("என் மக்களே! நிச்சயமாக என் இறைவனின் தூதுச் செய்திகளை நான் உங்களுக்கு எத்திவைத்துவிட்டேன்; மேலும் உங்களுக்கு நல்லுபதேசமும் செய்தேன்.") நான் எதைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதை உங்களிடம் சேர்த்துவிட்டேன். ஆகவே, நான் கொண்டு வந்தவற்றை நீங்கள் நிராகரித்ததால், உங்களைக் குறித்து நான் எந்தத் துயரமும் கொள்ள மாட்டேன் என்று ஷுஐப் (அலை) கூறினார்கள், ﴾فَكَيْفَءَاسَىعَلَىقَوْمٍكَـفِرِينَ﴿
("பிறகு, நிராகரிக்கும் ஒரு சமூகத்தாரைக் குறித்து நான் எவ்வாறு துக்கப்பட முடியும்?")