இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

80சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ أَلاَ أُخْبِرُكُمْ بِوُضُوءِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَتَوَضَّأَ مَرَّةً مَرَّةً ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உளூவைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று (மக்களிடம்) கேட்டுவிட்டு, (தாமே) ஒவ்வொரு உறுப்பையும் ஒரு முறை கழுவி உளூச் செய்து காட்டினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
138சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ أَلاَ أُخْبِرُكُمْ بِوُضُوءِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَتَوَضَّأَ مَرَّةً مَرَّةً ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூ செய்த முறையை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" பிறகு அவர்கள் (தாமே, ஒவ்வொரு உறுப்பையும்) ஒரு முறை கழுவி உளூ (செய்து) காட்டினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)
1835சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَطَاءٍ، وَطَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم احْتَجَمَ وَهُوَ مُحْرِمٌ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருந்த நிலையில் ஹிஜாமா (இரத்தம் உறிஞ்சி எடுத்தல்) செய்துகொண்டார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)