இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

7430ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، فِي قَوْلِهِ ‏{‏ ويَسْتَفْتُونَكَ فِي النِّسَاءِ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِيهِنَّ‏}‏ الآيَةَ قَالَتْ هِيَ الْيَتِيمَةُ الَّتِي تَكُونُ عِنْدَ الرَّجُلِ لَعَلَّهَا أَنْ تَكُونَ قَدْ شَرِكَتْهُ فِي مَالِهِ حَتَّى فِي الْعَذْقِ فَيَرْغَبُ يَعْنِي أَنْ يَنْكِحَهَا وَيَكْرَهُ أَنْ يُنْكِحَهَا رَجُلاً فَيَشْرَكُهُ فِي مَالِهِ فَيَعْضِلُهَا ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள், **"வயஸ்தஃப்தூனக்க ஃபிந் நிஸாஇ குலில்லாஹு யுஃப்தீக்கும் ஃபீஹின்ன"** ("பெண்களைப் பற்றி அவர்கள் உம்மிடம் மார்க்கத் தீர்ப்புக் கேட்கிறார்கள். கூறுவீராக: அல்லாஹ் அவர்களுக்குரிய தீர்ப்பை உங்களுக்கு வழங்குகிறான்") என்ற (திருக்குர்ஆன் 04:127) இறைவசனம் குறித்துக் கூறியதாவது:

"இது ஒரு மனிதரின் பராமரிப்பில் இருக்கும் அநாதைப் பெண்ணைப் பற்றியதாகும். அவள் அவனது செல்வத்தில், (எதுவரை எனில்) ஒரு பேரீச்ச மரத்தில்கூட அவனுக்குப் பங்காளியாக இருப்பாள். (அவளுக்கு அழகில்லாத காரணத்தால்) அவன் அவளை மணந்துகொள்ள விரும்பமாட்டான்; அதே சமயம் அவளை வேறொரு ஆணுக்கு மணமுடித்துக் கொடுக்கவும் வெறுப்பான்; (ஏனெனில் வேறொருவன் அவளை மணந்தால்) அவன் அவனது செல்வத்தில் பங்காளியாகிவிடுவான் (என்பதே அதற்குக் காரணம்). ஆகவே அவன் அவளை (திருமணம் செய்யவிடாமல்) தடுத்து வைத்திருக்கிறான்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح