குர்ஆனைச் செவியேற்குமாறு வந்த கட்டளை
இந்தக் குர்ஆன் மனிதகுலத்திற்குத் தெளிவான ஆதாரமாகவும், நேர்வழியாகவும், அருளாகவும் இருக்கிறது என்று அல்லாஹ் குறிப்பிட்ட பிறகு, குர்ஆன் ஓதப்படும்போது அதற்கு மதிப்பும் கண்ணியமும் அளிக்கும் விதமாக அதனைக் கவனமாகச் செவிமடுக்குமாறு இன்னும் வாய்மூடி இருக்குமாறு அவன் கட்டளையிட்டான். இது,
﴾لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ﴿ என்று கூறிய குரைஷி இணைவைப்பாளர்களின் வழக்கத்திற்கு மாறானதாகும்.
("இந்தக் குர்ஆனைச் செவியேற்காதீர்கள், மேலும் அது (ஓதப்படும்) போது சப்தமிடுங்கள்")
41:26. இப்னு ஜரீர் அவர்கள் அறிவிக்கிறார்கள்: இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்; "நாங்கள் தொழுகையின் போது ஒருவருக்கொருவர் ஸலாம் கூறிக்கொள்வோம். எனவே குர்ஆனின் இந்த வசனம் அருளப்பட்டது;
﴾وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا﴿
(குர்ஆன் ஓதப்படும்போது, அதைச் செவிமடுத்துக் கேளுங்கள்; இன்னும் வாய்மூடி இருங்கள்.)