இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2215ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ خَرَجَ ثَلاَثَةٌ يَمْشُونَ فَأَصَابَهُمُ الْمَطَرُ، فَدَخَلُوا فِي غَارٍ فِي جَبَلٍ، فَانْحَطَّتْ عَلَيْهِمْ صَخْرَةٌ‏.‏ قَالَ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ ادْعُوا اللَّهَ بِأَفْضَلِ عَمَلٍ عَمِلْتُمُوهُ‏.‏ فَقَالَ أَحَدُهُمُ اللَّهُمَّ، إِنِّي كَانَ لِي أَبَوَانِ شَيْخَانِ كَبِيرَانِ، فَكُنْتُ أَخْرُجُ فَأَرْعَى، ثُمَّ أَجِيءُ فَأَحْلُبُ، فَأَجِيءُ بِالْحِلاَبِ فَآتِي بِهِ أَبَوَىَّ فَيَشْرَبَانِ، ثُمَّ أَسْقِي الصِّبْيَةَ وَأَهْلِي وَامْرَأَتِي، فَاحْتَبَسْتُ لَيْلَةً‏.‏ فَجِئْتُ فَإِذَا هُمَا نَائِمَانِ ـ قَالَ ـ فَكَرِهْتُ أَنْ أُوقِظَهُمَا، وَالصِّبِيْةُ يَتَضَاغَوْنَ عِنْدَ رِجْلَىَّ، فَلَمْ يَزَلْ ذَلِكَ دَأْبِي وَدَأْبَهُمَا، حَتَّى طَلَعَ الْفَجْرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فُرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ‏.‏ قَالَ فَفُرِجَ عَنْهُمْ‏.‏ وَقَالَ الآخَرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي كُنْتُ أُحِبُّ امْرَأَةً مِنْ بَنَاتِ عَمِّي كَأَشَدِّ مَا يُحِبُّ الرَّجُلُ النِّسَاءَ، فَقَالَتْ لاَ تَنَالُ ذَلِكَ مِنْهَا حَتَّى تُعْطِيَهَا مِائَةَ دِينَارٍ‏.‏ فَسَعَيْتُ فِيهَا حَتَّى جَمَعْتُهَا، فَلَمَّا قَعَدْتُ بَيْنَ رِجْلَيْهَا قَالَتِ اتَّقِ اللَّهَ، وَلاَ تَفُضَّ الْخَاتَمَ إِلاَّ بِحَقِّهِ‏.‏ فَقُمْتُ وَتَرَكْتُهَا، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فُرْجَةً، قَالَ فَفَرَجَ عَنْهُمُ الثُّلُثَيْنِ‏.‏ وَقَالَ الآخَرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي اسْتَأْجَرْتُ أَجِيرًا بِفَرَقٍ مِنْ ذُرَةٍ فَأَعْطَيْتُهُ، وَأَبَى ذَاكَ أَنْ يَأْخُذَ، فَعَمَدْتُ إِلَى ذَلِكَ الْفَرَقِ، فَزَرَعْتُهُ حَتَّى اشْتَرَيْتُ مِنْهُ بَقَرًا وَرَاعِيَهَا، ثُمَّ جَاءَ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ أَعْطِنِي حَقِّي‏.‏ فَقُلْتُ انْطَلِقْ إِلَى تِلْكَ الْبَقَرِ وَرَاعِيهَا، فَإِنَّهَا لَكَ‏.‏ فَقَالَ أَتَسْتَهْزِئُ بِي‏.‏ قَالَ فَقُلْتُ مَا أَسْتَهْزِئُ بِكَ وَلَكِنَّهَا لَكَ‏.‏ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا‏.‏ فَكُشِفَ عَنْهُمْ ‏ ‏‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"மூன்று நபர்கள் (வழியில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவர்களுக்கு மழை பிடித்தது. அவர்கள் மலையிலுள்ள ஒரு குகைக்குள் நுழைந்தார்கள். அப்போது மலையிலிருந்து ஒரு பாறை உருண்டு வந்து, குகையின் வாசலை அடைத்துக் கொண்டது. அவர்கள் (ஒருவருக்கொருவர்), 'நீங்கள் செய்த நற்செயல்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று பேசிக்கொண்டார்கள்.

அவர்களில் ஒருவர் கூறினார்: 'இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் வெளியே சென்று (கால்நடைகளை) மேய்ப்பேன். பிறகு (மாலையில்) வந்து பால் கறந்து, அந்தப் பாலைப் பாத்திரத்தில் என் பெற்றோரிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். அதன் பிறகே என் குழந்தைகளுக்கும், என் குடும்பத்தாருக்கும், என் மனைவிக்கும் புகட்டுவேன். ஓர் இரவில் நான் வருவதற்குத் தாமதமாகிவிட்டது. நான் வந்தபோது அவர்கள் இருவரும் உறங்கிவிட்டிருந்தார்கள். அவர்களை எழுப்ப எனக்கு மனமில்லை. குழந்தைகளோ (பசியால்) என் காலடியில் அழுது கொண்டிருந்தார்கள். விடியும் வரை எனதும் அவர்களது நிலையும் இப்படியே இருந்தது. இறைவா! உனது திருப்பொருத்தத்தை நாடியே நான் இதைச் செய்தேன் என்று நீ அறிந்தால், நாங்கள் வானத்தைப் பார்க்கும் அளவுக்கு (பாறையை விலக்கி) ஒரு இடைவெளியை ஏற்படுத்துவாயாக!' (என்று வேண்டினார்). பாறை (சிறிது) விலகியது.

வேறொருவர் கூறினார்: 'இறைவா! என் தந்தையின் சகோதரர் மகள் (மீது) நான் அன்பு வைத்திருந்தேன். ஒரு ஆண், பெண்களை நேசிப்பதிலேயே மிக அதிகமாக நேசிப்பதைப் போன்று அவள் மீது நான் அன்பு வைத்திருந்தேன். (நான் அவளை அடைய விரும்பினேன்). ஆனால், நூறு தீனார்கள் (தங்கக் காசுகள்) கொடுத்தாலன்றி நீ என்னை அடைய முடியாது என்று அவள் சொல்லிவிட்டாள். அதற்காக நான் உழைத்து அதைச் சேகரித்தேன். அவளுடைய இரண்டு கால்களுக்கு இடையே நான் அமர்ந்தபோது, 'அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையில் (திருமணம் செய்து) அன்றி, முத்திரையை உடைக்காதே!' என்று அவள் கூறினாள். உடனே நான் எழுந்து அவளைவிட்டு விலகிவிட்டேன். இறைவா! உனது திருப்பொருத்தத்தை நாடியே நான் இதைச் செய்தேன் என்று நீ அறிந்தால், எங்களுக்கு (வழியைத்) திறப்பாயாக!' (என்று வேண்டினார்). பாறை மூன்றில் இரண்டு பங்கு விலகியது.

வேறொருவர் கூறினார்: 'இறைவா! நான் ஒரு ஃபரக் அளவு சோளத்திற்கு ஒரு கூலியாளை அமர்த்தினேன். (வேலை முடிந்ததும்) அவனுக்குக் கூலி கொடுத்தேன். அவன் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். (அவன் போன பிறகு) அந்தச் சோளத்தை நான் பயிரிட்டேன். (அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு) அதிலிருந்து மாடுகளையும் அவற்றை மேய்ப்பவரையும் வாங்கினேன். பிறகு (சில காலம் கழித்து) அவன் வந்து, 'அல்லாஹ்வின் அடியாரே! என் கூலியை எனக்குக் கொடுத்துவிடு' என்று கேட்டான். நான், 'அந்த மாடுகளிடமும் அதை மேய்ப்பவரிடமும் செல்! அவை உனக்குரியவைதாம்' என்று சொன்னேன். அதற்கு அவன், 'என்னை நீ கேலி செய்கிறாயா?' என்று கேட்டான். நான், 'உன்னை நான் கேலி செய்யவில்லை; அவை உனக்குரியவைதாம்' என்று சொன்னேன். இறைவா! உனது திருப்பொருத்தத்தை நாடியே நான் இதைச் செய்தேன் என்று நீ அறிந்தால், (பாறையை முழுவதுமாக) விலக்கிவிடு!' என்று வேண்டினார். பாறை (முழுமையாக) விலகியது."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5974ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ بَيْنَمَا ثَلاَثَةُ نَفَرٍ يَتَمَاشَوْنَ أَخَذَهُمُ الْمَطَرُ، فَمَالُوا إِلَى غَارٍ فِي الْجَبَلِ، فَانْحَطَّتْ عَلَى فَمِ غَارِهِمْ صَخْرَةٌ مِنَ الْجَبَلِ، فَأَطْبَقَتْ عَلَيْهِمْ، فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ انْظُرُوا أَعْمَالاً عَمِلْتُمُوهَا لِلَّهِ صَالِحَةً، فَادْعُوا اللَّهَ بِهَا لَعَلَّهُ يَفْرُجُهَا‏.‏ فَقَالَ أَحَدُهُمُ اللَّهُمَّ إِنَّهُ كَانَ لِي وَالِدَانِ شَيْخَانِ كَبِيرَانِ، وَلِي صِبْيَةٌ صِغَارٌ كُنْتُ أَرْعَى عَلَيْهِمْ، فَإِذَا رُحْتُ عَلَيْهِمْ فَحَلَبْتُ بَدَأْتُ بِوَالِدَىَّ أَسْقِيهِمَا قَبْلَ وَلَدِي، وَإِنَّهُ نَاءَ بِيَ الشَّجَرُ فَمَا أَتَيْتُ حَتَّى أَمْسَيْتُ، فَوَجَدْتُهُمَا قَدْ نَامَا، فَحَلَبْتُ كَمَا كُنْتُ أَحْلُبُ، فَجِئْتُ بِالْحِلاَبِ فَقُمْتُ عِنْدَ رُءُوسِهِمَا، أَكْرَهُ أَنْ أُوقِظَهُمَا مِنْ نَوْمِهِمَا، وَأَكْرَهُ أَنْ أَبْدَأَ بِالصِّبْيَةِ قَبْلَهُمَا، وَالصِّبْيَةُ يَتَضَاغَوْنَ عِنْدَ قَدَمَىَّ، فَلَمْ يَزَلْ ذَلِكَ دَأْبِي وَدَأْبَهُمْ حَتَّى طَلَعَ الْفَجْرُ، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ، فَافْرُجْ لَنَا فُرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ، فَفَرَجَ اللَّهُ لَهُمْ فُرْجَةً حَتَّى يَرَوْنَ مِنْهَا السَّمَاءَ‏.‏ وَقَالَ الثَّانِي اللَّهُمَّ إِنَّهُ كَانَتْ لِي ابْنَةُ عَمٍّ، أُحِبُّهَا كَأَشَدِّ مَا يُحِبُّ الرِّجَالُ النِّسَاءَ، فَطَلَبْتُ إِلَيْهَا نَفْسَهَا، فَأَبَتْ حَتَّى آتِيَهَا بِمِائَةِ دِينَارٍ، فَسَعَيْتُ حَتَّى جَمَعْتُ مِائَةَ دِينَارٍ، فَلَقِيتُهَا بِهَا، فَلَمَّا قَعَدْتُ بَيْنَ رِجْلَيْهَا قَالَتْ يَا عَبْدَ اللَّهِ اتَّقِ اللَّهَ، وَلاَ تَفْتَحِ الْخَاتَمَ‏.‏ فَقُمْتُ عَنْهَا، اللَّهُمَّ فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي قَدْ فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ لَنَا مِنْهَا فَفَرَجَ لَهُمْ فُرْجَةً‏.‏ وَقَالَ الآخَرُ اللَّهُمَّ إِنِّي كُنْتُ اسْتَأْجَرْتُ أَجِيرًا بِفَرَقِ أَرُزٍّ فَلَمَّا قَضَى عَمَلَهُ قَالَ أَعْطِنِي حَقِّي‏.‏ فَعَرَضْتُ عَلَيْهِ حَقَّهُ، فَتَرَكَهُ وَرَغِبَ عَنْهُ، فَلَمْ أَزَلْ أَزْرَعُهُ حَتَّى جَمَعْتُ مِنْهُ بَقَرًا وَرَاعِيَهَا، فَجَاءَنِي فَقَالَ اتَّقِ اللَّهَ وَلاَ تَظْلِمْنِي، وَأَعْطِنِي حَقِّي‏.‏ فَقُلْتُ اذْهَبْ إِلَى ذَلِكَ الْبَقَرِ وَرَاعِيهَا‏.‏ فَقَالَ اتَّقِ اللَّهَ وَلاَ تَهْزَأْ بِي‏.‏ فَقُلْتُ إِنِّي لاَ أَهْزَأُ بِكَ، فَخُذْ ذَلِكَ الْبَقَرَ وَرَاعِيَهَا‏.‏ فَأَخَذَهُ فَانْطَلَقَ بِهَا، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ، فَافْرُجْ مَا بَقِيَ، فَفَرَجَ اللَّهُ عَنْهُمْ ‏ ‏‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறியதாவது:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மூன்று நபர்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது மழை பிடித்தது. அவர்கள் மலையிலுள்ள ஒரு குகையில் ஒதுங்கினர். மலையிலிருந்து ஒரு பாறை உருண்டு வந்து அவர்களது குகை வாசலை மூடிக்கொண்டது. அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர், 'நீங்கள் அல்லாஹ்விற்காகச் செய்த நற்செயல்களை நினைத்துப்பாருங்கள். அவற்றைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் (இக்கஷ்டத்தை) உங்களை விட்டு நீக்கக்கூடும்' என்று பேசிக்கொண்டனர்.

அவர்களில் ஒருவர் கூறினார்: 'இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். எனக்குச் சிறிய குழந்தைகளும் இருந்தனர். அவர்களுக்காக நான் (கால்நடைகளை) மேய்த்து வருவேன். நான் (மேய்ச்சலிலிருந்து) திரும்பினால் பால் கறப்பேன்; என் குழந்தைகளுக்கு முன்பாக என் பெற்றோருக்கே (பாலை) புகட்டுவேன். ஒரு நாள் மேய்ச்சல் என்னைத் வெகுதூரம் கொண்டு சென்றுவிட்டது. மாலை நேரம் வரை நான் திரும்பவில்லை. (நான் வந்தபோது) அவர்கள் இருவரும் உறங்கிவிட்டிருந்தனர். நான் எப்போதும் போல் பால் கறந்து, பாத்திரத்துடன் அவர்கள் தலைமாட்டில் நின்றேன். அவர்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பவும் எனக்கு மனமில்லை; அவர்களுக்கு முன் குழந்தைகளுக்குக் கொடுக்கவும் மனமில்லை. என் காலடியில் குழந்தைகள் (பசியால்) அழுதுகொண்டிருந்தனர். விடியும் வரை இதே நிலை நீடித்தது. (இறைவா!) இதை நான் உனது திருப்பொருத்தத்தை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால், வானம் தெரியும் அளவிற்கு எங்களுக்கு ஒரு இடைவெளியை ஏற்படுத்துவாயாக!' (என்று வேண்டினார்). அல்லாஹ் அவர்களுக்கு வானம் தெரியும் அளவிற்கு ஒரு இடைவெளியை ஏற்படுத்தினான்.

இரண்டாமவர் கூறினார்: 'இறைவா! என் தந்தையின் சகோதரர் மகள் (என் மாமன் மகள்) ஒருத்தி இருந்தாள். ஆண்கள் பெண்களை நேசிப்பதிலேயே மிகக் கடுமையான நேசத்தை அவள் மீது நான் கொண்டேன். நான் அவளை அடைய விரும்பினேன். ஆனால் நான் நூறு தீனார்கள் கொண்டுவரும் வரை அவள் மறுத்துவிட்டாள். நான் (கடுமையாக) உழைத்து நூறு தீனார்களைச் சேகரித்து அவளிடம் கொண்டு சென்றேன். அவள் கால்களுக்கு இடையே நான் (உறவாட) அமர்ந்தபோது, 'அல்லாஹ்வின் அடியாரே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிமையின்றி முத்திரையை உடைக்காதே' என்று அவள் கூறினாள். உடனே நான் அவளை விட்டு விலகினேன். (இறைவா!) இதை நான் உனது திருப்பொருத்தத்தை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால், இதிலிருந்து எங்களுக்கு விடுதலையளிப்பாயாக!' (என்று வேண்டினார்). அல்லாஹ் அவர்களுக்கு (பாறையை இன்னும் சற்று) விலக்கினான்.

மற்றவர் கூறினார்: 'இறைவா! நான் ஒரு பணியாளரை ஒரு 'ஃபரக்' (அளவை) நெல்லுக்குக் கூலியாக அமர்த்தினேன். அவர் வேலையை முடித்துத் தன் கூலியைக் கேட்டார். நான் அவருக்குரியதை அவரிடம் கொடுத்தபோது, அவர் (அற்பமெனக் கருதி) அதை விட்டுவிட்டு, வெறுத்துச் சென்றுவிட்டார். நான் அப்பயிரைத் தொடர்ந்து பயிரிட்டு (விளைச்சலைப் பெருக்கி), அதிலிருந்து மாடுகளையும் அதற்கென ஒரு இடையனையும் வாங்கினேன். பின்னர் அவர் என்னிடம் வந்து, 'அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! எனக்கு அநீதி இழைக்காதே! என் கூலியைத் தந்துவிடு' என்றார். நான், 'அந்த மாடுகளையும் அதன் இடையனையும் எடுத்துக்கொள்' என்றேன். அவர், 'அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! என்னைக் கேலி செய்யாதே' என்றார். நான், 'உன்னை நான் கேலி செய்யவில்லை; அந்த மாடுகளையும் இடையனையும் எடுத்துக்கொள்' என்றேன். அவர் அதை ஓட்டிச் சென்றார். (இறைவா!) இதை நான் உனது திருப்பொருத்தத்தை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால், எஞ்சியிருக்கும் பகுதியையும் விலக்குவாயாக!' (என்று வேண்டினார்). அல்லாஹ் அவர்களை (முழுமையாக) விடுவித்தான்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
6949ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الْمُسَيَّبِيُّ، حَدَّثَنِي أَنَسٌ، - يَعْنِي ابْنَ عِيَاضٍ أَبَا ضَمْرَةَ
- عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه
وسلم أَنَّهُ قَالَ ‏"‏ بَيْنَمَا ثَلاَثَةُ نَفَرٍ يَتَمَشَّوْنَ أَخَذَهُمُ الْمَطَرُ فَأَوَوْا إِلَى غَارٍ فِي جَبَلٍ فَانْحَطَّتْ
عَلَى فَمِ غَارِهِمْ صَخْرَةٌ مِنَ الْجَبَلِ فَانْطَبَقَتْ عَلَيْهِمْ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ انْظُرُوا أَعْمَالاً
عَمِلْتُمُوهَا صَالِحَةً لِلَّهِ فَادْعُوا اللَّهَ تَعَالَى بِهَا لَعَلَّ اللَّهَ يَفْرُجُهَا عَنْكُمْ ‏.‏ فَقَالَ أَحَدُهُمُ اللَّهُمَّ
إِنَّهُ كَانَ لِي وَالِدَانِ شَيْخَانِ كَبِيرَانِ وَامْرَأَتِي وَلِيَ صِبْيَةٌ صِغَارٌ أَرْعَى عَلَيْهِمْ فَإِذَا أَرَحْتُ
عَلَيْهِمْ حَلَبْتُ فَبَدَأْتُ بِوَالِدَىَّ فَسَقَيْتُهُمَا قَبْلَ بَنِيَّ وَأَنَّهُ نَأَى بِي ذَاتَ يَوْمٍ الشَّجَرُ فَلَمْ آتِ
حَتَّى أَمْسَيْتُ فَوَجَدْتُهُمَا قَدْ نَامَا فَحَلَبْتُ كَمَا كُنْتُ أَحْلُبُ فَجِئْتُ بِالْحِلاَبِ فَقُمْتُ عِنْدَ رُءُوسِهِمَا
أَكْرَهُ أَنْ أُوقِظَهُمَا مِنْ نَوْمِهِمَا وَأَكْرَهُ أَنْ أَسْقِيَ الصِّبْيَةَ قَبْلَهُمَا وَالصِّبْيَةُ يَتَضَاغَوْنَ عِنْدَ
قَدَمَىَّ فَلَمْ يَزَلْ ذَلِكَ دَأْبِي وَدَأْبَهُمْ حَتَّى طَلَعَ الْفَجْرُ فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ
وَجْهِكَ فَافْرُجْ لَنَا مِنْهَا فُرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ ‏.‏ فَفَرَجَ اللَّهُ مِنْهَا فُرْجَةً فَرَأَوْا مِنْهَا السَّمَاءَ
‏.‏ وَقَالَ الآخَرُ اللَّهُمَّ إِنَّهُ كَانَتْ لِيَ ابْنَةُ عَمٍّ أَحْبَبْتُهَا كَأَشَدِّ مَا يُحِبُّ الرِّجَالُ النِّسَاءَ وَطَلَبْتُ
إِلَيْهَا نَفْسَهَا فَأَبَتْ حَتَّى آتِيَهَا بِمِائَةِ دِينَارٍ فَتَعِبْتُ حَتَّى جَمَعْتُ مِائَةَ دِينَارٍ فَجِئْتُهَا بِهَا
فَلَمَّا وَقَعْتُ بَيْنَ رِجْلَيْهَا قَالَتْ يَا عَبْدَ اللَّهِ اتَّقِ اللَّهَ وَلاَ تَفْتَحِ الْخَاتَمَ إِلاَّ بِحَقِّهِ ‏.‏ فَقُمْتُ عَنْهَا
فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ لَنَا مِنْهَا فُرْجَةً ‏.‏ فَفَرَجَ لَهُمْ ‏.‏ وَقَالَ
الآخَرُ اللَّهُمَّ إِنِّي كُنْتُ اسْتَأْجَرْتُ أَجِيرًا بِفَرَقِ أَرُزٍّ فَلَمَّا قَضَى عَمَلَهُ قَالَ أَعْطِنِي حَقِّي ‏.‏
فَعَرَضْتُ عَلَيْهِ فَرَقَهُ فَرَغِبَ عَنْهُ فَلَمْ أَزَلْ أَزْرَعُهُ حَتَّى جَمَعْتُ مِنْهُ بَقَرًا وَرِعَاءَهَا فَجَاءَنِي
فَقَالَ اتَّقِ اللَّهَ وَلاَ تَظْلِمْنِي حَقِّي ‏.‏ قُلْتُ اذْهَبْ إِلَى تِلْكَ الْبَقَرِ وَرِعَائِهَا فَخُذْهَا ‏.‏ فَقَالَ اتَّقِ
اللَّهَ وَلاَ تَسْتَهْزِئْ بِي ‏.‏ فَقُلْتُ إِنِّي لاَ أَسْتَهْزِئُ بِكَ خُذْ ذَلِكَ الْبَقَرَ وَرِعَاءَهَا ‏.‏ فَأَخَذَهُ فَذَهَبَ
بِهِ فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ لَنَا مَا بَقِيَ ‏.‏ فَفَرَجَ اللَّهُ مَا بَقِيَ
‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"மூன்று நபர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது மழை பிடித்தது. அவர்கள் மலையிலுள்ள ஒரு குகையில் தஞ்சம் புகுந்தார்கள். அப்போது மலையிலிருந்து ஒரு பாறை உருண்டு வந்து குகையின் வாசலை மூடிக்கொண்டது. அவர்கள் ஒருவருக்கொருவர், 'நீங்கள் அல்லாஹ்வுக்காகச் செய்த நற்செயல்களை நினைத்துப் பார்த்து, அவற்றைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; அல்லாஹ் அதைக்கொண்டு உங்களுக்கு (வழியைத்) திறக்கக்கூடும்' என்று பேசிக்கொண்டனர்.

அவர்களில் ஒருவர் கூறினார்: 'யா அல்லாஹ்! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர்கள் இருந்தார்கள்; என் மனைவியும், சிறிய குழந்தைகளும் இருந்தார்கள். நான் அவர்களுக்காக (கால்நடைகளை) மேய்த்து வருவேன். நான் (மேய்த்துவிட்டு) திரும்பி வந்தால், பால் கறந்து, என் பிள்ளைகளுக்கு முன்பு என் பெற்றோர்களுக்கு (முதலில்) புகட்டுவேன். ஒரு நாள் (கால்நடைகளை மேய்க்கச் சென்றபோது) மேய்ச்சல் நிலம் என்னைத் தொலைதூரம் அழைத்துச் சென்றுவிட்டதால், (திரும்பி வர) எனக்குத் தாமதமாகிவிட்டது. நான் மாலையில் வந்தபோது அவர்கள் இருவரும் உறங்கிவிட்டிருந்தனர். நான் எப்போதும் போல் பால் கறந்து, பாத்திரத்தைக் கொண்டு வந்து அவர்கள் தலைமாட்டில் நின்றேன். உறக்கத்திலிருந்து அவர்களை எழுப்புவதை நான் வெறுத்தேன்; அவர்களுக்கு முன்பாகப் பிள்ளைகளுக்குப் புகட்டுவதையும் நான் வெறுத்தேன். என் காலடியில் குழந்தைகள் (பசியால்) அழுதுகொண்டிருந்தனர். வைகறை உதயமாகும் வரை என்னுடைய நிலையும் அவர்களின் நிலையும் இப்படியே இருந்தது. (யா அல்லாஹ்!) நான் இதை உனது திருப்பொருத்தத்தை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால், வானம் தெரியும் அளவுக்கு எங்களுக்கு ஒரு திறப்பை ஏற்படுத்துவாயாக!' என்று வேண்டினார். அல்லாஹ் அவர்களுக்கு ஒரு திறப்பை ஏற்படுத்தினான்; அதிலிருந்து அவர்கள் வானத்தைப் பார்த்தார்கள்.

மற்றவர் கூறினார்: 'யா அல்லாஹ்! எனக்கு என் தந்தையின் சகோதரரின் மகள் (அதாவது, என் ஒன்றுவிட்ட சகோதரி) ஒருத்தி இருந்தாள். ஆண்கள் பெண்களை நேசிப்பதிலேயே மிகக் கடுமையாக நான் அவளை நேசித்தேன். நான் அவளை அடைய விரும்பினேன்; ஆனால் நூறு தீனார்கள் நான் அவளிடம் கொண்டு வரும் வரை அவள் மறுத்துவிட்டாள். நான் (கடுமையாக) உழைத்து நூறு தீனார்களைச் சேகரித்தேன். அதை அவளிடம் கொண்டு வந்தேன். நான் அவள் கால்களுக்கு இடையே அமர்ந்தபோது, 'அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வை அஞ்சு! உரிய முறையிலன்றி (திருமணமின்றி) முத்திரையை உடைக்காதே!' என்று அவள் கூறினாள். உடனே நான் அவளை விட்டு எழுந்துவிட்டேன். (யா அல்லாஹ்!) நான் இதை உனது திருப்பொருத்தத்தை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால், எங்களுக்கு (இன்னும்) ஒரு திறப்பை ஏற்படுத்துவாயாக!' என்று வேண்டினார். அல்லாஹ் அவர்களுக்கு (மேலும்) ஒரு திறப்பை ஏற்படுத்தினான்.

மற்றொருவர் கூறினார்: 'யா அல்லாஹ்! நான் ஒருவரை ஒரு 'ஃபரக்' (எனும் அளவு) அரிசி கூலிக்கு வேலைக்கு அமர்த்தினேன். அவர் தனது வேலையை முடித்ததும், 'என் கூலியை எனக்குத் தா!' என்று கேட்டார். நான் அவருக்குரிய (அந்த ஒரு ஃபரக்) கூலியை எடுத்துக் கொடுத்தேன். ஆனால் அவர் அதைப் புறக்கணித்துச் சென்றுவிட்டார். நான் அதை (விதையாகப்) பயிரிட்டேன்; அதிலிருந்து மாடுகளையும் அதை மேய்ப்பவர்களையும் நான் சம்பாதிக்கும் வரை (செல்வம் பெருகியது). பின்னர் அவர் என்னிடம் வந்து, 'அல்லாஹ்வை அஞ்சு! எனக்கு அநீதி இழைக்காதே (என் கூலியைத் தா)!' என்று கேட்டார். நான், 'அந்த மாடுகளிடமும் அதை மேய்ப்பவர்களிடமும் சென்று அவற்றை எடுத்துக்கொள்!' என்று கூறினேன். அவர், 'அல்லாஹ்வை அஞ்சு! என்னைக் கேலி செய்யாதே!' என்றார். நான், 'உன்னைக் கேலி செய்யவில்லை; அந்த மாடுகளையும் அதை மேய்ப்பவர்களையும் எடுத்துக்கொள்!' என்றேன். அவர் அவற்றை (ஓட்டிச்) சென்றார். (யா அல்லாஹ்!) நான் இதை உனது திருப்பொருத்தத்தை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால், எஞ்சியிருப்பதையும் எங்களுக்குத் திறந்துவிடுவாயாக!' என்று வேண்டினார். அல்லாஹ் எஞ்சியிருந்த (பகுதியையும்) திறந்தான்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5974முஸ்னது அஹ்மத்
حَدَّثَنَا يَعْقُوبُ حَدَّثَنَا أَبِي عَنْ صَالِحٍ حَدَّثَنَا نَافِعٌ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ بَيْنَمَا ثَلَاثَةُ رَهْطٍ يَتَمَاشَوْنَ أَخَذَهُمُ الْمَطَرُ فَأَوَوْا إِلَى غَارٍ فِي جَبَلٍ فَبَيْنَمَا هُمْ فِيهِ حَطَّتْ صَخْرَةٌ مِنَ الْجَبَلِ فَأَطْبَقَتْ عَلَيْهِمْ فَذَكَرَ الْحَدِيثَ مِثْلَ مَعْنَاهُ
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மூன்று நபர்கள் (ஒன்றாக) நடந்து சென்று கொண்டிருந்தபோது மழையில் சிக்கிக் கொண்டனர். எனவே, அவர்கள் ஒரு மலையில் இருந்த குகையொன்றில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் அதனுள் இருந்தபோது, மலையிலிருந்து ஒரு (பெரிய) பாறை உருண்டு வந்து (குகை வாசலை) அவர்களை (உள்ளே வைத்து) அடைத்துக்கொண்டது..."

(இவ்வாறு நபியவர்கள் கூறியதாகத் தெரிவித்துவிட்டு முந்தைய) ஹதீஸின் அதே கருத்தைக் கொண்ட மீதிச் செய்தியை அறிவிப்பாளர் குறிப்பிட்டார்.
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஸஹீஹ் (இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரபூர்வமானது)
إسناده صحيح
4938மிஷ்காத் அல்-மஸாபீஹ்
عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: بَيْنَمَا ثَلَاثَة نفر يماشون أَخَذَهُمُ الْمَطَرُ فَمَالُوا إِلَى غَارٍ فِي الْجَبَلِ فَانْحَطَّتْ عَلَى فَمِ غَارِهِمْ صَخْرَةٌ مِنَ الْجَبَلِ فَأَطْبَقَتْ عَلَيْهِمْ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ: انْظُرُوا أَعْمَالًا عَمِلْتُمُوهَا لِلَّهِ صَالِحَةً فَادْعُوا اللَّهَ بِهَا لَعَلَّهُ يُفَرِّجُهَا. فَقَالَ أَحَدُهُمْ: اللَّهُمَّ إِنَّهُ كَانَ لِي وَالِدَانِ شَيْخَانِ كَبِيرَانِ وَلِي صِبْيَةٌ صِغَارٌ كُنْتُ أَرْعَى عَلَيْهِمْ فَإِذَا رُحْتُ عَلَيْهِمْ فَحَلَبْتُ بَدَأْتُ بِوَالِدَيَّ أَسْقِيهِمَا قَبْلَ وَلَدِي وَإِنَّهُ قَدْ نَأَى بِي الشَّجَرُ فَمَا أَتَيْتُ حَتَّى أَمْسَيْتُ فَوَجَدْتُهُمَا قَدْ نَامَا فَحَلَبْتُ كَمَا كُنْتُ أَحْلُبُ فَجِئْتُ بِالْحِلَابِ فَقُمْتُ عِنْدَ رُؤُوسِهِمَا أَكْرَهُ أَنْ أُوقِظَهُمَا وَأَكْرَهُ أَنْ أَبْدَأَ بِالصِّبْيَةِ قَبْلَهُمَا وَالصِّبْيَةُ يَتَضَاغَوْنَ عِنْدَ قَدَمَيَّ فَلَمْ يَزَلْ ذَلِكَ دَأْبِي وَدَأْبَهُمْ حَتَّى طَلَعَ الْفَجْرُ فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ لَنَا فُرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ فَفَرَجَ اللَّهُ لَهُمْ حَتَّى يرَوْنَ السماءَ قَالَ الثَّانِي: اللَّهُمَّ إِنَّه كَانَ لِي بِنْتُ عَمٍّ أُحِبُّهَا كَأَشَدِّ مَا يُحِبُّ الرِّجَالُ النِّسَاءَ فَطَلَبْتُ إِلَيْهَا نَفْسَهَا فَأَبَتْ حَتَّى آتيها بِمِائَة دِينَار فلقيتها بِهَا فَلَمَّا قَعَدْتُ بَيْنَ رِجْلَيْهَا. قَالَتْ: يَا عَبْدَ اللَّهِ اتَّقِ اللَّهَ وَلَا تَفْتَحِ الْخَاتَمَ فَقُمْتُ عَنْهَا. اللَّهُمَّ فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ لَنَا مِنْهَا فَفَرَجَ لَهُمْ فُرْجَةً وَقَالَ الْآخَرُ: اللَّهُمَّ إِنِّي كُنْتُ اسْتَأْجَرْتُ أَجِيرًا بِفَرْقِ أَرُزٍّ فَلَمَّا قَضَى عَمَلَهُ قَالَ: أَعْطِنِي حَقِّي. فَعَرَضْتُ عَلَيْهِ حَقَّهُ فَتَرَكَهُ وَرَغِبَ عَنْهُ فَلَمْ أَزَلْ أَزْرَعُهُ حَتَّى جَمَعْتُ مِنْهُ بَقَرًا وَرَاعِيَهَا فَجَاءَنِي فَقَالَ: اتَّقِ اللَّهَ وَلَا تَظْلِمْنِي وَأَعْطِنِي حَقِّي. فَقُلْتُ: اذْهَبْ إِلَى ذَلِكَ الْبَقْرِ وَرَاعِيهَا فَقَالَ: اتَّقِ اللَّهَ وَلَا تَهْزَأْ بِي. فَقُلْتُ: إِنِّي لَا أَهْزَأُ بكَ فخذْ ذلكَ البقرَ وراعيها فَأخذ فَانْطَلَقَ بِهَا. فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ مَا بَقِيَ فَفَرَجَ الله عَنْهُم . مُتَّفق عَلَيْهِ
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"மூன்று நபர்கள் (ஒன்றாக) நடந்து சென்று கொண்டிருந்த போது, மழையில் சிக்கிக் கொண்டனர். எனவே, அவர்கள் ஒரு மலையிலுள்ள குகையில் தஞ்சம் புகுந்தனர். அப்போது மலையிலிருந்து ஒரு (பெரிய) பாறை சரிந்து வந்து அவர்களின் குகை வாயிலை அடைத்துக் கொண்டது. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து, 'நீங்கள் அல்லாஹ்வுக்காகத் தூய எண்ணத்துடன் செய்த (சிறந்த) நற்செயல்களைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்; அதைக் கொண்டு அவன் இந்தப் பாறையை (நமக்குத் திறக்கப்படும்படி) அகற்றக்கூடும்' என்று கூறிக் கொண்டனர்.

அவர்களில் ஒருவர் (பின்வருமாறு) பிரார்த்தித்தார்: 'யா அல்லாஹ்! எனக்கு மிகவும் வயதான பெற்றோர்கள் இருந்தனர். மேலும் எனக்குச் சிறு குழந்தைகளும் இருந்தனர். அவர்களுக்காக நான் (ஆடுகளை) மேய்த்து வந்தேன். நான் மாலையில் (வீடு) திரும்பியதும் (ஆடுகளிலிருந்து) பாலைக் கறந்து வந்து, என் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு முன்பாக என் பெற்றோருக்கே முதலில் அருந்தக் கொடுப்பேன். ஒருநாள் (ஆடுகளுக்குத் தேவையான) மேய்ச்சல் தேடி நான் வெகுதூரம் சென்றுவிட்டேன். மாலை நேரம் முடியும் வரை நான் (வீடு) திரும்பவில்லை. நான் வந்தபோது அவர்கள் இருவரும் உறங்கிவிட்டிருந்தனர். நான் வழக்கமாகப் பால் கறப்பது போன்றே கறந்து, அந்தப் பாத்திரத்துடன் அவர்களின் தலைமாட்டில் (அவர்கள் விழிப்பார்கள் என்று எதிர்பார்த்து) நின்றேன். அவர்களைத் தட்டி எழுப்புவதை நான் விரும்பவில்லை. அவர்களுக்கு முன்பாக என் குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதையும் நான் விரும்பவில்லை. ஆனால், என் குழந்தைகள் பசியால் என் காலடியில் அழுதுகொண்டிருந்தனர். இப்படியே எனக்கும் அவர்களுக்குமான நிலைமை விடியற்காலை வரை நீடித்தது. (யா அல்லாஹ்!) நான் இதை உன்னுடைய திருமுகத்தை (உன் திருப்பொருத்தத்தை) நாடியே செய்தேன் என்பதை நீ அறிவாய் என்றால், நாங்கள் வானத்தைப் பார்க்கும் அளவிற்கு எங்களுக்கு இந்தப் பாறையைச் சற்று விலக்குவாயாக!' என்றார். அவ்வாறே அவர்கள் வானத்தைப் பார்க்கும் அளவிற்கு அல்லாஹ் அந்தப் பாறையைச் சற்று விலக்கினான்.

இரண்டாமவர் (பின்வருமாறு) பிரார்த்தித்தார்: 'யா அல்லாஹ்! எனக்கு என் தந்தையின் சகோதரர் மகள் (பெரியப்பா அல்லது சித்தப்பா மகள்) ஒருத்தி இருந்தாள். ஆண்கள் பெண்களை நேசிப்பதிலேயே மிகவும் அதிகமாக நான் அவளை நேசித்தேன். நான் அவளை (தவறான முறையில்) அடைய விரும்பிய போது அவள் சம்மதிக்கவில்லை. நூறு தீனார்களை அவளிடம் நான் கொண்டுவரும் வரை அவள் மறுத்துவிட்டாள். நான் (கடுமையாக உழைத்து) அந்த நூறு தீனார்களைத் திரட்டி, அவளிடம் கொண்டு சென்றேன். நான் அவளின் இரு கால்களுக்கிடையில் (உடலுறவு கொள்வதற்காக) அமர்ந்தபோது, அவள், "அல்லாஹ்வின் அடியாரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! (திருமண ஒப்பந்தம் எனும்) உரிமையின்றி இந்த முத்திரையை உடைத்துவிடாதீர்கள்" என்று கூறினாள். உடனே நான் (அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால்) அவளை விட்டு எழுந்துவிட்டேன். யா அல்லாஹ்! நான் இதை உன்னுடைய திருமுகத்தை (உன் திருப்பொருத்தத்தை) நாடியே செய்தேன் என்பதை நீ அறிவாய் என்றால், இந்தப் பாறையை எங்களை விட்டும் சற்று விலக்குவாயாக!' என்றார். அவ்வாறே அவர்களுக்கு அந்தப் பாறை மேலும் சற்று விலகியது.

மூன்றாமவர் (பின்வருமாறு) பிரார்த்தித்தார்: 'யா அல்லாஹ்! ஒரு ஃபரக் (சுமார் 10 கிலோ எடையுள்ள) அரிசியைக் கூலியாகப் பேசி ஒருவரை நான் வேலைக்கு அமர்த்தினேன். அவர் தனது வேலையை முடித்ததும், "என் கூலியைக் கொடுங்கள்" என்று கேட்டார். நான் அவரது கூலியை (அவரிடம்) கொடுத்த போது, அவர் அதை (ஏற்காமல்) விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அதன்பின் அந்தப் பொருளை நான் விவசாயத்தில் தொடர்ந்து முதலீடு செய்தேன். அதிலிருந்து வந்த லாபத்தைக் கொண்டு, சில மாடுகளையும் அவற்றை மேய்ப்பவர்களையும் நான் சேர்த்தேன். (நீண்ட காலத்திற்குப் பின்) ஒருநாள் அவர் என்னிடம் வந்து, "அல்லாஹ்வின் அடியாரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! எனக்கு அநீதி இழைக்காதீர்கள்; என் கூலியைக் கொடுத்துவிடுங்கள்!" என்று கேட்டார். நான் அவரிடம், "அங்கே காணும் அந்த மாடுகளிடமும் அதை மேய்ப்பவர்களிடமும் செல்லுங்கள் (அவையனைத்தும் உங்களுடையதே)" என்று கூறினேன். அதற்கு அவர், "அல்லாஹ்வின் அடியாரே! என்னைக் கேலி செய்யாதீர்கள்!" என்றார். நான், "நான் உங்களைக் கேலி செய்யவில்லை; அந்த மாடுகளையும் மேய்ப்பவர்களையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்" என்றேன். அவர் அவற்றைப் பெற்றுக் கொண்டு ஓட்டிச் சென்றார். (யா அல்லாஹ்!) நான் இதை உன்னுடைய திருமுகத்தை (உன் திருப்பொருத்தத்தை) நாடியே செய்தேன் என்பதை நீ அறிவாய் என்றால், எஞ்சியுள்ள இந்தப் பாறையை (முழுமையாக) எங்களை விட்டு விலக்குவாயாக!' என்றார். அல்லாஹ் அந்தப் பாறையை அவர்களை விட்டும் (முழுமையாக) விலக்கினான்."

(ஆதாரம்: புகாரி மற்றும் முஸ்லிம்)
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
12ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن أبي عبد الرحمن عبد الله بن عمر بن الخطاب، رضي الله عنهما قال‏:‏ سمعت رسول الله صلى الله عليه وسلم يقول‏:‏ ‏"‏ انطلق ثلاثة نفر ممن كان قبلكم حتى آواهم المبيت إلى غار فدخلوه، فانحدرت صخرة من الجبل فسدت عليهم الغار، فقالوا‏:‏ إنه لا ينجيكم من هذه الصخرة إلا أن تدعوا الله بصالح أعمالكم‏.‏ قال رجل منهم‏:‏ اللهم كان لي أبوان شيخان كبيران، وكنت لا أغبق قبلهما أهلاً ولا مالاً‏.‏ فنأى بى طلب الشجر يوماً فلم أرح عليهما حتى ناما فحلبت لهما غبوقهما فوجدتهما نائمين فكرهت أن أوقظهما وأن أغبق قبلهما أهلاً أو مالاً، فلبثت- والقدح على يدى- أنتظر استيقاظهما حتى برق الفجر والصبية يتضاغون عند قدمى- فاستيقظا فشربا غبوقهما‏.‏ اللهم إن كنت فعلت ذلك ابتغاء وجهك ففرج عنا ما نحن فيه من هذه الصخرة، فانفرجت شيئاً لا يستطيعون الخروج منه‏.‏ قال الآخر‏:‏ اللهم إنه كانت لي ابنة عم كانت أحب الناس إلىّ ‏"‏ وفى رواية‏:‏ ‏"‏كنت أحبها كأشد ما يحب الرجال النساء، فأردتها على نفسها فامتنعت منى حتى ألمّت بها سنة من السنين فجاءتنى فأعطيتها عشرين ومائة دينار على أن تخلى بينى وبين نفسها ففعلت، حتى إذا قدرت عليها‏"‏ وفى رواية‏:‏ ‏"‏فلما قعدت بين رجليها، قالت‏:‏ اتق الله ولا تفض الخاتم إلا بحقه، فانصرفت عنها وهى أحب الناس إلى وتركت الذهب الذى أعطيتها، اللهم إن كنت فعلت ذلك ابتغاء وجهك فافرج عنا ما نحن فيه، فانفرجت الصخرة غير أنهم لا يستطيعون الخروج منها‏.‏ وقال الثالث‏:‏ اللهم استأجرت أجراء وأعطيتهم أجرهم غير رجل واحد ترك الذى له وذهب، فثمرت أجره حتى كثرت منه الأموال، فجاءنى بعد حين فقال‏:‏ يا عبد الله أدّ إلى أجرى، فقلت‏:‏ كل ما ترى من أجرك‏:‏ من الإبل والبقر والغنم والرقيق‏.‏ فقال‏:‏ يا عبد الله لا تستهزئ بى‏!‏ فقلت‏:‏ لا أستهزئ بك، فأخذه كله فاستاقه فلم يترك منه شيئاً، اللهم إن كنتُ فعلت ذلك ابتغاء وجهك فافرج عنا ما نحن فيه، فانفرجت الصخرة فخرجوا يمشون‏"‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் பின் அல்கத்தாப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக: "உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று நபர்கள் ஒரு பயணம் சென்றனர். (இரவு நேரம் வந்ததும்,) அவர்கள் ஒரு குகையை அடைந்து அதற்குள் நுழைந்தனர். மலையிலிருந்து ஒரு பாறை உருண்டு வந்து குகையின் நுழைவாயிலை அடைத்துவிட்டது. அவர்கள், 'நீங்கள் செய்த ஒரு நல்ல செயலின் பொருட்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு எதுவும் உங்களை இதிலிருந்து காப்பாற்றாது' என்று பேசிக்கொண்டனர்.

அப்போது, அவர்களில் ஒருவர் கூறினார்: 'யா அல்லாஹ்! எனக்கு வயதான பெற்றோர்கள் இருந்தனர். என் பிள்ளைகளுக்கோ அல்லது அடிமைகளுக்கோ (மாலை நேர) பால் கொடுப்பதற்கு முன்பு அவர்களுக்குத்தான் நான் (பால்) கொடுப்பது வழக்கம். ஒரு நாள், நான் (என் கால்நடைகளுக்கான) மேய்ச்சலுக்காக வெகுதூரம் சென்றுவிட்டதால், அவர்கள் உறங்கும் வரை என்னால் திரும்பி வர முடியவில்லை. நான் வழக்கம் போல் பால் கறந்து (அவர்களுக்கான) பானத்தைக் கொண்டு வந்தபோது, அவர்கள் இருவரும் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டேன். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை, மேலும் அவர்களுக்கு முன்பு என் பிள்ளைகளுக்கோ அல்லது அடிமைகளுக்கோ பால் கொடுப்பதையும் நான் வெறுத்தேன். என் பிள்ளைகள் (பசியால்) என் காலடியில் அழுது கொண்டிருந்தனர், ஆனால் நான் பாத்திரத்தை கையில் ஏந்தியபடி அவர்கள் விழிக்கும் வரை காத்திருந்தேன். விடியற்காலையில் அவர்கள் எழுந்தபோது, பாலைக் குடித்தார்கள். யா அல்லாஹ்! உன்னுடைய திருப்தியை நாடியே நான் இதைச் செய்திருந்தால், இந்தப் பாறையால் ஏற்பட்ட துன்பத்திலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக'. அந்தப் பாறை சற்று நகர்ந்தது, ஆனால் அவர்களால் வெளியேற முடியவில்லை.

அடுத்தவர் கூறினார்: 'யா அல்லாஹ்! எனக்கு ஒரு மாமன் மகள் இருந்தாள். நான் அவளை மற்ற எல்லோரையும் விட அதிகமாக நேசித்தேன் (மற்றொரு அறிவிப்பில், ஒரு ஆண் ஒரு பெண்ணை நேசிப்பது போல என்று உள்ளது). நான் அவளுடன் (தாம்பத்திய) உறவு கொள்ள விரும்பினேன், ஆனால் அவள் மறுத்துவிட்டாள். ஒரு (பஞ்ச காலத்தில் வறுமையால் வாடிய) அவள், என்னிடம் வந்தாள். அவள் எனக்கு இணங்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நான் அவளுக்கு நூற்று இருபது தீனார்களைக் கொடுத்தேன். அவள் ஒப்புக்கொண்டாள், நாங்கள் (தாம்பத்திய உறவுக்காக) ஒன்று சேர்ந்தபோது, அவள், 'அல்லாஹ்வுக்கு அஞ்சு, சட்டவிரோதமாக முத்திரையை உடைக்காதே' என்று கூறினாள். நான் அவளை மிகவும் ஆழமாக நேசித்த போதிலும் அவளிடமிருந்து விலகிவிட்டேன்; நான் அவளுக்குக் கொடுத்த பணத்தையும் அவளிடமே விட்டுவிட்டேன். யா அல்லாஹ்! உன்னுடைய திருப்தியை நாடியே நான் இதைச் செய்திருந்தால், நாங்கள் இருக்கும் இந்தத் துன்பத்தை நீக்குவாயாக'. பாறை இன்னும் சற்று நகர்ந்தது, ஆனால் அவர்களால் வெளியே வர முடியவில்லை.

மூன்றாமவர் கூறினார்: 'யா அல்லாஹ்! நான் சில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களில் ஒருவர் தனது கூலியைப் பெறாமல் சென்றுவிட்டதைத் தவிர மற்ற அனைவருக்கும் கூலியைக் கொடுத்துவிட்டேன். அவருடைய கூலியை நான் (ஒரு வியாபாரத்தில் முதலீடு செய்து) வளர்த்தேன், (அந்த வியாபாரம் பெரிதும் செழித்தது) அதனால் பெரும் செல்வமாக மாறியது. நீண்ட காலத்திற்குப் பிறகு, அவர் என்னிடம் வந்து, 'அல்லாஹ்வின் அடியாரே! எனக்குச் சேர வேண்டியதைக் கொடுங்கள்' என்றார். நான், 'நீங்கள் பார்க்கும் இவை அனைத்தும் - ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள் மற்றும் அடிமைகள் - உங்களுடையதுதான்' என்றேன். அவர், 'அல்லாஹ்வின் அடியாரே! என்னைக் கேலி செய்யாதீர்கள்' என்றார். நான் கேலி செய்யவில்லை என்று அவருக்கு உறுதியளித்தேன். எனவே அவர் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அவர் எதையும் விட்டுவைக்கவில்லை. யா அல்லாஹ்! உன்னுடைய திருப்தியை நாடியே நான் இதைச் செய்திருந்தால், எங்கள் துன்பத்திலிருந்து எங்களை விடுவிப்பாயாக'. அந்தப் பாறை விலகியது, அவர்கள் (சுதந்திரமாக) நடந்து வெளியேறினார்கள்".
أَخْبَرَنَا السَّيِّدُ أَبُو الْحَسَنِ مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ دَاوُدَ الْعَلَوِيُّ رَحِمَهُ اللهُ أنبأ أَبُو حَامِدٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ الْحَافِظُ سَنَةَ خَمْسٍ وَعِشْرِينَ وِثَلَاثِمِائَةٍ ثنا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ ثنا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ حَدَّثَنِي أَبِي عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ ثنا نَافِعٌ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ بَيْنَمَا ثَلَاثَةُ رَهْطٍ يَتَمَشَّوْنَ أَخَذَهُمُ الْمَطَرُ فَأَوَوْا إِلَى غَارٍ فِي جَبَلٍ فَبَيْنَمَا هُمْ فِيهِ حُطَّتْ صَخْرَةٌ مِنَ الْجَبَلِ فَأَطْبَقَتْ عَلَيْهِمْ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ انْظُرُوا أَفْضَلَ أَعْمَالٍ عَمِلْتُمُوهَا لِلَّهِ تَعَالَى فَسَلُوهُ بِهَا؛ لَعَلَّهُ يُفَرِّجُ بِهَا عَنْكُمْ فَقَالَ أَحَدُهُمُ اللهُمَّ إِنَّهُ كَانَ لِي وَالِدَانِ كَبِيرَانِ وَكَانَتْ لِيَ امْرَأَةٌ وَوَلَدٌ صِغَارٌ وَكُنْتُ أَرْعَى عَلَيْهِمْ فَإِذَا رُحْتُ عَلَيْهِمْ بَدَأْتُ بِأَبَوِيَّ فَسَقَيْتُهُمَا فَنَأَى بِي يَوْمًا الشَّجَرُ فَلَمْ آتِ حَتَّى نَامَ أَبَوَايَ فَطَيَّبْتُ الْإِنَاءَ ثُمَّ حَلَبْتُ فِيهِ ثُمَّ قُمْتُ بِحِلَابِي عِنْدَ رَأْسِ أَبَويَ وَالصِّبْيَةُ يَتَضَاغَوْنَ عِنْدِ رِجْلِيَّ أَكْرَهُ أَنْ أَبْدَأَ بِهِمْ قَبْلَ أَبَوِيَّ وَأَكْرَهُ أَنْ أُوقِظَهُمَا مِنْ نَوْمَتِهِمَا فَلَمْ أَزَلْ كَذَلِكَ قَائِمًا حَتَّى أَضَاءَ الْفَجْرُ اللهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فُرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ فَفَرَجَ لَهُمْ فُرْجَةً رَأَوْا مِنْهَا السَّمَاءَ وَقَالَ الْآخَرُ اللهُمَّ إِنَّهَا كَانَتْ لِيَ ابْنَةُ عَمٍّ فَأَحْبَبْتُهَا حَتَّى كَانَتْ أَحَبَّ النَّاسِ إِلِيَّ فَسَأَلْتُهَا نَفْسَهَا فَقَالَتْ لَا حَتَّى تَأْتِيَنِي بِمِائَةِ دِينَارٍ فَسَعَيْتُ حَتَّى جَمَعْتُ مِائَةَ دِينَارٍ فَأَتَيْتُهَا بِهَا فَلَمَّا كُنْتُ بَيْنَ رِجْلَيْهَا قَالَتِ اتَّقِ اللهَ لَا تَفْتَحِ الْخَاتَمَ إِلَّا بِحَقِّهِ فَقُمْتُ عَنْهَا اللهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنْي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا مِنْهَا فُرْجَةً فَفَرَجَ لَهُمْ مِنْهَا فُرْجَةً وَقَالَ الثَّالِثُ اللهُمَّ إِنِّي كُنْتُ اسْتَأْجَرْتُ أَجِيرًا بِفَرَقِ ذُرَةٍ فَلَمَّا قَضَى عَمَلَهُ عَرَضْتُهُ عَلَيْهِ فَأَبَى أَنْ يَأْخُذَهُ فَرَغِبَ عَنْهُ فَلَمْ أَزَلْ أَعْتَمِلُ بِهِ حَتَّى جَمَعْتُ مِنْهُ بَقَرًا وَرِعَاءَهَا فَجَاءَنِي فَقَالَ اتَّقِ اللهَ وَأَعْطِنِي حَقِّي وَلَا تَظْلِمْنِي فَقُلْتُ لَهُ اذْهَبْ إِلَى تِلْكَ الْبَقَرِ وَرِعَائِهَا فَخُذْهَا فَقَالَ اتَّقِ اللهَ وَلَا تَهْزَأْ بِي فَقُلْتُ إِنِّي لَا أَهْزَأُ بِكَ اذْهَبْ إِلَى تِلْكَ الْبَقَرِ وَرِعَائِهَا فَخُذْهَا فَذَهَبَ فَاسْتَاقَهَا اللهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا مَا بَقِيَ مِنْهَا فَفَرَجَ اللهُ عَزَّ وَجَلَّ عَنْهُمْ فَخَرَجُوا يَتَمَاشَوْنَ رَوَاهُ مُسْلِمٌ فِي الصَّحِيحِ عَنْ زُهَيْرِ بْنِ حَرْبٍ وَغَيْرِهِ عَنْ يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ وَأَخْرَجَهُ الْبُخَارِيُّ مِنْ وَجْهٍ آخَرَ عَنْ نَافِعٍ
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"மூன்று நபர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, மழை பெய்யத் தொடங்கியது. எனவே, அவர்கள் ஒரு மலையிலுள்ள குகையில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் அதனுள் இருந்தபோது மலையிலிருந்து ஒரு பெரிய பாறை உருண்டு வந்து, அவர்களை (வெளியேற முடியாதவாறு) மூடிக்கொண்டது. அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர், 'நீங்கள் அல்லாஹ்வுக்காகவே செய்த மிகச் சிறந்த நற்செயல்களை எண்ணிப் பாருங்கள். அவற்றை முன்வைத்து அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்; அதன் மூலம் அவன் உங்களை விட்டு இந்தப் பாறையை அகற்றக்கூடும்' என்று கூறிக் கொண்டனர்.

அவர்களில் ஒருவர் இவ்வாறு பிரார்த்தித்தார்: 'யா அல்லாஹ்! எனக்கு வயதான பெற்றோரும், மனைவியும், சிறு குழந்தைகளும் இருந்தனர். நான் அவர்களுக்காக (ஆடுகளை) மேய்த்து வந்தேன். மாலையில் நான் அவர்களிடம் திரும்பியதும், (ஆடுகளிலிருந்து பால் கறந்து) முதலில் என் பெற்றோருக்குக் குடிக்கக் கொடுப்பேன். ஒருநாள் (மேய்ச்சலுக்காகத்) தூரமான இடத்திற்குச் சென்றுவிட்டேன். என் பெற்றோர் உறங்கும் வரை நான் வரவில்லை. நான் பாத்திரத்தைச் சுத்தம் செய்து அதில் பாலைக் கறந்து கொண்டு, என் பெற்றோரின் தலைமாட்டில் நின்றேன். என் குழந்தைகள் பசியால் என் காலடியில் அழுது கொண்டிருந்தனர். என் பெற்றோருக்கு முன்பாக என் குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதை நான் விரும்பவில்லை. மேலும், அவர்களைத் தூக்கத்திலிருந்து எழுப்புவதையும் நான் விரும்பவில்லை. இப்படியே விடியும் வரை நான் (பாலை ஏந்தியவாறு) நின்றுகொண்டே இருந்தேன். யா அல்லாஹ்! உனது முகத்தை (பொருத்தத்தை) நாடியே நான் இதைச் செய்தேன் என்பதை நீ அறிவாய் என்றால், நாங்கள் வானத்தைப் பார்க்கும் அளவுக்கு எங்களுக்குச் சிறிதளவு வழியைத் திறந்து விடுவாயாக!' (என்று பிரார்த்தித்தார்). உடனே, வானத்தைப் பார்க்கும் அளவுக்கு ஒரு சிறு வழியை அல்லாஹ் அவர்களுக்குத் திறந்துவிட்டான்.

இரண்டாமவர் கூறினார்: 'யா அல்லாஹ்! என் தந்தையின் சகோதரருக்கு ஒரு மகள் இருந்தாள். ஒரு ஆண் ஒரு பெண்ணின் மீது வைக்கும் அளவுகடந்த நேசத்தைப்போல் நான் அவளை மிகவும் நேசித்தேன். அவளை அடைய நான் விரும்பியபோது, அவள் நூறு தீனார்களைக் கொண்டு வராதவரை சம்மதிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டாள். அதற்காக நான் கடுமையாக உழைத்து நூறு தீனார்களைத் திரட்டி, அவளிடம் கொண்டு வந்தேன். அவளது இரு கால்களுக்கு மத்தியில் நான் அமர்ந்தபோது (உடலுறவு கொள்ள முற்பட்டபோது), அவள், 'அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிமையின்றி (திருமணமின்றி) இந்த முத்திரையை நீ உடைக்கக் கூடாது!' என்று கூறினாள். உடனே நான் அவளைவிட்டு விலகி எழுந்துவிட்டேன். யா அல்லாஹ்! உனது முகத்தை (பொருத்தத்தை) நாடியே நான் இதைச் செய்தேன் என்பதை நீ அறிவாய் என்றால், எங்களை விட்டு இந்தப் பாறையைச் சற்று அகற்றுவாயாக!' (என்று பிரார்த்தித்தார்). உடனே அவர்களுக்காக அப்பாறை மேலும் சற்று நகர்ந்தது.

மூன்றாமவர் கூறினார்: 'யா அல்லாஹ்! நான் ஒரு ஃபரக் (அளவு) சோளத்தை (அல்லது தானியத்தை) கூலியாகப் பேசி ஒரு தொழிலாளியை வேலைக்கு அமர்த்தினேன். அவன் தனது வேலையை முடித்ததும் அவனது கூலியை நான் அவனிடம் கொடுத்தேன். ஆனால் அவன் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டுச் சென்றுவிட்டான். நான் அந்தத் தானியத்தைப் பயிரிட்டுப் பெருக்கி, அதிலிருந்து மாடுகளையும் அவற்றை மேய்ப்பவர்களையும் வாங்கிக் குவித்தேன். (சில காலத்திற்குப் பிறகு) அவன் என்னிடம் வந்து, 'அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! எனது கூலியைக் கொடு, எனக்கு அநீதி இழைக்காதே!' என்று கேட்டான். அதற்கு நான் அவனிடம், 'அதோ அங்குள்ள மாடுகள், அதன் மேய்ப்பவர்கள் அனைவரிடமும் சென்று, அவற்றை எடுத்துக்கொள்' என்று கூறினேன். அதற்கு அவன், 'அல்லாஹ்வை அஞ்சிக்கொள், என்னைக் கேலி செய்யாதே!' என்றான். 'நான் உன்னைக் கேலி செய்யவில்லை, அந்த மாடுகள், அதன் மேய்ப்பவர்களிடம் சென்று அவற்றை எடுத்துக்கொள்' என்று கூறினேன். உடனே அவன் சென்று அவை அனைத்தையும் ஓட்டிச் சென்றான். யா அல்லாஹ்! உனது முகத்தை (பொருத்தத்தை) நாடியே நான் இதைச் செய்தேன் என்பதை நீ அறிவாய் என்றால், எஞ்சியிருக்கும் இப்பாறையை எங்களை விட்டு அகற்றுவாயாக!' (என்று பிரார்த்தித்தார்).

அல்லாஹ் (அஜ்ஜ வஜல்) அந்தப் பாறையை அவர்களை விட்டு (முழுமையாக) அகற்றினான். அவர்கள் (குகையிலிருந்து) வெளியேறி நடந்து சென்றனர்."
ஹதீஸ் தரம் : ஹதீஸ் தரம் கிடைக்கவில்லை
لا نعرف حكم له