حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْجُعْفِيُّ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ عَبْدُ الْمَلِكِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ ـ هُوَ ابْنُ طَهْمَانَ ـ عَنْ أَبِي جَمْرَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رضى الله عنهما قَالَ أَوَّلُ جُمُعَةٍ جُمِّعَتْ بَعْدَ جُمُعَةٍ جُمِّعَتْ فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَسْجِدِ عَبْدِ الْقَيْسِ بِجُوَاثَى. يَعْنِي قَرْيَةً مِنَ الْبَحْرَيْنِ.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் (மதீனாவில்) தொழப்பட்ட ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு, முதன்முதலாக ஜும்ஆ தொழுகை நடத்தப்பட்டது, பஹ்ரைனில் உள்ள 'ஜுவாஸா' எனும் கிராமத்திலிருந்த அப்துல் கைஸ் கோத்திரத்தாரின் பள்ளிவாசலிலாகும்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவில் நடைபெற்ற ஜுமுஆவிற்குப் பிறகு, (முதன்முதலாக) நடைபெற்ற ஜுமுஆ, அல்-பஹ்ரைனில் உள்ள 'அப்துல் கைஸ்' குலத்தாரின் கிராமமான 'ஜுவாதா'வில் நடைபெற்ற ஜுமுஆ ஆகும்.
இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள்: மதீனாவிலுள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பள்ளிவாசலில் நிறைவேற்றப்பட்ட ஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு, இஸ்லாத்தில் (மதீனாவிற்கு வெளியே) முதலாவதாக நிறைவேற்றப்பட்ட ஜும்ஆத் தொழுகை, அல்-பஹ்ரைனின் கிராமங்களில் ஒன்றான ஜுவாஸா எனும் கிராமத்தில் நிறைவேற்றப்பட்ட ஜும்ஆத் தொழுகையாகும். அறிவிப்பாளர் உஸ்மான் கூறினார்கள்: (ஜுவாஸா என்பது) அப்துல் கைஸ் கோத்திரத்தினரின் கிராமங்களில் உள்ள ஒரு கிராமமாகும்.