அஸ்மா பின்த் அபீபக்கர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம், "நிச்சயமாக (என் கணவர்) ஸுபைர் (பொருளாதார விஷயத்தில்) கண்டிப்பான மனிதராக இருக்கிறார். என்னிடம் ஓர் ஏழை வரும்போது, அவருடைய (ஸுபைருடைய) அனுமதியின்றி அவருடைய வீட்டிலிருந்து நான் தர்மம் செய்யலாமா?" என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(உன்னால் இயன்றதைச்) சிறிய அளவில் கொடு. (பொருளைப் பையில்) முடிந்து வைக்காதே; (அவ்வாறு செய்தால்) அல்லாஹ்வும் உனக்கு (வழங்குவதை) முடிந்து (தடுத்து) வைத்துக்கொள்வான்" என்று கூறினார்கள்.