அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள், ஒரு நகரவாசி ஒரு கிராமவாசிக்காக (அவரது பொருளை) விற்கக் கூடாது என்றும், (ஏமாற்றும் நோக்கில்) விலையை உயர்த்திக் கேட்கக் கூடாது என்றும், ஒரு மனிதன் தன் சகோதரனின் திருமணப் பேச்சுக்கு மேல் (அவன் சம்மதம் பெற்ற பின்) பெண் பேசக் கூடாது என்றும், ஒரு மனிதன் தன் சகோதரனின் விற்பனைக்கு மேல் (பேரம் முடிவான பின்) விற்கக் கூடாது என்றும், ஒரு பெண் தன் சகோதரியின் விவாகரத்தைக் கேட்கக் கூடாது என்றும் தடை செய்தார்கள். (ஏனெனில், அவ்வாறு கேட்பது) அவளது பாத்திரத்தில் உள்ளதை (அதாவது, அவளது வாழ்வாதாரத்தை) தனதாக்கிக் கொள்வதற்காகும்.
அம்ர் (அந்நாகித்) அவர்களின் அறிவிப்பில் கூடுதலாக: "ஒரு மனிதன் தன் சகோதரனின் பேரம் பேசும் விலைக்கு மேல் பேரம் பேசக் கூடாது" என்று இடம்பெற்றுள்ளது.
وعن أبي هريرة رضي الله عنه قال: نهى رسول الله صلى الله عليه وسلم أن يبيع حاضر لباد، ولا تناجشوا ولا يبيع الرجل على بيع أخيه، ولا يخطب على خطبة أخيه، ولا تسأل المرأة طلاق أختها لتكفأ ما في إنائها.
وفي رواية قال: نهى رسول الله صلى الله عليه وسلم عن التلقي وأن يبتاع المهاجر للأعرابي، وأن تشترط المرأة طلاق أختها، وأن يستام الرجل على سوم أخيه، ونهى عن النجش والتصرية" ((متفق عليه)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
கிராமவாசி ஒருவருக்காக நகரவாசி ஒருவர் (தரகராக) விற்பனை செய்வதையும்; நஜ்ஷ் செய்வதையும்; ஒருவர் தன் சகோதரர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது இவர் குறுக்கிட்டு வியாபாரம் செய்வதையும்; ஒருவர் தன் சகோதரர் பெண் பேசிக் கொண்டிருக்கும் போது இவர் குறுக்கிட்டுப் பெண் பேசுவதையும்; ஒரு பெண் தன் சகோதரியின் பாத்திரத்தில் உள்ளதைத் தான் கவிழ்த்துக் கொள்வதற்காக (அதாவது அவளுக்குரியதை தான் அடைந்து கொள்வதற்காக) அவளை விவாகரத்து செய்யுமாறு கேட்பதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
(சரக்கு வருவோரைச் சந்தைக்கு வரும் முன்) வழியில் சென்று சந்திப்பதையும்; ஒரு நகரவாசி ஒரு கிராமவாசிக்காக வாங்குவதையும் (அதாவது, கிராமவாசி கொண்டுவரும் பொருளை சந்தைக்கு வரும் முன் குறைந்த விலைக்கு வாங்குவதையும் அல்லது கிராமவாசிக்காக நகரவாசி தரகராக விற்பனை செய்வதையும்); ஒரு பெண் தன் சகோதரியின் விவாகரத்தை நிபந்தனையாக இடுவதையும்; ஒருவர் விலை பேசிக்கொண்டிருக்கும்போது மற்றொருவர் விலை பேசுவதையும்; நஜ்ஷ் செய்வதையும்; தசரிய்யா செய்வதையும் (விற்பனைக்காக பால் கறக்காமல் பிராணிகளை மடியில் பால் தேங்கும் நோக்கில் விட்டுவிடுவதையும்) அவர் தடை செய்தார்கள்.