இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3491ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا قَيْسُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا كُلَيْبُ بْنُ وَائِلٍ، قَالَ حَدَّثَتْنِي رَبِيبَةُ النَّبِيِّ، صلى الله عليه وسلم زَيْنَبُ ابْنَةُ أَبِي سَلَمَةَ قَالَ قُلْتُ لَهَا أَرَأَيْتِ النَّبِيَّ صلى الله عليه وسلم أَكَانَ مِنْ مُضَرَ قَالَتْ فَمِمَّنْ كَانَ إِلاَّ مِنْ مُضَرَ مِنْ بَنِي النَّضْرِ بْنِ كِنَانَةَ‏.‏
குலைப் பின் வாயில் அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகளான ஜைனப் பின்த் அபீ ஸலமா அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் 'முதர்' குலத்தைச் சார்ந்தவர்களா என்று நீங்கள் அறிவீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவர்கள் 'முதர்' குலத்தைச் சார்ந்தவர்கள் அல்லாமல் வேறு யார்? அவர்கள் பனூ நத்ர் பின் கினானாவைச் சார்ந்தவர்கள்" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح