﴾«إِنَّ الْحَمْدَ للهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلِ اللهُ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُه»﴿
(எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. நாம் அவனைப் புகழ்கிறோம்; அவனிடமே உதவியையும், நேர்வழியையும், மன்னிப்பையும் தேடுகிறோம். நமது ஆன்மாக்களின் தீமைகளிலிருந்தும், நமது தீய செயல்களின் தீய விளைவுகளிலிருந்தும் அல்லாஹ்விடம் நாம் பாதுகாப்புத் தேடுகிறோம். அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரை வழிதவறச் செய்பவர் எவருமில்லை; அவன் யாரை வழிகேட்டில் விட்டானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் எவருமில்லை. வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணையானவர் எவருமில்லை என்றும்; நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்.) இந்த முழுமையான ஹதீஸை இமாம் அஹ்மத், ஸுனன் நூலாசிரியர்கள் மற்றும் பலர் தொகுத்துள்ளனர்.