عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إن الدين يسر، ولن يشاد الدين إلا غلبه، فسددوا وقاربوا وأبشروا، واستعينوا بالغدوة والروحة وشيء من الدلجة ((رواه البخاري)).
وفي رواية له : سددوا وقاربوا واغدوا وروحوا، وشيء من الدلجة، القصد القصد تبلغوا .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "(இஸ்லாம்) மார்க்கம் இலகுவானது. மார்க்கத்தை எவர் தமக்குச் சிரமமானதாக ஆக்கிக் கொள்கிறாரோ, அது அவரை மிகைத்துவிடும். ஆகவே, (வழிபாடுகளில்) நடுநிலையைக் கடைப்பிடியுங்கள்; உங்களால் அவ்வாறு செய்ய முடியாவிட்டால், அதற்கு நெருக்கமானதையாவது செய்யுங்கள். மேலும், நற்செய்தி கூறுங்கள். காலையிலும், மாலையிலும், இரவில் சிறிதளவிலும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்".