தஃப்சீர் இப்னு கஸீர் - 30:8

﴾وَإِنَّ كَثِيراً مِّنَ النَّاسِ بِلِقَآءِ رَبِّهِمْ لَكَـفِرُونَ﴿

(8. தொடர்ச்சி - நிச்சயமாக மக்களில் அதிகமானோர் தங்களின் இறைவனை சந்திப்பதை நிராகரிக்கின்றனர்.) பின்னர், தூதர்கள் கொண்டு வந்த செய்தியின் உண்மையைப்பற்றியும், அவர்களை நிராகரித்தவர்களை அழித்தும், அவர்களை விசுவாசித்தவர்களைக் காப்பாற்றியும், அற்புதங்களையும் தெளிவான அடையாளங்களையும் கொண்டு அவர்களுக்கு அவன் எவ்வாறு ஆதரவளித்தான் என்பதையும் அல்லாஹ் நமக்கு கூறுகிறான்.