وَحِيلَبَيْنَهُمْوَبَيْنَمَايَشْتَهُونَكَمَافُعِلَبِأَشْيَاعِهِممِّنقَبْلُۚإِنَّهُمْكَانُوافِيشَكٍّمُّرِيبٍ
(அவர்களுக்கும், அவர்கள் விரும்பியவற்றுக்கும் இடையே திரை இடப்பட்டு விட்டது; இவர்களுக்கு முன் சென்ற இவர்களுடைய இனத்தார்களுக்குச் செய்யப்பட்டது போலவே! நிச்சயமாக அவர்களும் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருந்தனர்.)
அதாவது, இவ்வுலகத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்றும், தௌபாச் செய்து இறைநம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினார்கள். ஆனால், அதற்கான வழி அடைக்கப்பட்டுவிட்டது. இவர்களுக்கு முன் சென்று, இவர்களைப் போன்றே இறைமறுப்பில் ஈடுபட்டவர்களுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. அவர்களுக்கும் இவ்வுலகத்திற்குத் திரும்பும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இறைவேதனையைக் கண்ட சமயத்தில் அவர்கள் கொண்ட நம்பிக்கை எதற்கும் பயன்படவில்லை.
(நிச்சயமாக அவர்களும் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருந்தனர்) அதாவது இறைத்தூதர்கள் கொண்டு வந்த செய்திகளை நம்பாது சந்தேகித்தனர்.