இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6603ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَيْرِيزٍ الْجُمَحِيُّ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، أَخْبَرَهُ أَنَّهُ، بَيْنَمَا هُوَ جَالِسٌ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم جَاءَ رَجُلٌ مِنِ الأَنْصَارِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نُصِيبُ سَبْيًا وَنُحِبُّ الْمَالَ، كَيْفَ تَرَى فِي الْعَزْلِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ أَوَإِنَّكُمْ تَفْعَلُونَ ذَلِكَ، لاَ عَلَيْكُمْ أَنْ لاَ تَفْعَلُوا، فَإِنَّهُ لَيْسَتْ نَسَمَةٌ كَتَبَ اللَّهُ أَنْ تَخْرُجَ إِلاَّ هِيَ كَائِنَةٌ ‏ ‏‏.‏
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளில் ஒருவர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குப் போர்க் கைதிகளாக (அடிமைப்) பெண்கள் கிடைக்கின்றனர். நாங்கள் (அவர்களை விற்றுப் பெறும்) செல்வத்தை விரும்புகிறோம். (ஆகவே, அவர்கள் கர்ப்பமாகிவிடாமல் இருக்க) 'அஸ்ல்' (புணர்ச்சி விலகல்) செய்வது குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் அவ்வாறு செய்கிறீர்களா? நீங்கள் அதைச் செய்யாமல் இருப்பதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. ஏனெனில், (உலகில்) பிறக்க வேண்டும் என அல்லாஹ் விதித்துள்ள எந்த ஓர் உயிரும் பிறக்காமல் இருப்பதில்லை" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح