">

தேடல் வார்த்தை: "இப்ராஹீ"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

75 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 2 (முடிவுகள் 1 - 50)

وَاِذِ ابْتَلٰۤی اِبْرٰهٖمَ رَبُّهٗ بِكَلِمٰتٍ فَاَتَمَّهُنَّ ؕ قَالَ اِنِّیْ جَاعِلُكَ لِلنَّاسِ اِمَامًا ؕ قَالَ وَمِنْ ذُرِّیَّتِیْ ؕ قَالَ لَا یَنَالُ عَهْدِی الظّٰلِمِیْنَ ۟
وَاِذِஇன்னும் சமயம்ابْتَلٰٓىசோதித்தான்اِبْرٰهٖمَஇப்ராஹீமைرَبُّهٗஅவருடைய இறைவன்بِكَلِمٰتٍகட்டளைகளைக் கொண்டுفَاَتَمَّهُنَّ ؕஆகவே நிறைவு செய்தார்/அவற்றைقَالَகூறினான்اِنِّىْநிச்சயமாக நான்جَاعِلُكَஆக்குகிறேன்/ உன்னைلِلنَّاسِமனிதர்களுக்குاِمَامًا ؕதலைவராகقَالَகூறினார்وَمِنْஇன்னும் இருந்துذُرِّيَّتِىْ ؕஎன் சந்ததிகள்قَالَகூறினான்لَا يَنَالُஅடையாதுعَهْدِىஎன் வாக்குறுதிالظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களை
வ இதிBப் தலா இBப்ராஹீம ரBப்Bபுஹூ Bபி கலிமாதின் Fப அதம்மஹுன்ன கால இன்னீ ஜா'இலுக லின்னாஸி இமாமன் கால வ மின் துர்ரிய்யதீ கால லா யனாலு 'அஹ்திள் ளாலிமீன்
(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.
وَاِذْ جَعَلْنَا الْبَیْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَاَمْنًا ؕ وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّی ؕ وَعَهِدْنَاۤ اِلٰۤی اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ اَنْ طَهِّرَا بَیْتِیَ لِلطَّآىِٕفِیْنَ وَالْعٰكِفِیْنَ وَالرُّكَّعِ السُّجُوْدِ ۟
وَاِذْஇன்னும் சமயம்جَعَلْنَاஆக்கினோம்الْبَيْتَ(வீடு) கஅபாவைمَثَابَةًஒரு திரும்புமிடமாகلِّلنَّاسِமனிதர்களுக்குوَاَمْنًا ؕஇன்னும் பாதுகாப்பாகوَاتَّخِذُوْاஇன்னும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்مِنْ مَّقَامِநின்ற இடத்தில்اِبْرٰهٖمَஇப்ராஹீம்مُصَلًّى‌ ؕதொழுமிடத்தைوَعَهِدْنَآஇன்னும் கட்டளையிட்டோம்اِلٰٓى اِبْرٰهٖمَஇப்ராஹீமுக்குوَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல்اَنْ طَهِّرَاநீங்கள் இருவரும் சுத்தப்படுத்துங்கள்بَيْتِىَஎன் வீட்டைلِلطَّآٮِٕفِيْنَதவாஃப் சுற்றுபவர்களுக்குوَالْعٰكِفِيْنَஇன்னும் தங்குபவர்கள்وَالرُّکَّعِஇன்னும் குனிபவர்கள்السُّجُوْدِ‏சிரம் பணிபவர்கள்
வ இத் ஜ'அல்னல் Bபய்த மதாBபதல் லின்னாஸி வ அம்ன(ன்)வ் வத்தகிதூ மிம் மகாமி இBப்ராஹீம முஸல்லா; வ 'அஹித்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல அன் தஹ்ஹிரா Bபய்திய லித்தா'இFபீன வல்'ஆகிFபீன வர்ருக்க'இஸ் ஸுஜூத்
(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.
وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اجْعَلْ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّارْزُقْ اَهْلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنْ اٰمَنَ مِنْهُمْ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ قَالَ وَمَنْ كَفَرَ فَاُمَتِّعُهٗ قَلِیْلًا ثُمَّ اَضْطَرُّهٗۤ اِلٰی عَذَابِ النَّارِ ؕ وَبِئْسَ الْمَصِیْرُ ۟
وَاِذْஇன்னும் சமயம்قَالَகூறினார்اِبْرٰهٖمُஇப்ராஹீம்رَبِّஎன் இறைவாاجْعَلْஆக்குهٰذَاஇதைبَلَدًاஒரு பட்டணமாகاٰمِنًاபாதுகாப்பளிக்கக் கூடியதுوَّارْزُقْஇன்னும் உணவளிاَهْلَهٗஅதனுடையவர்களில்مِنَஇருந்துالثَّمَرٰتِகனிகளில்مَنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டார்مِنْهُمْஅவர்களில்بِاللّٰهِஅல்லாஹ்வைக் கொண்டுوَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕஇன்னும் இறுதி நாளைقَالَகூறினான்وَمَنْஇன்னும் எவர்كَفَرَநிராகரிப்பார்فَاُمَتِّعُهٗசுகம்அனுபவிக்கவைப்பேன்/அவரைقَلِيْلًاகொஞ்சம்ثُمَّபிறகுاَضْطَرُّهٗۤஅவரை நிர்ப்பந்திப்பேன்اِلٰى عَذَابِவேதனையின் பக்கம்النَّارِ‌ؕநரகம்وَبِئْسَஅது கெட்டதுالْمَصِيْرُ‏‏செல்லுமிடத்தால்
வ இத் கால இBப்ராஹீமு ரBப்Bபிஜ் 'அல் ஹாதா Bபலதன் ஆமின(ன்)வ் வர்Zஜுக் அஹ்லஹூ மினத் தமராதி மன் ஆமன மின்ஹும் Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி கால வ மன் கFபர Fபஉமத்தி'உஹூ கலீலன் தும்ம அள்தர்ருஹூ இலா 'அதாBபின் னாரி வ Bபி'ஸல்மஸீர்
(இன்னும் நினைவு கூறுங்கள்:) இப்ராஹீம்: “இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக” என்று கூறினார்; அதற்கு இறைவன் கூறினான்: “(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்; பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன் - அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே.”
وَاِذْ یَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَیْتِ وَاِسْمٰعِیْلُ ؕ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ؕ اِنَّكَ اَنْتَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
وَاِذْஇன்னும் சமயம்يَرْفَعُஉயர்த்தினார்اِبْرٰهٖمُஇப்ராஹீம்الْقَوَاعِدَஅஸ்திவாரங்கள்مِنَ الْبَيْتِவீட்டின்وَاِسْمٰعِيْلُؕஇன்னும் இஸ்மாயீல்رَبَّنَاஎங்கள் இறைவாتَقَبَّلْஏற்றுக் கொள்مِنَّا ؕஎங்களிடமிருந்துاِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான்السَّمِيْعُநன்கு செவியுறுபவன்الْعَلِيْمُ‏மிக அறிந்தவன்
வ இத் யர்Fப'உ இBப்ராஹீமுல் கவா'இத மினல் Bபய்திவ இஸ்மா'ஈலு ரBப்Bபனா தகBப்Bபல் மின்னா இன்னக அன்தஸ் ஸமீ'உல் அலீம்
இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (என்று கூறினார்)
وَمَنْ یَّرْغَبُ عَنْ مِّلَّةِ اِبْرٰهٖمَ اِلَّا مَنْ سَفِهَ نَفْسَهٗ ؕ وَلَقَدِ اصْطَفَیْنٰهُ فِی الدُّنْیَا ۚ وَاِنَّهٗ فِی الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِیْنَ ۟
وَمَنْஇன்னும் யார்يَّرْغَبُவெறுப்பார்عَنْவிட்டுمِّلَّةِமார்க்கத்தைاِبْرٰهٖمَஇப்ராஹீமுடையاِلَّاதவிரمَنْஎவன்سَفِهَமடையனாக ஆனான்نَفْسَهٗ ؕஅவனேوَلَقَدِதிட்டவட்டமாகاصْطَفَيْنٰهُதேர்ந்தெடுத்தோம்/அவரைفِى الدُّنْيَا ۚஇவ்வுலகில்وَاِنَّهٗநிச்சயமாக அவர்فِى الْاٰخِرَةِமறுமையில்لَمِنَ الصّٰلِحِيْنَ‏நல்லோரில்தான்
வ மய் யர்கBபு 'அம்-மில்லதி இBப்ராஹீம இல்லா மன் ஸFபிஹ னFப்ஸஹ்; வ லகதிஸ் தFபய்னாஹு Fபித்-துன்யா வ இன்னஹூ Fபில் ஆகிரதி லமினஸ் ஸாலிஹீன்
இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.
وَوَصّٰی بِهَاۤ اِبْرٰهٖمُ بَنِیْهِ وَیَعْقُوْبُ ؕ یٰبَنِیَّ اِنَّ اللّٰهَ اصْطَفٰی لَكُمُ الدِّیْنَ فَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟ؕ
وَوَصّٰىஇன்னும் உபதேசித்தார்بِهَآஅதைاِبْرٰهٖمُஇப்ராஹீம்بَنِيْهِபிள்ளைகளுக்கு/தன்وَ يَعْقُوْبُؕஇன்னும் யஃகூப்يٰبَنِىَّஎன் பிள்ளைகளேاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்اصْطَفٰىதேர்ந்தெடுத்தான்لَكُمُஉங்களுக்குالدِّيْنَமார்க்கத்தைفَلَا تَمُوْتُنَّஎனவே, கண்டிப்பாக நீங்கள் மரணித்து விடாதீர்கள்اِلَّاதவிரوَاَنْـتُمْநீங்கள் இருக்கவேمُّسْلِمُوْنَؕ‏‏முஸ்லிம்களாக
வ வஸ்ஸா Bபிஹா இBப்ராஹீமு Bபனீஹி வ யஃகூBப், யா Bபனிய்ய இன்னல் லாஹஸ் தFபா லகுமுத் தீன Fபலா தமூதுன்ன இல்லா வ அன்தும் முஸ்லிமூன்
இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்; யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்: “என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.”
اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ حَضَرَ یَعْقُوْبَ الْمَوْتُ ۙ اِذْ قَالَ لِبَنِیْهِ مَا تَعْبُدُوْنَ مِنْ بَعْدِیْ ؕ قَالُوْا نَعْبُدُ اِلٰهَكَ وَاِلٰهَ اٰبَآىِٕكَ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ اِلٰهًا وَّاحِدًا ۖۚ وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
اَمْஅல்லதுكُنْتُمْஇருந்தீர்கள்شُهَدَآءَசாட்சிகளாகاِذْபோதுحَضَرَவந்ததுيَعْقُوْبَயஃகூபுக்குالْمَوْتُۙமரணம்اِذْபோதுقَالَகூறினார்لِبَنِيْهِபிள்ளைகளை நோக்கி/தன்مَاயாரைتَعْبُدُوْنَநீங்கள் வணங்குவீர்கள்مِنْۢ بَعْدِىْؕஎனக்குப் பின்னர்قَالُوْاகூறினார்கள்نَعْبُدُவணங்குவோம்اِلٰهَكَகடவுளை/உம்وَاِلٰهَஇன்னும் கடவுளைاٰبَآٮِٕكَமூதாதைகளின்/உம்اِبْرٰهٖمَஇப்ராஹீம்وَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்اِلٰهًاஒரு கடவுளைوَّاحِدًا ۖۚஒரேوَّنَحْنُஇன்னும் நாங்கள்لَهٗஅவனுக்குمُسْلِمُوْنَ‏முஸ்லிம்கள்
அம் குன்தும் ஷுஹதா'அ இத் ஹளர யஃகூBபல் மவ்து இத் கால லிBபனீஹி மா தஃBபுதூன மிம் Bபஃதீ காலூ னஃBபுது இலாஹக வ இலாஹ ஆBபா'இக இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஷ்ஹாக இலாஹ(ன்)வ் வாஹித(ன்)வ் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர்.
وَقَالُوْا كُوْنُوْا هُوْدًا اَوْ نَصٰرٰی تَهْتَدُوْا ؕ قُلْ بَلْ مِلَّةَ اِبْرٰهٖمَ حَنِیْفًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
وَقَالُوْاஇன்னும் கூறினார்கள்کُوْنُوْاஆகிவிடுங்கள்هُوْدًاயூதர்களாகاَوْஅல்லதுنَصٰرٰىகிறித்துவர்களாகتَهْتَدُوْا ؕநேர்வழி பெறுவீர்கள்قُلْகூறுவீராகبَلْமாறாகمِلَّةَமார்க்கத்தைاِبْرٰهٖمَஇப்ராஹீமின்حَنِيْفًا ؕஇஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியுடையவர்وَمَا كَانَஇன்னும் அவர் இருக்கவில்லைمِنَ الْمُشْرِكِيْنَ‏இணைவைப்பவர்களில்
வ காலூ கூனூ ஹூதன் அவ் னஸாரா தஹ்ததூ; குல் Bபல் மில்லத இBப்ராஹீம ஹனீFப(ன்)வ் வமா கான மினல் முஷ்ரிகீன்
“நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள் - நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
قُوْلُوْۤا اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَیْنَا وَمَاۤ اُنْزِلَ اِلٰۤی اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِیَ مُوْسٰی وَعِیْسٰی وَمَاۤ اُوْتِیَ النَّبِیُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۚ لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ ۖؗ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
قُوْلُوْٓاகூறுங்கள்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வைக் கொண்டுوَمَآஇன்னும் எதுاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْنَاநமக்குوَمَآஇன்னும் எதுاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلٰٓى اِبْرٰهٖمَஇப்ராஹீமுக்குوَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَيَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَ الْاَسْبَاطِஇன்னும் சந்ததிகள்وَمَآஇன்னும் எதுاُوْتِىَகொடுக்கப்பட்டார்(கள்)مُوْسٰىமூசாوَعِيْسٰىஇன்னும் ஈஸாوَمَآஇன்னும் எதுاُوْتِىَகொடுக்கப்பட்டார்(கள்)النَّبِيُّوْنَநபிமார்களுக்குمِنْஇருந்துرَّبِّهِمْ‌ۚஇறைவன்/தங்கள்لَا نُفَرِّقُபிரிக்க மாட்டோம்بَيْنَமத்தியில்اَحَدٍஒருவருக்குمِّنْهُمْஅவர்களில்وَنَحْنُஇன்னும் நாம்لَهٗஅவனுக்குمُسْلِمُوْنَ‏முஸ்லிம்கள் (முற்றிலும் பணிந்தவர்கள்)
கூலூ ஆமன்னா Bபில்லாஹி வ மா உன்Zஜில இலய்னா வ மா உன்Zஜில இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ மாஊதிய மூஸா வ 'ஈஸா வ மா ஊதியன் னBபிய்யூன மிர் ரBப்Bபிஹிம் லா னுFபர்ரிகூ Bபய்ன அஹதிம் மின்ஹும் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
(முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.
اَمْ تَقُوْلُوْنَ اِنَّ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطَ كَانُوْا هُوْدًا اَوْ نَصٰرٰی ؕ قُلْ ءَاَنْتُمْ اَعْلَمُ اَمِ اللّٰهُ ؕ وَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةً عِنْدَهٗ مِنَ اللّٰهِ ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟
اَمْஅல்லதுتَقُوْلُوْنَகூறுகிறீர்கள்اِنَّநிச்சயமாகاِبْرٰهٖمَஇப்ராஹீம்وَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَيَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَالْاَسْبَاطَஇன்னும் சந்ததிகள்كَانُوْاஇருந்தார்கள்هُوْدًاயூதர்களாகاَوْஅல்லதுنَصٰرٰى‌ؕகிறித்துவர்களாகقُلْகூறுவீராகءَاَنْتُمْநீங்களா?اَعْلَمُமிக அறிந்தவர்(கள்)اَمِஅல்லதுاللّٰهُ‌ ؕஅல்லாஹ்வா?وَمَنْஇன்னும் யார்?اَظْلَمُமகா அநியாயக்காரர்مِمَّنْஎவரைவிடكَتَمَமறைத்தார்شَهَادَةًசாட்சியத்தைعِنْدَهٗதன்னிடத்தில்مِنَ اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்وَمَاஇல்லைاللّٰهُஅல்லாஹ்بِغَافِلٍகவனமற்றவனாகعَمَّاபற்றி/அல்லாஹ்تَعْمَلُوْنَ‏செய்கிறீர்கள்
அம் தகூலூன இன்ன இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஷ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாத கானூ ஹூதன் அவ் னஸாரா; குல் 'அ-அன்தும் அஃலமு அமில் லாஹ்; வ மன் அள்லமு மிம்மன் கதம ஷஹாததன் 'இன்தஹூ மினல்லாஹ்; வ மல்லாஹு BபிகாFபிலின் 'அம்மா தஃமலூன்
இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நிச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே” என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக: “(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை.”
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْ حَآجَّ اِبْرٰهٖمَ فِیْ رَبِّهٖۤ اَنْ اٰتٰىهُ اللّٰهُ الْمُلْكَ ۘ اِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّیَ الَّذِیْ یُحْیٖ وَیُمِیْتُ ۙ قَالَ اَنَا اُحْیٖ وَاُمِیْتُ ؕ قَالَ اِبْرٰهٖمُ فَاِنَّ اللّٰهَ یَاْتِیْ بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَاْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِیْ كَفَرَ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟ۚ
اَلَمْ تَرَநீர் கவனிக்கவில்லையா?اِلَى الَّذِىْஎவனைحَآجَّதர்க்கித்தான்اِبْرٰهٖمَஇப்ராஹீமிடம்فِىْ رَبِّهٖۤஅவருடைய இறைவன் விசயத்தில்اَنْ اٰتٰٮهُ اللّٰهُஅல்லாஹ் அவனுக்குக் கொடுத்தால்الْمُلْكَ‌ۘஆட்சியைاِذْ قَالَகூறியபோதுاِبْرٰهٖمُஇப்றாஹீம்رَبِّىَஎன் இறைவன்الَّذِىْஎவன்يُحْىٖஉயிர்ப்பிக்கிறான்وَيُمِيْتُۙஇன்னும் மரணிக்கச் செய்கிறான்قَالَகூறினான்اَنَاநான்اُحْىٖஉயிர்ப்பிப்பேன்وَاُمِيْتُ‌ؕஇன்னும் மரணிக்கச் செய்வேன்قَالَகூறினார்اِبْرٰهٖمُஇப்றாஹீம்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يَاْتِىْவருகிறான்بِالشَّمْسِசூரியனைக் கொண்டுمِنَ الْمَشْرِقِகிழக்கிலிருந்துفَاْتِஎனவே நீ வாبِهَاஅதைக் கொண்டுمِنَ الْمَغْرِبِமேற்கிலிருந்துفَبُهِتَஆகவே வாயடைக்கப்பட்டான்الَّذِىْஎவன்كَفَرَ‌ؕநிராகரித்தான்وَاللّٰهُஅல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி செலுத்த மாட்டான்الْقَوْمَமக்களைالظّٰلِمِيْنَ‌ۚ‏அநியாயக்காரர்கள்
அலம் தர இலல் லதீ ஹாஜ்ஜ இBப்ராஹீம Fபீ ரBப்Bபிஹீ அன் ஆதாஹுல்லாஹுல் முல்க இத் கால இBப்ராஹீமு ரBப்Bபியல் லதீ யுஹ்யீ வ யுமீது கால அன உஹ்யீ வ உமீது கால இBப்ராஹீமு Fப இன்னல் லாஹ யாதீ Bபிஷ்ஷம்ஸி மினல் மஷ்ரிகி Fபாதி Bபிஹா மினல் மக்ரிBபி FபBபுஹிதல் லதீ கFபர்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.
وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِیْ كَیْفَ تُحْیِ الْمَوْتٰی ؕ قَالَ اَوَلَمْ تُؤْمِنْ ؕ قَالَ بَلٰی وَلٰكِنْ لِّیَطْمَىِٕنَّ قَلْبِیْ ؕ قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّیْرِ فَصُرْهُنَّ اِلَیْكَ ثُمَّ اجْعَلْ عَلٰی كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ یَاْتِیْنَكَ سَعْیًا ؕ وَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟۠
وَاِذْ قَالَகூறிய சமயத்தைاِبْرٰهٖمُஇப்றாஹீம்رَبِّஎன் இறைவா!اَرِنِىْஎனக்குக் காட்டுكَيْفَஎப்படிتُحْىِஉயிர்ப்பிக்கிறாய்الْمَوْتٰى ؕஇறந்தவர்களைقَالَகூறினான்اَوَلَمْ تُؤْمِنْ‌ؕநீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?قَالَகூறினார்بَلٰىஅவ்வாறில்லைوَلٰـكِنْஎனினும்لِّيَطْمَٮِٕنَّநிம்மதி பெறுவதற்காகقَلْبِىْ‌ؕஎன் உள்ளம்قَالَகூறினான்فَخُذْஎனவே பிடிப்பீராகاَرْبَعَةًநான்கைمِّنَஇல்الطَّيْرِபறவைகள்فَصُرْهُنَّஅவற்றைப் பழக்குவீராகاِلَيْكَஉம் பக்கம்ثُمَّபிறகுاجْعَلْஆக்குவீராகعَلٰىமீதுكُلِّஎல்லாجَبَلٍமலைمِّنْهُنَّஅவற்றிலிருந்துجُزْءًاஒரு பாகத்தைثُمَّபிறகுادْعُهُنَّஅவற்றை கூப்பிடுவீராகيَاْتِيْنَكَஅவை உம்மிடம் வரும்سَعْيًا ؕவிரைந்துوَاعْلَمْஇன்னும் அறிந்துகொள்வீராகاَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَزِيْزٌமிகைத்தவன்حَكِيْمٌ‏ஞானவான்
வ இத் கால இBப்ராஹீமு ரBப்Bபி அரினீ கய்Fப துஹ்யில் மவ்தா கால அவ லம் து'மின் கால Bபலா வ லாகின் லியத்ம'இன்ன கல்Bபீ கால Fபகுத் அர்Bப'அதன் மினத் தய்ரி Fபஸுர்ஹுன்ன இலய்க தும்மஜ் 'அல் 'அலா குல்லி ஜBபலின் மின்ஹுன்ன ஜுZஜ்'அன் தும்மத்'உ ஹுன்ன ய'தீனக ஸஃயா; வஃலம் அன்னல் லாஹ 'அZஜீZஜுன் ஹகீம்
இன்னும், இப்ராஹீம்: “என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!” எனக் கோரியபோது, அவன்,“நீர் (இதை) நம்ப வில்லையா?” எனக் கேட்டான்; “மெய்(யாக நம்புகிறேன்!) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)” என்று கூறினார் “(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்; பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்” என்று (அல்லாஹ்) கூறினான்.
اِنَّ اللّٰهَ اصْطَفٰۤی اٰدَمَ وَنُوْحًا وَّاٰلَ اِبْرٰهِیْمَ وَاٰلَ عِمْرٰنَ عَلَی الْعٰلَمِیْنَ ۟ۙ
اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்اصْطَفٰۤىதேர்ந்தெடுத்தான்اٰدَمَஆதமைوَنُوْحًاஇன்னும் நூஹைوَّاٰلَஇன்னும் குடும்பத்தைاِبْرٰهِيْمَஇப்றாஹீமின்وَاٰلَ عِمْرٰنَஇன்னும் இம்ரானின் குடும்பத்தைعَلَى الْعٰلَمِيْنَۙ‏அகிலத்தாரை விட
இன்னல் லாஹஸ் தFபா ஆதம வ னூஹ(ன்)வ் வ ஆல இBப்ராஹீம வ ஆல இம்ரான 'அலல் 'ஆலமீன்
ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.
یٰۤاَهْلَ الْكِتٰبِ لِمَ تُحَآجُّوْنَ فِیْۤ اِبْرٰهِیْمَ وَمَاۤ اُنْزِلَتِ التَّوْرٰىةُ وَالْاِنْجِیْلُ اِلَّا مِنْ بَعْدِهٖ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟
يٰۤـاَهْلَ الْكِتٰبِவேதக்காரர்களேلِمَஏன்تُحَآجُّوْنَதர்க்கம்செய்கிறீர்கள்فِىْۤ اِبْرٰهِيْمَஇப்றாஹீம் விஷயத்தில்وَمَاۤ اُنْزِلَتِஇறக்கப்படவில்லைالتَّوْرٰٮةُதவ்றாத்துوَالْاِنْجِيْلُஇன்னும் இன்ஜீல்اِلَّاதவிரمِنْۢ بَعْدِهٖؕஅவருக்கு பின்னரேاَفَلَا تَعْقِلُوْنَ‏நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
யா அஹ்லல் கிதாBபி லிமா துஹாஜ்ஜூன Fபீ இBப்ராஹீம வ மா உன்Zஜிலதித் தவ்ராது வல் இன்ஜீலு இல்லா மிம் Bபஃதிஹ்; அFபல தஃகிலூன்
வேதத்தையுடையோரே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதரா, கிறிஸ்தவரா என்று வீணாக) ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பின்னரேயன்றி தவ்ராத்தும், இன்ஜீலும் இறக்கப்படவில்லையே; (இதைக்கூட) நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா?
مَا كَانَ اِبْرٰهِیْمُ یَهُوْدِیًّا وَّلَا نَصْرَانِیًّا وَّلٰكِنْ كَانَ حَنِیْفًا مُّسْلِمًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
مَا كَانَஇருக்கவில்லைاِبْرٰهِيْمُஇப்றாஹீம்يَهُوْدِيًّاயூதராகوَّلَاஇன்னும் இல்லைنَصْرَانِيًّاகிறித்தவராகوَّ لٰكِنْ كَانَஎனினும் இருந்தார்حَنِيْفًاஅல்லாஹ்வின் கட்டளையை பின்பற்றுபவராகمُّسْلِمًا ؕமுஸ்லிமாகوَمَا كَانَஅவர்இருக்கவில்லைمِنَ الْمُشْرِكِيْنَ‏இணைவைப்பவர்களில்
மா கான இBப்ராஹீமு யஹூதிய்ய(ன்)வ் வலா னஸ்ரா னிய்ய(ன்)வ் வ லாகின் கான ஹனீFபம் முஸ்லிம(ன்)வ் வமா கான மினல் முஷ்ரிகீன்
இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை; ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்; அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.
اِنَّ اَوْلَی النَّاسِ بِاِبْرٰهِیْمَ لَلَّذِیْنَ اتَّبَعُوْهُ وَهٰذَا النَّبِیُّ وَالَّذِیْنَ اٰمَنُوْا ؕ وَاللّٰهُ وَلِیُّ الْمُؤْمِنِیْنَ ۟
اِنَّநிச்சயமாகاَوْلَىமிக நெருங்கியவர்النَّاسِமக்களில்بِاِبْرٰهِيْمَஇப்ராஹீமுக்குلَـلَّذِيْنَஉறுதியாக எவர்கள்اتَّبَعُوْهُஅவரைப் பின்பற்றினார்கள்وَهٰذَا النَّبِىُّஇன்னும் இந்த நபிوَالَّذِيْنَ اٰمَنُوْا ؕஇன்னும் நம்பிக்கையாளர்கள்وَاللّٰهُஇன்னும் அல்லாஹ்وَلِىُّபாதுகாவலன்الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களின்
இன்னா அவ்லன் னாஸி Bபி இBப்ராஹீம லல்லதீனத் தBப 'ஊஹு வ ஹாதன் னBபிய்யு வல்லதீன ஆமனூ; வல்லாஹு வலிய்யுல் மு'மினீன்
நிச்சயமாக மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) ஈமான் கொண்டோருமே ஆவார்; மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்.
قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ عَلَیْنَا وَمَاۤ اُنْزِلَ عَلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِیَ مُوْسٰی وَعِیْسٰی وَالنَّبِیُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۪ لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ ؗ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
قُلْகூறுவீராகاٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வைوَمَاۤ اُنْزِلَஇன்னும் இறக்கப்பட்டதைعَلَيْنَاஎங்கள் மீதுوَمَاۤ اُنْزِلَஇன்னும் இறக்கப்பட்டதைعَلٰٓىமீதுاِبْرٰهِيْمَஇப்றாஹீம்وَ اِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَيَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَالْاَسْبَاطِஇன்னும் சந்ததிகள்وَمَاۤஇன்னும் எதுاُوْتِىَகொடுக்கப்பட்டார்مُوْسٰى وَ عِيْسٰىமூஸா/இன்னும் ஈஸாوَالنَّبِيُّوْنَஇன்னும் நபிமார்கள்مِنْ رَّبِّهِمْதங்கள் இறைவனிடமிருந்துلَا نُفَرِّقُபிரிக்க மாட்டோம்بَيْنَ اَحَدٍஒருவருக்கு மத்தியில்مِّنْهُمْஇவர்களில்وَنَحْنُஇன்னும் நாங்கள்لَهٗஅவனுக்கேمُسْلِمُوْنَ‏முற்றிலும் பணிந்தவர்கள்
குல் ஆமன்னா Bபில்லாஹி வ மா உன்Zஜில 'அலய்னா வ மா உன்Zஜில 'அலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ மா ஊதிய மூஸா வ 'ஈஸா வன் னBபிய்யூன மிர் ரBப்Bபிஹிம் லா னுFபர்ரிகு Bபய்ன அஹதிம் மின்ஹும் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
قُلْ صَدَقَ اللّٰهُ ۫ فَاتَّبِعُوْا مِلَّةَ اِبْرٰهِیْمَ حَنِیْفًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
قُلْகூறுவீராகصَدَقَஉண்மை கூறி விட்டான்اللّٰهُ‌அல்லாஹ்فَاتَّبِعُوْاஆகவே பின்பற்றுங்கள்مِلَّةَமார்க்கத்தைاِبْرٰهِيْمَஇப்றாஹீமின்حَنِيْفًا ؕஇஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியுடையவர்وَمَا كَانَஇன்னும் அவர் இருக்கவில்லை.مِنَ الْمُشْرِكِيْنَ‏இணைவைப்பவர்களில்
குல் ஸதகல் லாஹ்; Fபத்தBபி'ஊ மில்லத இBப்ராஹீம ஹனீFப(ன்)வ் வமா கான மினல் முஷ் ரிகீன்
(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் (இவை பற்றி) உண்மையையே கூறுகிறான்; ஆகவே (முஃமின்களே!) நேர்வழி சென்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள்; அவர் முஷ்ரிக்குகளில் ஒருவராக இருக்கவில்லை.”
فِیْهِ اٰیٰتٌۢ بَیِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِیْمَ ۚ۬ وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ؕ وَلِلّٰهِ عَلَی النَّاسِ حِجُّ الْبَیْتِ مَنِ اسْتَطَاعَ اِلَیْهِ سَبِیْلًا ؕ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِیٌّ عَنِ الْعٰلَمِیْنَ ۟
فِيْهِஅதில்اٰيٰتٌ ۢஅத்தாட்சிகள்بَيِّنٰتٌதெளிவானவைمَّقَامُநின்ற இடம்اِبْرٰهِيْمَۚஇப்றாஹீம்وَمَنْஇன்னும் எவர்دَخَلَهٗநுழைகிறார்/அதில்كَانَஆகி விட்டார்اٰمِنًا ؕஅச்சமற்றவராகوَلِلّٰهِஅல்லாஹ்வுக்காகعَلَىமீதுالنَّاسِமக்கள்حِجُّஹஜ் செய்வதுالْبَيْتِஇல்லத்தைمَنِஎவர்اسْتَطَاعَசக்தி பெற்றார்اِلَيْهِஅதன் பக்கம்سَبِيْلًا ؕபாதையால்وَمَنْஇன்னும் எவர்كَفَرَநிராகரித்தார்فَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்غَنِىٌّதேவையற்றவன்عَنِவிட்டுالْعٰلَمِيْنَ‏அகிலத்தார்களை
Fபீஹி ஆயாதும் Bபய்யினாதும் மகாமு இBப்ராஹீம வ மன் தகலஹூ கான ஆமினா; வ லில்லாஹி 'அலன் னாஸி ஹிஜ்ஜுல் Bபய்தி மனிஸ் ததா'அ இலய்ஹி ஸBபீலா; வ மன் கFபர Fப இன்னல் லாஹ கனிய்யுன் 'அனில் 'ஆலமீன்
அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.
اَمْ یَحْسُدُوْنَ النَّاسَ عَلٰی مَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ۚ فَقَدْ اٰتَیْنَاۤ اٰلَ اِبْرٰهِیْمَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَیْنٰهُمْ مُّلْكًا عَظِیْمًا ۟
اَمْஅல்லதுيَحْسُدُوْنَபொறாமைப்படுகி றார்கள்النَّاسَமக்களைعَلٰىமீதுمَاۤ اٰتٰٮهُمُஎது/கொடுத்தான்/ அவர்களுக்குاللّٰهُஅல்லாஹ்مِنْ فَضْلِهٖ‌ۚதன் அருளிலிருந்துفَقَدْதிட்டமாகاٰتَيْنَاۤகொடுத்தோம்اٰلَகுடும்பத்தாருக்குاِبْرٰهِيْمَஇப்ராஹீமுடையالْـكِتٰبَவேதத்தைوَالْحِكْمَةَஇன்னும் ஞானத்தைوَاٰتَيْنٰهُمْஇன்னும் கொடுத்தோம்/ அவர்களுக்குمُّلْكًاஆட்சியைعَظِيْمًا‏பெரிய
அம் யஹ்ஸுதூனன் னாஸ 'அலா மா ஆதாஹுமுல் லாஹு மின் Fபள்லிஹீ Fபகத் ஆதய்னா ஆல இBப்ராஹீமல் கிதாBப வல் ஹிக்மத வ ஆதய்னாஹும் முல்கன் 'அளீமா
அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்; அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.
وَمَنْ اَحْسَنُ دِیْنًا مِّمَّنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ وَّاتَّبَعَ مِلَّةَ اِبْرٰهِیْمَ حَنِیْفًا ؕ وَاتَّخَذَ اللّٰهُ اِبْرٰهِیْمَ خَلِیْلًا ۟
وَمَنْயார்اَحْسَنُமிக அழகானவர்دِيْنًاமார்க்கத்தால்مِّمَّنْஎவரைவிடاَسْلَمَபணியவைத்தார்وَجْهَهٗதன் முகத்தைلِلّٰهِஅல்லாஹ்விற்குوَهُوَஅவர் இருக்கمُحْسِنٌநற்குணமுடையவராகوَّاتَّبَعَஇன்னும் பின்பற்றினார்مِلَّةَமார்க்கத்தைاِبْرٰهِيْمَஇப்ராஹீமுடையحَنِيْفًا‌ ؕஉறுதியுடையவராகوَاتَّخَذَஇன்னும் எடுத்துக்கொண்டான்اللّٰهُஅல்லாஹ்اِبْرٰهِيْمَஇப்ராஹீமைخَلِيْلًا‏நண்பராக
வ மன் அஹ்ஸனு தீனம் மிம்ம்மன் அஸ்லம வஜ்ஹஹூ லில்லாஹி வ ஹுவ முஹ்ஸினு(ன்)வ் வத்தBப'அ மில்லத இBப்ராஹீம ஹனீFபா; வத்தகதல் லாஹு இBப்ராஹீம கலீலா
மேலும், எவர் நன்மை செய்யக்கூடிய நிலையில் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இப்ராஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின் பற்றுகிறாரோ அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார்? இன்னும் அல்லாஹ் இப்ராஹீமை தன் மெய்யன்பராக எடுத்துக் கொண்டான்.
اِنَّاۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ كَمَاۤ اَوْحَیْنَاۤ اِلٰی نُوْحٍ وَّالنَّبِیّٖنَ مِنْ بَعْدِهٖ ۚ وَاَوْحَیْنَاۤ اِلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِیْسٰی وَاَیُّوْبَ وَیُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَیْمٰنَ ۚ وَاٰتَیْنَا دَاوٗدَ زَبُوْرًا ۟ۚ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلَيْكَஉமக்குكَمَاۤபோன்றேاَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلٰى نُوْحٍநூஹுக்குوَّالنَّبِيّٖنَஇன்னும் நபிமார்களுக்குمِنْۢ بَعْدِهٖ‌ ۚஅவருக்குப் பின்னர்وَاَوْحَيْنَاۤஇன்னும் வஹீ அறிவித்தோம்اِلٰٓى اِبْرٰهِيْمَஇப்ராஹீமுக்குوَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَيَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَالْاَسْبَاطِஇன்னும் சந்ததிகள்وَعِيْسٰىஇன்னும் ஈஸாوَاَيُّوْبَஇன்னும் அய்யூப்وَيُوْنُسَஇன்னும் யூனுஸ்وَهٰرُوْنَஇன்னும் ஹாரூன்وَسُلَيْمٰنَ‌ ۚஇன்னும் ஸுலைமான்وَاٰتَيْنَاஇன்னும் கொடுத்தோம்دَاوٗدَதாவூதுக்குزَبُوْرًا‌ஸபூரை
இன்னா அவ்ஹய்னா இலய்க கமா அவ்ஹய்னா இலா னூஹி(ன்)வ் வன் னBபிய்யீன மிம் Bபஃதிஹ்; வ அவ்ஹய்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ 'ஈஸா வ அய்யூBப வ யூனுஸ வ ஹாரூன வ ஸுலய்மான்; வ ஆதய்னா தாவூத ZஜBபூரா
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
وَاِذْ قَالَ اِبْرٰهِیْمُ لِاَبِیْهِ اٰزَرَ اَتَتَّخِذُ اَصْنَامًا اٰلِهَةً ۚ اِنِّیْۤ اَرٰىكَ وَقَوْمَكَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
وَاِذْ قَالَகூறிய சமயத்தைاِبْرٰهِيْمُஇப்றாஹீம்لِاَبِيْهِதன் தந்தைக்குاٰزَرَஆஸர்اَتَتَّخِذُஎடுத்துக்கொள்கிறீரா?اَصْنَامًاசிலைகளைاٰلِهَةً ۚவணங்கப்படும் தெய்வங்களாகاِنِّىْۤநிச்சயமாக நான்اَرٰٮكَகாண்கிறேன்/உம்மைوَقَوْمَكَஇன்னும் உம் சமுதாயம்فِىْ ضَلٰلٍவழிகேட்டில்مُّبِيْنٍ‏தெளிவானது
வ இத் கால இBப்ராஹீமு லி அBபீஹி ஆZஜர அ-தத்தகிது அஸ்னாமன் ஆலிஹதன் இன்னீ அராக வ கவ்மக Fபீ ளலாலிம் முBபீன்
இப்ராஹீம் தம் தகப்பனார் ஆஜரிடம், “விக்கிரகங்களையா நீர் தெய்வங்களாக எடுத்துக் கொள்கிறீர்? நான் உம்மையும் உம் சமூகத்தாரையும், பகிரங்கமான வழி கேட்டில் இருப்பதை நிச்சயமாக பார்க்கிறேன்” என்று கூறியதை நினைத்துப்பாரும்.
وَكَذٰلِكَ نُرِیْۤ اِبْرٰهِیْمَ مَلَكُوْتَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلِیَكُوْنَ مِنَ الْمُوْقِنِیْنَ ۟
وَكَذٰلِكَஇவ்வாறுதான்نُرِىْۤகாண்பித்தோம்اِبْرٰهِيْمَஇப்றாஹீமுக்குمَلَـكُوْتَபேராட்சியைالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமியின்وَلِيَكُوْنَஇன்னும் அவர்ஆவதற்காகمِنَ الْمُوْقِـنِيْنَ‏உறுதியான நம்பிக்கை உடையவர்களில்
வ கதாலிக னுரீ இBப்ராஹீம மலகூதஸ் ஸமாவாதி வல் அர்ளி வ லியகூன மினல் மூகினீன்
அவர் உறுதியான நம்பிக்கையுடையவராய் ஆகும் பொருட்டு வானங்கள், பூமி இவற்றின் ஆட்சியை இப்ராஹீமுக்கு இவ்வாறு காண்பித்தோம்.
وَتِلْكَ حُجَّتُنَاۤ اٰتَیْنٰهَاۤ اِبْرٰهِیْمَ عَلٰی قَوْمِهٖ ؕ نَرْفَعُ دَرَجٰتٍ مَّنْ نَّشَآءُ ؕ اِنَّ رَبَّكَ حَكِیْمٌ عَلِیْمٌ ۟
وَتِلْكَஇவைحُجَّتُنَاۤநம் சான்றுاٰتَيْنٰهَاۤகொடுத்தோம்/அவற்றைاِبْرٰهِيْمَஇப்றாஹீமுக்குعَلٰىஎதிராகقَوْمِهٖ‌ؕஅவருடைய சமுதாயம்نَرْفَعُஉயர்த்துகிறோம்دَرَجٰتٍபதவிகளால்مَّنْஎவரைنَّشَآءُ ؕநாடுகிறோம்اِنَّநிச்சயமாகرَبَّكَஉம் இறைவன்حَكِيْمٌஞானவான்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
வ தில்க ஹுஜ்ஜதுனா ஆதய்னாஹா இBப்ராஹீம 'அலா கவ்மிஹ்; னர்Fப'உ தரஜாதிம் மன் னஷா'; இன்ன ரBப்Bபக ஹகீமுன் 'அலீம்
இவை நம்முடைய ஆதாரங்களாகும், நாம் இவற்றை இப்ராஹீமுக்கு அவருடைய கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம்; நாம் விரும்புவோருக்கு பதவிகளை (மேலும் மேலும்) உயர்த்துகிறோம்; நிச்சயமாக உம்முடைய இறைவன் பூரண ஞானமும் பேரறிவும் உள்ளவன்.
قُلْ اِنَّنِیْ هَدٰىنِیْ رَبِّیْۤ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۚ۬ دِیْنًا قِیَمًا مِّلَّةَ اِبْرٰهِیْمَ حَنِیْفًا ۚ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
قُلْகூறுவீராகاِنَّنِىْநிச்சயமாக நான்هَدٰٮنِىْநேர்வழி காட்டினான் எனக்குرَبِّىْۤஎன் இறைவன்اِلٰى صِرَاطٍபாதையின் பக்கம்مُّسْتَقِيْمٍۚநேரானதுدِيْنًاமார்க்கமாகும்قِيَمًاநிலையானمِّلَّةَகொள்கைاِبْرٰهِيْمَஇப்ராஹீமுடையحَنِيْفًا‌ ۚஉறுதியுடையவர்وَمَا كَانَஅவர் இருக்கவில்லைمِنَ الْمُشْرِكِيْنَ‏இணைவைப்பவர்களில்
குல் இன்னனீ ஹதானீ ரBப்Bபீ இலா ஸிராதிம் முஸ்தகீமின் தீனன் கியமம் மில்லத இBப்ராஹீம ஹனீFபா; வமா கான மினல் முஷ்ரிகீன்
(நபியே!) நீர் கூறும்: “மெய்யாகவே என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பால் வழி காட்டினான் - அது மிக்க உறுதியான மார்க்கமாகும்; இப்ராஹீமின் நேர்மையான மார்க்கமுமாகும், அவர் இணைவைப்பவர்களில் ஒருவராக இருக்கவில்லை.
اَلَمْ یَاْتِهِمْ نَبَاُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ ۙ۬ وَقَوْمِ اِبْرٰهِیْمَ وَاَصْحٰبِ مَدْیَنَ وَالْمُؤْتَفِكٰتِ ؕ اَتَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ ۚ فَمَا كَانَ اللّٰهُ لِیَظْلِمَهُمْ وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
اَلَمْவரவில்லையாيَاْتِهِمْஅவர்களுக்குنَبَاُசெய்தி, சரித்திரம்الَّذِيْنَஎவர்கள்مِنْ قَبْلِهِمْஇவர்களுக்கு முன்னர்قَوْمِசமுதாயம்نُوْحٍநூஹூடையوَّعَادٍஇன்னும் ஆதுوَّثَمُوْدَ  ۙஇன்னும் ஸமூதுوَقَوْمِஇன்னும் சமுதாயம்اِبْرٰهِيْمَஇப்றாஹீம்وَاَصْحٰبِ مَدْيَنَஇன்னும் மத்யன் வாசிகள்وَالْمُؤْتَفِكٰتِ‌ ؕதலைகீழாக புரட்டப்பட்ட ஊர்கள்اَتَتْهُمْஅவர்கள் வந்தார்கள்رُسُلُهُمْஅவர்களுடைய தூதர்கள்بِالْبَيِّنٰتِ‌ ۚஅத்தாட்சிகளைக் கொண்டுفَمَا كَانَஇருக்கவில்லைاللّٰهُஅல்லாஹ்لِيَظْلِمَهُمْஅவர்களுக்கு அநீதியிழைப்பவனாகوَلٰـكِنْஎனினும்كَانُوْۤاஇருந்தனர்اَنْفُسَهُمْதங்களுக்கேيَظْلِمُوْنَ‏அநீதியிழைப்பவர்களாக
அலம் ய'திஹிம் னBப உல் லதீன மின் கBப்லிஹிம் கவ்மி னூஹி(ன்)வ் வ 'ஆதி(ன்)வ் வ தமூத வ கவ்மி இBப்ராஹீம வ அஸ்ஹாBபி மத்யன வல் மு'தFபிகாத்; அதத்ஹும் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி Fபமா கானல் லாஹு லியள்லிமஹும் வ லாகின் கானூ அன்Fபுஸஹும் யள்லிமூன்
இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய சமுதாயம், ஆது, ஸமூதுடைய சமுதாயம் இப்ராஹீம் உடைய சமுதாயம் மத்யன் வாசிகள் தலைகீழாய்ப் புரண்டுபோன ஊரார் ஆகியவர்களின் வரலாறு அவர்களிடம் வரவில்லையா? அவர்களுக்கு (நாம் அனுப்பிய) அவர்களுக்குரிய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளை கொண்டு வந்தார்கள்; (தூதர்களை நிராகரித்ததினால் அவர்கள் அழிந்தனர்.) அல்லாஹ் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை; எனினும் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
وَمَا كَانَ اسْتِغْفَارُ اِبْرٰهِیْمَ لِاَبِیْهِ اِلَّا عَنْ مَّوْعِدَةٍ وَّعَدَهَاۤ اِیَّاهُ ۚ فَلَمَّا تَبَیَّنَ لَهٗۤ اَنَّهٗ عَدُوٌّ لِّلّٰهِ تَبَرَّاَ مِنْهُ ؕ اِنَّ اِبْرٰهِیْمَ لَاَوَّاهٌ حَلِیْمٌ ۟
وَمَا كَانَஇருக்கவில்லைاسْتِغْفَارُமன்னிப்புக் கோரியதுاِبْرٰهِيْمَஇப்றாஹீம்لِاَبِيْهِதன் தந்தைக்குاِلَّاதவிரعَنْ مَّوْعِدَةٍஒரு வாக்குறுதிக்காகوَّعَدَهَاۤஅதை வாக்களித்தார்اِيَّاهُ‌ ۚஅவருக்குفَلَمَّا تَبَيَّنَதெளிவான போதுلَهٗۤஅவருக்குاَنَّهٗநிச்சயமாக அவர்عَدُوٌّஓர் எதிரிلِّلّٰهِஅல்லாஹ்வுக்குتَبَرَّاَஅவர் விலகிக் கொண்டார்مِنْهُ‌ ؕஅவரிலிருந்துاِنَّ اِبْرٰهِيْمَநிச்சயமாக இப்றாஹீம்لَاَوَّاهٌஅதிகம் பிரார்த்திப்பவர்حَلِيْمٌ‏பெரும் சகிப்பாளர்
வமா கானஸ் திக்Fபாரு இBப்ராஹீம லி அBபீஹி இல்லா 'அன் மவ்'இததி(ன்)வ் வ 'அதஹா இய்யாஹு Fபலம்மா தBபய்யன லஹூ அன்னஹூ 'அதுவ்வுல் லில்லாஹி தBபர்ர அ மின்ஹ்; இன்ன இBப்ராஹீம ல அவ்வாஹுன் ஹலீம்
இப்ராஹீம் (நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தம் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவேயன்றி வேறில்லை; மெய்யாகவே, அவர் (தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்பது தெளிவாகியதும் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார் - நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.
وَلَقَدْ جَآءَتْ رُسُلُنَاۤ اِبْرٰهِیْمَ بِالْبُشْرٰی قَالُوْا سَلٰمًا ؕ قَالَ سَلٰمٌ فَمَا لَبِثَ اَنْ جَآءَ بِعِجْلٍ حَنِیْذٍ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகجَآءَتْவந்தனர்رُسُلُنَاۤநம் தூதர்கள்اِبْرٰهِيْمَஇப்றாஹீமிடம்بِالْبُشْرٰىநற்செய்தியைக் கொண்டுقَالُوْاகூறினர்سَلٰمًا‌ ؕஈடேற்றம் உண்டாகுகقَالَகூறினார்سَلٰمٌ‌ஈடேற்றம் உண்டாகுகفَمَا لَبِثَஅவர் தாமதிக்கவில்லைاَنْ جَآءَவருவதற்குبِعِجْلٍஒரு கன்றுக் குட்டியைக் கொண்டுحَنِيْذٍ‏சுடப்பட்டது
வ லகத் ஜா'அத் ருஸுலுனா இBப்ராஹீம Bபில்Bபுஷ்ரா காலூ ஸலாமன் கால ஸலாமுன் Fபமா லBபித அன் ஜா'அ Bபி'இஜ்லின் ஹனீத்
நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்ராஹீமுக்கு நற்செய்தி (கொண்டு வந்து) “ஸலாம்” (சொன்னார்கள்; இப்ராஹீமும் “ஸலாம்” (என்று பதில்) சொன்னார்; (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை.
فَلَمَّا ذَهَبَ عَنْ اِبْرٰهِیْمَ الرَّوْعُ وَجَآءَتْهُ الْبُشْرٰی یُجَادِلُنَا فِیْ قَوْمِ لُوْطٍ ۟ؕ
فَلَمَّا ذَهَبَசென்றபோதுعَنْ اِبْرٰهِيْمَஇப்றாஹீமை விட்டுالرَّوْعُதிடுக்கம்وَجَآءَتْهُஇன்னும் வந்தது/அவருக்குالْبُشْرٰىநற்செய்திيُجَادِلُــنَاதர்க்கித்தார்/நம்மிடம்فِىْ قَوْمِமக்கள் விஷயத்தில்لُوْطٍؕ‏லூத்துடைய
Fபலம்மா தஹBப அன் இBப்ராஹீமர் ரவ்'உ வ ஜா'அத் ஹுல் Bபுஷ்ரா யுஜாதிலுனா Fபீ கவ்மி லூத்
(இது கேட்டு) இப்ராஹீமை விட்டுப் பயம் நீங்கி, நன்மாராயம் அவருக்கு வந்ததும் லூத்துடைய சமூகத்தாரைப் பற்றி நம்மிடம் வாதிடலானார்.
اِنَّ اِبْرٰهِیْمَ لَحَلِیْمٌ اَوَّاهٌ مُّنِیْبٌ ۟
اِنَّ اِبْرٰهِيْمَநிச்சயமாக இப்றாஹீம்لَحَـلِيْمٌசகிப்பாளர்اَوَّاهٌஅதிகம் பிரார்த்திப்பவர்مُّنِيْبٌ‏திரும்பக்கூடியவர்
இன்ன இBப்ராஹீம ல ஹலீமுன் அவ்வாஹுன் முனீBப்
நிச்சயமாக இப்ராஹீம் சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனங்கொண்டவராகவும் (எதற்கும்) இறைவன் பால் முகம் திரும்புபவராகவும் இருந்தார்.
یٰۤاِبْرٰهِیْمُ اَعْرِضْ عَنْ هٰذَا ۚ اِنَّهٗ قَدْ جَآءَ اَمْرُ رَبِّكَ ۚ وَاِنَّهُمْ اٰتِیْهِمْ عَذَابٌ غَیْرُ مَرْدُوْدٍ ۟
يٰۤـاِبْرٰهِيْمُஇப்ராஹீமேاَعْرِضْபுறக்கணிப்பீராகعَنْ هٰذَا ۚஇதை விட்டுاِنَّهٗநிச்சயமாகقَدْதிட்டமாகجَآءَவந்ததுاَمْرُகட்டளைرَبِّكَ‌ ۚஉம் இறைவனின்وَاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்اٰتِيْهِمْவரும்/அவர்களுக்குعَذَابٌவேதனைغَيْرُ مَرْدُوْدٍ‏தடுக்கபடாதது
யா இBப்ராஹீமு அஃரிள் 'அன் ஹாதா இன்னஹூ கத் ஜா'அ அம்ரு ரBப்Bபிக வ இன்னஹும் ஆதீஹிம் 'அதாBபுன் கய்ருன் மர்தூத்
இப்ராஹீமே! (அம்மக்கள் மீது கொண்ட இரக்கத்தால் இதைப் பற்றி வாதிடாது) இ(வ்விஷயத்)தை நீர் புறக்கணியும்; ஏனெனில் உம்முடைய இறைவனின் கட்டளை நிச்சயமாக வந்துவிட்டது - மேலும், அவர்களுக்குத் தவிர்க்கமுடியாத வேதனை நிச்சயமாக வரக்கூடியதேயாகும்.
وَكَذٰلِكَ یَجْتَبِیْكَ رَبُّكَ وَیُعَلِّمُكَ مِنْ تَاْوِیْلِ الْاَحَادِیْثِ وَیُتِمُّ نِعْمَتَهٗ عَلَیْكَ وَعَلٰۤی اٰلِ یَعْقُوْبَ كَمَاۤ اَتَمَّهَا عَلٰۤی اَبَوَیْكَ مِنْ قَبْلُ اِبْرٰهِیْمَ وَاِسْحٰقَ ؕ اِنَّ رَبَّكَ عَلِیْمٌ حَكِیْمٌ ۟۠
وَكَذٰلِكَஇவ்வாறேيَجْتَبِيْكَதேர்ந்தெடுப்பான்/உன்னைرَبُّكَஉன் இறைவன்وَيُعَلِّمُكَஇன்னும் கற்பிப்பான்/ உனக்குمِنْ تَاْوِيْلِவிளக்கத்திலிருந்துالْاَحَادِيْثِபேச்சுகளின்وَيُتِمُّஇன்னும் முழுமையாக்குவான்نِعْمَتَهٗஅவன் தன் அருளைعَلَيْكَஉம்மீதுوَعَلٰٓىஇன்னும் மீதுاٰلِகிளையார்يَعْقُوْبَயஃகூபின்كَمَاۤபோன்றுاَتَمَّهَا عَلٰٓىமுழுமைப்படுத்தினான்/அதை/மீதுاَبَوَيْكَஉன்இருபாட்டன்கள்مِنْ قَبْلُமுன்னர்اِبْرٰهِيْمَஇப்றாஹீம்وَاِسْحٰقَ‌ ؕஇன்னும் இஸ்ஹாக்اِنَّநிச்சயமாகرَبَّكَஉன் இறைவன்عَلِيْمٌநன்கறிந்தவன்حَكِيْمٌ‏மகா ஞானவான்
வ கதாலிக யஜ்தBபீக ரBப்Bபுக வ யு'அல்லிமுக மின் த'வீலில் அஹாதீதி வ யுதிம்மு னிஃமதஹூ 'அலய்க வ 'அலா ஆலி யஃகூBப கமா அதம்மஹா 'அலா அBபவய்க மின் கBப்லு இBப்ராஹீம வ இஸ்ஹாக்; இன்ன ரBப்Bபக 'அலீமுன் ஹகீம்
இவ்வாறு உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உன் மீதும், யஃகூபின் சந்ததியார் மீதும் நிரப்பமாக்கி வைப்பான் - இதற்கு முன்னர் உன்னுடைய மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் (ஆகிய) இருவர் மீதும் தன் அருளை அவன் நிரப்பமாக்கி வைத்தது போல், நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.”
وَاتَّبَعْتُ مِلَّةَ اٰبَآءِیْۤ اِبْرٰهِیْمَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ مَا كَانَ لَنَاۤ اَنْ نُّشْرِكَ بِاللّٰهِ مِنْ شَیْءٍ ؕ ذٰلِكَ مِنْ فَضْلِ اللّٰهِ عَلَیْنَا وَعَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَشْكُرُوْنَ ۟
وَاتَّبَعْتُஇன்னும் பின்பற்றினேன்مِلَّةَமார்க்கத்தைاٰبَآءِىْۤஎன் மூதாதைகளாகியاِبْرٰهِيْمَஇப்றாஹீம்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَيَعْقُوْبَ‌ؕயஃகூப்مَا كَانَதகுமானதல்லلَنَاۤஎங்களுக்குاَنْ نُّشْرِكَநாங்கள் இணைவைப்பதுبِاللّٰهِஅல்லாஹ்வின்مِنْ شَىْءٍ‌ؕஎதையும்ذٰلِكَஇதுمِنْஇருந்துفَضْلِஅருள்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَيْنَاஎங்கள் மீதுوَعَلَىஇன்னும் மீதுالنَّاسِமக்கள்وَلٰـكِنَّஎனினும்اَكْثَرَஅதிகமானவர்(கள்)النَّاسِமக்களில்لَا يَشْكُرُوْنَ‏நன்றி செலுத்த மாட்டார்கள்
வத்தBபஃது மில்லத ஆBபா'ஈ இBப்ராஹீம வ இஷ்ஹாக வ யஃகூBப்; மா கான லனா அன் னுஷ்ரிக Bபில்லாஹி மின் ஷய்'; தாலிகமின் Fபள்லில் லாஹி 'அலய்னா வ 'அலன் னாஸி வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஷ்குரூன்
“நான் என் மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன்; அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்கு தகுமானதல்ல; இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை.
وَاِذْ قَالَ اِبْرٰهِیْمُ رَبِّ اجْعَلْ هٰذَا الْبَلَدَ اٰمِنًا وَّاجْنُبْنِیْ وَبَنِیَّ اَنْ نَّعْبُدَ الْاَصْنَامَ ۟ؕ
وَاِذْ قَالَகூறியபோதுاِبْرٰهِيْمُஇப்றாஹீம்رَبِّஎன் இறைவாاجْعَلْஆக்குهٰذَا الْبَلَدَஇந்த ஊரைاٰمِنًاஅபயமளிப்பதாகوَّاجْنُبْنِىْஇன்னும் தூரமாக்கு/என்னைوَبَنِىَّஇன்னும் என் பிள்ளைகளைاَنْ نَّـعْبُدَநாங்கள் வணங்குவதைالْاَصْنَامَؕ‏சிலைகளை
வ இத் கால இBப்ராஹீமு ரBப்Bபிஜ் 'அல் ஹாதல் Bபலத ஆமின(ன்)வ் வஜ்னுBப்னீ வ Bபனிய்ய அன் னஃBபுதல் அஸ்னாம்
நினைவு கூறுங்கள்! “என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!” என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).
وَنَبِّئْهُمْ عَنْ ضَیْفِ اِبْرٰهِیْمَ ۟ۘ
وَنَبِّئْهُمْஅறிவிப்பீராக/அவர்களுக்குعَنْ ضَيْفِவிருந்தாளிகள் பற்றிاِبْرٰهِيْمَ‌ۘ‏இப்றாஹீமுடைய
வ னBப்Bபி'ஹும் 'அன் ளய்Fபி இBப்ராஹீம்
இன்னும், இப்ராஹீமின் விருந்தினர்களைப் பற்றியும் அவர்களுக்கு அறிவிப்பீராக!
قَالَ وَمَنْ یَّقْنَطُ مِنْ رَّحْمَةِ رَبِّهٖۤ اِلَّا الضَّآلُّوْنَ ۟
قَالَகூறினார்وَمَنْயார்?يَّقْنَطُஅவநம்பிக்கை கொள்வார்مِنْ رَّحْمَةِஅருளில் இருந்துرَبِّهٖۤதன் இறைவனின்اِلَّاதவிரالضَّآلُّوْنَ‏வழிகெட்டவர்கள்
கால வ மய் யக்னது மிர் ரஹ்மதி ரBப்Bபிஹீ இல்லள் ளாலூன்
“வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தம் இறைவனுடைய அருளைப்பற்றி நிராசை கொள்வர்” என்று (இப்ராஹீம் பதில்) சொன்னார்,
قَالَ فَمَا خَطْبُكُمْ اَیُّهَا الْمُرْسَلُوْنَ ۟
قَالَகூறினார்فَمَاஎன்ன?خَطْبُكُمْஉங்கள் காரியம்اَيُّهَا الْمُرْسَلُوْنَ‏தூதர்களே!
கால Fபமா கத்Bபுகும் அய்யுஹல் முர்ஸலூன்
“(அல்லாஹ்வின்) தூதர்களே! உங்களுடைய காரியமென்ன?” என்று (இப்ராஹீம்) கேட்டார்.
اِنَّ اِبْرٰهِیْمَ كَانَ اُمَّةً قَانِتًا لِّلّٰهِ حَنِیْفًا ؕ وَلَمْ یَكُ مِنَ الْمُشْرِكِیْنَ ۟ۙ
اِنَّ اِبْرٰهِيْمَநிச்சயமாக இப்றாஹீம்كَانَஇருந்தார்اُمَّةًநன்மையை போதிப்பவராகقَانِتًاமிக பணிந்தவராகلِّلّٰهِஅல்லாஹ்வுக்குحَنِيْفًاؕகொள்கை உறுதியுடையவராகوَلَمْ يَكُஅவர் இருக்கவில்லைمِنَ الْمُشْرِكِيْنَۙ‏இணைவைப்பவர்களில்
இன்ன இBப்ராஹீம கான உம்மதன் கானிதல் லில்லாஹி ஹனீFப(ன்)வ் வ லம் யகுமினல் முஷ்ரிகீன்
நிச்சயமாக இப்ராஹீம் ஒரு வழிகாட்டியாகவும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராகவும் (நேரான பாதையில்) சார்ந்தவராகவும் இருந்தார்; மேலும், அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.
ثُمَّ اَوْحَیْنَاۤ اِلَیْكَ اَنِ اتَّبِعْ مِلَّةَ اِبْرٰهِیْمَ حَنِیْفًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
ثُمَّபிறகுاَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلَيْكَஉமக்குاَنِஎன்றுاتَّبِعْபின்பற்றுمِلَّةَமார்க்கத்தைاِبْرٰهِيْمَஇப்றாஹீமின்حَنِيْفًا‌ ؕகொள்கை உறுதியுடையவராகوَمَا كَانَ(அவர்) இருக்கவில்லைمِنَ الْمُشْرِكِيْنَ‏இணைவைப்பவர்களில்
தும்ம்ம அவ்ஹய்னா இலய்க அனித் தBபிஃ மில்லத இBப்ராஹீம ஹனீFபா; வமா கான மினல் முஷ்ரிகீன்
(நபியே!) பின்னர் “நேர்மையாளரான இப்ராஹீமின் சன்மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும்” என்று நாம் உமக்கு வஹீ அறிவித்தோம்; அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருந்ததில்லை.
وَاذْكُرْ فِی الْكِتٰبِ اِبْرٰهِیْمَ ؕ۬ اِنَّهٗ كَانَ صِدِّیْقًا نَّبِیًّا ۟
وَاذْكُرْநினைவு கூர்வீராகفِى الْكِتٰبِஇவ்வேதத்தில்اِبْرٰهِيْمَ ۙஇப்றாஹீமைاِنَّهٗநிச்சயமாக அவர்كَانَஇருக்கிறார்صِدِّيْقًاஉண்மையாளராகنَّبِيًّا‏நபியாக
வத்குர் Fபில் கிதாBபி இBப்ராஹீம்; இன்னஹூ கான ஸித்தீகன் னBபிய்யா
(நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீமைப்பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மிக்க உண்மையாளராகவும் - நபியாகவும் - இருந்தார்.
قَالَ اَرَاغِبٌ اَنْتَ عَنْ اٰلِهَتِیْ یٰۤاِبْرٰهِیْمُ ۚ لَىِٕنْ لَّمْ تَنْتَهِ لَاَرْجُمَنَّكَ وَاهْجُرْنِیْ مَلِیًّا ۟
قَالَகூறினார்اَرَاغِبٌநீ வெறுக்கிறாயா?اَنْتَநீعَنْ اٰلِهَتِىْஎன் தெய்வங்களைيٰۤاِبْرٰهِيْمُ‌ۚஇப்றாஹீமேلَٮِٕنْ لَّمْ تَنْتَهِநீர் விலகவில்லை என்றால்لَاَرْجُمَنَّكَ‌நிச்சயமாக நான் உன்னை கடுமையாக ஏசுவேன்وَاهْجُرْنِىْஇன்னும் என்னை விட்டு விலகிவிடுمَلِيًّا‏பாதுகாப்புப் பெற்றவராக
கால அராகிBபுன் அன்த 'அன் ஆலிஹதீ யா இBப்ராஹீமு ல 'இல் லம் தன்தஹி ல அர்ஜுமன்னக வஹ்ஜுர்னீ மலிய்யா
(அதற்கு அவர்) “இப்ராஹீமே! நீர் என் தெய்வங்களை புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லெறிந்து கொல்வேன்; இனி நீர் என்னைவிட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்” என்றார்.
قَالَ سَلٰمٌ عَلَیْكَ ۚ سَاَسْتَغْفِرُ لَكَ رَبِّیْ ؕ اِنَّهٗ كَانَ بِیْ حَفِیًّا ۟
قَالَகூறினார்سَلٰمٌபாதுகாப்பு உண்டாகுகعَلَيْكَ‌ۚஉமக்குسَاَسْتَغْفِرُபாவமன்னிப்புக் கோருவேன்لَـكَஉமக்காகرَبِّىْؕஎன் இறைவனிடம்اِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருக்கின்றான்بِىْஎன் மீதுحَفِيًّا‏அருளுடையவனாக
கால ஸலாமுன் 'அலய்க ஸ அஸ்தக்Fபிரு லக ரBப்Bபீ இன்னஹூ கான Bபீ ஹFபிய்யா
(அதற்கு இப்ராஹீம்) “உம்மீது ஸலாம் உண்டாவதாக! மேலும் என் இறைவனிடம் உமக்காகப் பிழை பொறுக்கத் தேடுவேன்; நிச்சயமாக அவன் என் மீது கிருபையுடையவனாகவே இருக்கின்றான்” என்று கூறினார்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمْ مِّنَ النَّبِیّٖنَ مِنْ ذُرِّیَّةِ اٰدَمَ ۗ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ ؗ وَّمِنْ ذُرِّیَّةِ اِبْرٰهِیْمَ وَاِسْرَآءِیْلَ ؗ وَمِمَّنْ هَدَیْنَا وَاجْتَبَیْنَا ؕ اِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِیًّا ۟
اُولٰٓٮِٕكَஇவர்கள்தான்الَّذِيْنَஎவர்கள்اَنْعَمَஅருள் புரிந்திருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهِمْஇவர்கள் மீதுمِّنَ النَّبِيّٖنَநபிமார்களில்مِنْ ذُرِّيَّةِசந்ததிகளில்اٰدَمَஆதமுடையوَمِمَّنْ حَمَلْنَاஇன்னும் நாம் ஏற்றியவர்களிலும்مَعَ نُوْحٍநூஹூடன்وَّمِنْ ذُرِّيَّةِசந்ததிகளிலும்اِبْرٰهِيْمَஇப்றாஹீம்وَاِسْرَآءِيْلَஇன்னும் இஸ்ராயீல்وَمِمَّنْ هَدَيْنَاநாம் நேர்வழிகாட்டிوَاجْتَبَيْنَا‌ ؕதேர்ந்தெடுத்தவர்கள்اِذَا تُتْلٰىஓதப்பட்டால்عَلَيْهِمْஅவர்கள் மீதுاٰيٰتُவசனங்கள்الرَّحْمٰنِபேரருளாளனுடையخَرُّوْاவிழுந்து விடுவார்கள்سُجَّدًاசிரம்பணிந்தவர்களாகوَّبُكِيًّا ۩‏அழுதவர்களாக
உலா'இகல் லதீன அன்'அமல் லாஹு 'அலய்ஹிம் மினன் னBபிய்யீன மின் துர்ரிய்யதி ஆதம வ மிம்மன் ஹமல்னா ம'அ னூஹி(ன்)வ் வ மின் துர்ரிய்யதி இBப்ராஹீம வ இஸ்ரா'ஈல வ மிம்மன் ஹதய்னா வஜ்த Bபய்னா; இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுர் ரஹ்மானி கர்ரூ ஸுஜ்ஜத(ன்)வ் வ Bபுகிய்யா
இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள் - இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள்.
وَلَقَدْ اٰتَیْنَاۤ اِبْرٰهِیْمَ رُشْدَهٗ مِنْ قَبْلُ وَكُنَّا بِهٖ عٰلِمِیْنَ ۟ۚ
وَلَـقَدْ اٰتَيْنَاۤநாம் கொடுத்தோம்اِبْرٰهِيْمَஇப்றாஹீமுக்குرُشْدَهٗஅவருடைய நேர்வழியைمِنْ قَبْلُமுன்னர்وَ كُنَّاநாம் இருந்தோம்بِهٖஅவரைعٰلِمِيْنَ‌ۚ‏நன்கறிந்தவர்களாக
வ லகத் ஆதய்னா இBப்ராஹீம ருஷ்தஹூ மின் கBப்லு வ குன்னா Bபிஹீ 'ஆலிமீன்
இன்னும், நாம் முன்னரே இப்ராஹீமுக்கு அவருக்குத் தகுந்த நேர்மையான வழியைத் திடனாக கொடுத்தோம் - அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம்.
قَالَ بَلْ رَّبُّكُمْ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ الَّذِیْ فَطَرَهُنَّ ۖؗ وَاَنَا عَلٰی ذٰلِكُمْ مِّنَ الشّٰهِدِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்بَلْமாறாகرَّبُّكُمْஉங்களுக்கும் இறைவன்رَبُّஇறைவன்தான்السَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமியின்الَّذِىْஎப்படிப்பட்டவன்فَطَرَهُنَّ ۖ அவற்றைப்படைத்தான்وَاَنَاநானும் ஒருவன்عَلٰى ذٰلِكُمْஇதற்குمِّنَ الشّٰهِدِيْنَ‏சாட்சி கூறுபவர்களில்
கால Bபர் ரBப்Bபுகும் ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளில் லதீ Fபதரஹுன்ன வ அன 'அலா தாலிகும் மினஷ் ஷாஹிதீன்
“அப்படியல்ல. உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன்; இதற்குச் சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன்” என்று (இப்ராஹீம்) கூறினார்.
قَالُوْا سَمِعْنَا فَتًی یَّذْكُرُهُمْ یُقَالُ لَهٗۤ اِبْرٰهِیْمُ ۟ؕ
قَالُوْاஅவர்கள் கூறினர்سَمِعْنَاநாங்கள் செவியுற்றோம்فَتًىஒரு வாலிபரைيَّذْكُرُவிமர்சிக்கின்றார்هُمْஅவற்றைيُقَالُசொல்லப்படும்لَهٗۤஅவருக்குاِبْرٰهِيْمُ ؕ‏இப்றாஹீம்
காலூ ஸமிஃனா Fபத(ன்)ய் யத்குருஹும் யுகாலு லஹூ இBப்ராஹீம்
அதற்கு (அவர்களில் சிலர்) “இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்ராஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது” என்று கூறினார்கள்.
قَالُوْۤا ءَاَنْتَ فَعَلْتَ هٰذَا بِاٰلِهَتِنَا یٰۤاِبْرٰهِیْمُ ۟ؕ
قَالُوْٓاகூறினர்ءَاَنْتَநீர்தான்فَعَلْتَசெய்தீராهٰذَاஇதைبِاٰلِهَتِنَاஎங்கள் கடவுள்களுடன்يٰۤاِبْرٰهِيْمُؕ‏இப்றாஹீமே
காலூ 'அ-அன்த Fப'அல்த ஹாதா Bபி ஆலிஹதினா யா இBப்ராஹீம்
இப்ராஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தாமோ?” என்று (அவர் வந்ததும்) கேட்டனர்.
اُفٍّ لَّكُمْ وَلِمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟
اُفٍّசீச்சிلَّـكُمْஉங்களுக்குوَلِمَا تَعْبُدُوْنَஇன்னும் நீங்கள் வணங்குபவர்களுக்குمِنْ دُوْنِஅன்றிاللّٰهِ‌ؕஅல்லாஹ்வைاَفَلَا تَعْقِلُوْنَ‏நிச்சயமாக சிந்தித்து புரியமாட்டீர்களா?
உFப்Fபில் லகும் வ லிமா தஃBபுதூன மின் தூனில் லாஹ்; அFபலா தஃகிலூன்
“சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடு தான்; நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா?” (என்று இப்ராஹீம் கூறினார்).
قُلْنَا یٰنَارُ كُوْنِیْ بَرْدًا وَّسَلٰمًا عَلٰۤی اِبْرٰهِیْمَ ۟ۙ
قُلْنَاநாம் கூறினோம்يٰنَارُநெருப்பேكُوْنِىْஆகிவிடுبَرْدًاகுளிர்ச்சியாகவும்وَّسَلٰمًاபாதுகாப்பாகவும்عَلٰٓى اِبْرٰهِيْمَۙ‏இப்றாஹீமுக்கு
குல்னா யா னாரு கூனீ Bபர்த(ன்)வ் வ ஸலாமன் 'அலா இBப்ராஹீம்
(இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!” என்று நாம் கூறினோம்.