இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் சஜ்தா (வசனத்தை) ஓதுவார்கள்; நாங்கள் அவர்களுடன் இருப்போம். அவர்கள் சஜ்தாச் செய்வார்கள்; நாங்களும் அவர்களுடன் சஜ்தாச் செய்வோம். எங்களில் ஒருவருக்குத் தமது நெற்றியை வைத்து சஜ்தாச் செய்ய இடம் கிடைக்காத அளவுக்கு நாங்கள் நெருக்கியடித்துக் கொள்வோம்.
حَدَّثَنَا صَدَقَةُ، قَالَ أَخْبَرَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ السُّورَةَ الَّتِي فِيهَا السَّجْدَةُ فَيَسْجُدُ وَنَسْجُدُ حَتَّى مَا يَجِدُ أَحَدُنَا مَكَانًا لِمَوْضِعِ جَبْهَتِهِ.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா (செய்ய வேண்டிய) வசனம் உள்ள அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தா செய்வார்கள். அப்போது நாங்களும் ஸஜ்தா செய்வோம். (கூட்டம் நெருக்கமாக இருந்ததால்) எங்களில் ஒருவருக்குத் தமது நெற்றியை வைப்பதற்குக்கூட இடம் கிடைக்காது.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதிக் கொண்டிருந்தபோது, அதில் சஜ்தா (வசனம்) உள்ள சூராவை ஓதி சஜ்தா செய்தார்கள். நாங்களும் அவர்களுடன் சஜ்தா செய்தோம். (ஆனால் நாங்கள் மிகவும் நெரிசலாக இருந்தோம்) எங்களில் சிலருக்கு (சஜ்தா செய்யும்போது) தங்கள் நெற்றியை வைப்பதற்கு இடம் கிடைக்கவில்லை.
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (ஸஜ்தாவுடைய வசனம் உள்ள) ஓர் அத்தியாயத்தை ஓதிக் காட்டுவார்கள். (இப்னு நுமைர் (ரஹ்) அவர்கள் 'தொழுகைக்கு வெளியே' என்று குறிப்பிடுகிறார்கள். பின்னர் இரு அறிவிப்பாளர்களும் பின்வரும் வாசகத்தில் ஒன்றுபடுகிறார்கள்:) அப்போது அவர்கள் ஸஜ்தாச் செய்வார்கள்; நாங்களும் அவர்களுடன் ஸஜ்தாச் செய்வோம். (நெரிசலின் காரணமாக) எங்களில் ஒருவருக்குத் தமது நெற்றியை வைப்பதற்குக்கூட இடம் கிடைக்காது.