﴾قَالَأَوْسَطُهُمْأَلَمْأَقُللَّكُمْلَوْلَاتُسَبِّحُونَ-
அவர்களில் நடுநிலையாளர் (சிறந்தவர்), "நீங்கள் (இறைவனைத்) துதித்திருக்க வேண்டாமா? என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா?" என்று கூறினார்.
قَالُواْسُبْحَـنَرَبِّنَاإِنَّاكُنَّاظَـلِمِينَ-
"எங்கள் இறைவன் மகா தூய்மையானவன்; நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தோம்" என்று அவர்கள் கூறினார்கள்.
فَأَقْبَلَبَعْضُهُمْعَلَىبَعْضٍيَتَلَـوَمُونَ-
பிறகு, அவர்கள் ஒருவர் மற்றவரை நோக்கித் திரும்பி, ஒருவரையொருவர் குறை கூறிக்கொள்ளத் தொடங்கினார்கள்.
قَالُواْيَـوَيْلَنَآإِنَّاكُنَّاطَـغِينَ-
"எங்களுக்கு ஏற்பட்ட கைசேதமே! நிச்சயமாக நாங்கள் வரம்பு மீறியவர்களாகவே இருந்தோம்" என்று அவர்கள் கூறினார்கள்.
عَسَىرَبُّنَآأَنيُبْدِلَنَاخَيْراًمّنْهَآإِنَّآإِلَىرَبِّنَارَغِبُونَ-
"எங்கள் இறைவன் இதற்குப் பகரமாக இதைவிட மேலான ஒன்றை எங்களுக்கு வழங்கக்கூடும்; நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனையே ஆசை வைக்கின்றோம்" என்று கூறினார்கள்.
كَذَلِكَالْعَذَابُوَلَعَذَابُالْآخِرَةِأَكْبَرُلَوْكَانُواْيَعْلَمُونَ-﴿
(இவ்வுலக) வேதனை இவ்வாறே இருக்கும்; மறுமையின் வேதனையோ இன்னும் மிகப் பெரியதாகும். அவர்கள் (இதை) அறிந்திருப்பார்களாயின்!