93. ஸூரத்துள் ளுஹா(முற்பகல்)
மக்கீ, வசனங்கள்: 11

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
93:1
93:1 وَالضُّحٰىۙ‏
وَالضُّحٰىۙ‏ முற்பகலின் மீது சத்தியமாக
93:1. முற்பகல் மீது சத்தியமாக-
93:1. காலைப்பொழுதின் மீது சத்தியமாக!
93:1. ஒளிமிக்க பகலின் மீது சத்தியமாக!
93:1. முற்பகல் மீது சத்தியமாக!
93:2
93:2 وَالَّيْلِ اِذَا سَجٰىۙ‏
وَالَّيْلِ இரவின் மீது சத்தியமாக اِذَا سَجٰىۙ‏ அது நிசப்தமாகும்போது
93:2. ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
93:2. மறைத்துக் கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக!
93:2. மேலும், இரவின் மீதும் சத்தியமாக, அது அமைதியாக வந்தடையும் போது!
93:2. (இருண்ட) இரவின் மீதும் சத்தியமாக – அது ஒடுங்கிவிட்டால் -
93:3
93:3 مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰىؕ‏
مَا وَدَّعَكَ உம்மை விடவில்லை رَبُّكَ உம் இறைவன் وَمَا قَلٰىؕ‏ இன்னும் வெறுக்கவில்லை
93:3. உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
93:3. (நபியே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; (உம்மை) வெறுக்கவுமில்லை.
93:3. (நபியே!) உம் இறைவன் உம்மை ஒருபோதும் கைவிடவில்லை; கோபம் கொள்ளவும் இல்லை.
93:3. (நபியே!) உமதிரட்சகன் உம்மைக் கைவிடவில்லை, (உம்மை) அவன் வெறுக்கவுமில்லை.
93:4
93:4 وَلَـلْاٰخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰىؕ‏
وَلَـلْاٰخِرَةُ இன்னும் மறுமைதான் خَيْرٌ மிகச் சிறந்தது لَّكَ உமக்கு مِنَ الْاُوْلٰىؕ‏ இம்மையைவிட
93:4. மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.
93:4. (ஒவ்வொரு நாளும் உமது) பிந்திய நிலைமை, முந்திய நிலைமையை விட நிச்சயமாக மிக்க மேலானதாக இருக்கிறது.
93:4. மேலும், திண்ணமாக, பிந்திய காலகட்டம் முந்திய காலகட்டத்தைவிட உமக்கு மிகவும் சிறந்ததாயிருக்கும்.
93:4. மேலும், (மறுமையெனும்) பிந்தியதானது (இம்மையெனும்) முந்தியதைவிட உமக்கு மிகச் சிறந்ததாகும்.
93:5
93:5 وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰىؕ‏
وَلَسَوْفَ يُعْطِيْكَ இன்னும் திட்டமாக உமக்குக் கொடுப்பான் رَبُّكَ உம் இறைவன் فَتَرْضٰىؕ‏ ஆகவே நீர் திருப்தியடைவீர்
93:5. இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
93:5. உமது இறைவன் மேலும் (பல உயர் பதவிகளை) உமக்கு அளிப்பான். (அவற்றைக் கொண்டு) நீர் திருப்தியடைவீர்.
93:5. மேலும், விரைவில் உம் இறைவன் நீர் திருப்தியடைந்து விடுமளவு உமக்கு வழங்குவான்.
93:5. இன்னும், உமதிரட்சகன் அடுத்து(ப்பல உயர்பதவிகளை) உமக்கு அளிப்பான், அப்போது நீர் திருப்தியடைவீர்.
93:6
93:6 اَلَمْ يَجِدْكَ يَتِيْمًا فَاٰوٰى‏
اَلَمْ يَجِدْكَ உம்மை அவன் காணவில்லையா? يَتِيْمًا அநாதையாக فَاٰوٰى‏ ஆகவே ஆதரித்தான்
93:6. (நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?
93:6. உம்மை அநாதையாகக் கண்டு, அவன் உமக்குத் தங்கும் இடம் அளி(த்து ஆதரி)க்க வில்லையா?
93:6. அவன் உம்மை அநாதையாய்க் காணவில்லையா? பிறகு, புகலிடம் தந்தான் அல்லவா?
93:6. உம்மை அவன் அநாதையாகக் கண்டுகொள்ளவில்லையா? ஆகவே, (அரவணைப்புப் பெற்று நீர் ஆறுதல் பெற) அவன் இடம் அளித்தான்.
93:7
93:7 وَوَجَدَكَ ضَآ لًّا فَهَدٰى‏
وَوَجَدَكَ இன்னும் உம்மைக் கண்டான் ضَآ لًّا வழி அறியாதவராக فَهَدٰى‏ ஆகவே அவன் நேர்வழி செலுத்தினான்
93:7. இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
93:7. திகைத்துத் தயங்கியவராக உம்மைக் கண்ட அவன் நேரான வழியில் (உம்மைச்) செலுத்தினான்.
93:7. மேலும், அவன் உம்மை வழியறியாதவராய்க் கண்டான்; பிறகு, நேர்வழி காண்பித்தான்.
93:7. மேலும், (வேதம் என்ன மார்க்கம் என்னவென்பதைப்பற்றி) தெரியாதவராக உம்மை அவன் கண்டான், ஆகவே, (அதற்கு) அவன் (உமக்கு) வழி காட்டினான்.
93:8
93:8 وَوَجَدَكَ عَآٮِٕلًا فَاَغْنٰىؕ‏
وَوَجَدَكَ இன்னும் உம்மைக் கண்டான் عَآٮِٕلًا வறியவராக فَاَغْنٰىؕ‏ ஆகவே செல்வந்தராக்கினான்
93:8. மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
93:8. முடைப்பட்டவராக உம்மைக் கண்ட அவன் (உம்மைத்) தனவந்தராக்கி வைத்தான். (அல்லவா?)
93:8. மேலும், அவன் உம்மை ஏழையாய்க் கண்டான்; பிறகு செல்வராய் ஆக்கினான்.
93:8. மேலும், தேவையுடையவராக அவன் உம்மைக் கண்டான், ஆகவே, (உமது தேவையை நிறைவேற்றி உம்மை) தேவையற்றவராக ஆக்கிவிட்டான்.
93:9
93:9 فَاَمَّا الْيَتِيْمَ فَلَا تَقْهَرْؕ‏
فَاَمَّا ஆக الْيَتِيْمَ அநாதைக்கு فَلَا تَقْهَرْؕ‏ அநீதி செய்யாதீர்
93:9. எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
93:9. ஆகவே, (இவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் அநாதைகளைக் கடுகடுக்காதீர்.
93:9. ஆகவே, நீர் அநாதைகளுடன் கடுமையாய் நடந்து கொள்ளாதீர்.
93:9. ஆகவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்!
93:10
93:10 وَاَمَّا السَّآٮِٕلَ فَلَا تَنْهَرْؕ‏
وَاَمَّا ஆக السَّآٮِٕلَ யாசகரை فَلَا تَنْهَرْؕ‏ கடிந்து கொள்ளாதீர்
93:10. யாசிப்போரை விரட்டாதீர்.
93:10. யாசிப்பவரை வெருட்டாதீர்.
93:10. மேலும், யாசகம் கேட்பவரை விரட்டாதீர்.
93:10. இன்னும், (தர்மம்) கேட்பவரை விரட்டாதீர்!
93:11
93:11 وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ‏
وَاَمَّا ஆக بِنِعْمَةِ அருளை رَبِّكَ உம் இறைவனின் فَحَدِّثْ‏ அறிவிப்பீராக
93:11. மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.
93:11. (உம்மீது புரிந்துள்ள) உமது இறைவனின் அருளைப் (பிறருக்கு) அறிவித்து (அவனுக்கு நன்றி செலுத்தி)க் கொண்டிருப்பீராக!
93:11. மேலும், உம் இறைவனின் அருட்கொடைபற்றி எடுத்துரைப்பீர்.
93:11. மேலும், (உம்மீது புரிந்துள்ள) உமதிரட்சகனின் அருட்கொடையைப்பற்றி (அவனுக்கு நன்றி தெரிவிக்கும்பொருட்டு) அறிவித்துக் கொண்டிருப்பீராக!