حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ أَقْبَلْتُ وَقَدْ نَاهَزْتُ الْحُلُمَ، أَسِيرُ عَلَى أَتَانٍ لِي، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ يُصَلِّي بِمِنًى، حَتَّى سِرْتُ بَيْنَ يَدَىْ بَعْضِ الصَّفِّ الأَوَّلِ، ثُمَّ نَزَلْتُ عَنْهَا فَرَتَعَتْ، فَصَفَفْتُ مَعَ النَّاسِ وَرَاءَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. وَقَالَ يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ بِمِنًى فِي حَجَّةِ الْوَدَاعِ.
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பருவ வயதை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், ஒரு பெண் கழுதையின் மீது (ஏறி) வந்துகொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் நின்றுகொண்டு தொழுதுகொண்டிருந்தார்கள். நான் முதல் வரிசையின் ஒரு பகுதிக்கு முன்னால் கடந்து சென்று, பின்னர் அதிலிருந்து இறங்கினேன்; அப்பிராணி மேயத் தொடங்கியது. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் மக்களுடன் வரிசையில் நின்றேன்.
(யூனுஸ் (ரஹ்) அவர்கள் இப்னு ஷிஹாப் (ரஹ்) வழியாக, 'இது ஹஜ்ஜத்துல் வதாவின் போது மினாவில் நடந்தது' என்று கூறினார்கள்.)
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: நான் ஒரு கழுதையின் மீது சவாரி செய்து வந்தேன். (அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின்போது மினாவில் நின்று மக்களுக்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். (அவர் கூறினார்:) அக்கழுதை ஸஃப்பில் (தொழுகை வரிசையில்) சிலருக்கு முன்பாகச் சென்றது. பிறகு நான் அதிலிருந்து இறங்கி மக்களுடன் ஸஃப்பில் சேர்ந்து கொண்டேன்.