அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூ மூஸா (ரழி) அவர்களின் ஓதுதலைக் கேட்டுவிட்டு, "நிச்சயமாக, தாவூத் (அலை) அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட மஸாமீர்களில் (அழகிய குரல்களில்) ஒரு மிஸ்மார் (அழகிய குரல்) இவருக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.
அபூமூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "அபூ மூஸாவே! தாவூத் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கு (அருளப்பட்ட) இனிய குரல்களில் ஒன்று உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது (அதாவது, குர்ஆனை அழகிய முறையில் ஓதும் திறன்)" என்று கூறினார்கள்.