உக்பா பின் அல்-ஹாரித் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அந்-நுஐமான் அல்லது இப்னு அந்-நுஐமான் (என்பவர்) மது அருந்தியவராகக் கொண்டுவரப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டில் இருந்த அனைவரையும் அவரை அடிக்குமாறு கட்டளையிட்டார்கள். (அறிவிப்பாளர் உக்பா (ரழி) அவர்கள்) கூறுகிறார்கள்: அவரை அடித்தவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். நாங்கள் அவரை காலணிகளாலும் பேரீச்ச மட்டைகளாலும் அடித்தோம்.
உக்பா பின் அல்-ஹாரித் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நுஐமான் அல்லது நுஐமானின் மகன் (என்ற ஒருவர்) போதையில் இருந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதனால் பெரிதும் வருத்தமுற்றார்கள்; மேலும் வீட்டில் இருந்தவர்களை அவரை அடிக்குமாறு உத்தரவிட்டார்கள். அவர்களும் அவரைப் பேரீச்சை மட்டைகளாலும் செருப்புகளாலும் அடித்தார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.