மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) “என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது; அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்” என்று கூறினார்.
قَالَகூறினார்(கள்)الْمَلَاُதலைவர்கள்الَّذِيْنَஎவர்கள்اسْتَكْبَرُوْاபெருமையடித்தனர்مِنْ قَوْمِهٖஅவருடைய சமுதாயத்தில்لَـنُخْرِجَنَّكَநிச்சயம் வெளியேற்றுவோம்/உம்மைيٰشُعَيْبُஷுஐபேوَالَّذِيْنَ اٰمَنُوْاஇன்னும் நம்பிக்கை கொண்டவர்களைمَعَكَஉம்முடன்مِنْஇருந்துقَرْيَتِنَاۤஎங்கள் ஊர்اَوْஅல்லதுلَـتَعُوْدُنَّநிச்சயமாக நீங்கள் திரும்பிவிட வேண்டும்فِىْ مِلَّتِنَا ؕஎங்கள் கொள்கைக்குقَالَகூறினார்اَوَلَوْ كُنَّاநாங்கள் இருந்தாலுமா?كَارِهِيْنَ ۚவெறுப்பவர்களாக
காலல் மல உல் லதீனஸ் தக்Bபரூ மின் கவ்மிஹீ லனுக்ரிஜன்னக யா ஷு'அய்Bபு வல்லதீன ஆமனூ ம'அக மின் கர்யதினா அவ் லத'ஊ துன்ன Fபீ மில்லதினா; கால அவ லவ் குன்னா காரிஹீன்
அவருடைய சமூகத்தினரில் பெருமை அடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் (அவரை நோக்கி), “ஷுஐபே! உம்மையும் உம்முடன் ஈமான் கொண்டவர்களையும், நிச்சயமாக நாங்கள் எங்கள் ஊரைவிட்டே வெளியேற்றி விடுவோம்; அல்லது நீர் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பி விடவேண்டும்” என்று கூறினார்கள் - அதற்கவர், “நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுப்பவர்களாக இருந்தாலுமா?” என்று கேட்டார்.
அவருடைய சமுகத்தாரில் காஃபிராகயிருந்தவர்களின் தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி), “நீங்கள் ஷுஐபை பின்பற்றுவீர்களானால் நிச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவீர்கள்” என்று கூறினார்கள்.
அல்லதீன கத்தBபூ ஷு'அய்Bபன் க அல் லம் யக்னவ் Fபீஹா; அல்லதீன கத்தBபூ ஷு'அய்Bபன் கானூ ஹுமுல் காஸிரீன்
ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் தம் வீடுகளில் (ஒரு பொழுதும்) வாழ்ந்திராதவர்களைப் போல் ஆகிவிட்டனர் - ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் - (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களாகி விட்டார்கள்.
இதனால் (ஷுஐபு) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும், “என் சமூகத்தவர்களே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி வந்தேன், உங்களுக்கு நற்போதனையும் செய்தேன் - ஆனால் நிராகரிக்கும் மக்களுக்காக நான் எவ்வாறு கவலைப்படுவேன்” என்று அவர் கூறினார்.
மத்யனி (நகரத்தி)லுள்ளவர்களுக்கு, அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களிடம்: “என்) சமூகத்தவர்களே! அல்லாஹ் (ஒருவனையே) நீங்கள் வணங்குங்கள். அவனைத்தவிர உங்களுக்கு வேறு நாயனில்லை; அளவையிலும் நிறுவையிலும் நீங்கள் குறைவு செய்யாதீர்கள்; நீங்கள் நல்ல நிலைமையிலிருப்பதை (இப்பொழுது) நான் காண்கின்றேன்; ஆனால் (அளவிலும், நிறுவையிலும் நீங்கள் மோசம் செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய வேதனை ஒரு நாள் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன்.
(அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய (மார்க்கத்) தொழுகையா உம்மை ஏவுகிறது? நிச்சயமாக நீர் கிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான்” என்று (ஏளனமாகக்) கூறினார்கள்.
(அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நீர் சொல்பவற்றில் பெரும்பாலானதை நாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை; நிச்சயமாக உம்மை எங்களிடையே பலஹீனராகவே நாங்கள் காண்கிறோம்; உம் குலத்தார் இல்லை என்றால் உம்மைக் கல்லெறிந்தே நாங்கள் (கொன்றிருப்போம்); நீர் எங்களில் மதிப்புக்குரியவரும் அல்லர்” என்று கூறினார்கள்.
(தண்டனைக்குரிய) நம் கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நமது ரஹ்மத்தை கொண்டு நாம் காப்பாற்றினோம்; அநியாயம் செய்தவர்களை (பேரிடியின்) முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில் (இறந்து) கிடந்தனர்.
وَاِلٰى مَدْيَنَஇன்னும் ‘மத்யன்’க்குاَخَاசகோதரர்هُمْஅவர்களுடையشُعَيْبًا ۙஷுஐபைفَقَالَஅவர் கூறினார்يٰقَوْمِஎன் மக்களே!اعْبُدُواவணங்குங்கள்!اللّٰهَஅல்லாஹ்வைوَ ارْجُواஇன்னும் ஆதரவு வையுங்கள்!الْيَوْمَநாளைالْاٰخِرَமறுமைوَلَا تَعْثَوْاவரம்பு மீறி அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்فِى الْاَرْضِபூமியில்مُفْسِدِيْنَதீயவர்களாக இருந்து
மேலும், மத்யன் (ஊராருக்கு) அவர்கள் சகோதரராகிய ஷுஐபை (அனுப்பி வைத்தோம்); ஆகவே அவர்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; இறுதி நாளை (நம்பி) எதிர்பாருங்கள், மேலும், பூமியில் குழப்பம் செய்வோராக, (விஷமிகளாகத்) திரியாதீர்கள்” என்று கூறினார்.