நாஃபிஃ (ரஹ்) அவர்கள் அறிவிப்பதாவது:
(போரில் கிடைத்த செல்வத்தின்) குமுஸ் (ஐந்தில் ஒரு பங்கு) பிரிவில் இருந்த அடிமைகளுக்குப் பொறுப்பாக ஒரு அடிமை இருந்தார். அவர் அந்த அடிமைகளில் இருந்த ஓர் அடிமைப் பெண்ணைக் கட்டாயப்படுத்தி அவளுடன் உறவு கொண்டார். எனவே உமர் பின் அல்கத்தாப் (ரழி) அவர்கள் அவருக்குக் கசையடி கொடுத்து, அவரை நாடு கடத்தினார்கள். ஆனால், (அந்த அடிமை) அவளைக் கட்டாயப்படுத்தியிருந்ததால் அவர்கள் அந்த அடிமைப் பெண்ணுக்குக் கசையடி கொடுக்கவில்லை.
நாஃபிஉ அறிவிக்கிறார்: ஸஃபிய்யா பின்த் அபீ உபைத் (ரழி) அவர்கள் தமக்கு அறிவித்ததாவது: அரசாங்க அடிமைகளில் ஒருவர், (போரில் கிடைத்த) ஐந்தில் ஒரு பங்குப் பொருட்களில் இருந்த ஓர் அடிமைப் பெண்ணை, அவளின் விருப்பத்திற்கு மாறாக வற்புறுத்தி, அவளுடன் உறவு கொண்டு, அவளின் கன்னித் தன்மையை அழித்துவிட்டான். உமர் (ரழி) அவர்கள் அந்த அடிமைக்குக் கசையடி கொடுத்தார்கள். ஆனால், அவன் அவளை வற்புறுத்தி (பாலியல் வன்கொடுமை) செய்த காரணத்தால், அப்பெண்ணுக்கு அவர் கசையடி கொடுக்கவில்லை.