("நிச்சயமாக இவர்கள் (பாவங்களிலிருந்து) தூய்மையாக இருக்க விரும்பும் மனிதர்கள்!") கத்தாதா அவர்கள் கூறினார்கள், "சற்றும் அவமானமில்லாத ஒரு விஷயத்தைக் கொண்டு அவர்கள் (லூத் (அலை) அவர்களையும் நம்பிக்கையாளர்களையும்) கேவலப்படுத்தினார்கள்."
முஜாஹித் அவர்கள் கூறினார்கள், "(லூத் (அலை) அவர்களின் சமூகத்தினர், லூத் (அலை) அவர்களையும் நம்பிக்கையாளர்களையும் பற்றி,) இவர்கள் ஆண்களின் ஆசனவாய்கள் மற்றும் பெண்களின் ஆசனவாய்களிலிருந்து தூய்மையாக இருக்க விரும்பும் ஒரு கூட்டத்தினர்!"
இதேப் போன்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.