இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

451சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، وَمُجَاهِدُ بْنُ مُوسَى، - وَهُوَ أَتَمُّ - قَالاَ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، أَخْبَرَهُ أَنَّ الْمَسْجِدَ كَانَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَبْنِيًّا بِاللَّبِنِ وَالْجَرِيدِ - قَالَ مُجَاهِدٌ وَعَمَدُهُ مِنْ خَشَبِ النَّخْلِ - فَلَمْ يَزِدْ فِيهِ أَبُو بَكْرٍ شَيْئًا وَزَادَ فِيهِ عُمَرُ وَبَنَاهُ عَلَى بِنَائِهِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِاللَّبِنِ وَالْجَرِيدِ وَأَعَادَ عَمَدَهُ - قَالَ مُجَاهِدٌ عُمُدَهُ خَشَبًا - وَغَيَّرَهُ عُثْمَانُ فَزَادَ فِيهِ زِيَادَةً كَثِيرَةً وَبَنَى جِدَارَهُ بِالْحِجَارَةِ الْمَنْقُوشَةِ وَالْقَصَّةِ وَجَعَلَ عَمَدَهُ مِنْ حِجَارَةٍ مَنْقُوشَةٍ وَسَقَّفَهُ بِالسَّاجِ ‏.‏ قَالَ مُجَاهِدٌ وَسَقْفُهُ السَّاجُ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ الْقَصَّةُ الْجِصُّ ‏.‏
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசல் மண் கட்டிகளாலும், பேரீச்சை மட்டைகளாலும் கட்டப்பட்டிருந்தது. முஜாஹித் அவர்கள் கூறினார்கள்: “அதன் தூண்கள் பேரீச்சை மரக்கட்டைகளாக இருந்தன.”

அபூபக்ர் (ரழி) அவர்கள் அதில் எதையும் கூட்டவில்லை. ஆனால் உமர் (ரழி) அவர்கள் அதில் (சிலவற்றை) அதிகப்படுத்தினார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்ததைப் போலவே மண் கட்டிகளாலும் பேரீச்சை மட்டைகளாலும் அதை(ப் புதுப்பித்துக்) கட்டினார்கள். அதன் தூண்களை மீண்டும் (பழையபடியே) அமைத்தார்கள். முஜாஹித் அவர்கள் கூறினார்கள்: “அதன் தூண்கள் மரக்கட்டைகளாகவே இருந்தன.”

பிறகு உஸ்மான் (ரழி) அவர்கள் அதை மாற்றி, அதில் அதிகமானவற்றைச் சேர்த்தார்கள். அதன் சுவர்களைச் செதுக்கப்பட்ட கற்களாலும் சுண்ணாம்பாலும் கட்டினார்கள். மேலும் அதன் தூண்களைச் செதுக்கப்பட்ட கற்களாலும், அதன் கூரையைத் தேக்கு மரத்தாலும் அமைத்தார்கள். முஜாஹித் அவர்கள் கூறினார்கள்: “அதன் கூரை தேக்கு மரமாகும்.”

அபூதாவூத் அவர்கள் கூறினார்கள்: அல்-கஸ்ஸா என்பது சாந்தாகப் பயன்படுத்தப்படும் சுண்ணாம்பு ஆகும்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)