூஸாவுடைய வேதம் வழிகாட்டியாகவும் ரஹ்மத்தாகவும் இருக்கிறதோ அவர்கள் தான் இதனை நம்புவார்கள்; ஆனால் (இக்) கூட்டதார்களில் எவர் இதை நிராகரிக்கிறாரோ அவருக்கு வாக்களிக்கப்பட்டுள்ள இடம் நரக நெருப்பேயாகும். ஆதலால் (நபியே!) இதைப் பற்றி நீர் சந்தேகத்திலிருக்க வேண்டாம் - இ(வ்வேதமான)து நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து வந்த உண்மையாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰی بِاٰیٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ۙ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்مُوْسٰیமூஸாவைبِاٰیٰتِنَاநம்முடைய அத்தாட்சிகளுடன்وَ سُلْطٰنٍமேலும் ஓர் ஆதாரத்துடனும்مُّبِیْنٍۙதெளிவான
வ லகத் அர்ஸல்னா மூஸா Bபி ஆயாதினா வ ஸுல்தானிம் முBபீன்
நிச்சயமாக நாம் மூஸாவை நம் வசனங்களுடன், தெளிவான அத்தாட்சியுடனும், அனுப்பிவைத்தோம்.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ فَاخْتُلِفَ فِیْهِ ؕ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَقُضِیَ بَیْنَهُمْ ؕ وَاِنَّهُمْ لَفِیْ شَكٍّ مِّنْهُ مُرِیْبٍ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاٰتَیْنَاநாம் வழங்கினோம்مُوْسَیமூஸாவிற்குالْكِتٰبَவேதத்தைفَاخْتُلِفَஎனவே கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டதுفِیْهِ ؕஅதில்وَ لَوْ لَاமேலும் இல்லாதிருந்தால்كَلِمَةٌஒரு வாக்குسَبَقَتْமுந்திவிட்டمِنْஇருந்துرَّبِّكَஉமது இறைவனிடம்لَقُضِیَநிச்சயமாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்بَیْنَهُمْ ؕஅவர்களுக்கு இடையில்وَ اِنَّهُمْமேலும் நிச்சயமாக அவர்கள்لَفِیْநிச்சயமாகشَكٍّசந்தேகத்தில்مِّنْهُஅதைப் பற்றிمُرِیْبٍகுழப்பமான
வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப Fபக்துலிFப Fபீஹ்; வ லவ் லா கலிமதுன் ஸBபகத் மிர் ரBப்Bபிக லகுளிய Bபய்னஹும்; வ இன்னஹும் லFபீ ஷக்கிம் மின்ஹு முரீBப்
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தை கொடுத்தோம். அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது; உமது இறைவனிடமிருந்து முந்தி விட்ட வாக்கு இல்லை என்றால் இவர்கள் மத்தியிலே முடிவு செய்யப்பட்டிருக்கும். நிச்சயமாக இவர்கள் இதை (குர்ஆனை)ப் பற்றி சந்தேகத்திலேயே இருக்கின்றனர்.
وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰی بِاٰیٰتِنَاۤ اَنْ اَخْرِجْ قَوْمَكَ مِنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ۙ۬ وَذَكِّرْهُمْ بِاَیّٰىمِ اللّٰهِ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்مُوْسٰیமூஸாவைبِاٰیٰتِنَاۤநம்முடைய அத்தாட்சிகளுடன்اَنْஎன்றுاَخْرِجْவெளியேற்றுவீராகقَوْمَكَஉமது சமூகத்தைمِنَஇருந்துالظُّلُمٰتِஇருள்களில்اِلَیபக்கம்النُّوْرِ ۙ۬ஒளியின்وَ ذَكِّرْهُمْமேலும் அவர்களுக்கு நினைவுபடுத்துவீராகبِاَیّٰىمِநாட்களைக் கொண்டுاللّٰهِ ؕஅல்லாஹ்வின்اِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதில்لَاٰیٰتٍநிச்சயமாக அத்தாட்சிகள்لِّكُلِّஒவ்வொருصَبَّارٍஅதிக பொறுமையாளருக்கும்شَكُوْرٍஅதிக நன்றியுடையவருக்கும்
வ லகத் அர்ஸல்னா மூஸா Bபி ஆயாதினா அன் அக்ரிஜ் கவ்மக மினள் ளுலுமாதி இலன் னூரி வ தக் கிர்ஹும் Bபி அய்யாமில் லாஹ்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகுல்லி ஸBப்Bபாரின் ஷகூர்
நிச்சயமாக, நாம் மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு அனுப்பிவைத்து, “நீர் உம்முடைய சமூகத்தினரை இருள்களிலிருந்து, வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் கொண்டு வாரும், அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்களுக்கு நினைவூட்டுவீராக” என்று கட்டளையிட்டோம்; நிச்சயமாக இதில் பொறுமையுடையோர், நன்றி செலுத்துவோர் எல்லோருக்கும் படிப்பினைகள் இருக்கின்றன.
وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ اَنْجٰىكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ وَیُذَبِّحُوْنَ اَبْنَآءَكُمْ وَیَسْتَحْیُوْنَ نِسَآءَكُمْ ؕ وَفِیْ ذٰلِكُمْ بَلَآءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِیْمٌ ۟۠
وَ اِذْமேலும் (அந்நேரத்தை)قَالَகூறினார்مُوْسٰیமூஸாلِقَوْمِهِதன் சமூகத்தாரிடம்اذْكُرُوْاநினைவு கூருங்கள்نِعْمَةَஅருட்கொடையைاللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْكُمْஉங்கள் மீதானاِذْபோதுاَنْجٰىكُمْஅவன் உங்களைக் காப்பாற்றியمِّنْஇருந்துاٰلِகூட்டத்தாரிடம்فِرْعَوْنَஃபிர்அவ்னின்یَسُوْمُوْنَكُمْஅவர்கள் உங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்سُوْٓءَகொடியالْعَذَابِவேதனையைوَ یُذَبِّحُوْنَமேலும் அவர்கள் அறுத்துக் கொண்டிருந்தார்கள்اَبْنَآءَكُمْஉங்கள் ஆண்மக்களைوَ یَسْتَحْیُوْنَமேலும் அவர்கள் உயிரோடு விட்டுக் கொண்டிருந்தார்கள்نِسَآءَكُمْ ؕஉங்கள் பெண்மக்களைوَ فِیْமேலும்ذٰلِكُمْஅதில்بَلَآءٌஒரு சோதனைمِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவனிடம்عَظِیْمٌ۠மகத்தான
வ இத் கால மூஸா லிகவ்மிஹித் குரூ னிஃமதல் லாஹி 'அலய்கும் இத் அன்ஜாகும் மின் ஆலி Fபிர்'அவ்ன யஸூமூ னகும் ஸூ'அல் 'அதாBபி வ யுதBப்Bபிஹூன அBப்னா'அகும் வ யஸ்தஹ்யூன னிஸா'அகும்; வ Fபீ தாலிகும் Bபலா'உன் மிர் ரBப்Bபிகும் 'அளீம்
மூஸா தம் சமூகத்தாரிடம்: ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து (அல்லாஹ்) உங்களைக் காப்பாற்றிய போது, அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருள் கொடையை நினைத்துப் பாருங்கள்; அவர்களோ, உங்களைக் கொடிய வேதனையால் துன்புறுத்தியதுடன், உங்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)தும் உங்கள் பெண்மக்களை (மட்டும்) உயிருடன் விட்டுக் கொண்டும் இருந்தார்கள் - இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மகத்தான சோதனை (ஏற்பட்டு) இருந்தது” என்று கூறினார்.
وَقَالَ مُوْسٰۤی اِنْ تَكْفُرُوْۤا اَنْتُمْ وَمَنْ فِی الْاَرْضِ جَمِیْعًا ۙ فَاِنَّ اللّٰهَ لَغَنِیٌّ حَمِیْدٌ ۟
وَ قَالَமேலும் கூறினார்مُوْسٰۤیமூஸாاِنْஒருவேளைتَكْفُرُوْۤاநீங்கள் நிராகரித்தால்اَنْتُمْநீங்கள்وَ مَنْமற்றும் எவர்فِیஇல்الْاَرْضِபூமிجَمِیْعًا ۙஅனைவரும்فَاِنَّஆகவே நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَغَنِیٌّதேவையற்றவன்حَمِیْدٌபுகழுக்குரியவன்
வ கால மூஸா இன் தக்Fபுரூ அன்தும் வ மன் Fபில் அர்ளி ஜமீ'அன் Fப இன்னல் லாஹ ல கனிய்யுன் ஹமீத்
மேலும் மூஸா (தம் சமூகத்தாரிடம்) “நீங்களும், பூமியிலுள்ள அனைவரும் சேர்ந்து மாறு செய்த போதிலும், (அவனுக்கு யாதொரு நஷ்டமும் ஏற்படாது;) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றோனும், புகழுடையோனுமாக இருக்கின்றான்” என்றும் கூறினார்.
وَاٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَجَعَلْنٰهُ هُدًی لِّبَنِیْۤ اِسْرَآءِیْلَ اَلَّا تَتَّخِذُوْا مِنْ دُوْنِیْ وَكِیْلًا ۟ؕ
وَ اٰتَیْنَاமேலும் நாம் கொடுத்தோம்مُوْسَیமூஸாவுக்குالْكِتٰبَவேதத்தைوَ جَعَلْنٰهُஇன்னும் அதனை நாம் ஆக்கினோம்هُدًیநேர்வழியாகلِّبَنِیْۤசந்ததியினருக்குاِسْرَآءِیْلَஇஸ்ராயீலின்اَلَّاஎன்றுتَتَّخِذُوْاநீங்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள்مِنْதவிரدُوْنِیْஎன்னைத்وَكِیْلًاؕபாதுகாவலரை
வ ஆதய்னா மூஸல்-கிதாBப வ ஜ'அல்னாஹு ஹுதல்-லிBபனீ இஸ்ரா'ஈல்; அல்லா தத்-தகிதூ மின் தூனீ வகீலா.
இன்னும், நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; நாம் அதை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வழிகாட்டியாக ஆக்கி, “என்னையன்றி வேறு எவரையும் நீங்கள் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் (எனக் கட்டளையிட்டோம்).
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسٰی تِسْعَ اٰیٰتٍ بَیِّنٰتٍ فَسْـَٔلْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ اِذْ جَآءَهُمْ فَقَالَ لَهٗ فِرْعَوْنُ اِنِّیْ لَاَظُنُّكَ یٰمُوْسٰی مَسْحُوْرًا ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاٰتَیْنَاநாம் வழங்கினோம்مُوْسٰیமூஸாவுக்குتِسْعَஒன்பதுاٰیٰتٍۭஅத்தாட்சிகளைبَیِّنٰتٍதெளிவானفَسْـَٔلْஎனவே நீர் கேளும்بَنِیْۤசந்ததியினரிடம்اِسْرَآءِیْلَஇஸ்ராயீல்اِذْபோதுجَآءَهُمْஅவர்களிடம் அவர் வந்தفَقَالَஅப்போது கூறினார்لَهٗஅவரிடம்فِرْعَوْنُஃபிர்அவ்ன்اِنِّیْநிச்சயமாக நான்لَاَظُنُّكَஉம்மை நிச்சயமாகக் கருதுகிறேன்یٰمُوْسٰیமூஸாவேمَسْحُوْرًاசூனியம் செய்யப்பட்டவராக
வ லகத் ஆதய்னா மூஸா திஸ்'அ ஆயாதிம் Bபய்யினாதின் Fபஸ்'அல் Bபனீ இஸ்ரா'ஈல இத் ஜா'அஹும் Fபகால லஹூ Fபிர்'அவ்னு இன்னீ ல அளுன்னுக யா மூஸா மஸ் ஹூரா
நிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை கொடுத்திருந்தோம்; அவர் அவர்களிடம் (அவற்றைக் கொண்டு) வந்தபோது (என்ன நடந்தது என்று) பனீ இஸ்ராயீல்களிடம் (நபியே!) நீர் கேளும். ஃபிர்அவ்ன் அவரை நோக்கி “மூஸாவே! நிச்சயமாக நாம் உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே எண்ணுகிறேன்” என்று கூறினான்.
قَالَ لَقَدْ عَلِمْتَ مَاۤ اَنْزَلَ هٰۤؤُلَآءِ اِلَّا رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ بَصَآىِٕرَ ۚ وَاِنِّیْ لَاَظُنُّكَ یٰفِرْعَوْنُ مَثْبُوْرًا ۟
قَالَஅவர் கூறினார்لَقَدْநிச்சயமாகعَلِمْتَநீர் அறிந்துள்ளீர்مَاۤஇல்லைاَنْزَلَஅருளினான்هٰۤؤُلَآءِஇவைகளைاِلَّاதவிரرَبُّஇறைவன்السَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِமற்றும் பூமியின்بَصَآىِٕرَ ۚதெளிவான அத்தாட்சிகளாகوَ اِنِّیْமேலும் நிச்சயமாக நான்لَاَظُنُّكَநிச்சயமாக உம்மை கருதுகிறேன்یٰفِرْعَوْنُஃபிர்அவ்னேمَثْبُوْرًاஅழிவுக்குள்ளானவராக
கால லகத் 'அலிம்த மா அன்Zஜல ஹா'உலா'இ இல்லா ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி Bபஸா'இர வ இன்னீ ல அளுன் னுக யா Fபிர்'அவ்னு மத்Bபூரா
(அதற்கு) மூஸா “வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனைத் தவிர (வேறு யாரும்) இவற்றைத் தெளிவான சான்றுகளாக அனுப்பவில்லை என்பதை நிச்சயமாக நீ அறிவாய்; ஃபிர்அவ்னே! நிச்சயமாக நீ அழிக்கப்பட இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் எண்ணுகின்றேன்” என்று கூறினார்.
فَاَرَادَ اَنْ یَّسْتَفِزَّهُمْ مِّنَ الْاَرْضِ فَاَغْرَقْنٰهُ وَمَنْ مَّعَهٗ جَمِیْعًا ۟ۙ
فَاَرَادَஆகவே அவர் நாடினார்اَنْஎன்றுیَّسْتَفِزَّهُمْஅவர்களை வெளியேற்றمِّنَஇருந்துالْاَرْضِஅப்பூமியிفَاَغْرَقْنٰهُஆகவே நாம் அவரை மூழ்கடித்தோம்وَ مَنْமேலும் எவர்مَّعَهٗஅவருடன்جَمِیْعًاۙஅனைவரையும்
Fப அராத அ(ன்)ய் யஸ்தFபிZஜ்Zஜஹும் மினல் அர்ளி Fப அக்ரக்னாஹு வ மம் ம'அஹூ ஜமீ'ஆ
ஆகவே (ஃபிர்அவ்ன்) அந்நாட்டை விட்டு (மூஸாவையும் பனீ இஸ்ராயீல்களையும்) விரட்டிவிட நாடினான்; ஆனால், நாம் அவனையும் அவனுடனிருந்தவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.
وَاِذْ قَالَ مُوْسٰی لِفَتٰىهُ لَاۤ اَبْرَحُ حَتّٰۤی اَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَیْنِ اَوْ اَمْضِیَ حُقُبًا ۟
وَ اِذْஇன்னும் (அச்சமயம்)قَالَகூறினார்مُوْسٰیமூஸாلِفَتٰىهُதம் இளைஞரிடம்لَاۤமாட்டேன்اَبْرَحُநான் ஓயحَتّٰۤیவரைاَبْلُغَநான் அடையும்مَجْمَعَசங்கமிக்கும் இடத்தைالْبَحْرَیْنِஇரு கடல்கள்اَوْஅல்லதுاَمْضِیَநான் கழிக்கும்حُقُبًاநீண்ட காலம்
வ இத் காலா மூஸா லிFபதாஹு லா அBப்ரஹு ஹத்தா அBப்லுக மஜ்ம'அல் Bபஹ்ரய்னி அவ் அம்ளிய ஹுகுBபா
இன்னும் மூஸா தம் பணியாளிடம், “இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது வருடக் கணக்கில் நான் போய்க்கொண்டிருப்பேன்” என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக.
فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتٰىهُ اٰتِنَا غَدَآءَنَا ؗ لَقَدْ لَقِیْنَا مِنْ سَفَرِنَا هٰذَا نَصَبًا ۟
فَلَمَّاபின்னர் எப்போதுجَاوَزَاஅவர்கள் இருவரும் கடந்தார்களோقَالَஅவர் கூறினார்لِفَتٰىهُதம் இளைஞரிடம்اٰتِنَاஎமக்குக் கொண்டு வாغَدَآءَنَا ؗஎமது காலை உணவைلَقَدْநிச்சயமாகلَقِیْنَاநாம் அடைந்திருக்கிறோம்مِنْஇலிருந்துسَفَرِنَاஎமது பயணத்தின்هٰذَاஇந்தنَصَبًاகளைப்பை
Fபலம்மா ஜாவZஜா கால லிFபதாஹு ஆதினா கதா'அனா லகத் லகீன மின் ஸFபரினா ஹாதா னஸBபா
அவ்விருவரும், அப்புறம் அந்த இடத்தைக் கடந்த போது, தம் பணியாளை நோக்கி, “நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா; இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம்” என்று (மூஸா) கூறினார்.
قَالَ ذٰلِكَ مَا كُنَّا نَبْغِ ۖۗ فَارْتَدَّا عَلٰۤی اٰثَارِهِمَا قَصَصًا ۟ۙ
قَالَஅவர் கூறினார்ذٰلِكَஅதுதான்مَاஎதைكُنَّاநாம்نَبْغِ ۖۗதேடிக்கொண்டிருந்தோமோفَارْتَدَّاஆகவே அவர்கள் இருவரும் திரும்பினார்கள்عَلٰۤیமீதுاٰثَارِهِمَاதங்கள் காலடிச் சுவடுகளின்قَصَصًاۙபின்தொடர்ந்து
கால தாலிக மா குன்னா னBப்கி; Fபர்தத்தா 'அலா ஆதாரி ஹிம் மா கஸஸா
(அப்போது) மூஸா, “நாம் தேடிவந்த (இடம் அ)துதான்” என்று கூறி, இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்தவழியே) திரும்பிச் சென்றார்கள்.
قَالَ لَهٗ مُوْسٰی هَلْ اَتَّبِعُكَ عَلٰۤی اَنْ تُعَلِّمَنِ مِمَّا عُلِّمْتَ رُشْدًا ۟
قَالَகூறினார்لَهٗஅவரிடம்مُوْسٰیமூஸாهَلْநான்اَتَّبِعُكَஉம்மைப் பின்பற்றலாமா?عَلٰۤیஅடிப்படையில்اَنْஎன்றுتُعَلِّمَنِநீர் எனக்குக் கற்றுத்தருவீர்مِمَّاஎவற்றிலிருந்துعُلِّمْتَநீர் கற்பிக்கப்பட்டீரோرُشْدًاநேர்வழியை
கால லஹூ மூஸா ஹல் அத்தBபி'உக 'அலா அன் து'அல்லிமனி மிம்மா 'உல்லிம்த ருஷ்தா
“உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா? என்று அவரிடம் மூஸா கேட்டார்.
قَالَ سَتَجِدُنِیْۤ اِنْ شَآءَ اللّٰهُ صَابِرًا وَّلَاۤ اَعْصِیْ لَكَ اَمْرًا ۟
قَالَஅவர் கூறினார்سَتَجِدُنِیْۤநீர் என்னைக் காண்பீர்اِنْஎன்றால்شَآءَநாடினால்اللّٰهُஅல்லாஹ்صَابِرًاபொறுமையாளனாகوَّ لَاۤமேலும் மாட்டேன்اَعْصِیْநான் மாறுசெய்யلَكَஉமக்குاَمْرًاகட்டளைக்கு
கால ஸதஜிதுனீ இன் ஷா 'அல் லாஹு ஸாBபிர(ன்)வ் வ லா அஃஸீ லக அம்ரா
(அதற்கு) மூஸா, “இன்ஷா அல்லாஹ்! நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்” என்று (மூஸா) சொன்னார்.
فَانْطَلَقَا ۥ حَتّٰۤی اِذَا رَكِبَا فِی السَّفِیْنَةِ خَرَقَهَا ؕ قَالَ اَخَرَقْتَهَا لِتُغْرِقَ اَهْلَهَا ۚ لَقَدْ جِئْتَ شَیْـًٔا اِمْرًا ۟
فَانْطَلَقَا ۥஎனவே அவ்விருவரும் புறப்பட்டனர்حَتّٰۤیவரைاِذَاபோதுرَكِبَاஅவ்விருவரும் ஏறினார்கள்فِیஇல்السَّفِیْنَةِகப்பல்خَرَقَهَا ؕஅதில் அவர் துளையிட்டார்قَالَஅவர் கூறினார்اَخَرَقْتَهَاநீர் அதில் துளையிட்டீரா?لِتُغْرِقَமூழ்கடிப்பதற்காகاَهْلَهَا ۚஅதன் மக்களைلَقَدْநிச்சயமாகجِئْتَநீர் செய்துவிட்டீர்شَیْـًٔاஒரு காரியத்தைاِمْرًاவிபரீதமான
Fபன்தலகா ஹத்தா இதா ரகிBபா Fபிஸ் ஸFபீனதி கரகஹா கால அகரக்தஹா லிதுக்ரிக அஹ்லஹா லகத் ஜி'த ஷய்'அன் இம்ரா
பின்னர் இருவரும் ஒரு மரக்கலத்தில் ஏறும் வரையில் நடந்து சென்றனர், (மரக்கலம் கடலில் செல்லலானதும்;) அவர் அதில் ஓர் ஓட்டையைப் போட்டார்; “இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓர் ஓட்டையைப் போட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் ஓர் (அபாயகரமான) பெருங் காரியத்தைச் செய்துவிட்டீர்கள்” என்று (மூஸா) கூறினார்.
قَالَ لَا تُؤَاخِذْنِیْ بِمَا نَسِیْتُ وَلَا تُرْهِقْنِیْ مِنْ اَمْرِیْ عُسْرًا ۟
قَالَஅவர் கூறினார்لَاவேண்டாம்تُؤَاخِذْنِیْஎன்னைக் குற்றம் பிடிக்கبِمَاஎன்பதற்காகنَسِیْتُநான் மறந்தேன்وَ لَاமேலும் வேண்டாம்تُرْهِقْنِیْஎன்னைச் சிரமப்படுத்தمِنْஇருந்துاَمْرِیْஎனது காரியத்தில்عُسْرًاகஷ்டத்தை
கால லா து'ஆகித்னீ Bபிமா னஸீது வலா துர்ஹிக்னீ மின் அம்ரீ 'உஸ்ரா
“நான் மறந்து விட்டதைப் பற்றி நீங்கள் என்னை(க் குற்றம்) பிடிக்க வேண்டாம்; இன்னும் என் காரியத்தைச் சிரமமுடையதாக ஆக்கி விடாதீர்கள்” என்று (மூஸா) கூறினார்.
فَانْطَلَقَا ۥ حَتّٰۤی اِذَا لَقِیَا غُلٰمًا فَقَتَلَهٗ ۙ قَالَ اَقَتَلْتَ نَفْسًا زَكِیَّةً بِغَیْرِ نَفْسٍ ؕ لَقَدْ جِئْتَ شَیْـًٔا نُّكْرًا ۟
فَانْطَلَقَا ۥபிறகு அவ்விருவரும் சென்றனர்حَتّٰۤیஎதுவரையெனில்اِذَاபொழுதுلَقِیَاஅவ்விருவரும் சந்தித்தனர்غُلٰمًاஒரு சிறுவனைفَقَتَلَهٗ ۙஉடனே அவர் அவனைக் கொன்றார்قَالَஅவர் கூறினார்اَقَتَلْتَநீர் கொன்றுவிட்டீரா?نَفْسًاஓர் உயிரைزَكِیَّةًۢபரிசுத்தமானبِغَیْرِஈடின்றிنَفْسٍ ؕஓர் உயிருக்குلَقَدْநிச்சயமாகجِئْتَநீர் செய்துவிட்டீர்شَیْـًٔاஒரு காரியத்தைنُّكْرًاமிகக் கொடிய
Fபன்தலகா ஹத்தா இதா லகியா குலாமன் Fபகதலஹூ கால அகதல்த னFப்ஸன் Zஜகிய் யதம் Bபிகய்ரி னFப்ஸ்; லகத் ஜி'த ஷய்'அன் னுக்ரா
பின்னர் (மரக்கலத்திலிருந்து இறங்கி) இருவரும் வழி நடக்கலானார்கள்; (வழியில்) ஒரு பையனை அவ்விருவரும் சந்தித்த போது, அவர் அவனைக் கொன்று விட்டார். (உடனே மூஸா) “கொலைக்குற்றமின்றி, பரிசுத்தமான ஜீவனைக் கொன்றுவிட்டீர்களே? நிச்சயமாக நீங்கள் பெருத்தக் கேடான ஒருகாரியத்தையே செய்து விட்டீர்கள்!” என்று (மூஸா) கூறினார்.
فَانْطَلَقَا ۥ حَتّٰۤی اِذَاۤ اَتَیَاۤ اَهْلَ قَرْیَةِ سْتَطْعَمَاۤ اَهْلَهَا فَاَبَوْا اَنْ یُّضَیِّفُوْهُمَا فَوَجَدَا فِیْهَا جِدَارًا یُّرِیْدُ اَنْ یَّنْقَضَّ فَاَقَامَهٗ ؕ قَالَ لَوْ شِئْتَ لَتَّخَذْتَ عَلَیْهِ اَجْرًا ۟
فَانْطَلَقَا ۥபின்னர் அவ்விருவரும் சென்றனர்حَتّٰۤیவரைاِذَاۤபோதுاَتَیَاۤஅவ்விருவரும் வந்தاَهْلَமக்களிடம்قَرْیَةِஒரு ஊர்سْتَطْعَمَاۤஅவ்விருவரும் உணவு கேட்டனர்اَهْلَهَاஅதன் மக்களிடம்فَاَبَوْاஅவர்கள் மறுத்துவிட்டனர்اَنْசெய்யیُّضَیِّفُوْهُمَاஅவ்விருவருக்கும் விருந்தளிக்கفَوَجَدَاபின்னர் அவ்விருவரும் கண்டனர்فِیْهَاஅதில்جِدَارًاஒரு சுவரைیُّرِیْدُஅது விரும்பியதுاَنْசெய்யیَّنْقَضَّஇடிந்து விழفَاَقَامَهٗ ؕஅவர் அதை நிமிர்த்தி வைத்தார்قَالَஅவர் கூறினார்لَوْஒருவேளைشِئْتَநீர் நாடியிருந்தால்لَتَّخَذْتَநீர் பெற்றிருக்கலாம்عَلَیْهِஅதற்காகاَجْرًاஒரு கூலியை
Fபன்தலகா ஹத்தா இதா அதயா அஹ்ல கர்யதினிஸ் தத்'அமா அஹ்லஹா Fப அBபவ் அ(ன்)ய் யுளய்யிFபூஹுமா Fபவஜதா Fபீஹா ஜிதார(ன்)ய் யுரீது அ(ன்)ய் யன்கள்ள Fப அகாமஹ்; கால லவ் ஷி'த லத்தகத்த 'அலய்ஹி அஜ்ரா
பின்னர் அவ்விருவரும் வழி நடந்து, இருவரும் ஒரு கிராமத்தாரிடம் வந்து சேர்ந்தார்கள்; தங்களிருவருக்கும் உணவு தருமாறு அந்த கிராமத்தாரிடம் கேட்டார்கள்; ஆனால் அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டார்கள்; அப்போது அங்கே இடிந்து அடியோடு விழும் நிலையிலிருந்த ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர்; ஆகவே, அவர் (சரிசெய்து) நிமிர்த்து வைத்தார். (இதைக் கண்ட மூஸா) “நீங்கள் நாடியிருந்தால் இதற்கென ஒரு கூலியை பெற்றிருக்கலாமே” என்று (மூஸா) கூறினார்.
وَاذْكُرْ فِی الْكِتٰبِ مُوْسٰۤی ؗ اِنَّهٗ كَانَ مُخْلَصًا وَّكَانَ رَسُوْلًا نَّبِیًّا ۟
وَ اذْكُرْமேலும் நினைவு கூர்வீராகفِیஇல்الْكِتٰبِவேதத்தில்مُوْسٰۤی ؗமூஸாவைاِنَّهٗநிச்சயமாக அவர்كَانَஇருந்தார்مُخْلَصًاதூய்மையாக்கப்பட்டவராகوَّ كَانَமேலும் அவர் இருந்தார்رَسُوْلًاதூதராகنَّبِیًّاநபியாக
வத்குர் Fபில் கிதாBபி மூஸா; இன்னஹூ கான முக்லஸ(ன்)வ் வ கான ரஸூலன் னBபிய்யா
(நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மாசில்லாத (தூயவராக) இருந்தார். அவர் ரஸூலாகவும் நபியாகவும் இருந்தார்.
وَهَلْ اَتٰىكَ حَدِیْثُ مُوْسٰی ۟ۘ
وَ هَلْமேலும்اَتٰىكَஉமக்கு வந்ததாحَدِیْثُசெய்திمُوْسٰیۘமூஸாவின்
வ ஹல் அதாக ஹதீது மூஸா
இன்னும் (நபியே!) மூஸாவின் வரலாறு உம்மிடம் வந்ததா?
فَلَمَّاۤ اَتٰىهَا نُوْدِیَ یٰمُوْسٰی ۟ؕ
فَلَمَّاۤஆகவே, எப்போதுاَتٰىهَاஅவர் அதனிடம் வந்தாரோنُوْدِیَஅவர் அழைக்கப்பட்டார்یٰمُوْسٰیؕமூஸாவே!
Fபலம்மா அதாஹா னூதிய யா மூஸா
அவர் (நெருப்பின்) அருகே வந்த போது “மூஸாவே!” என்று அழைக்கப் பட்டார்.
وَمَا تِلْكَ بِیَمِیْنِكَ یٰمُوْسٰی ۟
وَ مَاமேலும் என்னتِلْكَஅதுبِیَمِیْنِكَஉமது வலது கையில்یٰمُوْسٰیமூஸாவே
வமா தில்க Bபி யமீ னிக யா மூஸா
மூஸாவே! உம்முடைய வலது கையில் இருப்பது என்ன?” (என்றும் அல்லாஹ் கேட்டான்.)
قَالَ اَلْقِهَا یٰمُوْسٰی ۟
قَالَஅவன் கூறினான்اَلْقِهَاஅதனைப் போடுவீராகیٰمُوْسٰیமூஸாவே
கால அல்கிஹா யா மூஸா
அதற்கு (இறைவன்) “மூஸாவே! அதை நீர் கீழே எறியும்” என்றான்.
قَالَ رَبِّ اشْرَحْ لِیْ صَدْرِیْ ۟ۙ
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவனேاشْرَحْவிரிவாக்குவாயாகلِیْஎனக்காகصَدْرِیْۙஎன் நெஞ்சத்தை
கால ரBப்Bபிஷ் ரஹ் லீ ஸத்ரீ
(அதற்கு மூஸா) கூறினார்: “இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!
قَالَ قَدْ اُوْتِیْتَ سُؤْلَكَ یٰمُوْسٰی ۟
قَالَகூறினான்قَدْநிச்சயமாகاُوْتِیْتَஉமக்கு வழங்கப்பட்டுவிட்டதுسُؤْلَكَஉமது வேண்டுதல்یٰمُوْسٰیமூஸாவே
கால கத் ஊதீத ஸு'லக யா மூஸா
மூஸாவே! நீர் கேட்டவை, நிச்சயமாக உமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன” என்று (அல்லாஹ்) கூறினான்.
اَنِ اقْذِفِیْهِ فِی التَّابُوْتِ فَاقْذِفِیْهِ فِی الْیَمِّ فَلْیُلْقِهِ الْیَمُّ بِالسَّاحِلِ یَاْخُذْهُ عَدُوٌّ لِّیْ وَعَدُوٌّ لَّهٗ ؕ وَاَلْقَیْتُ عَلَیْكَ مَحَبَّةً مِّنِّیْ ۚ۬ وَلِتُصْنَعَ عَلٰی عَیْنِیْ ۟ۘ
اَنِஎன்றுاقْذِفِیْهِஅவனை வைப்பாயாகفِیஇல்التَّابُوْتِபெட்டிفَاقْذِفِیْهِபின்னர் அதனைப் போடுவாயாகفِیஇல்الْیَمِّநதிفَلْیُلْقِهِபின்னர் அதனை ஒதுக்கட்டும்الْیَمُّநதிبِالسَّاحِلِகரையில்یَاْخُذْهُஅவனை எடுத்துக்கொள்வான்عَدُوٌّஓர் எதிரிلِّیْஎனக்குوَ عَدُوٌّமேலும் ஓர் எதிரிلَّهٗ ؕஅவனுக்குوَ اَلْقَیْتُமேலும் நான் பொழிந்தேன்عَلَیْكَஉன் மீதுمَحَبَّةًஅன்பைمِّنِّیْ ۚ۬என்னிடமிருந்துوَ لِتُصْنَعَமேலும் நீ வளர்க்கப்படுவதற்காகعَلٰیமுன்عَیْنِیْۘஎன் கண்
'அனிக்திFபீஹி Fபித் தாBபூதி Fபக்திFபீஹி Fபில் யம்மி Fபல் யுல் கிஹில் யம்மு Bபிஸ் ஸாஹிலி ய'குத்ஹு 'அதுவ்வுல் லீ வ 'அதுவ்வுல் லஹ்; வ அல்கய்து 'அலய்க மஹBப்Bபதன் மின்னீ வ லிதுஸ்ன'அ 'அலா 'அய்னீ
அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்) நதியில் போட்டுவிடும்; பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்து விடும்; அங்கே எனக்கு பகைவனும்; அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்” (எனப் பணித்தோம்). மேலும், ”(மூஸாவே!) நீர் என் கண் முன்னே வளர்க்கப்படுவதற்காக உம் மீது அன்பைப் பொழிந்தேன்.
اِذْ تَمْشِیْۤ اُخْتُكَ فَتَقُوْلُ هَلْ اَدُلُّكُمْ عَلٰی مَنْ یَّكْفُلُهٗ ؕ فَرَجَعْنٰكَ اِلٰۤی اُمِّكَ كَیْ تَقَرَّ عَیْنُهَا وَلَا تَحْزَنَ ؕ۬ وَقَتَلْتَ نَفْسًا فَنَجَّیْنٰكَ مِنَ الْغَمِّ وَفَتَنّٰكَ فُتُوْنًا ۫۬ فَلَبِثْتَ سِنِیْنَ فِیْۤ اَهْلِ مَدْیَنَ ۙ۬ ثُمَّ جِئْتَ عَلٰی قَدَرٍ یّٰمُوْسٰی ۟
اِذْபோதுتَمْشِیْۤநடந்து சென்றاُخْتُكَஉமது சகோதரிفَتَقُوْلُஅப்போது அவர் கூறினார்هَلْSlநான்اَدُلُّكُمْஉங்களுக்கு வழிகாட்டட்டுமாعَلٰیஇடம்مَنْயார்یَّكْفُلُهٗ ؕஅவரைப் பொறுப்பேற்பாரோفَرَجَعْنٰكَபின்னர் நாம் உம்மைத் திருப்பினோம்اِلٰۤیஇடம்اُمِّكَஉமது தாயின்كَیْஎன்பதற்காகتَقَرَّகுளிர்ச்சியடையعَیْنُهَاஅவரது கண்وَ لَاமேலும் கூடாதுتَحْزَنَ ؕ۬அவர் கவலைப்படوَ قَتَلْتَமேலும் நீர் கொன்றீர்نَفْسًاஓர் உயிரைفَنَجَّیْنٰكَஅப்போது நாம் உம்மைக் காப்பாற்றினோம்مِنَஇருந்துالْغَمِّதுக்கம்وَ فَتَنّٰكَமேலும் நாம் உம்மைச் சோதித்தோம்فُتُوْنًا ۫۬பல சோதனைகளால்فَلَبِثْتَபின்னர் நீர் தங்கியிருந்தீர்سِنِیْنَபல ஆண்டுகள்فِیْۤஇல்اَهْلِமக்களிடையேمَدْیَنَ ۙ۬மத்யன்ثُمَّபிறகுجِئْتَநீர் வந்தீர்عَلٰیபடிقَدَرٍஒரு திட்டத்தின்یّٰمُوْسٰیமூஸாவே
இத் தம்ஷீ உக்துக Fபதகூலு ஹல் அதுல்லுகும் 'அலா மய் யக்Fபுலுஹூ Fபரஜஃனாக இலா உம்மிக கய் தகர்ர 'அய்னுஹா வலா தஹ்Zஜன்; வ கதல்த னFப்ஸன் Fபனஜ்ஜய்னாக மினல் கம்மி வ Fபதன்னாக Fபுதூனா; FபலBபித்த ஸினீன Fபீ அஹ்லி மத்யன தும்ம ஜி'த 'அலா கதரி(ன்)ய் யா மூஸா
(பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து, “இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கேட்டாள்; ஆகவே நாம் உம் தாயாரிடம், அவருடைய கண் குளிர்ச்சியடையும் பொருட்டும்; அவர் துக்கம் அடையாமல் இருக்கும் பொருட்டும் உம்மை (அவர்பால்) மீட்டினோம்; பின்னர் நீர் ஒரு மனிதனைக் கொன்று விட்டீர்; அப்பொழுதும் நாம் உம்மை அக்கவலையிலிருந்து விடுவித்தோம்; மேலும் உம்மைப் பல சோதனைகளைக் கொண்டு சோதித்தோம். அப்பால் நீர் பல ஆண்டுகளாக மதியன் வாசிகளிடையே தங்கியிருந்தீர்; மூஸாவே! பிறகு நீர் (நம் தூதுக்குரிய) தக்க பருவத்தை அடைந்தீர்.
قَالَا رَبَّنَاۤ اِنَّنَا نَخَافُ اَنْ یَّفْرُطَ عَلَیْنَاۤ اَوْ اَنْ یَّطْغٰی ۟
قَالَاஅவ்விருவரும் கூறினர்رَبَّنَاۤஎங்கள் இறைவனேاِنَّنَاநிச்சயமாக நாங்கள்نَخَافُபயப்படுகிறோம்اَنْஎன்றுیَّفْرُطَஅவன் முந்திக்கொள்வான்عَلَیْنَاۤஎங்கள் மீதுاَوْஅல்லதுاَنْஎன்றுیَّطْغٰیஅவன் வரம்பு மீறுவான்
காலா ரBப்Bபனா இன்னனா னகாFபு அய் யFப்ருத 'அலய்னா அவ் அய் யத்கா
“எங்கள் இறைவனே! அவன் எங்களுக்குத் தீங்கிழைக்கத் தீவிரப்படவோ அல்லது வரம்பு மீறவோ செய்யலாம் என்று நாங்கள் பயப்படுகிறோம்” என்று (மூஸாவும், ஹாரூனும்) கூறினார்கள்.
قَالَ فَمَنْ رَّبُّكُمَا یٰمُوْسٰی ۟
قَالَகூறினான்فَمَنْஅப்படியானால் யார்رَّبُّكُمَاஉங்கள் இருவரின் இறைவன்یٰمُوْسٰیமூஸாவே
கால Fபமர் ரBப்Bபு குமா யா மூஸா
(இதற்கு ஃபிர்அவ்ன்) “மூஸாவே! உங்களிருவருடைய இறைவன் யார்?” என்று கேட்டான்.
قَالَ عِلْمُهَا عِنْدَ رَبِّیْ فِیْ كِتٰبٍ ۚ لَا یَضِلُّ رَبِّیْ وَلَا یَنْسَی ۟ؗ
قَالَகூறினார்عِلْمُهَاஅதன் அறிவுعِنْدَஇடத்தில்رَبِّیْஎன் இறைவன்فِیْஇல்كِتٰبٍ ۚஒரு பதிவேடுلَاஇல்லைیَضِلُّதவறிழைப்பவன்رَبِّیْஎன் இறைவன்وَ لَاமேலும் இல்லைیَنْسَیؗமறப்பவன்
கால 'இல்முஹா 'இன்த ரBபீ Fபீ கிதாBப், லா யளில்லு ரBப்Bபீ வலா யன்ஸா
“இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனிடம் (பதிவுப்) புத்தகத்தில் இருக்கிறது; என் இறைவன் தவறுவதுமில்லை; மறப்பதுமில்லை” என்று (மூஸா பதில்) சொன்னார்.
قَالَ اَجِئْتَنَا لِتُخْرِجَنَا مِنْ اَرْضِنَا بِسِحْرِكَ یٰمُوْسٰی ۟
قَالَஅவன் கூறினான்اَجِئْتَنَاநீர் எங்களிடம் வந்தீராلِتُخْرِجَنَاஎங்களை வெளியேற்றுவதற்காகمِنْஇருந்துاَرْضِنَاஎங்கள் நாட்டைبِسِحْرِكَஉமது சூனியத்தைக் கொண்டுیٰمُوْسٰیமூஸாவே
கால அஜி'தனா லிதுக்ரி ஜனா மின் அர்ளினா Bபிஸிஹ்ரிக யா மூஸா
மூஸாவே! நீர் உம் சூனியத்தைக் கொண்டு, எங்களை எங்கள் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காகவா நம்மிடம் வந்தீர்?” என்று கூறினான்.
قَالَ لَهُمْ مُّوْسٰی وَیْلَكُمْ لَا تَفْتَرُوْا عَلَی اللّٰهِ كَذِبًا فَیُسْحِتَكُمْ بِعَذَابٍ ۚ وَقَدْ خَابَ مَنِ افْتَرٰی ۟
قَالَகூறினார்لَهُمْஅவர்களுக்குمُّوْسٰیமூஸாوَیْلَكُمْஉங்களுக்குக் கேடுதான்لَاவேண்டாம்تَفْتَرُوْاஇட்டுக்கட்டعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்كَذِبًاபொய்யைفَیُسْحِتَكُمْஅதனால் அவன் உங்களை அழித்துவிடுவான்بِعَذَابٍ ۚஒரு வேதனையைக் கொண்டுوَ قَدْமேலும் நிச்சயமாகخَابَநஷ்டமடைந்தார்مَنِஎவர்افْتَرٰیஇட்டுக்கட்டினாரோ
கால லஹும் மூஸா வய்லகும் லா தFப்தரூ 'அலல் லாஹி கதிBபன் Fப யுஸ் ஹிதகும் Bபி 'அதாBப், வ கத் காBப மனிFப் தரா
(அப்பொழுது) மூஸா சூனியக் காரர்களிடம் “உங்களுக்குக் கேடுதான்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள், (அவ்வாறு செய்தால்) அவன் வேதனையினால் உங்களை அழித்து விடுவான்; எவன் பொய்யை இட்டுக் கட்டுகிறானோ, திடனாக அவன் (நற்பேறு கெட்டு) அழிந்து விட்டான்” என்று கூறினார்.
قَالُوْا یٰمُوْسٰۤی اِمَّاۤ اَنْ تُلْقِیَ وَاِمَّاۤ اَنْ نَّكُوْنَ اَوَّلَ مَنْ اَلْقٰی ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰمُوْسٰۤیமூஸாவேاِمَّاۤஒன்றுاَنْநீர்تُلْقِیَஎறியுங்கள்وَ اِمَّاۤஅல்லதுاَنْநாங்கள்نَّكُوْنَஇருப்பதாاَوَّلَமுதலில்مَنْஎவர்اَلْقٰیஎறிந்தாரோ
காலூ யா மூஸா இம்மா அன் துல்கிய வ இம்மா அன் னகூன அவ்வல மன் அல்கா
மூஸாவே! நீர் எறிகின்றீரா? எறிகிறவர்களில் நாங்கள் முதலாவதாக இருக்கட்டுமா?” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.
قَالَ بَلْ اَلْقُوْا ۚ فَاِذَا حِبَالُهُمْ وَعِصِیُّهُمْ یُخَیَّلُ اِلَیْهِ مِنْ سِحْرِهِمْ اَنَّهَا تَسْعٰی ۟
قَالَஅவர் கூறினார்بَلْமாறாகاَلْقُوْا ۚநீங்கள் எறியுங்கள்فَاِذَاஅப்பொழுதுحِبَالُهُمْஅவர்களின் கயிறுகள்وَ عِصِیُّهُمْமற்றும் அவர்களின் தடிகளும்یُخَیَّلُதோற்றமளித்ததுاِلَیْهِஅவருக்குمِنْகாரணமாகسِحْرِهِمْஅவர்களின் சூனியத்தின்اَنَّهَاஅவைتَسْعٰیஓடுகின்றன
கால Bபல் அல்கூ Fப இதா ஹிBபாலுஹும் வ 'இஸிய்யுஹும் யுகய்யலு இலய்ஹி மின் ஸிஹ்ரிஹிம் அன்னஹா தஸ்'ஆ
அதற்கவர்: “அவ்வாறன்று! நீங்களே (முதலில்) எறியுங்கள்” என்று (மூஸா) கூறினார். (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்கள் சூனியத்தால் (பாம்புகளாக) நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது.
فَاَوْجَسَ فِیْ نَفْسِهٖ خِیْفَةً مُّوْسٰی ۟
فَاَوْجَسَஆகவே உணர்ந்தார்فِیْஇல்نَفْسِهٖதன் மனதில்خِیْفَةًஓர் அச்சத்தைمُّوْسٰیமூஸா
Fப அவ்ஜஸ Fபீ னFப்ஸிஹீ கீFபதம் மூஸா
அப்போது, மூஸா தம் மனதில் அச்சம் கொண்டார்.
قُلْنَا لَا تَخَفْ اِنَّكَ اَنْتَ الْاَعْلٰی ۟
قُلْنَاநாம் கூறினோம்لَاவேண்டாம்تَخَفْஅஞ்சاِنَّكَநிச்சயமாக நீர்اَنْتَநீரேالْاَعْلٰیமேலோங்குபவர்
குல்னா லா தகFப் இன்னக அன்தல் அஃலா
“(மூஸாவே!) நீர் பயப்படாதீர்! நிச்சயமாக நீர் தாம் மேலோங்கி நிற்பீர்!” என்று நாம் சொன்னோம்.
فَاُلْقِیَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ هٰرُوْنَ وَمُوْسٰی ۟
فَاُلْقِیَஉடனே வீழ்ந்தனர்السَّحَرَةُசூனியக்காரர்கள்سُجَّدًاசிரம் பணிந்தவர்களாகقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِرَبِّஇறைவனின் மீதுهٰرُوْنَஹாரூன்وَ مُوْسٰیமற்றும் மூஸா
Fப உல்கியஸ் ஸஹரது ஸுஜ்ஜதன் காலூ ஆமன்னா Bபி ரBப்Bபி ஹாரூன வ மூஸா
(மூஸா வெற்றி பெற்றதும்) சூனியக்காரர்கள் ஸுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு - “ஹாரூனுடைய மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.
وَلَقَدْ اَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی ۙ۬ اَنْ اَسْرِ بِعِبَادِیْ فَاضْرِبْ لَهُمْ طَرِیْقًا فِی الْبَحْرِ یَبَسًا ۙ لَّا تَخٰفُ دَرَكًا وَّلَا تَخْشٰی ۟
وَ لَقَدْநிச்சயமாகاَوْحَیْنَاۤநாம் வஹீ அறிவித்தோம்اِلٰی-இடம்مُوْسٰۤی ۙ۬மூஸாاَنْஎன்றுاَسْرِஇரவில் அழைத்துச் செல்வீராகبِعِبَادِیْஎனது அடியார்களைفَاضْرِبْஎனவே நீர் ஏற்படுத்துவீராகلَهُمْஅவர்களுக்காகطَرِیْقًاஒரு வழியைفِی-இல்الْبَحْرِகடல்یَبَسًا ۙஉலர்ந்ததாகلَّاமாட்டீர்تَخٰفُநீர் பயப்படدَرَكًاபிடிபடுவதைப் பற்றிوَّ لَاமேலும் இல்லைتَخْشٰیநீர் அஞ்ச
வ லகத் அவ்ஹய்னா இலா மூஸா அன் அஸ்ரி Bபி'இBபாதீ Fபள்ரிBப் லஹும் தரீகன் Fபில் Bபஹ்ரி யBபஸல் லா தகாFபு தரக(ன்)வ் வலா தக்-ஷா
இன்னும்: “நீர் என் அடியார்களுடன் இரவோடிரவாகப் பயணம் செய்து, அவர்களுக்காக கடலில் உலர்ந்த பாதையை உண்டாக்கிக் கொள்வீராக! (ஃபிர்அவ்ன் உம்மைப்) பிடித்துவிடுவான் என்று பயப்படாமலும், (கடலில் மூழ்கி விடுவோம் என்று) அஞ்சாமலும் இருப்பீராக!” என்று மூஸாவுக்கு நாம் திட்டமாக வஹீ அறிவித்தோம்.
وَمَاۤ اَعْجَلَكَ عَنْ قَوْمِكَ یٰمُوْسٰی ۟
وَ مَاۤமேலும் எதுاَعْجَلَكَஉம்மை அவசரப்படுத்தியதுعَنْவிட்டுقَوْمِكَஉமது சமூகத்தைیٰمُوْسٰیமூஸாவே!
வ மா அஃஜலக 'அன் கவ்மிக யா மூஸா
மூஸாவே! உம் சமூகத்தாரை விட்டு உம்மை இவ்வளவு சீக்கிரம் விரைந்து வரச்செய்தது யாது?” (என்று தூர் ஸினாய் மலைக்கு அவர்கள் வந்த போது அல்லாஹ் கேட்டான்.)
فَرَجَعَ مُوْسٰۤی اِلٰی قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا ۚ۬ قَالَ یٰقَوْمِ اَلَمْ یَعِدْكُمْ رَبُّكُمْ وَعْدًا حَسَنًا ؕ۬ اَفَطَالَ عَلَیْكُمُ الْعَهْدُ اَمْ اَرَدْتُّمْ اَنْ یَّحِلَّ عَلَیْكُمْ غَضَبٌ مِّنْ رَّبِّكُمْ فَاَخْلَفْتُمْ مَّوْعِدِیْ ۟
فَرَجَعَஎனவே திரும்பினார்مُوْسٰۤیமூஸாاِلٰیநோக்கிقَوْمِهٖதன் சமூகத்தாரிடம்غَضْبَانَகோபமுற்றவராகاَسِفًا ۚ۬துக்கமுற்றவராகقَالَஅவர் கூறினார்یٰقَوْمِஎன் சமூகத்தாரேاَلَمْஇல்லையாیَعِدْكُمْஉங்களுக்கு வாக்களிக்கرَبُّكُمْஉங்கள் இறைவன்وَعْدًاஒரு வாக்குறுதியைحَسَنًا ؕ۬அழகானاَفَطَالَஎனவே நீண்டுவிட்டதாعَلَیْكُمُஉங்கள் மீதுالْعَهْدُகாலம்اَمْஅல்லதுاَرَدْتُّمْநீங்கள் விரும்பினீர்களாاَنْஎன்றுیَّحِلَّஇறங்க வேண்டும்عَلَیْكُمْஉங்கள் மீதுغَضَبٌகோபம்مِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவனிடம்فَاَخْلَفْتُمْஎனவே நீங்கள் மீறிவிட்டீர்கள்مَّوْعِدِیْஎனது வாக்குறுதியை
Fபரஜ'அ மூஸா இலா கவ்மிஹீ கள்Bபான அஸிFபா; கால யா கவ்மி அலம் ய'இத்கும் ரBப்Bபுகும் வ'தன் ஹஸனா; அFபதால 'அலய்குமுல் 'அஹ்து அம் அரத்தும் அய் யஹில்ல 'அலய்கும் களBபும் மிர் ரBப்Bபிகும் Fப அக்லFப்தும் மவ்'இதீ
ஆகவே, மூஸா கோபமும் விசனமும் கொண்டவராய்த் தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து: “என்னுடைய சமூகத்தவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஓர் அழகிய வாக்குறுதி கொடுக்கவில்லையா? எனவே அந்த வாக்குறுதி(க் காலம்) அதிகமாகி விட்டதா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனுடைய கோபம் இறங்க வேண்டுமென்று விரும்பி நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா?” (என்றார்).
فَاَخْرَجَ لَهُمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ فَقَالُوْا هٰذَاۤ اِلٰهُكُمْ وَاِلٰهُ مُوْسٰی ۬ فَنَسِیَ ۟ؕ
فَاَخْرَجَபின்னர் அவன் வெளிப்படுத்தினான்لَهُمْஅவர்களுக்குعِجْلًاஒரு கன்றுக்குட்டியைجَسَدًاஒரு உடலாகلَّهٗஅதற்குخُوَارٌகத்தும் சத்தம்فَقَالُوْاபின்னர் அவர்கள் கூறினார்கள்هٰذَاۤஇதுவேاِلٰهُكُمْஉங்கள் இறைவன்وَ اِلٰهُமேலும் இறைவன்مُوْسٰی ۬மூஸாவின்فَنَسِیَؕஎனவே அவர் மறந்துவிட்டார்
Fப அக்ரஜ லஹும் 'இஜ்லன் ஜஸதல் லஹூ குவாருன் Fபகாலூ ஹாதா இலாஹுகும் வ இலாஹு மூஸா Fபனஸீ
பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர் “இது தான் உங்களுடைய நாயன்; இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும்; ஆனால் அவர் இதை மறந்து விட்டார்” என்று சொன்னார்கள்.